இந்த இடுகை hospital, hostel, hostage, hotel, guest தொடர்பானது. hospital, hotel என்பவற்றிற்கு வேறு பெயர்களை நானே முன்னால் பரிந்துரைத்துள்ளேன். அவற்றை மறுத்து இப்போது வேறு சொற்கள் பரிந்துரைக்கிறேன் என்று எண்ணவேண்டாம். இது கூடு-தல் வினையில் எழுந்த தொகுதிப் பெயரகள் ஆகும். இவற்றை மேலும்வந்த அதிகப் பெயர்கள் என்று கொள்க. பெயர்விளக்கம் கீழே வருகிறது.
hospital = கூட்டுப்புரவல். ஒரு காலத்தில் பிரான்சில் hospitalக்கும் hotelக்கும் ஒரே மாதிரிப் பெயர் கொண்டிருந்தார். இங்கே, கூடிவந்த நோயரை புரவும் (காப்பாற்றும்) இடம் என்ற கருத்தில் கூட்டுப்புரவல் என்ற சொல் எழுகிறது..
hosptalize = கூட்டுப் புரவலாக்கு;
host = கூட்டகர்; கூடுவதற்கான அகம் = கூட்டகம்; கூடலை நடத்துவோர் கூட்டகர்.
hostess = கூட்டகத்தி;
hospitable = கூட்டக;
hospitality = கூட்டகன்மை;
hospice = கூட்டுப்புரை; கூட்டிப் புரக்கும் இன்னொரு வகை.
hospodar = கூடுவோர் தலைவர் = கூடுவோருக்கான தலைவர்;.
hostel = கூடுதளம்; இதையும் விடுதி என்று பல மாணாக்கர் சொல்லிவந்தார். hotelஐயும் hostelஐயும் வேறுபடுத்தத் தளம் சேர்த்தேன். தளம் =இடம்.
hostler/hostelier = கூடுதளர்;
hostelry = கூடுதளவம்;
hostage = கூண்டகை; கூடுதலும் கூண்டும் தொடர்புள்ள சொற்கள். இங்கே கூண்டுக்குள் அடைபடும் செயலையும் ஆளையும் குறிக்கும்.
hostile = கூட்டிலி;
hostility = கூட்டிலிதி;
hotel கூடகல்;; அகல் அகத்தின் பெருஞ் சொல்.
hotelier கூடகலர்;
guest = கூடியர்; கூட்டகர் கூட்டியதற்கு கூடியவர் இவர்.
guest house = கூடியர் இல்லம்;
guest night = கூடியர் இரவு;
guest room = கூடியர் அறை;
No comments:
Post a Comment