Thursday, October 16, 2003

ஆணுறை அணிதல் - 2

ஆணுறை அணிதல் என்ற சொல்லாட்சி ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்ற உரையாட்டைத் தொடங்கி ஒரு விளம்பரத்தை குறிப்பிட்டிருந்தேன். அந்த விளம்பரம் தேவையா என்ற கேள்விக்குள் போகாது, சொற்களின் நெகிழ்ச்சித் தன்மை பற்றிய கேள்வியையே இங்கு எழுப்பியிருந்தேன். விளம்பரங்கள், அவற்றில் உள்ள மொழிபெயர்ப்புக் குழப்பங்கள் பற்றிய செய்திகளைச் சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். அந்தச் செய்திகளை நான் மறுக்கக் கூடியவன் அல்லன்.

இருந்தாலும் நான் சொல்ல வந்தது வேறு ஒன்றைப் பற்றியது. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், புள் என்னும் வேரில் இருந்து போடுதலும், முள் என்ற வேரில் இருந்து மாட்டுதலும், அள் என்ற வேரில் இருந்து அணிதலும் பிறந்திருக்க வேண்டும்.

முதலில் போடுதலைப் பற்றிப் பார்ப்போம். புள்>(பூள்)>பூண்>பூட்டு = பொருத்து; பொருத்துதல், எறிதல், இடுதல், தரித்தல், ஈனுதல், இணைத்தல், தொடுத்தல், செருகுதல், செலுத்துதல், உட்கொள்ளுதல்; பூட்டுதல்>போட்டுதல்>போடுதல்; இன்னொரு விதமாகப் பார்த்தால், புள்குதல்>புஃகுதல்>புகுதல்>புகுத்துதல்>புகட்டுதல்>போட்டுதல்>போடுதல்; மேலே உள்ள இரண்டு முறைகளில் எந்த முறையில் போட்டுதல்>போடுதல் என்ற வினையின் சொற்பிறப்பு எழுந்தது என்று தெளிவாகச் சொல்ல முடிவதில்லை.

அடுத்தது மாட்டுதல் என்ற சொல் பிறந்த வகை. முள்>மூள் மூளுதல் = பொருந்துதல்; மூள்>மூள்+து>மூட்டு>மூட்டுதல் = பொருத்துதல், இணைத்தல், தைத்தல்; முட்டுதல் = எதிர்ப்படுதல், நெருங்குதல், கூடுதல், பொருந்துதல், இடுகுதல்; மூட்டு = உடல், அணி முதலியவற்றின் பொருத்து, "கவசத்தையும் மூட்டறுத்தான்" (கம்பரா.சடாயுவ.113); மூட்டை = பொதி; மூட்டு>*(மோட்டு)>மாட்டு, மாட்டுதல் = இணைத்தல், பொருத்துதல், அளவிக் காட்டுதல், கொளுவிக் கொள்ளுதல், பற்றிக் கொள்ளுதல்

கடைசியாக அணிதல் என்ற சொல்பிறந்த வகை; அள்>அள்+நு>அண்ணு = நெருங்கு; அண்ணுதல்>அண்ணித்தல்>அணிதல்; அண்ணித்தல் = கிட்டுதல், பொருந்துதல், சூடல், சாத்துதல், புனைதல், அழகாதல், அலங்கரித்தல், உடுத்தல், பூணுதல், பொருந்துதல், படைவகுத்தல், சூழ்தல்

கிட்டத்தட்ட மூன்று சொற்கள் இப்படி அருகருகே நெருங்கிய பொருட்பாடுகளைக் கொண்டிருந்தும், ஒன்றை மட்டுமே இப்பொழுது புழங்கி, மற்றவற்றின் வழக்குக் குறைந்துவருவது ஏன் என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். போடுதல், மாட்டுதல், அணிதல் என்ற மூன்று வினைகளில் இப்பொழுதெல்லாம் அணிதல் என்பதேயே மிகவும் பயனாக்குகிறோம். அது ஏன்? மூன்றிற்கும் உள்ள ஒரு பொதுவான கருத்து பொருத்துதலே. ஒன்றை இன்னொன்றோடு இணைப்பது, பொருத்துவது என்றே மற்ற பொருட்பாடுகள் கிளைக்கும். மூன்று சொற்களில் ஒன்று உயர்த்தி, மற்றவை தாழ்த்தி என்ற பொருளா? அல்லது இது பழக்கத் தோயமா? ஏன் இப்பொழுது எழுத்துத் தமிழில் எல்லாவற்றையும் மாட்டிக் கொள்ளாது, போட்டுக் கொள்ளாது, அணிந்து கொள்ளுவதில் பெருமைப் படுகிறோம்? ஆணுறை போட்டுக் கொள்ளுதல் என்பது சரியான புழக்கம் தான் என்றாலும் அணிதல் என்னும் போது ஒரு நளினம் வந்ததாக உணருகிறோமா? ஒருவேளை அணிதல் என்பது விதப்பாக நகை அணிதலுக்குப் பயன்பட்டு, அணிதல் என்ற வினைக்கே செல்வத் தோற்றம் வந்து, பிறகு மற்றவற்றையும் அணிவதாகச் சொல்லுகிறோமோ? மொத்தத்தில் இதுவும் ஒருவகை இடக்கர் அடக்கல் தானோ?

இது போல வாத்தியார் என்ற சொல் கொச்சையாகவும், ஆசிரியர் என்ற சொல் உயர்ச்சியாகவும் பலருக்கும் தோன்றுகிறது இல்லையா? மாந்த வாழ்வில் குமுகாய அழுத்தத்தில் இப்படிச் சுமையேற்றிய சொற்கள் எப்படித் தோன்றுகின்றன? அதைப் பற்றிக் கவனித்திருக்கிறீர்களா? மொழியின் ஆழம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¬Ï¨È «½¢¾ø - 2

¬Ï¨È «½¢¾ø ±ýÈ ¦º¡øġ𺢠²üÚì ¦¸¡ûÇì Üʾ¡ ±ýÈ ¯¨Ã¡ð¨¼ò ¦¾¡¼í¸¢ ´Õ Å¢ÇõÀÃò¨¾ ÌÈ¢ôÀ¢ðÊÕó§¾ý. «ó¾ Å¢ÇõÀÃõ §¾¨Å¡ ±ýÈ §¸ûÅ¢ìÌû §À¡¸¡Ð, ¦º¡ü¸Ç¢ý ¦¿¸¢úò ¾ý¨Á ÀüȢ §¸ûÅ¢¨Â§Â þíÌ ±ØôÀ¢Â¢Õó§¾ý. Å¢ÇõÀÃí¸û, «ÅüÈ¢ø ¯ûÇ ¦Á¡Æ¢¦ÀÂ÷ôÒì ÌÆôÀí¸û ÀüȢ ¦ºö¾¢¸¨Çî º¢Ä ¿ñÀ÷¸û ¦º¡øĢ¢Õó¾¡÷¸û. «ó¾î ¦ºö¾¢¸¨Ç ¿¡ý ÁÚì¸ì ÜÊÂÅý «øÄý.

þÕó¾¡Öõ ¿¡ý ¦º¡øÄ Åó¾Ð §ÅÚ ´ý¨Èô ÀüÈ¢ÂÐ. ¦¸¡ïºõ ¬úóÐ À¡÷ò¾¡ø, Òû ±ýÛõ §Åâø þÕóÐ §À¡Î¾Öõ, Óû ±ýÈ §Åâø þÕóÐ Á¡ðξÖõ, «û ±ýÈ §Åâø þÕóÐ «½¢¾Öõ À¢Èó¾¢Õì¸ §ÅñÎõ.

ӾĢø §À¡Î¾¨Äô ÀüÈ¢ô À¡÷ô§À¡õ. Òû>(âû)>âñ>âðÎ = ¦À¡ÕòÐ; ¦À¡Õòоø, ±È¢¾ø, þξø, ¾Ã¢ò¾ø, ®Û¾ø, þ¨½ò¾ø, ¦¾¡Îò¾ø, ¦ºÕ̾ø, ¦ºÖòоø, ¯ð¦¸¡ûÙ¾ø; âðξø>§À¡ðξø>§À¡Î¾ø; þý¦É¡Õ Å¢¾Á¡¸ô À¡÷ò¾¡ø, Òû̾ø>ҷ̾ø>Ò̾ø>ÒÌòоø>Ò¸ðξø>§À¡ðξø>§À¡Î¾ø; §Á§Ä ¯ûÇ þÃñΠӨȸǢø ±ó¾ ӨȢø §À¡ðξø>§À¡Î¾ø ±ýÈ Å¢¨É¢ý ¦º¡üÀ¢ÈôÒ ±Øó¾Ð ±ýÚ ¦¾Ç¢Å¡¸î ¦º¡øÄ ÓÊž¢ø¨Ä.

«Îò¾Ð Á¡ðξø ±ýÈ ¦º¡ø À¢Èó¾ Ũ¸. Óû>ãû ãÙ¾ø = ¦À¡Õóоø; ãû>ãû+Ð>ãðÎ>ãðξø = ¦À¡Õòоø, þ¨½ò¾ø, ¨¾ò¾ø; Óðξø = ±¾¢÷ôÀξø, ¦¿Õí̾ø, Üξø, ¦À¡Õóоø, þÎ̾ø; ãðÎ = ¯¼ø, «½¢ ӾĢÂÅüÈ¢ý ¦À¡ÕòÐ, "¸Åºò¨¾Ôõ ãð¼Úò¾¡ý" (¸õÀá.º¼¡ÔÅ.113); ã𨼠= ¦À¡¾¢; ãðÎ>*(§Á¡ðÎ)>Á¡ðÎ, Á¡ðξø = þ¨½ò¾ø, ¦À¡Õòоø, «ÇÅ¢ì ¸¡ðξø, ¦¸¡ÙÅ¢ì ¦¸¡ûÙ¾ø, ÀüÈ¢ì ¦¸¡ûÙ¾ø

¸¨¼º¢Â¡¸ «½¢¾ø ±ýÈ ¦º¡øÀ¢Èó¾ Ũ¸; «û>«û+Ñ>«ñÏ = ¦¿ÕíÌ; «ñϾø>«ñ½¢ò¾ø>«½¢¾ø; «ñ½¢ò¾ø = ¸¢ðξø, ¦À¡Õóоø, ݼø, º¡òоø, Ҩɾø, «Æ¸¡¾ø, «Äí¸Ã¢ò¾ø, ¯Îò¾ø, âϾø, ¦À¡Õóоø, À¨¼ÅÌò¾ø, Ýú¾ø

¸¢ð¼ò¾ð¼ ãýÚ ¦º¡ü¸û þôÀÊ «Õ¸Õ§¸ ¦¿Õí¸¢Â ¦À¡ÕðÀ¡Î¸¨Çì ¦¸¡ñÊÕóÐõ, ´ý¨È ÁðΧÁ þô¦À¡ØÐ ÒÆí¸¢, ÁüÈÅüÈ¢ý ÅÆìÌì ̨ÈóÐÅÕÅÐ ²ý ±ýÀÐ ÀüÈ¢ ¿¡õ §Â¡º¢ì¸ §ÅñÎõ. §À¡Î¾ø, Á¡ðξø, «½¢¾ø ±ýÈ ãýÚ Å¢¨É¸Ç¢ø þô¦À¡Ø¦¾øÄ¡õ «½¢¾ø ±ýÀ§¾§Â Á¢¸×õ ÀÂÉ¡ì̸¢§È¡õ. «Ð ²ý? ãýÈ¢üÌõ ¯ûÇ ´Õ ¦À¡ÐÅ¡É ¸ÕòÐ ¦À¡Õòо§Ä. ´ý¨È þý¦É¡ý§È¡Î þ¨½ôÀÐ, ¦À¡ÕòÐÅÐ ±ý§È ÁüÈ ¦À¡ÕðÀ¡Î¸û ¸¢¨ÇìÌõ. ãýÚ ¦º¡ü¸Ç¢ø ´ýÚ ¯Â÷ò¾¢, ÁüȨŠ¾¡úò¾¢ ±ýÈ ¦À¡ÕÇ¡? «øÄÐ þÐ ÀÆì¸ò §¾¡ÂÁ¡? ²ý þô¦À¡ØÐ ±ØòÐò ¾Á¢Æ¢ø ±øÄ¡Åü¨ÈÔõ Á¡ðÊì ¦¸¡ûÇ¡Ð, §À¡ðÎì ¦¸¡ûÇ¡Ð, «½¢óÐ ¦¸¡ûÙž¢ø ¦ÀÕ¨Áô Àθ¢§È¡õ? ¬Ï¨È §À¡ðÎì ¦¸¡ûÙ¾ø ±ýÀÐ ºÃ¢Â¡É ÒÆì¸õ ¾¡ý ±ýÈ¡Öõ «½¢¾ø ±ýÛõ §À¡Ð ´Õ ¿Ç¢Éõ Å󾾡¸ ¯½Õ¸¢§È¡Á¡? ´Õ§Å¨Ç «½¢¾ø ±ýÀРŢ¾ôÀ¡¸ ¿¨¸ «½¢¾ÖìÌô ÀÂýÀðÎ, «½¢¾ø ±ýÈ Å¢¨É째 ¦ºøÅò §¾¡üÈõ ÅóÐ, À¢ÈÌ ÁüÈÅü¨ÈÔõ «½¢Å¾¡¸î ¦º¡øÖ¸¢§È¡§Á¡? ¦Á¡ò¾ò¾¢ø þÐ×õ ´ÕŨ¸ þ¼ì¸÷ «¼ì¸ø ¾¡§É¡?

þÐ §À¡Ä Å¡ò¾¢Â¡÷ ±ýÈ ¦º¡ø ¦¸¡î¨ºÂ¡¸×õ, ¬º¢Ã¢Â÷ ±ýÈ ¦º¡ø ¯Â÷¡¸×õ ÀÄÕìÌõ §¾¡ýÚ¸¢ÈÐ þø¨Ä¡? Á¡ó¾ Å¡úÅ¢ø ÌÓ¸¡Â «Øò¾ò¾¢ø þôÀÊî ͨÁ§ÂüȢ ¦º¡ü¸û ±ôÀÊò §¾¡ýÚ¸¢ýÈÉ? «¨¾ô ÀüÈ¢ì ¸ÅÉ¢ò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¦Á¡Æ¢Â¢ý ¬Æõ ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ô ÒâÔõ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

3 comments:

ரவிசங்கர் said...

இடக்கர் அடக்கல் என்றால் என்ன? வாத்தியார் தமிழ்ச் சொல்லா? அது வித்தியா (கல்வி) என்ற வடமொழிச் சொல்லில் இருந்து வந்ததாக அல்லவா நினைத்துக்கொண்டு இருக்கிறேன்!

உண்மைத் தமிழன் said...

ஐயா எனது சந்தேகம் வேறு விதமாக உள்ளது. போடுவது என்பதுகூட தூய தமிழ் வார்த்தையா? எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஆங்கிலத்தில் Fitter என்ற சொல்லுக்கு பொருத்துனர் என்று தமிழில் சொல்கிறோம். இந்தப் பொருத்துனர் என்பதற்கு பொருத்துதல் என்ற அர்த்தம் வரும் என்பதுதான் அனைவரின் எண்ணம். ஏன் இங்கே அணிவிக்கிறவர் என்றோ போடுபவர் என்றோ சொல்வதில்லை.

இதற்கு ஒரு காரணத்தை நான் பள்ளியில் படிக்கும்போது எனது தமிழாசிரியர் ராமசாமி அவர்கள் ஒரு விளக்கம் சொன்னார்கள். பொருத்துதல் என்பது ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள அல்லது ஏற்கெனவே ஒரு அமைப்பாக உள்ள ஒரு பொருளுக்கு அணிவிக்கும் செய்கைக்குத்தான் பொருத்துதல் என்றார். அதனால்தான் nut, bolt, screws, electrical spare parts ஆகிய ஏற்கெனவே அமைப்பாக உள்ளவைகளை ஒரு இடத்தில் மிகச் சரியாகப் பொருத்துபவர் என்ற அர்த்தத்தில்தான் அவர் பொருத்துனர் என்று அழைக்கப்படுவார் என்றார்.

இந்த வகையில் பார்த்தால் இப்போது ஆணுறையை அணிதல் என்று சொல்வது சரியா? போடுதல் என்பது சரியா? பொருத்துதல் என்பது சரியா?

தமிழ் மொழி எந்தப் பக்கம், யார் முயன்றாலும் யார் கையிலும் சிக்காத ஒரு அலாவூதீனின் அற்புத விளக்காகவே இருக்கிறது ஐயா.

பொன்ஸ்~~Poorna said...

ஐயா,
இலக்கணத்தில் அணி வருவதால், அணிதல் என்பதை இன்னும் செம்மையான இலக்கியச் சொல்லாக நான் நினைத்திருந்தேன் :)