குருதயத் தொடரில் தசை பற்றி ஏன் பேசவேண்டும்? - எனச் சிலர் கேட்கலாம். வேறொன்றுமில்லை. உடலுறுப்புகளைத் தசைவழி இயக்குகிறோமல்லவா? அதனால் பேசுகிறோம்.. குருதய இயக்கங் கூடத் தசைகளாலும், வேதிமாற்ற வெடிப்பியக்கத்தாலும் நடைபெறுவதே. முன்சொன்ன “லப்டப்”, ”குடுகுடு> குருகுரு” ஓசை கூட இப்படித்தான் எழுகிறது. எலும்பியக்கங்களுங் கூடத் தசைகளால் நடக்கின்றன. தசைகள் இயங்க, வளர, புதுப்பிக்கத் தேவையான சத்தைக் குருதியே கொணர்கிறது. ”ஊன் தசை, தடி, தூ, பிசிதம், புளிதம், புலால், புலவு, புண் வள்ளுரம், விடக்கு” என்று தசைக்கு ஈடாய்ச் சூடாமணி நிகண்டு அடுக்கும். பிற்காலச் சொல்லான புளிதம் தவிர மற்றவை திவாகரம், பிங்கலத்திலுமுண்டு, இவற்றின் சொற்பிறப்புகள் எளிதே.
உல்> ஊல்> ஊன் என்பது ”பற்றியதெனப்” பொருள்படும். (எலும்பைப் பற்றியது ஊன்). துள்>தள்>தயை>தசை= திரண்டது; துள்>தள்>தடு>தடி= திரண்டது. துள்> தூ= திரண்டது. புல்>புலவு= திரண்டது, புல்>புலால்= திரண்டது, புல்>புள்> புளிது> புளிதம் = திரண்டது. புல்>புள்>புண் திரண்டது; பூதியும் பெரியது என்பதால் திரண்டதென்றே பொருள் கொள்ளும் , பிள்> பிய்> பிய்து> பிய்தம்> பிசிதம் என்பது திரண்டதைப் பிள்ளக் கூடியது. இதே பொருளில், வள்ளுரம்= வள்ளக் கூடிய உரம் என்பதும் வரும்; வள்ளுதல்= வகிர்தல். குரு> குரம்> உரம்= குருதி சார்ந்த வலிய தசை. விள்> விளக்கு> விடக்கு= பிளக்கக் கூடியது. வள்ளுதலும் விள்ளுதலும் ஒரு பொருட்சொற்களே. இதுபோக இற்றி, இறைச்சி என்பவையும் உண்டு. இற்றுதல் = முறித்தல். இறைத்தல்= இற்றக்கூடியது இறைச்சி. அடுத்து எலும்பை மூடியது முடை. முடைநாற்றமென இக்காலம் சொல்கிறோம். முடையும் இந்தை யிரோப்பிய meat உம் தொடர்புள்ளவை. உல்> ஊல்> ஊழ்> ஊழ்த்தல் என்பதும் பற்றிக் கொண்டதையே குறிக்கும். உல்> ஊல்> ஊன்> ஊன்றுதலை இதோடு எண்ணிப் பாருங்கள்.
[ஊழ்தலின் கருத்துத் தொடர்பாய்த் தமிழிலக்கியத்தில் ஊழ்= நியதி= விதி என்பது, பற்றுக்கருத்தோடு தொடர்புற்று ஏற்படும். உயர்கணித வகைப்புச் சமன்பாடுகளைச் (differential equations) சுளுவெடுக்கையில் (to solve), தொடக்கக் கட்டியங்களையும் (initial conditions), பிணிப்புக் கட்டியங்களையும் ( boundary conditions) விதிப்பார்கள். அவற்றை ஓர்ந்தால், அவை ஊழ்க் கட்டியங்கள் என்பது புலப்படும். ஊழைக் கட்டினால், எந்தச் செலுத்தமும் (process) வரையறுக்கப் (defined) பட்டுவிடும். உடலியல் தொடர்பான இக்கட்டுரையில் மெய்யியல் வேண்டாமெனத் தவிர்க்கிறேன்.அற்றுவிகம் (ஆசீவிகம்) பேசும் வேறு கட்டுரையில் இதை விளக்குவேன்.]
அடுத்துக் குருதய இயக்கம் பார்ப்போம். உடலின் பல பாகங்களிலிருந்து வரும் அஃககம் (oxygen) இழந்த குருதி, உள்ளகக் குவி வழிநம் (interior vena cava) மூலமும், உம்பர்க் குவி வழிநம் (Superior Vena cava) மூலமும் வல அட்டத்துள் (right atrium. அட்டம்= மேல்/முன் அறை) நுழைந்து, முக்குயப்பு வாவி (Tricuspid valve) மூலம் வல வளைக்குள் ( right ventricle) நுழைந்து, அழுத்தம் கூடியபின், புழைமுறு வாவி (pulmonary valve) வழி புழைமுறு எழுதைக்குள் (Pulmonary Artery) புகுந்து நுரையீரலுக்குப் போகும். அங்கு அஃககம் ஏறிய குருதி, புழைமுறு வழிநம் (Pulmonary vein) மூலம் இட அட்டத்துள் (Left Atrium) நுழைந்து மிடை வாவி (Mitral valve) மூலம் இட வளைக்குள் (Left venticle) நுழைந்து எழுதை வாவி (Aortic valve) மூலம், எழுதத்துள் (Aorta) நுழைந்து, முடிவில் வெவ்வேறு உடற்பாகங்களுக்கு நாளங்கள் வழியே இறைக்கப் படுகின்றன
(மேலுள்ளதில் cusp, pulmonary க்கான கலைச்சொற்களைப் புரிந்து கொள்க. வெவ்வேறு 2 புள்ளிகளில் தொடங்கும் வளைவுகள் மூன்றாம் பொதுப் புள்ளியில் முடிந்தால், முன்றாம் புள்ளியை cusp (a pointed end where two curves meet) என்பார். பானை செய்கையில், குயப்பின் (cusp) மூலமே குழிக்கிறோம். இனிப் pulmonary. எடையிலா நுரைபோல் அமைந்த நுரையீரல் (Lung), ஒரு பக்கம் காற்று நுண்ணறைகளும் இன்னொரு பக்கம் காற்றை ஈர்க்கும் குருதி நுண்குழாய்களும் கொண்டது. lung (n.) human or animal respiratory organ, c. 1300, from Old English lungen (plural), from Proto-Germanic *lunganjo- (source also of Old Norse lunge, Old Frisian lungen, Middle Dutch longhe, Dutch long, Old High German lungun, German lunge "lung"), literally "the light organ," from PIE root *legwh- "not heavy, having little weight" (source also of Russian lëgkij, Polish lekki "light;" Russian lëgkoje "lung") என்று சொற்பிறப்பியல் சொல்வார்.
இங்கு நுரை என்பது, எடையிலாமையைக் குறிக்கும். நுரைக்குப் பகரியாய் இலவம்>இலகம் பஞ்சையும் உருவகிக்கலாம். இன்னொரு வகையில் இலுத்தல்> ஈல்த்தல்> ஈழ்த்தல்> ஈர்த்தல் என்பதையும், இலு>இழு>இழுங்கு என்பதையும் ஓர்ந்துபார்க்கலாம், நுரையைத் தொக்கி இழுங்கு (lung) என்றும் சொல்லலாம். இலகம், இழுங்கம் எனும் 2 சொற்களில் முன்னதை நான் பரிந்துரைப்பேன். இன்னொரு வகையில் புழை (= நுண்ணறை) நிறைந்தது புழைமம். இலகம், புழைமம் எனும் 2 சொற்களை நுரையீரலோடு சேர்த்தால் உடலியல் படிப்பு எளிதாகும்.
இலகம், குருதயம், உடற்பாகங்கள் என்று சுற்றும் குருதியில் பால்மம், வெள்ளணு, சிவப்பணு, சில பெருதங்கள் (proteins) உள்ளன. பெருதங்களிற் சில, குருதிக் குளுகலை (clotting) உண்டாக்கலாம். மாந்தவுடல் காயப்படும்/ வெட்டுறும் போது, குருதி சிதறுவதை, குளுகுவதைத் தவிர்க்கமுடியாது. நீர்ம நிலையிலிருந்து அரைத் திண்மச் சளி ( gel) நிலைக்கு குருதி மாறுகையில், குருதிக் குளிகை (blood clot) ஏற்படும். அளவிற்கு மீறிய குருதியிழப்பைத் தடுக்கக் குளுகல் (Clotting) நடப்பது ஒருவகையில் நல்லதே, பேச்சுவழக்கில் குளுகலை அடைப்பு என்பார். குளிகை என்பது அடிப்படையில் கரடுதட்டிய உருண்டையே. நாளங்களுள் நகராக் குளிகை எத்துயரையும் தராது; நகரும் குளிகையோ, தானே கரையாததால், பெரும் ஊற்றை (danger) விளைவிக்கும். இரத்த வழிநங்களிலும் (veins), எழுதைகளிலும் (arteries) உடற்சிக்கலையும், உயிருக்கு உலைவையும் கூட ஏற்படுத்தலாம்.
இக்குளிகைகள் குருதயத்திற்கோ, இலகத்திகோ செலின், குருதியோட்டம் தடுத்து,. மருத்துவ அவக்கரம் (medical emergency) ஏற்படுத்தலாம். எழுதைக் குளுகல் சட்டெனச் சிக்கல் கொடுக்கும். வழிநக் குளுகலோ மெதுவாகச் சிக்கல் கொடுக்கும். அரிதாய் அமையும் பெருஞ்சிக்கல் வழிநக் குளுகலை , ”ஆழ் வழிநத் திரம்பல் (deep vein thrombosis) என்பார். இதுபோன்ற ஆழ்சிக்கல் பெரிதும் கால்களில் தான் நடக்கிறது. தவிர, மேற்கைகள், இடைக்குழி (pelvis), நுரையீரல், மூளை ஆகியவற்றிலும் நடக்கலாம். மூளைக்குள் நடக்கும் குருதிக் குளுகலால், மூளையியக்கமே கூடத் தட்டுப்படலாம் (இதைத் ”தட்கிறது” எனவும் சொல்லலாம். பலரும் ”தட்(டு)கை” என்று சொல்லத் தயங்கி ”stroke” என்பார்.). இது போலும் மூளைத் தட்டுகையில், கனத்த திடீர்த் தலைவலியும், பேச்சு, காட்சித் தடுமாற்றமும் உண்டாகும்,
இனி இந்தையிரோப்பியன் மொழிகளிலுள்ள சில குருதிச் சொற்களைப் பார்ப்போம். முதலில் வருவது blood க்கு மாற்றான gore (n.1) என்பதாகும். "thick, clotted blood," Old English gor "dirt, dung, filth, shit," a Germanic word (cognates: Middle Dutch goor "filth, mud;" Old Norse gor "cud;" Old High German gor "animal dung"), of uncertain origin என்று ஆங்கிலச் சொற்பிறப்பியலில் சொல்வார். இதையே, SKEAT தன் விளக்கத்தில்,
GORE (i), clotted blood, blood. (E.) It formerly meant also dirt or filth. It occurs in the sense of 'filthiness' in Allit. Poems, ed. Morris, ii. 306. <- A. S. gar, dirt, filth ; Grein, i. 520. + Icel. gor, gore, the cud in animals, the chyme in men. + Swed. gorr, dirt, matter. p. Allied to Icel. garnir, gorn, the guts ; Gk. xop5^, a string of gut, cord ; Lat. hira, gut, hernia, hernia. See Fick, i. 580; iii. 102; Curtius, i. 250. ^GHAR, of uncertain meaning. Hence Cord, Chord, Yarn, and Hernia are all related words. Der. gor-belly, q. v., gor-crow, q. v. Also gor-y, Macbeth, iii. 4. 51. G என்று குறிப்பார்.
இது ஒன்றும் தமிழுக்கு அயல் அல்ல. தமிழில் கோரம் என்கிறோமே? அது என்னவென்று ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா? குரு>குரம்>கோரம் என்று இச்சொல் குருதியோடு தொடர்புடையது.cord என்பதை gore ஓடு ஸ்கீட் தொடர்பு உறுத்துவதையும் பாருங்கள். தமிழுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் கட்டாயம் ஏதோவொரு உறவு இருந்துள்ளது. நமக்கு அது புரிபடாது இருக்கிறது. மேலே குரம்>உரம் என்று தசைச்சொல்லுக்கு குரு சார்ந்த அடையாளங் கண்டோமே, அதையும் நினைவு கொள்ளுங்கள்.
அடுத்தது hemoglobin (n.) also hæmoglobin, coloring matter in red blood cells, 1862, shortening of hæmatoglobin (1845), from Greek haimato-, combining form of haima (genitive haimatos) "blood" (see -emia) + globulin, a type of simple protein, from globule, formerly a word for "corpuscle of blood." இதற்கு இணையாய்ச் செங்கோளம் என்று சொன்னேன்.
குருதியின் அடிநீர்மமான plasma (n.) வைத் தமிழில் பால்மம் என்போம். (1712, "form, shape" (a sense now obsolete), a more classical form of earlier plasm; from Late Latin plasma, from Greek plasma "something molded or created," hence "image, figure; counterfeit, forgery; formed style, affectation," from plassein "to mold," originally "to spread thin," from PIE *plath-yein, from root *pele- (2) "flat; to spread.")
பால்மத்திற்கு இன்னொரு சொல்லாய் serum (n.) என்பதை இந்தை யிரோப்பியனில் சொல்வார். ( 1670s, "watery animal fluid," from Latin serum "watery fluid, whey," from PIE verbal stem *ser- "to run, flow" (source also of Greek oros "whey;" Sanskrit sarah "flowing, liquid," sarit "brook, river"). First applied 1893 to blood serum used in medical treatments). சில மரங்களில் கீரினால்>கீறினால் கிடைக்கும் நீரைப் பால் என்றே தமிழில் சொல்வதுண்டு. பனம்பால், தென்னம் பால், போல அரப்பைப் (rubber) பாலும் உண்டு. இதைக் கீரம்>கீறம் என்றும் சொல்லலாம். இந்தக் கீரம் தான் வடக்கே கடனில் போய், க்ஷீரம் ஆகும். மீண்டும் கடன்வாங்கி குடிக்கும் பாலுக்கே சிலர் பழகுவார். க்ஷீரம் ஆங்கிலத்தில் serum ஆகியிருகிறது. நாம் பால்மம் என்றோ, கீரம் என்றோ பயிலலாம். ஏன் நம் சொல்லை விட்டுக்கொடுக்க வேண்டும்?
இதுபோக, குருதியின் செம்மை நிறம் கருதி செங்க விளவம் (sanguine fluid) என்ற சொல்லும் புழங்கும். sanguinary (adj.) "characterized by slaughter," 1620s, possibly from French sanguinaire, or directly from Latin sanguinarius "pertaining to blood," from sanguis (genitive sanguinis) "blood," of unknown origin. Latin distinguished sanguis, the generic word, from cruor "blood from a wound" (related to English raw, from PIE root *kreue-).
இந்த வரையறைக்குள் வரும் cruor என்பது முன்சொன்ன கோரத்தோடு தொடர்புடையது,
இன்னும் ஒரு சொல். vital fluid. இதை வாழ்வு விளவம் எனலாம். வாழ்வதற்குத் தேவையான விளவம். இன்னும் பல சங்கதச் சொற்களும் உண்டு, அவற்றை விளக்க இன்னொரு பகுதி வேண்டும்.
அன்புடன்,
இராம.கி.