சுழற்குறி (சங்கதத்தில் இது சுவத்திகம்> ஸ்வஸ்திகம்) என்பது செயினத்திற்கும் அற்றுவிகத்திற்கும் பொதுவான ஒரு சொல். (இப்போது ”இந்து” என்ற கலவை மதத்திற்கும் சொந்தம் என்பார்.பொதுக்கை நெறி பின்பற்றிய அரசியற் கட்சிகளும் கூட ஒரு காலத்த்ல் இக்குறியைத் தமதாய் ஏற்றுக்கொண்டன.) சுழற்குறி சுவற்குறியாகி ”ஓங்கட்டும்” என்ற பொருளில் நம்மூர்க் கல்வெட்டுகளில் இது பலகாலம் குறிக்கப்பட்டது. ”சுவல்த்தி திரு” என்பது ”சுவஸ்திஸ்ரீ” என்று சங்கதத்தில் வெளிப்படும்.இக்குறியீட்டை எப்படி விளங்கிக் கொள்வது? - என்பதே இந்த இடுகையின் பொருண்மை.
தமிழியில் இருந்து 2 ஒகர எழுத்துகளை எடுத்து ஒன்றின் குறுக்காய் இன்னொன்றைப் போட்டால் சுவத்திக் குறி வந்துசேரும். அடுத்து நாகரிக் குறியீட்டில் அகரத்தோடு 2 புள்ளிகளை இட்டால் ”அம்” எனும் ஒலி வந்துசேருவதைப் போலவே, இங்கே சுவத்திக் குறியீட்டோடு 4 புள்ளிகள் இட்டால் ”ஓம்” என்ற ஒலி வந்து சேரும். ஓம் என்பது ஓம்புதலையும், ஓங்குதலையும் குறிக்கும்.
இக் குறியீட்டிற்குப் பக்கத்தில் ஸ்ரீ எனும் கிரந்தக் கூட்டெழுத்தை எழுதினால் ”திரு ஓங்கட்டும்” என்ற பொருள் வந்துவிடும். இதைத் தான் சுவஸ்திஸ்ரீ என்று கலவை எழுத்தில் எழுதினார். இரு வேறு மொழிகள், இரு வேறு எழுத்துகள் ஆகியவற்றின் கலவையே இச் சொல்.
No comments:
Post a Comment