Friday, November 19, 2004

மூடி களைந்து முகம் ஆடி பார்ப்பமோ?

ஒத்தி யெடுப்பு(1) ஊரைச் சுற்றிலும்;
சுத்திச் சுத்தி முகமூடி போட்டு,
ஊருள் அலைவது நாய்பட்ட வேலை;

எங்கு பார்த்தாலும் இன்னொரு வன்போல்,
ஏதொன்றும் எடுத்து இதமாய் ஒத்தி....
ஏரா ளம்பேர்; என்னவோர் அழற்சி?

ஆனாலும், இப்படி ஒத்தி உழல்வதை,
காணாது காண்பதாய் கைதட்டிக் களிப்பு;
ஒருவனைப் போலவே ஓரா யிரம்பேர்,
முகத்தை மூடி மூளுணர் வொளித்து;
யாருக்கும் இங்கே வெட்கமும் இல்லை;
எதையும் நோக்கிக் கவலையும் இல்லை;

நேற்றைய இரவில் பயணம் முடித்து,
அண்ணா முனையம்(2) வான்புகல்(3) நுழைந்து,
ஆரவா ரத்தொடு அணுகிய வர்களாய்,
பேச்சு, நடையுடை, பாவனை, எதிலும்
பெருகி விரவிய அமெரிக்கத் தோற்றம்;
"அஞ்சு மேனியில்(4) அடங்கிய தமிழை
ஆங்கிலம் பேசி அளவினால் தானே,
அவர்கள் மூடிகள் முகத்தில் நிலைக்கும்?"

இவர்களின் இலக்கியப் படிப்பறி வெல்லாம்
வான்புகல் இக்கிம் பாதாம் கடையின்
முன்னூறு உருபா தாள்கட்டு(5) அளவில்,
துள்ளிடு புதினமாய்த் தூவிய கவர்ச்சி;
உள்ளே மறைத்த காமஞ் சொட்டினால்
இன்னும் தெளிவாம் இலக்கியச் செறிவு;

புதினப் பொத்தகம் வாங்கா திருந்தால்,
அதற்குப் பகரியாய்(6) மானகைப்(7) பொத்தகம்;
இந்தவா ரம்தான் வெளியே வந்தது;
அன்றேல் இந்தியச் சாத்திரம் பற்றி
ஆரோ வெள்ளையர் அருளுரைத் தொகுப்புகள்;

இன்னும் அழுத்தி இவரிடம் கேட்டால்,
என்றோ தமிழில் படித்த மறந்த
புதுக்கவி தைகளும் ஐக்கூ வரிகளும்;
சமயத்தில் இவற்றை எழுதியும் காட்டுவர்;
சொற்களை மடித்துப் சொக்கட்டான் ஆட
வெள்ளையன் இவர்க்குச் சொல்லா திருப்பனோ?

பார்க்கும் திரைப்பட நெறியா ளுநரோ(8)
எங்கோ சுட்ட மெக்சிகப் படத்தையும்,
ஈரான், அங்கெரி பிரசீலியப் படத்தையும்,
மாற்றிப் போட்டு கலவையைச் செய்து,
நெறிஞர் என்ற முகமூடி பிழைப்பர்;
நடிகர், இசைஞர், கலைஞர் எல்லாம்
லெபனான், பிரஞ்சு, இன்னும் இதுபோல்
ஏதோ வொன்றை இங்கே கொணர்ந்து
சரக்கு விற்றால் சரியாய்ப் போச்சு;
திலகம் என்று சொல்லிட மாட்டொமோ?

நாமெலாம் நாமாய் இருப்பதெப் பொழுது?
இரவில் ஆவது இருந்து தொலைப்பமோ?
மூடி களைந்து முகம்ஆடி பார்ப்பமோ?

அன்புடன்,
இராம.கி.

1. ஒத்தியெடுப்பு = imitation
2. முனையம் = terminal
3. வான்புகல் = airport
4. அஞ்சு மேனி = 5%
5. தாள்கட்டு = paper-back
6. பகரி = substitute
7. மானகை = management
8. நெறியாளுநர் = director

In TSCII:

´ò¾¢ ¦ÂÎôÒ(1) °¨Ãî ÍüÈ¢Öõ;
Íò¾¢î Íò¾¢ Ó¸ãÊ §À¡ðÎ,
°Õû «¨ÄÅÐ ¿¡öÀ𼠧ŨÄ;

±íÌ À¡÷ò¾¡Öõ þý¦É¡Õ Åý§À¡ø,
²¦¾¡ýÚõ ±ÎòÐ þ¾Á¡ö ´ò¾¢....
²Ã¡ Çõ§À÷; ±ýɧš÷ «Æüº¢?

¬É¡Öõ, þôÀÊ ´ò¾¢ ¯ÆøŨ¾,
¸¡½¡Ð ¸¡ñÀ¾¡ö ¨¸¾ðÊì ¸Ç¢ôÒ;
´ÕŨÉô §À¡Ä§Å µÃ¡ ¢Ãõ§À÷,
Ó¸ò¨¾ ãÊ ãÙ½÷ ¦Å¡Ç¢òÐ;
¡ÕìÌõ þí§¸ ¦Åð¸Óõ þø¨Ä;
±¨¾Ôõ §¿¡ì¸¢ì ¸Å¨ÄÔõ þø¨Ä;

§¿ü¨È þÃÅ¢ø À½õ ÓÊòÐ,
«ñ½¡ Ó¨ÉÂõ(2) Å¡ýÒ¸ø(3) ѨÆóÐ,
¬ÃÅ¡ Ãò¦¾¡Î «Ï¸¢Â Å÷¸Ç¡ö,
§ÀîÍ, ¿¨¼Ô¨¼, À¡Å¨É, ±¾¢Öõ
¦ÀÕ¸¢ Å¢ÃŢ «¦Áâì¸ò §¾¡üÈõ;
"«ïÍ §Áɢ¢ø(4) «¼í¸¢Â ¾Á¢¨Æ
¬í¸¢Äõ §Àº¢ «ÇŢɡø ¾¡§É,
«Å÷¸û ãʸû Ó¸ò¾¢ø ¿¢¨ÄìÌõ?"

þÅ÷¸Ç¢ý þÄ츢Âô ÀÊôÀÈ¢ ¦ÅøÄ¡õ
Å¡ýÒ¸ø þ츢õ À¡¾¡õ ¸¨¼Â¢ý
ÓýëÚ ¯ÕÀ¡ ¾¡û¸ðÎ(5) «ÇÅ¢ø,
ÐûǢΠҾ¢ÉÁ¡öò àŢ ¸Å÷;
¯û§Ç Á¨Èò¾ ¸¡Áï ¦º¡ðÊÉ¡ø
þýÛõ ¦¾Ç¢Å¡õ þÄ츢Âî ¦ºÈ¢×;

Ò¾¢Éô ¦À¡ò¾¸õ Å¡í¸¡ ¾¢Õó¾¡ø,
«¾üÌô À¸Ã¢Â¡ö(6) Á¡É¨¸ô(7) ¦À¡ò¾¸õ;
þó¾Å¡ Ãõ¾¡ý ¦ÅÇ¢§Â Åó¾Ð;
«ý§Èø þó¾¢Âî º¡ò¾¢Ãõ ÀüÈ¢
¬§Ã¡ ¦Åû¨ÇÂ÷ «ÕÙ¨Ãò ¦¾¡ÌôÒ¸û;

þýÛõ «Øò¾¢ þÅâ¼õ §¸ð¼¡ø,
±ý§È¡ ¾Á¢Æ¢ø ÀÊò¾ ÁÈó¾
ÒÐì¸Å¢ ¨¾¸Ùõ ³ìÜ Åâ¸Ùõ;
ºÁÂò¾¢ø þÅü¨È ±Ø¾¢Ôõ ¸¡ðÎÅ÷;
¦º¡ü¸¨Ç ÁÊòÐô ¦º¡ì¸ð¼¡ý ¬¼
¦Åû¨ÇÂý þÅ÷ìÌî ¦º¡øÄ¡ ¾¢ÕôÀ§É¡?

À¡÷ìÌõ ¾¢¨ÃôÀ¼ ¦¿È¢Â¡ Ù¿§Ã¡(8)
±í§¸¡ Íð¼ ¦Á캢¸ô À¼ò¨¾Ôõ,
®Ã¡ý, «í¦¸Ã¢ À¢Ãº£Ä¢Âô À¼ò¨¾Ôõ,
Á¡üÈ¢ô §À¡ðÎ ¸Ä¨Å¨Âî ¦ºöÐ,
¦¿È¢»÷ ±ýÈ Ó¸ãÊ À¢¨ÆôÀ÷;
¿Ê¸÷, þ¨º»÷, ¸¨Ä»÷ ±øÄ¡õ
¦ÄÀÉ¡ý, À¢ÃïÍ, þýÛõ þЧÀ¡ø
²§¾¡ ¦Å¡ý¨È þí§¸ ¦¸¡½÷óÐ
ºÃìÌ Å¢üÈ¡ø ºÃ¢Â¡öô §À¡îÍ;
¾¢Ä¸õ ±ýÚ ¦º¡øÄ¢¼ Á¡ð¦¼¡§Á¡?

¿¡¦ÁÄ¡õ ¿¡Á¡ö þÕôÀ¦¾ô ¦À¡ØÐ?
þÃÅ¢ø ¬ÅÐ þÕóÐ ¦¾¡¨ÄôÀ§Á¡?
ãÊ ¸¨ÇóÐ Ó¸õ¬Ê À¡÷ôÀ§Á¡?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

1. ´ò¾¢¦ÂÎôÒ = imitation
2. Ó¨ÉÂõ = terminal
3. Å¡ýÒ¸ø = airport
4. «ïÍ §ÁÉ¢ = 5%
5. ¾¡û¸ðÎ = paper-back
6. À¸Ã¢ = substitute
7. Á¡É¨¸ = management
8. ¦¿È¢Â¡Ù¿÷ = director

2 comments:

சுந்தரவடிவேல் said...

நெறியாளுநர், முனையம் இரண்டையும் தவிர ஏனைய வார்த்தைகள் எனக்குப் புதியன. கவிதையின் இசை பிடித்திருக்கிறது.

இராம.கி said...

¿ýÈ¢