Thursday, February 02, 2006

சொலவடையின் பொருளாழம்

அன்றொருகால் யப்பானில் ஆவிநிறை நீரூற்றில்
நின்றிருத்தல் நல்லதென நீளுரைத்தார்; - சென்றிருந்தேன்;
ஊர் அரிமா ஆன்சென்; அதில் ஊர்க்குளியற் சத்திரத்தில்
நேரியதைச் சொல்லுகிறேன் நின்று.

ஊரோ புதிதெனக்கு; உள்ளரங்கில் நீரூற்று;
வாரோர் பலரும் பணங்கட்டிச் - சாரையெனச்
செல்லுவதைப் பார்த்ததனால் சென்றே குளிப்பமென
மெல்லவே உட்புகுந்தேன் மேல்.

ஊர்க்குளியற் தொட்டி; ஒருபக்கம் ஆண்மக்கள்;
நேர்தடுப்புக் கப்பாலே நேரிழையர்; - சேர்குளிமுன்
மெய்கழுவ நீர்த்தாரை; மேவி அதன்கீழே
பையவே குத்திட்டேன் பார்த்து.

குத்திட்ட என்னரையில் கோவணமாய் ஒருடுப்பு;
அத்தரையில் ஆங்கமர்ந்த யப்பானன்; - வித்தகன்போல்
"நாங்களெலாம் பைத்தியமோ? நன்னகையோ? நீரூற்றுள்
ஆங்கெல்லாம் பாரெ"னச்சொன் னான்

பக்கென் றுணர்வோடு பைந்தமிழின் சொலவடைக்குச்
சிக்கென்ற உள்ளருத்தம் சேர்ந்துணர்ந்தேன்; - நக்கலிலை;
அம்மணாண்டிக் கூட்டம்! அதில்கோட்டி கோவணன்தான்!
சும்மாவா சொல்லிவைத்தார், சூழ்ந்து?

சொலவடையின் ஆழமோ சூடாகத் தைக்கக்
களைந்தேன் அரையுடுப்புக் கட்டை; - தொலைவதுபோல்
என்னளவில் நாணம் எழுந்தோடிப் போயிற்று;
அன்னார் நகையுற்றார் ஆங்கு.

சொலவடைக்கு என்னபொருள்? சொல்லும் அடுக்கே!
பழமொழிக்கு என்னதுவோ பாரில்? - சொலச்சொலவே
பட்டறிவைக் கூட்டி பழந்தமிழர் ஆக்கிவைத்தார்
கொட்டிக் குமுகமெலாம் கோர்த்து.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

Anonymous said...

«ýÒûÇ ¸¢ðÎ «ñ½ý,
Å¡ð¼Á¡¸ Åó¾¢Õ츢ÈÐ ¦ÅñÀ¡. ¿£í¸û °§Ã¡Î ´ò¾¢¨ºó¾ ¸¨¾ Å£ðÊø ¦¾Ã¢ÔÁ¡?
¦ÅñÀ¡ô À¢üº¢ þø¨Ä ±ýÈ¡Öõ ÓÂýÚ À¡÷ô§À¡§Á ±ýÚ ¬¨ºÀüÈ¢ ´ýÚ ¦ºö§¾ý. «Ê¢ü ¸¡ñ¸. ¾¨Ç ¾ð¼ø¸û þÕì¸Ä¡õ. ¿¢ÃÅ¢ì ¦¸¡û¸.

±ø§Ä¡÷ìÌõ ¯üȦ¾¡ýÚ ¿ó¾ÁìÌõ ¯üÈ¢¼§Å
Âø§Ä¡ ¿¢¨Éò¾¡÷¸û Óý§É¡÷¸û - ¸øÄ¡¾
§À÷¸ÙìÌõ ¸üÈÅ÷ìÌõ ¿ñ½¢¨Ä¡õ ¦º¡ø¦Á¡Æ¢¸û
°÷§À÷ À¡÷ò¾¡ ÅÕõ?

«ýÀý,
¬ÚÓ¸ò¾Á¢Æý

இராம.கி said...

அன்பிற்குரிய ஆறுமுகம்,

அந்தச் செய்தி மனையாளுக்குத் தெரியும்.

தளைதட்டி, ஓசை நிரவிய பாவைப் பார்த்துக் கொள்க:

எல்லோர்க்கும் உற்றுமெனில் எந்தமக்கும் ஏலுவதென்
றல்லோ நினைத்தார்கள் அந்நாளோர் - கல்லாத
பேர்களுக்கும் கற்றவர்க்கும் பேராழச் சொல்மொழிகள்
ஊர்பேர்கள் பார்த்தா உறும்?

வெண்பா எழுதுதல் ஒரு நல்ல பயிற்சி. அதைப் பழகிக் கொள்ளுவது படப்பிடிப்பைப் போல; கூர்ந்த பார்வையில், சட்டென்று நம்மைக் கொள்ளை கொள்ளும்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

«ýÒûÇ ¸¢ðÎ «ñ½ý,
¦ÅñÀ¡ ÓÂüº¢¨Â Å¢¼¡Áø ¦¾¡¼Ã ±ñ½¢ þýÛõ þÃñÎ ÓÂýÚ À¡÷ò§¾ý. «ÅüÚìÌî º£÷, ¾¨ÇÔõ À¡÷ò§¾ý. «¨Å ¸£§Æ. ºÃ¢À¡÷òÐî ¦º¡øÖí¸û.
¸Õ.¬ÚÓ¸ò¾Á¢Æý

º¢í¸ò¾Á¢Æ÷ ¦ºöÅÐ
ºí¸¾ò¨¾ ¿ó¾¨Ä§Áø ÅøÄó¾ Á¡öîÍÁò¾¢ô
Àí¸¡Ç¢ §À¡ø¿ÊìÌõ À¡º¡í¸÷-Àí¸ÓÈò
¾í¸ò ¾Á¢ú¦Á¡Æ¢Â¢ý ¦¾¡øÒ¸¨Æî º£÷àì¸î
º¢í¸ò ¾Á¢Æ¡¿£ º£Ú.
¦Åí¸ò¾Á¢Æ÷ ¦ºöÅÐ
Å£½¡¸ô §À¡Å¾ü§¸¡ Å£Ú¾Á¢úì ¸¢ò¾¨É¿¡û
⽡¸ô âðʨÅò¾ §À¦ÈøÄ¡õ-ཡ¸ò
¾¡í¸Åø§Ä¡ ¿£¦ÂýÈ¡ø ¸ûÅ÷ ¸ÇÅ¡í¸ò
àí¸¿øÄý ¿¡¦ÉýÈ¡ö. à!