Thursday, February 16, 2006

ஆகமம் - ஒரு சுவையான உரையாடல்

ஒருமுறை புலியூர் நாட்டுப் பூந்தண்மலியில் உள்ள நெடுஞ்செழிய விண்ணகரத்திற்கு நான் என் மனையாளும் சென்றிருந்தோம். பூந்தண்மலி தான் (பூக்களால் குளிர்ந்து நிறைந்து போன இடமாம்; அழகான பெயர் இல்லையா?) இந்தக் காலத்தில் பூந்தமல்லி என்றும் பூவிருந்தவல்லி என்றும் சொல்லப் பெறுகிறது. பூவிருந்தவல்லித் தாயார் பெயராலும் இந்த ஊர் அழைக்கப் படுகிறது. அலர் மேல் மங்கைதான் பூ இருந்த வல்லி என்று இன்னொரு வகையில் சொல்லப் பெறுகிறார்; ஆனாலும் வழக்கம் போல, தமிழ் அவ்வளவு இனிப்பாகக் கோயில் நிருவாகத்தாருக்கு தோன்றுவதில்லை போலும்! :-) குடமுழுக்கிற்குப் பின் தாயார் கருவறை நிலையின் மேல் "புஷ்பவல்லி" என்ற வடமொழிப் பெயரையே எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் பெயர் மாற்றி எழுதும் இந்த மூடப் பழக்கம் தமிழ்நாட்டுச் சிவ, விண்ணவக் கோயில்கள் பலவற்றிலும் புற்றீசலாய் இருக்கிறது. மருத்துவர் இராமதாசு, தொல்.திருமா போன்றோர் இந்தப் பழக்கம் பற்றியும் ஏதேனும் சொன்னால் நல்லதென்று கூடச் சிலபோது தோன்றுகிறது :-))

மூலவர் வரதராசர் போக இங்கு அரங்கநாதருக்கும், சீனிவாசருக்கும் தனிக் கருவறைகள் உண்டு. அரங்க நாதர் கருவறை முன் கும்பிட்டுத் துழாய் நீரையும், துழாயும் வாங்கிக் கொண்டு விலகு முன், அங்கிருந்த பட்டர் "மாசி மகம் என்றெல்லாமா அச்சடித்து விற்கிறார்கள்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார். வேறு ஒன்றுமில்லை; "டீ" சட்டைகளில் தமிழ் எழுத்திலோ, அல்லது ஆங்கில எழுத்திலோ கூட, தமிழ் வாசகம் எழுதியிருந்தால் அதைப் போட்டுக் கொள்ள எனக்குப் பிடிக்கும். குறிப்பாக வார இறுதிகளில் இப்படித்தான் "டீ" சட்டை போட்டு அலைவது உண்டு. அன்று போட்டிருந்த "டீ" சட்டையில், தண்டாயுத பாணியின் உருவம் அச்சடித்து ஆங்கிலத்தில் மாசி மகம் 1996 என்று போட்டிருந்தது; என் தந்தையார் மலேசியாவில் இருந்து ஒருமுறை வந்த போது, எனக்கு இதைக் கொண்டு வந்து கொடுத்திருந்தார். நான் மெதுவாக, "இது மலேசியாவில் வாங்கியது" என்றேன். "நம்மூருதோ என்று வியந்தேன்" என்றார் பட்டர். பிறகு அவரோடு சில முகமன்களைப் பரிமாறிய பிறகு அங்கிருந்து நகர்ந்தோம்.

வெளியில் வரும் பொழுது யோசித்துக் கொண்டே வந்தேன். ஏன் நம்மூரில் நம் விழாக்களை காலத்திற்கு ஏற்றாற் போல புதுக்க மாட்டேன் என்கிறோம்? வெள்ளைக்காரன் தினங்களை எல்லாம், அப்பா தினம், அம்மா தினம், மாமியார் தினம், காதலர் தினம் என்று கூறி "டீ" சட்டையில் போட்டுக் கொண்டு வெளியே திரிய முடிகிறது. எண்ணிப் பார்க்காதவற்றிற்கெல்லாம் "டீ" சட்டை போடுகிறார்கள். நம் இளையோரும் விரும்பி வாங்குகிறார்கள். ஆனால் தமிழோடு சார்ந்த சமய விழாக்கள், அல்லது பண்பாட்டு விழாக்கள்.......?

அதே பொழுது, இது எப்படி மலேசியா, சிங்கப்பூரில் முடிகிறது? அங்கு தைப்பூசம், தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் டீ சட்டை வெளியிட்டால், அதை வாங்கப் பெரும்பாலும் யாரும் தயங்குவதில்லை. தைப்பூசம் அங்கு ஓர் அடையாளம், ஆனால் நம்மூரில் அது அடையாளம் ஆகமாட்டேன் என்கிறதே, ஏன்? தமிழ்நாட்டில் யாரேனும் இதற்கு டீ சட்டை வெளியிட்டுப் பார்த்திருக்கிறீர்களோ? பழனிக்குக் காவடி எடுக்கிறார்கள்; ஆறுபடை வீடுகளுக்கும் நடைப் பயணம் செய்கிறார்கள்; ஆனாலும் நம் வணிகர்களுக்கு, குறிப்பாகத் திருப்பூர்காரர்களுக்கு இது தோன்றவே வில்லையா? அப்படி வெளியிட்டால் மக்கள் வாங்க மாட்டார்களா? "Hare Rama Hare Krishna" என்றெல்லாம் ஆங்கிலத்திலும், நகரியிலும் அடித்துத் துண்டு விற்கிறார்கள். நம்மவர்களும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். ஏன், பகவத் கீதையிலோ, அல்லது ஒரு உபநிடதத்தில் இருந்து ஒரு வாசகத்தைப் போட்டால் கூட ஒரு சிலர் வாங்கிக் கொண்டு போகிறார்கள். ஆனால் தமிழோடு ஒட்டிய சிவம், விண்ணவம் பற்றிய வாசகங்களையும், விழாப் பெயர்களையும், அதற்கான துண்டு, டீ சட்டைகளையும் ஏன் பார்க்க மாட்டேன் என்கிறோம்?

நம் சமயம், பண்பாடு என்பது எல்லாம் ஏதோ ஒரு பாத்தி கட்டியது போல், தமிழை விலக்கி வைத்து, ஏன் ஒரு பக்கமாய் நிற்கிறது? அப்படி இருந்தாலும் அதில் வடமொழி/நகரி மட்டுமே ஏன் இருக்கிறது? தமிழ் வழிப் பெருமிதம் என்பது ஏன் வரமாட்டேன் என்கிறது?

இதற்காக நாம் எல்லாம் சமயம் பேணவில்லை என்று நான் சொல்லவில்லை. நம்முடைய சமயத்தின் தமிழ்ப் பக்கத்தை வெளியே சொல்ல நாம் நாணப் படுகிறோமா, என்ன? (Are we apologetic about the Tamil aspect of our religion?) இந்தத் தமிழ்ப் பக்கம் தானே நம் ஆகமச் சமயத்திற்கு அடிப்படை? (மலாய் மொழியில் சமயம் என்ற பொருளுக்குச் சொல் என்ன தெரியுமா? ஆகமா. கீழே உள்ள வலைத் தளத்திற்குப் போய் பார்த்தால் புரிபடும்.

http://dictionary.bhanot.net/index.html

agama என்ற சொல்லிற்கு religion என்றும், beragama என்றதற்கு having a religion என்றும், keagamaan என்பதற்கு religious என்றும் போட்டிருக்கும். இந்த மொழிக்குள் உள்ள தமிழ் ஊடுருவல் தெரிகிறதா?)

---------------------------
இதை நான் ஓராண்டுக்கு முன் தமிழ் உலகம் மடற்குழுவில் எழுதியவுடன், சுவையான உரையாடல் எனக்கும் நண்பர் நா.கணேசனுக்கும் இடையே நடந்தது. அதை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.-------------------------
நண்பர் நா. கணேசன்,

"நிகமம் - வேதம், ஆகமம் - சைவ/வைணவம் போன்ற அகச்சமயங்களுக்கு மாத்திரம் அல்லாது ஜைநம், பௌத்தம் போன்றவற்றின் சமயநூல்களையும் ஆகமம் என்றே குறிக்கின்றனர். தென்கீழ் ஆசியாவில் பௌத்தம் வெகுவாகப் பரவியிருந்ததால் ஆகமம் என்ற வடசொல் அங்கே நிலைபெற்றுள்ளது"
---------------------------
நான் எழுதிய மறுமொழி:

சமயம் நம்மூர்; அதன் பேர் மட்டும் வட மொழியா? இப்பொழுதுதான் கரு.ஆறுமுகத் தமிழனின் "திருமூலர்: காலத்தின் குரல்" என்ற ஆய்வு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.

o0o
"தமிழனுக்கென்று சொந்தமாகச் சமயமோ, மெய்யியலோ கிடையாது; அவன் தன்னுடைய மொழி முதற்கொண்டு எல்லாவற்றுக்கும் கடன் வாங்கித்தான் காலம் தள்ளுகிறான்" என்று கருதுகிறவர்களும், பேசுகிறவர்களும் இன்றைக்கும் இருக்கிறார்கள். தமிழனுக்கென்று நிலம் சார்ந்த தெய்வங்கள் இருந்தன. வழிபாட்டு நெறிகள் இருந்தன. 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்' என்று இறைவனை வரையறுத்துப் பேசுகிற முழுமுதற் கடவுட் கோட்பாடு இருந்தது. நிலையாமை, நிலைபேறு, உயிர், ஊழ்வினை, உலகம் என்று எல்லாவற்றையும் பற்றி ஒரு திட்டமான பார்வை இருந்தது
o0o

என்றுதான் அவருடைய நூல் தொடங்குகிறது. இந்தப் பேச்சு என்னைச் சிந்திக்க வைக்கிறது. ஆகமம் வடமொழி என்று எப்படிச் சொல்லலாம்?

வேத நெறிக்கு முரண்பட்டது ஆகம நெறி. வேள்விக்கு உரியது வேதம்; அது எவராலும் ஆக்கப் படாதது என்று அந்த நெறியார் சொல்லிக் கொள்கிறார்கள். ஆகம நெறி பற்றி அப்படிச் சொல்லவில்லை. ஆக்கப் பட்டது ஆகமம். சொற்பிறப்பும் அப்படித்தான். அது முற்றிலும் தமிழ்ப் பெயர்.

"என்னப்பா ஆகிருச்சா?
அண்ணே! அப்படி ஆகாதுண்ணே, இப்படித்தாண்ணே ஆகும்.
ஆகலைன்ன ஆக்கிருப்பா!"

என்ற சொற்களில் வரும் ஆகுதல் என்ற தன் வினையும் ஆக்குதல் என்ற பிறவினையும் தான் இங்கே தொடக்கம்.

ஆகுமம்>ஆகம வழக்கம் எல்லாமே நம்மூர் நடைமுறைகளைக் கொண்டது. சேயோன் (தமிழில் உறவு முறைப்படி முப்பாட்டனுக்கும் முந்தியவன் சேயோன்) காலத்தில் இருந்து நமக்கு ஆகி வந்தது, மரபாக வந்தது ஆகமம். இதைத் தான் வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டு சனாதன தருமம் என்கிறார்கள்.

ஆகம நெறியில் நீர் முகமையானது; ஏதொன்றையும் நீரைத் தெளித்துப் புனிதமாக்குகிறோம்; வேத நெறி போல் நெருப்பால் அல்ல. ஆகம நெறி பற்றி எழுதினால் நீண்டு கொண்டு போகும். நம்முடைய நெறிகளையும், கோட்பாடுகளையும், அவற்றின் தோற்றங்களையும் கூர்ந்து கவனிக்காமல் ஆகமம் வடமொழி என்றால் நம் கோயில் நெறிகளைத் தூக்கிக் குப்பையில் போடலாம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

புத்தமும், செயினமும் ஆகம நெறிக்குள் சேர்ந்ததா? இது என்ன கூற்று? அவைகள் வேத மறுப்பு நெறிகள் என்றால் சரி. அவற்றோடு ஆசீவகத்தையும் சேர்த்து சமணம் என்ற பொதுப் பெயரில் அழைத்தார்கள். அதற்குச் சான்றுகள் இருக்கின்றன. ஆனால் ஆகம நெறி என்று அவற்றை அழைத்ததாய் நான் படித்ததில்லை.
------------------------------------------------------
நா.கணேசன்:

தமிழகம், ஆந்திரம், கலிங்கம், வங்கம் - எல்லா நாடுகளில் இருந்தும்
ஆகம சமயம் மலாயா போன்ற தேசங்களை அடைந்தது. கிடைப்பதெல்லாம்
வடமொழிக் கல்வெட்டுக்களே. ஏதோ ஒன்றிரண்டில் தமிழ்ப் பகுதிகள்
உள்ளன.
------------------------------------------
என் மறுமொழி:

இதுவும் சரியான கூற்று அல்ல. அந்தக் கல்வெட்டுக்களைத் தேடிப் படியுங்கள். படிக்காமல் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று உரைப்பது நம்மை முழு ஆராய்ச்சிக்குக் கொண்டு செல்லாது. தமிழ்ச் சொல் கலந்த பல்லவ வடமொழி நடை, வடசொல் கலந்த பேரரசுச் சோழர் காலத்துத் தமிழ்நடை ஆகிய இரண்டுமே அந்தக் கல்வெட்டுக்களில் நன்கு புலப்படும். அவற்றின் தமிழர் மூலம் முற்றிலும் உறுதியே.

ஒரு ஆந்திர அரசு, வணிகர் குழு பற்றி அந்தக் கல்வெட்டுகளில் காட்டுங்களேன்? இல்லாததை எல்லாம் இழுத்தால் எப்படி? கலிங்கர் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறோம், அவ்வளவுதான்; ஆனால் தமிழர் பற்றித் தெரிந்த அளவிற்குக் கூட கலிங்கர் பற்றிய செய்தி அங்கு மிகக் குறைவு. கலிங் என்ற சொல் பரவலாய் மலாயிலும் இந்தொனேசியத்திலும் புழங்குவது உண்மை. ஆனால் சோழிய என்ற சொல்லும் கூடப் புழங்குகிறது. இன்னும் சரியாக படிக்கப் படாத ஒரு வரலாற்றில் சொல்பவை, கருதுகோளாக இருக்க வேண்டுமே ஒழிய, முடிந்த முடிபுகள் ஆக முடியாது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியத் தொடர்புகள் எல்லாவற்றையும் வடமொழி என்று புரியாது சொல்லியதன் தொடக்கம் நீலகண்ட சாத்திரியாரில் இருக்கிறது. அவர் சொன்னால் வேத வாக்கா? அவருடைய தாக்கம் 50 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்று வரை நீள வேண்டுமா? அவருடைய ஒருபாற்சார்பை ஒதுக்கி அடிப்படைத் தரவுகளை அவர் அளித்த மஞ்சள் கண்ணாடி வழியாகப் பார்க்காமல் நேரடியாகப் பார்ப்போமே?
----------------------
மீண்டும் நா.கணேசன்:

ஏராளமான ஆகமங்கள் பௌத்தத்திலும், சமணத்திலும் உள்ளன. கூகுளில் Jain agamas, Buddhist agamas என்று துழாவிப் பார்த்தால் சில கிடைக்கும். ஆழமாக அறிய, பல்கலைக்கழக நூலகங்கள் துணைபுரிகின்றன.
-------------------------------------------------------
என் மறுமொழி:

நல்ல பிழைப்பு, போங்கள். ஒரு வழக்கில் விதப்பான சொல், இன்னொரு வழக்கில் பொதுமையாகும். இன்றைக்கு கிறித்துவர்கள் கூட விவிலியத்தை வேதப் பொத்தகம் என்றும், இன்னும் மேலே போய் வேதாகமம் என்றும் கூடச் சொல்லுகிறார்கள். அதனால் கிறித்தவத்திலும் ஆகமங்கள் இருக்கின்றன என்று சொல்லுவோமா? அதே போல இஸ்லாம் ஆகமம் என்று மலேசியாவிலும், இந்தொனேசியாவிலும் சொல்லுகிறார்கள், உடனே ஆகமம் என்பது இஸ்லாத்திலும் உண்டு என்று சொல்லுவோமா? கால வரையறை, வரலாற்றுத் தொடர்ச்சி வேண்டாமா?

எள்ளின் நெய் எண்ணெய் என்பது முதலில் விதப்பான சொல். பிறகு கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய் என்றெல்லாம் வந்துவிட்டது. எல்லா இடத்திலும் எண்ணெய் இருக்கிறது என்று ஒரு பொதுமையைச் சொல்லி, விதப்பின் காரணத்தை, எண்ணெயின் ஊற்றுக்கண்ணை, மறப்போமா? ஆகமம் என்ற சொல் முதலில் விதப்பாக தமிழரின் சமயத்திற்கு, குறிப்பாக சிவனிய, விண்ணவச் சமய நெறிகளுக்கு என ஆகிவந்த சொல். முதலில் இந்தப் பெயர் இவற்றிற்குக் கிடையாது தான்.

வேத மறுப்பாக எழுந்த உலகாய்தம், ஆசீவகம், புத்தம், செயினம் போன்றவை கேள்விகள் கேட்கத் தொடங்கி, ஓர் ஒருங்கமைப்பு (organization), சங்கம் என்று செய்ய முற்பட்டபோது தான் மெய்யியல் என்பதே இந்த நாவலந்தீவில் பிறந்தது. அதனால் தான் வேத மறுப்பு நெறிகளான இந்த நாலைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் ஆர்வம் அடைகிறோம். வேத மறுப்பு நெறிகளின் மெய்யியல்களுக்கு மறுதலிப்பாக, ஒருவித எதிர்வினையாக, அதுவரை மெய்யியல் இல்லாத வேத நெறி, தேவையின் காரணமாய் உருவாக்கிய மெய்யியல் தான் உபநிடதங்களில் இருக்கிறது.

இதே காலத்தில் சிவனியமும் விண்ணவமும் நம்மூரில் ஆள்வோரின் நெறியாகவும், இவர்களை மறுத்தவர்களின் நெறியாய் உலகாய்தமும், ஆசீவகமும் இருந்தன. புத்தமும், செயினமும், உபநிடதங்களுக்கு அப்புறம் வளர்ந்த வேதநெறியும், தென்னகத்திற்குள் வரும் வரை, இங்கிருந்த நெறிகளும் கூட ஒருங்கமைக்கப் படாமல், அவற்றின் மெய்யியல்கள் ஒருமுகப் படுத்தாமல் கிடந்தன. வடநாட்டு நெறிகள் மூன்றும் கி.மு. 600ல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஊடுறுவ, சிவனியமும், விண்ணவமும் தம்மை ஒருங்கமைக்க வேண்டிய கட்டாயத்துள் நுழைந்தன. (அப்பொழுது உலகாய்தமும், ஆசீவகமும் நம்மூரில் புரட்சிகரமாக விளிம்பு நிலையில் கேள்வி கேட்பவையாக இருந்தன. உலகாய்தம் இயற்கையிலேயே ஒருங்கமைப்பு பெறமுடியாத நெறி. ஆசீவகம் ஒருங்கமைப்பு செய்ய முற்பட்டு அதில் வெல்லாத ஒரு நெறி.) சிவனிய, விண்ணவ நெறிகளின் ஒருங்கமைப்பு விளைவே ஆகமம் என்ற சமயமாய், மரபாய் உருவெடுத்தது. ஆகிவந்த நெறி - நாள்பட்டு வந்த நெறி - என்ற பொருளில் அதை ஆகமம் என்று சொல்லத் தொடங்கினர். ஆகமத்தின் முதல் நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆனால் வேதநெறியோடு உடன்படிக்கை செய்து கொண்டு ஆகமநெறியைப் பேசும் ஐந்தாம் நூற்றாண்டுத் திருமந்திர நூல் நமக்குக் கிடைத்திருக்கிறது. திருமந்திரத்துள் சொல்லப் படுவது ஆகமம் தான்; ஆனால் வேதமும், புத்தமும் அதில் சிலபோது உடன்பாடாகவும் சிலபோது மறுதலையாகவும் ஊடுறுவிக் கிடக்கின்றன. இவற்றைப் பிரித்தெடுப்பது என்பது சரவலானது தான். (உடனே ஆகம வழியும், வேத வழியும் ஒன்றென்று திருமூலன் பாடிவிட்டான் என்பது மேம்போக்கான கூற்று. அவன் உடன்பாடு செய்துகொண்டான் என்பது சரி. அது ஒருவகையான, புத்தத்திற்கு எதிரான, கூட்டு முன்னணி.) இருந்தாலும் திருமூலன் ஒரு முகமையான குறியீட்டாளன். சிவநெறியை ஒழுங்கு படுத்தியவருள் முதல்வன். அவன் தனக்கு முந்திய ஆகம நூல்களைப் பற்றிக் குறிப்பால் உணர்த்துகிறான். அவை எந்தக் காலம் என்று நமக்குத் தெரியாமல் இருக்கிறது.

ஆகமம் என்ற சொல் பொதுமைப்படுவதற்கான ஏரணம் என்ன?

தென்னாட்டுப் பழக்கங்களையும், மரபுகளையும், சடங்குகளையும், இன்ன பிறவற்றையும் தங்களுடையதோடு சேர்த்து ஒரு கலவையாகக் காட்சியளித்தால் தான் தென்னாட்டில் வடநாட்டு மதங்கள் நிலைக்க முடியும் என்று வடநாட்டு நெறிகள் உணர்ந்ததால் ஆகமம் என்ற சொல் பொதுமை பெறத் தொடங்கியது. புத்த ஆகமம், செயின ஆகமம், வேத ஆகமம் போன்ற முரண்தொடைகள் (oxymoron) அப்படித்தான் கிளர்ந்தன. முடிவில் எல்லாமே எண்ணெய் என்று சொல்லப் பட, முதல் எண்ணெய், மக்கள் வழக்கில் நல்ல எண்ணெய் ஆகிற்று. இந்த ஆகமம் என்ற சொல்லும் இப்படித்தான். சிவ ஆகமம், விண்ணவ ஆகமம் என்ற சொற்கள் நல்ல எண்ணெய் என்று சொல்லுவதைப் போல தோற்றம் கொண்டவை. முடிவில் கிறித்துவம், இசுலாம் வரைக்கும் கூட ஆகமம் என்ற சொல் பொதுமையாகி ஒட்டி நிற்பது கூட அந்தச் சொல்லின் தமிழ்மையை உங்களுக்குப் புரிய வைக்கவில்லையா?

நண்பரே! பல இடங்களில் இருந்து மேற்கோள் காட்டுகிறீர்கள்; பெருமையாக இருக்கிறது; ஆனால் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? இவ்வளவெல்லாம் ஏன்? கோயிலொழுகு, மந்திரம், தந்திரம், மெய்யுரை(இது தான் உபதேசம்) என்று வைத்திருக்கிறார்களே, கவனிக்கவில்லையா? எங்களுக்கும் மந்திரங்கள் இருக்கின்றன, தந்திர உத்திகள் இருக்கின்றன, ஒழுகலாறுகள் இருக்கின்றன என்று அழுத்தி உரைக்கிறார்களே என்று அதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? "இவை அத்தனையும் வேதப் பழக்கத்திற்கு மாறாக இருக்கிறதே? இன்றையக் கலவையின் அடித்தளம் எது? வேதமா, வேதத்திற்கு மாற்றா? ஆகுதியா? படையலா? ஆகுதியாய் இருக்குமானால் கொடிக் கம்பத்திற்குப் பக்கலில் பலிபீடம் இருக்காது, வேள்விக் குண்டம் இருந்திருக்குமே? சுவாகா இல்லாமல் போற்றி எப்படி வந்தது?" இப்படிக் கொஞ்சம் உள்ளார்ந்து யோசியுங்கள் அய்யா! ஆகமம் என்ற சொல் மட்டுமில்லை, நெறியே எங்கு எழுந்ததென்று புலப்படும்.

தேவையில்லாத வடமொழிச் சட்டையைப் போட்டுக் கொண்ட ஒரே காரணத்தால் உள்ளே இருக்கும் மெய்யையே "உன்னுது இல்லப்பா, வடவரது" என்று சொன்னால் எப்படி? எல்லாவற்றையும் கடன் வாங்கினோம் என்று சொல்லி நம் பெருமிதத்தை நாமே ஏன் குலைக்க வேண்டும்? சிசுனதேவன் என்று பரிகசித்த வேதக்காரன் இலிங்கம் நடுநாயகமாய் உள்ள கோயிலை வைக்க மாட்டான்; அப்படி வைத்துப் பின் அவனே பூசகனும் ஆகமாட்டான். மாறாகச் சோராட்டிரன் போலத் தீயை வளர்த்துக் கொண்டு அதை அணையாது காத்துக் கொண்டு இருப்பான். இன்றையப் பூசகர்கள் வேதம் பற்றிய புரிதல் இல்லாமல் வேதநெறியின் பாற்பட்டுத் தாம் கோயிற்பணி செய்வதாய் வெளிக்குச் சொல்லிக் கொள்ளலாம்; ஆனால் உண்மையில் அந்த சிவாச்சாரியார்கள் ஆகமம் தான் பின்பற்றுகிறார்கள். என்ன செய்வது? இது oxymoron என்று கூடத் தெரியாமல் நம்மில் பலர் இருக்கிறோம். "தேவனே, இவர்கள் அறியாமல் பிழை செய்கிறார்கள், பொறுத்துக் கொள்ளும்" என்றுதான் நான் சொல்ல முடியும்.

ஆலமரத்தின் அடியில் தென் திசை பார்க்கும் செல்வனை உருவகித்தவன், நடுகல் நாட்டியவன், பொதியில், கோட்டம், அம்பலம் என்று தொடங்கி முடிவில் கோயிலாய் ஆக்கியவன்; மொத்தத்தில் அவன் ஆகமத்தான், வேதக்காரன் அல்லன்.
--------------------------------------------------------------------------
அடுத்து நா.கணேசன்:

பல நூற்றுக்கணக்கான ஆய்வேடுகளையும், கல்வெட்டுத் தொகுதிகளையும் பார்க்க வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பௌத்த/இந்து சமயங்களின் கூறுகள், கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் இருந்து மாத்திரம் போனவை அல்ல. கலிங்கம், தெலுங்கம், வங்கம் இவற்றுக்கும் பெரும்பங்கு உண்டு. மலேசியாவில் (பிரிட்டிஷ் காலத்தில் அழைத்துப்போன) தமிழரைக் கூடக் கலிங்கத்துடன் தொடர்புபடுத்திப் பேர் வைக்கிறார்கள் என்பதுகூட இப்பண்டைத் தொடர்பால் தான். புத்த ஜாதகக் கதைகள் ஆந்திரா, கலிங்கம் தென்கீழ் ஆசியாவுக்குக் கடலாடுதலைப் பல இடங்களில் விளக்குகி ன்றன. கிரந்த எழுத்துக்களில் கல்வெட்டுக்கள் செப்பேடுகள் முதலில் ஆந்திராவில் கி டைக்கின்றன. பின்னர் பலகாலம் பல்லவர் கல்வெட்டுக்கள் காஞ்சியிலும், மாமல்லையி லும் உள்ளன. அனேகமாக அவை சம்ஸ்க்ருதத்தில் இருப்பவைதான்.
------------------------------------------
என் மறுமொழி:

கதையையே மாற்றிவிட்டீர்களே! முதலில் தென்கிழக்கு ஆசியாவில் கிடைத்த கல்வெட்டுக்கள் என்று சொன்னீர்கள். இப்பொழுது ஆந்திராவுக்கும், காஞ்சிபுரத்திற்கும், மாமல்லைக்குமாய் மாறிவிட்டீர்கள். நழுவிக் கொண்டு போனால் எப்படி? ஓரிடத்தில் நின்று நீங்கள் சொல்லவந்ததைச் சொல்லுங்கள். தென்கிழக்கு ஆசியாவில் கிடைத்திருக்கும் கல்வெட்டுக்கள் ஆந்திரம் பற்றிப் பேசுகின்றனவா? அதற்குச் சான்றுகள் உள்ளனவா? கலிங்கம் பற்றிப் பேசுகின்றனவா? அதற்குச் சான்றுகள்? எந்தக் கலிங்க அல்லது ஆந்திர அரசன்? எந்த வணிகர் குழு? செய்திகள் என்ன? பொத்தாம் பொதுவாக சாதகக் கதைகள் பேசுகின்றன என்று சொன்னால் எப்படி? தமிழகத்தையும், மணிபல்லவத்தையும் (யாழ்ப்பாணத்திற்கு அருகில்) தவிர்த்து அந்தக் காலக் கடலோடிகள் சமுத்திரத் தீவிற்கும் (சுமத்ரா), மலையகத்திற்கும் செல்லுவது (இந்துமாக் கடலின் நீரோட்டம், பருவக் காற்று என்பவற்றைப் பாருங்கள்) அரிதான காரியம். வாய்ப்பு இல்லாமல் இராசேந்திர சோழன்

அலைகடல் நடுவில் பலகலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்மன்
ஆகிய கடாரத் தரசனை

வாகை கொள்ளவில்லை. இந்த மெய்கீர்த்தியின் உள்ளே அந்தக் காலக் கடலாடுதலின் சூக்குமம் இருக்கிறது. அது நீரோட்டம், மற்றும் பருவக் காற்று சார்ந்தது. கலிங்கத்தில் உள்ள பாலூரில் (Paradeep) இருந்து புறப்பட்ட கப்பல் நம்முடைய நாகையை, மணிபல்லவத்தை ஒட்டி வராமல், அஃகய முனையை (Banda Aceh) அடைய முடியாது. சோழன் குடுமி சும்மா பார்த்துக் கொண்டு இராது. கலிங்கத்தான் தன்னுடைய வணிகத்தைப் பிடிப்பதைப் பார்த்துக் கொண்டு இரான். கலிங்கத்தான் புத்தனாகவே இருக்கட்டுமே? சமுத்திரத்தீவின் மீதும், மலையகத்தின் மீதும் தமிழனின் பிடி சற்று அதிகமே.

முதலில் மடலின் தலைப்பைத் தமிழ் முறைப்படி ஆங்கிலத்தில் aahamaa என்று பலுக்குங்கள். aagama என்றவுடனே அது வடமொழியோ என்ற மயக்கம் தருகிறது. இப்படித் தவறான பலுக்கலால் வேரறிய முடியாமற் கிடக்கும் தமிழ்ச் சொற்கள் மிகப் பல. சகரத்தைச் ஸகரமாகவும், அண்மைக் காலமாய் ஷகரமாயும் ஒரு சாரார் பலுக்கி, ககரத்தை ga என்று ஆக்கி, நம்முடைய உயிர்த்தரிப்பையே (உச்சரிப்பையே) மாற்றி நாம் கெட்டுக் கிடக்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

10 comments:

இ. மயூரநாதன் said...

ஆகமம் பற்றிய உரையாடல் சுவையாகத்தான் இருந்தது. சொற்பிறப்பு ஆராய்ச்சிக்கு அப்பாலும் சென்று ஆகமம் பற்றி மேலும் சில விவரங்களை அறியும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நான் ஒரு கட்டிடக்கலைஞன் என்றவகையில், கோயில் கட்டிடங்கள் ஆகம முறைப்படி அமைக்கப்படுவது பற்றி அறிந்திருக்கிறேன். முதன்மையான ஆகமங்களான காமிக ஆகமம், காரண ஆகமம் முதலியவற்றின் பெரும்பாலான அத்தியாயங்களில் கோயில் கட்டிட அமைப்புப் பற்றியே எழுதப்பட்டுள்ளது. இவையே தென்னிந்தியாவில் உருவானதாகக் கருதப்படும் மானசாரம், மயமதம் முதலிய சிற்பநூல்களுக்கு அடிப்படையாக இருந்தன என்றும் கூறப்படுகின்றது. ஆனாலும், சிற்பநூல்களின் மூலம் அதர்வ வேதத்தின் ஒரு கூறான ஸ்தபத்ய வேதம் என்றும் கூறுகிறார்கள். அதர்வ வேதத்தின் எந்தப் பகுதியில் இந்த ஸ்தபத்ய வேதம் இருக்கிறது என்று என்னால் அறியக் கூடவில்லை. அதர்வ வேதத்துக்கும், ஆகமங்களுக்கும் உள்ள இத்தொடர்பு பற்றிய விளக்கம் என்ன?

குமரன் (Kumaran) said...

நல்லதொரு உரையாடலைப் படித்த திருப்தி ஐயா. ஆசிவகத்தைப் பற்றி நான் அதிகம் படித்ததில்லை. எங்கே படிக்கலாம்? ஏதாவது சுட்டி இருந்தால் தாருங்கள்.

Anonymous said...

¸¢ðÎ «ñ½ÛìÌ,
«Õ¨ÁÂ¡É À¾¢×.
¯í¸û À¾¢×ìÌô À¢ýë𼡸 þ. Áäÿ¡¾ý ¦º¡ýɨ¾Ôõ ¸ñ§¼ý. ¿¡Ûõ º¢Ä ¦º¡øÄ Å¢¨Æó§¾ý.
§Å¾í¸ÙìÌõ ÅÊÅ¿¢¨ÄôÀ¡Î¸ÙìÌõ ´Õ ¦¾¡¼÷Òõ ¸¢¨¼Â¡Ð. «¨Å Å¡Éõ À¡÷ò¾ áø¸û. Å¢ñ½¢Ä¢ÕóÐ ²§¾Ûõ þÈí¸¢ÅÕõ ±ýÚ ¸¡ò¾¢ÕôÀ¨Å. Å¢ñ½¢Ä¢ÕìÌõ ¾í¸û §¾Å¨¾¸ÙìÌ Áñ½¢Ä¢ÕóÐ ¾£òà¾ý ÅƢ¡¸ò ¾£É¢§À¡¼ Ó¨ÉÀ¨Å. §Å¾ ÅÆ¢À¡Î «ïºøÅÆ¢ì ¸øÅ¢§À¡ýÈÐ.
Á¡È¡¸, ÅÊÅò¾¢ø ÅÆ¢Àð¼Åý ¾Á¢Æý. ²¦ÉýÈ¡ø «ÅÉÐ ÅÆ¢À¡Î Óý§É¡÷ ÅÆ¢À¡ðÊý Ó¨ÈôÀÎò¾ôÀð¼ ¦¾¡¼÷. ÅÊÅí¸¨Ç ¿¢¨ÄôÀÎò¾ì §¸¡Â¢ø ¸ðÊÂÅÛõ ¾Á¢Æý¾¡ý. «ôÀÊ¡ɡø «¾ü¸¡É á¨Ä ¯Õš츢ÂÅÛõ «ÅÉ¡¸ò¾¡§É þÕì¸ §ÅñÎõ! «Ð¾¡§É ²Ã½ ӨȨÁ? («ñ½ý, ²Ã½ò¨¾ Å¢Çì¸ì §¸ð§¼§É?) ¦¾ýÉ¡ðÊý §¸¡Â¢ø «¨ÁôÒӨȨ ż¿¡ðÊø ±íÌõ ¸¡½ÓÊ¡§¾! º¢üÀáø¸ÙìÌ ãÄõ «¾÷Å §Å¾Á¡¸×õ «¾ý ÜÈ¡É þ;Àò¾¢Â §Å¾Á¡¸×õ þÕó¾¢ÕìÌÁ¡É¡ø ż¿¡ðÊÖõ ¦¾ýÉ¡ðÊý §¸¡Â¢ø «¨ÁôÒӨȸû Å¢Çí¸¢Â¢Õì¸ §ÅñÎÁøÄÅ¡?
§ÁÖõ, «¾÷Åõ À¢ýÉ¡¨Ç §Å¾õ. §Å¾í¸û ¦¾¡¼ì¸ò¾¢ø '¾¢Ã£ Å¢ò¾¢Â¡' ±ýÚ ãýÈ¡¸î ¦º¡øÄôÀðÎô À¢ýÉ¡Ç¢ø ¿¡ý¸¡Å¾¡¸ «¾÷Åò¨¾Ôõ §º÷òÐ즸¡ñÎ 'ºÐ÷§Å¾'í¸Ç¡Â¢É. «¾÷Åõ §Å¾ô ÀÃôÀ¢ø þ¼õ¦ÀÈ ÓÊó¾¡Öõ «Ð þý¨ÈìÌõ ²¨É §Å¾í¸û ¦ÀÚõ ¦ÀÕ¨Á¨Âô ¦ÀÈÓÊ¡Áø ¾ûÇ¢¨Åì¸ôÀð¼ ¿¢¨Ä§Â ¿£Ê츢ÈÐ. «Ð ¯Ä¸¢Âø þýÀí¸¨Çô ÀÂìÌõ áÄ¡¨¸Â¡ø ¦ÀÕ¨ÁìÌâ¾ýÚ ±ýÚ ¸Õ¾ôÀθ¢ÈÐ. §¸ÃÇò¨¾ÂýÈ¢ «¾÷Åò¨¾ô §À¡üÚ¸¢È À¢È ¿¢Äí¸û ¯ñ¼¡ ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. §¸ÃÇõ ÁðÎõ¾¡ý ±ýÈ ¿¢¨Ä¢ø «¾÷Åõ ¦¾ýÉ¡ðÎìÌû «¨¼ÀðÎŢθ¢ÈÐ. ²ý?
´Õ§Å¨Ç þôÀÊ þÕì¸Ä¡õ: Á¡üÚ ÁÃҸǢø þÕóÐ ¦ºøÅ¡ì¸¡É ÅÆ¢À¡ðÎìÜÚ¸¨ÇÔõ þýÉ À¢ÈÅü¨ÈÔõ ¾Á¾¡ì¸¢ì ¦¸¡ûÙõ ÓÂüº¢Â¢ø, «Åü¨È ²ü¸É§Å ¾í¸Ç¢¼Á¢ÕìÌõ ã§Å¾í¸Ç¢ø §º÷ò¾¡ø ¾õÓ¨¼Â ãÄì ¸ÕòÐì¸Ç¢ø º¢¨¾× ²üÀðÎÅ¢¼ìÜÎõ ±ýÚ «ïº¢, Á¡üÚ ÁÃҸǢ¼Á¢ÕóÐ ¾¡õ Ò¾¢¾¡¸ì ¸¼ý¦ÀüÈÅü¨È ¯ûǢΞü¸¡¸ «¾÷Åõ ±ý¦È¡Õ §Å¾õ ¦ºöÂôÀðÊÕì¸Ä¡õ. À¢ÈÌ ÅÆì¸õ§À¡Ä 'þ¨Å¦ÂøÄ¡õ ±í¸Ù¨¼Â Áñ¨¼î ÍÃôÒ; ¿£í¸¦ÇøÄ¡õ Áñ¨¼Â¢ø ã¨ÇìÌô À¾¢ø Áñ ¯ûÇÅ÷¸Ç¡¸ þÕò¾Ä¢É¡ø ¦ÀÕó¾ý¨ÁÀüÈ¢ ¯í¸ÙìÌì ¨¸Á¡üÚì ¸¼É¡¸ ÅÆí¸¢§É¡õ' ±ýÚ ¦º¡øÄò ¾¨ÄôÀðÊÕì¸Ä¡õ. ¿¡Óõ ÅÆì¸õ§À¡Ä '¬¸¡! Òò¾¢º¢¸¡Á½¢ ¦º¡ýÉ¡ø ºÃ¢¾¡ý' ±ýÚ Òò¾¢Â¢øÄ¡Áø ²üÚ즸¡ñÊÕì¸Ä¡õ! ¿¡ýÌ §Å¾ áø¸Ç¢ø ´Õ §Å¾ áø ÁðÎõ ¦ºøš츢øÄ¡Áø þÕôÀ¨¾ °ýÈ¢ô À¡÷ò¾¡ø þôÀÊò¾¡ý °¸¢ì¸ò §¾¡ýÚ¸¢ÈÐ.
«¾÷ÅòÐìÌõ ¾ó¾¢Ã áø ÁÃÒ¸ÙìÌõ ¦¿Õí¸¢Â ¦¾¡¼÷Ò þÕì¸×õ Å¡öôÒñÎ. ¾ó¾¢Ã áø¸û §Å¾í¸Ç¡ø ÓüÈ¢ÖÁ¡¸ô ÒÈ츽¢ì¸ôÀð¼¨ÅÔõ ºÅ¢ì¸ôÀð¼¨ÅÔõ ¬Ìõ. ¾ó¾¢Ãí¸Ùõ ¬¸Áí¸Ùõ ¦¿Õí¸¢Â ¦¾¡¼÷Ò ¦¸¡û¸¢ýÈÉ. ¦À¡ÐÅ¢ø ¬¸Áõ ±ýÀÐõ ¾ó¾¢Ãõ ±ýÀÐõ ´ý¨È§Â ÌÈ¢ôÀÉ ±ýÚ ¦¸¡ñ¼¡Öõ «ÅüÚ츢¨¼§Â §ÅÚÀ¡Î þÕôÀ¾¡¸§Å §¾¡ýÚ¸¢ÈÐ. Á¡üÚ ÁÃÒ áø¸Ç¢ø ¬¸Áõ §Áø¿¢¨Ä¡¸×õ ¾ó¾¢Ãõ ¸£ú¿¢¨Ä¡¸×õ ¦À¡Ð¿¢¨Ä¢ø ¸¡ð¼ôÀθ¢ýÈÉ. («ñ½ý, ¾ó¾¢Ãò¨¾ò ¾ý+¾¢Èõ ±ýÚ ¦À¡Õû Üð¼Ä¡Á¡?) ¬¸Áí¸Ç¢Öõ ºÃ¢, ¾ó¾¢Ãí¸Ç¢Öõ ºÃ¢, ¯Ä¸Óõ ¯Ä¸¢ÂÖõ ÒÈó¾ûÇôÀ¼Å¢ø¨Ä. ¾ý¨É§Â ¸ÇÁ¡¸ì ¦¸¡ñÎ «¨¼Â§ÅñÎÅÉÅü¨È «¨¼ÅÐ «ÅüÈ¢ý º¡Ãî ¦ºö¾¢. (¿¡.¸§½ºý «Å÷¸û ¦º¡ýɾý§Àâø: ¦ÀÇò¾ ¾ó¾¢Ãí¸û ±ýÚ §¸ûÅ¢ÔüÈÐñ§¼¦Â¡Æ¢Â ¦ÀÇò¾ ¬¸Áí¸û ±ýÚ §¸ûÅ¢ÔüȾ¢ø¨Ä. ¾ó¾¢Ãõ-¬¸Áõ þÅüÚ츢¨¼Â¢Ä¡É þ¨¼¦ÅÇ¢¨Â ŨÃÂÚôÀ¾¢ø ²üÀÎõ ÌÆôÀõ ¸¡Ã½Á¡¸ ¦ÀÇò¾ ¾ó¾¢Ãò¨¾ô ¦ÀÇò¾ ¬¸Áõ ±ýÚ Â¡§ÃÛõ ¦º¡øĢ¢Õì¸Ä¡õ. §ÁÖõ ¦ÀÇò¾ò¾¢ø ¾ó¾¢Ãî ¦ºøÅ¡ìÌ À¢ýÉ¡¨ÇÂÐ. º¢ÚÀ¡ý¨ÁÂÐ. ÌÈ¢ôÀ¡¸ò ¾¢¦Àò¾¢ô ¦ÀÇò¾ò¾¢ø ¬Ù¨ÁÔ¨¼ÂÐ. ºÁ½ò¾¢ý§Àâø «ó¾î º¢ÚÀ¡ý¨Áî ¦ºøÅ¡ìÌõ ¾ó¾¢Ãí¸ÙìÌ þÕôÀ¾¡¸ò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ºÁ½ ¬¸Áõ ±ýÚ ²§¾Ûõ ÅÆí¸ôÀÎÁ¡É¡ø «Ð ŢŢĢÂò¨¾ §Å¾¡¸Áõ ±ýÚ ¦º¡øÅЧÀ¡Äò¾¡ý. þáÁ. ¸¢. «ñ½ý ¦º¡ýÉÐ ¿¢ÃõÀî ºÃ¢!).
ż¦Á¡Æ¢Â¢ø þÕôÀÅü¨È¦ÂøÄ¡õ ̨¼óР̨¼ó¾¡ÅÐ ¦ÅǢ즸¡ñÎÅóÐŢθ¢È þó¾¢Â «È¢×ĸõ ¬¸Áí¸û, ¾ó¾¢Ãí¸ûÀüÈ¢ô À¡Ã¡Ó¸Á¡¸ þÕôÀ§¾ý? ¾ó¾¢Ãí¸Ç¡ÅÐ ¦ÀÇò¾ ÅÆ¢¸Ç¢ø ¿¼ó¾ ¬ö׸Ǣý ¸¡Ã½Á¡¸×õ, §Å¾í¸ÙìÌ Á¡ìÍÓøÄ÷ ¸¢¨¼ò¾Ð§À¡Ä ¾ó¾¢Ãí¸ÙìÌ ¬÷¾÷ ¬ÅÄ¡ý ±ý¸¢È º¡ý ¯ðáù ¸¢¨¼ò¾¾É¡Öõ, µÃÇ× ¦ÅÇ¢ôÀðÎÅ¢ð¼É. ¬¸Áí¸û þýÛõ ¦À՚⡸ ¦ÅÇ¢ôÀ¼Å¢ø¨Ä§Â! «ÅüÈ¢ø ¦º¡øÄôÀðÊÕôÀ¨Å¦ÂøÄ¡õ §Å¾î º¡÷Òî ¦ºö¾¢¸û ±ýÈ¡ø ¦¸¡ñÎÅóÐÅ¢¼§ÅñÊÂо¡§É. ±ýÉ Í½ì¸õ? ÁÚ¾¨Ä áø¸¦ÇøÄ¡õ Á¨Èì¸ôÀÎÅÐõ «Æ¢ì¸ôÀÎÅÐÁøħš þó¾¢Â «È¢×ĸ ÅÃÄ¡Ú! ¬¸Áí¸¨ÇôÀüÈ¢ þýÛõ °¸î ¦ºö¾¢¸¨Ç§Â §Àº¢ì¦¸¡ñÊÕôÀÐ þ¨¾§Â «øÄÅ¡ ¿¢¨Ä¿¡ðθ¢ÈÐ! ¸¢¨¼ò¾¢Õì¸¢È ¬¸Áí¸Ç¢Öõ §Å¾ÁçÀ Å¢¾ó§¾¡¾ôÀΞ¡¸ ¦ÅÇ¢ôÀ¼Å¢ø¨Ä§Â!
ÀÄ ¦¾öÅí¸¨Ç ¯¼ýÀðÎ, «ùÅÅüÚìÌâ þ¼ò¨¾ ŨÃÂÚòÐ Àý¨Á §À͸¢È ¬¸Á-¾ó¾¢Ã ¦¿È¢¸ÙìÌõ, '²¸õ ºòÐ' ±ýÚ ´ý¨È§Â ÓüÈ ÓÊó¾ ¦ÁöÂ¡ì¸ Å¢¨Æ¸¢È §Å¾ ¦¿È¢ìÌõ ¸ðÊô§À¡ð¼¡Öõ ¦º¡ó¾õ ¯ñ¼¡ÌÁ¡!
«ýÀý,
¸Õ. ¬ÚÓ¸ò¾Á¢Æý.

Anonymous said...

கிட்டு அண்ணனுக்கு,
அருமையான பதிவு.
உங்கள் பதிவுக்குப் பின்னூட்டாக இ. மயூரநாதன் சொன்னதையும் கண்டேன். நானும் சில சொல்ல விழைந்தேன்.
வேதங்களுக்கும் வடிவநிலைப்பாடுகளுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அவை வானம் பார்த்த நூல்கள். விண்ணிலிருந்து ஏதேனும் இறங்கிவரும் என்று காத்திருப்பவை. விண்ணிலிருக்கும் தங்கள் தேவதைகளுக்கு மண்ணிலிருந்து தீத்தூதன் வழியாகத் தீனிபோட முனைபவை. வேத வழிபாடு அஞ்சல்வழிக் கல்விபோன்றது.
மாறாக, வடிவத்தில் வழிபட்டவன் தமிழன். ஏனென்றால் அவனது வழிபாடு முன்னோர் வழிபாட்டின் முறைப்படுத்தப்பட்ட தொடர்ச்சி. வடிவங்களை நிலைப்படுத்தக் கோயில் கட்டியவனும் தமிழன்தான். அப்படியானால் அதற்கான நூலை உருவாக்கியவனும் அவனாகத்தானே இருக்க வேண்டும்! அதுதானே ஏரண முறைமை? (அண்ணன், ஏரணத்தை விளக்கக் கேட்டேனே?) தென்னாட்டின் கோயில் அமைப்புமுறையை வடநாட்டில் எங்கும் காணமுடியாதே! சிற்பநூல்களுக்கு மூலம் அதர்வ வேதமாகவும் அதன் கூறான இசுதபத்திய வேதமாகவும் இருந்திருக்குமானால் வடநாட்டிலும் தென்னாட்டின் கோயில் அமைப்புமுறைகள் விளங்கியிருக்க வேண்டுமல்லவா?
மேலும், அதர்வம் பின்னாளைய வேதம். வேதங்கள் தொடக்கத்தில் 'திரயீ வித்தியா' என்று மூன்றாகச் சொல்லப்பட்டுப் பின்னாளில் நான்காவதாக அதர்வத்தையும் சேர்த்துக்கொண்டு 'சதுர்வேத'ங்களாயின. அதர்வம் வேதப் பரப்பில் இடம்பெற முடிந்தாலும் அது இன்றைக்கும் ஏனைய வேதங்கள் பெறும் பெருமையைப் பெறமுடியாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையே நீடிக்கிறது. அது உலகியல் இன்பங்களைப் பயக்கும் நூலாகையால் பெருமைக்குரியதன்று என்று கருதப்படுகிறது. கேரளத்தையன்றி அதர்வத்தைப் போற்றுகிற பிற நிலங்கள் உண்டா என்று தெரியவில்லை. கேரளம் மட்டும்தான் என்ற நிலையில் அதர்வம் தென்னாட்டுக்குள் அடைபட்டுவிடுகிறது. ஏன்?
ஒருவேளை இப்படி இருக்கலாம்: மாற்று மரபுகளில் இருந்து செல்வாக்கான வழிபாட்டுக்கூறுகளையும் இன்ன பிறவற்றையும் தமதாக்கிக் கொள்ளும் முயற்சியில், அவற்றை ஏற்கனவே தங்களிடமிருக்கும் மூவேதங்களில் சேர்த்தால் தம்முடைய மூலக் கருத்துக்களில் சிதைவு ஏற்பட்டுவிடக்கூடும் என்று அஞ்சி, மாற்று மரபுகளிடமிருந்து தாம் புதிதாகக் கடன்பெற்றவற்றை உள்ளிடுவதற்காக அதர்வம் என்றொரு வேதம் செய்யப்பட்டிருக்கலாம். பிறகு வழக்கம்போல 'இவையெல்லாம் எங்களுடைய மண்டைச் சுரப்பு; நீங்களெல்லாம் மண்டையில் மூளைக்குப் பதில் மண் உள்ளவர்களாக இருத்தலினால் பெருந்தன்மைபற்றி உங்களுக்குக் கைமாற்றுக் கடனாக வழங்கினோம்' என்று சொல்லத் தலைப்பட்டிருக்கலாம். நாமும் வழக்கம்போல 'ஆகா! புத்திசிகாமணி சொன்னால் சரிதான்' என்று புத்தியில்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம்! நான்கு வேத நூல்களில் ஒரு வேத நூல் மட்டும் செல்வாக்கில்லாமல் இருப்பதை ஊன்றிப் பார்த்தால் இப்படித்தான் ஊகிக்கத் தோன்றுகிறது.
அதர்வத்துக்கும் தந்திர நூல் மரபுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கவும் வாய்ப்புண்டு. தந்திர நூல்கள் வேதங்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டவையும் சவிக்கப்பட்டவையும் ஆகும். தந்திரங்களும் ஆகமங்களும் நெருங்கிய தொடர்பு கொள்கின்றன. பொதுவில் ஆகமம் என்பதும் தந்திரம் என்பதும் ஒன்றையே குறிப்பன என்று கொண்டாலும் அவற்றுக்கிடையே வேறுபாடு இருப்பதாகவே தோன்றுகிறது. மாற்று மரபு நூல்களில் ஆகமம் மேல்நிலையாகவும் தந்திரம் கீழ்நிலையாகவும் பொதுநிலையில் காட்டப்படுகின்றன. (அண்ணன், தந்திரத்தைத் தன்+திறம் என்று பொருள் கூட்டலாமா?) ஆகமங்களிலும் சரி, தந்திரங்களிலும் சரி, உலகமும் உலகியலும் புறந்தள்ளப்படவில்லை. தன்னையே களமாகக் கொண்டு அடையவேண்டுவனவற்றை அடைவது அவற்றின் சாரச் செய்தி. (நா.கணேசன் அவர்கள் சொன்னதன்பேரில்: பெளத்த தந்திரங்கள் என்று கேள்வியுற்றதுண்டேயொழிய பெளத்த ஆகமங்கள் என்று கேள்வியுற்றதில்லை. தந்திரம்-ஆகமம் இவற்றுக்கிடையிலான இடைவெளியை வரையறுப்பதில் ஏற்படும் குழப்பம் காரணமாக பெளத்த தந்திரத்தைப் பெளத்த ஆகமம் என்று யாரேனும் சொல்லியிருக்கலாம். மேலும் பெளத்தத்தில் தந்திரச் செல்வாக்கு பின்னாளையது. சிறுபான்மையது. குறிப்பாகத் திபெத்திப் பெளத்தத்தில் ஆளுமையுடையது. சமணத்தின்பேரில் அந்தச் சிறுபான்மைச் செல்வாக்கும் தந்திரங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சமண ஆகமம் என்று ஏதேனும் வழங்கப்படுமானால் அது விவிலியத்தை வேதாகமம் என்று சொல்வதுபோலத்தான். இராம. கி. அண்ணன் சொன்னது நிரம்பச் சரி!).
வடமொழியில் இருப்பவற்றையெல்லாம் குடைந்து குடைந்தாவது வெளிக்கொண்டுவந்துவிடுகிற இந்திய அறிவுலகம் ஆகமங்கள், தந்திரங்கள்பற்றிப் பாராமுகமாக இருப்பதேன்? தந்திரங்களாவது பெளத்த வழிகளில் நடந்த ஆய்வுகளின் காரணமாகவும், வேதங்களுக்கு மாக்சுமுல்லர் கிடைத்ததுபோல தந்திரங்களுக்கு ஆர்தர் ஆவலான் என்கிற சான் உட்ராவ் கிடைத்ததனாலும், ஓரளவு வெளிப்பட்டுவிட்டன. ஆகமங்கள் இன்னும் பெருவாரியாக வெளிப்படவில்லையே! அவற்றில் சொல்லப்பட்டிருப்பவையெல்லாம் வேதச் சார்புச் செய்திகள் என்றால் கொண்டுவந்துவிடவேண்டியதுதானே. என்ன சுணக்கம்? மறுதலை நூல்களெல்லாம் மறைக்கப்படுவதும் அழிக்கப்படுவதுமல்லவோ இந்திய அறிவுலக வரலாறு! ஆகமங்களைப்பற்றி இன்னும் ஊகச் செய்திகளையே பேசிக்கொண்டிருப்பது இதையே அல்லவா நிலைநாட்டுகிறது! கிடைத்திருக்கிற ஆகமங்களிலும் வேதமரபே விதந்தோதப்படுவதாக வெளிப்படவில்லையே!
பல தெய்வங்களை உடன்பட்டு, அவ்வவற்றுக்குரிய இடத்தை வரையறுத்து பன்மை பேசுகிற ஆகம-தந்திர நெறிகளுக்கும், 'ஏகம் சத்து' என்று ஒன்றையே முற்ற முடிந்த மெய்யாக்க விழைகிற வேத நெறிக்கும் கட்டிப்போட்டாலும் சொந்தம் உண்டாகுமா!
அன்பன்,
கரு. ஆறுமுகத்தமிழன்.

Anonymous said...

கிட்டு அண்ணனுக்கு,
அருமையான பதிவு.
உங்கள் பதிவுக்குப் பின்னூட்டாக இ. மயூரநாதன் சொன்னதையும் கண்டேன். நானும் சில சொல்ல விழைந்தேன்.
வேதங்களுக்கும் வடிவநிலைப்பாடுகளுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அவை வானம் பார்த்த நூல்கள். விண்ணிலிருந்து ஏதேனும் இறங்கிவரும் என்று காத்திருப்பவை. விண்ணிலிருக்கும் தங்கள் தேவதைகளுக்கு மண்ணிலிருந்து தீத்தூதன் வழியாகத் தீனிபோட முனைபவை. வேத வழிபாடு அஞ்சல்வழிக் கல்விபோன்றது.
மாறாக, வடிவத்தில் வழிபட்டவன் தமிழன். ஏனென்றால் அவனது வழிபாடு முன்னோர் வழிபாட்டின் முறைப்படுத்தப்பட்ட தொடர்ச்சி. வடிவங்களை நிலைப்படுத்தக் கோயில் கட்டியவனும் தமிழன்தான். அப்படியானால் அதற்கான நூலை உருவாக்கியவனும் அவனாகத்தானே இருக்க வேண்டும்! அதுதானே ஏரண முறைமை? (அண்ணன், ஏரணத்தை விளக்கக் கேட்டேனே?) தென்னாட்டின் கோயில் அமைப்புமுறையை வடநாட்டில் எங்கும் காணமுடியாதே! சிற்பநூல்களுக்கு மூலம் அதர்வ வேதமாகவும் அதன் கூறான இசுதபத்திய வேதமாகவும் இருந்திருக்குமானால் வடநாட்டிலும் தென்னாட்டின் கோயில் அமைப்புமுறைகள் விளங்கியிருக்க வேண்டுமல்லவா?
மேலும், அதர்வம் பின்னாளைய வேதம். வேதங்கள் தொடக்கத்தில் 'திரயீ வித்தியா' என்று மூன்றாகச் சொல்லப்பட்டுப் பின்னாளில் நான்காவதாக அதர்வத்தையும் சேர்த்துக்கொண்டு 'சதுர்வேத'ங்களாயின. அதர்வம் வேதப் பரப்பில் இடம்பெற முடிந்தாலும் அது இன்றைக்கும் ஏனைய வேதங்கள் பெறும் பெருமையைப் பெறமுடியாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையே நீடிக்கிறது. அது உலகியல் இன்பங்களைப் பயக்கும் நூலாகையால் பெருமைக்குரியதன்று என்று கருதப்படுகிறது. கேரளத்தையன்றி அதர்வத்தைப் போற்றுகிற பிற நிலங்கள் உண்டா என்று தெரியவில்லை. கேரளம் மட்டும்தான் என்ற நிலையில் அதர்வம் தென்னாட்டுக்குள் அடைபட்டுவிடுகிறது. ஏன்?
ஒருவேளை இப்படி இருக்கலாம்: மாற்று மரபுகளில் இருந்து செல்வாக்கான வழிபாட்டுக்கூறுகளையும் இன்ன பிறவற்றையும் தமதாக்கிக் கொள்ளும் முயற்சியில், அவற்றை ஏற்கனவே தங்களிடமிருக்கும் மூவேதங்களில் சேர்த்தால் தம்முடைய மூலக் கருத்துக்களில் சிதைவு ஏற்பட்டுவிடக்கூடும் என்று அஞ்சி, மாற்று மரபுகளிடமிருந்து தாம் புதிதாகக் கடன்பெற்றவற்றை உள்ளிடுவதற்காக அதர்வம் என்றொரு வேதம் செய்யப்பட்டிருக்கலாம். பிறகு வழக்கம்போல 'இவையெல்லாம் எங்களுடைய மண்டைச் சுரப்பு; நீங்களெல்லாம் மண்டையில் மூளைக்குப் பதில் மண் உள்ளவர்களாக இருத்தலினால் பெருந்தன்மைபற்றி உங்களுக்குக் கைமாற்றுக் கடனாக வழங்கினோம்' என்று சொல்லத் தலைப்பட்டிருக்கலாம். நாமும் வழக்கம்போல 'ஆகா! புத்திசிகாமணி சொன்னால் சரிதான்' என்று புத்தியில்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம்! நான்கு வேத நூல்களில் ஒரு வேத நூல் மட்டும் செல்வாக்கில்லாமல் இருப்பதை ஊன்றிப் பார்த்தால் இப்படித்தான் ஊகிக்கத் தோன்றுகிறது.
அதர்வத்துக்கும் தந்திர நூல் மரபுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கவும் வாய்ப்புண்டு. தந்திர நூல்கள் வேதங்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டவையும் சவிக்கப்பட்டவையும் ஆகும். தந்திரங்களும் ஆகமங்களும் நெருங்கிய தொடர்பு கொள்கின்றன. பொதுவில் ஆகமம் என்பதும் தந்திரம் என்பதும் ஒன்றையே குறிப்பன என்று கொண்டாலும் அவற்றுக்கிடையே வேறுபாடு இருப்பதாகவே தோன்றுகிறது. மாற்று மரபு நூல்களில் ஆகமம் மேல்நிலையாகவும் தந்திரம் கீழ்நிலையாகவும் பொதுநிலையில் காட்டப்படுகின்றன. (அண்ணன், தந்திரத்தைத் தன்+திறம் என்று பொருள் கூட்டலாமா?) ஆகமங்களிலும் சரி, தந்திரங்களிலும் சரி, உலகமும் உலகியலும் புறந்தள்ளப்படவில்லை. தன்னையே களமாகக் கொண்டு அடையவேண்டுவனவற்றை அடைவது அவற்றின் சாரச் செய்தி. (நா.கணேசன் அவர்கள் சொன்னதன்பேரில்: பெளத்த தந்திரங்கள் என்று கேள்வியுற்றதுண்டேயொழிய பெளத்த ஆகமங்கள் என்று கேள்வியுற்றதில்லை. தந்திரம்-ஆகமம் இவற்றுக்கிடையிலான இடைவெளியை வரையறுப்பதில் ஏற்படும் குழப்பம் காரணமாக பெளத்த தந்திரத்தைப் பெளத்த ஆகமம் என்று யாரேனும் சொல்லியிருக்கலாம். மேலும் பெளத்தத்தில் தந்திரச் செல்வாக்கு பின்னாளையது. சிறுபான்மையது. குறிப்பாகத் திபெத்திப் பெளத்தத்தில் ஆளுமையுடையது. சமணத்தின்பேரில் அந்தச் சிறுபான்மைச் செல்வாக்கும் தந்திரங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சமண ஆகமம் என்று ஏதேனும் வழங்கப்படுமானால் அது விவிலியத்தை வேதாகமம் என்று சொல்வதுபோலத்தான். இராம. கி. அண்ணன் சொன்னது நிரம்பச் சரி!).
வடமொழியில் இருப்பவற்றையெல்லாம் குடைந்து குடைந்தாவது வெளிக்கொண்டுவந்துவிடுகிற இந்திய அறிவுலகம் ஆகமங்கள், தந்திரங்கள்பற்றிப் பாராமுகமாக இருப்பதேன்? தந்திரங்களாவது பெளத்த வழிகளில் நடந்த ஆய்வுகளின் காரணமாகவும், வேதங்களுக்கு மாக்சுமுல்லர் கிடைத்ததுபோல தந்திரங்களுக்கு ஆர்தர் ஆவலான் என்கிற சான் உட்ராவ் கிடைத்ததனாலும், ஓரளவு வெளிப்பட்டுவிட்டன. ஆகமங்கள் இன்னும் பெருவாரியாக வெளிப்படவில்லையே! அவற்றில் சொல்லப்பட்டிருப்பவையெல்லாம் வேதச் சார்புச் செய்திகள் என்றால் கொண்டுவந்துவிடவேண்டியதுதானே. என்ன சுணக்கம்? மறுதலை நூல்களெல்லாம் மறைக்கப்படுவதும் அழிக்கப்படுவதுமல்லவோ இந்திய அறிவுலக வரலாறு! ஆகமங்களைப்பற்றி இன்னும் ஊகச் செய்திகளையே பேசிக்கொண்டிருப்பது இதையே அல்லவா நிலைநாட்டுகிறது! கிடைத்திருக்கிற ஆகமங்களிலும் வேதமரபே விதந்தோதப்படுவதாக வெளிப்படவில்லையே!
பல தெய்வங்களை உடன்பட்டு, அவ்வவற்றுக்குரிய இடத்தை வரையறுத்து பன்மை பேசுகிற ஆகம-தந்திர நெறிகளுக்கும், 'ஏகம் சத்து' என்று ஒன்றையே முற்ற முடிந்த மெய்யாக்க விழைகிற வேத நெறிக்கும் கட்டிப்போட்டாலும் சொந்தம் உண்டாகுமா!
அன்பன்,
கரு. ஆறுமுகத்தமிழன்.

இராம.கி said...

அன்பிற்குரிய மயூரநாதன்,

கட்டடம் என்பது தொழிற்பெயர்; கட்டிடம் என்பது இடப்பெயர்; பொருளை மாறிப் பயன்படுத்தக் கூடாது. கட்டிடத்தின் மேல் கட்டடம் நிற்கிறது. அடம் என்பது அடுக்குதல் என்ற வினையில் கிளர்ந்த ஓர் ஈறு. கட்டுதல் என்பது சேர்த்தல்; கட்டி அடுக்குவது கட்டடம். குடில், குடிசை, மாளிகை, கோயில், அரண்மனை என எல்லாமே கட்டி அடுக்குவது தான்.

architecture என்பதற்கு கட்டடவியல் என்று பலரும் பயன்படுத்துகிறார்கள் தான்; இருந்தாலும் அதைக் காட்டிலும் நல்ல சொல் அமையாதா என்று நான் தேடிக் கொண்டிடிருக்கிறேன். மலையாளத்தில் இன்றும் கூட கோயில் கட்டுபவர்களில் மூத்தவனைப் பெருந்தச்சன் என்று சொல்லுவார்கள். (திலகன் நடித்த ஒரு படம் பெருந்தச்சன் என்று வந்ததாக நினைவு.) பெருந்தச்சன் என்ற சொல் Architect யைக் குறித்துக் கல்வெட்டுக்களிலும் வந்ததாகப் படித்திருக்கிறேன். tecture, technician, technique, technology என எல்லாமே தைப்பதை (பொருத்துவதை) ஒட்டி வந்த சொற்கள். தவிர கட்டடம் என்பது ஒரு காலத்தில் தச்சுத் தொழிலில் தான் தொடங்கியது. தச்சன் பலகைகளைத் தைய்ப்பவன். பின்னால் கற்களையும் தைத்தான் (பொருத்தினான்). அதே பொருத்தற் பொருளில் துணிகளைத் தைக்கிறவன் தயற்காரன். துல்>துய்>தய்>தை என்று அது விரியும். துல்>துன் என்ற திரிவில் துன்னகாரன் என்றும் தையல்காரரைக் குறித்து சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் வரும்.

நீங்கள் சொல்லும் ஸ்தபத்ய வேதம் என்பது ஸ்தபதிகளின் நூல் ஆகும். கட்டுமானப் பொருட்களை எந்த இடத்தில் எப்படிப் பொருத்துவது என்பதை விளக்கும் நூல். இன்றைக்கு ஸ்தபதி என்று புழங்கும் சொல் ஏதொன்றையும் நிறுவுவரைப் (ஸ்தாபிப்பவரைப்) பற்றி ஏற்பட்ட சொல். ஈழத்தில் ஸ்தாபனத்தைத் தாபனம் என்று புழங்குவார்கள். உண்மையில் அது தாவனம்>தாபனம் என்று ஆகும். இடவு/இடப்பு என்பது தமிழில் இடத்தைக் குறிக்கும் சொல். (இடுவது இடவு என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். நாம் இற்றைக் காலத்தில் இடம் என்பதை மட்டுமே புழங்குகிறோம்.) இடவு என்ற சொல் வடக்கே போகப் போகத் இதவு>தாவு என்று ஆகும். தாவின் இணைச்சொல்லாய்க் கிரேக்கத்தில் tope என்று ஆகும். isotope = ஓரிடப்பு = ஒரே அணுவெண் கொண்டு, அணுவெடையால் மாறுபடும் எளிமம் (element). கணக்கில் வரும் topology என்பதும் இந்த இடப்புப் பொருளின் நீட்சிதான். topology = இடப்பியல். ஸ்தாபித்தல் என்னும் போது பிற வினை வந்து விடுகிறது. இதற்குச் சமமான தமிழ்ச்சொல் இடுவித்தல். இடுத்தல் என்பது தன்வினை; இடுவித்தல் என்பது பிறவினை. இடுவிப்பு = ஸ்தாபிதம் = placement, installation. இடுவிப்பியல் = ஸ்தாபத்ய வேதம்.

இந்த இடுவிப்பியலுக்குள் வாஸ்து சாத்திரம் என்று சொல்லுவதும் ஒரு பகுதி. வாஸ்து என்பதும் வெளியையே குறிக்கிறது. இதனுடைய தமிழ்த் தொடர்பைச் சொன்னால் நீண்டுவிடும்; வேறு ஒருமுறை விவரிக்கிறேன்.

மயமதம் என்ற நூல் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட வடமொழி நூல். இதன் ஓலைச்சுவடி சேரலத்தில் தான் முதலில் கிட்டியது. இந்த நூல் சொல்லும் பொருள் தென்னிந்தியக் கோயில் மற்றும் கட்டுமானங்களைப் பற்றியதே. இந்த நூல் படித்தவர்கள் இதை வழிநூலாகத் தான் கொள்ளுகிறார்கள். இதன் முதல் நூல் எந்த மொழியில் இருந்தது என்று பலருக்கும் தெரியாது. தவிர ஸ்தபத்யத்தை அதர்வண வேதத்தோடு தொடர்பு படுத்திச் சொல்லியிருந்தீர்கள். அதர்வண வேதமும் கேரளத்து நம்பூதிகளிடம் இருந்துதான் முதலில் கிட்டியது. இந்தத் தொடர்பெல்லாம் வடக்கிருந்து வந்ததாகத் தெரியவில்லை. நாம் அறியாத பல செய்திகள் உள்ளன. ஆய்வு இன்னும் முறையாக நடத்தப் படவில்லை. எல்லாவற்றையும் வடமொழியிலேயே தொடங்காமல், மற்ற மொழி நூல்கள் (குறிப்பாகத் தமிழ்நூல்கள்) வடமொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டிருக்கலாம் என்று பார்த்தால் பலவும் விளங்கும்.

முடிவாக, இன்றைக்கும் தச்சுத் தொழில் தெரிந்தவர்கள், தங்களை விசுவகர்மா மரபினர் என்று சொல்லிக் கொள்ளுவார்கள். விசுவம் என்பது வெளி. விய என்பது (வியல்ந்து பரந்த என்ற ஆட்சியைக் கவனியுங்கள்) வெளியைக் (space) குறிக்கும் தமிழ்ச் சொல்லடி. வியவக் கருமங்களைச் செய்பவர் விசுவ கர்மாக்கள்.

நீங்கள் கேட்டதோடு இல்லாமல், எனக்குத் தெரிந்த தொடர்பான செய்திகளையும் நான் சொல்லியிருக்கிறேன். நான் கட்டடத் துறையில் இருப்பவன் அல்லன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

ஆசீவகம் பற்றி இதற்கு முன்னும் ஒருசிலர் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதைத் தனியாக ஒரு பதிவில் போட எண்ணம். அப்பொழுது பின்புலமான நூல்களைப் பற்றிச் சொல்லுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய ஆறுமுகம்,

உன்னுடைய பின்னூட்டைப் படித்தேன். உன் ஆழ்ந்த சிந்தனைக்கு என் பாராட்டுக்கள்.

வேத நெறிக்கும் ஆகம நெறிக்குமான குழப்பம் தமிழரில் பலருக்கும் இருக்கிறது. ஆகமங்களுக்குள் வேத நெறியை உள்நுழைத்துக் கலவையாய்க் கிடக்கும் நூல்களே நமக்குக் கிடைக்கின்றன. அவற்றிலும் தமிழில் கிடைப்பவை குறைவே. இருந்தாலும் ஆகமங்களை உலகத்தார் அறியுமாறு வெளிக் கொணருவது ஒரு முகமையான வேலை. ஏனென்றால், ஆகமங்கள் வெறுமே கோயில் கட்டுவதை மட்டுமே சொல்லவில்லை; அவை மந்திரங்களையும், வழிபாட்டு முறைகளையும், கோயிலொழுகு என்பதாய்ச் சடங்குகள் பற்றியும் பேசுகின்றன. தவிர, தெய்வப் படிமங்களைப் பற்றிய சிந்தனையும் ஆகமங்களிலே தான் உண்டு. அது வேத நெறியில் கிடையாது. ஆகம நெறியோடு நம்முடைய மெய்யியற் சிந்தனைகளையும் பொருத்திப் பார்க்க வேண்டும். உபநிடதங்களுக்கும் ஆகமவழி மெய்யியற் சிந்தனைகளுக்கும் உள்ள உறவையும் தெளிந்து அறிய வேண்டும். அதர்வண வேதம் சேரலத்தில் பிணைந்து கிடப்பதற்குக் காரணம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். ஆனால், நான் அதை அறிந்தவன் அல்லன்.

ஏரணம் என்ற சொல் பற்றிக் கேட்டிருந்தாய். தருக்கம், ஏரணம், அளவை (அல்லது அளகை) ஆகிய எல்லாமே ஒரு பொருள் சொற்கள் தான். இன்னும் ஏது சாற்றம் (Hethu Sasthram) என்ற ஒரு சொல் கூட இருக்கிறது. இவற்றை ஒரு பின்னூட்டில் சொல்லுவது சரி வராது; ஒரு தனிப்பதிவே போட வேண்டும். என்னுடைய நினைவில் வைத்துக் கொள்ளுகிறேன்.

தந்திரம் என்ற சொல்லின் சொற்பிறப்பியலைக் கீழே கொடுத்துள்ளேன். அதை மந்திரம், எந்திரம், தந்திரம் என்பதாய் ஒரு தொகுதியாய்ச் சேர்த்துப் பார்த்தால் இன்னும் விளங்கும். மூன்றிலுமே கடையில் வரும் ரகரம் வடமொழிப் பலுக்கால் உள்நுழைந்தது. அந்த ரகரம் விலக்கியே தமிழ் மூலம் காண வேண்டும்.

முதலில் மந்திரத்தைப் பார்ப்போம். இதை "மன் + திரம்" என்றெல்லாம் ஒரு சிலர் பிரித்துப் பார்ப்பார்கள். இப்படிச் சிறிய சொற்களைக் கூட பகுதி விகுதியென உடைத்து குன்னங் குறுகிய சொற்களாய் பார்ப்பதை நான் ஏற்றுக் கொள்பவன் அல்லன். இது வடமொழியில் உள்ள பாணினிய வழிமுறை; திரு. சாத்தூர் சேகரன் இப்படித்தான் தமிழிலும் உடைத்துப் பார்ப்பார். நான் "இந்தச் சொற்களைப் புரிந்து கொள்ள ஏதுவாய், நம்முடைய பேச்சு வழக்குகளில், ஏதேனும் மிச்ச சொச்சங்கள் இருக்கின்றனவா?" என்று பார்ப்பவன்; "உள்ளே இருக்கும் பெயரென்ன? அது சுட்டும் வினையென்ன?" என்று பார்ப்பவன்; கூடவே "பக்கவாட்டு வினைச்செயல்கள் இருக்கின்றனவா?" என்றும் பார்ப்பவன்.

இந்த மந்திரம் என்ற சொல்லை எப்படி நம் பேச்சு வழக்கில் புரிந்து கொள்ளுகிறோம்? மந்திரம் என்பது, எல்லோரும் அறிய வாய் திறந்து உரத்த குரலில் சொல்லுவதல்ல. மந்திரம் என்பது இன்னொருவர் செவிக்கு அருகே போய், மெல்லிய குரலில் சொல்லுவது; அல்லது நமக்கு நாமே ஓசை எழா வண்ணம் ஒரு குறுகிய வாசகத்தைத் திரும்பத் திரும்ப வாய்க்குள் சொல்லிக் கொள்ளுவது. மந்திரம் சொல்லும் போது நம் குரல் கொஞ்சம் முனகுவது போலவே தோற்றும். "என்ன ஆச்சு, வாய்க்குள்ளேயே அவன் முனுமுனுக்கிறானே? மந்திரம் சொல்கிறானா?" என்று கேட்பார்கள் அல்லவா? (முனுமுனுத்தலை ஒரு சிலர் முணுமுணுத்தல் என்றும் சொல்லுவது உண்டு.) முனுகுவது முனகல் என்று தொழிற் பெயராகும். முனுகுதலின் வேர் முல் என்பதே. முல் என்பது மொல்>மொள்>மொழு என்றெல்லாம் திரியும். "அதென்ன வாய்க்குள்ளே மொள்ளுகிறான்?"என்ற பேச்சையும் நினைவு கொள்ளலாம். மொள்ளுதலில் இருந்து பிறந்த இன்னொரு வினை மொழிதல் = பேசுதல். மொழி என்ற பெயர்ச்சொல்லும் இப்படிக் கிளைத்தது தான்.

முனுகுதல்>முனகுதல் என்பது வாய்க்குள்ளே சொல்லுதல் என்றே பொருள் கொள்ளும். மந்திரம் என்பது முனுகப் படுவது. முனுத்தது முனுந்தம்; இந்த முனுந்தம் பின்னால் முனுந்தம்> மொனுந்தம்> *மொந்ந்தம்>*மொந்த்ரம்> மந்த்ரம் என்று இயற்கையாய் இருபிறப்பித் திரிவாய் எழ வாய்ப்பு உண்டு; மேலே சொன்னது போல், ரகரம் உள்நுழைவது வடமொழிக்குப் பெரும்பாலும், ஓரோவழி தமிழுக்கும் கூட, உள்ள பழக்கம் தான். மந்திரத்தை இன்றைக்கு மீட்டெடுக்க வேண்டுமானால் அதை முனுந்தம் என்று தான் சொல்லமுடியும்.

அடுத்தது எந்திரம். எற்றுதல், எத்துதல், எந்துதல் எல்லாம் இயக்கத்தைக் குறிக்கும் சொற்கள். இன்னொரு மாகனை(machine)யை, தனக்குள் எழும் உந்து விசையால், எந்தக் கூடியது (இயக்கக் கூடியது) எந்தம். இது வடமொழி ஊடுருவலில் எந்தம்>எந்த்ரம் என்று ஆகும். எந்திரம் = engine. மந்திரம் ஓதி அருச்சித்துப் பூசனை செய்யப்பட்ட தகடுகளையும் கூட சில சித்தர்கள் எந்திரம் என்று தான் சொல்லுவார்கள். அது வாழ்க்கையை எந்துவதாம். :-) [மாகனைப் பொறியியலுக்கு (mechanical engineering) எந்திரப் பொறியியல் என்று சொல்லுவது தமிழில் ஓர் ஐம்பதாண்டு காலப் பழக்கம். நானும் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஆழ்ந்து ஓர்ந்தால், எந்திரத்தை machnine க்கு இணையாய்த் தமிழில் சொல்லுவது சரியென்று படவில்லை. eththiram is a driver; machine is driven.]

தந்திரம் என்ற சொல்லையும் தன் + திரம் என்று ஒரு சிலர் பிரிப்பார்கள். நான் அப்படிச் சொல்பவன் அல்லன். இந்தச் சொல் மூன்று விதமாகப் பொருள் கொள்ளும். "ரொம்பத் தந்திரமா வெளிலே வந்துட்டான் பார்த்தியா?" - இங்கே தந்திரம் என்பது திறமையைக் குறிக்கிறது. "இத் தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு" என்று திருவாசகம் 3.:131ல் மணிவாசகர் சொல்கிறார் அல்லவா? அதில் தந்திரம் என்பது நூலைக் குறிக்கிறது. [தந்திரம் பற்றி முதலில் பேசிய தமிழ்ச் சமயக் குரவர் மாணிக்கவாசகரே. நான் அவர் மூன்றாம் நூற்றாண்டுக் காலத்தவர், தேவார மூவருக்கு முந்தியவர், என்று நம்புபவன்] "தந்திரத்தைச் சுண்டினால் அது விண் என்று தெறிக்கும்" என்னும் போது, அது தந்தி அல்லது கம்பியைக் குறிக்கிறது.

முதலில் திறமை என்ற பொருளைப் பார்ப்போம். பொதுவாக, சேர்ந்து, திரண்டு கிடக்கும் குச்சிகள், நார்கள், இழைகள், திரிகள் எனப் பல்வகைப் பொருள்கள் அந்தத் திரட்சியால் வலிமை பெறும். திரட்சி என்பது வலிமையின் முதல் நிலை. அப்புறம் திரளத் திரளத் திருகிப் போகும். இனித் திருகத் திருக வலிமை கூடும். திருகியது (திருக்கு = torque; திருணை = turn) என்பது நம் மொழி. மாறாகத் திருகியது என்ற சொல் *திருங்கியது என்று பலுக்கில் ஊடே ஒரு மெல்லோசை பெற்றால், இந்தையிரோப்பிய மொழிகளில் உள்ள இணைச்சொற்களை நமக்குக் குறிப்பால் உணர்த்தும். காட்டாக ஆங்கிலத்தில் உள்ள Strength/strong என்பதை எண்ணிப் பார்க்கலாம். (S என்ற முன்னொட்டு இந்த மொழிகளில் பல இடங்களில் ஒலிப்புக் காரணம் பற்றி வந்து கொண்டே இருக்கும். தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் சொல்லொப்புமை பார்க்கும் போது இந்த ஸகரத்தை ஒதுக்க வேண்டும்.)

அதனால் தான் திருக்கு/திரம் என்ற சொல்லே வலிமை, உறுதி ஆகியவற்றைக் குறிக்கிறது. திரம் என்ற சொல்லே அழுத்தம் பெற்றுத் திறம் என்று ஆகும். திரத்தின் நீட்சியைத் *திரத்தம் என்று சொல்லலாம். திரத்தன் என்பவன் தன் வலியால் மற்றாரை வெல்லும் ஒரு வலக்காரன். அவன் திறமை வலக்காரம் என்றும் சொல்லப் படும். வலியுள்ளவன் உத்தியும் அவன் திறமையால் நிகழ்வதே. திரத்தன் = திரம் உள்ளவன், வலி உள்ளவன்; இந்தக் கருத்தின் தொடர்ச்சியில் திரத்தகம்/திரத்தகை என்பது வலியோடு செய்யப்படும் பெரிய உத்தி. ஆங்கிலத்தில் இது strategem எனப்படும்.

திரத்தம் என்ற சொல் மெல்லோசையில் திரந்தம் என்று ஆகும். இனித் திரந்தம் >திர்ந்தம் >தர்ந்தம் >தந்தம் >தந்த்ரம் என்று இருபிறப்பிச் சொல்லாய்த் திரிவது நடக்கக் கூடியது தான். இப்படி நான் சொல்லுவதற்குக் காரணம் அகரமுதலிகளில் இருக்கும் தந்தனம் என்ற இன்னொரு சொல்லைப் பார்த்தபின் தான். தந்திரம், தந்தனம் என்ற இருசொற்களுக்கும் ஒரே பொருள்; ஈறுகள் மட்டும் வெவ்வேறு. இந்த இரு சொற்களுக்கும் வலக்காரம், strategem, trick, device, scheme என்ற பொருள்கள் சொல்லப் படுகின்றன.அப்படியானால் இரண்டு சொற்களின் அடிப்படைச் சொல்லடியான தந்து என்பது தான் கூறவந்த பொருளைச் சரியாகக் குறிக்க வேண்டும். தந்தம் என்பதன் முன்னிலையாகத் தரந்தம் என்பதை எப்படி ஊகிக்கிறோம்? தமிழில் பெரும்பாலும் ஏற்படும் வழக்கத்தால் இப்படி எண்ணுகிறோம்; இரண்டாம் எழுத்தாய் வரும் ரகரம் நிற்பதும் மறைவதும் தமிழில் மிகுதி. காட்டாகத் துருந்திக் கொண்டு நிற்கும் வயிறு துருந்தி>துந்தி>தொந்தி என்று ஆகும். துருந்திக் கிடக்கும் யானையின் கை துருந்திக்கை>துந்திக்கை>துதிக்கை. அதனால் தரந்தம் என்பது தர்ந்தம்>தந்தமாய்த் திரிவது ஒன்றும் வியப்பில்லை.

அடுத்தது நூல் என்னும் பொருள். "பனுவலும் தந்துவும் நூல் எனப் படுமே" என்று திவாகரம் சொல்லும். பஞ்சை பன்னும் போது கிடைப்பது நூல். பன்னுதல் என்பது திரித் திரியாக நூலாக்குவதைக் குறிக்கும். (இணையான ஆங்கிலச் சொல் வேண்டுமா? ஓர்ந்து பார்க்க: spinning. இந்தக் காலத்தில் நூற்றல் என்பதோடு தமிழில் அமைந்து விடுகிறோம். நுவலப் படுவது நூல். நுவலுதல் என்பது பஞ்சில் இருந்து இழுப்பதற்கும் பயன்படும் வினைச் சொல். வாயிருந்து சொல்லப் படுவதற்கும் இந்தச் சொல் அமையும். பன்னுதல்/பன்னல் என்னும் பழ வினைச்சொல் புழக்கத்தில் இல்லாது போய்விட்டது. மேலை மொழிகளில் ஸகரம் சேர்த்து இன்னும் இருக்கிறது.)

மேலே திரட்சியைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? திரள்ந்து (திரள்ந்து என்பதுதான் புணர்ச்சிக் காரணத்தால் திரண்டு என்று ஆகும்) கிடக்கும் பஞ்சில் இருந்து திருகிப் பெறுவது திரி. இதுவும் நூல் என்ற பொருளே கொள்ளும். இதற்கு ஆங்கில இணை thread. திரள்ந்து வருவது திரந்து என்றும் ஆகும். இனி திரந்து >திர்ந்து>தர்ந்து >தந்து என்று முடிந்து நூலைக் குறித்து அமையும். தந்து என்ற பொருளை வைத்து வேலை செய்பவன் தந்துவாயி = நெய்வோன் என்று சொல்லப் படுவான். தந்தின் பெரியதாய் தந்தம்>தந்த்ரம் என்று வடமொழியில் அமையும். தந்தன் என்பவனை நூலுணர்வினன் என்று அகரமுதலிகள் குறிக்கும். கோயிலில் பூசை செய்வோனைத் தந்திரி என்றுதான் நாஞ்சில் நாட்டிலும் தென் கேரளத்திலும் சொல்லுவார்கள். நூல் வழிக் கோயில் பூசை மரபுகள் தெரிந்தவன் தந்திரி. "தந்திர வினைஞரை"ப் பற்றியும் சிலம்பு (26:41) குறிக்கும்.

தந்திரம், பனுவல் என்பதோடு அமையாமல் இன்னும் சில சொற்களை ஒரு பொருட்சொற்களாகப் பின்வரும் வகையிற் திவாகரம் குறிக்கும்.

அதிகாரம், ஆரிடம், பனுவல், ஆகமம்
பிடகம், தந்திரம் நூலின் பெயரே.

ஆகமம் பற்றி மேலே பதிவிலேயே சொல்லியாயிற்று. ஆகிவந்தது ஆகமம். மரபு என்பதும் கூட அதைத்தான் குறிக்கிறது. ஆகி வந்ததைப் பனுவியது பனுவல், ஆகிவந்ததைத் திரள்ந்தது தந்திரம். இதே போல பருத்திருக்கும் புடவில் (பஞ்சு போன்றது) இருந்து பெற்றது புடகம்>பிடகம். இதுவும் ஒரு நூலுக்கான பெயர் தான். அதிகாரம், ஆரிடம் என்ற சொற்களை நான் இங்கு பேசவில்லை.

தந்திரம் என்ற சொல் இறைவி வழிபாட்டை ஒட்டி எப்படிப் பொருள் மாறியது என்று என்னால் சொல்ல முடியவில்லை.

மூன்றாவது பொருள் யாழ்நரம்பு. இழுத்துக் கட்டப்பட்ட நரல் (நரல் என்பது ஒருவகை நிலத்திணை நார்; அப்புறம் விலங்கு நரம்பு; பின்னாட்களில் மாழைக் கம்பி) சுண்டி இழுத்தால் தொம்/தம் என்று ஓசையெழுப்பும். தம்+தி = தந்தி. பின் வடமொழி ரகரம் நுழைந்து தந்திரி ஆகும்.

இன்னும் தந்தம் = யானை மருப்பு, பல் போன்ற பொருள்களின் சொற்பிறப்பை நான் இங்கு தொடவில்லை. (அது துருத்துவது/துருந்துவதில் இருந்து கிளைத்த சொல்.)

இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன். இதுவே ஒரு தனிப் பதிவுக்குள்ளதாய் ஆகிப் போனது.

அன்புடன்,
இராம.கி.

இ. மயூரநாதன் said...

கட்டிடம், கட்டடம் என்பது பற்றிய குழப்பம் நீண்டகாலமாகவே எனக்கு இருந்து வருகிறது. இணையத்திலுள்ள மதராஸ் பல்கலைக்கழகத்தின் தமிழ் lexicon இலும் இவ்விரு சொற்களுக்குமிடையே எவ்வித வேறுபாடுமின்றியே பொருள் கொடுத்திருக்கிறார்கள். இச் சொற்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி நீங்கள் தந்த விளக்கத்துக்கு நன்றி.

Architecture என்பதற்குக் கட்டடவியல் என்பதிலும் கட்டடக்கலை என்பதே கூடுதலாகப் புழக்கத்திலுள்ளது. தற்காலத்தில் Architecture கூடுதலாகத் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருப்பதால் "கலை" என்ற ஒட்டு பொருத்தமற்றது என்று சிலர் கூறுகிறார்கள். ஆழமாகப் பார்க்கும்போது தற்காலத்திலும் Architecture இன் உயிர் கலை என்றுதான் கூறவேண்டும். Architecture இன் வரலாற்றைப் பார்த்தால் இது புரியும். ஆரம்பத்தில் சிற்பிகளே (அல்லது ஸ்தபதிகள்) கட்டிடங்களைக் கட்டினார்கள். ஆங்கிலத்தில் இவர்கள் Master Builders எனப்பட்டார்கள். இவர்கள் கட்டடம் அமைப்பு ரீதியாக நிலைத்து நிற்பதை உறுதிப்படுத்தியதோடு, அழகியல், கட்டுமான நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன வேலைகளையும் தாங்களே கவனித்துக்கொண்டார்கள். கட்டு வேலைகளிலும் நேரடியாகக் கலந்து கொண்டார்கள். காலப்போக்கில், கட்டடங்கள் கூடுதலான சிக்கல் தன்மை கொண்டனவாகவும், அதிக அளவு தொழில்நுட்ப உள்ளீடுகள் தேவைப்படுவனவாகவும் வளர்ந்து வந்தபோது, சிற்பிகளுடைய பணிகள் பிரிவடைந்து புதிய துறைகள் உருவாயின. ஆரம்பகாலச் சிற்பிகளுடைய பணியை இரண்டு வகையாகப் பிரித்துப்பார்க்கலாம். ஒன்று கலைத்துவம் தொடர்பான பண்புசார்பானது (Qualitative). மற்றது கணியம் சார்பானது (Quantitative). புதிய துறைகள் உருவாகும் பெரும்பான்மையான சமயங்களில், கலைத்துவ அம்சங்களை அப்படியே இருக்க விட்டுக் கணியம் சார்ந்த அம்சங்களே புதிய துறைகளானதை அவதானிக்க முடியும். இன்றும்கூட Architecture இன் உயிர்நாடியாக உள்ளது கலைத்துவமே. ஒரு சாதாரண building என்பதற்கும் Architecture என்பதற்கும் உள்ள வேறுபாடு இந்தக் கலைத்துவம்தான். Architecture இன் சிறப்பியல்பும் அதுதான். அதனால் இத்துறையைக் குறிக்கும் சொல்லெதுவும் இந்த இயல்பை வெளிக்காட்டுவதாக இருத்தல் அவசியம்.

நிற்க, கட்டடவியல் என்ற சொல் கட்டடம் சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளையும் குறித்து நிற்கிறது. அமைப்புப் பொறியியல், கட்டடச் சேவைகள் பொறியியல், கணிய அளவையியல் போன்ற பல துறைகள் இதனுள் அடங்கும். எனவே Architecture ஐக் குறிக்க இச் சொல் பொருத்தமானதாக எனக்குப் படவில்லை.

கட்டடக்கலைத் துறையில் புழக்கத்திலுள்ள கருத்துருக்கள் பலவற்றை விளக்குவதற்குச் சரியான தமிழ்ச் சொற்களைக் கண்டறிய வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, space, form, shape, place என்பவை கட்டடக்கலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துருக்கள். அவற்றை, வெளி, வடிவம், இடம் போன்ற சொற்களைப் பயன்படுத்தி விளங்கவைக்க முடியாது.

Anonymous said...

«ñ½ý,
Å¢Çì¸ò¾¢üÌ ¿ýÈ¢. þÅü¨Èì ¸Õò¾¢ø ¦¸¡û§Åý.
¬ÚÓ¸ò¾Á¢Æý