Thursday, July 14, 2005

துயில்

அமீரகத்தில் இருக்கும் நண்பர் சாபு முன்பொரு சமயம் நித்திரை, உறக்கம், தூக்கம் போன்றவை பற்றிக் கேட்டிருந்தார். மடற்குழுவில் எழுதினேன். பின்னால் அதை வாசன் கூட மன்றமையத்தில் புறவரித்திருந்தார் (forward). இன்று மடிக் கணியைத் துழாவிக் கொண்டிருந்த போது பழையது கிடைத்தது. சிலருக்குப் பயன்படும் என்று மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன். இனி உங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

அன்புள்ள நண்பர் சாபுவிற்கு

நீங்கள் எழுதியது போக இன்னும் சில சொற்கள் இருக்கின்றன. துயில், பள்ளி, ,துஞ்சல், அனந்தல், கிடை, படை, சயனம், கனவு, கண்படை, கண்வளரல், கண்ணடைத்தல், கண்ணயர்தல், கண்படுதல், கண்முகிழ்த்தல் என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். உறங்குவது என்பதும், இருட்டு, கிடத்தல், படுத்தல், அயர்வு, சோர்வு, வாட்டம், தங்குதல், அடைதல், அணைதல், தாமதம், சோம்பல், சாவு போன்ற கருத்துக்களும் ஒன்றோடு ஒன்று இழைந்தே தமிழில் பயிலுகின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. ஒரு இடத்தைப் பள்ளும் போது (தோண்டும் போது) பெரிதாகச் செய்தால் பள்ளம். சிறிதாகச் செய்தால் பள்ளி(ல்). நாளாவட்டத்தில் இந்த வேறுபாடு குறைந்து போய், ஏன் மாறிக் கூடப் போய், குகைக்கு மற்றொரு சொல்லாகவே 'பள்ளி' என்பது ஆயிற்று. நாகரிகம், மதங்கள் வளர்ந்தபிறகும் பள்ளிகள் மனிதனின் வாழ்வில் இருந்தே வந்தன. குராப்பள்ளி, சிராப் பள்ளி இவைகள் எல்லாமே குகைகள் இருந்ததையும், அதில் ஒரு சாரார் வசித்து வந்ததையும் தெரிவிக்கின்றன. இதே பள்ளி, பின் சமயக் காலத்தில் சமணப் பள்ளி, புத்தப்பள்ளி, பள்ளிவாசல் எனப் புதிய மதத்தார் கோயில்களுக்கும் பயன்பட்டது. இந்தச் சமயப் பள்ளிகளில் கல்வியும் கற்றுக் கொடுக்கப் பட்ட போது, கல்விச் சாலையும் பள்ளியாயிற்று.

2. காலையெல்லாம் வேட்டையாடி தன் உண்பசி தீர்த்து அயர்ந்து, சோர்வுற்று மாலையில் திரும்பும் ஆதிகால மனிதனுக்குப் பொழுது சாய்ந்தால் போக்கிடம் என்பது இருட்டும், குவையும், கொடியும் தானே! என்னதான் தீயின் அண்மையில் இருந்து விழிப்பைக் கூட்டிக் கொண்டாலும், சோர்வும், அயர்ச்சியும் கண்ணைச் சொக்கிக் கொண்டுவரும் தானே! பள்ளப் பட்ட குகையில் கண்ணை மூடிக் கொண்டு கிடக்கும் போது (கொடிய, ஆனால் சிறிய, பாம்புகள் போன்ற ஊருயிரிகள் தன்னைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக கல்லை வெட்டிச் செய்து கொண்ட படுக்கைகளில் படுக்கும் பழக்கம் வந்தது. இந்தப் படுக்கைகளும் பள்ளியென்றே அழைக்கப் பட்டன. பள்ளில் இருந்து தோன்றியதே படுக்கை. அதலம் என்றாலும் பள்ளம் தான் (பா அதலம் = பாதாலம் (=பாதாளம்)). பள்ளி எனும் சொல் அதன் நீட்சியில் தூக்கத்தையும் குறித்தது.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அடைந்தான்;
கன இருள் அகன்றது; காலையம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்;
வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடும் முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்;
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே!

பள்>படு>படுகு>படுக்கு>படுக்கை. (பள்ளப்பட்ட இடத்தில் தான் படுத்தனர் போலும்.)

3. நிதலம் என்பது கீழ் உலகங்களில் ஒன்று. (இன்றைய நெதர்லாந்து இதே பொருளில் தான். நெதர் என்றால் அந்த மொழியிலும் பள்ளம், தாழ்ந்தது என்றே பொருள்.) நித்திக் கிடப்பது நித்தை. நித்தை வடமொழியில் நித்திரை ஆகும்.

4. இதே போல கீழே கிடந்தது கிடை. (என்ன ஆச்சு, ஒரே கிடையா இருக்கா? மருத்துவர் கிட்டே போகலாமா?)

5. சாய்ந்து இருந்தது சயனம். (பெருமாள் திருவரங்கத்திலே கிடந்த திருக்கோலம். தெற்கே பார்த்து சயனம்)

6. படுப்பது படை என்று அறிவது மிக எளிது..

7. அதே போல ஒடுங்கிக் கிடப்பது, உறங்கிக் கிடப்பது ஆகும்.

8. கொடிகள் மற்றும் மரக்கிளைகளில் தொங்கித் தூங்கியது தூக்கம் (பிள்ளை தாலில் தொங்கும் போது தூங்கத் தானே செய்கிறது.)

9. இனி அனந்தல் கொஞ்சம் சரவலானது. கண்ணை மூடினால் இருட்டு எனும் போது இருட்டே உறக்கத்தின் ஒரு கூராய்ப் போனது.

அல் = இரவு, இருள்.
அந்,அன் = இன்மை
அந்தம் = உள், மறைவு, அந்தப்புரம் - உள்ளே இருக்கும் புரம் அல்லது கட்டு, மறைவான கட்டு. நம்பூதிரிகள் வீட்டிற்குள்ளே மறைவாக அந்தப்புரங்களில் இருக்கும் கணம் அந்த கணம்>அந்தர்ஜனம் என்று ஆகும்.
அத்தமித்தல் - மறைதல், படுதல், உட்புகுதல், அற்றுப்போதல், இல்லாமற் போதல்
அன்+அந்தல் = அனந்தல், இதுவும் உறக்கம் தான். திருவனந்த புரத்தில் அறிதுயில் கொண்டு படுத்துக் கிடக்கும் அனந்தனைத் தெரியாதார் யார்? இந்த அறிதுயில் ஒரு நுண்மையான சொல். அவன் முற்று முழுதாக அறிந்து கொண்டே துயில்வதாக ஒரு பாவனை.

10. கனவு என்பது இருட்டு என்னும் பொருளில் கல் ஏனும் வேர்ச்சொல்லில் மலர்ந்தது. நாளாவட்டத்தில் dream என்ற இன்றையப் பொருளிற்கு நீண்டிருக்கிறது.

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற்கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்!

11. கண் வளரல் என்பது சுவையான சொல்லாட்சி. ஒரு அருமையான சப்பானிய ஐக்கூ பல ஆண்டுகள் முன்படித்ததேன். அடிகள் நினைவில் இல்லை. பொருள் ஞாபகத்தில் இருக்கிறது. அதில் தலைவன் கல் வளருவதைப் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒரு முரண் வரும். அப்படிப்பட்ட ஓர் உணர்வில் வருவது தான், கண் வளரல். (கண் எப்படித் தூக்கத்தின் போது வளரும்? பிள்ளையை மடியில் வைத்து ஆராரோப் போட்டால் வளராமல் என்ன செய்யும்?) இது பெரும் பாலும் குழந்தைகளைத் தொட்டிலில் போட்டுத் தூங்க வைப்பதற்குப் பயன்படும். ஒரு நாட்டுப்புறப் பாடல்:

கரும்புருகத் தேனுருகக்
கண்டார் மனமுருக,
எலும்புருகப் பெற்றகண்ணே!
இலக்கியமே! கண்வளராய்!

12. கண்ணடைத்தல் என்பது சேர்ந்துபோய் எழுகவொண்ணாதபடி கண் செருகிக் கொண்டு வருவது.

13. கண்ணயர்தல் கிட்டத் தட்ட அதே பொருளில் தான்.

14. கண்படுதல் என்பது திட்டிப் பொருளாக மட்டுமல்லாது தூங்குவதற்கும் ஓரோவழி பயன்படுகிறது. உடம்பு படுவது போலக் கண்ணும் படுகிறது, பதிகிறது.

15. கண்படை, கண்படுதலின் தொடர்ச்சியே.

16. கண்முகிழ்த்தல் என்பது 'தோன்றுவது' என்ற பொருளில் அல்ல. 'மூடுவது' என்பது அமங்கலம் என்று கருதி எதிர்ச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். எங்கள் பக்கம் வீட்டிற்குள் சாமி அறையில் உள்ள விளக்கை 'அணை'யென்று சொல்ல மாட்டர்கள். அதை இடக்கர் அடக்கலாக, 'விளக்கை நல்லா வை' என்று சொல்லுவார்கள். (இன்னொரு வகையில் பார்த்தால் நல்லுதல் என்ற வினை கருத்தல் என்ற பொருளும் கொள்ளும். நல்லா வை என்னும் போது கருக்க வை என்ற பொருள் கொள்ளும்.) அது போலத்தான் இந்த கண் முகிழ்த்தலும்.

17. எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். இந்தத் துயில், துஞ்சல் மட்டும் தான் கொஞ்சம் சரவல். இரண்டிற்குமே வேர் துய் என்பது தான். துயக்கு, துயங்குதல், துயரம் எனப் பல சொற்கள் சோர்ந்து போவது என்ற பொருளிலேயே வழக்கில் உள்ளன. அதே பொழுது துயல்தல் என்ற சொல் அசைதல் என்ற பொருளில் வருவதைப் பார்க்கும் போது நமக்குக் கொஞ்சம் வியப்பு வருகிறது.

துயல்= அசைதல்
துயில் = ஆழ்ந்த அசைவில்லாத நிலை.

இது எப்படி என்றால், மண்= செறிந்த நிலை, மணல் என்பது மண் அல்லாதது= செறியாதது என்பதைப் போல. இங்கே ஒரு உயிர் எழுத்து மாற்றத்தில் மாறுபட்ட பொருள்கள் கிடைக்கின்றன.

18. துஞ்சல் என்பது துயிலின் நீட்டமே.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

Тø

«Á£Ã¸ò¾¢ø þÕìÌõ ¿ñÀ÷ º¡Ò Óý¦À¡Õ ºÁÂõ ¿¢ò¾¢¨Ã, ¯Èì¸õ, àì¸õ §À¡ýȨŠÀüÈ¢ì §¸ðÊÕó¾¡÷. Á¼üÌØÅ¢ø ±Ø¾¢§Éý. À¢ýÉ¡ø «¨¾ Å¡ºý ܼ ÁýȨÁÂò¾¢ø ÒÈÅâò¾¢Õó¾¡÷ (forward). þýÚ ÁÊì ¸½¢¨Âò ÐÆ¡Å¢ì ¦¸¡ñÊÕó¾ §À¡Ð À¨ÆÂÐ ¸¢¨¼ò¾Ð. º¢ÄÕìÌô ÀÂýÀÎõ ±ýÚ Á£ñÎõ þí§¸ À¾¢× ¦ºö¸¢§Èý. þÉ¢ ¯í¸û Å¡º¢ôÀ¢üÌ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

«ýÒûÇ ¿ñÀ÷ º¡ÒÅ¢üÌ

¿£í¸û ±Ø¾¢ÂÐ §À¡¸ þýÛõ º¢Ä ¦º¡ü¸û þÕ츢ýÈÉ. Тø, ÀûÇ¢, ,Ðïºø, «Éó¾ø, ¸¢¨¼, À¨¼, ºÂÉõ, ¸É×, ¸ñÀ¨¼, ¸ñÅÇÃø, ¸ñ½¨¼ò¾ø, ¸ñ½Â÷¾ø, ¸ñÀξø, ¸ñÓ¸¢úò¾ø ±É þôÀÊî ¦º¡øÄ¢ì ¦¸¡ñ§¼ §À¡¸Ä¡õ. ¯ÈíÌÅÐ ±ýÀÐõ, þÕðÎ, ¸¢¼ò¾ø, ÀÎò¾ø, «Â÷×, §º¡÷×, Å¡ð¼õ, ¾í̾ø, «¨¼¾ø, «¨½¾ø, ¾¡Á¾õ, §º¡õÀø, º¡× §À¡ýÈ ¸ÕòÐì¸Ùõ ´ý§È¡Î ´ýÚ þ¨Æó§¾ ¾Á¢Æ¢ø À¢ָ¢ýÈÉ. ´ù¦Å¡ýÈ¡¸ô À¡÷ô§À¡õ.

1. ´Õ þ¼ò¨¾ô ÀûÙõ §À¡Ð (§¾¡ñÎõ §À¡Ð) ¦À⾡¸î ¦ºö¾¡ø ÀûÇõ. º¢È¢¾¡¸î ¦ºö¾¡ø ÀûÇ¢(ø). ¿¡Ç¡Åð¼ò¾¢ø þó¾ §ÅÚÀ¡Î ̨ÈóÐ §À¡ö, ²ý Á¡È¢ì ܼô §À¡ö, ̨¸ìÌ Áü¦È¡Õ ¦º¡øÄ¡¸§Å 'ÀûÇ¢' ±ýÀÐ ¬Â¢üÚ. ¿¡¸Ã¢¸õ, Á¾í¸û ÅÇ÷ó¾À¢ÈÌõ ÀûÇ¢¸û ÁÉ¢¾É¢ý Å¡úÅ¢ø þÕó§¾ Åó¾É. ÌáôÀûÇ¢, º¢Ã¡ô ÀûÇ¢ þ¨Å¸û ±øÄ¡§Á ̨¸¸û þÕ󾨾Ôõ, «¾¢ø ´Õ º¡Ã¡÷ ź¢òÐ Å󾨾Ôõ ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ. þ§¾ ÀûÇ¢, À¢ý ºÁÂì ¸¡Äò¾¢ø ºÁ½ô ÀûÇ¢, Òò¾ôÀûÇ¢, ÀûǢšºø ±Éô Ò¾¢Â Á¾ò¾¡÷ §¸¡Â¢ø¸ÙìÌõ ÀÂýÀð¼Ð. þó¾î ºÁÂô ÀûÇ¢¸Ç¢ø ¸øÅ¢Ôõ ¸üÚì ¦¸¡Îì¸ô Àð¼ §À¡Ð, ¸øÅ¢î º¡¨ÄÔõ ÀûǢ¡¢üÚ.

2. ¸¡¨Ä¦ÂøÄ¡õ §Åð¨¼Â¡Ê ¾ý ¯ñÀº¢ ¾£÷òÐ «Â÷óÐ, §º¡÷×üÚ Á¡¨Ä¢ø ¾¢ÕõÒõ ¬¾¢¸¡Ä ÁÉ¢¾ÛìÌô ¦À¡ØÐ º¡öó¾¡ø §À¡ì¸¢¼õ ±ýÀÐ þÕðÎõ, ̨ÅÔõ, ¦¸¡ÊÔõ ¾¡§É! ±ýɾ¡ý ¾£Â¢ý «ñ¨Á¢ø þÕóРŢƢô¨Àì ÜðÊì ¦¸¡ñ¼¡Öõ, §º¡÷×õ, «Â÷Ôõ ¸ñ¨½î ¦º¡ì¸¢ì ¦¸¡ñÎÅÕõ ¾¡§É! ÀûÇô Àð¼ ̨¸Â¢ø ¸ñ¨½ ãÊì ¦¸¡ñÎ ¸¢¼ìÌõ §À¡Ð (¦¸¡ÊÂ, ¬É¡ø º¢È¢Â, À¡õÒ¸û §À¡ýÈ °Õ¢â¸û ¾ý¨Éò ¾¡ì¸¢Å¢¼ì ܼ¡Ð ±ýÀ¾ü¸¡¸ ¸ø¨Ä ¦ÅðÊî ¦ºöÐ ¦¸¡ñ¼ ÀÎ쨸¸Ç¢ø ÀÎìÌõ ÀÆì¸õ Åó¾Ð. þó¾ô ÀÎ쨸¸Ùõ ÀûÇ¢¦Âý§È «¨Æì¸ô Àð¼É. ÀûÇ¢ø þÕóÐ §¾¡ýȢ§¾ ÀÎ쨸. «¾Äõ ±ýÈ¡Öõ ÀûÇõ ¾¡ý (À¡ «¾Äõ = À¡¾¡Äõ (=À¡¾¡Çõ)). ÀûÇ¢ ±Ûõ ¦º¡ø «¾ý ¿£ðº¢Â¢ø àì¸ò¨¾Ôõ ÌÈ¢ò¾Ð.

¸¾¢ÃÅý ̽¾¢¨ºî º¢¸Ãõ ÅóÐ «¨¼ó¾¡ý;
¸É þÕû «¸ýÈÐ; ¸¡¨ÄÂõ ¦À¡Ø¾¡ö
ÁРŢâóÐ ´Ø¸¢É Á¡ÁÄ÷ ±øÄ¡õ;
Å¡ÉÅ÷ «Ãº÷¸û ÅóÐÅóÐ ®ñÊ
±¾¢÷¾¢¨º ¿¢¨Èó¾É÷; þŦáÎõ ÒÌó¾
þÕõ ¸Ç¢üÚ ®ð¼Óõ À¢Ê¦Â¡Îõ ÓÃÍõ
«¾¢÷¾Ä¢ø «¨Ä¸¼ø §À¡ýÚÇÐ ±íÌõ;
«Ãí¸ò¾õÁ¡! ÀûÇ¢ ±Øó¾ÕÇ¡§Â!

Àû>ÀÎ>ÀÎÌ>ÀÎìÌ>ÀÎ쨸. (ÀûÇôÀð¼ þ¼ò¾¢ø ¾¡ý ÀÎò¾É÷ §À¡Öõ.)

3. ¿¢¾Äõ ±ýÀÐ ¸£ú ¯Ä¸í¸Ç¢ø ´ýÚ. (þý¨È ¦¿¾÷Ä¡óÐ þ§¾ ¦À¡ÕÇ¢ø ¾¡ý. ¦¿¾÷ ±ýÈ¡ø «ó¾ ¦Á¡Æ¢Â¢Öõ ÀûÇõ, ¾¡úó¾Ð ±ý§È ¦À¡Õû.) ¿¢ò¾¢ì ¸¢¼ôÀÐ ¿¢ò¨¾. ¿¢ò¨¾ ż¦Á¡Æ¢Â¢ø ¿¢ò¾¢¨Ã ¬Ìõ.

4. þ§¾ §À¡Ä ¸£§Æ ¸¢¼ó¾Ð ¸¢¨¼. (±ýÉ ¬îÍ, ´§Ã ¸¢¨¼Â¡ þÕ측? ÁÕòÐÅ÷ ¸¢ð§¼ §À¡¸Ä¡Á¡?)

5. º¡öóÐ þÕó¾Ð ºÂÉõ. (¦ÀÕÁ¡û ¾¢ÕÅÃí¸ò¾¢§Ä ¸¢¼ó¾ ¾¢Õ째¡Äõ. ¦¾ü§¸ À¡÷òÐ ºÂÉõ)

6. ÀÎôÀÐ À¨¼ ±ýÚ «È¢ÅÐ Á¢¸ ±Ç¢Ð..

7. «§¾ §À¡Ä ´Îí¸¢ì ¸¢¼ôÀÐ, ¯Èí¸¢ì ¸¢¼ôÀÐ ¬Ìõ.

8. ¦¸¡Ê¸û ÁüÚõ ÁÃ츢¨Ç¸Ç¢ø ¦¾¡í¸¢ò àí¸¢ÂÐ àì¸õ (À¢û¨Ç ¾¡Ä¢ø ¦¾¡íÌõ §À¡Ð àí¸ò ¾¡§É ¦ºö¸¢ÈÐ.)

9. þÉ¢ «Éó¾ø ¦¸¡ïºõ ºÃÅÄ¡ÉÐ. ¸ñ¨½ ãÊÉ¡ø þÕðÎ ±Ûõ §À¡Ð þÕ𧼠¯Èì¸ò¾¢ý ´Õ Üáöô §À¡ÉÐ.

«ø = þÃ×, þÕû.
«ó,«ý = þý¨Á
«ó¾õ = ¯û, Á¨È×, «ó¾ôÒÃõ - ¯û§Ç þÕìÌõ ÒÃõ «øÄÐ ¸ðÎ, Á¨ÈÅ¡É ¸ðÎ. ¿õ⾢â¸û Å£ðÊüÌû§Ç Á¨ÈÅ¡¸ «ó¾ôÒÃí¸Ç¢ø þÕìÌõ ¸½õ «ó¾ ¸½õ>«ó¾÷ƒÉõ ±ýÚ ¬Ìõ.
«ò¾Á¢ò¾ø - Á¨È¾ø, Àξø, ¯ðÒ̾ø, «üÚô§À¡¾ø, þøÄ¡Áü §À¡¾ø
«ý+«ó¾ø = «Éó¾ø, þÐ×õ ¯Èì¸õ ¾¡ý. ¾¢ÕÅÉó¾ ÒÃò¾¢ø «È¢Ð¢ø ¦¸¡ñÎ ÀÎòÐì ¸¢¼ìÌõ «Éó¾¨Éò ¦¾Ã¢Â¡¾¡÷ ¡÷? þó¾ «È¢Ð¢ø ´Õ Ññ¨ÁÂ¡É ¦º¡ø. «Åý ÓüÚ Óؾ¡¸ «È¢óÐ ¦¸¡ñ§¼ Тøž¡¸ ´Õ À¡Å¨É.

10. ¸É× ±ýÀÐ þÕðÎ ±ýÛõ ¦À¡ÕÇ¢ø ¸ø ²Ûõ §Å÷¡øÄ¢ø ÁÄ÷ó¾Ð. ¿¡Ç¡Åð¼ò¾¢ø dream ±ýÈ þý¨ÈÂô ¦À¡ÕÇ¢üÌ ¿£ñÊÕ츢ÈÐ.

Áò¾Çõ ¦¸¡ð¼, Åâºí¸õ ¿¢ýê¾,
ÓòШ¼ò ¾¡Á ¿¢¨Ã ¾¡úó¾ Àó¾ü¸£ú,
¨ÁòÐÉý ¿õÀ¢ ÁÐݾÉý ÅóÐ ±ý¨Éì
¨¸ò¾Äõ ÀüÈì ¸É¡ì ¸ñ§¼ý §¾¡Æ£ ¿¡ý!

11. ¸ñ ÅÇÃø ±ýÀРͨÅÂ¡É ¦º¡øÄ¡ðº¢. ´Õ «Õ¨ÁÂ¡É ºôÀ¡É¢Â ³ìÜ ÀÄ ¬ñθû ÓýÀÊò¾§¾ý. «Ê¸û ¿¢¨ÉÅ¢ø þø¨Ä. ¦À¡Õû »¡À¸ò¾¢ø þÕ츢ÈÐ. «¾¢ø ¾¨ÄÅý ¸ø ÅÇÕŨ¾ô À¡÷òÐì ¦¸¡ñÊÕôÀ¾¡¸ ´Õ ÓÃñ ÅÕõ. «ôÀÊôÀð¼ µ÷ ¯½÷Å¢ø ÅÕÅÐ ¾¡ý, ¸ñ ÅÇÃø. (¸ñ ±ôÀÊò àì¸ò¾¢ý §À¡Ð ÅÇÕõ? À¢û¨Ç¨Â ÁÊ¢ø ¨ÅòÐ ¬Ã¡§Ã¡ô §À¡ð¼¡ø ÅÇáÁø ±ýÉ ¦ºöÔõ?) þÐ ¦ÀÕõ À¡Öõ ÌÆ󨾸¨Çò ¦¾¡ðÊÄ¢ø §À¡ðÎò àí¸ ¨ÅôÀ¾üÌô ÀÂýÀÎõ. ´Õ ¿¡ðÎôÒÈô À¡¼ø:

¸ÕõÒÕ¸ò §¾ÛÕ¸ì
¸ñ¼¡÷ ÁÉÓÕ¸,
±ÖõÒÕ¸ô ¦Àüȸñ§½!
þÄ츢§Á! ¸ñÅÇáö!

12. ¸ñ½¨¼ò¾ø ±ýÀÐ §º÷óЧÀ¡ö ±Ø¸¦Å¡ñ½¡¾ÀÊ ¸ñ ¦ºÕ¸¢ì ¦¸¡ñÎ ÅÕÅÐ.

13. ¸ñ½Â÷¾ø ¸¢ð¼ò ¾ð¼ «§¾ ¦À¡ÕÇ¢ø ¾¡ý.

14. ¸ñÀξø ±ýÀÐ ¾¢ðÊô ¦À¡ÕÇ¡¸ ÁðÎÁøÄ¡Ð àíÌžüÌõ µ§Ã¡ÅÆ¢ ÀÂýÀθ¢ÈÐ. ¯¼õÒ ÀÎÅÐ §À¡Äì ¸ñÏõ Àθ¢ÈÐ, À¾¢¸¢ÈÐ.

15. ¸ñÀ¨¼, ¸ñÀξĢý ¦¾¡¼÷§Â.

16. ¸ñÓ¸¢úò¾ø ±ýÀÐ '§¾¡ýÚÅÐ' ±ýÈ ¦À¡ÕÇ¢ø «øÄ. 'ãÎÅÐ' ±ýÀÐ «Áí¸Äõ ±ýÚ ¸Õ¾¢ ±¾¢÷î ¦º¡ø¨Äô ÀÂýÀÎòи¢§È¡õ. ±í¸û Àì¸õ Å£ðÊüÌû º¡Á¢ «¨È¢ø ¯ûÇ Å¢Ç쨸 '«¨½'¦ÂýÚ ¦º¡øÄ Á¡ð¼÷¸û. «¨¾ þ¼ì¸÷ «¼ì¸Ä¡¸, 'Å¢Ç쨸 ¿øÄ¡ ¨Å' ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û. (þý¦É¡Õ Ũ¸Â¢ø À¡÷ò¾¡ø ¿øÖ¾ø ±ýÈ Å¢¨É ¸Õò¾ø ±ýÈ ¦À¡ÕÙõ ¦¸¡ûÙõ. ¿øÄ¡ ¨Å ±ýÛõ §À¡Ð ¸Õì¸ ¨Å ±ýÈ ¦À¡Õû ¦¸¡ûÙõ.) «Ð §À¡Äò¾¡ý þó¾ ¸ñ Ó¸¢úò¾Öõ.

17. ±øÄ¡Åü¨ÈÔõ ¦º¡øĢŢð§¼ý. þó¾ò Тø, Ðïºø ÁðÎõ ¾¡ý ¦¸¡ïºõ ºÃÅø. þÃñÊü̧Á §Å÷ Ðö ±ýÀÐ ¾¡ý. ÐÂìÌ, ÐÂí̾ø, ÐÂÃõ ±Éô ÀÄ ¦º¡ü¸û §º¡÷óÐ §À¡ÅÐ ±ýÈ ¦À¡ÕÇ¢§Ä§Â ÅÆ츢ø ¯ûÇÉ. «§¾ ¦À¡ØÐ ÐÂø¾ø ±ýÈ ¦º¡ø «¨º¾ø ±ýÈ ¦À¡ÕÇ¢ø ÅÕŨ¾ô À¡÷ìÌõ §À¡Ð ¿ÁìÌì ¦¸¡ïºõ Å¢ÂôÒ ÅÕ¸¢ÈÐ.

ÐÂø= «¨º¾ø
Тø = ¬úó¾ «¨ºÅ¢øÄ¡¾ ¿¢¨Ä.

þÐ ±ôÀÊ ±ýÈ¡ø, Áñ= ¦ºÈ¢ó¾ ¿¢¨Ä, Á½ø ±ýÀÐ Áñ «øÄ¡¾Ð= ¦ºÈ¢Â¡¾Ð ±ýÀ¨¾ô §À¡Ä. þí§¸ ´Õ ¯Â¢÷ ±ØòÐ Á¡üÈò¾¢ø Á¡ÚÀð¼ ¦À¡Õû¸û ¸¢¨¼ì¸¢ýÈÉ.

18. Ðïºø ±ýÀРТĢý ¿£ð¼§Á.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

4 comments:

Anonymous said...

முனைவர் இராம.கி ஐயா அவர்களே,

முன்பு தமிழ் இணையத்தில் fwdற்கு முன்வழங்குதல் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
அச்சொல்லை விட புறவரித்தல் சிறப்பாக இருக்கிறது!
உங்களைப் போன்றோர் பாவாணர் விட்டுச் சென்ற பணியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறீர்கள்.

எனக்குச் சிச்சிறு ஐயங்கள், கருத்துக்குழப்பங்கள், தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

பாவாணர் நூல்களில் வரும் 'அகக்கரணம்' என்ற வார்த்தைக்கான சரியான பொருள் என்ன?

அனைத்து பயன்பாட்டிற்குரிய என்ற பொருளில் வரும் universalற்கு ஈடான தமிழ்ச் சொல்லைக் குறிப்பிட முடியுமா?
மற்றும் mini, maxi, mega போன்ற சொற்களுக்கும் தமிழ் பதம் சொல்லமுடியுமா?

நிறையக் கேட்டு விட்டேன்.தொந்தரவுக்கு மன்னிக்கவும்!

முன்கூட்டிய நன்றிகளுடன்
பிரதாப்

பாலராஜன்கீதா said...

// எங்கள் பக்கம் வீட்டிற்குள் சாமி அறையில் உள்ள விளக்கை 'அணை'யென்று சொல்ல மாட்டர்கள். அதை இடக்கர் அடக்கலாக, 'விளக்கை நல்லா வை' என்று சொல்லுவார்கள். //

அன்புள்ள இராம.கி அய்யா அவர்களுக்கு,

எங்கள் அன்னை "விளக்கைக் குளிரவை" என்பார்கள்.

Sri Rangan said...

என் அன்னையோ சாமி விளக்கை(தூண்டாமணி விளக்கு) எரியும்போது,நிறைத்து விடு தம்பி என்பார்.விளக்கேற்றுவதும்-நிறைப்பதும் மிக இயல்பாக நாம் உரையாடும் வார்த்தைகள்.

இராம.கி said...

அன்பிற்குரிய பிரதாப்,

அகக் கரணம் என்ற சொல்லிற்கான பொருளைத் தேடிப் பார்த்துச் சொல்லுகிறேன். சட்டென்று சொல்ல முடியவில்லை. universal, mini, maxi. mega போன்றவை பற்றியும், அவற்றோடு தொடர்புடைய மற்ற சொற்கள் பற்றியும் தனித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். முடிந்தபின்னால் தனிப் பதிவாகப் போடுகிறேன்.

அன்பிற்குரிய பாலராஜன் கீதா, மற்றும் ஸ்ரீ ரங்கன்,

தங்கள் வட்டார வழக்கை இங்கு குறித்ததற்கு நன்றி. தமிழ் வழக்கு என்பது எல்லா வட்டார வழக்குகளும் சேர்ந்ததுதான். நம்மில் பலர் அந்த வழக்குகளைப் பதிவு செய்யாமல் இருப்பது பெரும் இழப்பு. கூடியமட்டும் அதை எழுத்தில் பதிவு செய்யுங்கள். அப்பொழுது தான் தமிழின் முழுமை பலருக்கும் விளங்கும் .

அன்புடன்,
இராம.கி.