பல்வேறு பண அட்டைகள் குறித்து ஓர் உரையாடல் தமிழுலகம் மடற்குழுவில் முன்பு ஒருமுறை எழுந்தது. சில விளக்கங்கள் கொடுத்து அங்கு தந்த சொல்லாக்கங்களை இங்கு தருகிறேன்.
swipe card:- வயப்பு அட்டை; வயப்படுத்தல் = தனதாக்கிக் கொள்ளல், தன்பக்கம் சாரவைத்தல்; வயம்>வசம். வயம் என்பதன் வேர்ப்பொருள் வளைத்தலே; "என்ன, அவுங்களை வளைச்சுப் போட்டாச்சா?" என்பது வயப்படுத்தியதையே குறிக்கும். [The old English word for sweep was swaapan, which evolved into Middle English swope. Modern English sweep, which began to emerge in the 13th century, probably came from the old past tense swepe, a descendent of old English sweop. Swaapan itself came from the prehistoric Germanic base *swei 'swing, bend' which also produced German schweifen 'wander' and English swift. Swipe probably originated as a dialectal variant of sweep.]
affinity card:- a credit card where a certain amount of money is given by the credit card company to a charity everytime the card is used
பயன்கொடை அட்டை (இன்னும் ஓர்ந்து பார்த்தால் இதைவிட நல்ல சொல் ஒன்று கிடைக்கலாம்.)
cash card:- காசு அட்டை
charge card:- பற்று அட்டை
cheque guarantee card:- காசுறுதி அட்டை
credit card:- கிட்டிப்பு அட்டை (Creed was the first of a wide range of English words borrowed from Latin credere 'believe'. Others include credible, credence, credential, credit, credulous.); நம்புதல் என்பது நெருக்கத்தை ஓட்டியது. "நமக்கு வேண்டப் பட்டவருங்க, பணங் கொடுங்க, ஒண்ணும் ஆகாது.!" "நம்ம பக்கம் தான்; எங்கூர்க்காரர் தான்; கடன் கொடுக்கலாம். திருப்பி வந்துரும்." "நமக்கு நெருக்கம்." "நமக்கு அண்மை;" அண்ணுதல் = நெருங்குதல்; அண்ணுதலில் இருந்து பிறந்த சொல்லே அண்பு>அன்பு. அவனோடு அன்பாக இருக்கிறேன் என்றால் நெருக்கமாக இருக்கிறேன் என்று தான் பொருள். நண்ணுதல் என்பதும் நெருங்குதலே. நள் என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது நண்ணுதலாகும். நள்>நட்பு. நள்ளில் இருந்து பிறந்த இன்னொரு சொல் நண்பு>நம்பு; நம்புதல் என்பதும் நெருங்குதலே. நம்பிக்கை = நெருக்க நிலை. இந்த நெருக்க நிலைக்கு இன்னொரு சொல் கிட்ட நிலை. "கிட்டக்கவே இருந்துட்டு நம்பாமல் இருந்தா எப்படி?" நெருக்கத்தில் பிறப்பது நண்பிக்கை>நம்பிக்கை. கிட்டித்தல் என்பதும் நெருங்குதலே. இந்தையிரோப்பியச் சொற்களுக்கே ஆன ரகரப் பலுக்கத்தை முதல் எழுத்தில் நுழைத்தால் credit வந்துவிடும். [சொல் பிறந்திருக்கக் கூடிய கதையைச் சொன்னேன்.] உனக்கு எவ்வளவு கிட்டியது என்ற கேள்வி உனக்கு எவ்வளவு credit வந்தது என்றே பொருள்படும். கிட்டக் கூடியது பொன்னா, பொருளா, பணமா என்பது முகமையில்லை. அது இன்னொருவரிடம் இருந்து வருவதாய் இருக்கவேண்டும். கிட்டியதின் நீட்டமே கிடைப்பு. கிடைப்பின் இன்னொரு தோற்றம் get/got போன்றவை.
debit card:- கடவிப்பு அட்டை (debt originated as debita, the plural of Latin debitum 'that which is owed', a noun formed from the past participle of the verb debere, 'owe') கள்>கழு கழுக்கப் பட்டது கட்டப் பட்டது என்ற பொருள் கொள்ளும். கட்டுதல் என்பது பிணைக்கப் படுதலாகும். இன்னொருவோரோடு பணத்தால் பிணைக்கப் பட்ட நிலை கட்டம் பட்ட நிலை. கட்டம்>கடம்>கடன் என்று விரியும். கழுவோடு இகரம் சேர்ந்தால் அதன் பொருள் எதிர்மறையாக மாறிவிடும் இழு என்ற வினையில் இரண்டு பொருள்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறது என்று புரிபடும். ஒன்று இன்னொன்றை நகர்த்துகிறது என்று இங்கே பொருள். இழி என்றானால், ஒன்று இன்னொன்றில் இருந்து பிரிந்தது என்று பொருள் வரும். இது போன்ற சொற்களில் வரும் இகரத்தின் தாக்கம் அவ்வளவு. எதிர்மறைப் பொருளைக் கொண்டு வந்துவிடுகிறது. இன்னும் இதுபோன்ற காட்டுக்களைக் காட்ட முடியும். நீக்குதலுக்கான வேரடி கழி என்ற சொல்லில் இப்படி வருகிறது. கழு+இ>கழி = எடு என்னும் பொருள். ஐந்தில் இருந்து இரண்டைக் கழிக்க மூன்று கிடைக்கும். கடவுதல் என்றாலும் இழுத்தல் என்றே பொருள் கொள்ளும்; அங்கே வகர உகரம் போய்விட்டால், கடத்தல் என்பதும் நீங்குதல், கழிதல் என்ற பொருளே கொள்ளுகிறது. வகரம் பகரமாவுதும் தமிழிய மொழிகளிலும், இந்தையிரோப்பிய மொழிகளில் இயற்கையே. கடவித்தல் என்பது கடத்தல் என்ற தன்வினைச் சொல்லில் இருந்து பிணைக்கச் செய்தல் என்ற பொருள் கொண்ட பிறவினைச் சொல்லை உருவாக்கும். நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போது அதற்கான பணத்தை உங்கள் வங்கிக் கணக்கோடு கடவித்துக் கொடுக்கும் அட்டை கடவிப்பு அட்டை.
gold card:- பொன்னட்டை
store card:- கடையட்டை
அன்புடன்,
இராம.கி.
6 comments:
காசு அட்டை, பற்று அட்டை, காசுறுதி அட்டை, பொன்னட்டை, கடையட்டை போன்ற சொற்கள் ஏற்றுக் கொள்ளவும் பழகவும் மிக எளிதாக இருக்கும். நன்றி. ஏனெனில் இவையாவும் புழக்கத்தில் உள்ள சொற்களில் இருந்து உண்டானவை. store card என்பதைத் தமிழாக்க store என்னும் ஆங்கிலச் சொல் மூலத்தை ஆய்ந்து அதைத் தமிழாக்கி நாம் புதுச்சொல் உருவாக்குவதில்லையே? அதே போல் ஏன் credit, debit cardகளுக்கும் தமிழ்ச் சிந்தனையை ஒட்டி சொல் ஆளக்கூடாது? credit, debit அட்டைகளைப் பொருத்தவரை நீங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் ரொம்பவும் சுற்றி வளைத்து இருப்பது போலவும் செயற்கையாவும் இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து. இந்தச் சொற்களுக்கு உங்கள் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் சொல் விளக்கங்கள் மூலம் பயனுள்ள பல விசயங்களை அறிய முடிகிறது.நன்றி
loyalty card?
வணக்கம். எங்கே எழுத்துலகம் வாழ்கின்றதோ அங்கே ஆத்மா வாழ்கிறது என்பார் பிளேட்டோ. தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வரும் அறிஞர்களின் கருவூலங்களே எழுத்துக்கள் என்பார் எடிசன்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் !!!!
வாருங்கள். தமிழை முடிந்த அளவு வளர்க்கலாம்..
தமிழால் ஒன்று சேர்வோம். செம்மொழியை சேதாரமின்றி பாதுகாப்போம்.
நன்றி,
தமிழன்.
பதிவுடன் தொடர்பில்லாத கேள்வி.
தமிழில் கசடதப-வில், ka, ga, ha - sa, cha, sha, ja - ta, da - tha, dha - pa, ba, fa ஒலிவேறுபாடுகளுக்கு வேறு வேறு எழுத்துருக்கள் இல்லையே அது ஏன்? (இதில் ha, sha, ja, fa ஒலிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம், ஏனெனில் அவ்வொலிகள் தமிழிலேயே இல்லை).
ஆனால், லளழ, னணந, ரற வேறுபாடுகளுக்கு மட்டும் தனித்தனி எழுத்துக்கள் உள்ளனவே, அது ஏன்?
பள்ளி, பல்லி இரண்டையும் "பxx" என்று எழுதி விட்டு, இது பல பொருள் ஒரு மொழி என்று சொல்லியிருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்ய வில்லை?
நன்றி.
[cash card:- காசு அட்டை
cheque guarantee card:- காசுறுதி அட்டை]
cash, cheque இரண்டும் காசு என்ற பொருளா தரும்?
cash என்றால் காசு
cheque என்றால் காசோலை எனத்தான் நான் நினைத்தேன்.
நண்பர் விளக்குவீராக. நன்றி :)
Credit Card - கடனட்டை
Debit Card - செலவட்டை
Post a Comment