சகருநாடகத்தில் சமண வெள்ளைக் குளத்தில் இருக்கும் கோமட்டேசரின் திருமேனியைப் பார்த்திருப்ப்பீர்கள். என்றேனும் நீங்கள் இச் சொற்களின் ஆழம் பற்றி எண்ணிப் பார்த்ததுண்டோ?
ஊர்ப்பெயரைக் கன்னடத்தில் Shravanabelagola (Kannada: ಶ್ರವಣ ಬೆಳಗೊಳ, romanized: śravaṇa beḷagoḷa, pronunciation: [ ɕɾɐ.ʋɐˈɳɐ bɛ.ɭɐ.go.ɭɐ ] ) என்றழைப்பர். This is a town located near Channarayapatna of Hassan district in the Indian state of Karnataka and is 144 km (89 mi) from Bengaluru. The Gommateshwara Bahubali statue at Shravanabelagola is one of the most important tirthas (pilgrimage destinations) in Jainism, one that reached a peak in architectural and sculptural activity under the patronage of Western Ganga dynasty of Talakad. Chandragupta Maurya is said to have died on the hill of Chandragiri, which is located in Shravanabelagola, in 298 BCE after he became a Jain monk and assumed an ascetic life style.
சமணம் என்பது சங்கதத்தில் Shramana என்றாகும். அருத்தமாகதியில் இந்த வழக்குமுண்டு. தமிழில் கடன்வாங்கி ஸ்ரமண என்பர். கன்னடத்திலும் இது உண்டு. தமிழில் ம-வும் வ-வும் போலிகள் எனவே shravana ஆவதில் வியப்பில்லை. கன்னடந்ததில் தமிழ் வ, ba ஆகும். சமண வெள்ளைக்குளம் Shravanabelagola ஆவது இப்போது விளங்குகிறதா?
சரி இங்கிருக்கும் பென்னம் பெரிய வாகுவலியின் (bahubali) சிலை ஏன் கோமட்ட ஈசர் (Gommatteswara) என அழைக்கப் படுகிறது? தமிழில் அம்மணம் என்பதற்கு ஆடையற்றவன் என்று இன்று பொருள் கொண்டாலும், ஒரு காலத்தில் அது கருப்பர் நிலையைக் குறித்தது. (கருப்பரான நாம் நெடுங்காலம் அம்மணமாய் இருந்தோம். நம்மூர் வெதணம் (climate) அப்படி? குளிரால், மணலால் உடலெங்கும் ஆடைபோர்த்திய வெள்ளையர் (இதில் இரோப்பியரோடு ஆரியர், வட இந்திய உயர்வகுப்பார் எனப் பலரும் சேர்த்தி. இன்றும் வடவருக்கு நாம் “காலா” தான்.) ஆடைபோடாத நம் முன்னோர் நிலை கருப்பர் நிலையாய்த் தெரிந்தது. படிக்கும் உங்களுக்குச் சற்று அதிர்ச்சியாகிறதோ? அம்மணம் என்ற என் தொடரைப் படியுங்கள்.
https://valavu.blogspot.com/2006/05/1.html
https://valavu.blogspot.com/2006/05/2.html
https://valavu.blogspot.com/2006/05/3.html
சரி ”கோமட்ட என்றாலும் அதே பொருளா?” என்று கேட்டால் ஆம் என்றே விடைசொல்ல வேண்டும். சற்று ஆழ முயல்வோம்.
முதலில் கும்பட்ட> கும்மட்ட> கொம்மட்ட> கோம்மட்ட என்ற திரிவைக் கணக்கில் கொள்க. அணம், அட்டம், அடை என உடம்பை அடுத்தணியும் ஆடை குறிக்கும் சொற்களையும் நினைவு கொள்க.
கும்பு + அணம் = கும்பணம்; கும்பு + அட்டம் = கும்பட்டம்.
இனிக் கும்பு-தல் சொல்லிற்கும் தொடர்புள்ள சொற்களுக்கும் வருவோம்.
கும்பு-தல் = எரித்தல், தீய்ந்து போதல். கரிந்து போதல்.
கும்பி பாகம் = சூடான எண்ணையில் முக்கிவைத்து உடம்பைக் கருகவைத்தல் (சங்கரின் அன்னியன் திரைப்படம் நினைவிற்கு வருகிறதா?)
கும்பு இடுசட்டி = கணப்புச் சட்டி
கும்பிகம் = கருநிற நீலோற்பழம்.
கும்பி எருசாணி = எரிக்கப்பட்ட உமியின் சாம்பல்
கும்பி = தீ, எரியும் வயிறு, யானை, கரும் நரகம், சுடு சாம்பல்.
கும்பு + அணம் = கும்பணம் = கரிநிறம் பூண்டவன், எனவே ஆடை அற்றவன்.
கும்பு+அட்டம் = கும்பட்டம் = கரி நிறம் பூண்டவன், எனவே ஆடை அற்றவன்
எப்படி இவ்வளவு உறுதியாய் நான் சொல்கிறேன் என்கிறீர்களோ? சமயம்-5 (https://valavu.blogspot.com/2006/03/5.html) என்ற என் வலைப்பதிவைப் படியுங்கள். ஓகிகளை gymnosophists- என்று கிரேக்க மொழியில் சொல்வார். இப்படி ஒரு சொல்லை Plutarch சொல்லியுள்ளார். [The term gymnosophist was used by Plutarch (c. 46–120 CE) in the 1st century CEhttps://en.wikipedia.org/wiki/Gymnosophists]. அதற்கு "one of the ancient Hindu philosophic sect going naked and given to contemplation, mystic and ascetic" என்று பொருள் கொள்வார்.
கிரேக்க மொழியில் gumnos- என்றால் 'அம்மணம்' என்றாகும். ஒரு காலத்தில் இரோப்பா எங்கணும் பள்ளிகள் 4 முறைகளில் செயல்பட்டன. முதல் வகை gymnasium எனும் முறை, இரண்டாம் வகை atheneum எனும் முறை, மூன்றாம் வகை lyceum எனும் முறை, நாலாம் வகை technical எனும் முறை. இவற்றை நான் இங்கு விவரிக்கவில்லை. பள்ளிக்கூடம் என்பது அம்மணர்/சம்மணர் சொல்லீக் கொடுத்த முறை என்று நம் உரையாசிரியர் சொல்வாரே? அடை மட்டும் நினைவ்வூட்டுகிறேன். gymnasium என்பது gymnosophists சொல்லிக் கொடுக்கும் இடம். நெதர்லந்தில் 4 ஆண்டுகள் நான் வாழ்ந்த போது, எனக்கு gymnosophists நினைவிற்கு வந்தார். தமிழின்றிப் பலவும் உலகில் விளங்கா. இது உண்மை
கும்பு+ அட்ட + ஈசர்> கும்பட்டீசர்> கொம்ப்பட்டீசர்> கொம்மட்டீசர்> கோமட்டீசர்.
No comments:
Post a Comment