வட கரோலினாவில் இருக்கும் சார்லட் நகரத் தமிழ்ச்சங்கம் சார்பில் நேற்று என்னை ஒரு விருந்தினனாக அழைத்து “தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் உரையாற்றப் பணித்தார்கள். அழைப்பை ஏற்று ஒரு பரத்தீடு வழியே இன்றைக்குத் தமிழர் தமிழை வைத்திருக்கும் நிலை பற்றிப் பேசினேன். தமிங்கிலம், தமிழ்க்கணிமை, கணித்தமிழ் பற்றியும் பேசும் தேவை ஏற்பட்டது.
இந்தப் பரத்தீடு பொதுவிலும் பயன்படும் என்று இங்கு பதிகிறேன். ஒருசில வழுதைகள் (slides) இதற்கு முன்னால் பதிந்த “தமிழர் தோற்றமும், மொழியூறவுகளும்” என்ற பரத்தீட்டோடு பொதுவாக இருக்கக் கூடும்.
இனி உங்கள் பார்வைக்கு.
அன்புடன்,
இராம.கி.
,http://www.slideshare.net/iraamaki/1-37205136
இந்தப் பரத்தீடு பொதுவிலும் பயன்படும் என்று இங்கு பதிகிறேன். ஒருசில வழுதைகள் (slides) இதற்கு முன்னால் பதிந்த “தமிழர் தோற்றமும், மொழியூறவுகளும்” என்ற பரத்தீட்டோடு பொதுவாக இருக்கக் கூடும்.
இனி உங்கள் பார்வைக்கு.
அன்புடன்,
இராம.கி.
,http://www.slideshare.net/iraamaki/1-37205136
4 comments:
தமிழில் அறிவியல் மற்றும் நுட்பம் சார்பானக் கட்டுரைகள் எண்ணிக்கை மிக மிக குறைவு. குளிர் பதனப் பெட்டி என்று இணையத்தில் தேடினால் குளிரில் இருக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகள் மற்றும் நிழம்புகள் தான் கிடைக்கிறது. இருந்தால் தானே கிடைக்கும். இதுபோல் ஏராளமான அடிப்படை நுட்பங்கள், செய்திகள் போன்றவை தமிழில் இல்லவே இல்லை. திரைப்படத்தைப் பற்றி, நடிகனை பற்றி எழுதச் சொன்னால் முந்திக்கொண்டு எழுத ஆட்கள் உள்ளனர். அறிவை பற்றி எழுதத்தான் ஆள் இல்லை, முதலில் இந்த குறைப்பாட்டை நாம் களையவேண்டும். இதைக் களைவதற்கு முன் இன்னொரு அடிப்படை குறைபாடான தமிழ் கலைச்சொற்களில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும்.
எத்தனை காலத்திற்குத் தான் இரண்டு (அ) மூன்று சொற்களை இணைத்து இணைத்து புதுச்சொற்களை(சொற்றொடர்களை) உருவாக்க முடியும். இப்படியே இணைத்து இணைத்து இன்று சொற்கள் என்றால் வாக்கியங்கள் போல் நீண்டு கொண்டே போகிறது. மேலும் சொல்லாக்கம் என்பது ஆங்கில மொழிச் சொற்களை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து உருவாக்குவது தான் என தவறாகப் புரிந்துக்கொள்ளப்படுள்ளது. இவற்றை நாம் சரி செய்து சொல்லாக்கம் நிகழ்த்த வேண்டும். புதியப் பொருட்கள், கண்டுபிடிப்புகள், புதிய நுட்பங்கள், புரிய முறைகள் போன்றவைகளுக்கு புதியச் சொற்களை உருவாக்க வேண்டும். இருக்குச் சொற்களை வைத்து காலம் தள்ளுவது நம் மொழியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவாது.
ஒவ்வொரு பொருளுக்கும், விலங்கிற்கும், செயலுக்கும், பண்புக்கும் அவற்றின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு வெவ்வேறு பெயர்களை உருவாக்கியவர்கள் நம் முன்னோர்கள. யானை என்ற விலங்கிற்கு அதன் குணம், தோற்றம், இடம், பால் போன்ற சூழ்நிலைகளை கொண்டு சுமார் 150 சொற்களை சொல்லாக்கம் செய்தது நம் தமிழ் உலகம். ஆனால் இன்று ஆங்கில சொற்களை அப்படியே மொழிபெயர்த்து சொல்லாக்கம் செய்கிறது இப்போதுள்ளத் தமிழ் உலகம். இதுபோன்ற செயல்கள் தமிழை மேலும் மங்கச் செய்யுமோ தவிர வேறு எந்த பலனும் தராது என்பது என் கருத்து.
இராமகி ஐயா செய்யும் சொல்லாக்கம் அனைத்தும் வேர்ச்சொல்லை அடிப்படையாக கொண்டு செய்கிறார். இரண்டு மூன்று சொற்களை அப்படியே சேர்த்து சொல் என சொல்லாமல் தனித் சொல்லாக(Single Word) உருவாக்குகிறார். தமிழ் இவரால் செந்தமிழ் ஆகிறது. ஐயா வீடியோ என்பதை விழியம் என்று அழைக்கிறார், ஆனால் நாம் இன்றும் நிகழ்ப் படம் என்று தான் அழைக்கிறோம். நிகழ்ப் படம் என்பது வீடியோ என்றால் என்ன? என தெரியாதவர்களுக்கு விளக்கும் விளக்கச் சொல்லாக இருக்கலாம், ஆனால் சொல் என அழைக்க முடியாது. வீடியோ என்பது தற்காலத்தியக் கண்டுபிடிப்பு, இதற்கு புதிய சொல்லை தான் உருவாக்க வேண்டுமே தவிர, படத்தில் ஒரு வகை இந்த நிகழ்ப் படம் என தவறாகப் பொருள்கொள்ளும்படி சொல்லாக்கம் செய்யக்கூடாது.
நான் சொல்லவருவது ஒன்றே ஒன்று தான், தேவையான அறிவியல் கட்டுரைகளைப் படைக்க தேவையான கலைச் சொற்களை எதோ கடமைக்கு உருவாக்காமல் நம் பழந்தமிழ்ச் சொற்கள் உருவான விதம் உணர்ந்து, அவ்விதமே சொற்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் எல்லாமே விளங்கும்.
Forum என்ற சொல்லுக்கு தமிழில் கருத்து களம், தகவல் களம் என்ற சொற்கள் (சொற்றொடர்களை) இருந்தாலும் அவற்றை பயன்படுத்தி தமிழின் அழகைக் குறைக்க எனக்கு விருப்பமில்லை, அதனால் ஐயாவின் உதவியை நாடினேன், ஐயாவும் forum என்ற சொல்லுக்கு புறவம் என்ற அழகானச் சொல்லை உருவாக்கி கொடுத்தார். இப்போது அந்தச் சொல் பெரும்பாலானத் தமிழர்களுக்கு தெரிந்த சொல்லாக மாறியுள்ளது. இப்போதும் பலரும் ஆர்வமுடன் புறவம் என்றால் என்ன? என சமூக பிணையங்களில் (Social Network) கேட்கிறார்கள், நானும் விளக்கம் கொடுத்து வருகிறேன். ஒருவருக்கு ஒருமுறை அல்லது இரு முறை விளக்கம் கொடுத்தால் போதும், பின்பு அந்த சொல் கேட்பவரின் மனதில் பசுமரத்தாணி போல் உட்கார்ந்துக்கொள்ளும், வழக்கத்திற்கு வரும், அதை சார்ந்த கட்டுரைகளும் வரும்.
இராமகி ஐயா உருவாக்கி வைத்துள்ள சுமார் 1995 சொற்களை நாம் அங்கிகரிக்கும் விதமாகப் புழக்கத்தில் கொண்டு வரவேண்டும். தேவைப்படும் சொற்களை உருவாக்கித் தர ஐயாவை வற்புறுத்த வேண்டும். அவருடைய சொல்லாக்க தொகுப்பு இங்கு உள்ளது. http://thamizhchol.blogspot.in/
ஐயா தங்கள் வலைப்பூவில் இடுகைகள் அல்லாதப் பிற ஐயங்களை தங்களிடம் கேட்டறியும்படியான புதியப் பக்கம் ஒன்றை இணைக்க முடியுமா?
இணைத்தால் என்னைப் போன்றவர்கள் பயன்பெற எதுவாக இருக்கும்.
இராயூ சரவணன் அவர்களே,
இராம.கி ஐயா அவர்களின் சொற்களைச் ஓரிடத்தில் சேர்த்து, சுலபமாக தேடியெடுக்கும்படி செய்த உங்களுக்கு நன்றி!
நண்பர் Anonymous க்கு
திருத்தம் .... நான் செய்யவில்லை. ஏற்கனவே உள்ளது.
நான் இருக்குமிடத்தை தான் தெரிவித்துள்ளேன்.
Post a Comment