Monday, February 15, 2021

cannon பாகங்கள்

அண்மையில் நண்பர் நன்னிச் சோழன் தமிழ்ச்சொல்லாய்வில் ஒரு cannon படத்தைக் கொடுத்து பாகங்களுக்குத் தமிழ்ப்பெயர் கொடுத்தார். நான் அதே சொற்களுக்கு கீழே என் பரிந்துரையைத் தருகிறேன். முதலில் cannon என்பதற்கு ஆன ஆங்கில விளக்கம் பார்க்கலாம்.c. 1400, "artillery piece, mounted gun for throwing projectiles by force of gunpowder," from Anglo-French canon (mid-14c.), Old French canon (14c.), from Italian cannone "large tube, barrel," augmentative of Latin canna "reed, tube" (see cane (n.)). The double -n- spelling to differentiate it from canon is from c. 1800. இச்சொல் துளைப்பொருளில் எழுந்தது. தமிழில் கன்னம் = துளை. கன்னகம் - துளையுள்ள வெடிமருந்துக் கருவியைக் கன்னகம் என்றே அழைக்கலாம்.



cannon உக்குப் பீரங்கி என்றும் தமிழில் சொல்லுண்டு. குண்டு பீரிட்டு வருவதால் எழுந்தபெயர் பீரங்கியாகும். ஒருசிலர் பீரங்கி  தமிழில்லை, போர்த்துகீசில் இருந்து தமிழ் கடன்வாங்கியது என்பார். இதற்கணைவாய்த் தமிழ் விக்சனரியைக் காட்டுவார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. தமிழ் விக்சனரியில் கிட்டுவதெலாம் வேதவாக்கா, என்ன? பீரங்கி போர்த்துக்கீசியச் சொல்லென அங்கு சொல்லப்பட்டதால், அது சரியாகிவிடாது. யாராவது போர்த்துகீசியரிடம் வினவினாரா? - என்று தெரியவில்லை, 

https://www.google.com/search?q=cannon+in+portuguese&rlz=1C1CHBF_enUS852US852&oq=cannon+in+portu&aqs=chrome.1.69i57j0l6.12589j1j7&sourceid=chrome&ie=UTF-8 என்ற கேள்வியைக் கூகுளில் இட்டால் பல்வேறு மொழிகளில் இருந்து போர்த்துக்கீசிற்கு மாற்றித்தரும். அதில் cannon என்று ஆங்கிலத்தில் இட்டால் canhão என்று போர்த்துகீசில் கிடைக்கிறது. tank gun என்று ஆங்கிலத்தில் இட்டால் arma tanque என்று போர்த்துகீசில் கிடைக்கிறது. பீரங்கி என்று தமிழில் இட்டால், Pīraṅki என்று ஆங்கில எழுத்துப் பெயர்ப்பிலும், artilharia என்று போர்த்துக்கீசிலும் கிடைக்கிறது.  இப்போது சொல்லுங்கள். பீரங்கி போர்த்துக்கீசியச் சொல்லா? என்னைக் கேட்டால் “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர உசாவுவதே மெய்”. அருள்கூர்ந்து மேலும் தேடுங்கள். நானும் தேடுகிறேன். இப்போதைக்கு என் முடிவு: பீரங்கி தமிழே. இனி கன்னகப் பாகங்களுக்கு வருவோம். தேவைப்பட்ட இடங்களில் கீழே விளக்கம் தருகிறேன். 

Lip = இதழ். இதை உதடு என்றுஞ் சொல்லலாம்.

Fillet = இழைப்பு இழைத்துச் செய்யப்பட்டது இழைப்பு.

Muzzle = மூஞ்சில். ;முகவாய் என்பது முகத்தின் கீழ்த்தாடையைக் குறிக்கும். அது மேல்தாடையோடு கணுக்கப் பட்டதால்(connected) கணவாய் ஆனது. இது muzzle க்கு ஆன சொல் அல்ல. மூஞ்சி  என்பது முன்வரும் முக்கையும் வாயையும் சேர்த்த பகுதியைக் குறிக்கும், இதுவே muzzle எனப்படும். மூக்குத் துளை வழியே காற்று உள்ளேபோய் வெளிவருகிறது  வாய்த் துளை வழியே உணவு போகிறது. வாய் வழியே துப்பவும் செய்கிறோம்..கன்னகத்தில் பொருத்தும் மருந்தானது வெடித்துப் பின் எரிந்து குண்டைத் துளை வழியே துப்பும் ஒப்புமையால் மூஞ்சில் என்ற சரியாய்ப் பொருந்தும்

Muzzle mouldings = மூஞ்சில் மூழ்த்துகள்   [ஓர் அச்சுக்குள் உருகிய மாழையை அல்லது பொத்திகையை (plastic) மூழ்த்தியோ, அல்லது உருகிய மாழை, பொத்திகைக்குள் அச்சை மூழ்த்தியோ, மூழ்த்துகள் (moldings) செய்யப் படுகின்றன. பல்வேறு வகை முழ்த்துச் செலுத்தங்கள் இற்றை நடைமுறையில் உண்டு. அவற்றை  இங்கு விவரிப்பின் பெருகும். எனவே தவிர்க்கிறேன்.]

 Swell of muzzle = மூஞ்சில் வீக்கம்

muzzle astragal & fillets மூஞ்சில் கவோதமும், இழைப்புகளும். கவ்விய ஓதம் கவ்வோதம்>கவோதம். கோயில் கட்டுமானத்தில் இச்சொல் வரும் இச்சொல் சங்கதத்தில் நுழையும் போது cabotham என்றாகும். நாம் கவோதம் என்றே சொல்லிக்கொள்ளலாம்.  Chase girdle குழிதைப் பட்டை; குழிந்திருப்பது குழிதை. இதைக் குழிதாடி என்று சிவகங்கை மாவட்டத்தில் சொல்வர். குழிதாடியில் நெல்லை இட்டு உலக்கையால் குத்தி அரிசியையும் உமியையும் பிரிப்பர்.  குழிதாடியைக் குழிதை என இங்கே நான் சுருக்கியுள்ளேன்.  Chase astragal & fillets குழிதைக் கவோதமும், இழைப்புகளும் 

trunnions& rimbase தண்டங்களும் விளிம்படியும் செடி, மரங்களின் அடிக்கட்டை, trunk எனப்படும். தண்டு, தண்டம் என்று நாம் சொல்வோம். trunnion உம் trunk உம் ஆங்கிலச் சொல்லின் பிறப்பில் தொடர்புள்ளவை. விளிம்பு அடி விளிம்படி = rimbase ஆகும்.   

First Reinforce முதல் தாங்கி. 60 ஆண்டுகளுக்கு மேலாய் reinforced concrete என்பதை ”உறுதிபெறு கற்காரை” என்று பொறியியல் கல்லூரிகளில் வெளிவந்த அறிவியல், நுட்பியல் இதழ்களில் சொல்லி வந்தோம். உறுதிபெறுதல் என்பது civil engineering இல் பயன்பட்டது. ஒரு கருவிச்சட்டத்தைத் (equipment frame) தாங்கும் உறுப்பைத் தாங்கி (bearing) என்று சொல்வோம். இங்கே   Reinforce என்பது தாங்கி எனும் பொருளில் தான் பயன்படுகிறது. Second Reinforce இரண்டாம் தாங்கி. First reinforce astragal & fillets = முதல் தாங்கிக் கவோதமும், இழைப்புக்ளும் 

bottom of the bore = புரையடி; வீடுகளில் இருக்கும் bore well ஐப் புரைக்கிணறு என்று பலகாலம் சொல்லிவருகிறோம்.  

ball = குண்டு 

wadding = வட்டாடை. வெடிமருத்துக்கும் குண்டுக்கும் இடையில் ஓர் அடைப்பு இருக்கும். இதையே இச்சொல் குறிக்கிறது, மருந்தைச் செருமிக் கெட்டிக்க இந்த வட்டாடை. பயனாகிறது  கோயில்களில் இஐத்திருமேனிகளைச் சுற்றிக் கட்டும் ஆடைக்கும் வட்டாடை என்றே பெயர். இங்கே மருந்து வட்டாடையால் கட்டப்படுகிறது.   

Windage = விண்டேகை. காற்றைக் குறிக்கும் விண்டு என்ற சொல் பத்தாம் நூற்றாண்டு பிங்கலத்திலேயே உள்ளது. அது தமிழ்தான். வாயிலிருந்து வெளிவரும் காற்றால் சீழ்க்கை அடிக்கிறோமே, அந்த whistle வீளை என்ப்படும். வீளையும் விண்டு தொடர்புள்ளவை..   

vent field = விண்டுவெளிப் புலம் vent உம் wind உம் தொடர்புள்ளவை. 

vent = விண்டு வெளி

Base ring = அடி வலயம்

knob = குமிழ்

Breech = பீடம்

Base of the breech பீடப் படுகை

Chamber = குவ்வறை

cascable = கவ்வு மூடி

அன்புடன்,

இராம.கி.

No comments: