Wednesday, July 02, 2014

தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும் - பரத்தீடு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆம் ஆண்டுவிழா அமெரிக்கா செயிண்ட் லூயிசு நகரில் சூலை 4, 5,6 நாட்களில் நடக்கிறது. அதில் என்னைச் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அழைத்திருக்கிறார்கள்.

வரும் வெள்ளிக்கிழமை காலை 10 - 12 மணியளவில் ”தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்” என்னும் என் உரையைச் சிறப்பரங்கில் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கான பரத்தீட்டை (presentation) எல்லோரும் படிக்கும் வகையில் இங்கு வெளியிடுகிறேன்.

நேரடியாகச் செய்யும் உரை/கட்டுரையளவிற்கு இது அமையாதென்றாலும், ஓரளவு பரத்தீட்டின் மூலம் நான் சொல்லவரும் கருத்துப் புரியுமென்று எண்ணுகிறேன்.

இதைக் கீழ்க்கண்ட வலைத்தளத்திலும் போட்டுள்ளேன். இனி இங்கள் வாசிப்பிற்கு.

http://www.slideshare.net/iraamaki/ss-36534251


அன்புடன்,
இராம.கி.14 comments:

Anonymous said...

அருமை ஐயா. இதன் உரையையும் காணொளி வடிவில் இருந்தால் இங்கு பகிருங்கள்.

வெற்றிவேல் said...

வணக்கம் அய்யா...

தமிழர், தமிழ் ஆராய்ச்சிகள் வலைதளத்தில் எழுதுவது மிகவும் ஆரோக்யமானது. வாழ்த்துக்கள்.

நானும் எனது தளத்தில் முதலில் களப்பிரர்கள் பற்றி எழுதினேன். இப்போது வானவல்லி எனும் வரலாற்றுப் புதினம் கொண்டிருக்கிறேன். தாங்கள் எழுதிய திரமிரா சங்காத்தம் பதிவு எனக்கு உதவியுள்ளது. நன்றி அய்யா... உங்கள் தள பதிவுகளை தற்பொழுது தான் வாசிக்க தொடங்கியுள்ளேன். நிச்சயம் எனக்குப் பயன்படும் என நம்புகிறேன்...

அத்திகும்பா கல்வெட்டின் நேரடி மொழிபெயர்ப்பு இணையத்தில் கிடைக்குமா? கரிகாலனின் காலம் எது??

Raju Saravanan said...

நல்ல படைப்பு ஐயா,

தமிழர் தோற்றம் பற்றியும், வரலாறு, தமிழில் இருந்து பிறந்த மொழிகள் பற்றியும், உலகின் முதல் மொழி என்ற செய்தியை பற்றியும் யார் ஆய்வுகள் செய்யவேண்டுமோ அவர்கள் கல் போல் இருக்கும்போது என்ன செய்யமுடியும், தமிழ் அரசும், பொறுப்பு மற்றும் அதிகாரத்தில் உள்ள தமிழ் அறிஞர்களும் இதையெல்லாம் பற்றி கவலைக்கொள்வதாக தெரியவில்லை.

Raju Saravanan said...

Anonymous நண்பரே, Video-வை காணொளி, நிகழ்படம் என்று என்று அழைப்பதற்குப் பதில் விழியம் என்று அழைக்கலாமே.

வெற்றிவேல் said...

பொ.உ.மு மற்றும் பொ.உ விரிவாக்கம் என்ன அய்யா?

இராம.கி said...

அன்புள்ள பெயரில்லாதவருக்கு,

இதற்கான உரை விழியம் கிடையாது. இதை விரித்து ஒரு கட்டுரை எழுதவேண்டுமென உணர்கிறேன். செய்ய முற்படுவேன்

அன்புள்ள வெற்றிவேல்,

தங்கள் தளத்தைக் காணுவேன். தங்கள் புதின முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

அத்திகும்பா கல்வெட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு இணையத்தில் நானறிந்தவரை இல்லை. பின்னொரு நாள் அதைத் தமிழில் வெளியிட எண்ணமுண்டு. பாதி செய்த அளவு என் மொழிபெயர்ப்பு என்னிடமுண்டு.

முதலாம் கரிகாலன் வடக்கே மகதத்தின் மேற் படையெடுத்துப் போன காலம் கி.மு. 462. அடுத்தடுத்த கரிகாலர்களின் காலம் வேறுபடும். இரண்டாம் கரிகாலனும் சங்க காலத்தைச் சேர்ந்தவனே. கரிகாலர்களின் செயற்பாடுகளைக் காலம் பிரித்து எழுதியோர் அரிதிலும் அரிது. எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்ந்து குழப்புவதே இன்று பல இடங்களில் நடக்கிறது,

பல இடங்களில் நொதுமலான வரலாறு எழுதுவதற்கு மாறாய் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் வாரி வீசுவதே நடக்கிறது.

பொ.உ.மு. என்பது பொது உகத்தின் முன் (Before Common Era)என்றாகும். இதைக் கி.மு. என்று பல காலந் தமிழிற் சொல்லிவந்தோம். இப்பொழுதெல்லாம் வரலாற்றாளர்கள் BC, AD என்று ஆங்கிலத்திற் சொல்வதில்லை. மதஞ் சாராக் குறியீடு வரவேண்டுமென்று மாறி விட்டார்கள். தமிழிலும் இப்பழக்கம் வரவேண்டுமென்று பொ.உ.மு. என்று குறித்து வருகிறேன். பொது உகம் (Common Era). இது. கி.பி.யைக் குறிக்கும்.

அன்பிற்குரிய ராஜு சரவணன்,

உங்கள் கருத்திற்கு நன்றி. தமிழக அரசும், தமிழறிஞரும் இதில் ஈடுபாடு கொள்வர் என்று நம்புவோம்.

இரானிலிருந்து தமிழர் வந்தார் என்ற மேலையர் தேற்றையும், தமிழ்த்தேசியர் கூறும் சான்றில்லாத குமரிக்கண்டத்தையும் இனிமேலும் பேசிக்கொண்டிருப்பது நம்மை எங்கும் கொண்டுசேர்க்காது என்றே நான் இப்பொழுது நம்புகிறேன்.

தமிழ் ஆர்வலர் இதை எண்ணிப் பார்த்தால் நல்லது.

அன்புடன்,
இராம.கி.

வெற்றிவேல் said...

நல்லது அய்யா...

நானும் இனி காலங்களைக் குறிப்பிடும் போது தங்கள் வழியையே பின்பற்றுகிறேன். நன்றி...

கரிகாலனைப் பற்றி அறிய பல நூல்களை வாசித்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவித்தனர். இறுதியில் நான் இளஞ்சேட்சென்னியின் மகன் கரிகாற் பெருவளத்தான் என்ற முடிவோடு, மௌரியரை வென்ற சென்னியின் காலம் பொ.உ.மு 3ம் நூற்றாண்டின் தொடக்கம் எனக்கொண்டு கரிகாலனின் காலம் பொ.உ.மு 2ம் நூற்றாண்டின் இறுதி அதாவது பொ.உ.மு 275 எனக்கொண்டு எழுதி வருகிறேன்.

கரிகாலன் என்பவர் இருவர் எனவும், ஒருவர் தான் என பலரும் பலவாறு வாதிடுகின்றனர். கரிகாலன் என்ற பெயரே காரணப்பெயர். அதனை எப்படி இருவர் பயன்படுத்தியிருக்க முடியும். ஆய்வாளர்கள் குறிப்பிடப் படுவது போன்று முதலாம் கரிகாலனை விட இரண்டாம் கரிகாலனே இலங்கைப் படையெடுப்பு, இமயப் படையெடுப்பு போன்ற சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவனாக இருக்கும் பட்சத்தில் அவன் ஏன் புகழ் பெறாத முதற் கரிகாலனின் பெயரைத் தனக்கு சூட்டிக்கொள்ள வேண்டும்? எனக் கருதி கரிகாலன் என்பவன் ஒருவனே எனக் கொண்டு அவனது, இருங்கோ வேளிடமிருந்து அவனது அரியாசணத்தை மீட்பது, வெண்ணிப் போரை முடித்து மூவேந்தர் ஒற்றுமையை நிலைநிறுத்துதல், இலங்கைப் போர், the periplus of the ertrian sea இதில் கூறப்பட்டுள்ள யவண வாணிபம் இவற்றைக் கொண்டு எனது வானவல்லி எனும் புதினத்தை இயற்றிக் கொண்டிருக்கிறேன்.

தங்கள் அளவு எனக்கு தமிழர் நுண்வரலாற்று ஆராய்ச்சியில் எனக்கு பட்டறிவு இல்லை. நான் கொண்ட கருதுகோள் எந்த அளவிற்கு சரி!

நன்றி அய்யா...

வெற்றிவேல் said...

இன்னும் ஒரு கேள்வி_

அத்திகும்பா கல்வெட்டில் குறிப்பிடப் படும் 1300 ஆண்டுகள் நீடித்த தமிழர் கூட்டணியை 130 ஆண்டுகளாக்க் கொண்ட எடுகோள் மற்றும் மகாவீரர்க்கு பின் 130 ஆண்டுகள் எனக் கொண்ட எடுகோள்களை எப்படி அய்யா ஏற்றுக் கொண்டீர்கள்?

வெற்றிவேல் said...

1300 வருடங்கள் தொடர்ந்து நீடித்தது எனக் கொண்டால் என்ன தவறு?

கரிகாலன் பற்றி தாங்கள் ஏதாவது ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால் இனைப்பு வழங்குங்கள் அய்யா...

tamilvetrivel@gmail.com

அன்புடன் சி.வெற்றிவேல்

வெற்றிவேல் said...

மன்னிக்கவும் பொ.மு.உ 175 என்பதை பொ.உ.மு 275 எனத் தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன்...

வெற்றிவேல் said...

திராமிர சங்காத்தம் பற்றிய யானைக் குகை கல்வெட்டின் அந்த இரு வரிகளின் தமிழ் மொழிபெயர்ப்பை அளிக்க இயலுமா அய்யா???

Pari Advocate said...

இரானிலிருந் தமிழர் வரவில்லை.,சென்றார்கள் என்பது நானறிந்தது.குமரி கண்ட கோட்பாடு தொல்லியல் சான்றுகளாற் உறுதிபடும் வரை அக்கருத்தை ஒரு முனைப்புக்கருத்தாகவே கொள் வோம்., அறுதிக்கருத்தாகக் கொள்ளள் பிழையேகும். கார வேலன் என்பது ததமிழ்ப் பெயரே எ.கா. சிங்கார வேலன்.அவனின் கல்வெட்டில் தமிழ் சொற்கள் அதிகமாக ருக்கிறது.அவன் தமிழ் வேளிராகவே உணர்கிரேன், கருதிப்பாருங்கள்

Pari Advocate said...

அத்தி கும்பா கல்வெட்டில்., "தமிர தேக சங்காத்தம்" என்ற வரி., தமிழர்களுடன் தாம்(கார வேள) 1300 ஆண்டுகளாக கொண்டிருந்த குருதி உறவை முறித்துக்கொண்டேன் என அவன் கூறுகிறான். தேக சங்காத்தம் என்பது உடல்-குருதி உறவைக் குறிக்கிறது. தேகம்=உடல் மட்றும் குருதி. சங்காத்தம் = உறவு.

Pari Advocate said...

அத்தி கும்பா கல்வெட்டில்., "தமிர தேக சங்காத்தம்" என்ற வரி., தமிழர்களுடன் தாம்(கார வேள) 1300 ஆண்டுகளாக கொண்டிருந்த குருதி உறவை முறித்துக்கொண்டேன் என அவன் கூறுகிறான். தேக சங்காத்தம் என்பது உடல்-குருதி உறவைக் குறிக்கிறது. தேகம்=உடல் மட்றும் குருதி. சங்காத்தம் = உறவு.