கோராவில் ஒருவர் “what is the etymology of the words Raksha/Rakkha(Rakshasa), Yaksha/yakkha and Naga/Naka? Are they Tamil or Sankrit?” என்று கேட்டிருந்தார். அவருக்குத் தமிழ் தெரியுமாம். இருப்பினும் இச்சொற்களை அறிந்தார் இல்லை. தமிழில்,
அரட்டு-தல் = அச்சமூட்டு-தல்
அரக்குதல் = வருத்துதல், அழித்தல் என்ற வினைகளில் அடியெழும் பெயர்ச்சொற்கள் இவை.
இவற்றை அறிய எந்தத் தொல்கதையும் நமக்குத் தெரிய வேண்டியதில்லை. வெறும் பொருள் போதும். அரக்கு-தலின் வழி,
அரக்கு> அரக்கன்
அரக்கு> அரக்கி
அரக்கு> அரக்கதன்> ராக்கதன்> இராக்கதன் என்ற சொல்லும் பருத்தவன், அச்சமூட்டுபவன் என்ற பொருளில் வரும்.
இனி அரக்கு> அரக்கத்தி> அரக்கச்சி> அரக்க்சசி? அரக்க்ஷசி> ராக்க்ஷசி> ராக்சஷி>இராட்சசி
அரக்கு> அரக்காயி> ராக்காயி
யா = கருப்பு; யாக்கன் = கருப்பன்; யாக்கி = கருப்பன்
யாக்கன்> யக்கன். யக்ஷன்
யாக்கி> யக்சி> யக்ஷி
அடுத்து ய> ஞ> ந திரிவில் கருப்பைக் குறிக்கும் யா என்ற சொல் நா என்றும் திரியலாம்.
யா>நா; யாக்கன்>யாகன்>நாகன்= கருப்பன்
No comments:
Post a Comment