Sunday, September 23, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 2

புறம் 378 கீழ்வருமாறு போகிறது.

தென்பரதவர் மிடல் சாய
வடவடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத்து அன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கென வகுத்த வல்ல மிகப் பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழி தந்தோனே! அதுகண்
இலம்பாடு இழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ் சேர் மதரணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்(கு)
அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே
இருங்கிளை தலைமை எய்தி
அரும்படர் எவ்வ முழந்த தன் தலையே

இந்தப் பாடலின் காலத்தில், சோழரின் அரசு தெற்கே கடற்கரையை ஒட்டிப் பரவவொட்டாமல், தடுத்ததில் பரதவரின் பங்கும், வேங்கடத்திற்கும் வடக்கே பரவவொட்டாமல் தடுத்ததில் வடுகரின் பங்கும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. (முன்னே சொன்னது போல் இளஞ்சேட்சென்னி - கரிகாலன் II ஆகியோர் தான் பெருஞ்சோழர் அரசை உருவாக்கியவர்கள். அதனால் தான் கரிகாலனுக்கு அவ்வளவு பெயர் தமிழர் வரலாற்றில் ஏற்பட்டது. பரதவரை வென்றி கொண்டதெல்லாம், சோழ அரசின் தொடக்க காலங்களில் நடந்திருக்க வேண்டும். ஒரு பேரரசின் தொடக்கம், நிலைப்பு, முடிவு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால், இந்தப் பாட்டைச் சங்கம் முடிகின்ற காலத்துக்கு அருகில் கி.பி. 150-க்குத் தள்ளுவது கொஞ்சமும் சரி வராது. மீண்டும், மீண்டும், கி.மு. 200ல் இருந்து கி.பி. 200 என்ற 400 ஆண்டு காலத்தையே சுற்றிக் கொண்டு சங்க காலத்தைக் கொள்ளுவது, முன்னே சொன்ன செங்குட்டுவன் - கயவாகு என்னும் சம காலப் பொருத்தத்தால் அமையும் செக்குமாட்டுச் சுற்று. அதைவிட்டு வெளியே வந்தால் தான், சங்க காலம் என்பது ஆய்வாளருக்குச் சரியாகப் புலப்படும்.

குறிப்பாக, அண்மைக்கால அகழ்வு ஆய்வுகளும், தமிழிக் கல்வெட்டு ஆய்வுகளும், சங்க காலத்தை கி.மு.400-கி.பி.200 என்ற 600 கால அகண்ட இடைவெளிக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. இன்னும் கொடுமணலும், ஆதிச்ச நல்லூரும் முழுதாக ஆயப்படவில்லை. இது வரை இங்கு நடந்த 5% ஆய்வுகளே தமிழக வரலாற்றை அசைத்து, 200 ஆண்டிற்கு அகலப் படுத்தியிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் பலரும் இன்னும் கி.அ. நீலகண்ட சாத்திரியாரிடமும், ஐராவதம் மகாதேவனிடமும் இருந்து கொண்டிருந்தால் எப்படி? ஆற்றில் பெரும்நீர் சாத்திரியாருக்கும் அப்புறம், திரு. மகாதேவனின் தமிழிக் கல்வெட்டு ஆய்வுக் காலத்திற்கு அப்புறம், ஓடிவிட்டது. அண்மைக்கால 10, 15 ஆண்டு ஆய்வுகளைக் கூர்ந்து கவனிக்குமாறு சொல்லுகிறேன். முனைவர் கா.ராஜனின் "தொல்லியல் நோக்கில் சங்க காலம்" - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004 ஆம் ஆண்டு வெளியீட்டை படித்துப் பார்த்தால் நான் சொல்லுவது புரிபடும்.)

புறம் 378 ஆம் பாடலின் முதற் பன்னிரு வரிகளில் இளஞ்சேட் சென்னியைப் புகழும் புலவர் (அவற்றை நான் இங்கு விளக்கவில்லை), அதற்கு அடுத்த வரிகளில், அரசன் தனக்கு முன்பு தந்த நகைகளைத் தன் சுற்றத்தார் அணிந்து கொள்ளத் தெரியாமல் தடுமாறிய காட்சியை விவரித்துச் சிரிக்கிறார். "இப்பொழுது இவன் கொடுக்கப் போகும் செல்வம் என்ன பாடுபடும்?" என்பதே அவர் உள்ளத்தே எழும் குறுகுறுப்பு.

"வறுமையைச் சட்டென்று இழந்த தன் சுற்றத்தார் விரலிற் செறிந்து கொள்ளுவதைச் (அதாவது மோதிரத்தை) செவியிற் தோடாய்ப் போட்டுக் கொண்டும், செவியிற் போடும் தோட்டை, மோதிரம் ஆக்கியும், அரையில் போடும் இடுப்புச் சங்கிலியைக் கழுத்திற் போட்டும், கழுத்துச் சங்கிலியை அரையில் போட்டுக் கொண்டும், தடுமாறியது எப்படி இருந்ததாம்?"

மிகுந்த கோவத்தில் (கருந்தெறல் என்றால் அது ஒரு பொருள்) இருக்கும் இராமனின் மனைவி சீதையை வலிமிகுந்த அரக்கன் கவர்ந்து கொண்டு போன போது, நிலத்தின்மேல் நகைகளைத் தூக்கி விட்டெறிந்தாளே (இங்கே கொஞ்சம் ஊன்றி ஓர்ந்தால், வான்வழி சீதையைக் கொண்டுபோன செய்தியும் கூட இந்தப் பாட்டில் மறைந்து நிற்பது புலப்படும்), அந்த ஒளிமிகுந்த நகைகளை அள்ளி, இப்படித் தாறுமாறாக அணிந்து கொண்ட, வான் கலத்திற்குக் (aircraft) கீழே இருந்த குரங்குகளின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தது போல இருந்ததாம்.

இந்தக் குரங்குகளை எப்படி நாம் புரிந்து கொள்ள வேண்டும்? வெறும் சிறு குரங்குகள் என்றா? அல்லது மாந்தக் குரங்குகள் என்றா? இந்தப் பாட்டில் அதற்குக் குறிப்பில்லை. (செம்முகப் பெருங்கிளை என்பது உறுதியாகச் சிறு குரங்குகளைக் காட்டவில்லை. மாந்தக் குரங்குகளா, காட்டு மனிதர்களா என்பது அவரவர் விழைவு :-)) ஆனால் வலித்தகை அரக்கன் என்பது குறிப்பிடப் படுகிறது. இந்த அரக்கனுக்குப் பொருள் காணும் போது ஒருமையை வைத்துப் பார்ப்பது சரியாக அமையாது. அரக்கர் என்னும் பன்மைச் சொல்லாட்சியை வைத்துப் பார்க்க வேண்டும். "இந்த அரக்கன் சீதையைக் கவர்ந்து போனான்" என்பது கதைப்படி சரியான கூற்றுத் தான். இதற்கு மறுதலைக் கூற்றாய் "பெண்ணைக் கவர்பவன் எல்லாம் அரக்கன்" என்று சொல்ல முடியுமோ? அப்புறம் என்ன இராட்சதன், இராக்கதன்? ஓர் அரக்கன் கவர்ந்தது விதப்பான செயல். அதே பொழுது அரக்கன் என்பது பொதுமைப் பெயர்.

எப்படி வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர், இயக்கர், மாந்தர் என்பவை பொதுமைப் பெயரோ, அதைப் போல அரக்கர் என்பதும் பொதுமைப் பெயரே! பொதுவாகப் பொதுமைப் பெயர்கள் எல்லாம் விதப்பான பொருளில் எழுந்து நாளாவட்டத்தில் பொதுமைப் பட்டுப் பின் மற்ற விதப்பான பொருண்மைகளையும் குறிக்குமாப் போலப் பேச்சில் பயன்படுவது பல மொழிகளிலும் நடப்பது தான்.

அமெரிக்காவில் கருப்பர் அல்லாதவருக்கு, கருப்பர் மேல் இருக்கும் ஓர் சுமையேற்றிய பார்வையை இங்கு குறிப்பிட விழைகிறேன். 1980ல் ஒருமுறை மாண்ட்ரியாலில் இருந்து என் குடும்பத்துடன் அமெரிக்காவின் கிழக்குக் கரை நகரங்கள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே வாசிங்டன் நகருக்கும் போக முற்பட்டேன். மாண்ட்ரியாலில் என்னோடு இருந்த பல தமிழரும்/இந்தியரும், கனேடிய வெள்ளைக்காரர்களும், என்னைக் கலவரப்படுத்தி "வாசிங்டன் என்பது கருப்பர்நகரம். நீ கவனமாக இருக்க வேண்டும்; பொது இடங்ளிலும், பேருந்து, தொடரி (train) போன்றவற்றிலும் உன் உடமை, குடும்பம் ஆகியவற்றின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்" என்றெல்லாம் அவரவரின் பொதுப் புத்திக்கு ஏற்பச் சொல்லி கருப்பர் மேல் ஒரு பூதகரத் தன்மையை எனக்கு ஊட்டினார்கள். நானும் கலவரப்பட்டுத் தான் வாசிங்டன் போனேன். ஆனால் அங்கு நடந்ததே வேறு கதை. (அதை இங்கு சொன்னால் தடம் மாறிவிடும்). பின்னால் என் முட்டாள் தனம் கண்டு நானே வெட்கப் பட்டுப் போனேன். "கேப்பையில் நெய்வடிகிறது" என்று சொன்னால், கேட்பவனுக்கு எங்கே புத்தி போயிற்று? - என்று நினைத்து அமைந்துகொண்டேன். வெகு எளிதில் ஆதிக்கப் பார்வை என்பதைப் பொதுப்புத்தி மூலம் புதியவருக்கும் பரவி விடும் உலகம் இது.

பொதுவாக ஆதிக்கக்காரர்கள் தங்களுடைய குமுகப் பார்வையை தாங்கள் கையாளும் மொழிக்குள்ளும் சுமையேற்றி வைப்பார்கள். விவரம் தெரியாத மற்றவரும் தற்சிந்தனை இல்லாமல் அந்த ஆதிக்கப் பார்வையை தம்மை அறியாமலே கைக்கொள்ளுவார்கள். "கருப்பரா? கவனம்" என்ற தொடர் எவ்வளவு சுமையேற்றிய பார்வையோ, அதே போல "கிராதகன்" என்ற சுமையேற்றிய பார்வையும் வேத நெறியின் காலத்தில் இருந்தே நாவலந்தீவில் பரப்பப் பட்டிருக்கிறது. (எப்படி மேல்சாதி இளைஞரிடம் ஆதிக்கச் சிந்தனையாளர் கீழ்சாதியார் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஒருசார்ப்பட இயக்கி வைப்போர்களோ அதே போல, இன்னொரு மதத்தாரை "கொம்பு முளைத்தவர், பயங்கரவாதிகள்" என்று பொதுப்புத்தியில் சுமையேற்றி வைக்கும் அடிப்படை மதவாதிகள் போல) "கிராதகன்" என்ற சொல்லும் இந்தியர்களின் அடிமனத்தில் சுமையேற்றப் பட்டிருக்கிறது.

கிராதர் என்பவர் கருத்தவர்களே - கருப்பானவர்களே! இவர்களைத்தான் இன்றைய மாந்தவியல் Mon-khmer என்றும். முண்டா மொழி பேசுகிறவர்கள் என்றும் கூறும். இவர்களே இன்றைக்கும் வடபுலத்தின் ஆதிக் குடிகள். கருத்தர் என்ற நிறவழிச் சொல்லை நாளாவட்டத்தில் சுமையேற்றி வடமொழியின் வழியாக இந்திய மொழிகள் பலவற்றிலும் "கிராதகன்" என்ற கொடுமைப் பொருள் கொண்ட சொல்லை உருவாக்கவில்லையா? கிராதகன் கொடுமையானவன் என்ற இரண்டாம் வழிப் பொருளை வைத்துக் கொண்டு முதற்பொருளை விட்டொழிப்பது சிந்தனைத் தாக்கம் தானே? முதற்பொருள் கருப்பு என்பதே. "அவன் கருப்பா, அப்பொழுது கிராதகன் என்பது சரிதான்" என்று எத்தனை மக்கள் மனத்தில் அனிச்சைச் செயலாய் சொற்கள் ஆளப்படுகின்றன? இத்தனைக்கும் இன்று புனிதம் என்று சொல்லப்படும் கங்கை எனும் கருப்பு ஆற்றிற்குக் கூட முதலில் கிராத் என்ற பெயர்தான், இருக்கு வேதம் முடிந்த காலத்தில், இருந்திருக்கிறது.

இருக்கு வேதத்தின் நாயகர்களான திவோதசும், அவன் மகனான சுதாசும் கி.மு.1200 களில் ஆரிய சப்தசிந்துவில் இருந்த சம்பரனென்னும் கிராத அரசனுடன் போர் புரிந்து அவர்களை மலைக்கு ஓடச் செய்து தங்கள் ஆட்சியை நிலைத்துக் கொள்ளுவார்கள். இருக்கு வேதத்தின் குறிப்பிடத்தக்க பகுதி இதைப் பற்றித் தான் பேசுகிறது. "வேதத்தில் அது இருக்கிறது, இது இருக்கிறது" என்ற கற்பனை வாதங்களைத் தூக்கி எறிந்து இருக்கைக் கூர்ந்து படித்தால், "அது வெற்றி பெற்றவர் எழுதிய இலக்கியம், தாங்கள் வெற்றிபெறுவதற்காகத் தங்கள் தெய்வங்களிடம் வேண்டிக் கொண்ட முல்லைநிலப் பாடல்களின் தொகுப்பு" என்பது புரியும். (வேதம் அநாதியானது; அது 4000, 5000 ஆண்டுகளுக்கு முந்தியது என்ற கருத்தை நான் ஏற்பவன் அல்லன். எனக்குக் காதுகுத்தி மிகுந்த ஆண்டுகள் ஆயிற்று. பல ஆய்வாளர்களும் கி.மு.1200 யைத்தான் இருக்கு வேதத்தின் தொடக்க காலமாகவும் கி.மு.1000 ஐ அதன் இறுதிக் காலமாகவும் சொல்லுகிறார்கள்.)

வரலாற்றிற்குச் சற்று முற்பட்ட காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மக்கள் பெரும்பாலும் நிறம் பற்றியும், ஓரளவு இடம் பற்றியுமே, அறியப் பட்டார்கள். இனக்குழுக்கள் காலத்தில் அது இயற்கையே. மேலே கொடுத்த பட்டியலில் வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர், இயக்கர், மாந்தர் என்ற எல்லாச் சொற்களுமே நிறத்தை ஒட்டி ஏற்பட்ட பழைய சொற்கள் தான்.

ஒவ்வொரு சொல்லாக எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

முதலில் வரும் சொல் பார்ப்பனர். கீற்று வலைத்தளத்தில் வரும் செய்திமடல் சூலை 2006ல் "பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?" என்ற கட்டுரையை இரா.மதிவாணன் எழுதியிருப்பார். அதில் பால்-பார்ப்பு-பார்ப்பார் என்று வெண்மைநிறம் கருதியே பார்ப்பனர் என்ற சொல் எழுந்தது என்று அழுத்தமாக நிறுவியிருப்பார். (இன்றையப் பார்ப்பனர் பலரும் நிறம் மாறிக் கிடப்பது வரலாறு 3200 ஆண்டுகள் நகர்ந்துவிட்டதை உணர்த்துகிறது.) பேரா. இராகுல சங்கிருத்தியாயனும், "ரிக்வேத கால ஆரியர்கள்" என்ற தன் பொத்தகத்தின் மூன்றாம் அதிகாரத்தில் (வர்ணமும், வர்க்கமும்) இருக்கு வேதத்தின் பல செய்யுட்தொகுப்புகளை எடுத்துரைத்து ஆரியரின் வண்ணம் பால்நிறம் என்றே நிறுவுவார். (ஆரியர் என்று ஒருவரும் இல்லை; ஆரியர் அல்லாதவர் என்று ஒருவரும் இல்லை என்று பூ சுற்றப் பார்க்கும் வாதத்தைப் புறம் தள்ளுவோம்.) ஆரியரின் முடி வண்ணம் இரோப்பியர் பலரைப் போலத் தீ நிறம் - பொன் நிறம் தான்; blonde.

தேவர் என்ற சொல் தீயென்னும் சொல்லில் இருந்து கிளைத்தது என்று பாவாணர் தன் நூல்களில் ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார். தேவர் என்பவர் பொன் நிறத்தவர்; பொன் முடியாளர்.

(வெள்ளைக்காரர் என்ற சொல்லுக்கு நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை. அதே போலக் கருத்தர், கருப்பர் என்பதற்கும் நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை.)

நாகர் என்பவரும் கருப்பரே. யா என்னும் கருமைக் கருத்தில் இருந்து ந்யா>ஞா>நா என்ற வளர்ச்சியில் நாகர் என்ற சொல் பிறக்கும். (தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகப் ஆய்வறிஞர் ப.அருளியாரின் "யா" என்ற கருவூலம் படித்து ஓர்ந்து பார்க்க வேண்டிய பொத்தகம்.) நாகரின் சுருக்கம் தான் நக்கர் என்பது ஆகும். நக்கவாரம் என்னும் nicobar -இல் வசிக்கும் மக்களை நக்க சாரணர் என்றே மணிமேகலை குறிக்கும். நக்கர் என்ற சொல் தெரிந்தோ தெரியாமலோ இந்தையிரோப்பிய மொழிகள் எங்கும் பரவி இன்று உலகெங்கும் nigger, negro என்று பரவிக் கிடக்கிறது. (இதையெல்லாம் சொன்னால், இது என்ன அபத்தம், மம்போ-ஜம்போ என்று சொல்லுவதற்கும் கேலிசெய்வதற்கும் பெயரில்லாத சிலர் முன்னிகை தர முன்வருவார்கள். இவர்களின் வறட்டுத் தனத்திற்கு எல்லை இல்லை. நாவல் பற்றிச் சொல்ல வேண்டியது நிறையக் கிடக்கிறது. அதற்கும் இன்னொரு நாள் வரவேண்டும்.)

இயக்கர் என்ற ஈழத்தீவின் பழங்குடிகளும் (இவர்களின் தலைவனாகக் குபேரனை வடமொழித் தொன்மங்கள் உருவகஞ் செய்யும்) கருப்பரே. யா என்னும் வேரின் வழி யக்கர் இயக்கராவர்.

யாவகர் (கருப்பர்) இருந்த தீவு யாவகம்>ஸ்யாகவகம்>சாவகம் = java என்னும் இந்தோனேசியத் தீவு. வாரணர் என்பரும் கருப்பரே. வாரணத் தீவு = borneo தீவு.

(இன்னும் சொன்னால் சேரர், சோழர், பாண்டியர் என்பவை கூட நிறத் தொடர்பில் பண்பாடு ஒட்டிய பெயர்கள் தான். அவற்றின் விளக்கத்தை இங்கு சொல்லாமற் தவிர்க்கிறேன்.)

ஆகக் கருப்பர் தென் ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மிகுந்தே இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் கி.மு. 60000 ல் தொடங்கிய கருப்பர் சோமாலியா, தெற்கு அரேபியா, ஈராக், ஈரான், கூர்ச்சரம், மாராட்டியம், கொண்கானம், சேரலம், பாண்டியம் (அங்கிருந்து ஒரு ஈற்றாக ஈழம்), சோழம், கலிங்கம், அங்கம் எனக் கடற்கரை வழியே போய், பின் தென்கிழக்கு ஆசியா வழியாக முடிவில் ஆத்திரேலியா வரை இன்னொரு ஈற்றாக அங்குள்ள பழங்குடிகளாக கி.மு.40000த்தில் முடிந்ததாக அண்மைக்கால Y chromosome மாந்த ஆய்வு ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. நம்முடைய பிரான்மலைக் கள்ளரை ஆய்வு செய்திருக்காவிட்டால் இந்த மாந்தப் பரம்பல் தெரியாமலே போயிருக்கும். இந்த ஆதிக் கருப்பரை M130 வகையினர் - கடற்கரை மக்கள் - coastal people - என ஈனியல் (genetics) குறிக்கும்.

கருப்பரும் வெளுப்பரும் இந்தத் துணைக்கண்டம் வந்தது போக இன்னும் சில இடைப்பட்ட நிறத்தவரும் இங்கு வந்து சேர்ந்த மற்றவர்களில் குறிப்பிட வேண்டியவர்கள் M20 எனப்படும் இந்தியர்கள் (இவர்கள் இங்கு வந்து சேர்ந்து 35000 ஆண்டுகள் ஆகிவிட்டன; திராவிடர் எனப்படுவோர் இவர்தான். என்னதான் இந்துத்துவக் காரர்கள் "திராவிடம் என்பது மொழி பற்றிய கருத்தீடு; அதை இனங்கள் பற்றிய முடிவிற்குள் நுழைக்கக் கூடாது" என்று முறுக்கிக் கொண்டாலும் அறிவியல் அப்படித்தான் போகிறது), 9000 ஆண்டுகளுக்கு முன்வந்த ஒரு குழுவினர், 3500 ஆண்டுகளுக்கும் முன்னால் வந்த இன்னொரு குழுவினர் ஆகியோராகும்.

"Language of Harappans", "The Civilized Demons: The Harappans in Rgveda" என்ற இரு பொத்தகங்களின் வழியாக அசுரர்/அரக்கர் என்போரை ஆரியருக்கு முன்வந்த கூட்டத்தார் என்று மாலதி J ஷெண்கேயும், "Deciphering the Indus Script" என்ற தன் பொத்தகம், மற்ற கட்டுரைகள் மூலமாய் திரு. அசுகோ பர்போலாவும் இரட்டை நிலைக் குடியேற்றத்தை உணர்த்தியிருப்பார்கள். ஈனியல் குறித்துக் காட்டும் 9000, 3500 ஆண்டுகள் இந்த இரட்டை நிலைக் குடியேற்றத்திற்கு அடையாளம் காட்டுகின்றன.

அரக்கர் (அசுரர்) என்பவருக்கும், தேவர் என்பவருக்கும் இடையே இருந்த போராட்டம், துருக்கியில் ஹிட்டைட் தொடங்கி பாபிலோனியாவில் அசூர் நாகரிகம் வழி (இன்றைய சிரியா அசூர்களின் நினைவில் எழுந்த பெயர்தான். பாபிலோனிய அரசன் அசுர் பனிபால் - இப்படி அடுத்தடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம்), இரானில் செண்ட் அவத்தா வரை பல தெற்றுக்கள் தென்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்திலும் அடையாளம் தென்படுகிறது. அசுரர்-தேவர் போராட்டம் பற்றிய பல தொன்மங்கள் ஒன்றுக்குள் ஒன்றாய் இந்த நீண்ட நிலப்பகுதியில் உருவெடுத்திருக்கின்றன. இந்த நிலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டமும் ஒரு பகுதியே!

அரக்கர் என்பவர் அரக்கு நிறத்தவர். - கருஞ்சிவப்பு. தமிழ்ப் பொருண்மை தான் சரியான புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. இன்றைக்குக் கருப்பருக்கும் வெள்ளைக்காரருக்கும் இடையில் coloured என்று சொல்லுகிறார்களே, அந்த கலப்பினத்தவர் போல இருப்பது அரக்கு நிறம். அமெரிக்காவில் coloured என்பவரை வெள்ளை நிறத்தாருடன் யார் சேர்த்துப் பேசுகிறார்கள்? அவரும் கருப்பு நிறத்தாரின் தாயாதியாகத்தானே எண்ணப் படுகிறார்?

வருணம் பற்றி இவ்வளவு எழுதியதற்கு நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் வருணம் நிலைக்க வேண்டும் என்று சொல்பவன் அல்லன். நம்மை அறியாமலேயே வருணச் சொற்கள் சுமையேற்றிய நிலையில் நம்மால் பயன்படுத்தப் படுகின்றன என்பதை இங்கு உணர்த்த வேண்டியிருந்தது. அரக்கன் என்ற சொல்லை ஏரணத்தோடு புரிந்து கொள்ள வேண்டும்.

நடைமுறையில் "அரக்கன் கருப்பனோடு சேர்த்தே எண்ணப் படுவான்". இருக்கு அப்படித்தான் சொல்லுகிறது. அடுத்த செய்திக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

34 comments:

அற்புதன் said...

அருமையான பதிவு அய்யா,

தமிழர் வரலாற்றை நவீன மரபணுவியல்,தொல்பொருளியல்,மொழியியல் என பல்வேறு அறிவியற் துறைகளினூடாக கட்டவிழ்க்கும் செயலை நீங்கள் செய்து வருவது மகிழ்ச்சி அழிக்கிறது.தமிழ் நாட்டில் இது சம்பந்தமாக தமிழப் பலகைலக்கழகங்களோ தமிழக அரசோ எதாவது செய்கின்றனவா?
திரிக்கப்பட்ட வரலாற்றை அறிவியல் துணை கொண்டு மீள கட்டியமைப்பது தமிழரின் வருங்கால வாழ்விற்கும் வளத்திற்க்கும் இன்றியமையாதது.ஏனெனில் நேற்றைய வரலாற்றில் இருந்து தான் இன்றைய அரசியல் பிறக்கிறது.

ஆண்டகைகளால் கூறப்படும் திரிக்கப்பட்ட வரலாற்றை மீள மீட்டு எடுப்பது தமிழ் இனம் அரசியல் விடுதலை அடைவதற்கு இன்றியமையாத முன் நிபந்தனையாக இருக்கிறது.
தமிழ் நாட்டு அரசால் இதனைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்.
முன் எப்போதையும் விட இந்த செயற்பாடு இன்று அதி முக்கிய தேவையாக இருக்கிறது.

நீங்கள் சொன்ன நவீன மரபணுவியல் ஆய்வுகள் பற்றி ஒரு அறிமுகத்தை 'ஆரிய திராவிடக் கோட்பாடும் நவீன மரபணுவியலும்' என்னும் பதிவில் எழுதி உள்ளேன்.

http://aatputhan.blogspot.com/2007_08_01_archive.html

இது பற்றிய மேலும் தகவல்களை உங்கள் பதிவுகளில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

நீங்க சொல்லுறதப் பார்த்தா இன்றைய அரசியல் வியாதிகள் சொல்லும் திராவிட இனமும் வந்தேரிக் கூட்டம் என்பதாக தெரிகிறது....எனது புரிதல் சரிதானா?.

அற்புதன் said...

//நீங்க சொல்லுறதப் பார்த்தா இன்றைய அரசியல் வியாதிகள் சொல்லும் திராவிட இனமும் வந்தேரிக் கூட்டம் என்பதாக தெரிகிறது....எனது புரிதல் சரிதானா?.//

நவீன மனிதனின் மூதாதையர் ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து தான் உலகம் முழுக்கப் பரவினர்.அப்படிப் பார்த்தால் உலகமே வந்தேறிகளால் ஆனது.இங்கே அதுவல்ல இன்றைய பிரச்சினை, ஒரு நியாயம் அற்ற சமூகக் கட்டுமானத்தை உடைப்பதற்காகவே வரலாறு மீள எழுதப்பட வேண்டும் என்கிறோம்.ஆண்டைகளின் சொல்வழி அன்றி வரலாறு அடக்கப்படவர்களின் கதையையும் சொல்ல வேண்டும் என்கிறோம்.ஏனெனில் எல்லோரும் மனிதர்களே.

Anonymous said...

//நவீன மனிதனின் மூதாதையர் ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து தான் உலகம் முழுக்கப் பரவினர்.அப்படிப் பார்த்தால் உலகமே வந்தேறிகளால் ஆனது.இங்கே அதுவல்ல இன்றைய பிரச்சினை, ஒரு நியாயம் அற்ற சமூகக் கட்டுமானத்தை உடைப்பதற்காகவே வரலாறு மீள எழுதப்பட வேண்டும் என்கிறோம்.//

அப்போ தி. குஞ்சுகளெலாம் தகவல் தெரியாம கூப்பாடுதான் போடுதுங்களா?.. இதுக்காகவே இந்த பதிவு சூடான இடுகைக்கு போக வேண்டும், ஆனா என்னபண்ணுவது, அத எடுத்துப்புட்டானுக.....

அற்புதம், இந்த ஆண்டகை, அண்டங்காக்கை எல்லாம் எல்லா சாதியிலும் இருக்கிறதா இல்ல, பார்பன சாதில மட்டுதானா?. அப்புறம் இன்னுமொரு கேள்வி, இன்னிக்கு ஆண்டகையா இருக்கறது/நடக்கறதில் பார்பனர் சாதியா இல்லை மத்த சாதியா?...இதனையும் விளக்கினீங்கன்னா நல்லயிருக்குமுங்கோ.

வவ்வால் said...

உங்கள் பதிவு குறித்து மேற்கொண்டு நான் எதுவும் சொல்ல போவதில்லை,(சொல்லும் வண்ணம் உங்கள் பதிவும் இல்லை) உங்கள் பதிவில் வரும் பின்னூட்டங்களை படித்தும் வருகிறேன்,

பொதுவாக ஏற்படுத்த வரும் கருத்தாக்கம் குறித்தும் எனக்கு ஒரு தோற்றம் தெரிகிறது , எல்லாவற்றுக்கும் சேர்த்து நான் கடைசியாக ஒரு பதிவிட்டு தமிழ் ஆர்வலர் என சொல்லிக்கொண்டு தமிழை கொலை செய்யும் விருப்பம் கொண்டவர்களை தோல் உரிக்கிறேன்(உங்கள் பதிவை எடுக்காமல் விட்டு வைத்தால் தான் அது சாத்தியம் ஆகும்)

தமிழில் தம்மை விட அதிகம் அறிந்தவர்கள் இல்லை என்ற இறுமாப்பில் (தவறாக கருத்தினைப்பறப்புவர்கள்) இருப்பவர்களுக்கு சூடு வைக்கும் நேரம் வந்து விட்டது!

பி.கு: இப்பின்னூட்டம் வெளி வரவில்லை எனினும் கவலை இல்லை!

கோவி.கண்ணன் said...

வவ்வால்,

உங்களின் கோபத்தில் ஞாயம் இருப்பதாக தெரியவில்லை. உலக மக்கள் அனைவரும் ஓரே இடத்தில் தோன்றி பரவி இருக்கக்கூடும் என்று குமரிக்கண்ட ஆய்வில் பாவாணர் போன்றவர்கள் எழுதினார்கள். குமரிக்கண்டமும் ஆப்பிரிக்க கண்டமும் ஒன்றிணைந்த நிலப்பரப்பு என்றும் அவர்கள் சொன்னார்கள். நவீன அறிவியலில் தொல்லியல் ஆய்வின் படி ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மனிதம் பல கண்டங்களுக்கு சென்றதாக சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால் எதாவாது ஒரு இடத்தில் இருந்து மாந்தன் தோன்றி தட்ப வெப்பத்திற்கு ஏற்ப தோற்றம் நிறம் மாறி இருக்க வேண்டும். தமிழின் தொண்மையைக் காட்ட காலத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருக்கிறது என்று சான்று தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லை. ஏற்கனவே திராவிட மொழிகள் தனிக் குடும்பம் என்பது தெளிவாகிவிட்டது. எது முந்தியது, பிந்தியது என்ற பேச்சுக்கே இடமில்லை.

நிலப்பரப்பு எவருக்கு உடையது என்பதை அங்கு தோன்றி அதை வளர்த்த நாகரிகங்களே தீர்மாணிக்க முடியும். அந்த வகையில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகாலத்திற்கு முன்பு அங்கேயே இருந்திருந்தாலும், அல்லது ஆப்பிரிக்காவில் இருந்தே வந்திருந்தாலும் இந்தியா நாகரிகம் என்பது திராவிடர்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாத அளவுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. பின்பு ஏன் திராவிடர்கள் / இந்திய பழங்குடியினர் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்று ஐயா குறிப்பிட்டதை சிலர் அரசியல் செய்வதை பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள் ?

குமரிக்கண்டத்தை நீங்கள் நம்புவராக இருந்தால் மாந்தன் தோன்றிய இடம் அது என்று நம்புவராக இருந்தால் எல்லோரும் ஓரே இடத்தில் தோன்றியவர் என்ற கருத்தும் கொண்டிருக்க வேண்டும். அது ஆப்பிரிக்காவாக இருந்தால் என்ன குமரி கண்டமாக இருந்தால் என்ன ? எல்லாம் அந்த பகுதியையும் குமரியையும் அதே இந்திய பெருங்கடல் வழி இணைந்த பகுதிதானே.

வெற்றி said...

வவ்வால்,

/* எல்லாவற்றுக்கும் சேர்த்து நான் கடைசியாக ஒரு பதிவிட்டு தமிழ் ஆர்வலர் என சொல்லிக்கொண்டு தமிழை கொலை செய்யும் விருப்பம் கொண்டவர்களை தோல் உரிக்கிறேன்(உங்கள் பதிவை எடுக்காமல் விட்டு வைத்தால் தான் அது சாத்தியம் ஆகும்) */

இராம.கி ஐயா அவர்களின் கருத்துக்களோடு உங்களுக்கு உடன்பாடில்லாத விடயங்களுக்கு உங்களின் மாற்றுக் கருத்தை இப் பதிவிலேயே தயவு செய்து முன்வையுங்களேன்.

அப்படி நீங்களும் உங்கள் கருத்தைச் சொல்லும் போது இது ஒரு ஆக்கபூர்வமான கருத்துப்பரிமாற்றமாக இருக்கும்.

அதுமட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களையோ அல்லது தமிழர் வரலாறுகளையோ அறியாத என் போன்றோர்க்கு இவ் விவாதம் பயனுள்ளதாக இருக்கும்.

அத்துடன், எதிர்காலத்திலும் தமிழ்வரலாறுகளை அறிவதற்கு இணையத்திற்கு வருபவர்களுக்கு எல்லாக் கருத்தும் ஒரே இடத்தில் இருக்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வவ்வால், தயவு செய்து உங்களின் மாற்றுக் கருத்துக்களை இங்கே இப் பதிவிலேயே முன்வைக்குமாறு உங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தனிநபர் தாக்குதல்கள்/வசவுகள் இல்லாமல், இராம.கி ஐயாவின் கருத்துக்களுக்கு உங்களின் மாற்றுக்கருத்துக்களைச் சொல்லுவீர்கள் என நம்புகிறேன். :-))

வவ்வால் said...

கோவி.கண்ணன்,

எனது கோவத்தில் நியாயம் இல்லை என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் எனத்தெரியாது! ஆனால் போகிற போக்கில் லாவகமாக இலக்கியத்தில் வரலாற்று புரட்டு செய்வதால் தான் அப்படி சொன்னேன்.

வெற்றி இந்த விளக்கம் உங்களுக்கும் தான்.

உதாரணமாக இளஞ்சேட் சென்னி , நெடுஞ்செழியன், செங்குட்டுவன் எல்லாம் கி.பி காலத்தை சேர்ந்தவர்கள் என்று தான் இது வரை அறிய வந்துள்ளது , அவர்கள் காலத்தை கி.மு எனக் கொண்டு போவதால் என்ன நன்மை என புரியாமல் இருந்தேன், ஆனால் பின்னர் வரும் பின்னூட்டங்களில் பார்த்தால் அதற்கான ஒரு விளக்கம் இப்படி வருகிறது.

குமரன் அவர்களின் ஒரு பின்னூட்டத்தில் ,சொல்லி இருப்பதை பாருங்கள்,

//வடமொழியாளர்கள் இராவணன் அரக்கன் என்று சொல்வதற்கு முன்பே நமது சங்கப் புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள்' என்ற செய்தி எந்த மறைவும் இன்றி என் இடுகையின் தலைப்பிலும் இடுகையிலும் பல பின்னூட்டங்களிலும் இங்கே இந்த இடுகையின் பின்னூட்டத்திலும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.//

இதன் மூலம் வால்மீகி ராமயணம் எழுதும் முன்னரே தமிழில் எழுதப்பட்டு விட்டது என்கிறார்.எனவே அரக்கன் என இராவணனை சொன்னது தமிழர்களே , அப்படி எனில் இராவணன் தமிழன் என இங்கே மற்றவர்கள் சொல்கிறது எல்லாம் கதை என வருகிறது.

இதை நானாக சொல்லவில்லை அவரின் மற்றொரு பின்னூட்டம் அப்படி சொல்கிறது,

//வடமொழியாளர்கள் கேவலமாக எழுதிவிட்டார்கள் என்றால் அந்த சொற்களையே கி.மு.விலோ கி.பி. தொடக்க நூற்றாண்டுகளிலோ எழுதப்பட்டப் பாடலில் அவை இராம காதையைச் சொல்லும் போது புழங்குகின்றதே என்ற கேள்வியை வைத்தேன். நீங்கள் சொன்னது போல் 'வௌவியன் தமிழன் அல்லன். அரக்கனே. தமிழரையும், அரக்கரையும் (அதே போல் தமிழரையும் குரங்குகளையும்) ஒன்றாய் எண்ணிக் குழம்பலாகாது' என்ற கருத்தோ 'அரக்கருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா?' என்ற தொக்கி நின்ற கேள்வியோ என் இடுகையில் சொல்லவும் கேட்கவும் எண்ணவில்லை. ஆனால் இடுகையில் எழுதியிருந்த முறையும் பின்னர் பின்னூட்டங்களில் கருத்துபரிமாற்றம் செய்து கொண்டவையையும் பார்க்கும் போது நீங்கள் சொன்னது போன்ற கருத்தும் கேள்வியும் என் இடுகையில் சொல்லப்பட்டன என்ற புரிதல் ஏற்படும் என்று புரிந்து கொள்கிறேன்.//

என்னுடைய கேள்வி இது தான் ,

இந்த சங்க பாடல் கி.மு வில் எழுதியதாகவே இருந்தாலும் இது எப்படி வட மொழியாளர்களுக்கு முன்னர் வந்தது என்ற முடிவுக்கு வந்தார்கள்? ஏன் வட மொழியிலேயே இராமாயணம் மிகவும் பழமையானது அல்லவா? எனவே அவர்கள் முதலில் இராவணன் அரக்கன் என்று சொல்லி இருக்கலாமே.

எதற்காக கஷ்டப்பட்டு தமிழில் தான் முதலில் அரக்கன் என சொன்னார்கள் என இல்லாத ஆதாரங்களின் அடிப்படையில் சொல்ல வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் தமிழை விட பழமையான மொழி சமஸ்க்ருதம் என்று சொல்கிறார்களே அப்படி எனில் அவர்கள் தமிழுக்கு முன்னரே எழுதி இருக்க வேண்டும் என்பது தானே பொதுவாக உணரப்படுவது.

வெற்றி , கோவி , இதனால் என்ன ஆயிற்று வட மொழிக்கு முன்னர் தமிழில் இராமாயணம் இருந்தது என்றால் பெருமை தானே என நினைப்பீர்கள், ஆனால் அதன் உட்பொருள் என்ன, இராவணன் தமிழன், ஆக இருக்க முடியாது என்றல்லவா சொல்ல வருகிறது.அவன் அரக்கன் தான் என நிலை நிறுத்துவது தான் இப்பதிவின் நோக்கமாக இருக்கிறது.

மேலும் இந்த கண்ட தட்டு இடம் பெயர்வு என்ற தத்துவமே தவறு என புவி வல்லுனர்கள் சொல்லிப்பல காலம் ஆகிவிட்டது. எனவே அதன் அடிப்படையில் எல்லா மனிதரும் ஒரே இடத்தில் இருந்து வந்தார்கள் என்பதற்கு சான்றாக அதனை சொல்ல முடியாது. வேறு காரணம் இருக்க வேண்டும்.

சில மரபியல் ஆய்வுகளையும் சொல்கிறார், அதன் படியே பார்த்தாலும் திராவிடர்களின் மரபும் ஆப்பிரிக்க கருப்பர்களின் மரபணும் அதிகம் ஒத்துள்ளது , ஆரியர்களின் மரபணுவும் , வெள்ளையர்களின் மரபணுவும் அதிகம் ஒத்து போவதாக ஒரு கட்டுரை கூட நான் படித்தேன். ஹிட்லர் தன்னை ஆரியன் என்று கூறிக்கொண்டதை அனைவரும் அறிவர்.

இதற்கு மேல் இனி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, மேற்கொண்டு கட்டுரை போகும் திசையைப்பார்த்து பின்னர் வருகிறேன்.

குமரன் (Kumaran) said...

வவ்வால். உங்கள் சினம் என்னை நோக்கியதாக இருக்கும் என்று தோன்றுகிறது. நான் சொன்ன கருத்திற்கு ஆதரவாக ஐயா அவர்களின் கட்டுரைத் தொடரும் நகருவதாக எண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஐயாவின் கட்டுரைத் தொடர் இன்னும் நிறைவு பெறவில்லை. அது நிறைவு பெற்ற பின் என் கருத்திற்கு எதிரான ஆதாரங்கள் தரப்பட்டிருந்தால் என் கருத்தினை மாற்றிக் கொள்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. நீங்களும் என் கருத்திற்கு எதிரான தரவுகளைச் சினமின்றி எடுத்துத் தர வேண்டுகிறேன். அந்தத் தரவுகளைக் கண்டபின் என் கருத்தினை மாற்றிக் கொள்வதிலும் நான் சொன்னதையே மறுத்து உங்கள் தரவுகளை எடுத்து வைத்து இன்னொரு இடுகை இடுவதிலும் எனக்குத் தயக்கம் இருக்காது.

//தமிழ் ஆர்வலர் என சொல்லிக்கொண்டு தமிழை கொலை செய்யும் விருப்பம் கொண்டவர்களை தோல் உரிக்கிறேன்//

//தமிழில் தம்மை விட அதிகம் அறிந்தவர்கள் இல்லை என்ற இறுமாப்பில் (தவறாக கருத்தினைப்பறப்புவர்கள்) இருப்பவர்களுக்கு சூடு வைக்கும் நேரம் வந்து விட்டது!
//

இந்தச் சுடுசொற்கள் இராம.கி. ஐயாவை நோக்கியதாக இல்லாமல் என்னை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். காய்தல் உவத்தல் இன்றி அவர் தம் கருத்துகளைச் சொல்கிறார்.

என்னை நோக்கியும் இந்த சுடுசொற்கள் வீசப்பட்டிருப்பதற்கு துரதிருஷ்டவசமாக என் கருத்துகளும் அதனை மேல் எழுந்த தங்கள் புரிதல்களும் தான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடியேன் தமிழைக் கொலை செய்யும் விருப்பம் உடையவன் என்றும் தமிழில் தம்மை விட அதிகம் அறிந்தவர்கள் இல்லை என்ற இறுமாப்பும் கொண்டவன் என்றும் எழும் கருத்துகள் வருத்தத்தைத் தந்தாலும் என் தமிழார்வத்தைப் புடம் போடும் நெருப்பாக அவற்றை உணர்கிறேன்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

> கிராதர் என்பவர் கருத்தவர்களே - கருப்பானவர்களே!

சமஸ்கிருத இலக்கியத்தில் அப்படியில்லை. ஆரியர்கள் ஒருவித மலைவாழ் குடிகளை கிராதகர் என அழைத்தனர். சமஸ்கிருத அகராதிப்படி

1 kirAtaka m. ifc. a man of the mountaintribe of the Kira1tas ; Agathotes Chirayta L.



> இவர்களைத்தான் இன்றைய மாந்தவியல் Mon-khmer என்றும்.


மாந்கமெர் என்பது தென்கிழக்கு ஆசிய மொழிக்குடும்பத்தை குறிக்கிரது .
http://en.wikipedia.org/wiki/Mon-Khmer
The Mon-Khmer languages are the autochthonous language family of Southeast Asia.

ஆரியர் அழைத்த கிராதர்களுக்கும் மான்கமெர் மொழிகளுக்கும் தொடர்பில்லை

> முண்டா மொழி பேசுகிறவர்கள் என்றும் கூறும்.

முண்டா மொழிகள் ஆஸ்ற்றோ-ஆசிய மொழிகுடும்பத்தின் ஒரு கிளை. மற்றோரு கிளை மாந்கமெர் மொழிகள்

>இவர்களே இன்றைக்கும் வடபுலத்தின் ஆதிக் குடிகள்.

வடபுலத்தில் இருந்த, ஆரியர் சந்தித்த ஒரு மலைவாழ் குடிதான் கிராதர்கள்.அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு. வடபுலத்தில் பல மொழிக்குடும்பங்கள் உள்ளன.

> "அவன் கருப்பா, அப்பொழுது கிராதகன் என்பது சரிதான்" என்று எத்தனை மக்கள் மனத்தில் அனிச்சைச் செயலாய் சொற்கள் ஆளப்படுகின்றன?

எனக்கு தெரிந்தவரை தொந்தரவு கொடுப்பவர்கள் தான் கிராதகர் என (தற்காலத்தில்) அழைக்கப் படுகிறார்களே தவிர, தோல் நிரத்தால் அல்ல.

இராம.கி said...

அன்பிற்குரிய அற்புதன்,

தமிழகப் பல்கலைக் கழகங்களில் உள்ள ஆய்வுகள் பல்துறை நோக்கில் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. ஆனாலும் அவை பெரிதும் அரிதாகவே இருக்கின்றன.

ஆண்டகைகளால் கூறப்படும் வரலாற்றைத் தான் பலரும் உண்மையென்று எண்ணிக் கொண்டு படித்துவருகிறோம். அதைச் சரி செய்வது மிகுந்த சரவலான வேலை. ஆனாலும் செய்ய வேண்டும்.

ஈனியல் பற்றிய செய்திகளை இங்கே ஒரு கோடி காட்ட வேண்டிய தேவை இருந்ததால் கூறினேன். அதைப் பற்றித் தனியே தான் எழுதவேண்டும்.

ஒரு ஞாயமற்ற குமுகக் கட்டுமானத்தை உடைப்பதற்காகவே வரலாறு மீள வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதை முழுக்கவும் ஒப்புகிறேன். மிகச் சரியாக உங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

"எது வந்தேறிக் கூட்டம்?" என்று கட்டம் கட்டிப் பார்க்கும் உங்கள் அரசியலை இங்கு கொண்டுவர வேண்டாம்.

மேலே பின்னூட்டுக் கொடுத்தவர் பெயர் அற்புதன். இதைக்கூடச் சரியாக எழுதவொட்டாமல், குப்புசாமியைக் குப்பன் என்றும் சுப்பைய்யாவை சுப்பன் என்றும் நாட்டுப் புறத்தில் ஒருசிலர் கூப்பிடுவதைப் போல, இங்கு "அற்புதம்" என்று விளித்தீர்கள் பாருங்கள், அப்போதே, உங்களுக்குள் மறைந்து கிடக்கும் ஆண்டகைத்தனம் தொபுக்கடீர் என்று வெளியே வந்து விட்டது. அப்பால் "ஆண்டகை, அண்டங்காக்கை" என்ற சொன்ன போது மிகுந்து வழியும் காழ்ப்பும் கூட வெளிப்பட்டு விட்டது.

கேள்வி கேட்க வேண்டுமானால், "ஆண்டகை, அடியவர் என்பதெல்லாம் எல்லா சாதியிலும் இருக்கின்றனரா?" என்று பொதுமையாய்க் கேட்டிருக்கலாம். குறைந்தது, அது பொது இடத்தில் நாகரிகம் பார்ப்பதாய் இருந்திருக்கும். மாறாக உள்ளே ஊறிப் போயிருக்கும் ஆண்டை உணர்வுகள் வெளிப்பட நீங்கள் எழுதியிருப்பதை எங்கு கொண்டு சேர்ப்பது?

இந்த இடுகை சாதி பற்றியது அல்ல. இழைக்குத் தொடர்பானவற்றைப் பேசுங்கள். உங்கள் நிகழ்ப்புகளை (agenda) வேறு இடங்களில் நடத்திக் கொண்டால் நல்லது. "தி.குஞ்சுகள்" என்ற உங்கள் கேலிப்பேச்சையெல்லாம் வேறு இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய வவ்வால்,

உங்கள் பின்னூட்டைப் பார்த்தவுடன் தோன்றியது "இது என்ன மிரட்டலா?"

எழுதியதைப் பொறுமையாகப் படிக்க முடியாமல், "அரக்கர் என்ற சொல்லுக்குப் பொருள் சொல்ல இதை எல்லாம் எழுதவேண்டுமா?" என்று நீங்கள் எழுதிய போது முதலில் சிரித்தேன். பின்னால் உங்களின் வறட்டுத் தனமான (dogmatic) கால நிலைக் குறிப்புக்களைப் பார்த்த பிறகு, ஏதோ ஒரு புரிதற் குழப்பமோ என்று எண்ணினேன். பின்னால் தான் தெரிகிறது, உங்கள் சிந்தனை குதர்க்கமானது என்று..

You want somebody to confirm your views; that is all. According to you, others do not have any rights or mind of their own to express.

"நீங்கள் ஒரு கருத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை இன்னொருவர் ஆமோதிக்க வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் எதிர்பார்ப்பது. இன்னொரு மாந்தனுக்கு வேறு கருத்து இருக்கலாம். அது உங்களோடு ஒன்றுபட்டோ, ஒன்றுபடாமலோ போகலாம். அவரவருக்குத் தனி ஆளுமை உண்டு என்பதெல்லாம் உங்களுக்குப் பொருட்டில்லை போலும்.

உங்களுக்கும் குமரனுக்கும் ஏதோ ஒரு கருத்து வேறுபாடு; நான் குமரனின் கட்டுரையில் இருந்து தொடங்குகிறேன்; உடனே இரண்டும் இரண்டும் நாலு, போடு அரிவாளை; இவனும் குமரனின் கருத்துக் கொண்டவனே! விளாசு; சூடு வை, தோலுரி"

என்ற முடிவிற்கு வந்தீர்கள் போலும். நன்றாக இருக்கிறது உங்களின் நாகரிகம்.

"தோலுரிக்கிறேன்" என்ற உங்கள் மிரட்டலுக்கெல்லாம் பயந்தவன் நானில்லை. "நான் தமிழார்வலனா, தமிழைக் கொலைசெய்யும் விருப்பம் கொண்டவனா?" என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் முடிவு செய்யட்டும்.

"தமிழில் தம்மை விட அதிகம் அறிந்தவர்கள் இல்லை என்ற இறுமாப்பில் (தவறாக கருத்தினைப்பறப்புவர்கள்) இருப்பவர்களுக்கு சூடு வைக்கும் நேரம் வந்து விட்டது!"

என்ற கருத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன். சூடு வையுங்களேன் ;-)

எனக்கு இறுமாப்பு வரவேண்டிய தேவை இது நாள் வரை இருந்ததில்லை. எனக்கு எது தெரியும், எது தெரியாது என்பதை என் இடுகைகள் முழுக்கத் தொடர்ந்து தெரிவித்திருக்கிறேன். (நான் கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது கடலளவு.) இணையத்தில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாய் என்னைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு என் ஆளுமை, அடக்கம், ஆகியவை புரியும். நான் அறிந்த சிலவற்றை என் போக்கில் சொல்லி வருகிறேன். அவ்வளவு தான். அவற்றை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விழைவு என்றே அழுந்தச் சொல்லிவருகிறேன்.

உங்கள் பின்னூட்டத்தை நான் ஏன் நிறுத்த வேண்டும்? அப்படி எண்ணுவதில் இருக்கும் முரண் புரிந்து என்னை எடைபோட்டது தவறு என்று நீங்கள் உணர்ந்தால் சரி.

சிவகங்கைக்காரர்கள் பொதுவாய் வம்புச் சண்டைக்குப் போவதில்லை; அதே பொழுது வந்த சண்டையை விடுவதில்லை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய கோவி.கண்ணன்,

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. "சூடு வை; தோலுரி" போன்ற சொற்களை இங்கு அள்ளித் தெளித்ததற்கு, குமரிக் கண்டம் பற்றிய கருத்துத் தான் திரு.வவ்வாலுக்குக் காரணமா?

புரியவில்லை. அவர் சூடு வைக்கட்டும். சூட்டை உணர்ந்த பின்னால், மறுவினை செய்கிறேன்.

அன்பிற்குரிய வெற்றி,

மாற்றுக் கருத்தை இங்கு எழுதுவதில் எனக்கும் ஒப்புதலே, அவை நாகரிகத்தோடு இருக்கும் வரை.

அன்புடன்,
இராம.கி.

G.Ragavan said...

அரக்கருக்குப் பின்னால் இருக்கும் தகவல் இதுதானா....அரக்கு அரக்கு என்று அத்தனை முறை சொல்லியிருந்தும் அது அரங்கரோடு பொருந்துவது தெரியாமல் இருந்தோமே! அடடா!

தொடரட்டும் தொடர். அடுத்த பதிவிற்கும் காத்திருக்கிறேன்.

வவ்வால் said...

இராம.கி அவர்களுக்கு,

பலர் என்ன சொல்ல வருகிறார்கள் என புரியாமலே அருமை , ஆஹா ,ஒஹோ என்று சொல்லிவிட்டுபோய்விடுவார்கள் , அப்படி பட்ட பாராட்டு மட்டும் தான் உங்களுக்கு தேவை எனில், நானும் வந்து தட்டிவிட்டு போகிறேன்! :-))

நான் அடுத்தவர் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதில்லை என்பதை இங்குள்ளவர்கள் பலருக்கும் தெரியும், பின்னூட்ட மறு மொழி திரட்டியில் கூட சேராமல் இருந்தவன் , கடந்த மாதம் சேர்ந்தேன்!(அதுவும் குமரன் சொல்லித்தான் , அவருக்கு நன்றி) நான் சரியாக யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன் அதே சமயம் முரண்பட்டு சொன்னால் கொஞ்சம் காட்டமாக பதில் சொல்வேன், அது உங்களுக்கு மிரட்டலாக தோன்றிவிட்டது போலும்.

சரி நீங்கள் என்னைப்பற்றி என்ன வேண்டும் என்றால் சொல்லிக்கொள்ளுங்கள் வறட்டு சிந்தாந்தம் யார் சொல்வது எனக்காலம் தீர்மானிக்கட்டும்.

கூகிளில் ஒரு வார்த்தைப்போட்டு தேடுகிறீர்கள் அதே தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது , ஆனால் அதில் கடைசி வரையில் எதுவும் சொல்லாமல் முடிந்தால் அந்த இடத்தில் என்ன நினைப்பீர்கள்?

அது போலத்தான் இப்பொழுது இரண்டு கட்டுரை ஆகிவிட்டப்போதும் தலைப்பினை தொட்டுப்பார்க்கவே இல்லை , நீங்கள் பலவற்றையும் நன்கு அறிந்தவர் என்பது தெரிகிறது ஆனால் அது அனாவசியமாக குழப்பிவிடுகிறது.

வடமொழில் சொல்வதற்கு முன்னரே தமிழில் அரக்கன் என சொல்லப்பட்டு விட்டது என குமரன் சொன்னதை நீங்கள் அமோதிப்பதை போல எழுதி இருப்பதாக அவர் சொல்லிக்கொண்டார், ஆனால் உங்கள் பதிவில் அப்படி இல்லை , ஆனாலும் நீங்கள் எதுவும் மறுப்பும் சொல்லவில்லை.நான் கேட்டபிறகு தற்போது தான் அப்படி இல்லை என சொல்லியுளீர்கள்! :-))

சரி நானும் மற்றவர்களைபோல உள்ளே என்ன இருக்கென்றே படிக்காமல் அருமை , அபாரம் என சொல்லிவிட்டு , சொந்த கருத்தை ஒன்றையு சொல்லிவிட்டு போய் இருந்தால் இந்த திரிப்பு அப்படியே தானே இருந்து இருக்கும்.

சரி இப்போதாவது சொல்லுங்கள், நான் தான் வறட்டுத்தனமான கால நிலை குறிப்புகள் சொல்கிறேன் நம்ம பல்கலைக்கழக பாட புத்தகங்கள் எல்லாம் ஏன் அந்த வறட்டுத்தனமான காலை நிலையையே சொல்கிறது, இன்னும் இது வரை அச்சில் வந்த பல புத்தகங்களிலும் அதே கால நிலைதான் உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் அடுத்தவர்கள் மீது கருத்தை திணிக்கும் போக்கு தான் இங்கு தென்படுகிறது.

சிலப்பதிகாரம் காப்பியங்களில் ஒன்றாக வரக்காரணம் , பாடுத்தலைவனின் அனைத்து பருவங்களும் , அனைத்து தினை நிலங்களிலும் கதை நடப்பதாக காட்டப்படுவதால் தான் , அதனால் தான் சோழ, பாண்டிய, சேர நாடு எல்லாம் அதில் வருகிறது.

மதுரையை எரித்த பின், அங்கே அருகாமையில் இருந்து கண்ணகி வானுலகம் போய் இருக்கலாம் , சேர நாட்டிற்கு ஏன் போக வேண்டும். ஐந்திணை நிலங்களும் வர வேண்டும் என்பதால் தான். அதே சமயம் 3 மன்னர்களையும் குறிப்பிடுவதால் கால நிலை வழுவும் வராது. ஒரு மன்னரின் காலம் தெரியவில்லை எனில் மற்ற மன்னரின் காலம் கொண்டு சொல்ல முடியும்.

மாதவி நாட்டிய அரங்கேற்றம் நடைப்பெற்றது கரிகாலன் முன்னர் என்றும் , கண்ணகி மதுரைக்கு சென்ற போது இருந்தது நெடுஞ்செழியன் என்றும் , கண்ணகி உயிர் விட்ட போது ஆண்ட சேர மன்னன் , செங்குட்டுவன் என்றும் தெளிவாக காட்டி விட்டதால், இதில் ஒரு மன்னரின் காலம் தெரிந்தால் போதும்.எனவே இவர்கள் மூவரின் காலம் வைத்துப்பார்த்தால் கி.பி 150 அளவிலே வரும்.

இங்கு கயவாகு கூட தேவை இல்லை. ஆனால் வறட்டுத்தனமாக கயவாகு - செங்குட்டுவன் என பிடித்து கொண்டு இருப்பது யாரோ?

ஆதிச்ச நல்லூரில் ஏதோ கல்வெட்டுகள் கிடைத்து கரிகாலன் காலம் சொன்னார்போல அதனையும் இழுத்துள்ளீர்கள். திருச்செந்தூர் அருகில் இருக்கும் ஆதிச்ச நல்லூரில் இருந்து பெறப்பட்டது பானை ஓடுகளும் , தாழி போன்றவையும் சில வண்ண மணிகளும் தான். தாழிகளின் உட்புறத்தில் சில குறியீடுகள் உள்ளது என்றும் அவை அதில் புதைக்கப்பட்டவர்கள் விவரம் எனவும் தான் சொல்கிறது எந்த மன்னர் என்றெல்லாம் அதில் இல்லை.அவை எல்லாம் கி.மு வை சேர்ந்தவை ஆக இருக்கலாம் ஆனால் அதில் இருந்து அறியப்பட்டது எதுவும் மன்னர்கள் பற்றி சொல்லவில்லை.

இராம.கி said...

அன்பிற்குரிய வவ்வால்,

போகிற போக்கில் இலவகமாக இலக்கியத்தில் வரலாற்று புரட்டு எங்கு செய்கிறேன்?

மீண்டும் கரிகாலன் காலம் கி.பி.150 என்று ஒலித்தட்டில் கீறல் விழுந்த மாதிரி சொல்லிக் கொண்டு வராதீர்கள். உங்களுடைய புரிதலுக்கும் அப்பால் நடக்கும் புதிய ஆய்வுகளைத் தெரிந்து கொள்ளாமல் (இத்தனைக்கும் அந்த உசாத்துனைகளை இங்கு கொடுத்திருக்கிறேன்.) திருப்பித் திருப்பி வறட்டுத் தனமாகப் பேசிக் கொண்டிராமல், கொடுத்திருக்கும் உசாத் துணைகளைத் தேடிப் போய்ப் படித்துப் புரிந்து கொள்ளுவது நல்லது.

உங்களுடைய வாக்குவாதம் திரு. குமரனோடு இருக்கிறது. அதற்கு அவர்தான் மறுமொழி சொல்ல வேண்டும். "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது" என்று தற்செயல் நிகழ்வுக்கு ஒரு பழமொழி கூறுவார்கள். அது போல இருக்கிறது உங்களின் வாதம். நான் ஊன்பொதிப் பசுங்குடையாரின் பாடல், திருவளர். பட்மஜா, திரு.புருஷோத்தமனின் ஆவணத்தின் வழி பார்த்தால், காலநிலை கி.மு.250 ஆகிறது என்று சொன்னதிற்கும், திரு.குமரனின் கூற்றுக்கும் எப்படியோ ஒரு முடிச்சு போட்டுக் கொண்டீர்கள். அப்புறம் எல்லாம் புரட்டு என்று முடிவு கொண்டு சூடு வைக்கவும் தோலுரிக்கவும் புறப்பட்டீர்கள் போலும். "நீங்கள் ஒருத்தர் தான் தமிழைக் காக்கின்றவர்; மற்றவர் எல்லாம் தமிழைக் காட்டிக் கொடுப்பவர்" என்று அவக்கரத் தத்துப் பித்து உணர்ச்சியில் தாக்கப் புறப்பட்டீர்கள் போலும்.

"இராவணன் தமிழன் என இங்கே மற்றவர்கள் சொல்கிறது எல்லாம் கதை" என்று நான் எங்கே சொன்னேன்? தமிழில் தானே எழுதினேன்? வேறு மொழியில் எழுதவில்லையே?.

"இந்த சங்க பாடல் கி.மு வில் எழுதியதாகவே இருந்தாலும் இது எப்படி வட மொழியாளர்களுக்கு முன்னர் வந்தது என்ற முடிவுக்கு வந்தார்கள்?" என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அந்த முடிவிற்கு நான் எங்கே வந்தேன்? என்னய்யா இது, ஏதேதோ கற்பனையில் காட்சிகளை உருவாக்கிக் கொண்டு என்னைப் போட்டு வறுத்தெடுக்கிறீர்கள்?

"வடமொழியில் இராமாயணம் மிகவும் பழமையானது அல்லவா?" என்று கேட்டிருக்கிறீர்கள். இராமயணத்தின் காலம் பெரிதும் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறது. இதைச் சொல்லுவதற்காக மீண்டும் என்மேல் நீங்கள் பாயக் கூடும். அதற்காகத் தெரிந்ததைச் சொல்லாது இருக்க முடியுமா? பலரும் சொல்வது போல இராமாயணக் கதையில் நூற்றுக் கணக்கான வெவ்வேறு வேற்றங்கள் (versions) இருக்கின்றன? எதை நீங்கள் பேசுகிறீர்கள்? வான்மீகி இராமாயணமா? அது என்ன பெரிய ஒசத்தி, மற்றதெல்லாம் தாழ்த்தி?

"எதற்காக கஷ்டப்பட்டு தமிழில் தான் முதலில் அரக்கன் என சொன்னார்கள் என இல்லாத ஆதாரங்களின் அடிப்படையில் சொல்ல வேண்டும்." என்ற உங்கள் கூற்றைப் பார்த்துச் சிரிக்கத்தான் வேண்டும். "தமிழில் தான் முதலில் அரக்கன் என சொன்னார்கள்" என்று நான் எங்கே சொன்னேன்?

வேண்டுமானால் மோனியர் வில்லிம்ஸ் வடமொழி அகரமுதலியைப் பாருங்கள்; "ராக்ஷஸ" என்ற வடமொழித் திரிவு (பாகதத்தில் இணையான சொல் ராக்கத) இருக்கு வேதத்தில் கி.மு.1200ல் கையாளப் பட்டிருக்கிறது. (உடனே அந்தச் சொல் வடசொல்; தமிழ் அதைக் கடன் வாங்கியது என்று சொல்லிக் கொண்டு வராதீர்கள்.) நாம் அறிந்த வகையில் அரக்கன் என்ற சொல் முதலில் ஆவணப் படுத்தப் பட்டது இருக்கு வேதத்தில் தான். என் கட்டுரைப் பொருளையே புரிந்து கொள்ளாமல் நீங்கள் உளறுவது எனக்கு வியப்பாய் இருக்கிறது. அரக்கர் என்ற சொல்லுக்கு அடிப்படைப் பொரூளைத் தமிழ்வழியே புரிந்து கொள்ளுவதே சரியாக இருக்கும் என்று நான் சொன்னேன் - அவ்வளவு தான், "இரண்டும் இரண்டும் நாலு, இல்லாதவன் வாயிலே மண்ணு" என்று மட்டையடி அடிக்கிறீர்கள். உங்களுடன் உரையாடுவது கடினமான செயல் என்று உணருகிறேன்.

அடுத்துச் சொன்னீர்கள் பாருங்கள், "இன்னும் சொல்லப்போனால் தமிழை விட பழமையான மொழி சமஸ்க்ருதம் என்று சொல்கிறார்களே அப்படி எனில் அவர்கள் தமிழுக்கு முன்னரே எழுதி இருக்க வேண்டும் என்பது தானே பொதுவாக உணரப்படுவது."

எங்களூரில் கூத்துப் பார்க்கும் போது, "விடிய விடிய கதைகேட்டு "சீதைக்கு இராமன் சித்தப்பன்" என்று தவறான புரிதல் பற்றி ஒரு சொலவடை சொல்லுவார்கள். அது அப்படியே உங்களிடத்தில் உண்மையாகிறது, அய்யா. தமிழைவிடச் சங்கதம் பழமையான மொழி என்று நான் சொல்லவே மட்டேன். என் இடுகைகளைச் சரியாகப் படித்தவர்களுக்கு அது தெரியுமே! "பாகதமும், தமிழும் ஒன்றிற்கு ஒன்று சளைக்காத மிகப் பழமை வாய்ந்த மொழிகள். பாகதத்தின் செந்தரம் செங்கதம்; தமிழின் செந்தரம் செந்தமிழ்" என்று தான் நான் சொல்லுவேன். என்னய்யா இது, இப்படி ஒரு தவறான புரிதலா?

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இராவணன் ஓர் அரக்க இனத்தவன் என்று தான் தொன்மம் கூறுகிறது. அரக்கருக்கும் தமிழருக்கும் உள்ள ஊடாட்டு பற்றி இன்னும் நான் சொல்லவே இல்லை. அதற்குள் வெந்நீரைக் காலில் ஊற்றிக் கொண்டவர் போல் குய்யோ, முறையோ என்று நீங்கள் கூக்குரல் இட்டால் எப்படி?

"மாந்தன் ஒரே இடத்தில் இருந்து வந்தவனா, பல இடங்களில் தோன்றியவனா" என்று தேற்றுக்கள் (theories) எல்லாம் இன்றைக்கும் மாந்தவியல், ஈனியல் போன்றவற்றில் ஆயப் படுகின்றன. நான் இங்கு ஒருபக்கத் தேற்றைச் சொன்னேன். அதை ஏற்க முடியாது என்றால் சொல்லிவிட்டுப் போங்கள். அதை விடுத்துச் சூடு வைப்பதும், தோலுரிப்பதும் என ங்கு கற்றீர்கள்? நீங்கள் என்ன தலைவெட்டுக் கேட்கும் வேதாந்தியா?

அடச்சே, போங்கய்யா, இதுபோன்ற வெற்றுவேட்டுச் சூளுரைகளைக் கேட்டு அகவை கூடிவிட்டது. ஓய்வுக் காலம் வரும் நேரத்தில், யார் சூடு வைப்பார்கள் என்று என்று கவனித்துப் பார்க்கவேண்டுமோ?

அன்புடன்,
இராம.கி.

வவ்வால் said...

//மீண்டும் கரிகாலன் காலம் கி.பி.150 என்று ஒலித்தட்டில் கீறல் விழுந்த மாதிரி சொல்லிக் கொண்டு வராதீர்கள். உங்களுடைய புரிதலுக்கும் அப்பால் நடக்கும் புதிய ஆய்வுகளைத் தெரிந்து கொள்ளாமல் (இத்தனைக்கும் அந்த உசாத்துனைகளை இங்கு கொடுத்திருக்கிறேன்.) திருப்பித் திருப்பி வறட்டுத் தனமாகப் பேசிக் கொண்டிராமல், கொடுத்திருக்கும் உசாத் துணைகளைத் தேடிப் போய்ப் படித்துப் புரிந்து கொள்ளுவது நல்லது.//


நீங்கள் சொல்வது புதிதாக ஒரு ஆய்வு நடந்து இருக்கிறது , சரி ஆனால் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றா? எய்ட்Dக்கு மருந்து கண்டு பிடித்தேன் என சொல்லும் சித்த மருத்துவர்கள் உங்களை விட பலமாக சவால் விடுகிறார்கள் :-))

மேலும் உங்கள் தொனியில் இருந்து அதான் நான் சொல்றேன்ல அப்புறம் என்ன குறுக்கு கேள்வி என்ற எதேச்சதிகாரம் தான் வெளிப்படுகிறது!

இப்போ தான் தெரியுது பின்னூட்டம் எதையும் படிக்காமலே நீங்கள் அவற்றை வெளியிடும் பழக்கம் கொண்டவர் என்பது :-))

நான் போட்ட பின்னூட்டத்தில் சொன்னது என்னவென்று பாருங்கள்,

//வடமொழில் சொல்வதற்கு முன்னரே தமிழில் அரக்கன் என சொல்லப்பட்டு விட்டது என குமரன் சொன்னதை நீங்கள் அமோதிப்பதை போல எழுதி இருப்பதாக அவர் சொல்லிக்கொண்டார், ஆனால் உங்கள் பதிவில் அப்படி இல்லை , ஆனாலும் நீங்கள் எதுவும் மறுப்பும் சொல்லவில்லை.நான் கேட்டபிறகு தற்போது தான் அப்படி இல்லை என சொல்லியுளீர்கள்! :-))//

இதற்கு முந்தைய பின்னூட்டத்திலும் அவர் சொன்னதற்கு மறுப்பு எதுவும் இல்லை என்பதால் அது உங்களுக்கும் ஒப்புதல் போல என்னும் கருத்தில் தான் நானும் சொல்லி இருப்பேன்.

குமரன் நீங்கள் சொன்ன கால நிலையைத்தான் பிடித்துக்கொண்டு சொன்னார் , எனவே தான் அந்த கால நிலையும் முற்றிலும் நம்பகம் அற்றது என சொல்லி இருப்பேன். இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களின் பின்னூட்டம் எல்லாம் வந்த பிறகு தான் நான் கடைசியா அனைத்தும் படித்துப்பார்த்து தான் சொல்ல ஆரம்பித்தேன் அது வரையில் உங்களிடம் இருந்து சிறு அசைவும் இல்லை.

அதாவது , புதிய தரவுகளாக பல ஆய்வு நூல்களைக்கூட காட்ட முடியும்(அவர்களின் ஆய்வுக்கு என்ன ஆதாரம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்) அவை எல்லாம் பெரும்பாண்மையாக உண்மை என யாரும் ஏற்றுக்கொள்ளாதது. அதை மட்டும் சொல்லிக்கொண்டு போய் படிப்பா என சொல்வதை குமரனே ஏற்றுக்கொள்ள மாட்டார், நான் ஒரு அகராதியை பாருங்கள் என்று சொன்னதற்கே அதை போய் பார்க்கணுமா என்று கேட்டவர்.

நீங்கள் கூட அகராதி எல்லம் குப்பை என எண்ணுபவர் என நினைக்கிறேன்.

சரி விடுங்கள் வெண்ணீர் யார் காலில் ஊற்றியது என்பதை தெரிந்து கொண்டேன்:-))

ஒரு சின்ன விண்ணப்பம் இனியாவது உங்களுக்கு வரும் பின்னூட்டங்களையும் படித்துப்பாருங்கள்!

குமரன் (Kumaran) said...

வவ்வால்,

இராம.கி. ஐயா நான் வைத்த முன்னீட்டை ஆதரிப்பதைப் போல் எழுதிக் கொண்டு வருகிறார் என்று நான் நினைக்கவில்லை; அப்படி சொல்லவும் இல்லை.

//நான் சொன்ன கருத்திற்கு ஆதரவாக ஐயா அவர்களின் கட்டுரைத் தொடரும் நகருவதாக எண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன். //

நீங்கள் தான் அப்படி எண்ணிக்கொண்டு எதிர்வினை செய்கிறீர்கள் என்று சொன்னேன். நான் சொன்னதை சொல்லுக்குச் சொல் மீண்டும் படித்துப் பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

விரிவான பின்னூட்டங்களை மீண்டும் வந்து இடுகிறேன்.

வவ்வால் said...

குமரன் ,

உங்களுக்கு விளக்கம் உங்கள் பின்னூட்டமே சொல்லட்டும்,

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் -1 இல் உங்களது பின்னூட்டம்:

//வடமொழியாளர்கள் இராவணன் அரக்கன் என்று சொல்வதற்கு முன்பே நமது சங்கப் புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள்' என்ற செய்தி எந்த மறைவும் இன்றி என் இடுகையின் தலைப்பிலும் இடுகையிலும் பல பின்னூட்டங்களிலும் இங்கே இந்த இடுகையின் பின்னூட்டத்திலும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.//

இதற்கு முன்னர் நீங்கள் போட்ட பின்னூட்டங்களிலும் இதை ஒத்த கருத்தினை தான் சொல்லியுள்ளீர்கள்.

நான் தான் தவறாக புரிந்துகொண்டேன் எனில் இதனை மற்றவர்கள் எவ்வாறு புரிந்துக்கொள்வார்கள் என அறிய ஆவலாய் உள்ளேன்!

வெற்றி said...

வவ்வால்,

/* நான் தான் தவறாக புரிந்துகொண்டேன் எனில் இதனை மற்றவர்கள் எவ்வாறு புரிந்துக்கொள்வார்கள் என அறிய ஆவலாய் உள்ளேன்! */

நீங்கள் புரிந்து கொண்டது போல்தான் நானும் புரிந்து கொண்டேன். இராவண மன்னன் சைவத் தமிழ் மன்னன் என்பதே ஈழத்தில் எனது ஊரில் நிலவி வரும் செவி வழிக் கதை. வவ்வால் நீங்கள் புரிந்து கொண்டது போல நானும் புரிந்து கொண்டதனால்தான் என் கருத்தை குமரனின் பதிவில் பின்னுட்டமாகச் சொல்லியிருந்தேன்.

எனக்கு இலக்கியங்கள் வரலாறுகள் தெரியாது. ஆனால் எனது ஊரில் பரவலாக நம்பப்படும் இராவண மன்னன் கதையை பதிவேற்றலாம் என நினைக்கிறேன். ஏனெனில் இக் கதை பெரும்பாலான தமிழகத்தவர்கள் மற்றும் இலக்கியங்களை விட வேறுபடுகிறது.

வவ்வால் said...

வெற்றி,
மிக்க நன்றி, உங்களுக்கும் அது என்னை ஒத்தே தான் புரிந்துள்ளது. எங்கே எனக்கு தமிழ் சரியாக படிக்க தெரியவில்லையோ என நினைத்து விட்டேன்.

இராவணன் தமிழன் , இன்னும் பரந்தப்பார்வையில் பார்த்தால் அவனை திராவிடன் என்று இலக்கியத்தில் பல இடங்களிலும் சூசகமாக சொல்லியுள்ளார்கள். இதனைத்தான் நான் குமரனின் முந்தையைப்பதிவில் முன்னிறுத்தி பேசி வந்தேன். அதுவே இங்கும் தொடர்ந்து வருகிறது.

ஏற்றுக்கொள்வது வேறு , மறுப்பு சொல்வது வேறு ஆனால் முன்னுக்கு பின் முரணாக பேசுவதை எப்படி அமைதியாகப்பார்த்துக்கொண்டு இருப்பது.

//எனக்கு இலக்கியங்கள் வரலாறுகள் தெரியாது. ஆனால் எனது ஊரில் பரவலாக நம்பப்படும் இராவண மன்னன் கதையை பதிவேற்றலாம் என நினைக்கிறேன். ஏனெனில் இக் கதை பெரும்பாலான தமிழகத்தவர்கள் மற்றும் இலக்கியங்களை விட வேறுபடுகிறது.//
நீங்கள் அறிந்ததை பதிவு செய்து வையுங்கள் உதவியாக இருக்கும்.
வெற்றி அப்படிப்பட்ட கதையும் , இலக்கிய தரவுகளும் தமிழகத்திலும் வெகு காலமாகவே உள்ளது , ஆனால் தமிழ் ஆர்வலர்கள் எனச்சொல்லிக்கொள்ளும் பலரே காலம் காலமாக அது போன்றவற்றை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து , வட மொழி கூற்றுகளையே நம் தலையில் ஏற்றி வருகிறார்கள். உண்மையை எடுத்து சொல்ல யாரும் இல்லாத காரணத்தால் வெகுவாக பரவி விட்டது.

அவ்வப்போது எங்கேனும் சிலர் இராவணன் குறித்து உண்மையை பேசினாலும் அது பெரிதாக வெளிவருவதில்லை. இராவணன் தமிழன் என ஒரு ஆய்வு நூலைக்கூட ஒருவர் எழுதி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் எனக்கேள்வி, சரியாக விசாரித்து பின்னர் அது பற்றி சொல்கிறேன். அது பற்றி பல நூல்கள் உள்ளது.

திராவிடர் கழகத்தின் சார்பில் கூட இது பற்றி நூல் வந்துள்ளது ஆனால் அதனை வேறுப்பார்வையில் தான் மற்றவர்கள் பார்ப்பார்கள்.

குமரன் (Kumaran) said...

////வடமொழியாளர்கள் இராவணன் அரக்கன் என்று சொல்வதற்கு முன்பே நமது சங்கப் புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள்' என்ற செய்தி எந்த மறைவும் இன்றி என் இடுகையின் தலைப்பிலும் இடுகையிலும் பல பின்னூட்டங்களிலும் இங்கே இந்த இடுகையின் பின்னூட்டத்திலும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.//
//
வவ்வால். உங்கள் கடைசிக்கு முந்தையப் பின்னூட்டத்தில் நீங்கள் கட்டம் கட்டியிருப்பது என் முன்னீடு என்பதை நான் தெளிவாகச் சொல்லிக் கொண்டு தான் வருகிறேன். அதனை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அந்த முன்னீட்டை இராம.கி. ஐயா ஆதரிக்கிறார் என்று நீங்கள் புரிந்து கொண்டதும் அவர் ஆதரிக்கிறார் என்று நானும் நினைக்கிறேன்/சொன்னேன் என்று நீங்கள் புரிந்து கொண்டதும் தவறு என்கிறேன். முதல் தவறான புரிதலுக்கு இராம.கி. அவர்களின் இடுகையிலோ அவரது பின்னூட்டங்களிலோ எந்த முகாந்திரங்களும் இல்லை - அவர் நீங்கள் சுடு சொற்களைச் சொன்ன பின் தான் மறுத்தார் என்பது நீங்கள் அப்படி ஒரு தவறான கருத்தை வைக்கிறீர்களே என்பதற்காகத் தான். அதற்கு முன் அவரும் நானும் அவர் என் முன்னீட்டை ஆதரிக்கிறார் என்று நினைக்காததால் அதனை மறுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படவில்லை. இரண்டாவது தவறான புரிதலுக்கு என் பின்னூட்டங்களில் எங்குமே முகாந்திரம் இல்லை. நல்ல வேளையாக இந்த இடுகைகளில் பின்னூட்டங்கள் இடப்பட்ட நாளும் நேரமும் இருக்கின்றன. அவற்றை வைத்து நீங்கள் தவறான புரிதல்கள் கொண்டு சுடுசொற்களை வீசிவிட்டீர்கள் என்று காட்டமுடியும். நீங்கள் விரும்பினால் என் பதிவில் அந்த விவாதத்தைத் தொடரலாம். இந்த இடுகையில் ஐயா இடுகையில் சொன்ன கருத்துகளை மட்டும் விவாதிக்கலாம். சரியா?

குமரன் (Kumaran) said...

வெற்றி,

நீங்களும் நான் வைத்த மூன்னீட்டை ஐயா அவர்கள் ஆதரிப்பதைப் போல் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறீர்களா? அவர் அப்படி ஆதரிப்பதைப் போல் எழுதுகிறார் என்று நான் நினைத்தேன்/சொன்னேன் என்று நினைக்கிறீர்களா? இது இரண்டும் தவறான புரிதல்கள் என்று நான் சொல்கிறேன். இந்தப் புரிதல்கள் வவ்வாலுக்கு மட்டும் தான் ஏற்பட்டதா? உங்களுக்கும் மற்றவருக்கும் ஏற்பட்டதா? என்பதை அறிய ஆவல்.

சென்ற இடுகையில் ஆனானி நண்பர் சொன்னது போல் என் மூன்னீட்டை மறுக்கும் தொனியில் தான் ஐயா அவர்களின் இடுகைகள் நகர்வதாக நான் எண்ணினேன். அதனால் தான் இந்தத் தொடர் முடிந்த பின் என் கருத்திற்கு எதிரான ஆதாரங்கள் வைக்கப்பட்டிருந்தால் என் கருத்தை மாற்றிக் கொள்ளத் தடையில்லை என்று சொல்லியிருந்தேன்.

குமரன் (Kumaran) said...

வெற்றி,

நீங்களும் நான் வைத்த மூன்னீட்டை ஐயா அவர்கள் ஆதரிப்பதைப் போல் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறீர்களா? அவர் அப்படி ஆதரிப்பதைப் போல் எழுதுகிறார் என்று நான் நினைத்தேன்/சொன்னேன் என்று நினைக்கிறீர்களா? இது இரண்டும் தவறான புரிதல்கள் என்று நான் சொல்கிறேன். இந்தப் புரிதல்கள் வவ்வாலுக்கு மட்டும் தான் ஏற்பட்டதா? உங்களுக்கும் மற்றவருக்கும் ஏற்பட்டதா? என்பதை அறிய ஆவல்.

சென்ற இடுகையில் ஆனானி நண்பர் சொன்னது போல் என் மூன்னீட்டை மறுக்கும் தொனியில் தான் ஐயா அவர்களின் இடுகைகள் நகர்வதாக நான் எண்ணினேன். அதனால் தான் இந்தத் தொடர் முடிந்த பின் என் கருத்திற்கு எதிரான ஆதாரங்கள் வைக்கப்பட்டிருந்தால் என் கருத்தை மாற்றிக் கொள்ளத் தடையில்லை என்று சொல்லியிருந்தேன்.

குமரன் (Kumaran) said...

ஐயா. தாங்கள் அடுத்தப் பகுதியை/பகுதிகளை இடுமாறு வேண்டிக் கொள்கிறேன். யார் தவறாகப் புரிந்து கொண்டார்கள், யார் சரியாகப் புரிந்து கொண்டார்கள் என்பது இப்போதைக்கு முடிவுக்கு வராததொன்று.

வெற்றி said...

குமரன்,

/* வெற்றி,
நீங்களும் நான் வைத்த மூன்னீட்டை ஐயா அவர்கள் ஆதரிப்பதைப் போல் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறீர்களா? */

இல்லை. நான் மேலே உள்ள எனது பின்னூட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

குமரன், நான் சொல் வந்தது என்னவென்றால் இராவண மன்னன் தமிழ் மன்னன் என்பதே எனது ஊரில் நான் கேள்விப்பட்ட செவி வழிக் கதை என்பதும், இலக்கியங்களில் இராவணனை அரக்கன் என்று சொல்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுமே. இக் கருத்தை நான் உங்களின் பதிவிலேயே மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
இதைத்தான் நான் வவ்வாலுக்கான பதிலிலும் சொல்லியிருந்தேன். அதாவது இராவண மன்னனை அரக்கன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று. ஆக இக் கருத்திற்குத் தான் எனது பதில்.


உங்களின் கருத்தை இராம்.கி ஐயா ஆதரிக்கிறார் என்றோ அல்லது எதிர்க்கிறார் என்றோ நான் சொல்ல முனையவில்லை.அது என் நோக்கமும் அல்ல.

வவ்வாலும் இராவணன் அரக்கன் இல்லை, திராவிட/தமிழ் மன்னனே என்கிறார். அதுதான் என் கருத்தும் [நான் அறிந்த செவி வழிக் கதை மூலம்].

மற்றும்படி, இராம.கி ஐயா அவர்கள் சொன்னது போல இராவண/இராமர் கதைகள் பல versions உள்ளது.

இலக்கிய நூல்கள் வரலாற்று நூல்கள் ஆகிவிடாது என்பதும் அதை மட்டும் வைத்து இராவணன் அரக்கன் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதும்தான் என் நிலைப்பாடு.

இராம்.கி ஐயா அவர்கள் நீங்கள் வைத்த முன்னீட்டை ஆதரிக்கிறார் என்றோ எதிர்க்கிறார் என்றோ நான் சொல்ல வரவில்லை. உண்மையில் எனது முன்னைய பின்னூட்டம் இராம.கி ஐயாவின் பதிவுடன் துளியும் தொடர்பற்றது.

விளக்கமாக எழுதாதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

வவ்வால் said...

அய்யா குமரன்,

என்ன இப்படி கஜினி குமரன் ஆகிட்டிங்க அதாங்க "ஷார்ட் டைம் மெமொரி லாஸ்" சொல்றேன்.

ராம.கி அவர்களின் பதிவின் துவக்கம் இது,

//"இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு" என்ற இடுகையில் திரு.குமரன் சங்க இலக்கியத்தில் வரும் இராம காதைச் செய்தியைச் (புறம் 378) சொல்லியிருந்தார். அரக்கன் என்ற சொல்லாட்சி அந்தப் பதிவிலும், அதன் பின்னூடங்களிலும் பெரிதும் பேசப்பட்டது. "அப்படி ஒரு கவனிப்பு அந்தச் சொல்லுக்கு ஏன் வந்தது?" என்று முதலில் எனக்குப் புரிபடவில்லை. "வௌவியவன் தமிழன் அல்லன், அரக்கனே! தமிழரையும், அரக்கரையும், (அதே போல தமிழரையும், குரங்குகளையும்) ஒன்றாய் எண்ணிக் குழம்பலாகாது" என்ற கருத்தும் அந்த இடுகையில் உணர்த்தப் பெற்றது. இந்த உணர்விப்பினுள், "அரக்கருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா?" என்ற கேள்வியும் கூடத் தொக்கி நிற்கிறது.//

இதனை ஒட்டி நீங்கள் போட்ட பின்னூட்டம் இது,

//இந்த இரு வருடங்களில் வலைப்பதிவுகள் படித்த போது தமிழரை 'அரக்கர்' என்றும் 'குரங்குகள்' என்றும் வடமொழியாளர்கள் கேவலமாக எழுதியிருக்கிறார்கள் என்ற செய்தி மீண்டும் மீண்டும் படித்ததில் இந்தப் பாடலை இந்த முறை படித்த போது அந்த இரு சொற்கள் கவனத்தை ஈர்த்தன. வடமொழியாளர்கள் கேவலமாக எழுதிவிட்டார்கள் என்றால் அந்த சொற்களையே கி.மு.விலோ கி.பி. தொடக்க நூற்றாண்டுகளிலோ எழுதப்பட்டப் பாடலில் அவை இராம காதையைச் சொல்லும் போது புழங்குகின்றதே என்ற கேள்வியை வைத்தேன். நீங்கள் சொன்னது போல் 'வௌவியன் தமிழன் அல்லன். அரக்கனே. தமிழரையும், அரக்கரையும் (அதே போல் தமிழரையும் குரங்குகளையும்) ஒன்றாய் எண்ணிக் குழம்பலாகாது' என்ற கருத்தோ 'அரக்கருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா?' என்ற தொக்கி நின்ற கேள்வியோ என் இடுகையில் சொல்லவும் கேட்கவும் எண்ணவில்லை. ஆனால் இடுகையில் எழுதியிருந்த முறையும் பின்னர் பின்னூட்டங்களில் கருத்துபரிமாற்றம் செய்து கொண்டவையையும் பார்க்கும் போது நீங்கள் சொன்னது போன்ற கருத்தும் கேள்வியும் என் இடுகையில் சொல்லப்பட்டன என்ற புரிதல் ஏற்படும் என்று புரிந்து கொள்கிறேன்.
//

சரி உங்கள் இடுகையில் எங்கே வெளாவியன் அரக்கன் தான் தமிழன் என இறுதி முடிவுக்கு வந்தோம், நீங்களே அதில் எழுதவும் கேட்கவும் நினைக்கவிலை என தான் சொல்லியுள்ளீர்கள். ஆனால் பின்னூட்டங்கள் மூலம் அம்முடிவுக்கு போனதாகவும் சொல்லிக்கொள்கிறீர்கள் , எப்படி?

உங்கள் பதிவில் அப்படி ஒரு கருத்தாக்கம் இருப்பதான முன்முடிவுடன் தனது கட்டுரையைதுவக்குகிறார் இராம.கி. அதில் மேலே சொன்ன பின்னூட்டம் போடுகிறீர்கள் அதில் கி.மு வில் சொன்னதாக இருப்பதால் அது வட மொழியாளர்களுக்கு முன்னதாக சொன்னதாக தான் இருக்கும் எனவும் இன்ன பிறவும் சொல்லி இருக்கிறீர்கள். இதெல்லாம் படிக்கும் ஒரு பாமரன் கூட புரிந்துக்கொள்வான்.

சரி விடுங்கள் "வலைப்பதிவு தமிழறிஞர்கள்" சொல்வதால் எல்லாம் தமிழ் நாட்டில் எதுவும் மாறிவிடாது , இதனை யாரும் ஒரு முன்னீடாக கூட இலக்கிய உலகில் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. நான் தான் ஆற்றாமையில் வந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இப்படியே நானும் திருப்பி திருப்பி எத்தனை தடவை தான் காபி& பேஸ்ட் போடுவது!

எல்லோருக்குமே இங்கு சொல்லப்பட்டு வருதன் அபத்தம் புரிந்து இருக்கும் , நட்பு மரியாதைகருதி அமைதிக்காக்கிறார்கள். அவருக்கு அவரவர் கருத்து , சொல்லலாம். எனவே சொல்வது உங்கள் உரிமை. அதே போல் மாற்றுக்கருத்து சொல்லவும் எனக்கும் உரிமை இருக்கிறது என்பதால் சொல்லியுள்ளேன். மற்றபடி இதில் வேறெதுவுமில்லை!

குமரன் (Kumaran) said...

வவ்வால். நானும் இராம.கி. ஐயாவும் சொன்னதில் அபத்தம் இருக்கிறதோ இல்லையோ ஐயா தன் கருத்தை முழுவதும் சொல்லி முடிக்கும் முன்னரே என் பின்னூட்டத்தையும் தவறாகப் புரிந்து கொண்டு அதற்கு தோலை உரிக்கிறேன், இறுமாப்பு என்றெல்லாம் பின்னூட்டம் இட்டதன் அபத்தம் தெளிவாகத் தெரிகிறது. ஐயா முழுவதும் பேசி முடிக்கட்டும். நம் அபத்தப் பேச்சுகளை என் பதிவில் வைத்துக் கொள்வோர்ம்.

இராம.கி said...

அன்பிற்குரிய V,

நான் கிராதர்கள் மலைக்குடியினராய் ஆனார்கள் என்பதை மறுக்கவில்லை; என் இடுகையிலேயே சொல்லியிருக்கிறேன்.

கிராத் என்ற சொல்லின் தொடக்கத்தைக் கருமை நிறத்தை வைத்து இனங்காட்டியது இராகுல சங்கிருத்தியாயன். கங்கைக்கே கிராத் என்ற பழையபெயர் இருக்குவில் சுட்டியிருக்கிறது என்று சொன்னேனே, அதுவும் இராகுல சங்கிருத்தியாயன் சொல்வது தான். கங்கை என்ற சொல்லுக்கும் பொருள் கருப்பு ஆறு தான். [கங்கு என்ற தமிழ்ச்சொல் கருப்பு என்ற நிறத்தையும், கங்குல் என்பது கருமை சூழ்ந்த இரவையும் குறிக்கும். இந்திய நாட்டின் பல ஆற்றுப் பெயர்கள் ஆரியம் அல்லாத வேரைத் தெளிவாகக் காட்டுகின்றன.]

இராகுல சங்கிருத்தியாயன் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான "வேதகால ஆரியர்கள்" என்ற பொத்தகத்தில் (NCBH வெளியீடு) கிராதர் / கிராத் பற்றி எழுதியிருக்கிறது. பொதுவாக இராகுல சங்கிருத்தியாயனின் நூல்கள் எல்லோராலும் மதிக்கப் படுபவை. அதில் செய்திப் பிழை இருக்க வாய்ப்பில்லை. படித்துப் பாருங்கள்.

இருக்குவேதம் நீங்கள் படித்திருப்பீர்கள். அதில் பல்வேறு மண்டலங்களிலும் ஆரியர் அல்லாதாரைக் "கருநிறத்தவர்" என்றும் அவரை வெல்லவேண்டும் என்று தங்களின் தெய்வங்களுக்கு வேண்டிக் கொண்டும் சொலவங்கள் இருக்கும். குறிப்பாக சம்பரனை வெற்றி கொண்ட நிகழ்வை ஒட்டிய சொலவங்களைப் பார்ப்பது நல்லது.

கிராதரை மோன்கெமேர் என்ற குடும்பத்தோடு தான் மாந்தவியலில் சேர்க்கிறார்கள். இராகுல சங்கிருத்தியாயனின் கூற்றும் அதே. வேண்டுமானால் தருமானந்த கோசாம்பியையும் படியுங்கள்.

ஒவ்வொரு சொல்லுக்கும் முதல்வழிப் பொருள் என்பது இருக்கும்; அது விதுமையில் உருவாகும்; பின்னால் பொதுமைப்பட்டு மற்ற பொருண்மைகளையும் குறிக்கும். நாளாவட்டத்தில் முதல்வழிப் பொருள் பலருக்கும் விளங்காமல் போகலாம்; இரண்டாவது மூன்றாவது பொருண்மைகளே அகரமுதலிகளில் ஏறி நிற்கலாம். காட்டாக, தமிழில் ஒரு சொல் சொல்லுகிறேன். எண்ணெய் என்பதன் முதற்பொரூள் எள்ளில் இருந்து கிடைத்த நெய். இன்று எண்ணெய் என்ற சொல் எல்லாவித நிலத்திணை வித்துக்களில் இருந்தும், புவியில் கல், பாறை போன்றவற்றில் இருந்தும், பெறக்கூடிய ஒரு பிசிபிசுப்புப் பொரூளை உணர்த்துகிறது. சொற்பிறப்பியல் விளக்கும் அகரமுதலியை அன்றி எள் நெய் என்ற முதற்பொருள் விளக்கப் படாது. இதுபோல ஆயிரக் கணக்கில் தமிழில் சொற்கள் உள்ளன. வடமொழியிலும் உண்டு.

நண்பரே! இன்னும் ஆழ்ந்து பாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

திரு.வவ்வால்,

பாராட்டை எதிர்பார்த்துக் கொண்டு நான் வலைப்பதிவுக்கு வரவில்லை. அதே போல உங்கள் உடனேற்பையும் (அங்கிகாரத்தையும்) எதிர்பார்த்து இங்கு காத்திருக்கவில்லை.

"சூடு வை; தோலுரி" என்று வாய்க்கு வந்தபடி பேசவேண்டியது; அப்புறம் அதைக் "கொஞ்சம் காட்டம்" என்றும் சொல்ல வேண்டியது; நல்லது. "அவை நாகரிகம்" என்று ஒன்று இருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இனி எதிர்பார்க்க மாட்டேன். எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி நடக்க எனக்கும் தெரியும்.

இந்த வலைப்பதிவு இராம.கி. என்பவரால் எழுதப் படுவது. தான் இடும் தலைப்பில் தான் கருதும் புலனங்களைத் தன் நோக்கில் அவர் எழுதுகிறார். அதில் உள்ளே புகுந்து "என்ன இது; நான் எதிர்பார்க்கும் கருத்தைச் சொல்லாமல் இருக்கிறாய், உடனே சொல்லு" என்றெல்லாம் நாட்டாமை பண்ணுவதற்கு இது உங்கள் இடமல்ல. அதைப் புரிந்து கொள்ளுங்கள். I write what I want. Period. [I answer to genuine queries; I accept my faults when expressed logically. The debates have to have some meaning here; I do not encourage meaningless dogmatic discussions.]

"அரக்கருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா என்றும், தொக்கி நின்ற கேள்வியோ என்றும் இடுகையில் சொல்லவும் கேட்கவும் எண்ணவில்லை." என்று திரு.குமரன் தெளிவாகச் சொல்லியிருந்தார். இதில் உங்களுக்குப் புரிதல் பிழை ஏற்பட்டிருந்தால் அதை உங்கள் பின்னூட்டில் நேரடியாக முதலிலேயே கேட்டிருக்கலாம். அதை விடுத்துப் பூடகமாகப் பேசி, எதிரில் நிற்பவரிடம் ஏதேதோ பேசி, பல்வேறு உள்நோக்கங்களைக் கற்பனையில் சொடுக்கிக் காட்டி......

உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ளுகிறேன். உங்களோடு கருத்தாடல் செய்வது வீண்வேலையாய்த் தெரிகிறது. தலைகீழாய்த் தொங்கிக் கொண்டு உலகை உற்று நோக்குகிறவருடன் என்ன பேச முடியும், சொல்லுங்கள்? "நானும் மற்றவர்களைபோல உள்ளே என்ன இருக்கென்றே படிக்காமல் அருமை, அபாரம் என சொல்லிவிட்டு, சொந்த கருத்து ஒன்றையும் சொல்லிவிட்டு போய் இருந்தால் இந்த திரிப்பு அப்படியே தானே இருந்து இருக்கும்" என்று சொன்னீர்கள் பாருங்கள்; மிக அருமை :-). "நான் மட்டும் தான் அறிவுள்ளவன், மற்றவர்கள் எல்லாம் படிக்காமல் சொல்லுகிறார்கள்" என்று பொருள்படும் இந்தக் கூற்று கூட, உடன் வாசகர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பைக் காட்டுகிறது. அருமையான நாட்டாமை உணர்வு :-)

"நம்ம பல்கலைக்கழக பாட புத்தகங்கள் எல்லாம் ஏன் அந்த வறட்டுத்தனமான காலநிலையையே சொல்கின்றன, இன்னும் இது வரை அச்சில் வந்த பல புத்தகங்களிலும் அதே கால நிலைதான் உள்ளது" என்று நீங்கள் சொல்லுவது உங்களுக்குப் பல்கலைக் கழகப் பொத்தகங்களின் நிலை பற்றித் தெரியவில்லை என்றே காட்டுகிறது. இன்றைக்கு பல்கலைக் கழகத் தமிழ் வரலாற்றுப் பொத்தகங்களில் இருப்பதெல்லாம் 1940-50களில் கி.அ. நீலகண்ட சாத்திரியார் காலத்தில் இருந்த புரிதல்களை மட்டுமே சொல்லுகின்றன. அடுத்து வந்து புதிய ஆய்வுகள் எல்லாம் இன்னும் சலிக்கப் பட்டு, முடிவில் பொத்தகங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகவே ஏற வேண்டும். இந்த நடைமுறை மிகவும் மெதுவான செலுத்தம் (process). நான் நீண்டு சொல்லிக் கொண்டு இருப்பதை விட ஏதேனும் ஒரு வரலாற்றுப் பேராசிரியரைப் பார்த்து, "ஆய்வு முடிவுகள் எப்படி, எவ்வளவு காலம் கழித்து பாடத் திட்டத்துள் வருகின்றன" என்று கேளுங்கள். உங்களுக்கு ஒருவேளை புரியலாம்.

"இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு" என்று இடுகைகள் பலவற்றிலும் சொல்லும் இந்தப் பதிவில் தான் கருத்தைத் திணிக்கும் போக்குத் தென்படுகிறதோ? சரிதான், நீங்கள் இந்தப் பதிவைப் படித்துப் புரிந்து கொள்ளும் இலக்கணம் வெகு தெளிவு. :-)

சிலம்பில் சமகால அரசர்களாக செங்குட்டுவனையும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனையும், கரிகாலனையும் காட்டியிருக்கிறீர்கள். அது தவறு. சிலம்பைக் கூர்ந்து படித்தால் கரிகாலன் சமகாலம் இல்லை என்று புரியும். இந்தச் செய்தியை பற்றி இதே பதிவில்

http://valavu.blogspot.com/2006/06/blog-post.html

என்ற இடுகை இருக்கிறது. அதை படியுங்கள். (வழக்கம் போல நீங்கள் ஒப்ப மாட்டீர்கள்; நீங்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தொங்குபவர் ஆயிற்றே?) செங்குட்டுவன் காலத்தில் சோழநாட்டை ஆண்ட அரசன் பெயர் பெருங்கிள்ளி. அப்படித்தான் இளங்கோ அடிகள் சொல்லுகிறார். "இவன் ஞாயிற்றுச் சோழனின் மகன். செங்குட்டுவன் தாய் நற்சோணையின் தம்பி. இந்தப் பெருங்கிள்ளியைப் பெருநற்கிள்ளி என்றும் புலப்படும். பெரும்பாலும் இவன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளி என்றே பல தமிழறிஞரும் முடிவு செய்கின்றனர்" என்று நான் அங்கு சொல்லியிருப்பேன். இந்தக் கிள்ளி பற்றிய ஆய்வில் மாற்றம் இருந்தால் அதைப் பற்றிச் சொல்லுங்கள். ஆனால் உறுதியாகக் கரிகால் வளவன் கிடையாது.

"இதில் ஒரு மன்னரின் காலம் தெரிந்தால் போதும். எனவே இவர்கள் மூவரின் காலம் வைத்துப்பார்த்தால் கி.பி 150 அளவிலே வரும். இங்கு கயவாகு கூட தேவை இல்லை. ஆனால் வறட்டுத்தனமாக கயவாகு - செங்குட்டுவன் என பிடித்து கொண்டு இருப்பது யாரோ?" என்று எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்குத் தமிழக வரலாறு எதை ஆதாரமாக வைத்து எழுதப் பட்டிருக்கிறது தெரியவில்லை என்றே எண்ண வைக்கிறது வெறுமே வறட்டுத் தனமாகப் நீங்கள் பேசிக் கொண்டிருப்பதற்கு மாறாக, பேர் பெற்ற வரலாற்று ஆசிரியரான நீலகண்ட சாத்திரியாரைப் போய்ப் படித்தால் நல்லது. "எதையும் படிக்க மாட்டேன்; ஆனால் வெறும் நம்பிக்கையின் பேரில் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பேன்" என்றால், அப்புறம் உங்களோடு உரையாடுவதற்கே மற்றவருக்குச் சலித்துப் போகும். வெறுமனே நான் தொண்டையை உரத்துக் கொண்டிருப்பதில் பலனில்லை.

"ஆதிச்ச நல்லூரில் கிடைத்தது கரிகாலன் காலம் சொன்னாற் போல" என்று எழுதியுள்ளீர்கள். நான் சொன்னதைத் திரும்பவும் படியுங்கள். அப்படிச் சொன்னேனா? "குதிரைக்குக் குர்ரம் என்றால் யானைக்கு அர்ரம்" என்று சொல்லுவீர்கள் போலிருக்கிறது. அகழாய்வுகள் எப்படி வரலாற்று வரைவிற்குப் பயன்படுகின்றன என்பதை நான் உங்களுக்கு விளக்குவதற்கு மாறாக, "தொல்லியல் நோக்கில் சங்ககாலம்" என்ற பொத்தகத்தையாவது படியுங்கள். அதையும் படிக்க உங்களுக்குப் பொறுமையில்லை என்றால், "வறட்டுத் தனம் (dogmatism), விதண்டாவாதம் போன்றவற்றிற்கு மட்டும் குறைச்சல் இல்லை" என்றுதான் சொல்லவேண்டும்.

வேறென்ன சொல்ல?

இராம.கி.

இராம.கி said...

திரு.வவ்வால்,

"நீங்கள் சொல்வது புதிதாக ஒரு ஆய்வு நடந்து இருக்கிறது, சரி. ஆனால் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றா? எய்ட்சுக்கு மருந்து கண்டு பிடித்தேன் என சொல்லும் சித்த மருத்துவர்கள் உங்களை விட பலமாக சவால் விடுகிறார்கள் :-)) "

என்ற கருத்து தன்மயமானது; வேடிக்கையானது கூட. உங்களுக்குத் தெரிந்த அளவுகோலையே வைத்துப் பேசிக் கொண்டிருந்தால் எப்படி? உங்களுக்குத் தெரியாத துறையில் புதுச் செய்தி வந்திருக்கிறது என்றால் "ஒன்று அதைப் படிக்கவேண்டும், இல்லையென்றால் அது என் துறைக்கு மீறியது; அதைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை" என்று சொல்ல வேண்டும். அதை விடுத்து "கருத்துக் கந்தசாமி" கணக்காக, முன்னிகை (comment) வெளியிட்டு, தன்னை எல்லாம் அறிந்த ஆளாகக் காட்டுவது பலநேரம் முட்டாள்தனத்தில் கொண்டுவந்து விடும். இது போன்ற திண்ணைப் பேச்சு வெற்று வேட்டுகள், பொதுவில் கேட்டுச் சிரித்துப் போவதற்கு வேண்டுமானால் பயன்படும். சித்த மருத்துவம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாததால், அவர்கள் சொல்லும் மருந்து வேலை செய்யுமா, செய்யாதா என்று நான் முன்னிகை செய்ய முடியாது.

என் தொனியில் "நான் சொல்றேன்ல, அப்புறம் என்ன குறுக்கு கேள்வி?" என்ற முற்றாண்மை (எதேச்சதிகாரம்) தெரிவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். தெரிந்ததை அடையாளம் காட்டுவதும், "அதைப் படியுங்கள்" என்று சொல்லுவதும், முற்றாண்மை என்றால், மேற்கொண்டு உங்களிடம் பேசிப் பயனில்லை. "நீங்கள் எல்லாம் தெரிந்த ஞானி" - அவ்வளவு தான்.

பின்னூட்டம் படிக்காமலே வெளியிடும் பழக்கம் கொண்டவர் என்று என்னைச் சொல்லியிருக்கிறீர்கள். அது உங்கள் முடிவு. என்னுடையது அல்ல. நான் படிக்கிறேனா, படிக்காமல் வெளியிடுகிறேனா என்பது எனக்குத் தெரியும்.

"நீங்கள் எதுவும் மறுப்பும் சொல்லவில்லை. நான் கேட்டபிறகு தற்போது தான் அப்படி இல்லை என சொல்லியுள்ளீர்கள்! :-))" என்று எழுதுவதைப் பார்த்தால், வவ்வால் என்பவரின் கற்பனைக் கூற்றுகளுக்கு மறுமொழி சொல்ல மட்டுமே நான் இடுகைகள் இட்டுப் பதிவு பண்ணுகிறேன் போலிருக்கிறது.

"முந்தைய பின்னூட்டத்திலும் அவர் சொன்னதற்கு மறுப்பு எதுவும் இல்லை என்பதால் அது உங்களுக்கும் ஒப்புதல் போல என்னும் கருத்தில் தான் நானும் சொல்லி இருப்பேன்." என்ற கூற்றே, "எவ்வளவு தந்திரமாக வழுவிக் கொண்டு போகிறீர்கள்?" என்று காட்டுகிறது. "ஒப்புதல் போல" என்ற கருத்தில் சொல்லியிருப்பாராம்; ----- எங்கள் ஊரில் இன்னும் ஒரு சொலவடை உண்டு; "கேப்பையில் நெய்வடிகிறதென்றால் கேட்பாருக்கெங்கே புத்தி போயிற்று?" உங்களின் நிழல் போராட்டங்களுக்கு உங்கலை நீங்களே மெச்சிக் கொள்ளலாம். அட்டைக் கத்தியைப் பரிசு கொடுத்துக் கொள்ளலாம். அடுத்தடுத்து ஓரிரு பத்திகளில் "இருப்பேன்" என்று சொல்லுபவற்றைப் படித்தால், எல்லாவற்றையும் காலம் மாற்றிச் சொல்லுவது கூட ஒரு கலை என்று புரிந்து கொள்ளுகிறேன்.

நான் பின்னூட்டு அளிப்பது எனக்குக் கிடைக்கும் நேரத்தையும், பணியழுத்தத்தையும் பொறுத்தது.

"அவர்களின் ஆய்வுக்கு என்ன ஆதாரம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்" என்று சொல்லுவதன் மூலம் நீங்கள் வரலாற்று ஆய்விற்குக் கொடுக்கும் மதிப்பும், உங்கள் வறட்டுத் தனமும் வெளிப்படுகிறது. "நீ யாரைச் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்" என்ற பொருளூம் உடன்வருகிறது. "நீங்கள் பிடித்த முயலுக்கு மூணு கால் தான் அண்ணாச்சி. இதிலொரு அய்யப்பாடா? வாழ்க.

அகராதிகள் குப்பை என்று எண்ணுபவன் நான் இல்லை. அது உங்கள் எண்ணமாய் இருக்கலாம். "அகராதிகளிலும் பிழை இருக்கலாம்" என்று சொல்லுவது எனக்கு உடன்பாடு.

உங்களுக்கும் இரண்டு விண்ணப்பங்கள்.

1. தலைக்கீழாகத் தொங்கிக் கொண்டு படிக்கும் போது, உங்கள் பார்வையிலேயே படிக்காதீர்கள். [உங்கள் பார்வைக்கும் மீறிய பார்வைகள் உண்டு. அதைப் புரிந்து கொள்ள, மன அகலம் வேண்டும். "நான் தான் அறிவாளி, மற்றவன் முட்டாள் என்பது போன்ற புரிதல், காட்டாக, படிக்காமலே கருத்துச் சொல்லும் உங்கள் போக்கு, "அவர்களின் ஆய்வுக்கு என்ன ஆதாரம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்" என்ற புரிதல், அகந்தைக்கே வழிவகுக்கும். மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்தால், உலகம் மஞ்சளாகத் தான் தெரியும்.]
2. அதோடு, இந்தக் "கருத்துக் கந்தசாமி" வேலையை விட்டொழியுங்கள்.

இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய வெற்றி,

"இராவணன் தமிழ் மன்னன்; சிவ வழிபாட்டாளன்" என்பது உங்கள் ஊரில் உள்ள செவிவழிக் கதை என்று அறிவேன். இராம காதை என்பது ஒரு கதை, தொன்மம்; அதில் பல்வேறு வேற்றங்கள் உண்டு.

தமிழன் என்று வகைப்பாடும் (classification), அரக்கன் என்னும் வகைப்பாடும் (இதே போல இயக்கர், நாகர்) வெவ்வேறு பரிமானம் கொண்டவை. இவற்றிற்கு இடையே உள்ள ஊடாட்டுக்கள் (interactions) பற்றிச் சொல்ல முற்பட்டுத்தான் இந்த இடுகையை எழுதத் தொடங்கினேன். (இரரமர் சேது பற்றியது இன்னொரு பார்வை; காட்டாக இராம காதையில் வரும் இலங்கை உங்கள் ஈழத் தீவே இல்லை என்றுதான் கதையில் வரும் தரவுகள் சொல்லுகின்றன.) சட்டென்று சுருக்கமாய் நாலுவரியில் எழுதினால் அதன் முகன்மை (importance) புரியாது போய்விடலாம் என்று நீண்ட விளக்கமாய் எழுதினேன். இன்னும் முடிக்கக் கூட இல்லை. அதற்குள் பரமார்த்த குரு கதையில் வருவது மாதிரி இங்கே ஒரு நிலை. தெரியாததைத் தெரிந்து கொள்ள விழையாத, எல்லோரையும் அச்சடிப்பு வகைப்பாட்டிற்குள் (stereotype classification) போட்டே பழக்கப் பட்ட, கொஞ்சமும் பொறுமையில்லாத, எதையும் "எடுத்தேன், கவிழ்த்தேன்" என்று போட்டுடைக்கும் ஓர் அவக்கரக் குடுக்கைக்காரரால், நேரத்தைக் கெடுத்துக் கொண்டு, குழாயடிச் சண்டை போடும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.

"இராவணன் திராவிடன் என்று இலக்கியத்தில் பல இடங்களிலும் சூசகமாக சொல்லியுள்ளார்கள்." என்று தான் தோன்றித்தனமாக, வெற்றுவேட்டாகச் சொல்லும் ஒருவர், இந்த இடுகையை ஆழ்ந்து படிப்பார் என்று எதிர்பார்ப்பது தவறு தான். பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டே மூடநம்பிக்கையை வளர்த்துக் கொண்டவர்கள் வேறு எப்படித்தான் மறுவினை செய்வார்கள்?

திரு. வவ்வாலோடு கருத்தாடல் செய்வது இனி வீண்வேலை என்றே கருதுகிறேன். தமிழர் என்ற வகைப்பாடும் இவர் புரியமாட்டார்; அரக்கர், இயக்கர், நாகர் என்ற வகைப்பாடும் இவர் புரிய மாட்டார். மற்றவரைச் சொல்லவும் விடமாட்டார். இது போன்ற வறட்டுத் தனங்கள் நம்மைச் சுற்றிய, தமிழரோடு தொடர்பு கொண்ட நநடுகளிலும் நடந்திருக்கிறது. ஏதொன்றையும் சொல்ல விடாமல், 8 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய பழைய நாகரிகச் சொச்சங்களை அழித்து, ஒற்றைப் பரிமானத்தில் வரலாற்றை அடையாளம் காட்டும் மலேசியாவும், இதே போல வேறு பரிமானத்தைப் போக்கி எடுக்கும் சிங்களமும், அதே போல பண்டை எச்சங்களை முற்றும் ஒழித்த இந்தக் கால மாலத் தீவும் போல, ஓர் ஒற்றைப் பரிமான குமுகாயத்தைப் படைத்து, வரலாற்றை எழுத இவர்கள் வருகிறார்கள், போலும்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

andru vellaikaran pugaivandiyai indiayaviru konduvanthapothu track poduvatarkkaga idikkapatta koillgal ethanai? masudikal etthanai?
appothu intha palamaivathigal engu ponargal!?

Sridhar V said...

அன்பிற்குரிய இராம கி ஐயா அவர்களுக்கு,

பல அரிய தகவல்கள். உங்கள் பதிவுகளும் பின்னூட்டங்களும் பல புதிய சன்னல்களை திறக்கின்றன.

சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கருத்து வேறுபாடு இல்லதிருக்க இது கணித தேற்றங்கள் அல்லதான். ஆனால் உங்கள் இடுகைகளுக்கு பின்புலமாக இருக்கும் தகவல்களும், புரிதல்களும், சான்றுகளும் நிச்சயம் ஒரு அரிய பொக்கிஷம்.

உங்கள் பணி (என்னை பொருத்த வரையில்) மிகவும் அரிதானது. தொடர்ந்து எழுதுங்கள்.