Wednesday, December 21, 2011

சிலம்பின் காலம் - பொத்தக வெளியீட்டு அழைப்பு

அன்புடையீர்,

ஏற்கனவே மடற்குழுக்களிலும், என் வலைப்பதிவிலும் வெளிவந்த ”சிலம்பின் காலம்” என்ற என்னுடைய கட்டுரைத் தொகுதியை ஒரு பொத்தகமாக ஆக்கி, வரும் சனவரி 5 ஆம் தேதி தொடங்கும் பொத்தகக் கண்காட்சியையொட்டித் தமிழினி பதிப்பகத்தார் வெளிக்கொணருகிறார்கள். பொத்தக வெளியீட்டு விழா வரும் சனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அது பொழுது மற்ற சில எழுத்தாளர்களின் பொத்தகங்களும் தமிழினிப் பதிப்பகத்தால் வெளியிடப் படும் என்று அறிகிறேன்.

என் நூலைப் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் முன்னாள் தலைவர் பேரா. க.நெடுஞ்செழியன் வெளியிட, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் (SRM university) துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ முதற்படியைப் பெற்றுக் கொள்ள இசைந்துள்ளார்கள்.

பதிப்பகத்தார் அனுப்பி வைக்கும் அழைப்பிதழை கூடிய விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். இப்பொழுது நான் தரும் இச்செய்தியை என் முன்னழைப்பாக ஏற்று, வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான சேதி!
வாழ்த்துக்கள் இராம.கி ஐயா!
சிலம்பின் காலம் - பதிவுகளில் மட்டும் அல்லாது, பல தமிழ் இல்லங்களிலும் சிலம்பட்டும்!

பிரதாப் said...

ஐயா,
நல்ல செய்தி! நீண்ட நாள் எங்கும் எழுதாது கண்டு அடிக்கடி தங்கள் வலைத்தளம் வந்து சோதித்திருந்தேன். பதிவு கண்டு மகிழ்ச்சி! நூல் வெளியீட்டுக்கு வரமுடியாவிட்டாலும், முன்கூட்டிய வாழ்த்துக்களை இப்போதோ தெரிவித்துக்கொள்கிறேன். நூலை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளக் கூடிய வயதிகள் உளவா?

இராம.கி said...

அன்பிற்குரிய கண்ணபிரான் ரவிசங்கர்,

வாழ்த்திற்கு நன்றி.

இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பிரதாப்,

சொந்த வேலையழுத்தத்தால், மனம் சற்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. எனவே எழுத்தாக்கங்கள் குறைந்து போயின. கூடிய விரைவிற் திரும்ப வருவேன்.

தங்கள் வாழ்த்திற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய இராமகி அய்யா,

வாழ்த்துகள்.

சற்றே தாமதமானாலும் வெளியீட்டிற்கு வர முயற்சி செய்வேன்.

அன்புடன்
ஆசாத்

இரா. செல்வராசு (R. Selvaraj) said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா.

Indian said...

வாழ்த்துகள் அய்யா.