Wednesday, September 03, 2003

காலங்கள் - 3

3. ஆட்டமும், பொழுதும்

"ஆடிய ஆட்டம் என்ன?' என்ற கேள்வியைக் கிளப்பி

"வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ?"

என்று ஒரு திரைப் பாட்டைக் கண்ணதாசன் எழுதியிருப்பார். அவர் மனிதன் ஆடிய ஆட்டத்தையும் அவன் தேடிய செல்வத்தையும் பற்றிக் கேள்வி எழுப்புகிறார். நாம் "வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் புவியின் ஆட்டம் எப்படி?" என்று கேள்வி எழுப்புகிறோம்.

நெற்றாட்டம், கிறுவாட்டம், வலயம், உருட்டு என்ற எல்லா இயக்கங்களும் நின்று போனால் புவியாட்டம் என்னவாகும்?

" என்னங்க நீங்க, இது தெரியாதா? போயே போச்சு; போயிந்தி, சுக்குச் சுக்காகச் சிதறிப் போகும்."

இதுதான் நிலைமை என்றால், தன்னை இருத்திக் கொள்ளத்தான் இவ்வளவு ஆட்டம் போடுகிறதா இந்தப் புவி?

இதைப் புரிந்து கொள்ள ஒவ்வொரு இயக்கத்தையும் முகமையானதில் இருந்து மற்றவற்றைப் பொருத்திப் பார்ப்போம். இங்கே உருட்டலும், வலயமும் படம் -1 -ல் காட்டப் பட்டிருக்கின்றன.

மேலே உள்ள நான்கு இயக்கங்களில் முதலில் நாம் உடனே உணருகிற இயக்கம் உருட்டல். இதுதான் பெரியுதி (priority) கொண்ட இயக்கம். இந்த இயக்கத்தின் போது புவிக் கோளத்தின் ஒரு பகுதி பகலில் ஒளிவாங்கிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் இருளில் அமிழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரம் கழித்து பகலாய் இருந்த பகுதி இருளாகி, இருள் பகலாகிறது. உருட்டல் நின்று போனால், பகல் பகலேதான், இருள் இருளே தான். இருள் உள்ள பகுதியில் உயிரே எழுந்திருக்காது. ஒளியுள்ள பகுதியில் உயிரெழுந்தாலும் அழிந்து போயிருக்கும். மொத்தத்தில் இன்று நாம் அறிந்த நிலவைப் போலப் புவியும் வறண்டு உயிரற்றுக் கிடக்கும்.

அப்புறம் நாமாவது ஒன்றாவது? நாம் யார்க்குமே குடியல்லோம்! புவி உருட்டல் என்பது அவ்வளவு அடிப்படையான நம் உயிருக்கே அடிப்படையான இயக்கம்.

இனி உருட்டல் இருந்து வலயம் நின்று போனது என்று வைத்துக் கொள்ளுவோம். சூரியனின் ஈர்ப்பு புவியை என்றோ இழுத்து இனிதே முயங்கிக் கொண்டிருக்கும்.

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படா முயக்கு"

ன்று வள்ளுவன் சொல்லும் உவமை இங்கு அப்படியே பொருந்தும். இந்த முயக்கு நடப்பதற்கு முன், ஒரு சில ஆண்டுகளே இந்தப் புவி இருந்திருக்கும். அந்த ஆண்டுகள் எத்தனை? அதற்குள் உயிர் எழுந்திருக்குமா? மனிதன் தோன்றுவதற்கு சாற்றுக் கூறுகள் உண்டா? இத்தகைய கேள்விகள் எல்லாம் இந்தக் கட்டில் (case; வழக்கறிஞர்கள் கேஸ்கட்டு என்று சொல்கிறார்களே அது நடுச் செண்டர் போல இரு பிறப்பி இரட்டைக் கிளவி) கற்பனைதான்.

தவிர புவி வலயம் ஒரு நீள்வட்டம். அதில் சூரியன் ஒரு குவியம் என்று சொன்னோம் அல்லவா? சூரியனில் இருந்து புவியின் தூரத்தை அளந்தோம் என்றால் மிகக் குறைந்த தூரம் உள்ளதுதான் வேனில் முடங்கல்; மிகக் கூடிய தூரம் உள்ளது தான் பனி முடங்கல்; இந்த இரண்டிற்கும் நடுப்பட்ட காலத்தில் தான் இரு ஒக்க நாள்கள் (பகலும் இரவும் ஒரே பொழுது கொண்ட நாட்கள்). அவற்றை மேழ விழு என்றும் துலை விழு என்றும் கூறினோம். இந்த நான்கு நாட்களையும் வைத்தே மேலையர் பருவத்தைக் கணிக்கிறார்கள்.

மேலையரின் வானியல் அறிவிலும், வடவரின் வானியல் அறிவிலும் தமிழரின் கருத்துக்கள் ஊடுறுவிக் கிடக்கின்றன என்றே ஆழ்ந்து படிக்கும் போது புலப்படுகிறது. அதற்குப் பெரும்பொழுதுகளின் பெயர்களே சான்றாக இருக்கின்றன. கொஞ்சம் பார்ப்போமே!

பனி முடங்கலில் வாடைக் காலம் தொடங்குகிறது. வடக்கே இருந்து வருவது வாடை. இது வடந்தை என்றும் வடந்தல் என்றும் தமிழில் சொல்லப் பெறும். வடந்தைக் காற்று குளிர் காற்று. இந்தையிரோப்பிய மாந்தன் தெற்கிருந்து தான் வடக்கே போயிருக்க வேண்டும் என்று சொல்லுவதற்கு வடந்தல்>vadanther>vidanther>winther>winter என்பதும் ஒரு காரணம்.

அடுத்து மேழ விழுவில் பசந்தம் தொடங்குகிறது. (பசுமைக் காலம் வசந்தம் என்று பலுக்கப் பட்டதால் வடமொழியென மயங்கி நிற்கிறோம்.) ஆங்கிலத்தில் பொங்கு என்று சொல்கிறார்கள். ஆடிப் பெருக்கு என்று வெள்ளப் பெருக்கை நாம் சொல்கிறோம் இல்லையா? அது போல இயற்கை திடீரென்று பெருகிப் பொங்குகிறதாம். பொங்கு என்பது இந்தையிரோப்பிய வழக்கப் படி பொங்கு>prong>prung>pring>spring என்றாகும்.

வேனில் முடங்கலில் வெம்மைக் காலம் தொடங்குகிறது. வெம்மல் காலம் கோடைக் காலம். வெம்மல் இந்தையிரோப்பியப் பழக்கப் படி ஸகரம் சேர்த்து swemmer>summer என்றாகும்.

மீண்டும் துலை விழுவில் உதிர் காலம் என்னும் இலைகள் அவிழும் காலம் தொடங்குகிறது. இந்தையிரோப்பியத்தில் அவிழும்>அவுதும்>autumn என்று ஆகும்.

இந்த வட்டத்தில் ஒவ்வொரு பருவமும் கிட்டத்தட்டத் தொண்ணூறு நாட்கள் வரும்.

தமிழர்கள் இன்னொரு விதமாக பருவங்களை இரண்டிரண்டு மாதங்களாக இருது (ருது என்று வடமொழிப் படுத்தப் படும்) எனப் பார்த்தார்கள். இதில் முடங்கல்களைப் பெரிதாகக் கருதவில்லை. அதை ஒரு கணுத்துவமாகவே (continuum) பார்த்தார்கள். இந்த முறையில் ஆறு பருவங்கள் கொள்ளப் பெறும். நான் இங்கே சந்திரமான மாதங்களை வைத்துச் சொல்லுகிறேன். (வெவ்வேறு வகையான மாதங்களைப் பற்றி அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம்.)

இளவேனில் = சித்திரை, வைகாசி
முதுவேனில் = ஆனி, ஆடி
கார் = ஆவணி, புரட்டாசி
கூதிர் = ஐப்பசி, கார்த்திகை
முன்பனி = மார்கழி, தை
பின்பனி = மாசி, பங்குனி

மேலே வேனில் என்பதற்குப் பொருள் சொல்ல வேண்டாம் என்று எண்ணுகிறேன்.

கார் என்பது கரிய முகிலையும், முகில் பொழியும் மழையையும், மழைக் காலத்தையும் குறிக்கும். கார் = மழைக் காலம், ஆவணி தொடக்கம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புவி மேழவோரைக்கு நேரே இருந்த போது மிகச் சரியாக இருந்தது. இந்தக் காலத்தில் புவியின் கிறுவாட்டம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக மீனவோரைக்கு நேரே கொண்டு சேர்த்த காரணத்தால் பழந்தமிழ்க் காலங்கள் மாறி வருகின்றன. ஆவணியின் தொடக்கத்தில் வரவேண்டிய மழை ஆடி பதினெட்டிலேயே வந்து விடுகிறது. எப்படி பசந்த காலத் தொடக்கம் சித்திரை முதலுக்கு(ஏப்ரல் 14-ற்கு)ப் பதிலாக மார்ச்சு 21/22 க்கே வந்து விடுகிறதோ அது போலத் தான் இந்த மாற்றத்தையும் கொள்ள வேண்டும்.

கூதிர் என்பதை நம்மில் பலர் கூதற்காலம் என்று எண்ணிக் கொள்கிறோம். அது கருத்துப் பிழை. சில அகரமுதலிகளிலும் அப்படி வந்து விட்டது. அதுதான் சரியென்றால் காலங்களை உணர்வது தவறென்று ஆகிவிடும். அப்புறம் முன்பனி, பின்பனி எதற்கு? இலைகள் கூர்ந்து கொள்ளுகிற, மூடிக் கொள்ளுகிற, உதிர்ந்து கொள்ளுகிற காலம் கூதிர்க் காலம். குதிர் என்பது கூம்பிக் கிடப்பது. கூர்ந்தது கூலம் = விதை; கூர்ந்து கொட்டிக் கிடக்கும் குப்பையைக் கூளம் என்று சொல்கிறோமே, இவையெல்லாம் தொடர்புள்ள சொற்கள்.

பனிக் காலம் என்பது அப்பொழுது உள்ள குளிரால் காலை நேரத்தில் காற்றில் உள்ள ஈரம் துளிகளாய் மாறிப் பலவாகிக் கிடப்பதையே குறிக்கும். பல் பலவாகும். பன்னாகவும் ஆகும்.

"மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல"

என்பது தொல்காப்பியம். பன்னிப் பன்னிப் பேசுதல் என்பது பலவாறாகப் பேசுதல், பன்னுதல் பனித்தலாக நீளும். பனி என்பது ஆங்கில dew விற்குச் சரிசமமானது.

இனி வடமொழி வழியான பருவப் பெயர்களைப் பார்ப்போம்.

முதலில் வருவது மேழ விழுவில் தொடங்கும் பசந்த இருது. இது வடமொழியில் வசந்த ருது என்று வரும்.

அடுத்தது கரும இருது. வெய்யிலில் கருத்துவிட்டான் என்று சொல்கிறோம் இல்லையா? முதுவேனில் கருக்க வைக்கும். கரும>grishma; கருநன்>Krishnan ஆனது போல.

மூன்றாவது வழிய இருது; மழை பொழிகிறது; வழிகிறது. வழி>varshi

நான்காவது இலை உதிர்ந்து சொரிகின்ற காலம் சொரிதற் காலம். சொரிதல்>sharad

ஐந்தாவது பருவம் பனித்துளி பலவாகிக் குமிந்து கிடக்கும் காலம் குமிதல்= ஒன்று பலவாதல். குமம்* > இமம் = பனி. குமஞ்சேர்ந்து கிடக்கும் மலை குமைந்த மலை = பனி மலை= எனவே குமய மலை = ஹிமயம்; குமைந்த இருது = hemantha rtu

ஆறாவது பருவம் சிதறல் பருவம்; பனிச் சிதறல் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறிக் குறைகிறது. சிதற இருது> sisira rtu.

மற்ற இந்தையிரொப்பியர் எல்லாம் நாலு பருவம் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, வடமொழியாளர் மட்டும் தமிழரின் ஆறுபருவங்கள் பேசுவது விந்தையானது. ஆனால் நாலு பருவம், ஆறு பருவம் அந்தப் பெயர்களின் பொருள்கள் எல்லாமே நாவலந்தீவின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் தான் பொருள் சரியாக விளங்குகின்றன.

இந்தப் பருவங்கள் வட்டமாக வந்து கொண்டே இருக்கின்றன. இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. இந்தப் பெரும்பொழுதுகள் போலவே சிறுபொழுதுகளையும் நாலாகவும், ஆறாகவும் பகுக்கலாம். அதை அடுத்த முறை பார்ப்போம்.

பகலையும், நிழலையையும் வைத்து பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் ஒரு குமுகவியற் கருத்தைக் கூறுவதைப் படியுங்கள்.

----------------------------------------------------------------------
பெறும் பெற்றி

நிலமுதுகு ஒருபுறம் நீடிய நிழலும்
பலகதிர் ஓடிய பகலும் போல
உளவோர் உண்மையும் இலவோர் இன்மையும்
அளவு வரைத்து அன்றே! ஆய் இரு மருங்கும்
நின்று நீளுதல் நீள் நிலத்து இன்றே!
குன்றன்ன கொடி நிறுத்தித்
தின்று உய்யத் திரு வாழினும்
ஒன்றிலார்க்கு ஒன்று வந்து உதவல்
பின்றைத் தாம் பெறும் பெற்றியாம் ஆறே!

பொழிப்பு:

நிலக் கோளத்தின் வளைந்த புற முதுகின் ஒரு புறத்தே முன்னோக்கி நீண்டு கொண்டே போகின்ற நிழலாகிய இருளும், மற்றொரு புறத்தே பல்கோடிக் கதிர்க் கற்றைகளால் விளைந்து முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிற பகலொளியும் போல், இவ்வுலகின் கண் பொருள் உள்ளவரின் உளவாம் தன்மையும், அஃதில்லவரின் இலவாம் தன்மையும் எல்லை நிலைப்புடையன அல்ல. அவ்விருபுறத்தும் ஒரு பொழுதில் நின்ற நிலையே தொடர்ந்து நீடிக்கப் பெறுதல் இவ்வகன்ற நிலத்தின் கண் யாண்டும் இல்லை. குன்றின் உயர்ச்சி அளவாகத் தம் இலச்சினைக் கொடியை நிறுத்தி, அதன் பரும அளவாகத் தாமும் தம் பிறங்கடையரும் தின்று உய்யும் படி தமக்குச் செல்வவளம் வாய்ந்திருப்பினும், அந் நிலைகளில் ஒன்று தானும் அடைந்திலார்க்கு வேண்டுவதாகிய ஒரு பொருளைத் தம் உள்லம் உவக்குமாறு உதவுதலே, தமக்குப் பொருந்திய வளம் குன்றிய காலத்துத் தாம் துய்ப்பதற்கு உரிய வாய்ப்பு உருவாகும் வழியாம்!

விரிப்பு.

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

உலக உருண்டையைச் சுற்றிச் சுழல்கின்ற இரவும் பகலும் போல் மக்கட்கு வாய்க்கும் செல்வ நிலையும் வறுமை நிலையும் வரையறுக்கப் பட்டன அல்ல. இரு நிலைகளும் ஒரு நிலையிலேயே நிற்றல் மாறாச் சுழற்சியுடைய நிலத்தின் கண் யாண்டும் நடை பெறுதல் இல்லை. குன்றுபோல் குவித்த செல்வம் உடையவரும் பிற்காலத்து அதைத் தவறாது துய்த்தல் அரிது; அவ்வாறு துய்க்கும் வழி அந்நிலை எதும் இல்லாதவர்க்கு உளம் மகிழ்வடையும் படிக் கொடுத்து உதவுதலே ஆகும் என்று உலக வியற்கையை உணர்த்திக் கூறியதாகும் இப்பாட்டு.

இது பொதுவியல் என் திணையும், பொருண் மொழிக் காஞ்சி என் துறையுமாகும்.
-------------------------------------------------------------------------------------------------
In TSCII:

¸¡Äí¸û - 3

3. ¬ð¼Óõ, ¦À¡ØÐõ

"¬Ê ¬ð¼õ ±ýÉ?' ±ýÈ §¸ûÅ¢¨Âì ¸¢ÇôÀ¢

"Å£ÎŨà ¯È×
Å£¾¢ Ũà Á¨ÉÅ¢
¸¡ÎŨà À¢û¨Ç
¸¨¼º¢ Ũà ¡§Ã¡?"

±ýÚ ´Õ ¾¢¨Ãô À¡ð¨¼ì ¸ñ½¾¡ºý ±Ø¾¢Â¢ÕôÀ¡÷. «Å÷ ÁÉ¢¾ý ¬Ê ¬ð¼ò¨¾Ôõ «Åý §¾Ê ¦ºøÅò¨¾Ôõ ÀüÈ¢ì §¸ûÅ¢ ±ØôÒ¸¢È¡÷. ¿¡õ "Å¡úóÐ ¦¸¡ñÊÕìÌõ þó¾ô ÒŢ¢ý ¬ð¼õ ±ôÀÊ?" ±ýÚ §¸ûÅ¢ ±ØôÒ¸¢§È¡õ.

¦¿üÈ¡ð¼õ, ¸¢ÚÅ¡ð¼õ, ÅÄÂõ, ¯ÕðÎ ±ýÈ ±øÄ¡ þÂì¸í¸Ùõ ¿¢ýÚ §À¡É¡ø ÒŢ¡ð¼õ ±ýÉÅ¡Ìõ?

" ±ýÉí¸ ¿£í¸, þÐ ¦¾Ã¢Â¡¾¡? §À¡§Â §À¡îÍ; §À¡Â¢ó¾¢, ÍìÌî Í측¸î º¢¾È¢ô §À¡Ìõ."

þо¡ý ¿¢¨Ä¨Á ±ýÈ¡ø, ¾ý¨É þÕò¾¢ì ¦¸¡ûÇò¾¡ý þùÅÇ× ¬ð¼õ §À¡Î¸¢È¾¡ þó¾ô ÒÅ¢?

þ¨¾ô ÒâóÐ ¦¸¡ûÇ ´ù¦Å¡Õ þÂì¸ò¨¾Ôõ Ó¸¨Á¡ɾ¢ø þÕóÐ ÁüÈÅü¨Èô ¦À¡Õò¾¢ô À¡÷ô§À¡õ. þí§¸ ¯Õð¼Öõ, ÅÄÂÓõ À¼õ -1 -ø ¸¡ð¼ô ÀðÊÕ츢ýÈÉ.

§Á§Ä ¯ûÇ ¿¡ýÌ þÂì¸í¸Ç¢ø ӾĢø ¿¡õ ¯¼§É ¯½Õ¸¢È þÂì¸õ ¯Õð¼ø. þо¡ý ¦ÀâԾ¢ (priority) ¦¸¡ñ¼ þÂì¸õ. þó¾ þÂì¸ò¾¢ý §À¡Ð ÒÅ¢ì §¸¡Çò¾¢ý ´Õ À̾¢ À¸Ä¢ø ´Ç¢Å¡í¸¢ì ¦¸¡ñÊÕì¸ þý¦É¡Õ Àì¸õ þÕÇ¢ø «Á¢úóÐ ¦¸¡ñÊÕ츢ÈÐ. ÌÈ¢ôÀ¢ð¼ §¿Ãõ ¸Æ¢òÐ À¸Ä¡ö þÕó¾ À̾¢ þÕÇ¡¸¢, þÕû À¸Ä¡¸¢ÈÐ. ¯Õð¼ø ¿¢ýÚ §À¡É¡ø, À¸ø À¸§Ä¾¡ý, þÕû þÕ§Ç ¾¡ý. þÕû ¯ûÇ À̾¢Â¢ø ¯Â¢§Ã ±Øó¾¢Õ측Ð. ´Ç¢ÔûÇ À̾¢Â¢ø ¯Â¢¦ÃØó¾¡Öõ «Æ¢óÐ §À¡Â¢ÕìÌõ. ¦Á¡ò¾ò¾¢ø þýÚ ¿¡õ «È¢ó¾ ¿¢Ä¨Åô §À¡Äô ÒÅ¢Ôõ ÅÈñÎ ¯Â¢ÃüÚì ¸¢¼ìÌõ.

«ôÒÈõ ¿¡Á¡ÅÐ ´ýÈ¡ÅÐ? ¿¡õ ¡÷ì̧Á ÌÊÂø§Ä¡õ! ÒÅ¢ ¯Õð¼ø ±ýÀÐ «ùÅÇ× «ÊôÀ¨¼Â¡É ¿õ ¯Â¢Õ째 «ÊôÀ¨¼Â¡É þÂì¸õ.

þÉ¢ ¯Õð¼ø þÕóÐ ÅÄÂõ ¿¢ýÚ §À¡ÉÐ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡û٧šõ. ÝâÂÉ¢ý ®÷ôÒ ÒÅ¢¨Â ±ý§È¡ þØòÐ þÉ¢§¾ ÓÂí¸¢ì ¦¸¡ñÊÕìÌõ.

"Å£Øõ þÕÅ÷ìÌ þÉ¢§¾ ÅǢ¢¨¼
§À¡Æô À¼¡ ÓÂìÌ"

ýÚ ÅûÙÅý ¦º¡øÖõ ¯Å¨Á þíÌ «ôÀʧ ¦À¡ÕóÐõ. þó¾ ÓÂìÌ ¿¼ôÀ¾üÌ Óý, ´Õ º¢Ä ¬ñθ§Ç þó¾ô ÒÅ¢ þÕó¾¢ÕìÌõ. «ó¾ ¬ñθû ±ò¾¨É? «¾üÌû ¯Â¢÷ ±Øó¾¢ÕìÌÁ¡? ÁÉ¢¾ý §¾¡ýÚžüÌ º¡üÚì ÜÚ¸û ¯ñ¼¡? þò¾¨¸Â §¸ûÅ¢¸û ±øÄ¡õ þó¾ì ¸ðÊø (case; ÅÆì¸È¢»÷¸û §¸Š¸ðÎ ±ýÚ ¦º¡ø¸¢È¡÷¸§Ç «Ð ¿Îî ¦ºñ¼÷ §À¡Ä þÕ À¢ÈôÀ¢ þÃð¨¼ì ¸¢ÇÅ¢) ¸üÀ¨É¾¡ý.

¾Å¢Ã ÒÅ¢ ÅÄÂõ ´Õ ¿£ûÅð¼õ. «¾¢ø ÝâÂý ´Õ ÌÅ¢Âõ ±ýÚ ¦º¡ý§É¡õ «øÄÅ¡? ÝâÂÉ¢ø þÕóÐ ÒŢ¢ý àÃò¨¾ «Ç󧾡õ ±ýÈ¡ø Á¢¸ì ̨Èó¾ àÃõ ¯ûÇо¡ý §ÅÉ¢ø Ó¼í¸ø; Á¢¸ì ÜÊ àÃõ ¯ûÇÐ ¾¡ý ÀÉ¢ Ó¼í¸ø; þó¾ þÃñÊüÌõ ¿ÎôÀð¼ ¸¡Äò¾¢ø ¾¡ý þÕ ´ì¸ ¿¡û¸û (À¸Öõ þÃ×õ ´§Ã ¦À¡ØÐ ¦¸¡ñ¼ ¿¡ð¸û). «Åü¨È §ÁÆ Å¢Ø ±ýÚõ Ð¨Ä Å¢Ø ±ýÚõ ÜÈ¢§É¡õ. þó¾ ¿¡ýÌ ¿¡ð¸¨ÇÔõ ¨Åò§¾ §Á¨ÄÂ÷ ÀÕÅò¨¾ì ¸½¢ì¸¢È¡÷¸û.

§Á¨ÄÂâý Å¡É¢Âø «È¢Å¢Öõ, żÅâý Å¡É¢Âø «È¢Å¢Öõ ¾Á¢Æâý ¸ÕòÐì¸û °ÎÚÅ¢ì ¸¢¼ì¸¢ýÈÉ ±ý§È ¬úóÐ ÀÊìÌõ §À¡Ð ÒÄôÀθ¢ÈÐ. «¾üÌô ¦ÀÕõ¦À¡ØиǢý ¦ÀÂ÷¸§Ç º¡ýÈ¡¸ þÕ츢ýÈÉ. ¦¸¡ïºõ À¡÷ô§À¡§Á!

ÀÉ¢ Ó¼í¸Ä¢ø Å¡¨¼ì ¸¡Äõ ¦¾¡¼í̸¢ÈÐ. ż째 þÕóÐ ÅÕÅÐ Å¡¨¼. þÐ Å¼ó¨¾ ±ýÚõ żó¾ø ±ýÚõ ¾Á¢Æ¢ø ¦º¡øÄô ¦ÀÚõ. żó¨¾ì ¸¡üÚ ÌÇ¢÷ ¸¡üÚ. þó¨¾Â¢§Ã¡ôÀ¢Â Á¡ó¾ý ¦¾ü¸¢ÕóÐ ¾¡ý ż째 §À¡Â¢Õì¸ §ÅñÎõ ±ýÚ ¦º¡øÖžüÌ Å¼ó¾ø>vadanther>vidanther>winther>winter ±ýÀÐõ ´Õ ¸¡Ã½õ.

«ÎòÐ §ÁÆ Å¢ØÅ¢ø Àºó¾õ ¦¾¡¼í̸¢ÈÐ. (ÀͨÁì ¸¡Äõ źó¾õ ±ýÚ ÀÖì¸ô À𼾡ø ż¦Á¡Æ¢¦ÂÉ ÁÂí¸¢ ¿¢ü¸¢§È¡õ.) ¬í¸¢Äò¾¢ø ¦À¡íÌ ±ýÚ ¦º¡ø¸¢È¡÷¸û. ¬Êô ¦ÀÕìÌ ±ýÚ ¦ÅûÇô ¦ÀÕ쨸 ¿¡õ ¦º¡ø¸¢§È¡õ þø¨Ä¡? «Ð §À¡Ä þÂü¨¸ ¾¢Ë¦ÃýÚ ¦ÀÕ¸¢ô ¦À¡í̸¢È¾¡õ. ¦À¡íÌ ±ýÀÐ þó¨¾Â¢§Ã¡ôÀ¢Â ÅÆì¸ô ÀÊ ¦À¡íÌ>prong>prung>pring>spring ±ýÈ¡Ìõ.

§ÅÉ¢ø Ó¼í¸Ä¢ø ¦Åõ¨Áì ¸¡Äõ ¦¾¡¼í̸¢ÈÐ. ¦ÅõÁø ¸¡Äõ §¸¡¨¼ì ¸¡Äõ. ¦ÅõÁø þó¨¾Â¢§Ã¡ôÀ¢Âô ÀÆì¸ô ÀÊ …¸Ãõ §º÷òÐ swemmer>summer ±ýÈ¡Ìõ.

Á£ñÎõ Ð¨Ä Å¢ØÅ¢ø ¯¾¢÷ ¸¡Äõ ±ýÛõ þ¨Ä¸û «Å¢Øõ ¸¡Äõ ¦¾¡¼í̸¢ÈÐ. þó¨¾Â¢§Ã¡ôÀ¢Âò¾¢ø «Å¢Øõ>«×Ðõ>autumn ±ýÚ ¬Ìõ.

þó¾ Åð¼ò¾¢ø ´ù¦Å¡Õ ÀÕÅÓõ ¸¢ð¼ò¾ð¼ò ¦¾¡ñßÚ ¿¡ð¸û ÅÕõ.

¾Á¢Æ÷¸û þý¦É¡Õ Å¢¾Á¡¸ ÀÕÅí¸¨Ç þÃñÊÃñÎ Á¡¾í¸Ç¡¸ þÕÐ (ÕÐ ±ýÚ Å¼¦Á¡Æ¢ô ÀÎò¾ô ÀÎõ) ±Éô À¡÷ò¾¡÷¸û. þ¾¢ø Ó¼í¸ø¸¨Çô ¦À⾡¸ì ¸Õ¾Å¢ø¨Ä. «¨¾ ´Õ ¸ÏòÐÅÁ¡¸§Å (continuum) À¡÷ò¾¡÷¸û. þó¾ ӨȢø ¬Ú ÀÕÅí¸û ¦¸¡ûÇô ¦ÀÚõ. ¿¡ý þí§¸ ºó¾¢ÃÁ¡É Á¡¾í¸¨Ç ¨ÅòÐî ¦º¡øÖ¸¢§Èý. (¦Åù§ÅÚ Å¨¸Â¡É Á¡¾í¸¨Çô ÀüÈ¢ «ÎòÐ ÅÕõ À̾¢¸Ç¢ø À¡÷ô§À¡õ.)

þǧÅÉ¢ø = º¢ò¾¢¨Ã, ¨Å¸¡º¢
ÓЧÅÉ¢ø = ¬É¢, ¬Ê
¸¡÷ = ¬Å½¢, ÒÃ𼡺¢
ܾ¢÷ = ³ôÀº¢, ¸¡÷ò¾¢¨¸
ÓýÀÉ¢ = Á¡÷¸Æ¢, ¨¾
À¢ýÀÉ¢ = Á¡º¢, ÀíÌÉ¢

§Á§Ä §ÅÉ¢ø ±ýÀ¾üÌô ¦À¡Õû ¦º¡øÄ §Åñ¼¡õ ±ýÚ ±ñϸ¢§Èý.

¸¡÷ ±ýÀÐ ¸Ã¢Â Ó¸¢¨ÄÔõ, Ó¸¢ø ¦À¡Æ¢Ôõ Á¨Æ¨ÂÔõ, Á¨Æì ¸¡Äò¨¾Ôõ ÌÈ¢ìÌõ. ¸¡÷ = Á¨Æì ¸¡Äõ, ¬Å½¢ ¦¾¡¼ì¸õ ±ýÀÐ þÃñ¼¡Â¢Ãõ ¬ñθÙìÌ Óý ÒÅ¢ §ÁƧš¨ÃìÌ §¿§Ã þÕó¾ §À¡Ð Á¢¸î ºÃ¢Â¡¸ þÕó¾Ð. þó¾ì ¸¡Äò¾¢ø ÒŢ¢ý ¸¢ÚÅ¡ð¼õ ¿õ¨Á ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ Á£É§Å¡¨ÃìÌ §¿§Ã ¦¸¡ñÎ §º÷ò¾ ¸¡Ã½ò¾¡ø ÀÆó¾Á¢úì ¸¡Äí¸û Á¡È¢ ÅÕ¸¢ýÈÉ. ¬Å½¢Â¢ý ¦¾¡¼ì¸ò¾¢ø ÅçÅñÊ Á¨Æ ¬Ê À¾¢¦Éðʧħ ÅóРŢθ¢ÈÐ. ±ôÀÊ Àºó¾ ¸¡Äò ¦¾¡¼ì¸õ º¢ò¾¢¨Ã Ó¾ÖìÌ(²ôÃø 14-üÌ)ô À¾¢Ä¡¸ Á¡÷îÍ 21/22 째 ÅóРŢθ¢È§¾¡ «Ð §À¡Äò ¾¡ý þó¾ Á¡üÈò¨¾Ôõ ¦¸¡ûÇ §ÅñÎõ.

ܾ¢÷ ±ýÀ¨¾ ¿õÁ¢ø ÀÄ÷ ܾü¸¡Äõ ±ýÚ ±ñ½¢ì ¦¸¡û¸¢§È¡õ. «Ð ¸ÕòÐô À¢¨Æ. º¢Ä «¸ÃӾĢ¸Ç¢Öõ «ôÀÊ ÅóРŢð¼Ð. «Ð¾¡ý ºÃ¢¦ÂýÈ¡ø ¸¡Äí¸¨Ç ¯½÷ÅÐ ¾Å¦ÈýÚ ¬¸¢Å¢Îõ. «ôÒÈõ ÓýÀÉ¢, À¢ýÀÉ¢ ±¾üÌ? þ¨Ä¸û Ü÷óÐ ¦¸¡ûÙ¸¢È, ãÊì ¦¸¡ûÙ¸¢È, ¯¾¢÷óÐ ¦¸¡ûÙ¸¢È ¸¡Äõ ܾ¢÷ì ¸¡Äõ. ̾¢÷ ±ýÀÐ ÜõÀ¢ì ¸¢¼ôÀÐ. Ü÷ó¾Ð ÜÄõ = Å¢¨¾; Ü÷óÐ ¦¸¡ðÊì ¸¢¼ìÌõ Ìô¨À¨Âì ÜÇõ ±ýÚ ¦º¡ø¸¢§È¡§Á, þ¨Å¦ÂøÄ¡õ ¦¾¡¼÷ÒûÇ ¦º¡ü¸û.

ÀÉ¢ì ¸¡Äõ ±ýÀÐ «ô¦À¡ØÐ ¯ûÇ ÌǢáø ¸¡¨Ä §¿Ãò¾¢ø ¸¡üÈ¢ø ¯ûÇ ®Ãõ ÐÇ¢¸Ç¡ö Á¡È¢ô ÀÄÅ¡¸¢ì ¸¢¼ôÀ¨¾§Â ÌÈ¢ìÌõ. Àø ÀÄÅ¡Ìõ. ÀýÉ¡¸×õ ¬Ìõ.

"Á¢ýÛõ À¢ýÛõ ÀýÛõ ¸ýÛõ
«ó¿¡ü ¦º¡øÖõ ¦¾¡Æ¢ü¦ÀÂ÷ þÂÄ"

±ýÀÐ ¦¾¡ø¸¡ôÀ¢Âõ. ÀýÉ¢ô ÀýÉ¢ô §À;ø ±ýÀÐ ÀÄÅ¡È¡¸ô §À;ø, ÀýÛ¾ø ÀÉ¢ò¾Ä¡¸ ¿£Ùõ. ÀÉ¢ ±ýÀÐ ¬í¸¢Ä dew Å¢üÌî ºÃ¢ºÁÁ¡ÉÐ.

þÉ¢ ż¦Á¡Æ¢ ÅÆ¢Â¡É ÀÕÅô ¦ÀÂ÷¸¨Çô À¡÷ô§À¡õ.

ӾĢø ÅÕÅÐ §ÁÆ Å¢ØÅ¢ø ¦¾¡¼íÌõ Àºó¾ þÕÐ. þРż¦Á¡Æ¢Â¢ø źó¾ ÕÐ ±ýÚ ÅÕõ.

«Îò¾Ð ¸ÕÁ þÕÐ. ¦Åö¢Ģø ¸ÕòÐÅ¢ð¼¡ý ±ýÚ ¦º¡ø¸¢§È¡õ þø¨Ä¡? ÓЧÅÉ¢ø ¸Õì¸ ¨ÅìÌõ. ¸ÕÁ>grishma; ¸Õ¿ý>Krishnan ¬ÉÐ §À¡Ä.

ãýÈ¡ÅÐ ÅƢ þÕÐ; Á¨Æ ¦À¡Æ¢¸¢ÈÐ; ÅÆ¢¸¢ÈÐ. ÅÆ¢>varshi

¿¡ý¸¡ÅÐ þ¨Ä ¯¾¢÷óÐ ¦º¡Ã¢¸¢ýÈ ¸¡Äõ ¦º¡Ã¢¾ü ¸¡Äõ. ¦º¡Ã¢¾ø>sharad

³ó¾¡ÅÐ ÀÕÅõ ÀÉ¢òÐÇ¢ ÀÄÅ¡¸¢ì ÌÁ¢óÐ ¸¢¼ìÌõ ¸¡Äõ ÌÁ¢¾ø= ´ýÚ ÀÄÅ¡¾ø. ÌÁõ* > þÁõ = ÀÉ¢. ÌÁ狀÷óÐ ¸¢¼ìÌõ Á¨Ä ̨Áó¾ Á¨Ä = ÀÉ¢ Á¨Ä= ±É§Å ÌÁ Á¨Ä = †¢ÁÂõ; ̨Áó¾ þÕÐ = hemantha rtu

¬È¡ÅÐ ÀÕÅõ º¢¾Èø ÀÕÅõ; ÀÉ¢î º¢¾Èø ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸î º¢¾È¢ì ̨ȸ¢ÈÐ. º¢¾È þÕÐ> sisira rtu.

ÁüÈ þó¨¾Â¢¦Ã¡ôÀ¢Â÷ ±øÄ¡õ ¿¡Ö ÀÕÅõ ÀüÈ¢ô §Àº¢ì ¦¸¡ñÊÕì¸, ż¦Á¡Æ¢Â¡Ç÷ ÁðÎõ ¾Á¢Æâý ¬ÚÀÕÅí¸û §ÀÍÅРŢó¨¾Â¡ÉÐ. ¬É¡ø ¿¡Ö ÀÕÅõ, ¬Ú ÀÕÅõ «ó¾ô ¦ÀÂ÷¸Ç¢ý ¦À¡Õû¸û ±øÄ¡§Á ¿¡ÅÄó¾£Å¢ý «ÊôÀ¨¼Â¢ø ¨ÅòÐô À¡÷ò¾¡ø ¾¡ý ¦À¡Õû ºÃ¢Â¡¸ Å¢Çí̸¢ýÈÉ.

þó¾ô ÀÕÅí¸û Åð¼Á¡¸ ÅóÐ ¦¸¡ñ§¼ þÕ츢ýÈÉ. þÃ× À¸Ä¡¸¢ÈÐ; À¸ø þÃÅ¡¸¢ÈÐ. þó¾ô ¦ÀÕõ¦À¡Øиû §À¡Ä§Å º¢Ú¦À¡Øи¨ÇÔõ ¿¡Ä¡¸×õ, ¬È¡¸×õ ÀÌì¸Ä¡õ. «¨¾ «Îò¾ Ó¨È À¡÷ô§À¡õ.

À¸¨ÄÔõ, ¿¢Æ¨Ä¨ÂÔõ ¨ÅòÐ À¡ÅÄ÷ ²Ú ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ´Õ ÌӸŢÂü ¸Õò¨¾ì ÜÚŨ¾ô ÀÊÔí¸û.

----------------------------------------------------------------------
¦ÀÚõ ¦ÀüÈ¢

¿¢ÄÓÐÌ ´ÕÒÈõ ¿£Ê ¿¢ÆÖõ
Àĸ¾¢÷ µÊ À¸Öõ §À¡Ä
¯Ç§Å¡÷ ¯ñ¨ÁÔõ þħš÷ þý¨ÁÔõ
«Ç× Å¨ÃòÐ «ý§È! ¬ö þÕ ÁÕíÌõ
¿¢ýÚ ¿£Ù¾ø ¿£û ¿¢ÄòÐ þý§È!
ÌýÈýÉ ¦¸¡Ê ¿¢Úò¾¢ò
¾¢ýÚ ¯öÂò ¾¢Õ Å¡Æ¢Ûõ
´ýȢġ÷ìÌ ´ýÚ ÅóÐ ¯¾Åø
À¢ý¨Èò ¾¡õ ¦ÀÚõ ¦ÀüȢ¡õ ¬§È!

¦À¡Æ¢ôÒ:

¿¢Äì §¸¡Çò¾¢ý ŨÇó¾ ÒÈ Óи¢ý ´Õ ÒÈò§¾ Óý§É¡ì¸¢ ¿£ñÎ ¦¸¡ñ§¼ §À¡¸¢ýÈ ¿¢ÆÄ¡¸¢Â þÕÙõ, Áü¦È¡Õ ÒÈò§¾ Àø§¸¡Êì ¸¾¢÷ì ¸ü¨È¸Ç¡ø Å¢¨ÇóÐ Óý§É¡ì¸¢ µÊì ¦¸¡ñÊÕì¸¢È À¸¦Ä¡Ç¢Ôõ §À¡ø, þù×ĸ¢ý ¸ñ ¦À¡Õû ¯ûÇÅâý ¯ÇÅ¡õ ¾ý¨ÁÔõ, «·¾¢øÄÅâý þÄÅ¡õ ¾ý¨ÁÔõ ±ø¨Ä ¿¢¨ÄôÒ¨¼ÂÉ «øÄ. «ùÅ¢ÕÒÈòÐõ ´Õ ¦À¡Ø¾¢ø ¿¢ýÈ ¿¢¨Ä§Â ¦¾¡¼÷óÐ ¿£Êì¸ô ¦ÀÚ¾ø þùŸýÈ ¿¢Äò¾¢ý ¸ñ ¡ñÎõ þø¨Ä. ÌýÈ¢ý ¯Â÷ «ÇÅ¡¸ò ¾õ þÄ¨Éì ¦¸¡Ê¨Â ¿¢Úò¾¢, «¾ý ÀÕÁ «ÇÅ¡¸ò ¾¡Óõ ¾õ À¢Èí¸¨¼ÂÕõ ¾¢ýÚ ¯öÔõ ÀÊ ¾ÁìÌî ¦ºøÅÅÇõ Å¡öó¾¢ÕôÀ¢Ûõ, «ó ¿¢¨Ä¸Ç¢ø ´ýÚ ¾¡Ûõ «¨¼ó¾¢Ä¡÷ìÌ §ÅñΞ¡¸¢Â ´Õ ¦À¡Õ¨Çò ¾õ ¯ûÄõ ¯ÅìÌÁ¡Ú ¯¾×¾§Ä, ¾ÁìÌô ¦À¡Õó¾¢Â ÅÇõ ÌýȢ ¸¡ÄòÐò ¾¡õ ÐöôÀ¾üÌ ¯Ã¢Â Å¡öôÒ ¯ÕÅ¡Ìõ ÅƢ¡õ!

ŢâôÒ.

þôÀ¡¼ø ÒÈòШȨÂî º¡÷ó¾Ð.

¯Ä¸ ¯Õñ¨¼¨Âî ÍüÈ¢î ÍÆø¸¢ýÈ þÃ×õ À¸Öõ §À¡ø Áì¸ðÌ Å¡öìÌõ ¦ºøÅ ¿¢¨ÄÔõ ÅÚ¨Á ¿¢¨ÄÔõ ŨÃÂÚì¸ô Àð¼É «øÄ. þÕ ¿¢¨Ä¸Ùõ ´Õ ¿¢¨Ä¢§Ä§Â ¿¢üÈø Á¡È¡î ÍÆüº¢Ô¨¼Â ¿¢Äò¾¢ý ¸ñ ¡ñÎõ ¿¨¼ ¦ÀÚ¾ø þø¨Ä. ÌýÚ§À¡ø ÌÅ¢ò¾ ¦ºøÅõ ¯¨¼ÂÅÕõ À¢ü¸¡ÄòÐ «¨¾ò ¾ÅÈ¡Ð Ðöò¾ø «Ã¢Ð; «ùÅ¡Ú ÐöìÌõ ÅÆ¢ «ó¿¢¨Ä ±Ðõ þøÄ¡¾Å÷ìÌ ¯Çõ Á¸¢úŨ¼Ôõ ÀÊì ¦¸¡ÎòÐ ¯¾×¾§Ä ¬Ìõ ±ýÚ ¯Ä¸ Å¢Âü¨¸¨Â ¯½÷ò¾¢ì ÜȢ¾¡Ìõ þôÀ¡ðÎ.

þÐ ¦À¡ÐÅ¢Âø ±ý ¾¢¨½Ôõ, ¦À¡Õñ ¦Á¡Æ¢ì ¸¡ïº¢ ±ý ШÈÔÁ¡Ìõ.
-----------------------------------------------------------------------------------------------------

No comments: