"இன்று ஒரு தமிழ்ச்சொல் பரிந்துரை" என்ற வரிசையில் நண்பர் Harinarayanan Janakiraman நம்மில் பலர் அன்றாடம் பயன்படுத்தும் Scooterக்கு இணையாகத் துள்ளுந்து என்று சொல்லியிருந்தார். இது சில காலமாகவே பலராலும் பரிந்து உரைக்கப்பட்டது தான். ஆனால் ”பொருத்தமில்லாதது” என்பது என்புரிதல். 1967 இல் கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சரான பின்னால், ஆர்வ மிகுதியில், அன்றிருந்த புரிதலில் பலரும் பரிந்துரைத்து ஏற்கப்பட்ட சொற்களில் இதுவுமொன்று. சொற்களின் பொருத்தங்களை யாரும் அப்போது கேள்வி கேட்கவில்லை. ஆர்வக் கோளாறுகள் பலவும் அப்போது ஏற்பட்டன. தொடக்க காலத்தில் கேள்வி கேட்பதும் ஒருவகையில் தவறு தான். தமிழார்வத்திற்கே தடை போட்டிருக்கும். பின்னாலாவது, அதை தி.மு. க. வே மீளாய்வு செய்திருக்கலாம். செய்யாது போனார். இரு கழகத்தாரும் நாளடவில் தம் தமிழார்வத்தை நீர்த்துப் போக வைத்தார். பணம் அள்ளுவதில் இருவரும் குறியானபின், கொண்ட கொள்கைகள் அவரிடமிருந்து பறந்தோடின. முற்போக்காய் இருந்த திராவிடம் கொஞ்சங் கொஞ்சமாய்ய் பிற்போக்காகித் தேங்கிப் போனது..
அன்று பரிந்துரைத்த சொற்களில் இயக்குநர் (director; operator க்கும் director க்கும் வேறுபாடு வேண்டாமா? - என்று கேட்பேன்.. என் பரிந்துரை director=நெறியாளர்; operator = இயக்குநர்), மகிழுந்து (pleasure car; இப்போது pleasure ஐச் சேர்த்து யாரும் சொல்வதில்லை. வெறும் car உக்கே மகிழுந்து என்கிறார்; சகடு என நான் சொல்வேன்), நீதியரசர் (justice; குடியாட்சிக் காலத்தில் அரசரைப் பிடித்து ஏன் தொங்கவேண்டும்? தெரியவில்லை. ”நயவோர்/நயத்தார்” போதும்) போன்றவை ஒருசில, துள்ளுந்தும் அப்படித்தான். உந்தை (momentum)வைத்து, முன்னால் சில ஒட்டுக்களைச் சேர்த்தால் தமிழில் இது போன்ற கருத்துகள் வளர்ந்துவிடும் என்ற போதை பலருக்கும் இருந்தது. துள்ளிப் போகும் உந்தில் சிலரைத் தவிர்த்து எல்லோராலும் உட்கார்ந்து போகமுடியாது. தூக்கிவாரிப் போடும். அப்படியே scooter துள்ளுமென்றாலும் கூட, motor துள்ளாதா, bike துள்ளாதா? - என்ற கேள்விகள் இயல்பாய் எழும். தவிர, துள் எனும் விதப்பு scooter க்கு மட்டும் ஏன்? அறிவியலில் எனக்கு விடை தெரியாது.
திராவிடச் சிந்தனையாளர் பலரும் அறிவியல் தமிழ் என்பதைப் புரிந்து கொண்டதாய்த் தெரியவில்லை. “பாமரருக்கும் புரிய வேண்டும்” என்று விளங்காத வேதம் படிக்கும் இவர்கள் அறிவியலைத் தமிழில் சொல்லிக் கொடுப்பதைக் கண்டு கொள்ளவே இல்லை. கடந்த 250 ஆண்டுகளில் நம்மிடம் அறிவியல்வளர்ச்சி என்பது குறைவு. வரலாற்றுக் குளறுபடிகளால் ஒரு பேரிடை வெளி இக்காலத்தில் நம் மொழியில் எற்பட்டு விட்டது. அந்த இடைவெளியைச் சரி செய்யாது குறைச்சொற்களை நிரப்பாது நாம் அறிவியலில் வளரவே முடியாது. இதைச் செய்ய முயல்வதே எனக்குப் பொல்லாப்பு ஆகிறது. ”பாமரச் சொற்களை விடுத்து இராம.கி. ஏதோ இலக்கியம் படைக்க முற்படுகிறார். கவிதை படைக்க முயல்கிறார். அகர முதலி வைத்துக் கொண்டா தமிழில் அறிவியல் படிக்க முடியும்?” என்றெல்லாம் சாடல்கள் எழும். என் கேள்வி எளிமையானது. அகரமுதலி வைத்துக் கொள்ளாமலா, ஆங்கிலத்தில் அறிவியல் படிக்கிறோம்? எண்ணிப் பாருங்கள்
எனவே நம்மரபு எவ்வளவு தொலைவு வந்தது? எங்கு இடைவெளி ஏற்பட்டது? - என்பதில் நமக்கு ஆழ்ந்த தெளிவு வேண்டும். நமக்கு இன்று தெரிந்த 3000 சொற்களை வைத்து, முன்னொட்டு, பின்னொட்டு, ஈறுகள் சேர்த்தால் 250 ஆண்டுகால இடைவெளியைச் சரிசெய்து விடலாம் என்பது வெறும் கற்பனை. ஒருவகையான களிமண் குதிரையில் பயணம் செய்யும் போக்கு. ஒரு மழையில், காற்றில் அது கரைந்துவிடும். கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுன்றம் போக ஆசைப்பட்டானாம். அண்மைக் கால அறிவியல் வளர்ச்சி மேலும் மேலும் விதப்பித்தல் (speciation), வகைப் படுத்தல் (classification) என்பதில் தான் வளர்ந்தது. நாமும் விதப்பித்தல், வகைப்படுத்தல் மூலம் நம் சொல் தொகுதியைக் கூட்டினால் தான் மேலே வளர முடியும். இதைச் செய்ய ”பொது பொதுமக்கள், பொதுமைய” என்ற பாதை சரிவராது.
ஆங்கில எழுத்தாளர் சியர்ச்சு ஆர்வெல் தன் ”1984” புதினத்தில் இது போன்ற ஒரு மொழியை விவரிப்பார். good, supergood, plusgood, doubleplusgood என்று முன்னொட்டுகளால் சொற்களைப் படைக்கும் தந்திரத்தை அங்கு சொல்லி யிருப்பார். அது ஓர் இயந்திர மொழியையே உருவாக்கும். தீநுண்மி, முள் தொற்றி போன்றவை supergood, plusgood, doubleplusgood என்ற வகைச் சொற்களைச் சார்ந்தவை. அப்படிச் சொற்களைத் தமிழில் உருவாக்கினால் ஒருநாளும் தமிழில் அறிவியல் பரவாது. நாம் காலத்திற்கும் அடிமையாய் இருப்போம். அப்படி ஒருவகையில் தமிழ் வளர்ந்தால் அது சவலைப் பிள்ளையாகவே இருக்கும்.
அந்தத் தடந்தகை (strategy) நம்மைக் கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கம், கேளிக்கை தவிர வேறு எதற்கும் வல்லமையுள்ளதாய் ஆக்காது. நான் சொல்வது சிலருக்கு வலிக்கலாம். ஆனால் என் கருத்தை என் பக்கத்தில் சொல்ல எனக்கு உரிமையுண்டு. பழம் இலக்கியங்களைப் படிக்காமல், வட்டார வழக்குகளை அறியாமல், மற்ற தமிழிய மொழிகளைச் சேர்த்துக் கொள்ளாமல், இந்தையிரோப்பிய மொழிச் சொற்களுக்கும், நம் சொற்களுக்கும் உள்ள உறவுகளை ஆயாமல், மொழித்திரிவு விதிகளை அறிந்துகொள்ளாமல், புதுச்சொல்லாக்கம் செய்வது குதிரைக் கொம்பே என்பதில் நான் தெளிவாய் இருக்கிறேன். என் சொல்லாக்க முறையின் அடி நாதம் அது தான்.
இனி scooter க்கு வருவோம். skeud- என்னும் Proto-Indo-European root meaning "to shoot, chase, throw." It forms all or part of: scot-free; shoot; shot; shout; skeet; skittish; wainscot. It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit skundate "hastens, makes haste;" Old Church Slavonic iskydati "to throw out;" Lithuanian skudrus "quick, nimble;" Old English sceotan "to hurl missiles," Old Norse skjota "to shoot with (a weapon)." என்பதில் தான் அவ்ர் தொடங்குவார், எங்கே சுற்றினும் முடிவில் மேலையர் சங்கதத்திலே தான் வந்துநிற்பார். அதற்குச் சற்றுதள்ளித் தமிழுக்கு வரவே மாட்டார். ஆய்ந்து பார்த்தல், பல தமிழ்ச் சொற்கள் உருமாறிச் சங்கதத்தில் அடையாளம் காட்டும், இத்தனை சொற்களுக்கான உறவு எப்படி ஏற்பட்டது? நாம் வியக்கிறோம். என் ஆய்வு முடியவில்லை.
தமிழில் கடு-த்தல் என்பதற்கான எத்தனையோ பொருள்களில் விரைவும் ஒன்று. “ காலெனக் கடுக்கும் கவின்பெறு தேரும்” என்பது மதுரைக் காஞ்சி 388. கடிது வா = வேகமாய் வா. குடுகுடு என்று ஓடினான் என்றால் வேகமாக ஓடினான் என்று பொருள். குடுகுடுக்கிறவ்ன் = அவக்கரப் படுகிறவன். கடுநடை = வேகநடை.குடு>கடு என்று திரியும். ”வெந்திறல் கடுவெளி பொங்கர்ப் போந்தென” குறுந். 39. “கருமக் கடுக்கம் ஒருமையின் ஆடி” (பெருங்கதை, இலாவன. 17:9) “மாரி கடிகொளக் காவலர் கடுக” (ஐங்குறு 29.1) ”கால்விசை கடுகக் கடல் கலக்கு உறுதலின்” (மணிமே. 14:80) “கடுநடை யானை கன்றொடு வருந்த” (நற் 105.4). கடு என்பது இந்தையிரோப்பியனுக்கு வெகு தொலைவில்லை. முன்னால் s- சேர்த்தால், அதன் உறவு புரிந்துவிடும். .
அந்த வகையில் scooter (n.)யைக் ”கடுதி” எனலாம் 1825, "one who goes quickly," agent noun from scoot (v.). Also in 19c. a type of plow and a syringe. As a child's toy, from 1919 (but the reference indicates earlier use), as short for motor scooter from 1917. துள்ளுந்தை ஏற்கும் நாம் கடுதியைச் சேர்க்கத் தயங்குவோம். ”நாம் எசமானர் மொழிக்கு நெருக்கமாய் வருகிறதே? அது எப்படி நம்மை அவருக்குச் சமானம் ஆக்கலாம்?” என்று சிலர் கேட்பார். ”என்ன இருந்தாலும் சாமி, சாமிதான். நாம அடிமை தான்” என்பார் போலும்.
கடுதியை ஏற்றால், scut (n.1) "short, erect tail" (of a rabbit, hare, deer, etc.), 1520s; earlier "a hare" (mid-15c.), perhaps from Old Norse skjota "to shoot (with a weapon), launch, push, shove quickly" (compare Norwegian skudda "to shove, push"), from PIE root *skeud- "to shoot, chase, throw." என்பதை கடுவன் (பூனை) என்பது போல் கடுவை எனலாம்.
shoot (v.) Old English sceotan "to hurl missiles, cast; strike, hit, push; run, rush; send forth swiftly; wound with missiles" (class II strong verb; past tense sceat, past participle scoten), from Proto-Germanic *skeutanan (source also of Old Saxon skiotan, Old Norse skjota "to shoot with (a weapon); shoot, launch, push, shove quickly," Old Frisian skiata, Middle Dutch skieten, Dutch schieten, Old High German skiozan, German schießen), from PIE root *skeud- "to shoot, chase, throw." கடு-த்தல் என்பது, சூடு-தலுக்கு இன்னொரு பெயர், (சுடுதல் என்பது வெடிமருந்து பயன்பட்டால் மட்டுமே பயன்படும். விடு-த்தல்; எய்-தல் போல், கடு-த்தலும் இன்னொரு வினைச்சொல்.
shot = கடுவு.
skeet (n.) form of trapshooting, 1926, a name chosen as "a very old form of our present word 'shoot.' " Perhaps Old Norse skotja "to shoot" (see shoot (v.)) was intended. கடுவம்
skittish (adj.) early 15c., "very lively, frivolous," perhaps from Scandinavian base *skyt- (stem of Old Norse skjota "to shoot, launch, move quickly"), from PIE root *skeud- "to shoot, chase, throw." Sense of "shy, nervous, apt to run" first recorded c. 1500, of horses. கடுவான
wainscot (n.) mid-14c., "imported oak of superior quality" (well-grained and without knots), probably from Middle Dutch or Middle Flemish waghenscote "superior quality oak wood, board used for paneling" (though neither of these is attested as early as the English word), related to Middle Low German wagenschot (late 14c.), from waghen (see wagon) + scote "partition, crossbar" (from PIE root *skeud- "to shoot, chase, throw") கடு வையம் வையம் = wagon என்று இன்னொரு கட்டுரையில் சொன்னேன்.
இந்த இடுகையை முடிப்பதற்கு முன்னால் motor (n.) நகர்த்தி பற்றிச் சொல்லி விட வேண்டும். "one who or that which imparts motion," mid-15c., "controller, prime mover (in reference to God);" from Late Latin motor, literally "mover," agent noun from past-participle stem of Latin movere "to move" (from PIE root *meue- "to push away"). Sense of "agent or force that produces mechanical motion" is first recorded 1660s; that of "machine that supplies motive power" is from 1856. Motor-home is by 1966. Motor-scooter is from 1919. First record of slang motor-mouth "fast-talking person" is from 1970.
கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு இதுகாலம் ”இயக்கம், அது இது” என்று நெய்க்கு அலைந்திருகிறோம். move = நகர்-தல். இதை நக(ர்)வு-தல் என்றும் சொல்லலாம். motion = நகர்த்தம். car = சகடு; motor-car = நகர்ச்சகடு; bike = இருதி. motor-bike = நகர் - இருதி
முடிவில் மனம் இருந்தால் மார்க்கமுண்டு
scooter = கடுதி
move = நகர்-தல், நக(ர்)வு-தல்.
motion = நகர்த்தம்.
motor = நகர்த்தி
car = சகடு;
motor-car = நகர்ச்சகடு;
bike = இருதி.
motor-bike = நகர் - இருதி
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment