Friday, April 10, 2009

மீண்டும் ஒரு அத்திப்பட்டி

”அத்திப்பட்டி” என்று ஊரை மையப்படுத்தி, அதை இல்லாமலே பண்ணிய சோகக்கதையை, “சிட்டிசன்” என்ற தலைப்பில் முன்பு திரைப்படம் பண்ணியிருந்தார்கள். நினைவிருக்கிறதா? கடைசியில் வன்னிப் புதுக்குடியிருப்பும் ”அத்திப்பட்டி” ஆகிவிடும் போல் இருக்கிறது.

நச்சுப்புகை போட்டு, ஆட்களைக் கொன்று, பிணங்களை மற்றவர்களைக் கொண்டு புதுக்குடியிருப்புக்குப் பக்கத்தில் புதைக்க இங்கிருந்து வழி சொல்லிக் கொடுத்தார்களாம். இதைச் சென்ற ஏப்ரல் 6-ஆம் தேதி ஒருமுறை புலிகள் மீதும், அருகிற் சுற்றியிருந்த மக்கள் மீதும் போட்டுச் சோதனை பண்ணிப் பார்த்தாயிற்று. இனிப் பெரிய அளவில் செய்ய நாள்
பார்த்திருக்கிறார்கள். இந்த முறை யாரைக் கொல்ல விழைகிறார்களோ, அவர்களையே குழி வெட்டச் சொல்லி, அருகே அவர்களை வரிசையாய் நிற்க வைத்து நச்சுப்புகை போடவேண்டியது தான் மிச்சம். (அதுதான் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குள் இதை முடிக்க வேண்டும் என்று இரு அரசுகள் ஆணையிட்டிருக்கின்றனவாமே?) இட்லர் யூதர்களை இப்படித்தான் கொன்றானாம். இத்தாலிக்காரன் முசோலினியும் இப்படித்தான் செய்தானோ?

மொத்தத்தில் ஒரு கொடுங் கொலை நுட்பம் இன வெறியர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்கிறது. அந்த நரம்பு வளி (nerve gas) இங்கிருந்து அளிக்கப் பட்டதாகத்தான் பரவலாய்ச் சொல்லுகிறார்கள். [அதில் இருக்கும் phosgene வளி இங்கு ஏராளமாய்ச் செய்யப்படுகிறது. phosgene செய்வது தப்பு இல்லை. அதை வைத்து எத்தனையோ நல்ல வேதிப் பொருள்களும், மருந்துப் பொருள்களும் செய்யப் படுகின்றன. அதைச் சேர்த்து நரம்புவளிக் கலவை செய்வதுதான் குற்றம். இந்தியச் சட்டமும் அதை அனுமதிக்காது.} இறந்த பிணங்களுக்கு அருகிலிருந்தும், பிணங்களின் காய வெடிப்புகளில் இருந்து தசைகளை எடுத்துச் சோதனை செய்ததில் triethanolamine, phosgene இருந்தது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

இவ்வளவு கொடுரத்திற்கு வழி சொன்ன ”பேர்வழிகளுக்கும்”, அவர்களின் அரசியல் செலுத்தர்களுக்கும் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது. எதிர்காலத்தில் யாரோ ஒரு ”குடிமகன்” உறுதியாக வருவான். அவன் என்ன உருவம் எடுப்பானோ? புலியோ, வேங்கையோ நமக்குத் தெரியாது. அனைத்துநாட்டு நயதி மன்றத்தில் [International Court of Justice] இது போர்க்குற்றமாய்ப் பதிவு செய்யப்பட்டால், அப்பொழுது யார் தண்டனை ஏற்பார்களோ? காலம் விடை சொல்லட்டும்.

இருந்தாலும் மனக்கொதிப்பு அடங்க மறுக்கிறது.

இந்தியத் தமிழர்களே! மறக்காதீர்கள்! இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஓர் ஆயம் பூண்டோடு ஒழிய வேண்டும்.

ஒரு கழகம் இம்முறை தோற்றுப் பின் தன் தாழ்நிலை உணர்ந்து திருந்த வேண்டும். பட்டால் தான் கிழவருக்குப் புத்தி வரும்.

கொதிப்புடன்,
இராம.கி.

13 comments:

திகழ்மிளிர் said...

உண்மை தான்

FloraiPuyal said...

பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்?

Anonymous said...

Sir, it is already started.If one DMK goes another DMK with the same sprit (without any virtual powers to influence the central.

I remain with deep sorrow

Ram
Colombo

சுபானு said...

//இந்தியத் தமிழர்களே! மறக்காதீர்கள்! இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஓர் ஆயம் பூண்டோடு ஒழிய வேண்டும்.

ஒரு கழகம் இம்முறை தோற்றுப் பின் தன் தாழ்நிலை உணர்ந்து திருந்த வேண்டும். பட்டால் தான் கிழவருக்குப் புத்தி வரும்.

உண்மைதான்... தட்டுத் தடுமாறி புத்திபேதலித்தது போல் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறாரே..

தமிழக மக்களே சிந்தியுங்கள்... உங்களின் கைகளிலேயே எல்லாம் இருக்கின்றது... !!!

நாமக்கல் சிபி said...

//இந்தியத் தமிழர்களே! மறக்காதீர்கள்! இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஓர் ஆயம் பூண்டோடு ஒழிய வேண்டும்.

ஒரு கழகம் இம்முறை தோற்றுப் பின் தன் தாழ்நிலை உணர்ந்து திருந்த வேண்டும். பட்டால் தான் கிழவருக்குப் புத்தி வரும்.
//

அப்படியே நடக்க வேண்டும்!

Anonymous said...

உங்கள் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா? போன வாரம் வரை இன்னும் சில மணிகளில் அழிக்கப் போகிறார்கள் என்றீர்கள். இப்போ ஏப்ரல் 14. அடுத்து 2025ற்குள் என்பீர்களோ?

பிரபாகரன் சரணடைந்துவிட்டால் அடுத்த நொடி எல்லாம் நிறுத்தப் படும். ஆயிரக் கணக்கான மக்களை காக்க இவர் ஒருவர் சரண் அடைந்தால் என்னவாம்?.

இவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இபப்டிக் கட்டுக கதைகளை அவிழ்த்துவிடுகிறார். இதற்கு ஒத்து ஊதுகிறீர்கள்.

நவீன் said...

உங்கள் ஆதங்கம்தான் பரவலாக தமிழ்மக்கள் மனதில் எழுந்திருக்கிறது.

கண்டிப்பாக அவர்கள் இத்தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்றே எண்ணுகிறேன்.

வெற்றி said...

கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டு தமிழகத்திற்கு தொலை நோக்குள்ள தலைமை மிகவும் அவசியம் தேவைப்படுகிறது.

இது ஈழத்தமிழர்களின் விடியலுக்காக மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களின் விடிவுக்கும்.

தஞ்சாவூரான் said...

//இந்தியத் தமிழர்களே! மறக்காதீர்கள்! இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஓர் ஆயம் பூண்டோடு ஒழிய வேண்டும்.

ஒரு கழகம் இம்முறை தோற்றுப் பின் தன் தாழ்நிலை உணர்ந்து திருந்த வேண்டும். பட்டால் தான் கிழவருக்குப் புத்தி வரும்.
//

என் வாக்கில் உங்களது வாக்கு பிரதிபலிக்கும்.

கொலைகாரர்கள் தம் தவறை உணரும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

Anonymous said...

you are giving elaborate advertisement to "HINDU".WHAT IS THE ADVERTISEMENT TARIFF SIR ?
-R.SELVAPRIYAN-CHALAKKUDY

இராம.கி said...

அன்பிற்குரிய திகழ்மிளிர்,

வரவிற்கு நன்றி. ஆயம் ஒழியவேண்டியதும், கழகம் தண்டிக்கப் படுவதும் நம் கையில் தான் இருக்கிறது.

அன்பிற்குரிய புயலாரே,

மண்ணின் குடமுடைந்து மக்கித்தான் போனாலென்?
இன்னோர் குடஞ்செய்ய ஏலோமோ? - எண்ணிடுவீர்!
மானமிங்கு மாண்டதெனில் ஆயம் கழகங்கள்
ஈனரெலாம் எற்றுக் கினி.

அன்பிற்குரிய சுபானு, நாமக்கல் சிபி, தஞ்சாவூரான்

இந்தக் கடமையைப் பலவிடத்தும் பரப்புங்கள். நாம் மட்டும் செய்தால் பற்றாது. பலரும் இதை உணர்ந்து சொல்ல வேண்டும்.

அன்பிற்குரிய வெற்றி,

தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லையென்றால் இப்படித்தான் பந்தாடப்பட்டுக் கொண்டே இருப்போம்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

Dear Anonymous,

Can't you read Tamil and understand what is written there?

iraamaki

tamil said...

குடும்ப பாசம் , பண ஆசை கிழவரின் கண்ணை மறைத்து விட்டது. அடிவருடிகள் திருந்த வேண்டும் முதலில்.