Thursday, September 04, 2003

காலங்கள் - 4

4. பொழுதுகளின் பொருளாழம்

ஒரு வினையை அல்லது விளையாட்டைத் தொடங்கும் போது, நாணயத்தைத் தூக்கிப் போட்டு "தலையா, பூவா" என்று பார்க்கிறோம் இல்லையா? இதில் ஒன்றை ஏற்பதும் மற்றொன்றை மறுப்பதும் வழக்கமானது தான். இந்தத் தலையா/பூவாப் பார்வை சிலபோதுகளில் நாம் புழங்கும் மொழியின் சொல்வடைகளுக்குக் கூட உண்டு. "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி" என்ற ஒரு சொலவடையை வாழ்த்துக் கூறும் முகமாகத் தமிழில் கேள்விப்பட்டிருக்கும் நீங்கள் அதன் இன்னொரு பக்கத்தை ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களோ? ஆலோ, அறுகோ மற்றொரு நிலத்திணையைத் தான் இருக்கும் புலத்திற்குள் வளரவிடாது என்ற கருத்தை எண்ணிப் பார்த்ததுண்டா? இந்த அளவுக்கு முற்றாளுமை கொண்ட நிலத்திணைகளை நிலத்தில் பதிய வைக்க முற்படும் முன்னர் சிந்தனை வேண்டாமா? ஆலின் நிழலில் மாவை நட முடியுமோ?

இப்படித் தழைத்து வேரோடும் முற்றாளுமை சில நாகரீகங்களுக்குக் கூட உண்டு. இவற்றை எங்கு நடவேண்டும், எப்படி நட வேண்டும் என்பதில் பல நேரம் நாம் கவனம் கொள்ளத் தவறி விடுகிறோம். இற்றைக் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் வளர்ந்துள்ள மேலை நாகரிகத்தின் தாக்கம் நல்லதா, கெட்டதா என்பதை உரையாட நான் இங்கு முற்பட வில்லை. ஆனால் மேலை நாகரிகம் அந்தந்த நாட்டு நாகரிகங்களை வளரவிடாது தானே முற்றாளுமை கொண்டு உலகத்தை மாற்றி வருகிறது என்பது உண்மையாக இருக்கிறது. அது நுழைந்த ஒரு சில ஆண்டுகளில், உள்ளூர் மரபுகள் மாறிவிடுகின்றன. ஆழ்ந்து பார்த்தால், உள்ளூர் திருவிழாக்களைக் கொண்டாடுவது கூடக் குறைந்து வருகிறது; பேச்சு, நடை, உடை, பழக்க வழக்கங்கள் எல்லாமே மாறுகின்றன. முடிவில் "காலமே மாறிப் போச்சுங்க" என்று சொல்லத் தொடங்கி விடுகிறோம். கால மாற்று என்பது உணர்ந்து அறிய வேண்டியது.

இந்த அதிகாரத்தில் காலம், பொழுது போன்ற பொதுமைக் கருத்துக்களையும் சிறு பொழுதுகள் பற்றியும் பார்ப்போம்.

காலம் என்னும் போது நாள்பிறப்பு, மாதப் பிறப்பு, ஆண்டுப் பிறப்பு போன்றவையும் அதில் உள்ளடங்கும். நமக்குத் தெரிந்து இந்தக் காலத்தில் எத்தனையோ தமிழர்கள் ஆங்கில ஆண்டுப் பிறப்பின் போது நள்ளிரவு வரை காத்திருப்பதும், இரவு பன்னிரண்டு மணி ஆனவுடன் ஒருவருக்கொருவர் கையைக் குலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லுவதும் ஆகப் புதிய சடங்கிற்கு மாறிக் கொண்டு வருகிறார்கள். இதைப் போன்றவற்றைக் காட்டாகச் சொல்லித்தான் "தமிழர்கள் குறைந்துத் தமிங்கிலர்கள் பெருத்து விட்டார்கள்", என்று நான் அவ்வப்பொழுது கூறுவது உண்டு.

ஆனாலும் நாள் என்பது நள்ளிரவில் தான் பிறக்கிறதா? புவியின் தன்னுருட்டலில் தொடக்கம் என்று எதைச் சொல்ல முடியும்? நாகரிகங்களின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நாட்கள் பிறப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கும் சந்திரமானத்தைக் கடைப்பிடிக்கும், அதாவது நிலவை மட்டுமே வைத்து மானிக்கும் - அளவு செய்யும் - அரபு நாடுகள் எல்லாம், "நிலவும் விண்மீன்களும் கண்முன்னே தோன்றும் போதே" நாள் பிறப்பதாகக் கொள்ளுகின்றன. முந்தைய அதிகாரங்களில், நாள் என்றால் இரவு என்றும், பின் இரவில் வரும் விண்மீன் என்றும் பொருள் ஆழம் சொன்னோமே நினைவிருக்கிறதா? அந்தப் பொருளின் வழி பார்த்தால், ஒரு நாளை இப்படி வரையறை செய்வதும் ஒருவகையில் பொருத்தம் தான்.

முற்றிலும் சூரிய மானத்தையே பின் பற்றுகிற மேலை நாகரிகமோ இன்னொரு வகையில் இதைப் பார்க்கிறது. புவியின் நடுக் கோட்டில் ஓரிடத்தில் நாம் வாழ்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். புவியின் தன்னுருட்டலில் சூரியனைப் பார்ப்பதில் இருந்து நாம் விலகிக் கொண்டே சுற்றி வருகிறோம். ஒரு நேரத்தில் நாம் வாழும் இடம் சூரியனுக்கு நேரெதிராக 180 பாகையில் வந்து விடுகிறது. அந்தப் பொழுதை நாம் நள்ளிரவு என்று சொல்லுவோம். மறுபடியும் சூரியனை நோக்கிச் சுற்றத் தொடங்குவதை புது நாள் என்று கொள்வது மேலை நாட்டுப் பார்வை.

சூரிய-சந்திரமானத்தைப் பின் பற்றும் நாமோ, சூரியன் கீழ்வானத்தில் முதலில் தெரிவதையே நாட்பிறப்பாகக் கொள்கிறோம். இன்றையக் கீழ்வானச் சூரியனில் இருந்து அடுத்த கீழ்வானச் சூரியன் தெரியும் வரை நீளும் காலத்தை ஒரு நாள் என்றும், இந்த ஒரு நாளைப் பகுத்து சிறிய காலங்களைக் குறிக்கும் வகையில் அறவட்டாக (arbitrary) ஒரு நாளைக்கு 24 மணி என்றும், அதனிலும் சிறிய அலகை, நுணுத்தம் (minute) என்று கொண்டு ஒரு மணிக்கு 60 நுணுத்தம் என்றும், அதனினும் சிறிய அலகை நொடி (second) என்று கொண்டு ஒரு நுணுத்தத்திற்கு 60 நொடி என்றும் இந்தக் காலத்தில் வகுத்திருக்கிறோம். இதே போல நம் முன்னோர் ஒரு நாளை 60 நாழிகையாகவும் அதை இன்னும் சிறிதாக 60 விநாழிகையாகவும் பகுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் காலத்தை அணு அணுவாக நமக்கு உணர வைக்கும் ஏதுக்கள்.

அந்தக் காலத்தில் நீர்க் கடிகையும், மணற் கடிகையும் போன்றவற்றைக் கொண்டும், நட்டு வைத்த குச்சியின் நிழலைக் கொண்டும் தான் நாழிகைகளை அளந்தார்கள். நாழி>நாழிகை = உள் துளைப் பொருள். நாழிகை வட்டிலில் உள்ள நீர் அல்லது மணல் முழுவதும் விழும் நேரம் நாழிகை எனப்பட்டது. இந்தக் காலத்தில் இது 24 நுணுத்தங்களுக்கு ஒப்பானது. இந்த உள் துளைப் பொருளில் தான், கோயிலில் முலவர் இருக்கும் உள்ளறை கூட உள் நாழிகை என்றே அழைக்கப் பட்டது. இந்த நாழிகை என்னும் சொல் மலையாளத்தில் நாழிக என்றும், கன்னடத்தில் நாழிகே என்றும் அழைக்கப் பட்டது. நாழிக் கிணறு (இது தான் அய்யா இந்தக் காலத்துப் புரைக் கிணறு - bore well), நாழிச் செம்பு, நாழி மணி, நாழியோடு, நாழி வழி என்ற சொல்லாட்சிகளையும் இணைத்துப் பார்த்து அறியலாம். நாழிகை என்பதையே கடிகை என்று சொல்லுவாரும் உண்டு.

நாழிகைக்கு அடுத்துச் சிறிய அளவில் நிமையம் என்ற அலகு ஒன்று உண்டு. சொற்பொருள் அளவில் பார்த்தால் அதை இமைக்கின்ற அல்லது நொடிக்கின்ற நேரம் என்று தான் சொல்ல முடியும். ஆனால் அது நிமையம் என்று திரிந்து, நொடியைக் குறிப்பதற்கு மாறாகப் பிறழ்ச்சி ஏற்பட்டு இன்று நுணுத்தத்தைக் குறித்து நிற்கிறது. இந்தப் பிறழ்ச்சி எதனால் எப்போது ஏற்பட்டது என்று விளங்கவில்லை.

இனிக் காலம், நேரம், வேளை, அமையம், சமையம், பருவம் போன்ற பொதுச் சொற்களின் பொருட்பாட்டைப் பார்ப்போம்.

"பொழுது புறப்பட்டது, பொழுது சாய்ந்தது" என்னும் போது அது நேரத்தை மட்டும் குறிக்கவில்லை; சூரியனையும் குறிக்கிறது. போழ்தல் என்றால் பிளத்தல், வெட்டுதல், நீக்குதல் என்ற பொருள் உண்டு. மலையாளத்தில் கூடப் போழ் என்றும், கன்னடத்தில் ஹொத்து (போழ்து>போது>பொத்து>ஹொத்து) என்றும், தெலுங்கில் ப்ரொத்து (ழகர ரகரப் போலி) என்றும், துளுவில் பொர்து என்றும் இந்தச் சொல் அழைக்கப் படும். பொழுது என்ற சொல் பொள்ளுதல் என்னும் வினையின் அடிப் பிறந்தது. பொள்ளுதல் என்பது பிளப்பதே. இருளைப் பிளப்பதால் சூரியன் பொழுது என அழைக்கப் பட்டான். நாளாவட்டத்தில் நேரம் என்ற பொதுமைப்பாட்டையும் இந்தப் பொழுது என்ற சொல் அடைந்தது.

அதே போல கல்லுதல் என்பது இயற்கையாகவும் செயற்கையாலும் நடக்கும் தோண்டுதல் வினையைக் குறிக்கும் சொல். தோண்டுவதால் பிரிவு, அடிநிலம் போன்ற பொருட்பாடுகளும் உடன் பயின்றன. கல்லிக் கொண்டே இருந்தால் அது காலுவது என்று ஓசையில் நீளும். தமிழில் நீட்சியைக் குறித்துவரும் பல சொற்கள் நீட்டொலி கொண்டே இருக்கின்றன. காலப்பட்டது என்பது உண்மையில் பள்ளப் படுவதே! காலப் பாட்டது நீண்டோ அன்றேல் ஆழ்ந்தோ இருக்கும். இணையாக இன்னும் இரண்டு சொற்களைச் சொல்லலாம். பள்ளப் பட்டது நீண்டு போய்ப் பாழ் என்றும், பாழப் பட்ட தலம் பாழ்தலம்> பாதலம்> பாதாளம் என்றும், பறியப் பட்டது நீளும் போது பாறியதாகவும் மாறும்.

காலப் பட்ட வாய்(=வழி) கால்வாய். இந்தப் பொருட்பாட்டு வளர்ச்சியில் கால் என்ற சொல்லுக்கே நீண்டது என்றே பொருட்பாடு பயிலத் தொடங்குவது இயற்கையே.

கல்லப் பட்ட பள்ளம் நீண்டு கிடந்து கால் என ஆனது போலக் கல்லி எடுக்கப் பட்ட நீண்ட தூணும் கால் என்றே வழங்கப் பட்டது. இணையாகப் பள்ளி எடுக்கப் பட்டது பாளம் என்றும், பறிந்து எடுக்கப் பட்டது பாறை என்றும் சொல்லப் பெறுகிறதல்லவா?

இன்னும் தொடர்ச்சியாகத் தூணைப் போன்ற உடல் உறுப்பும் கால் என்றே ஒப்புமையால் வழங்கியிருக்க வேண்டும். இனித் தனித்தெடுத்த தூணை வேறொரு இடத்தில் ஊன்றும் போது காலுதல், கால்கோள் என்றே சொல்லப் பட்டது. தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பான கால் உடம்பின் நாலில் ஒரு பகுதியையும் குறித்தது. (முடிவில் கால் என்ற எண்ணையும் குறித்தது.) கால் போன்ற உறுப்பு முக்காலி, நாற்காலி என்று வகை தெரிந்து அழைக்கப் பட்டது. காலப் பட்ட (ஊன்றப் பட்ட) காரணத்தால் கொடிக்கால், நாற்றங்கால் என்ற சொல்லாட்சிகளும் ஏற்பட்டன. நீண்டு தொடரும் கால் மேலும் பொருள் விரிட்சி பெற்று குடி மரபையும் குறித்தது.

காலின் பொருட்பாடு அதோடு நிற்கவில்லை; இன்னும் பொருட்பாடு பெருகி, கால் என்னும் உடல் உறுப்பு இயங்குகிற காரணத்தால் காலுதல் (=அசைதல்) என்ற இன்னொரு புழக்கத்தையும் தோற்றுவித்திருக்கிறது. அந்த இயக்கத்தை போன்று, கிளைகளும் மரங்களும் அசைவதால் நம்மைச் சுற்றி ருக்கிற வளிமண்டலத்தின் அசைவையும் கால் என்றே பழந்தமிழன் அழைத்தான். இப்படி அசையும் கால் மேலும் துகர ஈறு பெற்று காற்று என ஆயிற்று.

காலுக்கு நீட்சி என்ற பொருள் வந்தபின் நீண்டு போன நேரமும் கூடக் கால் என்றே அழைக்கப் பட்டது. கால் காலையாகி, காலமும் ஆகி பொழுது நேரம் எனப் பொதுமைக் கருத்தைக் குறித்தது.

பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் - தொல். 108
எல்லா எழுத்துஞ் சொல்லும் காலை - தொல் 83
காலம் தாமே மூன்றென மொழிப - தொல் 684

என்ற தொல்காப்பிய வரிகளும் இங்கு எண்ணிப் பார்க்கத் தக்கவை.
மொத்தத்தில் காலின் பொருட்பாட்டு வளர்ச்சி மிகப் பெரிது; காலங்களும்
நீண்டவை தானே!

நேர்ந்தது நேரம் என்றும் நிகழ்ந்தது நிகழ்வு என்றும், அமைந்தது அமையம்/சமையம் என்றும், காலத்தைப் பகுத்து (விள்ளியது) வேளை/வேலை என்றும், சொற்கள் கிளர்ந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்தக் காலத்தில் கனிந்து பக்குவமான வேளையே, சமையம் என்று அழைக்கப் படுகிறது. சரியான சமையம் என்ற சொல்லாட்சியைக் கவனியுங்கள். அதே போல ஒரு பொருள் நுகர்ச்சிக்கேற்ற அளவு கனிந்து பருத்திருக்கும் நிலை பருவம் என்றே அழைக்கப் படுகிறது. ஒப்புமையில் அந்த நிலை அமைவதற்கான நேரமும் பருவம் என்றே அழைக்கப் படுகிறது.

இனிச் சிறு பொழுதுகளைக் குறிக்கும் சொற்களைப் பார்ப்போம். ஒரு நாளை ஆறு போதுகளாகப் பிரித்து ஒவ்வொரு போதுக்கும் 10 நாழிகைகள் என்று கொண்டு, காலை, பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை (அல்லது) விடியல் என்றும் நம்மவர்கள் அழைத்தார்கள். மேல்நாட்டினர் இப்படி ஒரு நாளை ஆறு பகுதிகளாகப் பகுத்தது இல்லை. அதே பொழுது morning, noon, evening, night என்ற வேறுபட்ட சொற்களைப் புழங்குகிறார்கள்.

காலுதல் என்ற சொல் ஊன்றுதல் என்ற பொருளில் ஒரு நாளின் முதற் சிறுபொழுதைக் குறிக்கிறது. இந்தப் பொழுதின் தொடக்கத்தில் சூரியனின் ஒளி உலகின் மேல் ஊன்றிக் கொள்கிறது; கொஞ்சம் கொஞ்சமாக அது இடம் பிடித்துக் கொள்ளுகிறது. கல்>கால்>காலை என்று ஆகிறது. காலை என்பது தமிழ் வழக்கப் படி சூரியன் கீழ்வானில் தோன்றியதில் இருந்து 4 மணி நேரம் (அதாவது 10 நாழிகை) கொண்ட ஒரு பொழுது.

அடுத்தது பகல்.

வய் என்ற தமிழ் வேர் ஒளியைக் குறித்தது. வயக்கம், வயங்கல் என்பன ஒளியைக் குறிக்கும் சொற்கள். வயமீன் என்பது ஒளி மிகுந்த உரோகிணி மீனைக் குறிப்பது. இனி, ஒளி படைத்த கல் வயிரம். வயிரக் கல் கூர்மை உடையதாக அமைந்து, பின் கிழிக்கக் கூடியதாக இருப்பதால் வயிர்த்தது கிழித்ததானது. வயிர்த்தது மெய்த்திரிவால் "வகுத்ததாகி" பிரிப்பு என்னும் பொருள் நீண்டது. பகர வகரப் போலியில் வகுத்தது பகுத்தது என்று ஆகும்.

ஒளியைப் பகுத்துக் கிடைத்த நாளின் நடுப் பொழுது பகல் என்றே அழைக்கப் பட்டது. பகலின் முதலிரு மணிகள் முற்பகல் என்றும், பின்னிரு மணிகள் பிற்பகல் என்றும் அழைக்கப் பட்டன.. நடுவே கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போகும் காலம் நண்பகல் (செறிந்த பகல்) என்றே அழைக்கப் பட்டது. பகு என்னும் சொல்லடி பகு>பகல்>பால் = பிரிவு என்ற பொருளில் நீளும். நண்பகல் என்பது வெப்பத்தின் உச்சி என்பதால் உச்சிப் பொழுது, உச்சி வேளை என்றும், உருக்கி எரிப்பதால் உருமம் என்றும் அழைப்பது உண்டு.

சூரியன் உயரத்தில் தொங்கி இருப்பதை நூங்கி இருப்பது என்றும் சொல்ல முடியும். நூங்கர் என்பவர் உயரத்தில் உள்ள தேவர். நூங்கு என்பது உச்சி. (உயர்ந்த பனை மரம் நுகம்பு/நுகங்கு என்று அழைக்கப் படும். நுகங்கின் காய் நுங்கு.) ஆங்கிலத்தில் noon என்பது பகலின் நடு நேரம் தானே! பகல் என்பது உச்சிக்கு இரண்டு மணி கழித்து முடிகிற பருவம். அல்லும் பகலும் அறுபது நாழிகை என்பது பழமொழி

அல் என்னும் இரவு முப்பது நாழிகை என்பது போல எல் என்னும் சூரியன் இயங்கும் நேரமும் முப்பது நாழிகையே. அந்த எல் படுகின்ற நேரம் எற்பாடு. இந்தப் பொழுது பிற்பகலின் 2 மணி நேரம் கழியும் கணத்தில் ஏற்படுகின்ற பொழுது. இந்தப் பொழுதின் இறுதியில் சூரியன் சாய்கிறான். அதனால் இந்தப் பொழுது சாயுங்காலம் என்றும் அழைக்கப் பட்டது. சாயும் பொழுது சாயுந்தரம் என்றும் அழைக்கப் பட்டது. தருவது என்பது வாய்ப்பது; தருணம் என்பதும் வாய்ப்பே.

பழந்தமிழில் சில துணை வினைகள் உண்டு அவை யாழ்ப்பாணத்தமிழ், மலையாளம் போன்ற வற்றில் இன்னும் ஆளுகையில் உள்ளவை. "எனக்கு இதை அறியத் தருவீர்களா?" இந்த வாக்கில் தருதல் என்பது துணைவினை. அதைப் போல "அப்படி வரச் செய்கையிலே நான் பார்த்தேன்" என்னும் ஆட்சியை சோழர்களின் இடைக் காலக் கல்வெட்டுக்களில் பழகக் காணலாம். "வரச் செய்கையிலே" என்பது தஞ்சாவூர்த் தமிழிலும், பார்ப்பனர் வழக்கிலும் "வரச்சே" என்றே பயிலும். இது போல "சூரியன் சாயச் செய்கையிலே" "சூரியன் சாயச்சே" " சூரியன் சாய்கிறச்சே" என்றும் பேச்சு வழக்கில் மாறும். இதை யாரோ வடமொழிக் காதலர் சாய்கிரட்சை என்று ஒலி பெயர்க்க நாம் மயங்கி சாயுங்காலம் என்ற சொல்லே வடமொழி என்று தவறாக உணர்ந்து கிடக்கிறோம்.

சூரியன் சாய்ந்த பின் இருளும் ஒளியும் முயங்கிக் கிடக்கிறது; பின் மயங்கிக் கிடக்கிறது. முள்>முய்>முயங்கு>மயங்கு என்பது சொற்பிறப்பின் வழி முறை.
மயந்து கிடந்த வினை மயலுதல் என்று சொல்லப் பெறும். மயல்>மால் என்றும்
நீளும். மாலுதல் = மயங்குதல். மயங்கிய வண்ணம் கொண்டதால் தான் விண்ணவன் மாயோன் எனப் படுகிறான். மால் என்றும் சொல்லப் படுகிறான். பகலும் இரவும் கலக்கும் வேளை மாலை நேரம் என்றே சொல்லப் படுகிறது. இதே போல பல மலர்கள் கலந்து தொடுத்த தொடை மாலை; பின்னால் ஒரே மலரால் தொடுக்கப் பட்டதும் மாலை என்றே சொல்லப் பட்டது. மயங்கல் நேரம் பேச்சு வழக்கில் மசங்கல், மசங்கும் பொழுது, மசண்டை, மயண்டை என்றெல்லாம் அழைக்கப் பெறும்.

இரவும் பகலும் பொருந்துகின்ற மாலையை அந்தி என்றும் சொல்லுவது உண்டு. அந்தி>சந்தி. அத்துதல் = ஒட்டுதல், பொருத்தித் தைத்தல், அந்தித்தல் = நெருங்குதல் கூடுதல், ஒன்று சேர்தல். இந்தச் சொல்லின் பிறப்பை உம்> உந்து> அந்து> அந்தி என்று கூறுவர். இதைப் போல காலை நேரத்திற்குச் சற்றுமுன் உள்ள நேரம் காலை அந்தி இது முன்னந்தி, வெள்ளந்தி என்றும்
மாலை அந்தி பின்னந்தி, செவ்வந்தி என்றும் அழைக்கப் பெறும். இந்தச் செவ்வந்தி நேரத்தில் அதே வண்ணத்தில் பூக்கும் பூவைச் செவ்வந்திப்பூ என்றே நம் முன்னோர் அழைத்தனர். "அந்திக்கடை, அந்திக்காப்பு, அந்திமல்லிகை, அந்தி வண்ணன், அந்தி வேளை" என்ற சொல்லாட்சிகளையும் ஓர்ந்து அறியலாம்.

அந்தி என்பது நேரங்கள் கூடுவதை மட்டும் அல்லாது முத்தெருக்கள் கூடும் இடத்தையும் பொருள் விரிவு கொண்டு குறித்தது.

"அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் - சிலப் 14.213
சதுக்கமும் சந்தியும்" திருமுருகு 225

என்ற எடுத்துக் காட்டுக்கள் இதைக் காட்டும்.

இப்படித் தெருக்கள் நேர்வது சந்து என்றும் சந்திப்பு என்றும் அழைக்கப் பட்டது. பலரும் ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி பண்டமாற்றுச் செய்யும் இடம் சந்தை என்றே அழைக்கப் பட்டது.

நாம் அந்தியை இப்படிப் பகலும் இரவும் நேர்கின்ற பொழுது என்று சொல்லுகின்ற போது, மேலையர் evening என்ற சொல்லை சூரியன் அமைகின்ற, அவைகின்ற அவிகின்ற நேரம் என்ற பொருளிலேயே புழங்குவதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இனி, இந்தக் காலத்தில் நாம் கொள்ளும் காலப் பிறழ்ச்சி: மாலை என்பது ஆறு மணிக்குத் தொடங்கி 10 மணிக்கு முடிகிறது. ஆனால் பிறழ்ச்சியாக ஏதோ 4 மணிக்குத் தொடங்கு஢கிறது என்று பலரும் தவறாகக் கொள்ளுகிறோம். இதற்குக் காரணம் எற்பாடு என்ற வேளையையே நம்மில் பலர் மறந்தது தான். இதில் மேலையர் சரியாக இருக்கின்றனர். We will meet in the evening during the dinner" என்னும் போது நேரப் பிறழ்ச்சி கிடையாது.

மாலைக்கு அடுத்த பொழுது யாமம். "யா" என்னும் வேருக்கு இருள், கருமை என்றே பொருள். யா>யாம்>யாமம் = இரவு என்றே அது விரியும். யா மரம் பற்றிச் சங்க இலக்கியங்கள் பெரிதும் சொல்லுகின்றன. யா மரங்கள் நிறைந்த தீவு யாவகம் அது வடமொழிப் பலுக்கலில் ஜாவகம் என்று இன்று அழைக்கப் படுகிறது. யானை, யாடு, ஏனம், ஆந்தை, நாகம், நாவல், ஆம்பி, யாறு, யமன், ஆயம், ஆலம் பொன்ற சொற்கள் எல்லாம் கருமைக் கருத்தில் யா என்ற வேரில் இருந்து தோன்றியவையே.

நாள் என்ற சொல்லே முதலில் இரவைக் குறிக்கும் பொருளில் யா> யாஅல்> யால்> ஞால்> ஞாள்> நாள் என்று அமைந்தது. அரைநாள் என்பது ஒரு காலத்தில் நள்ளிரவு, அரையிரவு என்பதையே குறித்தது. பால்+நாள் = பானாள் என்ற சொல்லும், நடு நாள் என்ற சொல்லும் இதே போல பாதிஇரவு, நடு இரவு என்பதையே குறித்தன. யாமம் என்பது வடமொழிப் பலுக்கலில் யாமம்> சியாமம்> ஜாமம் என்று மாறும். சாமக்காரன், சாமக்காவல், சாமக்கோழி போன்றவை பேச்சு வழக்கில் உள்ள சொற்கள்.

யாமம் என்பது இரவு 10 ல் இருந்து நாலுமணி நேரம் நீண்டிருப்பது. பின்னாளில் முழு இரவையுமே ( ஆறில் இருந்து ஆறு வரை) யாமம் என்று சொல்லத் தலைப் பட்டு மாலையாமம், இடையாமம், வைகறையாமம் என்ற மூன்று பகுதிகள் வரையறுக்கப் பட்டன. நச்சினார்க்கினியர் காலத்தில் இரவு 12 மணியும் நான்கு பகுதிகளாகக் கருதப் பட்டு முதல் யாமம், இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நாலாம் யாமம் என்ற பிரிவுகள் தோன்றின.

கடைசிப் பொழுது இரண்டு பெயர்களால் அழைக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பொழுதின் முடிவில் தான் கதிரவன் எழுகிறான். கதிரவன் வரவால் அடி வானம் வெளுக்கிறது. வெள்>வெளு=வெண்மையாகு என்றும் வெளித்தல் = வெண்ணிறங் கொள்ளுதல் என்றும் பொருள் கொளுகின்றன. வெளி>வெடி = விடி என்று பலுக்கலில் வேறுபடும். விடியல் என்பது வெளுப்பதே. இப்படி ஒளியில் இருந்து பெயரிட்டது விடியல்; மாறாக இருளில் இருந்து பெயரிட்டது வைகறை.
வைகுறு>வைகுறை>வைவகறை. வை என்பது இங்கு இருளையே குறிக்கிறது. வைகும் இருள் குறைந்து வரும் இறுதிக் காலம் வைகுறைக் காலம் . இதற்குப் பின் ஒரு நாளில் இருள் கிடையாது. பின் மறு நாள் பிறந்து விடும் எனவே இது வைகுறை. மேலையரும் மையிருட்டு அறுகும் காலம் என்ற பொருளிலேயே (மாய்+அறுகு =மாயறுகு>மாறுகு) morgan>morn>morning என்ற சொல்லை ஆளுகிறார்கள்.

இந்தச் சிறு பொழுதுகளை அந்தந்தப் பொருளில் புழங்கத் தொடங்கினால் காலப் பிறழ்ச்சி குறையும். தமிழர்கள் காலம் பற்றி அக்கறையில்லாதவர்கள் என்ற இந்தக் காலப் பொதுவான கருத்தை மாற்றுவோமே! என்ன சொல்கிறீர்கள்?

முடிப்பதற்கு முன், சிறு பொழுது ஒன்றிற்கு பெருஞ்சித்திரனாரின் கூறிய உவமையை இங்கு எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
"கல்லெறி கருவியின் முனையினின்று உருவிப் போகும் சிறு கல்லைப் போல வாழ்க்கையின் விசைப்பு ஒரு அளவு பட்ட சிறு பொழுதே"
வாழ்க்கையே அவ்வபவு தாங்க. "சர்ர்ர்ர்ர்ர்........"

இறைவன் உண்மையை அவர் இந்தப் பாடலில் சொல்லியிருக்கும் கருத்து உணர்ந்து அறிய வேண்டியது.
----------------------------------------------------------------------------------------------
எவன்கொல் அறிகும்

எவன்கொல் அறிகும் இறையவன் கிடக்கை!
கவண்முகத்து உருவிய சிறுகல் போல
விசைப்பே அளவிடைப் பொழுதே! வினையே
நசையள வயினே; நலிதலும் மெலிதலும்
அதனுட் பட்ட வை பொறி வழிய!
செவ்விதின் அமையா ஐம்பொறி முனைப்பும்
எல்லையுள் வாங்கும் அறிவின் ஆன!
இவைகொடு தெளிவே இறையவன் உண்மை!
அவன் திறல் மேற்றே அண்டம்;
அவிழ்தலும் குவிதலும் அரிது மற்று அறிவே!

-நூறாசிரியம் - 31

பொழிப்பு:

இறைவனின் இருக்கையை எவரே அறிகுவர்? கல்லெறி கருவியின் முனையினின்று உருவிப் போகும் சிறு கல்லைப் போலும் வாழ்க்கையின் விசைப்பு ஓர் அளவு பாட சிறு பொழுதே. அவ்விடைப் பொழுதில் செய்யப் பெறும் வினையோ, உள்ளத்து எழுந்த விருப்பத்தைப் பொருத்தது. உடல், உள்ள நலிவுகளும், மெலிவுகளும் அவ்விருப்பத்தின் உள்ளடங்குவன. அந் நலிவும் மெலிவும் உள்ளடங்கிய விருப்பமும், வினையும் உடலின் ஐம்பொறிகளை வாயாகக் கொண்டன. ஒன்றுக்கொன்று மேலவும் தாழவும் ஆகச் செப்பமுற அமையாத அவ்வைம்பொறிகளும் தம்முன் முனைத்து நிற்பினும், அவற்றின் அறிதிறனோ ஓர் எல்லையுள் வாங்கும் அளவுடையது. இயல்வனவும் இயலாதனவும் ஆகிய இவற்றைக் கொண்டுதான் இறைவனின் உண்மை தெளியப் பெறுதல் வேண்டும் அத்தகு இறைவனின் ஒளியின் மேலும் வலியின் மேலும் அளாவி நிற்பவைதாம் இவ்வுலக உருண்டையும் இதுபோல் பிறவும். அவற்றின் மலர்ச்சியாகிய தோற்றத்தையும், கூம்புதலாகிய ஒடுக்கத்தையும் அறிவது அரியது; இயலாதது.

விரிப்பு:
இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

அகச்செருக்கும் அறிவுச் செருக்கும் வினைச்செருக்கும் மிகுந்து அருளும், மெய்யறிவும் அடக்கமும் குறைந்தவரும் தற்காலத்து இறைமை பொதுளிய இயற்கைத் தன்மையினை மறந்து வாழும் மாந்த உயிர்களுக்கு உள்ளொளி கொளுத்தி உயிர் இயக்கம் சிறக்கக் கூறியதாகும் இப்பாட்டு.

இப்பாடல் இறைப்பொருளின் இருப்பு நிலை பற்றித் தெளியவிலாதார்க்கும் தெளிந்தார்ப் போலப் பிதற்றுநர்க்கும் உலகியல் கூறி அறிவின் தன்மையையும் அறியப் பெறும் பொருளின் நுண்மையையும் புலப்படுத்துவதாகும்.

இது பொதுவியல் என் திணையும் முதுமொழிக் காஞ்சி என் துறையுமாம்.
-------------------------------------------------------------------------------------------------------

In TSCII:

¸¡Äí¸û - 4

4. ¦À¡ØиǢý ¦À¡ÕÇ¡Æõ

´Õ Å¢¨É¨Â «øÄРŢ¨Ç¡ð¨¼ò ¦¾¡¼íÌõ §À¡Ð, ¿¡½Âò¨¾ò à츢ô §À¡ðÎ "¾¨Ä¡, âÅ¡" ±ýÚ À¡÷츢§È¡õ þø¨Ä¡? þ¾¢ø ´ý¨È ²üÀÐõ Áü¦È¡ý¨È ÁÚôÀÐõ ÅÆì¸Á¡ÉÐ ¾¡ý. þó¾ò ¾¨Ä¡/âÅ¡ô À¡÷¨Å º¢Ä§À¡Ð¸Ç¢ø ¿¡õ ÒÆíÌõ ¦Á¡Æ¢Â¢ý ¦º¡øŨ¼¸ÙìÌì ܼ ¯ñÎ. "¬ø §À¡ø ¾¨ÆòÐ «ÚÌ §À¡ø §Å§Ã¡Ê" ±ýÈ ´Õ ¦º¡ÄŨ¼¨Â Å¡úòÐì ÜÚõ Ó¸Á¡¸ò ¾Á¢Æ¢ø §¸ûÅ¢ôÀðÊÕìÌõ ¿£í¸û «¾ý þý¦É¡Õ Àì¸ò¨¾ µ÷óÐ À¡÷ò¾¢Õ츢ȣ÷¸§Ç¡? ¬§Ä¡, «Ú§¸¡ Áü¦È¡Õ ¿¢Äò¾¢¨½¨Âò ¾¡ý þÕìÌõ ÒÄò¾¢üÌû ÅÇÃÅ¢¼¡Ð ±ýÈ ¸Õò¨¾ ±ñ½¢ô À¡÷ò¾Ðñ¼¡? þó¾ «Ç×ìÌ ÓüÈ¡Ù¨Á ¦¸¡ñ¼ ¿¢Äò¾¢¨½¸¨Ç ¿¢Äò¾¢ø À¾¢Â ¨Åì¸ ÓüÀÎõ ÓýÉ÷ º¢ó¾¨É §Åñ¼¡Á¡? ¬Ä¢ý ¿¢ÆÄ¢ø Á¡¨Å ¿¼ ÓÊÔ§Á¡?

þôÀÊò ¾¨ÆòÐ §Å§Ã¡Îõ ÓüÈ¡Ù¨Á º¢Ä ¿¡¸Ã£¸í¸ÙìÌì ܼ ¯ñÎ. þÅü¨È ±íÌ ¿¼§ÅñÎõ, ±ôÀÊ ¿¼ §ÅñÎõ ±ýÀ¾¢ø ÀÄ §¿Ãõ ¿¡õ ¸ÅÉõ ¦¸¡ûÇò ¾ÅÈ¢ Ţθ¢§È¡õ. þü¨Èì ¸¡Äò¾¢ø ¦ÀÕõÀ¡Ä¡É ¿¡Î¸Ç¢ø ÅÇ÷óÐûÇ §Á¨Ä ¿¡¸Ã¢¸ò¾¢ý ¾¡ì¸õ ¿øľ¡, ¦¸ð¼¾¡ ±ýÀ¨¾ ¯¨Ã¡¼ ¿¡ý þíÌ ÓüÀ¼ Å¢ø¨Ä. ¬É¡ø §Á¨Ä ¿¡¸Ã¢¸õ «ó¾ó¾ ¿¡ðÎ ¿¡¸Ã¢¸í¸¨Ç ÅÇÃÅ¢¼¡Ð ¾¡§É ÓüÈ¡Ù¨Á ¦¸¡ñÎ ¯Ä¸ò¨¾ Á¡üÈ¢ ÅÕ¸¢ÈÐ ±ýÀÐ ¯ñ¨Á¡¸ þÕ츢ÈÐ. «Ð ѨÆó¾ ´Õ º¢Ä ¬ñθǢø, ¯ûé÷ ÁÃÒ¸û Á¡È¢Å¢Î¸¢ýÈÉ. ¬úóÐ À¡÷ò¾¡ø, ¯ûé÷ ¾¢ÕŢơ츨Çì ¦¸¡ñ¼¡ÎÅРܼì ̨ÈóÐ ÅÕ¸¢ÈÐ; §ÀîÍ, ¿¨¼, ¯¨¼, ÀÆì¸ ÅÆì¸í¸û ±øÄ¡§Á Á¡Ú¸¢ýÈÉ. ÓÊÅ¢ø "¸¡Ä§Á Á¡È¢ô §À¡îÍí¸" ±ýÚ ¦º¡øÄò ¦¾¡¼í¸¢ Ţθ¢§È¡õ. ¸¡Ä Á¡üÚ ±ýÀÐ ¯½÷óÐ «È¢Â §ÅñÊÂÐ.

þó¾ «¾¢¸¡Ãò¾¢ø ¸¡Äõ, ¦À¡ØÐ §À¡ýÈ ¦À¡Ð¨Áì ¸ÕòÐ츨ÇÔõ º¢Ú ¦À¡Øиû ÀüÈ¢Ôõ À¡÷ô§À¡õ.

¸¡Äõ ±ýÛõ §À¡Ð ¿¡ûÀ¢ÈôÒ, Á¡¾ô À¢ÈôÒ, ¬ñÎô À¢ÈôÒ §À¡ýȨÅÔõ «¾¢ø ¯ûǼíÌõ. ¿ÁìÌò ¦¾Ã¢óÐ þó¾ì ¸¡Äò¾¢ø ±ò¾¨É§Â¡ ¾Á¢Æ÷¸û ¬í¸¢Ä ¬ñÎô À¢ÈôÀ¢ý §À¡Ð ¿ûÇ¢Ã× Å¨Ã ¸¡ò¾¢ÕôÀÐõ, þÃ× ÀýÉ¢ÃñÎ Á½¢ ¬É×¼ý ´ÕÅÕ즸¡ÕÅ÷ ¨¸¨Âì ÌÖ츢 Òò¾¡ñÎ Å¡úòÐ츨Çî ¦º¡øÖÅÐõ ¬¸ô Ò¾¢Â º¼í¸¢üÌ Á¡È¢ì ¦¸¡ñÎ ÅÕ¸¢È¡÷¸û. þ¨¾ô §À¡ýÈÅü¨Èì ¸¡ð¼¡¸î ¦º¡øÄ¢ò¾¡ý "¾Á¢Æ÷¸û ̨ÈóÐò ¾Á¢í¸¢Ä÷¸û ¦ÀÕòРŢð¼¡÷¸û", ±ýÚ ¿¡ý «ùÅô¦À¡ØÐ ÜÚÅÐ ¯ñÎ.

¬É¡Öõ ¿¡û ±ýÀÐ ¿ûÇ¢ÃÅ¢ø ¾¡ý À¢È츢Ⱦ¡? ÒŢ¢ý ¾ýÛÕð¼Ä¢ø ¦¾¡¼ì¸õ ±ýÚ ±¨¾î ¦º¡øÄ ÓÊÔõ? ¿¡¸Ã¢¸í¸Ç¢ý ÅÇ÷¢ø ´ù¦Å¡ÕÅÕõ ´ù¦Å¡ÕÅ¢¾Á¡¸ ¿¡ð¸û À¢ÈôÀ¨¾ì ¸½ì¸¢ø ±ÎòÐì ¦¸¡ñÎ þÕ츢ȡ÷¸û.

þý¨ÈìÌõ ºó¾¢ÃÁ¡Éò¨¾ì ¸¨¼ôÀ¢ÊìÌõ, «¾¡ÅÐ ¿¢Ä¨Å ÁðΧÁ ¨ÅòÐ Á¡É¢ìÌõ - «Ç× ¦ºöÔõ - «ÃÒ ¿¡Î¸û ±øÄ¡õ, "¿¢Ä×õ Å¢ñÁ£ý¸Ùõ ¸ñÓý§É §¾¡ýÚõ §À¡§¾" ¿¡û À¢ÈôÀ¾¡¸ì ¦¸¡ûÙ¸¢ýÈÉ. Óó¨¾Â «¾¢¸¡Ãí¸Ç¢ø, ¿¡û ±ýÈ¡ø þÃ× ±ýÚõ, À¢ý þÃÅ¢ø ÅÕõ Å¢ñÁ£ý ±ýÚõ ¦À¡Õû ¬Æõ ¦º¡ý§É¡§Á ¿¢¨ÉÅ¢Õ츢Ⱦ¡? «ó¾ô ¦À¡ÕÇ¢ý ÅÆ¢ À¡÷ò¾¡ø, ´Õ ¿¡¨Ç þôÀÊ Å¨ÃÂ¨È ¦ºöÅÐõ ´ÕŨ¸Â¢ø ¦À¡Õò¾õ ¾¡ý.

ÓüÈ¢Öõ Ýâ Á¡Éò¨¾§Â À¢ý ÀüÚ¸¢È §Á¨Ä ¿¡¸Ã¢¸§Á¡ þý¦É¡Õ Ũ¸Â¢ø þ¨¾ô À¡÷츢ÈÐ. ÒŢ¢ý ¿Îì §¸¡ðÊø µÃ¢¼ò¾¢ø ¿¡õ Å¡ú¸¢§È¡õ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û. ÒŢ¢ý ¾ýÛÕð¼Ä¢ø Ýâ¨Éô À¡÷ôÀ¾¢ø þÕóÐ ¿¡õ Ţĸ¢ì ¦¸¡ñ§¼ ÍüÈ¢ ÅÕ¸¢§È¡õ. ´Õ §¿Ãò¾¢ø ¿¡õ Å¡Øõ þ¼õ ÝâÂÛìÌ §¿¦Ã¾¢Ã¡¸ 180 À¡¨¸Â¢ø ÅóРŢθ¢ÈÐ. «ó¾ô ¦À¡Ø¨¾ ¿¡õ ¿ûÇ¢Ã× ±ýÚ ¦º¡ø֧šõ. ÁÚÀÊÔõ Ý̢嬃 §¿¡ì¸¢î ÍüÈò ¦¾¡¼íÌŨ¾ ÒÐ ¿¡û ±ýÚ ¦¸¡ûÅÐ §Á¨Ä ¿¡ðÎô À¡÷¨Å.

ÝâÂ-ºó¾¢ÃÁ¡Éò¨¾ô À¢ý ÀüÚõ ¿¡§Á¡, ÝâÂý ¸£úÅ¡Éò¾¢ø ӾĢø ¦¾Ã¢Å¨¾§Â ¿¡ðÀ¢ÈôÀ¡¸ì ¦¸¡û¸¢§È¡õ. þý¨ÈÂì ¸£úÅ¡Éî ÝâÂÉ¢ø þÕóÐ «Îò¾ ¸£úÅ¡Éî ÝâÂý ¦¾Ã¢Ôõ Ũà ¿£Ùõ ¸¡Äò¨¾ ´Õ ¿¡û ±ýÚõ, þó¾ ´Õ ¿¡¨Çô ÀÌòÐ º¢È¢Â ¸¡Äí¸¨Çì ÌÈ¢ìÌõ Ũ¸Â¢ø «ÈÅ𼡸 (arbitrary) ´Õ ¿¡¨ÇìÌ 24 Á½¢ ±ýÚõ, «¾É¢Öõ º¢È¢Â «Ä¨¸, ÑÏò¾õ (minute) ±ýÚ ¦¸¡ñÎ ´Õ Á½¢ìÌ 60 ÑÏò¾õ ±ýÚõ, «¾É¢Ûõ º¢È¢Â «Ä¨¸ ¦¿¡Ê (second) ±ýÚ ¦¸¡ñÎ ´Õ ÑÏò¾ò¾¢üÌ 60 ¦¿¡Ê ±ýÚõ þó¾ì ¸¡Äò¾¢ø ÅÌò¾¢Õ츢§È¡õ. þ§¾ §À¡Ä ¿õ Óý§É¡÷ ´Õ ¿¡¨Ç 60 ¿¡Æ¢¨¸Â¡¸×õ «¨¾ þýÛõ º¢È¢¾¡¸ 60 Å¢¿¡Æ¢¨¸Â¡¸×õ ÀÌò¾¢Õ츢ȡ÷¸û. þ¨Å¦ÂøÄ¡õ ¸¡Äò¨¾ «Ï «ÏÅ¡¸ ¿ÁìÌ ¯½Ã ¨ÅìÌõ ²Ðì¸û.

«ó¾ì ¸¡Äò¾¢ø ¿£÷ì ¸Ê¨¸Ôõ, Á½ü ¸Ê¨¸Ôõ §À¡ýÈÅü¨Èì ¦¸¡ñÎõ, ¿ðÎ ¨Åò¾ Ì¢ý ¿¢Æ¨Äì ¦¸¡ñÎõ ¾¡ý ¿¡Æ¢¨¸¸¨Ç «Çó¾¡÷¸û. ¿¡Æ¢>¿¡Æ¢¨¸ = ¯û ШÇô ¦À¡Õû. ¿¡Æ¢¨¸ ÅðÊÄ¢ø ¯ûÇ ¿£÷ «øÄÐ Á½ø ÓØÅÐõ Å¢Øõ §¿Ãõ ¿¡Æ¢¨¸ ±ÉôÀð¼Ð. þó¾ì ¸¡Äò¾¢ø þÐ 24 ÑÏò¾í¸ÙìÌ ´ôÀ¡ÉÐ. þó¾ ¯û ШÇô ¦À¡ÕÇ¢ø ¾¡ý, §¸¡Â¢Ä¢ø ÓÄÅ÷ þÕìÌõ ¯ûÇ¨È Ü¼ ¯û ¿¡Æ¢¨¸ ±ý§È «¨Æì¸ô Àð¼Ð. þó¾ ¿¡Æ¢¨¸ ±ýÛõ ¦º¡ø Á¨Ä¡Çò¾¢ø ¿¡Æ¢¸ ±ýÚõ, ¸ýɼò¾¢ø ¿¡Æ¢§¸ ±ýÚõ «¨Æì¸ô Àð¼Ð. ¿¡Æ¢ì ¸¢½Ú (þÐ ¾¡ý «ö¡ þó¾ì ¸¡ÄòÐô Ò¨Ãì ¸¢½Ú - bore well), ¿¡Æ¢î ¦ºõÒ, ¿¡Æ¢ Á½¢, ¿¡Æ¢§Â¡Î, ¿¡Æ¢ ÅÆ¢ ±ýÈ ¦º¡øġ𺢸¨ÇÔõ þ¨½òÐô À¡÷òÐ «È¢ÂÄ¡õ. ¿¡Æ¢¨¸ ±ýÀ¨¾§Â ¸Ê¨¸ ±ýÚ ¦º¡øÖÅ¡Õõ ¯ñÎ.

¿¡Æ¢¨¸ìÌ «ÎòÐî º¢È¢Â «ÇÅ¢ø ¿¢¨ÁÂõ ±ýÈ «ÄÌ ´ýÚ ¯ñÎ. ¦º¡ü¦À¡Õû «ÇÅ¢ø À¡÷ò¾¡ø «¨¾ þ¨Á츢ýÈ «øÄÐ ¦¿¡Ê츢ýÈ §¿Ãõ ±ýÚ ¾¡ý ¦º¡øÄ ÓÊÔõ. ¬É¡ø «Ð ¿¢¨ÁÂõ ±ýÚ ¾¢Ã¢óÐ, ¦¿¡Ê¨Âì ÌÈ¢ôÀ¾üÌ Á¡È¡¸ô À¢Èú ²üÀðÎ þýÚ ÑÏò¾ò¨¾ì ÌÈ¢òÐ ¿¢ü¸¢ÈÐ. þó¾ô À¢Èú ±¾É¡ø ±ô§À¡Ð ²üÀð¼Ð ±ýÚ Å¢Çí¸Å¢ø¨Ä.

þÉ¢ì ¸¡Äõ, §¿Ãõ, §Å¨Ç, «¨ÁÂõ, º¨ÁÂõ, ÀÕÅõ §À¡ýÈ ¦À¡Ðî ¦º¡ü¸Ç¢ý ¦À¡ÕðÀ¡ð¨¼ô À¡÷ô§À¡õ.

"¦À¡ØÐ ÒÈôÀð¼Ð, ¦À¡ØÐ º¡öó¾Ð" ±ýÛõ §À¡Ð «Ð §¿Ãò¨¾ ÁðÎõ ÌÈ¢ì¸Å¢ø¨Ä; Ýâ¨ÉÔõ ÌȢ츢ÈÐ. §À¡ú¾ø ±ýÈ¡ø À¢Çò¾ø, ¦Åðξø, ¿£ì̾ø ±ýÈ ¦À¡Õû ¯ñÎ. Á¨Ä¡Çò¾¢ø ܼô §À¡ú ±ýÚõ, ¸ýɼò¾¢ø ¦†¡òÐ (§À¡úÐ>§À¡Ð>¦À¡òÐ>¦†¡òÐ) ±ýÚõ, ¦¾Öí¸¢ø ô¦Ã¡òÐ (Ƹà øÃô §À¡Ä¢) ±ýÚõ, ÐÙÅ¢ø ¦À¡÷Ð ±ýÚõ þó¾î ¦º¡ø «¨Æì¸ô ÀÎõ. ¦À¡ØÐ ±ýÈ ¦º¡ø ¦À¡ûÙ¾ø ±ýÛõ Å¢¨É¢ý «Êô À¢Èó¾Ð. ¦À¡ûÙ¾ø ±ýÀÐ À¢ÇôÀ§¾. þÕ¨Çô À¢ÇôÀ¾¡ø ÝâÂý ¦À¡ØÐ ±É «¨Æì¸ô Àð¼¡ý. ¿¡Ç¡Åð¼ò¾¢ø §¿Ãõ ±ýÈ ¦À¡Ð¨ÁôÀ¡ð¨¼Ôõ þó¾ô ¦À¡ØÐ ±ýÈ ¦º¡ø «¨¼ó¾Ð.

«§¾ §À¡Ä ¸øÖ¾ø ±ýÀÐ þÂü¨¸Â¡¸×õ ¦ºÂü¨¸Â¡Öõ ¿¼ìÌõ §¾¡ñξø Å¢¨É¨Âì ÌÈ¢ìÌõ ¦º¡ø. §¾¡ñΞ¡ø À¢Ã¢×, «Ê¿¢Äõ §À¡ýÈ ¦À¡ÕðÀ¡Î¸Ùõ ¯¼ý À¢ýÈÉ. ¸øÄ¢ì ¦¸¡ñ§¼ þÕó¾¡ø «Ð ¸¡ÖÅÐ ±ýÚ µ¨ºÂ¢ø ¿£Ùõ. ¾Á¢Æ¢ø ¿£ðº¢¨Âì ÌÈ¢òÐÅÕõ ÀÄ ¦º¡ü¸û ¿£ð¦¼¡Ä¢ ¦¸¡ñ§¼ þÕ츢ýÈÉ. ¸¡ÄôÀð¼Ð ±ýÀÐ ¯ñ¨Á¢ø ÀûÇô ÀÎŧ¾! ¸¡Äô À¡ð¼Ð ¿£ñ§¼¡ «ý§Èø ¬ú󧾡 þÕìÌõ. þ¨½Â¡¸ þýÛõ þÃñÎ ¦º¡ü¸¨Çî ¦º¡øÄÄ¡õ. ÀûÇô Àð¼Ð ¿£ñÎ §À¡öô À¡ú ±ýÚõ, À¡Æô Àð¼ ¾Äõ À¡ú¾Äõ> À¡¾Äõ> À¡¾¡Çõ ±ýÚõ, ÀÈ¢Âô Àð¼Ð ¿£Ùõ §À¡Ð À¡È¢Â¾¡¸×õ Á¡Úõ.

¸¡Äô Àð¼ Å¡ö(=ÅÆ¢) ¸¡øÅ¡ö. þó¾ô ¦À¡ÕðÀ¡ðÎ ÅÇ÷¢ø ¸¡ø ±ýÈ ¦º¡øÖ째 ¿£ñ¼Ð ±ý§È ¦À¡ÕðÀ¡Î À¢Äò ¦¾¡¼íÌÅÐ þÂü¨¸§Â.

¸øÄô Àð¼ ÀûÇõ ¿£ñÎ ¸¢¼óÐ ¸¡ø ±É ¬ÉÐ §À¡Äì ¸øÄ¢ ±Îì¸ô Àð¼ ¿£ñ¼ àÏõ ¸¡ø ±ý§È ÅÆí¸ô Àð¼Ð. þ¨½Â¡¸ô ÀûÇ¢ ±Îì¸ô Àð¼Ð À¡Çõ ±ýÚõ, ÀÈ¢óÐ ±Îì¸ô Àð¼Ð À¡¨È ±ýÚõ ¦º¡øÄô ¦ÀÚ¸¢È¾øÄÅ¡?

þýÛõ ¦¾¡¼÷¡¸ò ਽ô §À¡ýÈ ¯¼ø ¯ÚôÒõ ¸¡ø ±ý§È ´ôÒ¨Á¡ø ÅÆí¸¢Â¢Õì¸ §ÅñÎõ. þÉ¢ò ¾É¢ò¦¾Îò¾ ਽ §Å¦È¡Õ þ¼ò¾¢ø °ýÚõ §À¡Ð ¸¡Ö¾ø, ¸¡ø§¸¡û ±ý§È ¦º¡øÄô Àð¼Ð. àñ§À¡ø ¯¼õ¨Àò ¾¡íÌõ ¯ÚôÀ¡É ¸¡ø ¯¼õÀ¢ý ¿¡Ä¢ø ´Õ À̾¢¨ÂÔõ ÌÈ¢ò¾Ð. (ÓÊÅ¢ø ¸¡ø ±ýÈ ±ñ¨½Ôõ ÌÈ¢ò¾Ð.) ¸¡ø §À¡ýÈ ¯ÚôÒ Ó측Ģ, ¿¡ü¸¡Ä¢ ±ýÚ Å¨¸ ¦¾Ã¢óÐ «¨Æì¸ô Àð¼Ð. ¸¡Äô Àð¼ (°ýÈô Àð¼) ¸¡Ã½ò¾¡ø ¦¸¡Ê측ø, ¿¡üÈí¸¡ø ±ýÈ ¦º¡øġ𺢸Ùõ ²üÀð¼É. ¿£ñÎ ¦¾¡¼Õõ ¸¡ø §ÁÖõ ¦À¡Õû Ţâ𺢠¦ÀüÚ ÌÊ ÁèÀÔõ ÌÈ¢ò¾Ð.

¸¡Ä¢ý ¦À¡ÕðÀ¡Î «§¾¡Î ¿¢ü¸Å¢ø¨Ä; þýÛõ ¦À¡ÕðÀ¡Î ¦ÀÕ¸¢, ¸¡ø ±ýÛõ ¯¼ø ¯ÚôÒ þÂí̸¢È ¸¡Ã½ò¾¡ø ¸¡Ö¾ø (=«¨º¾ø) ±ýÈ þý¦É¡Õ ÒÆì¸ò¨¾Ôõ §¾¡üÚÅ¢ò¾¢Õ츢ÈÐ. «ó¾ þÂì¸ò¨¾ §À¡ýÚ, ¸¢¨Ç¸Ùõ ÁÃí¸Ùõ «¨ºÅ¾¡ø ¿õ¨Áî ÍüÈ¢ Õì¸¢È ÅÇ¢Áñ¼Äò¾¢ý «¨º¨ÅÔõ ¸¡ø ±ý§È ÀÆó¾Á¢Æý «¨Æò¾¡ý. þôÀÊ «¨ºÔõ ¸¡ø §ÁÖõ иà ®Ú ¦ÀüÚ ¸¡üÚ ±É ¬Â¢üÚ.

¸¡ÖìÌ ¿£ðº¢ ±ýÈ ¦À¡Õû Åó¾À¢ý ¿£ñÎ §À¡É §¿ÃÓõ Ü¼ì ¸¡ø ±ý§È «¨Æì¸ô Àð¼Ð. ¸¡ø ¸¡¨Ä¡¸¢, ¸¡ÄÓõ ¬¸¢ ¦À¡ØÐ §¿Ãõ ±Éô ¦À¡Ð¨Áì ¸Õò¨¾ì ÌÈ¢ò¾Ð.

¦À¦áΠ¦À¨Ãô Ò½÷ìÌí ¸¡Öõ - ¦¾¡ø. 108
±øÄ¡ ±ØòÐï ¦º¡øÖõ ¸¡¨Ä - ¦¾¡ø 83
¸¡Äõ ¾¡§Á ãý¦ÈÉ ¦Á¡Æ¢À - ¦¾¡ø 684

±ýÈ ¦¾¡ø¸¡ôÀ¢Â Åâ¸Ùõ þíÌ ±ñ½¢ô À¡÷ì¸ò ¾ì¸¨Å.
¦Á¡ò¾ò¾¢ø ¸¡Ä¢ý ¦À¡ÕðÀ¡ðÎ ÅÇ÷ Á¢¸ô ¦ÀâÐ; ¸¡Äí¸Ùõ
¿£ñ¼¨Å ¾¡§É!

§¿÷ó¾Ð §¿Ãõ ±ýÚõ ¿¢¸úó¾Ð ¿¢¸ú× ±ýÚõ, «¨Áó¾Ð «¨ÁÂõ/º¨ÁÂõ ±ýÚõ, ¸¡Äò¨¾ô ÀÌòÐ (Å¢ûÇ¢ÂÐ) §Å¨Ç/§Å¨Ä ±ýÚõ, ¦º¡ü¸û ¸¢Ç÷ó¾¾¢ø Å¢ÂôÒ ´ýÚõ þø¨Ä. þó¾ì ¸¡Äò¾¢ø ¸É¢óÐ ÀìÌÅÁ¡É §Å¨Ç§Â, º¨ÁÂõ ±ýÚ «¨Æì¸ô Àθ¢ÈÐ. ºÃ¢Â¡É º¨ÁÂõ ±ýÈ ¦º¡øġ𺢨Âì ¸ÅÉ¢Ôí¸û. «§¾ §À¡Ä ´Õ ¦À¡Õû Ѹ÷째üÈ «Ç× ¸É¢óÐ ÀÕò¾¢ÕìÌõ ¿¢¨Ä ÀÕÅõ ±ý§È «¨Æì¸ô Àθ¢ÈÐ. ´ôÒ¨Á¢ø «ó¾ ¿¢¨Ä «¨Ážü¸¡É §¿ÃÓõ ÀÕÅõ ±ý§È «¨Æì¸ô Àθ¢ÈÐ.

þÉ¢î º¢Ú ¦À¡Øи¨Çì ÌÈ¢ìÌõ ¦º¡ü¸¨Çô À¡÷ô§À¡õ. ´Õ ¿¡¨Ç ¬Ú §À¡Ð¸Ç¡¸ô À¢Ã¢òÐ ´ù¦Å¡Õ §À¡ÐìÌõ 10 ¿¡Æ¢¨¸¸û ±ýÚ ¦¸¡ñÎ, ¸¡¨Ä, À¸ø, ±üÀ¡Î, Á¡¨Ä, ¡Áõ, ¨Å¸¨È («øÄÐ) Å¢ÊÂø ±ýÚõ ¿õÁÅ÷¸û «¨Æò¾¡÷¸û. §Áø¿¡ðÊÉ÷ þôÀÊ ´Õ ¿¡¨Ç ¬Ú À̾¢¸Ç¡¸ô ÀÌò¾Ð þø¨Ä. «§¾ ¦À¡ØÐ morning, noon, evening, night ±ýÈ §ÅÚÀð¼ ¦º¡ü¸¨Çô ÒÆí̸¢È¡÷¸û.

¸¡Ö¾ø ±ýÈ ¦º¡ø °ýÚ¾ø ±ýÈ ¦À¡ÕÇ¢ø ´Õ ¿¡Ç¢ý Ó¾ü º¢Ú¦À¡Ø¨¾ì ÌȢ츢ÈÐ. þó¾ô ¦À¡Ø¾¢ý ¦¾¡¼ì¸ò¾¢ø ÝâÂÉ¢ý ´Ç¢ ¯Ä¸¢ý §Áø °ýÈ¢ì ¦¸¡û¸¢ÈÐ; ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ «Ð þ¼õ À¢ÊòÐì ¦¸¡ûÙ¸¢ÈÐ. ¸ø>¸¡ø>¸¡¨Ä ±ýÚ ¬¸¢ÈÐ. ¸¡¨Ä ±ýÀÐ ¾Á¢ú ÅÆì¸ô ÀÊ ÝâÂý ¸£úÅ¡É¢ø §¾¡ýȢ¾¢ø þÕóÐ 4 Á½¢ §¿Ãõ («¾¡ÅÐ 10 ¿¡Æ¢¨¸) ¦¸¡ñ¼ ´Õ ¦À¡ØÐ.

«Îò¾Ð À¸ø.

Åö ±ýÈ ¾Á¢ú §Å÷ ´Ç¢¨Âì ÌÈ¢ò¾Ð. ÅÂì¸õ, ÅÂí¸ø ±ýÀÉ ´Ç¢¨Âì ÌÈ¢ìÌõ ¦º¡ü¸û. ÅÂÁ£ý ±ýÀÐ ´Ç¢ Á¢Ìó¾ ¯§Ã¡¸¢½¢ Á£¨Éì ÌÈ¢ôÀÐ. þÉ¢, ´Ç¢ À¨¼ò¾ ¸ø Å¢Ãõ. Å¢Ãì ¸ø Ü÷¨Á ¯¨¼Â¾¡¸ «¨ÁóÐ, À¢ý ¸¢Æ¢ì¸ì Üʾ¡¸ þÕôÀ¾¡ø Å¢÷ò¾Ð ¸¢Æ¢ò¾¾¡ÉÐ. Å¢÷ò¾Ð ¦Áöò¾¢Ã¢Å¡ø "ÅÌò¾¾¡¸¢" À¢Ã¢ôÒ ±ýÛõ ¦À¡Õû ¿£ñ¼Ð. À¸Ã ŸÃô §À¡Ä¢Â¢ø ÅÌò¾Ð ÀÌò¾Ð ±ýÚ ¬Ìõ.

´Ç¢¨Âô ÀÌòÐì ¸¢¨¼ò¾ ¿¡Ç¢ý ¿Îô ¦À¡ØÐ À¸ø ±ý§È «¨Æì¸ô Àð¼Ð. À¸Ä¢ý Ó¾Ä¢Õ Á½¢¸û ÓüÀ¸ø ±ýÚõ, À¢ýÉ¢Õ Á½¢¸û À¢üÀ¸ø ±ýÚõ «¨Æì¸ô Àð¼É.. ¿Î§Å ¸ñ½¢¨ÁìÌõ §¿Ãò¾¢ø ÅóÐ §À¡Ìõ ¸¡Äõ ¿ñÀ¸ø (¦ºÈ¢ó¾ À¸ø) ±ý§È «¨Æì¸ô Àð¼Ð. ÀÌ ±ýÛõ ¦º¡øÄÊ ÀÌ>À¸ø>À¡ø = À¢Ã¢× ±ýÈ ¦À¡ÕÇ¢ø ¿£Ùõ. ¿ñÀ¸ø ±ýÀÐ ¦ÅôÀò¾¢ý ¯îº¢ ±ýÀ¾¡ø ¯îº¢ô ¦À¡ØÐ, ¯îº¢ §Å¨Ç ±ýÚõ, ¯Õ츢 ±Ã¢ôÀ¾¡ø ¯ÕÁõ ±ýÚõ «¨ÆôÀÐ ¯ñÎ.

ÝâÂý ¯ÂÃò¾¢ø ¦¾¡í¸¢ þÕôÀ¨¾ áí¸¢ þÕôÀÐ ±ýÚõ ¦º¡øÄ ÓÊÔõ. áí¸÷ ±ýÀÅ÷ ¯ÂÃò¾¢ø ¯ûÇ §¾Å÷. áíÌ ±ýÀÐ ¯îº¢. (¯Â÷ó¾ À¨É ÁÃõ ѸõÒ/ѸíÌ ±ýÚ «¨Æì¸ô ÀÎõ. Ñ¸í¸¢ý ¸¡ö ÑíÌ.) ¬í¸¢Äò¾¢ø noon ±ýÀÐ À¸Ä¢ý ¿Î §¿Ãõ ¾¡§É! À¸ø ±ýÀÐ ¯îº¢ìÌ þÃñÎ Á½¢ ¸Æ¢òÐ Óʸ¢È ÀÕÅõ. «øÖõ À¸Öõ «ÚÀÐ ¿¡Æ¢¨¸ ±ýÀÐ ÀƦÁ¡Æ¢

«ø ±ýÛõ þÃ× ÓôÀÐ ¿¡Æ¢¨¸ ±ýÀÐ §À¡Ä ±ø ±ýÛõ ÝâÂý þÂíÌõ §¿ÃÓõ ÓôÀÐ ¿¡Æ¢¨¸§Â. «ó¾ ±ø Àθ¢ýÈ §¿Ãõ ±üÀ¡Î. þó¾ô ¦À¡ØÐ À¢üÀ¸Ä¢ý 2 Á½¢ §¿Ãõ ¸Æ¢Ôõ ¸½ò¾¢ø ²üÀθ¢ýÈ ¦À¡ØÐ. þó¾ô ¦À¡Ø¾¢ý þÚ¾¢Â¢ø ÝâÂý º¡ö¸¢È¡ý. «¾É¡ø þó¾ô ¦À¡ØÐ º¡Ôí¸¡Äõ ±ýÚõ «¨Æì¸ô Àð¼Ð. º¡Ôõ ¦À¡ØÐ º¡Ôó¾Ãõ ±ýÚõ «¨Æì¸ô Àð¼Ð. ¾ÕÅÐ ±ýÀÐ Å¡öôÀÐ; ¾Õ½õ ±ýÀÐõ Å¡öô§À.

ÀÆó¾Á¢Æ¢ø º¢Ä Ш½ Å¢¨É¸û ¯ñÎ «¨Å ¡úôÀ¡½ò¾Á¢ú, Á¨Ä¡Çõ §À¡ýÈ ÅüÈ¢ø þýÛõ ¬Ù¨¸Â¢ø ¯ûǨÅ. "±ÉìÌ þ¨¾ «È¢Âò ¾ÕÅ£÷¸Ç¡?" þó¾ š츢ø ¾Õ¾ø ±ýÀРШ½Å¢¨É. «¨¾ô §À¡Ä "«ôÀÊ ÅÃî ¦ºö¨¸Â¢§Ä ¿¡ý À¡÷ò§¾ý" ±ýÛõ ¬ðº¢¨Â §º¡Æ÷¸Ç¢ý þ¨¼ì ¸¡Äì ¸ø¦ÅðÎì¸Ç¢ø ÀÆ¸ì ¸¡½Ä¡õ. "ÅÃî ¦ºö¨¸Â¢§Ä" ±ýÀÐ ¾ïº¡ç÷ò ¾Á¢Æ¢Öõ, À¡÷ôÀÉ÷ ÅÆ츢Öõ "ÅÃ" ±ý§È À¢Öõ. þÐ §À¡Ä "ÝâÂý º¡Âî ¦ºö¨¸Â¢§Ä" "ÝâÂý º¡Â" " ÝâÂý º¡ö¸¢È" ±ýÚõ §ÀîÍ ÅÆ츢ø Á¡Úõ. þ¨¾ ¡§Ã¡ ż¦Á¡Æ¢ì ¸¡¾Ä÷ º¡ö¸¢Ã𨺠±ýÚ ´Ä¢ ¦ÀÂ÷ì¸ ¿¡õ ÁÂí¸¢ º¡Ôí¸¡Äõ ±ýÈ ¦º¡ø§Ä ż¦Á¡Æ¢ ±ýÚ ¾ÅÈ¡¸ ¯½÷óÐ ¸¢¼ì¸¢§È¡õ.

ÝâÂý º¡öó¾ À¢ý þÕÙõ ´Ç¢Ôõ ÓÂí¸¢ì ¸¢¼ì¸¢ÈÐ; À¢ý ÁÂí¸¢ì ¸¢¼ì¸¢ÈÐ. Óû>Óö>ÓÂíÌ>ÁÂíÌ ±ýÀÐ ¦º¡üÀ¢ÈôÀ¢ý ÅÆ¢ Ó¨È.
ÁÂóÐ ¸¢¼ó¾ Å¢¨É ÁÂÖ¾ø ±ýÚ ¦º¡øÄô ¦ÀÚõ. ÁÂø>Á¡ø ±ýÚõ
¿£Ùõ. Á¡Ö¾ø = ÁÂí̾ø. ÁÂí¸¢Â Åñ½õ ¦¸¡ñ¼¾¡ø ¾¡ý Å¢ñ½Åý Á¡§Â¡ý ±Éô Àθ¢È¡ý. Á¡ø ±ýÚõ ¦º¡øÄô Àθ¢È¡ý. À¸Öõ þÃ×õ ¸ÄìÌõ §Å¨Ç Á¡¨Ä §¿Ãõ ±ý§È ¦º¡øÄô Àθ¢ÈÐ. þ§¾ §À¡Ä ÀÄ ÁÄ÷¸û ¸ÄóÐ ¦¾¡Îò¾ ¦¾¡¨¼ Á¡¨Ä; À¢ýÉ¡ø ´§Ã ÁÄáø ¦¾¡Îì¸ô Àð¼Ðõ Á¡¨Ä ±ý§È ¦º¡øÄô Àð¼Ð. ÁÂí¸ø §¿Ãõ §ÀîÍ ÅÆ츢ø Áºí¸ø, ÁºíÌõ ¦À¡ØÐ, Áºñ¨¼, ÁÂñ¨¼ ±ý¦ÈøÄ¡õ «¨Æì¸ô ¦ÀÚõ.

þÃ×õ À¸Öõ ¦À¡Õóи¢ýÈ Á¡¨Ä¨Â «ó¾¢ ±ýÚõ ¦º¡øÖÅÐ ¯ñÎ. «ó¾¢>ºó¾¢. «òоø = ´ðξø, ¦À¡Õò¾¢ò ¨¾ò¾ø, «ó¾¢ò¾ø = ¦¿Õí̾ø Üξø, ´ýÚ §º÷¾ø. þó¾î ¦º¡øÄ¢ý À¢Èô¨À ¯õ> ¯óÐ> «óÐ> «ó¾¢ ±ýÚ ÜÚÅ÷. þ¨¾ô §À¡Ä ¸¡¨Ä §¿Ãò¾¢üÌî ºüÚÓý ¯ûÇ §¿Ãõ ¸¡¨Ä «ó¾¢ þÐ ÓýÉó¾¢, ¦ÅûÇó¾¢ ±ýÚõ
Á¡¨Ä «ó¾¢ À¢ýÉó¾¢, ¦ºùÅó¾¢ ±ýÚõ «¨Æì¸ô ¦ÀÚõ. þó¾î ¦ºùÅó¾¢ §¿Ãò¾¢ø «§¾ Åñ½ò¾¢ø âìÌõ â¨Åî ¦ºùÅó¾¢ôâ ±ý§È ¿õ Óý§É¡÷ «¨Æò¾É÷. "«ó¾¢ì¸¨¼, «ó¾¢ì¸¡ôÒ, «ó¾¢ÁøÄ¢¨¸, «ó¾¢ Åñ½ý, «ó¾¢ §Å¨Ç" ±ýÈ ¦º¡øġ𺢸¨ÇÔõ µ÷óÐ «È¢ÂÄ¡õ.

«ó¾¢ ±ýÀÐ §¿Ãí¸û ÜÎŨ¾ ÁðÎõ «øÄ¡Ð Óò¦¾Õì¸û ÜÎõ þ¼ò¨¾Ôõ ¦À¡Õû Å¢Ã¢× ¦¸¡ñÎ ÌÈ¢ò¾Ð.

"«ó¾¢Ôõ ºÐì¸Óõ ¬Å½ Å£¾¢Ôõ - º¢Äô 14.213
ºÐì¸Óõ ºó¾¢Ôõ" ¾¢ÕÓÕÌ 225

±ýÈ ±ÎòÐì ¸¡ðÎì¸û þ¨¾ì ¸¡ðÎõ.

þôÀÊò ¦¾Õì¸û §¿÷ÅÐ ºóÐ ±ýÚõ ºó¾¢ôÒ ±ýÚõ «¨Æì¸ô Àð¼Ð. ÀÄÕõ ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ ¿¡Ç¢ø ÜÊ Àñ¼Á¡üÚî ¦ºöÔõ þ¼õ ºó¨¾ ±ý§È «¨Æì¸ô Àð¼Ð.

¿¡õ «ó¾¢¨Â þôÀÊô À¸Öõ þÃ×õ §¿÷¸¢ýÈ ¦À¡ØÐ ±ýÚ ¦º¡øÖ¸¢ýÈ §À¡Ð, §Á¨ÄÂ÷ evening ±ýÈ ¦º¡ø¨Ä ÝâÂý «¨Á¸¢ýÈ, «¨Å¸¢ýÈ «Å¢¸¢ýÈ §¿Ãõ ±ýÈ ¦À¡ÕÇ¢§Ä§Â ÒÆíÌŨ¾ ±ñ½¢ô À¡÷ì¸ §ÅñÎõ.

þÉ¢, þó¾ì ¸¡Äò¾¢ø ¿¡õ ¦¸¡ûÙõ ¸¡Äô À¢Èú: Á¡¨Ä ±ýÀÐ ¬Ú Á½¢ìÌò ¦¾¡¼í¸¢ 10 Á½¢ìÌ Óʸ¢ÈÐ. ¬É¡ø À¢Èú¡¸ ²§¾¡ 4 Á½¢ìÌò ¦¾¡¼íÌ¢¸¢ÈÐ ±ýÚ ÀÄÕõ ¾ÅÈ¡¸ì ¦¸¡ûÙ¸¢§È¡õ. þ¾üÌì ¸¡Ã½õ ±üÀ¡Î ±ýÈ §Å¨Ç¨Â§Â ¿õÁ¢ø ÀÄ÷ ÁÈó¾Ð ¾¡ý. þ¾¢ø §Á¨ÄÂ÷ ºÃ¢Â¡¸ þÕ츢ýÈÉ÷. We will meet in the evening during the dinner" ±ýÛõ §À¡Ð §¿Ãô À¢Èú ¸¢¨¼Â¡Ð.

Á¡¨ÄìÌ «Îò¾ ¦À¡ØР¡Áõ. "¡" ±ýÛõ §ÅÕìÌ þÕû, ¸Õ¨Á ±ý§È ¦À¡Õû. ¡>¡õ>¡Áõ = þÃ× ±ý§È «Ð ŢâÔõ. ¡ ÁÃõ ÀüÈ¢î ºí¸ þÄ츢Âí¸û ¦ÀâÐõ ¦º¡øÖ¸¢ýÈÉ. ¡ ÁÃí¸û ¿¢¨Èó¾ ¾£× ¡Ÿõ «Ð ż¦Á¡Æ¢ô ÀÖì¸Ä¢ø ƒ¡Å¸õ ±ýÚ þýÚ «¨Æì¸ô Àθ¢ÈÐ. ¡¨É, ¡Î, ²Éõ, ¬ó¨¾, ¿¡¸õ, ¿¡Åø, ¬õÀ¢, ¡Ú, ÂÁý, ¬Âõ, ¬Äõ ¦À¡ýÈ ¦º¡ü¸û ±øÄ¡õ ¸Õ¨Áì ¸Õò¾¢ø ¡ ±ýÈ §Åâø þÕóÐ §¾¡ýȢ¨ŧÂ.

¿¡û ±ýÈ ¦º¡ø§Ä ӾĢø þèÅì ÌÈ¢ìÌõ ¦À¡ÕÇ¢ø ¡> ¡«ø> ¡ø> »¡ø> »¡û> ¿¡û ±ýÚ «¨Áó¾Ð. «¨Ã¿¡û ±ýÀÐ ´Õ ¸¡Äò¾¢ø ¿ûÇ¢Ã×, «¨Ã¢Ã× ±ýÀ¨¾§Â ÌÈ¢ò¾Ð. À¡ø+¿¡û = À¡É¡û ±ýÈ ¦º¡øÖõ, ¿Î ¿¡û ±ýÈ ¦º¡øÖõ þ§¾ §À¡Ä À¡¾¢þÃ×, ¿Î þÃ× ±ýÀ¨¾§Â ÌÈ¢ò¾É. ¡Áõ ±ýÀРż¦Á¡Æ¢ô ÀÖì¸Ä¢ø ¡Áõ> º¢Â¡Áõ> ƒ¡Áõ ±ýÚ Á¡Úõ. º¡Á측Ãý, º¡Á측Åø, º¡Á째¡Æ¢ §À¡ýȨŠ§ÀîÍ ÅÆ츢ø ¯ûÇ ¦º¡ü¸û.

¡Áõ ±ýÀÐ þÃ× 10 ø þÕóÐ ¿¡ÖÁ½¢ §¿Ãõ ¿£ñÊÕôÀÐ. À¢ýÉ¡Ç¢ø ÓØ þèÅÔ§Á ( ¬È¢ø þÕóÐ ¬Ú ŨÃ) ¡Áõ ±ýÚ ¦º¡øÄò ¾¨Äô ÀðÎ Á¡¨Ä¡Áõ, þ¨¼Â¡Áõ, ¨Å¸¨È¡Áõ ±ýÈ ãýÚ À̾¢¸û ŨÃÂÚì¸ô Àð¼É. ¿îº¢É¡÷츢ɢÂ÷ ¸¡Äò¾¢ø þÃ× 12 Á½¢Ôõ ¿¡ýÌ À̾¢¸Ç¡¸ì ¸Õ¾ô ÀðÎ Ó¾ø ¡Áõ, þÃñ¼¡õ ¡Áõ, ãýÈ¡õ ¡Áõ, ¿¡Ä¡õ ¡Áõ ±ýÈ À¢Ã¢×¸û §¾¡ýÈ¢É.

¸¨¼º¢ô ¦À¡ØÐ þÃñÎ ¦ÀÂ÷¸Ç¡ø «¨Æì¸ô ÀðÊÕ츢ÈÐ. þó¾ô ¦À¡Ø¾¢ý ÓÊÅ¢ø ¾¡ý ¸¾¢ÃÅý ±Ø¸¢È¡ý. ¸¾¢ÃÅý ÅÃÅ¡ø «Ê Å¡Éõ ¦ÅÙ츢ÈÐ. ¦Åû>¦ÅÙ=¦Åñ¨ÁÂ¡Ì ±ýÚõ ¦ÅÇ¢ò¾ø = ¦Åñ½¢Èí ¦¸¡ûÙ¾ø ±ýÚõ ¦À¡Õû ¦¸¡Ù¸¢ýÈÉ. ¦ÅÇ¢>¦ÅÊ = Å¢Ê ±ýÚ ÀÖì¸Ä¢ø §ÅÚÀÎõ. Å¢ÊÂø ±ýÀÐ ¦ÅÙôÀ§¾. þôÀÊ ´Ç¢Â¢ø þÕóÐ ¦ÀÂâð¼Ð Å¢ÊÂø; Á¡È¡¸ þÕÇ¢ø þÕóÐ ¦ÀÂâð¼Ð ¨Å¸¨È.
¨ÅÌÚ>¨Ą̊È>¨ÅŸ¨È. ¨Å ±ýÀÐ þíÌ þըǧ ÌȢ츢ÈÐ. ¨ÅÌõ þÕû ̨ÈóÐ ÅÕõ þÚ¾¢ì ¸¡Äõ ¨Ą̊Èì ¸¡Äõ . þ¾üÌô À¢ý ´Õ ¿¡Ç¢ø þÕû ¸¢¨¼Â¡Ð. À¢ý ÁÚ ¿¡û À¢ÈóРŢÎõ ±É§Å þÐ ¨Ą̊È. §Á¨ÄÂÕõ ¨Á¢ÕðÎ «ÚÌõ ¸¡Äõ ±ýÈ ¦À¡ÕÇ¢§Ä§Â (Á¡ö+«ÚÌ =Á¡ÂÚÌ>Á¡ÚÌ) morgan>morn>morning ±ýÈ ¦º¡ø¨Ä ¬Ù¸¢È¡÷¸û.

þó¾î º¢Ú ¦À¡Øи¨Ç «ó¾ó¾ô ¦À¡ÕÇ¢ø ÒÆí¸ò ¦¾¡¼í¸¢É¡ø ¸¡Äô À¢Èú ̨ÈÔõ. ¾Á¢Æ÷¸û ¸¡Äõ ÀüÈ¢ «ì¸¨È¢øÄ¡¾Å÷¸û ±ýÈ þó¾ì ¸¡Äô ¦À¡ÐÅ¡É ¸Õò¨¾ Á¡üڧš§Á! ±ýÉ ¦º¡ø¸¢È£÷¸û?

ÓÊôÀ¾üÌ Óý, º¢Ú ¦À¡ØÐ ´ýÈ¢üÌ ¦ÀÕﺢò¾¢Ãɡâý ÜȢ ¯Å¨Á¨Â þíÌ ±ÎòÐî ¦º¡øÄ¡Áø þÕì¸ ÓÊÂÅ¢ø¨Ä.
"¸ø¦ÄÈ¢ ¸ÕŢ¢ý ӨɢɢýÚ ¯ÕÅ¢ô §À¡Ìõ º¢Ú ¸ø¨Äô §À¡Ä Å¡ú쨸¢ý Å¢¨ºôÒ ´Õ «Ç× Àð¼ º¢Ú ¦À¡Ø§¾"
Å¡ú쨸§Â «ùÅª× ¾¡í¸. "º÷÷÷÷÷÷........"

þ¨ÈÅý ¯ñ¨Á¨Â «Å÷ þó¾ô À¡¼Ä¢ø ¦º¡øĢ¢ÕìÌõ ¸ÕòÐ ¯½÷óÐ «È¢Â §ÅñÊÂÐ.
----------------------------------------------------------------------------------------------
±Åý¦¸¡ø «È¢Ìõ

±Åý¦¸¡ø «È¢Ìõ þ¨ÈÂÅý ¸¢¼ì¨¸!
¸ÅñÓ¸òÐ ¯ÕŢ º¢Ú¸ø §À¡Ä
Å¢¨ºô§À «ÇÅ¢¨¼ô ¦À¡Ø§¾! Å¢¨É§Â
¿¨ºÂÇ Å¢§É; ¿Ä¢¾Öõ ¦ÁÄ¢¾Öõ
«¾Ûð À𼠨Š¦À¡È¢ ÅÆ¢Â!
¦ºùÅ¢¾¢ý «¨Á¡ ³õ¦À¡È¢ Ó¨ÉôÒõ
±ø¨ÄÔû Å¡íÌõ «È¢Å¢ý ¬É!
þ¨Å¦¸¡Î ¦¾Ç¢§Å þ¨ÈÂÅý ¯ñ¨Á!
«Åý ¾¢Èø §Áü§È «ñ¼õ;
«Å¢ú¾Öõ ÌÅ¢¾Öõ «Ã¢Ð ÁüÚ «È¢§Å!

-áÈ¡º¢Ã¢Âõ - 31

¦À¡Æ¢ôÒ:

þ¨ÈÅÉ¢ý þÕ쨸¨Â ±Å§Ã «È¢ÌÅ÷? ¸ø¦ÄÈ¢ ¸ÕŢ¢ý ӨɢɢýÚ ¯ÕÅ¢ô §À¡Ìõ º¢Ú ¸ø¨Äô §À¡Öõ Å¡ú쨸¢ý Å¢¨ºôÒ µ÷ «Ç× À¡¼ º¢Ú ¦À¡Ø§¾. «ùÅ¢¨¼ô ¦À¡Ø¾¢ø ¦ºöÂô ¦ÀÚõ Å¢¨É§Â¡, ¯ûÇòÐ ±Øó¾ Å¢ÕôÀò¨¾ô ¦À¡Õò¾Ð. ¯¼ø, ¯ûÇ ¿Ä¢×¸Ùõ, ¦ÁĢ׸Ùõ «ùÅ¢ÕôÀò¾¢ý ¯ûǼíÌÅÉ. «ó ¿Ä¢×õ ¦ÁÄ¢×õ ¯ûÇ¼í¸¢Â Å¢ÕôÀÓõ, Å¢¨ÉÔõ ¯¼Ä¢ý ³õ¦À¡È¢¸¨Ç š¡¸ì ¦¸¡ñ¼É. ´ýÚ즸¡ýÚ §ÁÄ×õ ¾¡Æ×õ ¬¸î ¦ºôÀÓÈ «¨Á¡¾ «ù¨Åõ¦À¡È¢¸Ùõ ¾õÓý Ó¨ÉòÐ ¿¢üÀ¢Ûõ, «ÅüÈ¢ý «È¢¾¢È§É¡ µ÷ ±ø¨ÄÔû Å¡íÌõ «Çר¼ÂÐ. þÂøÅÉ×õ þÂÄ¡¾É×õ ¬¸¢Â þÅü¨Èì ¦¸¡ñξ¡ý þ¨ÈÅÉ¢ý ¯ñ¨Á ¦¾Ç¢Âô ¦ÀÚ¾ø §ÅñÎõ «ò¾Ì þ¨ÈÅÉ¢ý ´Ç¢Â¢ý §ÁÖõ ÅĢ¢ý §ÁÖõ «Ç¡Å¢ ¿¢üÀ¨Å¾¡õ þù×ĸ ¯Õñ¨¼Ôõ þЧÀ¡ø À¢È×õ. «ÅüÈ¢ý ÁÄ÷¡¸¢Â §¾¡üÈò¨¾Ôõ, ÜõҾġ¸¢Â ´Îì¸ò¨¾Ôõ «È¢ÅÐ «Ã¢ÂÐ; þÂÄ¡¾Ð.

ŢâôÒ:
þôÀ¡¼ø ÒÈòШȨÂî º¡÷ó¾Ð.

«¸î¦ºÕìÌõ «È¢×î ¦ºÕìÌõ Å¢¨ÉÕìÌõ Á¢ÌóÐ «ÕÙõ, ¦ÁöÂÈ¢×õ «¼ì¸Óõ ̨Èó¾ÅÕõ ¾ü¸¡ÄòÐ þ¨È¨Á ¦À¡ÐǢ þÂü¨¸ò ¾ý¨Á¢¨É ÁÈóÐ Å¡Øõ Á¡ó¾ ¯Â¢÷¸ÙìÌ ¯û¦Ç¡Ç¢ ¦¸¡Ùò¾¢ ¯Â¢÷ þÂì¸õ º¢Èì¸ì ÜȢ¾¡Ìõ þôÀ¡ðÎ.

þôÀ¡¼ø þ¨Èô¦À¡ÕÇ¢ý þÕôÒ ¿¢¨Ä ÀüÈ¢ò ¦¾Ç¢ÂŢġ¾¡÷ìÌõ ¦¾Ç¢ó¾¡÷ô §À¡Äô À¢¾üÚ¿÷ìÌõ ¯Ä¸¢Âø ÜÈ¢ «È¢Å¢ý ¾ý¨Á¨ÂÔõ «È¢Âô ¦ÀÚõ ¦À¡ÕÇ¢ý Ññ¨Á¨ÂÔõ ÒÄôÀÎòО¡Ìõ.

þÐ ¦À¡ÐÅ¢Âø ±ý ¾¢¨½Ôõ ÓЦÁ¡Æ¢ì ¸¡ïº¢ ±ý ШÈÔÁ¡õ.
-------------------------------------------------------------------------------------------------------

No comments: