Friday, October 17, 2003

பேராயக் கட்சிக்கு ஒரு பாராட்டு

எத்தனை பேருக்கு இப்பொழுது நினைவிருக்கிறது என்று தெரியவில்லை. 1967 க்கு முன்னர் தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளி வரை படிக்கும் பாடமொழியாகவும், 100க்கு 98/99 பேர் படிக்கும் மொழிப்பாடமாகவும் தமிழ் கொடிகட்டிப் பறந்தது. அன்றைய நிலையில் கல்லூரியில் எப்படித் தமிழைப் பாடமொழி ஆக்குவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். திரு. சி.சுப்பிரமணியம் முதலில் பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையிலும் பின் திரு. பக்தவத்சலம் அமைச்சரவையிலும் நல்ல பணிகளைக் கல்வி அமைச்சராய்ச் செய்து வந்தார். பேரறிஞர் அண்ணா முதல்வரான பிறகும் கூட இந்த உருப்படியான நிலை நீடித்தது. கலைக் கல்லூரிகளில் தமிழ் பாடமொழி ஆகிவிடும் என்று தான் எல்லோரும் கனவு கொண்டிருந்தார்கள்.

பிறகு நடந்ததுதான் கூத்து. முன்னேற்றங்கள் பின்னேற்றங்கள் ஆகச் சறுக்கினர். எங்கும் பணம் பண்ணுவதே குறியாகிப் போனது; கழுதை தேய்ந்து கட்டெறும்பாகித் தமிழ் பாடமொழியாவது குதிரைக் கொம்பாகி, மொழிப்பாடம் என்பது கூடக் குறைந்து போனது. தமிழ் படிக்காமலே ஒரு தமிழர்/தமிழ்நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகளாவது இருந்தவர் பள்ளிப் படிப்பை முடிக்க முடியும் என்ற நிலை வந்து சேர்ந்தது. இப்பொழுது மழலைப் பருவத்திலும் கூடத் தமிழ் படிக்காத ஓர் உயர்ந்த முன்னேற்றத்திற்கு(?)ப் போய்க் கொண்டிருக்கிறோம்.

ஒரு ஒன்றரை ஆண்டுகள் முன்னம் தற்செயலாக பேராசிரியர் தமிழண்ணலோடு ஒரு விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் முந்தைய ஆட்சியில் தமிழ்ப் பாடமொழி பற்றி நடந்த கூத்துக்களையும் மடிக்குழைப் பள்ளிகளில் தமிழ் ஒழிந்து போன கொடுமையையும் கூறி, அவை பெருகிப் போனதும் பற்றியும் சொல்லி, எப்படி ஒரு இந்திய நிர்வாகத் துறை அதிகாரியின் சொல்லுக்குத் தலையாட்டி, இந்தப் பக்கம் தமிழ்ச் சான்றோர் பேச்சைக் கேளாது, வெறும் பரிவுரை அரசாணையோடு கலைஞர் அரசு நின்றுகொண்டது என்று சொன்னார். வியந்து போனேன். சட்டப்பேரவையைக் கூட்டி தனக்கிருந்த உறுப்பினர் பலத்தைக் கொண்டு அந்த ஆணையைச் சட்டம் ஆக்காமல் தயங்கி நின்ற தமிழினத் தலைவர் (?) பற்றி வருத்தத்தோடு சொன்னார். "வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் இவரிடம்?" என்று நான் கேட்டேன்.

இதை இங்கு எழுதியதால், அடுத்த கழகம் பற்றி இங்கு கூறவில்லையே என்று யாரும் எண்ண வேண்டாம். தாய் எட்டடி பாய்த்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழிக்கு உகந்த கழகம் தான் அதுவும். தமிழ், தமிழ் என்று சொல்லிக் குழிபறிப்பதில் அண்ணனுக்கும் தம்பிக்கும் போட்டி; இதில் என்ன ஒப்பீடு வேண்டியிருக்கிறது? சொல்ல வருவது இதுதான். ஆயிரம் குறையைப் பேராயக் கட்சி மீது சொன்னாலும், அவர்கள் ஆண்ட போது கண்ணும் கருத்துமாகத் தான் தமிழைப் பேணி வந்தார்கள். தமிழ் வளர்ச்சிக்கு ஆவன செய்தார்கள்.

இப்பொழுது சரிந்து போன நிலையை முட்டுக் கட்டி நிறுத்துவதும் பேராயக் கட்சிதான். அடுத்துள்ள புதுச்சேரி மாநிலம் தங்கள் மாநிலத்தில் எந்தப் பள்ளியில் படித்தாலும் அவர்கள் தமிழர்களாக இருப்பின்/ குறிப்பிட்ட காலம் தமிழ் பேசும் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களாக இருப்பின், தமிழ்மொழிப் பாடத்தை எட்டாவது வரை கட்டாயமாகப் படித்தே தீரவேண்டும் என்று சட்டம் இயற்றி இருக்கிறார்கள்.

அவர்கள் துணிவுள்ளவர்கள்; பாராட்டத்தான் வேண்டும். மயிலே மயிலே இறகு போடு என்றால் அது இறகு போடாது என்பது தமிழ்ப் பழமொழி. மக்களாட்சி என்பது பொறுப்பற்ற, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற ஆட்சி அல்ல. அரசின் ஆட்சி என்பது ஒருவகையில் அதிரடிச் செயல் தான்.

தமிழ் தழைக்க வேண்டுமானால்........என்ன செய்யலாம்?

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

±ò¾¨É §ÀÕìÌ þô¦À¡ØÐ ¿¢¨ÉÅ¢Õ츢ÈÐ ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. 1967 ìÌ ÓýÉ÷ ¾Á¢ú¿¡ðÊø ¯Â÷¿¢¨Äô ÀûÇ¢ Ũà ÀÊìÌõ À¡¼¦Á¡Æ¢Â¡¸×õ, 100ìÌ 98/99 §À÷ ÀÊìÌõ ¦Á¡Æ¢ôÀ¡¼Á¡¸×õ ¾Á¢ú ¦¸¡Ê¸ðÊô ÀÈó¾Ð. «ý¨È ¿¢¨Ä¢ø ¸øæâ¢ø ±ôÀÊò ¾Á¢¨Æô À¡¼¦Á¡Æ¢ ¬ìÌÅÐ ±ýÚ §Àº¢ì ¦¸¡ñÊÕó¾¡÷¸û. ¾¢Õ. º¢.ÍôÀ¢ÃÁ½¢Âõ ӾĢø ¦ÀÕó¾¨ÄÅ÷ ¸¡Ááº÷ «¨ÁîºÃ¨Å¢Öõ À¢ý ¾¢Õ. Àì¾ÅòºÄõ «¨ÁîºÃ¨Å¢Öõ ¿øÄ À½¢¸¨Çì ¸øÅ¢ «¨ÁîºÃ¡öî ¦ºöÐ Åó¾¡÷. §ÀÃÈ¢»÷ «ñ½¡ Ó¾øÅÃ¡É À¢ÈÌõ ܼ þó¾ ¯ÕôÀÊÂ¡É ¿¢¨Ä ¿£Êò¾Ð. ¸¨Äì ¸øæâ¸Ç¢ø ¾Á¢ú À¡¼¦Á¡Æ¢ ¬¸¢Å¢Îõ ±ýÚ ¾¡ý ±ø§Ä¡Õõ ¸É× ¦¸¡ñÊÕó¾¡÷¸û.

À¢ÈÌ ¿¼ó¾Ð¾¡ý ÜòÐ. Óý§ÉüÈí¸û À¢ý§ÉüÈí¸û ¬¸î ºÚ츢É÷. ±íÌõ À½õ ÀñÏŧ¾ ÌȢ¡¸¢ô §À¡ÉÐ; ¸Ø¨¾ §¾öóÐ ¸ð¦¼ÚõÀ¡¸¢ò ¾Á¢ú À¡¼¦Á¡Æ¢Â¡ÅР̾¢¨Ãì ¦¸¡õÀ¡¸¢, ¦Á¡Æ¢ôÀ¡¼õ ±ýÀРܼì ̨ÈóÐ §À¡ÉÐ. ¾Á¢ú ÀÊ측Á§Ä ´Õ ¾Á¢Æ÷/¾Á¢ú¿¡ðÊø ̨Èó¾Ð 10 ¬ñθǡÅÐ þÕó¾Å÷ ÀûÇ¢ô ÀÊô¨À ÓÊì¸ ÓÊÔõ ±ýÈ ¿¢¨Ä ÅóÐ §º÷ó¾Ð. þô¦À¡ØÐ ÁƨÄô ÀÕÅò¾¢Öõ ܼò ¾Á¢ú ÀÊ측¾ µ÷ ¯Â÷ó¾ Óý§ÉüÈò¾¢üÌ(?)ô §À¡öì ¦¸¡ñÊÕ츢§È¡õ.

´Õ ´ýȨà ¬ñθû ÓýÉõ ¾ü¦ºÂÄ¡¸ §ÀẢâÂ÷ ¾Á¢Æñ½§Ä¡Î ´Õ ŢơŢø §Àº¢ì ¦¸¡ñÊÕó¾§À¡Ð «Å÷ Óó¨¾Â ¬ðº¢Â¢ø ¾Á¢úô À¡¼¦Á¡Æ¢ ÀüÈ¢ ¿¼ó¾ ÜòÐ츨ÇÔõ ÁÊį̀Æô ÀûÇ¢¸Ç¢ø ¾Á¢ú ´Æ¢óÐ §À¡É ¦¸¡Î¨Á¨ÂÔõ ÜÈ¢, «¨Å ¦ÀÕ¸¢ô §À¡ÉÐõ ÀüÈ¢Ôõ ¦º¡øÄ¢, ±ôÀÊ ´Õ þó¾¢Â ¿¢÷Å¡¸ò Ð¨È «¾¢¸¡Ã¢Â¢ý ¦º¡øÖìÌò ¾¨Ä¡ðÊ, þó¾ô Àì¸õ ¾Á¢úî º¡ý§È¡÷ §Àî¨ºì §¸Ç¡Ð, ¦ÅÚõ Àâרà «Ãº¡¨½§Â¡Î ¸¨Ä»÷ «ÃÍ ¿¢ýÚ¦¸¡ñ¼Ð ±ýÚ ¦º¡ýÉ¡÷. Å¢ÂóÐ §À¡§Éý. ºð¼ô§ÀèŨÂì ÜðÊ ¾É츢Õó¾ ¯ÚôÀ¢É÷ ÀÄò¨¾ì ¦¸¡ñÎ «ó¾ ¬¨½¨Âî ºð¼õ ¬ì¸¡Áø ¾Âí¸¢ ¿¢ýÈ ¾Á¢Æ¢Éò ¾¨ÄÅ÷ (?) ÀüÈ¢ ÅÕò¾ò§¾¡Î ¦º¡ýÉ¡÷. "§ÅÚ ±ýÉ ±¾¢÷À¡÷츢ȣ÷¸û þÅâ¼õ?" ±ýÚ ¿¡ý §¸ð§¼ý.

þ¨¾ þíÌ ±Ø¾¢Â¾¡ø, «Îò¾ ¸Æ¸õ ÀüÈ¢ þíÌ ÜÈÅ¢ø¨Ä§Â ±ýÚ Â¡Õõ ±ñ½ §Åñ¼¡õ. ¾¡ö ±ð¼Ê À¡öò¾¡ø ÌðÊ À¾¢É¡ÈÊ À¡Ôõ ±ýÈ ÀƦÁ¡Æ¢ìÌ ¯¸ó¾ ¸Æ¸õ ¾¡ý «Ð×õ. ¾Á¢ú, ¾Á¢ú ±ýÚ ¦º¡øÄ¢ì ÌÆ¢ÀÈ¢ôÀ¾¢ø «ñ½ÛìÌõ ¾õÀ¢ìÌõ §À¡ðÊ; þ¾¢ø ±ýÉ ´ôÀ£Î §ÅñÊ¢Õ츢ÈÐ? ¦º¡øÄ ÅÕÅÐ þо¡ý. ¬Â¢Ãõ ̨ȨÂô §ÀáÂì ¸ðº¢ Á£Ð ¦º¡ýÉ¡Öõ, «Å÷¸û ¬ñ¼ §À¡Ð ¸ñÏõ ¸ÕòÐÁ¡¸ò ¾¡ý ¾Á¢¨Æô §À½¢ Åó¾¡÷¸û. ¾Á¢ú ÅÇ÷ìÌ ¬ÅÉ ¦ºö¾¡÷¸û.

þô¦À¡ØÐ ºÃ¢óÐ §À¡É ¿¢¨Ä¨Â ÓðÎì ¸ðÊ ¿¢ÚòÐÅÐõ §ÀáÂì ¸ðº¢¾¡ý. «ÎòÐûÇ ÒÐâ Á¡¿¢Äõ ¾í¸û Á¡¿¢Äò¾¢ø ±ó¾ô ÀûǢ¢ø ÀÊò¾¡Öõ «Å÷¸û ¾Á¢Æ÷¸Ç¡¸ þÕôÀ¢ý/ ÌÈ¢ôÀ¢ð¼ ¸¡Äõ ¾Á¢ú §ÀÍõ À̾¢¸Ç¢ø Å¡úóÐ ¦¸¡ñÊÕó¾Å÷¸Ç¡¸ þÕôÀ¢ý, ¾Á¢ú¦Á¡Æ¢ô À¡¼ò¨¾ ±ð¼¡ÅРŨà ¸ð¼¡ÂÁ¡¸ô ÀÊò§¾ ¾£Ã§ÅñÎõ ±ýÚ ºð¼õ þÂüÈ¢ þÕ츢ȡ÷¸û.

«Å÷¸û н¢×ûÇÅ÷¸û; À¡Ã¡ð¼ò¾¡ý §ÅñÎõ. Á¢§Ä Á¢§Ä þÈÌ §À¡Î ±ýÈ¡ø «Ð þÈÌ §À¡¼¡Ð ±ýÀÐ ¾Á¢úô ÀƦÁ¡Æ¢. Áì¸Ç¡ðº¢ ±ýÀÐ ¦À¡ÚôÀüÈ, ±¨¾ §ÅñÎÁ¡É¡Öõ ¦ºöÂÄ¡õ ±ý¸¢È ¬ðº¢ «øÄ. «Ãº¢ý ¬ðº¢ ±ýÀÐ ´ÕŨ¸Â¢ø «¾¢ÃÊî ¦ºÂø ¾¡ý.

¾Á¢ú ¾¨Æì¸ §ÅñÎÁ¡É¡ø........±ýÉ ¦ºöÂÄ¡õ?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

2 comments:

Anonymous said...

தமிழ் மொழி தொடர்பிலும் தமிழர் தொடர்பிலும் உங்களுக்கு இருக்கும் அக்கரையை உங்கள் எழுத்துக்கள் எடுத்துறைக்கின்றன. இருப்பினும் "தமிழ்" எனும் மொழி வளம்பெறவும், "தமிழர்" தலை நிமிரவும், தன்னாட்சி இறமையுடன் கூடிய "தனி தமிழர் நாடு" உருவாகுவதில் மட்டுமே சாத்தியமாகும்.

"ஆண்டப் பறம்பரை மீண்டு ஆள நினைப்பதில் என்ன பிழை!"

வெள்ளையனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால் அங்கோ பரிதாபம்! "இந்தி" எனும் யாவுக்குள் (யா - இருள்) தானே தமிழரும் தமிழும் சிக்குண்டுள்ளோம்.

விடிவு விடியலில் தான் கிடைக்கும். விடியல் விடுதலை பெற்றால் மட்டுமே கிடைக்கும்.

- மொஹமட் ஹனீப்

Anonymous said...

ஆண்டப் பறம்பரை மீண்டு ஆள நினைப்பதில் என்ன பிழை!" எந்த தவறும் இல்லை