Saturday, February 21, 2009

இந்துவை வாங்காதீர்கள்

அன்பிற்குரிய தமிழகத் தமிழர்களுக்கு,

ஈழம் பற்றிய செய்திகளை நம்மூரில் தெரியவிடாமல் செய்து கொண்டிருப்பதில் ஆங்கில மிடையங்களின் பங்கு பெரியது (தமிழ் மிடையங்களில் ஒருசில கொஞ்சமாக வேணும் செய்திகளை வெளியிடுகின்றன.) அதிலும் முகன்மையான பங்கு வகிப்பது இலங்காரத்னாவின் “The Hindu" நாளிதழ் தான். இவர்களின் திமிரான ஆட்டங்கள், ஈழம் பற்றிய குசும்புகள், அங்கு இவர்கள் செய்த குழப்படிகள், ஈழத்தைத் தமிழகத் தமிழரிடமிருந்து உணர்வால் பிரித்தது, தமிழினக் கொலைக்கு உறுதுணையாக இருப்பது எனப் பலவாறாச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு நாட்டின், இனத்தின், தேசத்தின் எதிர்காலத்தில் விளையாட என்.ராமுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர்களின் கூட்டிக் கொடுக்கும் செயலுக்குப் பரிசாகப் பெற்ற இலங்காரத்னா பட்டத்தின் ஆழம் இப்பொழுதாவது நம் மக்களுக்குப் புரியட்டும்.

இவர்களின் அழிச்சாட்டியம் இவர்கள் நாளிதழை நாம் வாங்குகின்ற வரையில் தான் நீளும். இவர்களின் பொய்யும் புளுகும் இவர்களின் வயிற்றில் அடித்தால் தான் நிற்கும். அவர்களை நிற்பாட்டுவது நம் கையில் இருக்கிறது. அதை நாம் ஒவ்வொருவரும் கூட்டாகச் சேர்ந்தால் செய்யமுடியும்.

இது காந்தி செய்த வழி தான் ”ஒத்துழையாமை இயக்கம்”. இவர்களின் பொருள்களை (இங்கு நாளிதழ்) வாங்காமல் இருந்தால் தானே வழிக்கு வருவார்கள். இது நம்மால் முற்றிலும் செய்யக் கூடிய ஒரு செயல் தான்.

இனி வரும் நாட்களில் யாரும் இந்துவை வாங்காதீர்கள். கால காலப் பழக்கத்தை நிறுத்துவது நம்மில் பலருக்கும் சரவல் தான். ஆனாலும் செய்யுங்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் பழக்கத்தை கடினமாய் முயன்று நிறுத்தி ஒரு மாதமாக நான் வாங்காது இருக்கிறேன். இந்த நாளிதழ் ஈழம் பற்றிய செய்திகளில் நொதுமல் (neutral) நிலை எடுக்கும் வரை இதை வாங்குவதில்லை என்பதே என் முடிவு. (அப்படிச் செய்தி தெரியவேண்டுமென்றால் வலைத்தளங்களுக்குப் போய் தெரிந்து கொள்ளுங்கள்.) நம் காசு வாங்கி இவர்கள் பிழைக்க வேண்டாம்.

என்னை அறிந்த பலருக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இந்த வேண்டுகோளை உங்களுக்குத் தெரிந்த எல்லோரிடமும் சொல்லுங்கள்.

சிறுதுளி பெருவெள்ளம். இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளம் பெருகியிருந்தால் மனம் கொஞ்சமாவது ஆறுதற்படும்.

அன்புடன்,
இராம.கி..

53 comments:

Lena PL said...

I second your thoughts.

மாலன் said...

நீங்கள் இந்துவை வாங்குவதும் வாங்காதிருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் அது, அதாவது சில நூறு பேர் வாங்காதிருப்பது- அதன் வயிற்றில் அடித்துவிடும் என்பது கற்பனை. காரணம்: 1) இந்து நாளிதழின் ஒரு நாளைய விற்பனை 9 லட்சத்திலிருந்து 10 லட்சம் இருக்கும். சில நூறு, ஆயிரம் பிரதிகள் என்று வைத்துக் கொண்டாலுமே அது மிகக் குறைந்த சதவீதம். தாக்கம் பெரிதாக இருக்காது.
2)நாளிதழ்கள் தங்கள் வருமானத்திற்கு பெரிதும் விளம்பரங்களையே சார்ந்துள்ளன.விளம்பரம் வாசகர் எண்ணிக்கையைப் பொறுத்தது என்ற போதும், அகில இந்திய அளவில் விற்பனையாகும் ஒரு நாளிதழ் இதனால் பெரும் மாற்றங்களை எதிர் கொள்ளாது
எனவே நீங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமானால் அதன் ஆசிரியர்களுக்கு உங்கள் கருத்தை எழுதுவதே சரியான முறையாக இருக்கும்.
சரி, இந்துவை நிறுத்திவிட்டு எந்த நாளிதழை வாங்க விரும்புவீர்கள்? விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஆங்கில நாளிதழ் எதுவுமே இல்லை.

நடுநிலை தவறியமைக்காக ஒரு நாளேட்டைப் புறக்கணிக்க விரும்பினால் நீங்கள் இன்று எந்த நாளேட்டையும் வாசிக்க இயலாது. தமிழ் நாளேடுகள் பல விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டும் ஐநாவின் அறிக்கைகளையே கூடப் பிரசுரிப்பதில்லை.

என்னைக் கேட்டால் இரு தரப்பு செய்திகளையும் அறிந்து கொண்டு நாம் ந்ம் முடிவுகளுக்கு வருவதுதான் அறிவுடமை. 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'
மாலன்

Anonymous said...

நான் முதலில் இந்த வேண்டுகோளுக்கு உடன்பட மாட்டேன். புலிகளுக்கு எதிராக செய்திகளை வெளியிடுகிறது என்ற குற்றச் சாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. புலிகள் பரப்பும் புழுகுகளுக்கு இடம் கொடுக்கவில்லை என்ற மனக்கவலை உங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். நீண்டகாலம் நிலவும் ஒரு பிரச்சனைக்கு பலரும் கூடித் தீர்வு காணவேண்டும். இந்தப் பிரச்சனையில் தன்னைத் தவிர வேறு யாருக்கும் இடம் கிடையாது என்று சக தமிழ் தலைவர்களைப் போட்டுத் தள்ளிய புலிகளின் பாசிசத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. அமிர்தலிங்கம், யோகே°வரன், சிவசிதம்பரம், பத்மநாபா, உமா மகே°வரன், சிறீசபாரத்னம் என்று இவர்களால் கொலையுண்ட தலைவர்களின் பட்டியல் நீளுகிறது. இவர்கள் அனைவரும் இலங்கை அரசின் உளவாளிகள் என்றும் துரோகிகள் என்றும் முத்திரை குத்துவதன் வாசைன இந்து ராம் விஷயத்திலும் வெளிப்படுகிறது. ஆனால் புலிகள் மட்டும் இவர்களை கொல்வதற்கு பிரேமதாசா போன்ற சிங்கள இனவெறியர்களுடனும், ஜனதா விமுக்தி பெருமுனா போன்ற இனவாத அமைப்புகளுடனும் கைகோர்த்தால் அது ராஜதந்திரம். இவர்களுக்கு யார் பிடிக்கவில்லையோ அவர்கள் உடனடியாக கொலைப்பட்டியலில் இடம் பெறுவார்கள். இப்படி அடையும் ஈழத்தில் இவர்கள் நடத்தும் ஆட்சிக்கும் சிங்களன் நடத்தும் ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை.

விஜயன்

இராம.கி said...

அன்பிற்குரிய பழ.லேனா,

நன்றி

Unknown said...

//இவர்களின் அழிச்சாட்டியம் இவர்கள் நாளிதழை நாம் வாங்குகின்ற வரையில் தான் நீளும். இவர்களின் பொய்யும் புளுகும் இவர்களின் வயிற்றில் அடித்தால் தான் நிற்கும். அவர்களை நிற்பாட்டுவது நம் கையில் இருக்கிறது. அதை நாம் ஒவ்வொருவரும் கூட்டாகச் சேர்ந்தால் செய்யமுடியும்.//

அதே சமயம் இவர்களின் இணையதளத்திற்கு செல்வதையும் நிறுத்த வேண்டும். அதன் மூலம் அவர்களின் இணைய வருமானமும் பாதிப்புகுள்ளாகும். இதை ஒரு இயக்கமாக எடுத்துச் செய்ய வேண்டும்.

//சிறுதுளி பெருவெள்ளம். இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளம் பெருகியிருந்தால் மனம் கொஞ்சமாவது ஆறுதற்படும்.//

மாற்றம் ஏற்படுமென நம்புவோம். அதற்கு நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.

மாலன்,

//எனவே நீங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமானால் அதன் ஆசிரியர்களுக்கு உங்கள் கருத்தை எழுதுவதே சரியான முறையாக இருக்கும். //

இந்து ஆசிரியருக்கு கடிதம்?? உங்களின் நகைச்சுணர்விற்கு நன்றி. :)

இராம.கி said...

வாங்க, வாங்க மாலன்,

என்னோட வலைப்பதிவுக்கு நீங்க வந்ததுக்கு முதலில் நன்றி.

”சிலநூறு பேர் வாங்காதிருப்பது அதன் வயிற்றில் அடித்துவிடும் என்பது கற்பனை” என்று சொல்லியிருக்கிறீர்கள். நல்லது. நாங்கள் கற்பனையில்

தொடங்கினால் தான் என்ன? முதலில் தொடங்குவோமே?

”மலையை வென்ற கிழவன்” என்ற சீனப் பழங்கதை ஒன்று உண்டு. மாவோ அவர் கட்டுரைகளில் சொல்லுவார். [மாவோவை ஆழ்ந்து படித்த காலம்

ஒரு காலம்.]

ஒரு வளமான சமவெளியை அடைய முடியாமல், ஒரு ஊருக்குத் தடை போட்டது போல் பெரியமலை ஒன்று இருந்ததாம். அதை ஒருகிழவன்

தினமும் உளி கொண்டு பல ஆண்டு காலமாய்க் கொத்திக் கொண்டே இருந்தானாம். போக வருபவர்கள், அவனுடைய செயலைப் பார்த்துச் சிரித்து,

“ஏன் இப்படிக் கொத்திக் கொண்டு இருக்கிறாய்? மலை எவ்வளவு பெரிசு? நீ எவ்வளவு சிறிசு? இதோட மல்லுக் கட்டலாமா? கற்பனையிலேயே

தவழ்ந்துக் கிட்டிருந்தா, உன் ஆயுசு போயிடாதா>” ன்னு கேட்டார்களாம்.

”வேறொன்றும் இல்லை. அந்தப் பக்கம் ஒரு பெரிய சமவெளி இருக்கிறது. அங்கு எல்லா வளமும் இருக்கிறது. எங்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு

அங்கு நாங்கள் போய்வந்தபடி இருந்தால் தான் உறுதுணையாக இருக்கும். அப்படிப் போவதை இந்த மலை தடுக்கிறது. நாங்கள் அங்கு செல்ல

வேண்டுமானால் வெகுதொலைவு சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. என்னால் முடிந்த அளவு கொத்தி ஒரு மலைப்பாதை

அமைத்தேனானால், அந்தப் பக்கம் போக வழி கிடைக்கும்.. இந்தப் பணியில் நான் இறந்தாலும் அது ஒரு பொருட்டில்லை. என் மக்கள்,

அவர்களின் மக்கள் என ஒரு நீண்ட கொடிவழியே வேலை செய்து வழியை உருவாக்கி விடுவோம்.

ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் ஒன்று புரியும். நாங்கள் கொடிவழியே வளர்ந்து கொண்டே இருப்போம். மலை என்றைக்கும் வளராது. எனவே என்றோ

ஒரு நாள் நாங்கள் அதை வெல்லத்தான் செய்வோம்” னானாம்.

அவனுடைய விடாமுயற்சியைக் கண்ட தேவதைகள் அவன் முன் எழுந்து வந்து, மலையை நகர்த்திவைத்து வழி உண்டாகினவாம்.

இப்படி அந்தக் கதை போகும். இதுமாதிரிக் கதைகள் / பட்டறிவுகள் பலநாட்டிலும் உண்டு. [நான் சவுதியிலும் இது போன்ற ஒரு மலை, கதை,

அறிந்திருக்கிறேன். சமவெளியை மறைக்கும் ஒரு மலையை நான் ரியாதில் இருந்து 150 கி.மீ தொலைவில் பார்த்தும் இருக்கிறேன். அந்த மலையைக்

கொஞ்சம் கொஞ்சமாய் அறுத்து ஒரு பாதையை தனித்த இனக்குழு ஒன்று சென்ற நூற்றாண்டில் உருவாகியிருக்கிறது. இன்றைக்கு அந்தப்

பாதையை அகலப் படுத்தி அரசாங்கம் பெரிய சாலையைப் போட்டிருக்கிறது. இது போன்ற மாந்த முயற்சிச் சாதனைக் கதைகள் பலநாடுகளிலும்

இருக்கின்றன. அவை எல்லாம் கற்பனையில் தொடங்கியவை தான்.)

இங்கு அந்தச் சீனத் தேவதைகளாய் தமிழ்மக்களே என் முன் காட்சியளிக்கிறார்கள்.

என்னால் முடிந்த பணி இது. இதைச் செய்ய முடிவெடுத்தது அந்த உணர்வில் தான்.

இனி உங்கள் காரணங்களுக்கு வருகிறேன். 10 இலக்கம் படிகளில் ஒரு 50000 குறைந்தாலும் அது இந்துவை உறுதியாக உறுத்தும். [நான்

சொல்லுவது பெருவெள்ளமாய்த் தமிழ்நாடெங்கணும் ஏற்பட்டால் 50000த்தை அடைவது சரவலல்ல.] அதன் விளம்பர வருமானம் அதற்குத் தக்கக்

குறையும். [விற்பனைச் சுற்று குறையும் நாளிதழுக்கு அதே அளவு விளம்பரக் கட்டணத்தை நிறுவனங்கள் கொடுக்கா.] இது சுற்றி வளைத்து இந்து

நாளிதழின் வயிற்றில் அடிக்கத்தான் செய்யும்.

காந்தியார் இலங்காசயர் துணிகளை ஒதுக்கச் சொல்லி உள்ளூர் ஆடைகளை வாங்கச் சொன்னதும், வெறும் உப்பைக் காய்ச்சச் சொன்னதும்

இறுதியில் வெள்ளைக்காரணை அடிக்கவே செய்தன. அவன் நாட்டை விட்டு ஓடினான்.

எங்களால் முடிந்ததை நாங்கள் இப்பொழுது செய்கிறோம். இந்து, அகில இந்திய நாளிதழாய் இருக்கலாம். ஆனாலும் அதன் தொப்பூழ்க் கொடி

இங்குதான் உள்ளது. அதன் குறிப்பிட்ட வருமானம் தமிழரிடையே தான் உள்ளது. ”If it is Chennai, we are the ones" என்றுதானே அவர்கள்

சொல்லிக் கொள்ளுகிறார்கள். அந்தக் கொடியைச் சற்று நைந்து போக வைப்போமே?

எந்த ஒரு செயற்பாடும் ஒரு S curve போலவே நடக்கும் என்று மானகைப் (management) படிப்பில் படித்திருக்கிறேன். அந்த வளர்ச்சிச் சுறுவை

(growth curve) ஓர் இழுகை வாகையில் (lag phase) தொடங்கி, பின் கிடுகு மதுகையைத் (critical mass) தாண்டியவுடன், குடுகுடுவென்று முடுக்கம்

(acceleration) எடுத்து மடங்குப் பெருக்கல் (exponential growth) நிலையையும், அதன் பின் சிறிது சிறிதாய் வளர்ச்சி தேய்ந்து ஒரு தேக்க நிலையை

அடையும் என்றும் அறிவேன். ஆக, நாம் தொடங்கும் போது எந்த வளர்ச்சியும் இழுகையாகத் தான் தெரியும், அதனால் நான் பொறுமையோடு

காத்திருப்பேன்.

இந்துவை நிறுத்திவிட்டு எந்த நாளிதழை நான் வாங்குவேன்?” என்று கேட்டிருக்கிறீர்கள். எதை வாங்கினால் என்ன? “விடுதலைப் புலிகளை

ஆதரிக்கும் நாளிதழை நான் வாங்கச்சொல்ல வில்லையே?” சிரிக்கத் தான் தோன்றுகிறது, நண்பரே!

எப்படியெல்லாம் சதுரப்பாட்டோடு, உங்களைப் போன்றோர் திருப்புகிறீர்கள்? இதே போலக் கொக்கிகள் போட்டு தமிழர்கள் எல்லோரையும் ஈழம்

பற்றிப் பேசவொட்டாமல் ஆக்கும் நடைமுறை எங்களுக்குத் தெரியாதா, என்ன? தமிழனைப் பற்றிப் பேசத் தடைசெய்யும் முகமாய், இந்த நாட்டில்

ஆட்சியினரும், ஒருசில கட்சியினரும், உங்களைப் போன்ற மிடையக்காரர்களும் திருகு வேலை செய்து சொற்சிலம்பாட்டம் ஆடி உங்கள்

வலைக்குள் எங்களை விழ வைக்கவே எப்பொழுதும் முயலுகிறீர்கள். நாங்கள் விழுவதாய் இல்லை, நண்பரே! அவ்வளவு அச்சமும், வெறுப்பும்,

கொள்ளுமாறு ஈழம் என்ற சொல் உங்களை ஆக்குகிறதா? ஈழம் = புலி என்ற சமன்பாடு உங்களைப் போன்றோருக்கே உண்டு. எங்களுக்கு அல்ல.

நான் இந்துவைக் கேட்பதெல்லாம் மிக எளிது.

“கொத்துக் குண்டுகளை சிங்களவன் போட்டானா, இல்லையா? அதைச் சொல்லுங்கள், அதில் கிடைத்த படத்தைப் போடுங்கள், இதுவரை ஆறு

மாதங்களி இறந்தவர்கள் எத்தனை பேர் என்று சொல்லுங்கள். சிங்கள்காரன் மருத்துவமனைக்கு வேட்டுவைத்தான் என்று போடுங்கள். ஒரு

பி.பி.சி.காரன் போடுகிறான். நீங்கள் போடமாட்டேன் என்கிறீர்கள். சிங்கள அரணம் கொடுக்கும் செய்திகளை அப்படியே வெளியிடுகிறீர்கள்.

உங்களுக்கே அலுத்துப் போகவில்லையா? இப்படிப் பொய்ய்யும் புளுகும் எத்தனை நாளைக்கு?

சரி ஈழச்சண்டையில் அப்படிச் செய்தி வெளியிடுகிறீர்கள். நம் மீனவர்கள் 410 பேர் இறந்திருக்கிறார்களே, அதற்கு என்ன செய்திர்ர்கள்? இந்திய

அரசு சும்மா இருக்கிறது என்று எழுதுங்களேன்.. மும்பையில் இறந்தவர்கள் மட்டும் உங்களுக்கு ஓவியம், இராமேசுரம் கடற்கரைய

இராம.கி said...

அன்பிற்குரிய விஜயன்,

என்னுடைய வேண்டுகோளைச் சரியாகப் படியுங்கள். கூடவே மாலனுக்கு நான் எழுதிய மறுமொழியையும் படியுங்கள். உங்களுக்குத் தோன்றும்படி திரிக்காதீர்கள். ஈழம் = புலி என்ற சமன்பாட்டைப் போட்டுக் குழப்பிக் கொள்ளுவது நீங்கள் தான். நானில்லை. நீங்கள் சொல்லும் வாதம், போரை நிறுத்தி ஒரு பேச்சுவார்த்தை நடக்கும் போது ”புலிகள் அதிற் பங்கேற்கலாமா?” என்ற கேள்வி எழும்போது பேசவேண்டியது. அதை இப்பொழுது பேசாதீர்கள்.

தமிழில் தானே எழுதியிருக்கிறேன். சண்டை நிற்க வேண்டும் என்று பேசாமல், எதையோ பேசிக் கொண்டிருந்தால் எப்படி? உங்களைப் போன்றோர் இப்படியே பேசிப் பேசி மற்றோருக்குச் செய்தி தெரியாமலே ஆக்கிவிடுகிறீர்கள் பாருங்கள்? அதுதான் கவலையளிக்கிறது. தமிழ்மணத்தில் வரும் பதிவுகளைப் பார்த்தாலே தெரியவில்லையா? பக்கத்து வீட்டில் இழவு நடந்து கொண்டே இருக்கிறது. நாம் தொலைக்காட்சிப் பெட்டியை உரக்க வைத்துக் கொண்டு தத்தக்கப் பித்தக்க என்று நம் வீட்டிற்குள் குதித்துக் கும்மாளம் போட்டால் எப்படி? ஒரு நாகரிகம் வேண்டாம். அடுத்தவன் வீட்டில் ஏன் சாவு நடக்கிறது என்று பார்க்க வேண்டாம்? இழவு வீட்டாருக்கு ஓர் ஆறுதல் சொல்ல வேண்டாம்? “சண்டை போடாதீங்கப்பா” என்று சொல்ல வேண்டாமா? அப்புறம் என்ன மனிதம் பேசுகிறோம்? மண்ணாங்கட்டி. ஒரு வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லையா, நமக்கு?

நான் கேட்பது எல்லாம் “ஈழம் பற்றிய செய்திகளை வெளியிடுங்கள்” என்பது தான். இந்து நாளிதழ் அதைத் தணிக்கை செய்து, திருத்திப் பொய்யும், புளுகுமாய்ச் செய்தி வெளியிடுகிறது. அதைப் படிக்கும் தமிழகத் தமிழரை அறியாமையில் வைக்க முயலுகிறது. 25 கி.மீ. தொலைவில் ஒரு இனக்கொலை நம் கண்முன்னே நடைபெறுகிறது. அதை நம் மக்கள் அறியாமல் கண் கட்டப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் தமிழகப் பெண்கள் இதை உணரவே காணோம். வெறுமே ஆண்கள் கூட்டத்தில் ஒரு சிலர் மட்டுமே துணுக்குற்று உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்க் குடும்ப அறைகளில் “மானாட, மயிலாட”ப் பார்த்துக் கொண்டு இருப்பது இந்த அறியாமையால் தான். இந்த மிடையாட்டங்களை இந்து மட்டும் செய்யவில்லை.. அரசியலார்கள், ஆட்சியாளர்கள், மிடையம் (ஒலி, ஓலி, அச்சு) என எல்லோரும் செய்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத் தமிழர்கள் ஒரு போதையில், கண்கட்டு வித்தையில், ஆட்பட்டு இருக்கிறவரை, கருமமே கண்ணாயினாராகச் சிங்களவன் தன் அழிப்பு வேலையைச் செய்து கொண்டே இருப்பான். இந்திய அரசு பின்னால் இருந்து அதற்குத் துணைபோகும்.

நான் இந்துவைச் சொன்னது அதன் முகன்மை கருதி.

அன்புடன்,
இராம.கி.

பதி said...

//உங்களுக்கே அலுத்துப் போகவில்லையா? இப்படிப் பொய்ய்யும் புளுகும் எத்தனை நாளைக்கு?//

எலும்பு துண்டின் சுவையிருக்கும் வரை சிங்கள ரத்னாக்களும், தினமலங்களும் ஆடவே செய்யும்.

//சரி ஈழச்சண்டையில் அப்படிச் செய்தி வெளியிடுகிறீர்கள். நம் மீனவர்கள் 410 பேர் இறந்திருக்கிறார்களே, அதற்கு என்ன செய்திர்ர்கள்? //

தமிழகத்தையும் சிங்களினடமே குத்தகைக்கு ஒப்படைக்க வேண்டுமென்பதே இவர்களின் கோரிக்கை. ஆகையால் இந்த "கோஸ்டி" விரைவிலேயே, தமிழக மீனவர்களால் சிங்களவர்களின் துப்பாக்கி குண்டுகள் வீணாகின்றது என மீனவர்கள் மேல் குறைப்பட்டுக் கொண்டு செய்து வெளியிட்டால் அதில் ஆச்சரியப் பட ஏதுமில்லை.

Anonymous said...

Please stop watching Sun TV and Kalaignar TV , if you can

HK Arun said...

அன்புடன் இராம்கி ஐயா!

இலங்கை இந்தியா போன்ற நாடுகள் சர்வதேச அளவில் பரப்பிவரும் விசமப் பரப்புரைகளை தகுந்த மேற்கோள்களுடன் தொகுத்து வைப்பது, குறித்த ஊடகங்களின் (இந்து நாளிதழ் உட்பட) செய்திகளை மக்கள் முற்றிலும் உண்மையென நம்பிவிடாமல் இருப்பதற்கு உதவும்.

அதன் நோக்கில் ஒரு கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. ஆனால் அக்கட்டுரை நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்தைப் பேச்சுப் பக்கத்தில் இடுவது நன்று.

ஐயா தயவு செய்து இக்கட்டுரையைப் பார்க்கவும்.

http://ta.wikipedia.org/wiki/இலங்கை_இந்திய_ஊடக_விசமப்_பரப்புரை

நன்றி

Anonymous said...

இவனுகளை எல்லாம் கொளுத்த வேண்டும்.

Anonymous said...

ஐயா,
உங்கள் பதிவுகளின் நடுவே நீண்டநாள் இடைவெளி இருப்பினும், புது பதிவிற்காக நாள் ஒன்றுக்கு பத்து முறையாவது கிளிக் செய்வேன்.
40 ஆண்டுகாலப் பழக்கத்தை கடினமாய் முயன்று நிறுத்தி ஒரு மாதமாக இந்த நாளிதழ் வாங்காது இருப்பதாக தெரிவித்துள்ளீர்.
நானும் 30 ஆண்டு காலமாய் இந்த நாளிதழை படித்து, இவர்கள் நொதுமல் நிலையை எந்த ஒரு விடையத்திலும் பின்பற்றாதலால், அய்ந்து ஆண்டுகளாக இந்த நாளிதழை படிப்பதை நிறுத்தியுள்ளேன். தாங்கள் சென்ற மாதம் வரை வாங்கினீர்கள் என்பதையறிந்து வருத்தமுறுகிறேன்.
J.P.Ravichandran, Bangalore

Anonymous said...

I agree, I'll persuade my family and friends to stop buying hindu and dinamalar.

When pudhukudyirruppu hospital was bombed, I was shocked that this news was intentionally blackened out by these psychopathic newsagencies/TVs, utter disregard for human lives and dignity!. From history we can tell that attack on hospital is a hallmark of genocide. Everyone need to wake up soon before we lose thousands of innocent lives.

Maalan's response is a desperate attempt to undermine this boycott call, how pathetic!. I will encourage Maalan, first to re-read the thirukkural he has quoted.
Indian english newspapers/TV agencies just report what sinhalese army says. Many times they report the news as a 'fact' and hide that this is coming from army source. Even ordinary sinhalese don't fully believe their army's words. Note that it is the sinhalese who are not allowing independent reporters to access the war areas. It seems there is a deliberate attempt my indian/sinhalese intelligence sources to hoodwink the public thro these media. It is laughable when you see maalan's lecture on 'arivudamai' - no thank you!

I think it is a very good idea to take this step and start boycotting these newspapers. I remember 'Akkini kunjondru kandaen, adhai Aangoru kaatidai pondhidai vaithaen, vendhu thaninthathu Kaadu, thalal veerathil kunjendrum moopendrum uNdo'..

T S Rajan said...

The Hindu is prejudiced not only in taking a stand in Srilankan War but also in many of the local issues.
My family has been subscribing for the Hindu for generations. But I have decided to stop. I have been writing 'Letters to Editor' on the dubious role of the Hindu in its editorial and news items on issues related to Mangalore pub, Srilankan Tamils, VCK Role, Dayanithi Maran's U' turn, Dinakaran Issue, Economic policies of the State and Centre, but nothing get published.
Hindu doest reflect the reality and does not express the pulse of the general public. It wants to impose its views on news.
Its reporters dont go out to gather news, rather publish what is offered.
But today's media is clearly divided on party lines and Hindu has identified itself with Congress and DMK and is also acting as the champion of fighting for secularism and minority rights.
The Hindu is no hindu.. neither secular.

குப்பன்.யாஹூ said...

இன்றைய நிலையில் பொருளாதார தாக்குதல் தான் மிக சிறந்தது. எனவே ஹிந்து பத்திரிக்கையை புறக்கணியுங்கள் . என்னுடைய வேண்டுகோள் குறிப்பாக ஹிந்து இணையதள விசிட்டை குறையுங்கள், அப்போது தான் அடி நன்றாக விழும்.

மாலன் கருத்து அவர் காலத்தில் வேனால் பொருந்தலாம். இன்றைய நிலையில் ஒரு பத்திரிக்கையின் (ஹிந்து, தினமலர்) இணைய விளம்பரத்தை குறைக்க , அந்த பத்திரிக்கையின் இணையதளத்தின் விசிட் குறைய வேண்டும், அதுவும் குறிப்பாக வெளி நாட்டில் இருந்து வரும் விசிட் குறைய வேண்டும்.

எனவே வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள் ஹிந்து, தினமலரின் இணைய விசிட்டை குறையுங்கள், தானால் பாதிப்பு மாற்றம் நிகழும்.

இன்று ஜூனியர் விகடனுக்கு அது நடந்து உள்ளது, அதனால்தான் விற்பனை குறியானது இப்போது சென்னை புறநகர் பகுதிகள் என சிறப்பு செய்தி வைத்து விளம்பரம் செய்ய வேண்டி உள்ளது.

ஆனால் நம் பதிவர்களோ இணைய நண்பர்களோ இவ்வாறு புறக்கணிப்பது இல்லை.

மைக், எல்லாளன், வினவு போன்றோர் தான் முத்லில் தினமலர், துக்ளக் ஹிந்து படித்து பதிவு இடுகின்றனர்,. என்ன செய்வது?

இன்றில் இருந்து இந்த பத்திரிக்கைகளின் இணைய தளத்தி, அச்சு வடிவத்தை புறக்கணிக்க தொடங்குவோம்.

ஆங்கில அறிவு வளர்த்து கொள்ள வேண்டுமானால், வாஷிங்க்டன் போஸ்ட், கார்டியன் இணைய தளத்தை படிக்கலாம்.

குப்பன்_யாஹூ

அரவிந்தன் said...

மீடியா நிறுவனங்களில் அடிவயிற்றில் அடித்தால்தான் அவர்கள் திருந்துவார்கள்

அதாவது அவர்களின் வருமானத்திற்க்கு வேட்டு வைக்கவேண்டும்.

குறைந்தபட்சம் உடனடியாக வெளிநாட்டுவாழ் தமிழர்கள் சன்/ஜெயா குழம தொலைக்காட்சிகளை காசு கொடுத்து பார்ப்பவராக இருந்தால் தங்களின் சந்தாக்களை உடனடியாக இரத்து செய்யுங்கள்.

தமிழன் காசில் வயிறு வளர்க்கும் இவர்களுக்கு இப்படியாவது பாடம்புகட்டுவோம்

பதி said...

நாம் எதற்காக சிங்கள ரத்னா மற்றும் தினமலம் போன்ற பத்திரிக்கைகளை புறக்கணிக்க வேண்டும் என்று இணைய/பதிவு இணைப்புகளுடன் கூடிய ஒரு Gadget உருவாக்கி அதை நமது வலைப் பக்கத்தின் முகப்பில் ஒட்டி வைக்கலாம். இதன் மூலம் நாம் ஏராளாமான வாசகர்களைச் சென்றைடைய முடியும்.

இட்டாலி வடை said...

மிகவும் வரவேற்கத்தக்க எதிர்வினை. எறும்பூரக் கல் குழியும்... வரவேற்கின்றோம்..

Vassan said...

///எறும்பூரக் கல் குழியும்... வரவேற்கின்றோம் ///

http://www.youtube.com/watch?v=RhgClfVhQDA

தமிழர் நேசன் said...

நான் எழுத விளைந்ததை. தாங்கள் எழுதி நல்ல விளக்கமும் கொடுத்துள்ளீர்கள்...

நன்றி..

Unknown said...

அய்யா,
எமது இனத்தையே புறக்கணிக்கும் இவர்கள், நமது சிறு முயற்சியைக் கண்டதும், துள்ளிக்குதிப்பதை கண்டீரா!. தங்களது இம்முதன் முயற்சி தொடர்வேண்டும். இயன்ற அளவில் எனது நண்பர்களுக்கும் பரிந்துரைத்துள்ளேன்.

வளரட்டும் தங்கள் பணி.
வாழ்த்துக்கள்.

சுந்தரவடிவேல் said...

மாலனின் வியாபார அறிவீனத்தையும், மக்களை இளக்காரமாக நினைக்கும் பார்ப்பனீய மொதலாளிய அகம்பாவத்தையும் புதியவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி இராமகி அய்யா.

ஹிந்து பத்திரிகையை நானும் புறக்கணிக்கிறேன். நானறிந்த பலரும் அப்படித்தான்.

Sundar said...

நான் சில கிழமைகளாக இதைச் செய்து வருகிறேன். நண்பர்களிடமும் வலியுறுத்தி வருகிறேன்.
http://twitter.com/oligoglot/status/1130245704
http://twitter.com/oligoglot/status/1130319482
http://twitter.com/oligoglot/status/1160626122
http://twitter.com/oligoglot/status/1103957122
இது போன்ற சிக்கல்களில் அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகு நிறுவனங்களில் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களையும்கூடப் புறக்கணிக்கிறார்களாம்.

இரவி சங்கர் said...

பதிவுக்கு நன்றி

நான் அந்த இந்து நாளிதழை புறக்கணித்து சில வருடங்களாகிறது. என்ன திமிர் இருந்தால் எங்க வீட்டுலையே குந்திக் கொண்டு என் அண்ணன் தம்பிமார்களை குறை கூறுவான்.

தயவு செய்து இணையத்தையும் பாவிக்காதீர்கள். அதிலும் அவர்களுக்கு காசு போய் சேரும். இந்துவை தமிழகத்திலிருந்து ஒழிப்போம்.

Machi said...

இந்து மற்றும் தினமலர் நாளிதழ்களை இணையம் மூலம் பார்ப்பதை நிறுத்தி 4 மாதங்களாகிறது. வீட்டிலயும் தினமலர் வாங்குவதை நிறுத்தி 5 ஆண்டுகள் ஆகிறது. தேவையான பதிவு. என் நண்பர்களையும் இவற்றை புறக்கணிக்க சொல்லியிறுக்கிறேன்.

இராம.கி said...

அன்பிற்குரிய பதிகுமார்,

இந்துவின் இணையதளம் போவதையும் நிறுத்தத்தான் வேண்டும். நான் மற்ற தளங்களுக்குப் போய்ச் செய்திகளைப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன்.

அன்பிற்குரிய பதி,

உங்கள் கருத்துக்களைப் படித்தேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

கலைஞர், மற்றும் சன் தொலைக்காட்சியைப் பார்ப்பதோ, தவிர்ப்பதோ இந்தப் புலனத்திற்குத் தொடர்பில்லாதவை. இங்கு கருத்தத் தடம் புரட்ட வேண்டாம்.

அன்பிற்குரிய அருண்,

நீங்கள் சுட்டிய கட்டுரையைப் படித்தேன். இது போன்ற கட்டுரைகள் இணையத்தில் எங்காவது ஒரு மூஉலையில் சேமிக்கப் படவேண்டும். தமிழ் விக்கிப்பீடியா ஏன் இதை விலக்கப் பார்க்கிறது என்று புரியவில்லை.

அன்பிற்குரிய பெயரில்லாதவரே,

கொளூத்துதல் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். வேண்டாம். கொஞ்சம் கவனமாகப் பேசுங்கள். ஓத்துழையாமை இயக்கம் மட்டுமே இதற்குப் போதும். நம்மை எளிதில் உணர்ச்சிவசப்ப்படச் செய்து தடம் மாற்றப் பலர் காத்திருக்கிறார்கள். அவர்கள் வலையில் நாம் விழ வேண்டாம்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய இரவிச்சந்திரன்,

என் இடுகைகளைத் தேடிப் படிப்பதற்கு நன்றி. இப்பொழுதெல்லாம் அவ்வளவு சடுதியில் இடுகைகளை இட முடிவதில்லை. உடல்நலம் அவ்வளவு இடங் கொடுக்கவில்லை. தவிர கொஞ்சம் ஆய்வு வேலைகளில் ஆழ்ந்து போயிருக்கிறேன். நான் முடிக்காதிருக்கும் தொடர்களே பல இருக்கின்றன.

இந்து நாளிதழைச் சென்ற மாதம் வரை நான் வாங்கியது பற்றி நீங்கள் வருத்தமுற்றதை அறிந்து கொள்ளுகிறேன். பட்டறிவு ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு காலமே வருகிறது. நீங்கள் என்னைக் காட்டிலும் முன்னால் பட்டறிந்து கொண்டீர்கள். நீங்கள் என்னிலும் புரிந்தவர் என்றே எடுத்துக் கொள்ளுகிறேன்.

Dear Nanda,

Attack on hospital has been conducted also by IPKF, I believe. Today I learnt that IPKF had attacked Jaffna hospital on 22/10/1987 and killed 100 persons. (How many of uskonw this earlier? Even then in 1987, we were ignorant. Our newspapers did not report.) So Singalese Army is following the footsteps of IPKF, perhaps..

Indian TV reporting especially, CNN-IBN, Times now, NDTV are so pathetic and irritating when it comes to reporting on Tamil nadu and Tamil Eelam. Many times, I get irritated by their bias and arrogance. This is a typical north Indian attitude.

For them, every Tamil is a Madrasi to be laughed at.

Dear Mr.tsr,

You are absolutely correct. "It wants to impose its views on news. Its reporters dont go out to gather news, rather publish what is offered"

anpudan,
iraamaki

இராம.கி said...

அன்பிற்குரிய குப்பன் யாஹூ, அரவிந்தன், ரவுசு, தமிழர்நேசன், தமிழ்நாடன்

உகள் கருத்திற்கு நன்றி.

அன்பிற்குரிய பதி,

நீங்கள் சொல்லிய widget யை எனக்குச் செய்யத் தெரியாது. யாராவது செய்தால் எல்லோரையும் தங்கள் வலைப்பதிவில் போட்டுக் கொள்ளும் படி கேட்கலாம்.

அன்பிற்குரிய வாசன்,

தாங்கள் சுட்டிய விழியப்ப்படத்தைப் பார்த்தேன். அதில் வரும் வாசங்களைக் கையில் ஏந்தி ஞாயிற்றுக் கிழமை இங்கு பேரணியில் சென்றார்கள்.

அன்பிற்குரிய சுந்தரவடிவேல்,

இந்துவை வாங்காதீர்கள் என்ற வேண்டுகோள் தமிழர்கள் பலரிடமும் பரவ வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரிடமும் கூறுங்கள்.

அன்பிற்குரிய சுந்தர். இரவிசங்கர், குறும்பன்,

உங்கள் கருத்திற்கு நன்றி. பலரிடமும் இந்தக் கருத்தை வலியுறுத்துங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

நான் எப்பொழுதும் படிப்பதில்லை. ஆனால் உறுதியாகச் சொல்லுவேன், உங்களால் ஒன்றுமே பண்ண முடியாது.

thiru said...

அய்யா,

பதிவிற்கு நன்றி!
'இந்துவை வாங்காதீர்கள்' பதாகையை உருவாக்கி உங்கள் பதிவை எனது வலைப்பக்கத்தில் இணைத்திருக்கிறேன். யாராவது மென்பொருள்துறை நண்பர்கள் இந்த படத்தை பயன்படுத்தி விட்ஜெட் ஒன்று உருவாக்கி வலைப்பதிவுகளில் அறிமுகம் செய்தால் நலம். அல்லது பிளாக்கர் வழியாகவும் இணைக்கலாம். படத்தையும், இணைப்பையும் எனது வலைப்பக்கத்தில் http://aalamaram.blogspot.com/ காண்க!

இராம.கி said...

அன்பிற்குரிய திரு,

மிக்க நன்றி.

நீங்கள் சொன்னபடி உங்கள் வலைப்பதிவிற்குப் போய், அந்தப் படத்தைப் படியெடுத்து அப்படியே என் வலைப்பதிவில் ஒட்டியிருக்கிறேன்.

இதை யாரேனும் ஒரு சொவ்வறையாளர் (software person) widget ஆக உருவாக்கி அதை எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்து மற்ற நண்பர்களும் தம் வலைப்பதிவில் ஏற்றினால் நன்றாக இருக்கும்.

இந்து என்ற நாளிதழ் (அது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத வரை) தமிழர் வாழ்வில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

எல்லா நண்பர்களிடமும் சொல்லுங்கள்.

அன்புடன்,
இராம.கி.
அன்புடன்,
இராம.கி.

Karthik said...

என்னால் முடிந்த ஒரு சிறிய பதிலடி, என் Yahoo ஓடையிலிருந்து ஹிந்து கருத்து படங்களை எடுத்து விட்டேன். http://toonsofindia.blogspot.com/

Balaji Chitra Ganesan said...

ஆமாம், மற்றவர் கருத்தைக் கேட்காமல், தான் சொன்னதே சரி என்று சாதிப்பவர்கள்தான் இலங்கையில் நடப்பதை இனப்படுகொலை என்று சொல்லிக்கொண்டிருக்க முடியும்.

நீங்கள் தமிழ்நெட்டும், புதினமும் மட்டும் படித்து இலங்கைப் பிரச்சனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வெகுளிகளில் ஒருவராக இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இலங்கைப் பிரச்சனையை பற்றி இந்து நாளிதழ் அறியாதது ஒன்றுமேயில்லை. புலிகள் அடிவாங்கும்போது மட்டும் ஊலையிடம் தமிழ் ஊடகங்கள் போலல்லாது தொடர்ந்து இலங்கை பற்றிய செய்திகளை வழங்கிவருகிறது. நிங்கள் எதிர்ப்பார்க்கும் 'இனப்படுகொலை' என்னும் போலிப்பிரச்சாரம் சுயமரியாதையுள்ள எந்தப் பத்திரிக்கையிலும் இடம்பெறாது.

இந்து படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம். DBS ஜெயராஜ் கட்டுரைகளை வாசித்திருக்கிறீர்களா? Daily Mirrorஇல் வரும் மிகவும் தரமுள்ள இருதரப்பு op-ed களை படித்திருக்கிறீர்களா? புலிகளை ஏற்றுக்கொள்ளாத இலங்கைத் தமிழர்களின் வலைப்பதிவுகளைப் பார்த்திருக்கிறீர்களா?

நிற்க. நீங்கள் ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் மொழிபெயர்த்து எழுதுபவரா?

media = மிடையம்? (ஊடகம்)
neutral = நொதுமல்? (நடுநிலை)

ஆங்கிலத்தில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இந்த டப்பாங்குத்துத் (phonetic) தமிழாக்கம் செய்யவேண்டிய அவசிமில்லை. தமிழில் ஏற்கனவே பயன்படுத்தப்படும் எளிமையான வார்த்தைகள் இருக்கின்றனவே?

Anonymous said...

http://seemachu.blogspot.com/2009/02/75.html
இதற்கு ஒரு தமிழ்த் தலைப்பு தாருங்களேன்.

Anonymous said...

Hindu, has at many times, killed journalistic ethics, when supporting their favoured governments or groups, and those that they are against. It is but natural coming from that corner, which is prejudiced and was initially targetted mainly for a prejudiced section of the country.

And those that grew up exclusively reading Hindu, will not have much of a yardstick to measure truth from events.

For instance, I had to read a gentleman, who for years constantly attacked India and Indian legal systems, including police forces from US. But when it came to speaking about the attrocities of Indian forces in Srilanka, he asked for proof of violations. LOL. I lost respect for that man right from those sentences. These are the people that The Hindu raised as well. When there are numerous factual evidence against the attrocities carried out by Indian forces, the blinding of it by Indian media, we can't but laugh at the same people's hypocrisy.

I don't necessary blame Hindu. Politics is of another nature. The people who run India are never going to be happy with any liberation movement, as 60% of their own population is steaming with frustration.

It will be for the future Tamilnadu youth to decide where these medias will go. Let us see. That is, if they can separate themselves from political hijacking:-)

-kajan

Jayakumar said...

இதற்காக ஒரு widget உருவாக்கி எனது பதிவில் இணைத்துள்ளேன்.
http://silakurippugal.blogspot.com/
உங்களது பதிவிலும் சேர்க்க கீழ்க்காணும் நிரலை இப்போதுள்ள படத்திற்கு கீழே சேர்க்கவும்.
...
ஹ்ம்ம்ம் நிரலை பின்னூட்டமாக இட முடியவில்லை...

Unknown said...

சன் தொலைக்காட்சியின் ஆதித்யா கலைஞரின் சிரிப்பொலி காண்பதையும் புறக்கணியுங்கள். இவை உங்கள் உணர்வுகளை மழுங்கடித்து கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்து நாட்டின் கஷ்டங்களையும் நம் ஈழச்சகோதரர்களின் துயரங்களையும் மறக்கச்செய்து ஏமாற்றும் வேலை .

இராம.கி said...

அன்பிற்குரிய புகழினி,

“உறுதியாகச் சொல்வேன், உங்களால் ஒன்றுமே பண்ணமுடியாது” என்ற வாசகத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

இந்துவை வாங்காதீர்கள் என்ற ஒரு வேண்டுகோள் கொடுக்க முடியாதா? அதைச் சில நூறு நண்பர்கள் கேட்க முடியாதா? சில நூறு என்பது ஆயிரமாய்ப் பெருகாதா? அச்சாரம் கேட்டுத்தான் ஏதொரு செயலையும் நிகழ்த்த வேண்டுமா?

நடப்பது நடக்கட்டும் நண்பரே! தமிழ் மக்களை நம்புவோம்.

அன்பிற்குரிய கார்த்திக்,

உங்கள் செயல் பாராட்டப் படவேண்டியதே. சிறுதுரும்பும் பல்குத்த உதவும். எல்லோரும் தங்களால் முடிந்தவரை இது போன்ற எதிர்ப்புக்களைக் காட்டுவோம். அவர்களுக்குச் சிறிது சிறிதாக உறைக்கும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

திரு.பாலாஜி,

உங்கள் வருகைக்கு நன்றி.

”தூங்குகிறவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் பாவனை செய்பவர்களை எழுப்பமுடியாது” என்று பெரியோர் சொல்லுவார்கள். அப்புறம், உங்களுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுவதற்காக, நான் வலைப்பதிவுக்கு வரவில்லை.

”நான் எதைப் படிக்கிறேன், எதைப் படிக்காமல் போகிறேன், நான் வெகுளியா, விவரம் தெரிந்தவனா?” என்பதையெல்லாம் உங்களைப் போன்ற ”அறிவு மேதைகளிடம்” மூதலித்துச் சான்றிதழ் பெறவேண்டிய நிலையிலும் நான் இல்லை.

சந்தடி சாக்கில் உங்கள் வலைப்பதிவை இங்கு விளம்பரம் செய்து கொள்வதையும் கவனிக்கிறேன். செய்து கொள்ளுங்கள். அதே பொழுது, வெறுமே வறட்டுவாதம் செய்பவர்களோடு வாதித்து நேரத்தைப் போக்குவதைக் காட்டிலும், ஈடுபாட்டோடு உரையாடல் செய்பவர்களோடு, இடையாடுவதும், செய்திகளைப் பரிமாறிக் கொள்ள்ளுவதும் நல்லது என்றே நான் நினைத்து வந்திருக்கிறேன்.

அப்புறம் சில சொற்களைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள்.

நண்பரே! என்ன சொல்லுவது? பாலாஜி உலகம் மட்டுமே உலகம் அல்ல. உலகம் பெரியது. தனக்குத் தெரிந்த சில வார்த்தைகளை வைத்துக் கொண்டு, ”அதுவே தமிழ்” என்று சொற்சிலம்பம் ஆடிச் சட்டாம்பிள்ளைத்தனம் பண்ணும் வேலையெல்லாம் நான் 50 ஆண்டுகளாய்ப் பார்த்தாகிவிட்டது.

அந்தச் சொற்களின் உள்ளே பொதிந்திருக்கும் வினைச்சொற்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

1. ஊடுதல் என்றால் தமிழில் என்ன பொருள்?

2. மிடைதல் என்றால் என்ன பொருள்? (மணிமிடைப் பவளம் என்று அகநானூற்றில் ஒரு பகுதி வருகிறதாமே, அதன் பொருளாவது தெரியுமா?)

3. ஊடுதலும் மிடைதலும் ஒன்றா?

4. திருக்குறளுக்குப் பரிமேலழகர் என்ற பெரியவர் உரை எழுதியிருக்கிறார் என்று தெரியுமா? அதில் அதிகாரம் 12 நடுவு நிலை என்பதற்கு “அஃதாவது, பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலை” என்று வரையறை செய்திருப்பது தெரியுமா? அதில் உள்ள நொதுமல் என்னும் சொல்லுக்கு என்ன பொருள்? திரு., பாலாஜி பரிமேலழகரைக் காட்டிலும் தமிழ்சொல்லிக் கொடுப்பதில் தேர்ந்தவரோ? அகநானூறு 39 ஆம் பாடலில் “நொதுமல் மொழியேல்” என்ற கூற்றுத் தெரியுமா? பாலைப் பாட்டு பாடிய மதுரைச் செங்கண்ணாரையும் விடத் தமிழ்சொல்லிக் கொடுப்பதில் திரு. பாலாஜி சட்டாம்பிள்ளையோ? அவர் கூற்று வேதமோ?

4. அப்புறம் phonetic என்றால் டப்பாங்குத்து என்று பொருளா? இது தெரியாமல் நான் மடையனாக இருந்துவிட்டேனே?

மொத்தத்தில், மல்லாக்கப் படுத்துக் கொண்டு உங்கள் வாயில் இருந்து நீங்கள் நீர் பீச்சினால் அது உங்கள் முகத்திலே தான் வடியும் என்றாவது தெரியுமா?.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

Editor of 'uthayan' and 'sudaroli' tamil dailies Vithyatharan has been abducted today in srilanka.
He has always supported tamil freedom struggle.
Few days ago ,he was grilled and interrogated by srilankan secret police.
Everyone knows srilankan government is behind this abduction.
Will Hindu condemn this action?
I wonder!
-vanathu

இராம.கி said...

அன்பிற்குரிய சீமாச்சு,

என்னுடைய இந்த இடுகை பற்றி எந்த முன்னிகையும் அளிக்காமல், இதனோடு தொடர்பில்லாமல், உங்கள் இடுகையில் விழையும் ஒரு சொல்லுக்குத் தமிழாக்கம் கேட்கும் நிலையைக் கூடியவரை இனித் தவிருங்கள்.

இருப்பினும் “hop in, hop off" பேருந்திற்கு என்னால் இயன்ற சொல்லைப் பரிந்துரைக்கிறேன்.

நினைத்த பொழுது, ஓரிடத்தில் ஏறி, நினைத்த பொழுது, இன்னோர் இடத்தில் இறங்க முடியும் ஒரு பேருந்தை ”ஏறிழிப் பேருந்து” என்று சொல்லலாம்.

நினைத்த பொழுது ஏறுதல், இழிதல் (=இறங்குதல்) என்ற வினைகளைச் செய்ய முடியும் பேருந்து என்ற கருத்தில் வினைத்தொகையாய் ஏறு-இழி (=ஏறிழி) என்பதை இங்கு பரிந்துரைத்திருக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Karthik said...

இந்து நாளிதழ், பாரதத்தின் விடுதலை போரையே ஆதரிக்காத ஊடகம் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா?

1947லேயே இதை தடை செய்திருக்க வேண்டும்.

Balaji Chitra Ganesan said...

ம்... எதாவது அடி நாடியை தட்டிவிட்டேனோ? நீங்கள் என் மேல் எரிந்து விழுவதால் எனக்கு இழுக்கு ஒன்றுமில்லை.

இலங்கைப் பிரச்சனையின் அனைத்து பரிமாணங்களையும் தமிழகத்தவர் தெரிந்துகொள்வது அவசியம். அப்பிரச்னையை இந்து நாளிதழ் அலசியுள்ளது போல் கடந்த 30 ஆண்டுகளில் எந்தப்பத்திரிக்கையும் அலசியிருப்பதாகத் தெரியவில்லை. அதன் முடிவாக அதன் ஆசிரியர் குழு எடுத்திருக்கும் நிலைப்பாடு ஈழத்திற்கு ஆதரவாகயில்லை என்பதற்காக அந்தப் பத்திரிக்கையை புறக்கணிக்கக் கோருவதும், மற்றவரையும் தூண்டிவிட்டு இயக்கம் ஆரம்பிப்பதும் முதிர்ச்சியுள்ள செயலாகத் தெரியவில்லை.

மக்கள் விரும்பும் செய்திகளை மட்டும் வெளியிடும் பத்திரிக்கைகளுக்கும் பாலுணர்வைத் தூண்டும் 'பலான' பத்திரிக்கைளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. மற்றபடி உங்கள் விருப்பம்.

***

மிடையம், நொதுமல் என்று தமிழில் வார்த்தைகள் இல்லை என்று நான் சொல்லவில்லை. நான் குறிப்பிட்டது நீங்கள் செய்திருக்கும் phonetic translation பற்றியது. மீடியம் = மிடையம் என்றும் நூட்ரல் = நொதுமல் என்று நீங்கள் தேடிக் கண்டுபிடித்திருப்பது தெரிகிறது. முன்பொருமுறை serious என்ற வார்த்தையை சேரியம் (= சீரியஸ்) என்று நீங்கள் குறிப்பிட்டதும் நினைவுக்கு வருகிறது.

சுமார் 2500 ஆண்டு தமிழர் சொல்லாடலில் ஆங்கிலத்திலுள்ள எந்த வார்த்தைக்கும் சம ஒலியுடைய வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியுமாயிருக்கும். ஆனால் அத்தகைய தமிழாக்கம் தேவையா என்று நீங்கள் சிந்திக்கவேண்டும்.

நீங்கள் செய்யும் இத்தகைய தேவையற்ற சொல்லாடலைப் பின்பற்றி இணைத்தமிழை சாமன்யனுக்கு சற்றும் புரியாத மொழியாக்க ஒரு கூட்டமே காத்திருப்பது உங்களுக்கே தெரியும்.

தமிழில் இவ்விசயத்தை யோசித்து எழுதுபவர் ஊடகம், நடுநிலை என்னும் எளிதான, வழக்கிலுள்ள வார்த்தைகளை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். media, neutral ஆகியவை இவ்விசயத்தில் எழுதப்படும் எந்த ஆங்கிலக் கட்டுரையிலும் இயல்பாக வரக்கூடிய வார்த்தைகள். அதனால்தான் நீங்கள் ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் எழுதுபவரா என்று கேட்டிருந்தேன். அதை குறையாகச் சொல்லவில்லை. கவனித்ததைச் சொல்லுகிறேன்.

medium என்பதற்கு ஊடகம் தரமான தமிழாக்கமே. "அதன் ஊடாகச் சென்று" என்று பொருள் தரும் 'ஊடகம்' எளிமையான, வழக்கத்திலுள்ள சொல்லே.

ttpian said...

Have we seen any bramin supporting Tamileelam?
why bramins are against Tamileelam?
Bramins never admit Tamil community to emerge as front runners:Bramins seek only FOOLS from Tamil community!

Sundar said...

http://siteanalytics.compete.com/hindu.com+newindpress.com/?metric=uv - ஒருவேளை சரிவு துவங்கிவிட்டதா? பொருத்திருந்து பார்ப்போம்.

Revolt said...

Dear Valavu,

I read this article. I like it. I am S/W Engineer. I was working with "THE HINDU" as they as are our client. Actually circulation of Hindu newspaper is less compare to other news papers. But the revenue through advertisements are more.
Even they issue newspaper to every one at free of cost they can manage.

So peoples not only stop reading that news paper although every small and medium tamil businessman should stop giving advertisement on that. This is the only way we can teach lesson. Thanks!

benza said...

Please do not misconstrue this as anti-Tiger attitude.
I am a Jaffna Tamil who lost all I had.
The facts are these. Tiger soldiers got inside Jaffna Hospital with arms. None had the spunk to tell them arms are NOT ALLOWED INSIDE HOSPITAL.
They went to 2nd floor and laid themselves on beds of patients and covered themselves and arms with bed sheets. Senior surgeons and doctors tried to convince them NOT to do this vile act. Tigers refused to move out.
When IPKF officers appeared Tigers sprayed them with bullets. Many IPKF men perished along with many senior doctors and others too.
All the doctors who died in that incident were Jaffna Tamils.

புரட்சிகுருவி said...

ஹிந்து மட்டுமல்ல,துரோகிகளுக்கும் விரோதிகளுக்கும் விளக்குபிடிக்கும் எந்த பார்பன ஊடகங்களும் கொழுத்தபடவேண்டும்,அடித்து கொல்லுவோம்.

நன்றி
புரட்சிகுருவி

benza said...

கல்வியாலோ, அறிவினாலோ, வேறு எவ்விதமான வகை அல்லது
வேறு முறையினாலோ எம்மில்லும்
பார்க்க மேம்பட்டோர் மீது எம் மனதில் துவேஷத்தை வளர்க்காது ---

அவர்களது உயர் நிலைக்கு எமது
பிள்ளை வளர்த்தெடுக்க நாம் தவறினால்
---
தவறாது எமது மறு சந்ததி எம்மை
வாழ் நாள் பூரா வாய் ஓயாது
திட்டியே தீரும் !

supersubra said...

Dear Post kuruvi

before stop buying hindu stop watching sun tv which telecasts utter lies.

Anonymous said...

நான் இந்துவைக் கேட்பதெல்லாம் மிக எளிது.

“கொத்துக் குண்டுகளை சிங்களவன் போட்டானா, இல்லையா? அதைச் சொல்லுங்கள், அதில் கிடைத்த படத்தைப் போடுங்கள், இதுவரை ஆறு

மாதங்களி இறந்தவர்கள் எத்தனை பேர் என்று சொல்லுங்கள். சிங்கள்காரன் மருத்துவமனைக்கு வேட்டுவைத்தான் என்று போடுங்கள். ஒரு

பி.பி.சி.காரன் போடுகிறான். நீங்கள் போடமாட்டேன் என்கிறீர்கள். சிங்கள அரணம் கொடுக்கும் செய்திகளை அப்படியே வெளியிடுகிறீர்கள்.

உங்களுக்கே அலுத்துப் போகவில்லையா? இப்படிப் பொய்ய்யும் புளுகும் எத்தனை நாளைக்கு?

Anonymous said...

இந்துவை வாங்காதீர்கள் என்பது அவர் சிங்களத்துக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுகிறார்கள் என்பது உங்கள் குற்றசாட்டு அதற்காக இந்தியாவில் உள்ள பல தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நாளிதழை புறக்கணியுங்கள் என்று சொல்கிறீர்கள். இதுதான் அவசரகோலத்தில் எடுக்கும் முடிவு. அங்கு பணிபுரிவபவர்களும் தமிழர்கள்தான். ஒரு பத்திரிகையை வேண்டுமானல் பற்றின் காரணமாக கண்டனம் தெரிவிக்கலாம். அதற்காக தமிழ்நாட்டு தமிழர்கள் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன என்பது போல் நாம் செயல்படமுடியாது. விவசாயிகளுக்காக கஞ்சித் தொட்டி திறக்கப்பட்ட பொழுது யாரும் குரல்கொடுக்கவில்லை. எலிக்கறி தின்றபொழுது யாருக்கும் குரல் கொடுக்க மனமில்லை. இப்பொழுது எங்கிருந்து வந்தது இந்த குரல். குரல்களுக்கு கூட அரசியல் தெரிகின்றது. இப்படி எந்தக் குரலும் எங்கிருந்தும் தமிழ்நாட்டுத் தமிழனுக்காக குரல் கொடுத்து கேட்டது கிடையாது. இதெல்லாம் சில திமிர் பிடித்த பணம் படைத்தவர்களின் வழக்கமான விளையாட்டுக்கள். இவைகளை நம்ப தமிழ்நாட்டுத் தமிழர்கள் தயாராயில்லை. இப்படி குரல் கொடுப்பது ஒரு பேஷனாகிவிட்டது. இந்தியாவில் இதை வாங்காதீர் அதை வாங்காதீர் அது அவரவர் விருப்பம். எல்லாம் குரல் கொடுத்ததின் பலன் தான் அனுபவிக்கின்றோமே. தமிழ்நாட்டிலும் 18 வருடங்களுக்கு முன் மரண ஒலங்கள் கேட்டதே நினைவில்லையா. அதில் தாங்கள் பாதிக்கபட்டிருந்தால் தெரியும்.