Friday, September 19, 2003

இன்னுமொரு தன்னேர்ச்சி

ஆலமரம் போலே அடிமரமா நின்னவுக,
காலை மலரையிலே காலனையா தேடுவாக?
தொண்டு கிழவீட்டில் தோய்ந்த பழுதெல்லாம்,
கண்டு சரிபண்ண கையாள் கிடைக்கலியா?

அப்படியென் னவசரமோ? அஞ்சு மணியாலே
கப்பும் இருட்டுக்குள் கற்காரை நீர்தெளிக்க!
கற்காரை பாவிக் கடியதளம் போட்டபினர்
நிற்க உரமூட்ட நீரைத் தெளிப்பதுதான்?

ஆனாலும் ஏனைய்யா அந்தப் படபடப்பு?
வீணாய் விழுந்து மின்கசியும் கம்பிபட,
தட்டுத் தடுமாறி பின்தலையில் தான்வீழ,
பட்டென்று நெஞ்சில் படுவிழுதோ மின்னூட்ட,

என்ன கொடுமையிது? இத்தனையும் மன்னவர்க்கா?
சின்ன உயிருக்கும் சேமத்தைப் பார்த்தவரே!
ஆலையிலே சேமமிலா ஆட்சியதின் ஊழறிவீர்!
சாலையிலே தன்னேர்ச்சி சாடுவதும் தானறிவீர்!

வீட்டிற்குள் சேமநிலை பேணுவதை ஏன்துறந்தீர்?
வாட்டிக் கதறவிட்டு வாழ்நாள் தொலைப்பதற்கோ?
சங்கிலியாய் தன்னேர்ச்சி; சத்தவடம் போவதற்குள்,
எங்களுக்கும் தேராம எல்லாம் நிகழ்ந்தாச்சு;

பாழும் பணியைத்தான் பார்க்கப் பொறுத்திருந்தால்,
ஏழு மணியாலே எத்தனைபேர் வந்திருப்பர்?
சித்தாளு; கொத்தர்; சிறப்பான மேலாளு;
எத்தனைபேர் நீர்தெளிக்க இன்னும் பலசெய்ய;

பேரரசு போயிரண்டு ஆட்டை பிறந்ததனால்,
வேர்விட்ட ஆலந்தான் விழுதோட போயிருச்சோ?
வெட்டவெளி வானம் விரிநிழலைத் தந்திடுமோ?
பொட்டல் மணலும் புழுதிப் புறப்பாடும்,

வையைக் கரைக்காடும் வாவரசிக் கூவல்களும்
பொய்யாய் உறைஞ்சதெலாம் பொள்ளிக் கொணர்ந்திடுமோ?
எத்தனையில் பந்தலிட? எத்தனையில் எரியூட்ட?
எத்தனையில் அங்கெடுக்க? எத்தனையில் கல்லெடுக்க?

எத்தனையில் சீரங்கம்? எத்தனையில் வாரணசி?
எத்தனையில் பிண்டமிட? எத்தனையில் தீவமிட?
எத்தனைநாள் வெற்றுநிலை? என்றதற்குச் சொன்னார்கள்,
"சித்தம் சிவம்சேர்த்துக் கொள்".

(ஆறுதல் கூறிய அன்பர் அனைவருக்கும் நன்றி. வாழ்வு மேலும் நகரத்தான் வேண்டும்.)

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þýÛ¦Á¡Õ ¾ý§É÷

¬ÄÁÃõ §À¡§Ä «ÊÁÃÁ¡ ¿¢ýÉ׸,
¸¡¨Ä ÁĨâ§Ä ¸¡Ä¨É¡ §¾ÎÅ¡¸?
¦¾¡ñÎ ¸¢ÆÅ£ðÊø §¾¡öó¾ Àئ¾øÄ¡õ,
¸ñÎ ºÃ¢Àñ½ ¨¸Â¡û ¸¢¨¼ì¸Ä¢Â¡?

«ôÀʦÂý ÉźçÁ¡? «ïÍ Á½¢Â¡§Ä
¸ôÒõ þÕðÎìÌû ¸ü¸¡¨Ã ¿£÷¦¾Ç¢ì¸!
¸ü¸¡¨Ã À¡Å¢ì ¸Ê¾Çõ §À¡ð¼À¢É÷
¿¢ü¸ ¯Ããð¼ ¿£¨Ãò ¦¾Ç¢ôÀо¡ý?

¬É¡Öõ ²¨Éö¡ «ó¾ô À¼À¼ôÒ?
Å£½¡ö Å¢ØóÐ Á¢ý¸º¢Ôõ ¸õÀ¢À¼,
¾ðÎò ¾ÎÁ¡È¢ À¢ý¾¨Ä¢ø ¾¡ýÅ£Æ,
Àð¦¼ýÚ ¦¿ïº¢ø ÀÎŢا¾¡ Á¢ýëð¼,

±ýÉ ¦¸¡Î¨Á¢Ð? þò¾¨ÉÔõ ÁýÉÅ÷측?
º¢ýÉ ¯Â¢ÕìÌõ §ºÁò¨¾ô À¡÷ò¾Å§Ã!
¬¨Ä¢§Ä §ºÁÁ¢Ä¡ ¬ðº¢Â¾¢ý °ÆȢţ÷!
º¡¨Ä¢§Ä ¾ý§É÷ º¡ÎÅÐõ ¾¡ÉȢţ÷!

Å£ðÊüÌû §ºÁ¿¢¨Ä §ÀÏŨ¾ ²ýÐÈó¾£÷?
Å¡ðÊì ¸¾ÈÅ¢ðÎ Å¡ú¿¡û ¦¾¡¨ÄôÀ¾ü§¸¡?
ºí¸¢Ä¢Â¡ö ¾ý§É÷; ºò¾Å¼õ §À¡Å¾üÌû,
±í¸ÙìÌõ §¾Ã¡Á ±øÄ¡õ ¿¢¸úó¾¡îÍ;

À¡Øõ À½¢¨Âò¾¡ý À¡÷ì¸ô ¦À¡Úò¾¢Õó¾¡ø,
²Ø Á½¢Â¡§Ä ±ò¾¨É§À÷ Åó¾¢ÕôÀ÷?
º¢ò¾¡Ù; ¦¸¡ò¾÷; º¢ÈôÀ¡É §ÁÄ¡Ù;
±ò¾¨É§À÷ ¿£÷¦¾Ç¢ì¸ þýÛõ ÀĦºöÂ;

§ÀÃÃÍ §À¡Â¢ÃñÎ ¬ð¨¼ À¢Èó¾¾É¡ø,
§Å÷Ţ𼠬Äó¾¡ý Ţا¾¡¼ §À¡Â¢Õ¡?
¦Åð¼¦ÅÇ¢ Å¡Éõ Ţ⿢ƨÄò ¾ó¾¢Î§Á¡?
¦À¡ð¼ø Á½Öõ Òؾ¢ô ÒÈôÀ¡Îõ,

¨Å¨Âì ¸¨Ã측Îõ Å¡Åú¢ì ÜÅø¸Ùõ
¦À¡ö¡ö ¯¨Èﺦ¾Ä¡õ ¦À¡ûÇ¢ì ¦¸¡½÷ó¾¢Î§Á¡?
±ò¾¨É¢ø Àó¾Ä¢¼? ±ò¾¨É¢ø ±Ã¢äð¼?
±ò¾¨É¢ø «í¦¸Îì¸? ±ò¾¨É¢ø ¸ø¦ÄÎì¸?

±ò¾¨É¢ø º£Ãí¸õ? ±ò¾¨É¢ø šýº¢?
±ò¾¨É¢ø À¢ñ¼Á¢¼? ±ò¾¨É¢ø ¾£ÅÁ¢¼?
±ò¾¨É¿¡û ¦ÅüÚ¿¢¨Ä? ±ýȾüÌî ¦º¡ýÉ¡÷¸û,
"º¢ò¾õ º¢Åõ§º÷òÐì ¦¸¡û".

(¬Ú¾ø ÜȢ «ýÀ÷ «¨ÉÅÕìÌõ ¿ýÈ¢. Å¡ú× §ÁÖõ ¿¸Ãò¾¡ý §ÅñÎõ.)

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: