Thursday, December 26, 2024

Pressure Cooker.

 pressure cooker இக்குக் தமிழ் இணைச்சொல் கேட்கப் பட்டது.


குய்-தல் = வே-தல், எரி-தல், தாளி-த்தல் to boil, to burn, to fry. குய்-தல் சங்க இலக்கியத்தில் வெவ்வேறாய்ப் பயன்பட்டுள்ளது.

குரூஉ குய் புகை மழை மங்குலின் - மது 757
குவளை உண்கண் குய் புகை கழும - குறு 167/3
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் - புறம் 10/7
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் - புறம் 127/7
குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில் - புறம் 160/7
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில் - புறம் 250/1
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு - புறம் 397/13
குய்ய (1)
நெய் குய்ய ஊன் நவின்ற - புறம் 382/8
குய்யான் (1)
கனி குய்யான் கொழும் துவையர் - புறம் 360/5
குய்யிடு-தோறும் (1)
குய்யிடு-தோறும் ஆனாது ஆர்ப்ப - பதி 21/11
குய்யும் (1)
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு - நற் 380/1

குய்-தலின் நீட்சியாய், குய-த்தல் (= குயத்து + அல்), குய-க்கல் = (குயக்கு + அல்), குய-ப்பல் (= குயப்பு + அல்)
என்று மூ வகையாய்ச் சொல்ல முடியும். இதன் பெயர்ச் சொற்களாய் குயத்து = heat, குயக்கு = வெக்கு> வெக்கை = cook, குயப்பு = வெப்பு = சூடு, calory என்பனவற்றைச் சொல்லலாம்.

குயக்கி = cooker

pressure cooker = அழுத்தக் குயக்கி.

Saturday, December 14, 2024

திருகைகள் = nuts

 Hex nut = அறுகைத் திருகை

Lock nut பூட்டுத் திருகை

Jam nut = செம்முத் திருகை

Push nut = புகுத்துத் திருகை

Coupling nut = இணைப்புத் திருகை

square nut = சதுரத் திருகை

speed nut = விரைவுத் திருகை

Tee nut = T திருகை

wing nut = சிறகுத் திருகை

U-nut = U திருகை

Axle nut = அச்சுத் திருகை

castle nut = கோட்டைத் திருகை


Tuesday, December 03, 2024

By-law


ஒவ்வொரு குமுகாய அமைப்பிலும் அதில் பங்குபெறும் ஆட்கள், நடவடிக்கைகளுக்கு எனச் சில சட்ட திட்டங்கள் உண்டு. “இதற்கு இது அளவு” என வரும்போது நாம் எல்லைகள் பற்றிப் பேசுகிறோம். ஆங்கிலத்தில் இதை limit / boundary எனச் சொல்வார். 

law என்பது அளவுகளோடு (limit / boundary) தொடர்புடையது. இன்னின்ன செயல்களுக்கு இது எல்லை; இவ்வெல்லையை  மீறினால் இன்னின்ன தண்டனை என்பது law வின் பகுதிகள் ஆகும். இதற்கு அளவை, விதி என்ற சொல்லை பழந்தமிழர் பயன்படுத்தினர். இன்றும் pre-determined என்பதற்கு ஈடாக ”விதி”யைப் பயன்படுத்தும் நாம், அளவை என்ற சொல்லை பெரும்பாலும் மறந்தே விட்டோம். எல்லாவற்ரையும் சட்டம் என்றே சொல்லப் பழகிவிட்டோம். சட்டம் என்பது அமைப்பு வரிதியானது. அளவைகளின் தொகுதி சட்டம். சட்டத்தின் பகுதிகள் அளவைகளாகும். 

அளவையோடு தொடர்புற்றது அளகை = logic. இதற்கு ஏரணம் என்ற மற்றொரு சொல்லும் உண்டு. law விற்கும் logic -ற்கும் நிறையக் கணுக்கம் (connection) உண்டு. 

அளவையர் = lawyer. இதற்கு மாறாய் வழக்கறிஞர் என்று சொல்வது சற்று சரியில்லை. அதே பொழுது advocate என்பதற்கு வழக்குரைஞரே போதுமானது. இனி bylaw என்பதற்கு வருவோம். இதை

also by-law, late 13c., bilage "local ordinance," from Old Norse or Old Danish bi-lagu "town law," from byr "place where people dwell, town, village," from bua "to dwell" (from PIE root *bheue- "to be, exist, grow") + lagu "law" (see law). So, a local law pertaining to local residents, hence "a standing rule of a corporation or association for regulation of its organization and conduct." Sense influenced by by.

என்று ஆங்கிலத்தில் சொல்வர். ஒரு நிறுவனத்தை அமைக்கும் போது அரசின் சில அளவைகளுக்கும் அதிகமாய் இந்த நிறுவனத்திற்குள் அமையும் நடைமுறைகளுக்கு என சில எல்லைகள்/ வரம்புகளைக் குறியிருப்பர். இதற்கு உட்படும் அளவைகள் இவை என நிறுவன ஆவணத்தில் சொல்லியிருப்பர். அவையே by-laws எனப்படும்.

உட்படு அளவைகள் = by-laws. (வினைத் தொகை).


Sunday, December 01, 2024

திரு ஓங்கட்டும்.

 சுழற்குறி (சங்கதத்தில் இது சுவத்திகம்> ஸ்வஸ்திகம்) என்பது செயினத்திற்கும் அற்றுவிகத்திற்கும் பொதுவான ஒரு சொல். (இப்போது ”இந்து” என்ற கலவை மதத்திற்கும் சொந்தம் என்பார்.பொதுக்கை நெறி பின்பற்றிய அரசியற் கட்சிகளும் கூட ஒரு காலத்த்ல் இக்குறியைத் தமதாய் ஏற்றுக்கொண்டன.) சுழற்குறி சுவற்குறியாகி ”ஓங்கட்டும்” என்ற பொருளில் நம்மூர்க் கல்வெட்டுகளில் இது பலகாலம் குறிக்கப்பட்டது. ”சுவல்த்தி திரு” என்பது ”சுவஸ்திஸ்ரீ” என்று சங்கதத்தில் வெளிப்படும்.இக்குறியீட்டை எப்படி விளங்கிக் கொள்வது? - என்பதே இந்த இடுகையின் பொருண்மை.



தமிழியில் இருந்து 2 ஒகர எழுத்துகளை எடுத்து ஒன்றின் குறுக்காய் இன்னொன்றைப் போட்டால்  சுவத்திக் குறி வந்துசேரும். அடுத்து நாகரிக் குறியீட்டில் அகரத்தோடு 2 புள்ளிகளை இட்டால் ”அம்” எனும் ஒலி வந்துசேருவதைப் போலவே, இங்கே சுவத்திக் குறியீட்டோடு 4 புள்ளிகள் இட்டால் ”ஓம்” என்ற ஒலி வந்து சேரும். ஓம் என்பது ஓம்புதலையும், ஓங்குதலையும் குறிக்கும். 


இக் குறியீட்டிற்குப் பக்கத்தில் ஸ்ரீ எனும் கிரந்தக் கூட்டெழுத்தை எழுதினால் ”திரு ஓங்கட்டும்” என்ற பொருள் வந்துவிடும். இதைத் தான் சுவஸ்திஸ்ரீ என்று கலவை எழுத்தில் எழுதினார். இரு வேறு மொழிகள், இரு வேறு எழுத்துகள் ஆகியவற்றின் கலவையே இச் சொல்.