இதில் இயற்பெயர்கள் அப்படியே ஏற்கப் படுகின்றன. மற்ற சொற்களே மொழிபெயர்க்கப் படுகின்றன. (கீழ் வருவதில் era - எழுகை, period = பருவம்.)
late proterozoic era = கடை முன்னுவாழ் எழுகை (650-541 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) முதல் காழுள்ள எளிமங்கள் (first skeletal elements), முதல் சவையுடல் முகட்டுவாழிகள் (first soft-bodied metazoans), முதல் விலங்குத் துணுக்குகள் (first animal traces)
paleozoic era = பழைவாழ் எழுகை (541-251.902 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்)
cambrian period = கேம்பிரியப் பருவம் (541 -485.4 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதல் மீன்கள், முதல் குட்டத்திகள் (first chordates; குட்டம் உள்ள உயிரிகள்)
Ordovician period = ஆர்டோவிகப் பருவம் (485.4-443.8 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முகட்டுவாழிக் குடும்பங்களின் திடீர் விரிவு.
Silurian period = சிலூரியப் பருவம் (443.8 - 419.2 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதன்முதல் நாளங்கொண்ட நிலத் தாவரங்கள்>
Devonian period = தெவோனியப் பருவம் (419.2 - 358.9 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதல் நிலநீர் வாழிகள், தாடையுள்ள மீன்கள் பல்வேறு விதப்புகள் ஆதல்.
carboniferous period = கரிப்பேற்றுப் பருவம் (358. 9 - 298.9 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) முதல் சாரைகள் (reptiles), அளவு மரங்கள் (scale trees_ விதைப் பன்னங்கள் ( seed ferns).
(மேலுள்ளதில் Mississippian period = மிசிசிப்பியப் பருவம், Pennsylvanian period = பென்சில்வேனியப் பருவம் என்பதும் உண்டு
permian period = பெர்மியப் பருவம் (298.9 -251,902 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) மேய வாழணைப்பு (major extinctions), சாரை வேற்றங்கள் (reptiles diversity)
mesozoic era = மிடைவாழ் எழுகை (251.902-66 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்)
triassic period = துதியகப் பருவம் (251.902-201.36 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்; துதி>த்ருதிய = three. துதி = மூன்றிற்கான இன்னொரு தமிழ்ச் சொல் )
jurassic period = யூராயகப் பருவம் (201.36-145 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதல் பாலூட்டிகள், முதல் துணுச்சாரைகள்
cretaceous period = சுதையகப் பருவம் (145-66 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (சுதை = சுண்ணாம்பு) முதல் பறவைகள், துணுச்சாரை வேற்றங்கள்.
cenozoic era = அண்ணுவாழ் எழுகை (66.21 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்னில் இருந்து இப்போது வரை) துணுச்சாரை வாழணைப்பு, முதல் பெருமிதைகள் (primates), முதல் பூக்கும் தாவரம்
paleogene period = பழைய கன்னுப் பருவம் (66-23.03 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (கன்னுதல் = தோன்றுதல்) பாலூட்டி வேற்றங்கள்
neogene period = புதிய கன்னுப் பருவம் (23.03-2.58 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) பாலூட்டி வேற்றங்கள்
quaternary period = சதுரப் பருவம் (2.58 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து இப்போது வரை) (சதுரம் தமிழே) மாந்தத் தோற்றம்.
No comments:
Post a Comment