Tuesday, October 07, 2003

ஆணுறை அணிதல் - 1

எங்கு பார்த்தாலும் எங்களூரில் இப்பொழுது புள்ளிராசாவைப் பற்றித் தான் பேச்சு. "புள்ளிராசா குடிபோதையில் ஆணுறை அணிய மறந்து போவாரா?" என்ற புதுக் கேள்வி சென்ற ஒரு வாரத்தில் ஒரு சுற்றாக வந்திருக்கிறது. இன்னும் என்னென்ன கேள்விகள் வருமோ என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் இருக்கிறது. "விழிப்புணர்வு கொண்டு வருவதற்காக இது போல விளிம்பிற்கு அருகில் உள்ள விளம்பரங்களைப் பொது இடத்திற் செய்யலாமா? இதில் நல்லது விளையுமா?" என்ற உரையாடலுக்குள் நான் போகவில்லை.

என் கவனிப்பு இந்தச் சொற்றொடரில் தமிழ் புழங்கும் முறையைப் பற்றியது. இங்கே வரும் 'அணிய' என்ற சொல் எப்படி எல்லாம் நெகிழ்ந்து போயிருக்கிறது, பார்த்தீர்களா? மலர் அணிவதில் தொடங்கி, நகை அணிவதாக நீண்டு, பின் ஆடை அணிவதற்கும் மாறி இப்பொழுது எது எதோ அணிவதாக இறங்கிப் போயிருக்கிறது பாருங்கள். மொழி என்பது இப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கிறது. அதனால் தான் மொழியில் நீக்குப் போக்கு இருக்க வேண்டும்; முழு ஏரணம் இருக்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள். புதிய பயன்பாட்டிற்கு மிக இயல்பாக வளைந்து கொடுக்க வேண்டும். தமிழ் வளைந்து கொடுக்கிறது என்பதால் தான் எதிர்காலம் நம்பிக்கை கொடுக்கிறது. புதுக் கருத்துக்களைத் தமிழில் சொல்ல முடியும் என்ற உறுதி வலுக்கிறது.

இடக்கர் அடக்கல் என்பது நம் மொழியில் உள்ள பெரும் விந்தைதான். இங்கே மாட்டிக் கொண்டார் என்று சொன்னால் ஏதோ போல் இருக்கிறது. போட்டுக் கொண்டார் என்றாலோ இன்னும் சப்பென்று இருக்கிறது. உடுத்திக் கொண்டார் என்று சொல்ல முடியாது; கடைசியில் அணிந்து கொண்டார் என்றால் ஒரு மரியாதை வந்து விடுகிறது, இல்லையா? இப்படி சில சொற்களின் அடிப்பொருள் உயர்வதும் தாழ்வதும் மொழியின் புழக்கத்தில் நிகழ்வது தான். கர்ப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? - முன்னுள்ளே பொருளே வேறு. இன்றைக்கு ஆண்டாள் போல் எழுத முடியுமோ?

இனி அணிதல் என்ற வினைக்குத் திருப்பியும் வருவோம். இங்கே பூ,மலர் அணிதலும், நகை அணிதலும், ஆணுறை அணிதலும் ஒன்றா? இது என்ன அலங்காரமா? இல்லையே? அப்படி என்றால் அணிதல் என்பதின் இன்றையப் பொருள் என்ன? இந்தப் பொருள் விரிவு பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? நண்பர்களே! ஓர்ந்து பாருங்களேன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¬Ï¨È «½¢¾ø - 1

±íÌ À¡÷ò¾¡Öõ ±í¸éâø þô¦À¡ØÐ ÒûǢạ¨Åô ÀüÈ¢ò ¾¡ý §ÀîÍ. "ÒûǢạ ÌʧÀ¡¨¾Â¢ø ¬Ï¨È «½¢Â ÁÈóÐ §À¡Å¡Ã¡?" ±ýÈ ÒÐì §¸ûÅ¢ ¦ºýÈ ´Õ Å¡Ãò¾¢ø ´Õ ÍüÈ¡¸ Åó¾¢Õ츢ÈÐ. þýÛõ ±ý¦ÉýÉ §¸ûÅ¢¸û ÅÕ§Á¡ ±ýÈ ±¾¢÷À¡÷ôÒõ ÀÄâ¼õ þÕ츢ÈÐ. "ŢƢôÒ½÷× ¦¸¡ñÎ ÅÕžü¸¡¸ þÐ §À¡Ä ŢǢõÀ¢üÌ «Õ¸¢ø ¯ûÇ Å¢ÇõÀÃí¸¨Çô ¦À¡Ð þ¼ò¾¢ü ¦ºöÂÄ¡Á¡? þ¾¢ø ¿øÄРިÇÔÁ¡?" ±ýÈ ¯¨Ã¡¼ÖìÌû ¿¡ý §À¡¸Å¢ø¨Ä.

±ý ¸ÅÉ¢ôÒ þó¾î ¦º¡ü¦È¡¼Ã¢ø ¾Á¢ú ÒÆíÌõ ӨȨÂô ÀüÈ¢ÂÐ. þí§¸ ÅÕõ '«½¢Â' ±ýÈ ¦º¡ø ±ôÀÊ ±øÄ¡õ ¦¿¸¢úóÐ §À¡Â¢Õ츢ÈÐ, À¡÷ò¾£÷¸Ç¡? ÁÄ÷ «½¢Å¾¢ø ¦¾¡¼í¸¢, ¿¨¸ «½¢Å¾¡¸ ¿£ñÎ, À¢ý ¬¨¼ «½¢Å¾üÌõ Á¡È¢ þô¦À¡ØÐ ±Ð ±§¾¡ «½¢Å¾¡¸ þÈí¸¢ô §À¡Â¢Õ츢ÈÐ À¡Õí¸û. ¦Á¡Æ¢ ±ýÀÐ þôÀÊ ±øÄ¡ÅüÈ¢üÌõ ŨÇóÐ ¦¸¡Î츢ÈÐ. «¾É¡ø ¾¡ý ¦Á¡Æ¢Â¢ø ¿£ìÌô §À¡ìÌ þÕì¸ §ÅñÎõ; ÓØ ²Ã½õ þÕì¸ì ܼ¡Ð ±ýÚ ¦º¡øÖ¸¢È¡÷¸û. Ò¾¢Â ÀÂýÀ¡ðÊüÌ Á¢¸ þÂøÀ¡¸ ŨÇóÐ ¦¸¡Îì¸ §ÅñÎõ. ¾Á¢ú ŨÇóÐ ¦¸¡Î츢ÈÐ ±ýÀ¾¡ø ¾¡ý ±¾¢÷¸¡Äõ ¿õÀ¢ì¨¸ ¦¸¡Î츢ÈÐ. ÒÐì ¸ÕòÐ츨Çò ¾Á¢Æ¢ø ¦º¡øÄ ÓÊÔõ ±ýÈ ¯Ú¾¢ ÅÖ츢ÈÐ.

þ¼ì¸÷ «¼ì¸ø ±ýÀÐ ¿õ ¦Á¡Æ¢Â¢ø ¯ûÇ ¦ÀÕõ Ţ󨾾¡ý. þí§¸ Á¡ðÊì ¦¸¡ñ¼¡÷ ±ýÚ ¦º¡ýÉ¡ø ²§¾¡ §À¡ø þÕ츢ÈÐ. §À¡ðÎì ¦¸¡ñ¼¡÷ ±ýÈ¡§Ä¡ þýÛõ ºô¦ÀýÚ þÕ츢ÈÐ. ¯Îò¾¢ì ¦¸¡ñ¼¡÷ ±ýÚ ¦º¡øÄ ÓÊ¡Ð; ¸¨¼º¢Â¢ø «½¢óÐ ¦¸¡ñ¼¡÷ ±ýÈ¡ø ´Õ Á⡨¾ ÅóРŢθ¢ÈÐ, þø¨Ä¡? þôÀÊ º¢Ä ¦º¡ü¸Ç¢ý «Êô¦À¡Õû ¯Â÷ÅÐõ ¾¡úÅÐõ ¦Á¡Æ¢Â¢ý ÒÆì¸ò¾¢ø ¿¢¸úÅÐ ¾¡ý. ¸÷ôâÃõ ¿¡Ú§Á¡? ¸ÁÄôâ ¿¡Ú§Á¡? - ÓýÛû§Ç ¦À¡Õ§Ç §ÅÚ. þý¨ÈìÌ ¬ñ¼¡û §À¡ø ±Ø¾ ÓÊÔ§Á¡?

þÉ¢ «½¢¾ø ±ýÈ Å¢¨ÉìÌò ¾¢ÕôÀ¢Ôõ Åէšõ. þí§¸ â,ÁÄ÷ «½¢¾Öõ, ¿¨¸ «½¢¾Öõ, ¬Ï¨È «½¢¾Öõ ´ýÈ¡? þÐ ±ýÉ «Äí¸¡ÃÁ¡? þø¨Ä§Â? «ôÀÊ ±ýÈ¡ø «½¢¾ø ±ýÀ¾¢ý þý¨ÈÂô ¦À¡Õû ±ýÉ? þó¾ô ¦À¡Õû Å¢Ã¢× ÀüÈ¢ ±ñ½¢ô À¡÷ò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¿ñÀ÷¸§Ç! µ÷óÐ À¡Õí¸§Çý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: