Tuesday, July 12, 2005

ஓவரும் ஓவக்குலைப்பாளரும். (Icons and Iconoclasts)

அண்மையில் திரு ரோசாவசந்த் Icon என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லுவது என்று தன்னுடைய வலைப்பதிவில் கேட்டிருந்தார். உடனே அப்பொழுது மறுமொழிக்க முடியவில்லை. தவிர என் கருத்தையும் கொஞ்சம் ஒருங்கு படுத்த வேண்டியிருந்தது.

Icon என்பதை எத்தனையோ விதமாய்ச் சொல்ல தமிழில் வழியிருக்கிறது. ஓர்ந்து பார்த்தால், Icon இல்லாத குமுகாயம் எது? தமிழர் மட்டும் இதில் விதிவிலக்கா என்ன? Icon என்பது ஒன்றைப்போல் இன்னொன்றைச் சொல்லுவது (செய்வது, ஆக்குவது, பண்ணுவது எல்லாமே இதில் தொடரும்); ஒன்றைக் குறிக்க இன்னொன்றை இடுவது (குறி + இடு = குறியீடு); ஒன்றிற்காக இன்னொன்றை நிறுத்துவது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தச் செயல்கள் எல்லாம் ஒவ்வுதல் என்ற வினைக்குள் அடங்கும். ஒவ்வுதல் என்ற சொல் உவ்வுதல் என்பதில் இருந்து கிளர்ந்தது. உவ்வுதலில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் தான் உவமம். தொல்காப்பியம் தன்னுடைய பொருளதிகாரம் உவம இயலில்

அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப,
என்ன, மான - என்றவை எனாஅ

ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, வாங்க,
வென்ற, வியப்ப - என்றவை எனாஅ

எள்ள, விழைய, இறப்ப, நிகர்ப்ப,
கள்ள, கடுப்ப - வாங்கவை எனாஅ

காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள,
மாற்ற, மறுப்ப - வாங்கவை எனாஅ

புல்ல, பொருவ, பொற்ப, போல,
வெல்ல, வீழ - வாங்கவை எனாஅ

நாட, நளிய, நடுங்க, நந்த,
ஓட, புரைய - வாங்கவை எனாஅ

ஆறாறு உவமையும் அன்னவை பிறவும்
கூறுங் காலைப் பல்குறிப் பினவே

என்று முப்பத்தாறு உவம உருபுகளைச் சொல்லி அதைப் போன்ற பிறவும் உள்ளதாகச் சுட்டிக் காட்டுவார். அந்த அன்னபிறவிற்குள் "நோக்க, நேர, அனை, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர்" என்று இன்னும் சிலவற்றை உரையாசிரியர் இளம்பூரணர் கூறுவார். இந்த 48 சொற்களில் ஒவ்வொன்றும் ஓர் ஒப்புமையைக் குறிப்பவை தான். ஒப்புமைகள் என்றாலே அவை ஏதோ ஒன்றின் அடையாளங்கள் என்று பொருள். (அதே நேரத்தில் ஒப்புமை என்பது 100% சமமானது என்று பொருளில்லை.)

சிவநெறியாளருக்குச் சூலம் ஓர் அடையாளம் அதாவது ஓர் Icon. (இன்றைக்கு அது இந்துத்துவக்காரர்களுக்கும் அடையாளமாய் ஆகியிருக்கிறது.) முருகனைக் கும்பிட்டுக் காவடி எடுப்பவர்களுக்கு வேல் ஓர் அடையாளம். கிறித்தவர்களுக்கு சிலுவை ஓர் அடையாளம். மினாரட் அல்லது மூன்றாம் பிறை இசுலாமியர்களுக்கு அடையாளம்.

இப்படி அடையாளங்கள் பலவுண்டு என்றாலும் ஒரு சில கூர்ந்து கவனிக்காத, விதப்பான அடையாளங்களைச் சொல்லி icon என்பதற்கான என் பரிந்துரையை இங்கு சொல்ல முற்படுகிறேன்.

ஐம்புலன்களாலும் உணரமுடியாத, ஆனால் ஆறாவது புலனால் உணரப்படுகிற, பரம்பொருளை அல்லது இறைவனை, நம்மைச் சுற்றி உள்ள மாந்தரைப் போலவே உருவகம் செய்து, நாம் உருவ அடையாளம் காட்ட முனைகிறோம். அந்த உருவ அடையாளமும் ஓர் Icon தான். அப்படிப் பார்த்தால் நடவரசன் என்பது கூட ஓர் அடையாளம் தான். (இறை மறுப்பாளர்களும், உருவ மறுப்பாளர்களும் இன்னொரு முறையில் இறைவனை அடையாளம் காட்ட முனைவார்கள்; அந்த வாதத்திற்குள் இப்பொழுது போக வேண்டாம்.) இப்படி ஒன்றைப் பார்த்து இன்னொன்றை படிவிக்கும் படிமமும் ஓர் அடையாளம் (Icon) தான் (படிமம் - icon - என்ற தமிழ்ச்சொல்லுள் வழக்கம் போல் ரகரத்தை நுழைத்து, டகரத்தைத் தகரமாகப் பலுக்கி வடமொழி இதைப் ப்ரதிமம் என்று ஆக்கும். நாம் இது என்னவோ, ஏதோ என்று குழம்பிப் போய் நிற்போம்.)

படிமத்திற்கே இன்னொரு படிமம் அடையாளமாய் நிற்கலாம். காட்டாக, சிவ, விண்ணவக் கோயில்களில் மூலவர் இருக்கிறார். அவர் கோயிலை விட்டு வெளியே வரமுடியாது. எனவே, அவருக்கு இன்னோர் அடையாளமாய், சமமாய், ஊருலவர் (உற்சவர்) வெளியே வருவார். அவரும் ஒருவகையில் Icon தான்.

எல்லாப் படிமங்களும் கோயிலில் இறைவனின் வெவ்வேறு தோற்றங்களையோ, அடியார்களின் உருவங்களையோ காட்டுவதால் அவற்றைத் திருமேனி என்றும் சொல்லுவது உண்டு. உலாத் திருமேனி என்பது ஊருலவர் படிமம். அப்படிப் பார்த்தால் திருமேனி என்ற சொல் கூட Icon என்பதற்கு இணையானது தான். இன்னும் சிலர் திருமேனியைத் திருவுரு என்றும் திருமெய் என்றும் சொல்லுவார்கள். எல்லாம் இடம் பொருள் ஏவல் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமேனி என்றவுடன் அந்தச் சொல் பெற்ற இன்னொரு சாயலைச் சொல்லத் தோன்றுகிறது. மலையாளத்தில் நம்பூதிரிகளைத் தம்பிரான் (தம் பெருமான்) என்று மட்டும் அல்லாது திருமேனி என்றும் விளிப்பது உண்டு.

தெற்குக் கேரளத்து ஊர்களில் திருமேனிகள் பெரியதனக்காரராய் இருப்பார்கள். அந்த வகையில் அரத்தம், தசை, என்பு கொண்ட இந்தத் திருமேனிகளும் Icon - கள் தான். முற்போக்குச் சிந்தனை கூடிய, 20ம் நூற்றாண்டுப் பிந்தைய காலத்திலும், பொதுவுடமைக் கட்சிக்குள் தோழர் ஈ.வி.கே. நம்பூதிரிப்பாட்டைத் திருமேனி என்று அழைத்த முட்டாள் தனங்களும் இருந்தன.

ஆண்டை - அடிமை வாடை அடிக்காமல், இறைவன் - மதம் என்று தொடர்பு கொள்ளாமல், Icon என்பதைத் தமிழில் சொல்ல வேண்டும் என்றால் திருமேனியோ, திருவுருவோ, படிமமோ (படிமம் என்ற சொல்லை இலக்கியக் கொள்கைகளில் வேறு விதப்பான பொருளில் பயன்படுத்துகிறார்கள்.) நமக்குப் பயன்படாமல் போகின்றன.

இனி, icon என்ற சொல் வெறுமே உயர்திணையை மட்டும் குறிப்பதாய் இல்லாமல், கணித்திரையில் இருக்கும் குட்டிக் குட்டி உருவங்களையும் கூட குறிக்கிறது என்று நாம் அறிவோம். திணை பார்க்காத மேலை மொழிகள் போல் இல்லாமல், தமிழில் Icon என்று சொல்லுவதற்கு, உயர்திணை, அஃறிணை என இரண்டு திணை ஒட்டிய சொற்களைக் காண வேண்டி இருக்கிறது.

ஒவ்வுதல் என்ற வினை ஒப்புதல் என்ற பொருளையே கொடுக்கும். ஒவ்வுதல் ஓவுதல் என்றும் நீளும். ஓவுதல் என்பது ஒப்பிட்டுக் காட்டல் என்ற பொருள் கொள்ளும். ஓவிக் காட்டுவது ஓவம். [இது ஓவியம், சிற்பம் என்று பல வடிவங்களைக் குறிக்கலாம்.] ஓவம் ஓவியம் என்றும் நீளும். ஓவியம் வரைபவர் ஓவியர். ஒரு காட்சியை அப்படியே ஒப்பிட்டு ஒரு விரிந்த பரப்பில் காட்டும் கலைக்கு ஓவியக் கலை என்று பெயர். ஓவம் என்பதைச் சிறியதற்கும், ஓவியம் என்பது பெரியதற்குமாய்ச் சொல்லலாம். ஒவ்வொரு Icon-ம் ஒரு ஓவம் தான். கணித்திரையில் கிடக்கும் ஓவங்களின் (Icons) மீது குறிசி (cursor) யை கொண்டுவரும் வகையில் மூசி(mouse)யைத் தொட்டு நகர்த்தினால் அது ஏதோ ஒரு கோப்பு அல்லது இழையை (file)க் கணித்திரையில் திறக்கிறது.

இனி உயர்திணை Icon களுக்கு வருவோம். இந்த icon கள் ஒரு உயர்நிலை அடையாளத்திற்கு எடுத்துக் காட்டாய் இருக்கிறார்கள். ஓ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கு உயர்ந்த என்ற பொருளும் தமிழில் உண்டு. ஓவம் என்ற சொல்லை ஓவர் என்று சொன்னால் உயர்திணையைக் குறித்துவிடும். [தமிழில் ஓவர் என்னும் சொல் செய்பவரையும், செயப்பாட்டாளரையும் பொதுவாய்க் குறிக்கிறது.]

இனி ஓவக்குலைப்பாளர்கள் iconoclast என்று ஆவார்கள். குலைப்பாளர் என்று சொல்லத் தயங்கினால் மறுப்பாளர் என்று சொல்லலாம்.

என் பரிந்துரை:

ஓவம்/ஓவர் = icon
ஓவக் குலைப்பாளர் = iconoclast

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

µÅÕõ µÅį̀ÄôÀ¡ÇÕõ. (Icons and Iconoclasts)

«ñ¨Á¢ø ¾¢Õ §Ã¡º¡Åºóò Icon ±ýÀ¨¾ò ¾Á¢Æ¢ø ±ôÀÊî ¦º¡øÖÅÐ ±ýÚ ¾ýÛ¨¼Â ŨÄôÀ¾¢Å¢ø §¸ðÊÕó¾¡÷. ¯¼§É «ô¦À¡ØÐ ÁÚ¦Á¡Æ¢ì¸ ÓÊÂÅ¢ø¨Ä. ¾Å¢Ã ±ý ¸Õò¨¾Ôõ ¦¸¡ïºõ ´ÕíÌ ÀÎò¾ §ÅñÊ¢Õó¾Ð.

Icon ±ýÀ¨¾ ±ò¾¨É§Â¡ Å¢¾Á¡öî ¦º¡øÄ ¾Á¢Æ¢ø ÅƢ¢Õ츢ÈÐ. µ÷óÐ À¡÷ò¾¡ø, Icon þøÄ¡¾ ÌÓ¸¡Âõ ±Ð? ¾Á¢Æ÷ ÁðÎõ þ¾¢ø Å¢¾¢Å¢Ä측 ±ýÉ? Icon ±ýÀÐ ´ý¨Èô§À¡ø þý¦É¡ý¨Èî ¦º¡øÖÅÐ (¦ºöÅÐ, ¬ìÌÅÐ, ÀñÏÅÐ ±øÄ¡§Á þ¾¢ø ¦¾¡¼Õõ); ´ý¨Èì ÌÈ¢ì¸ þý¦É¡ý¨È þÎÅÐ (ÌÈ¢ + þÎ = ÌȢ£Î); ´ýÈ¢ü¸¡¸ þý¦É¡ý¨È ¿¢ÚòÐÅÐ. þôÀÊî ¦º¡øÄ¢ì ¦¸¡ñ§¼ §À¡¸Ä¡õ. þó¾î ¦ºÂø¸û ±øÄ¡õ ´ù×¾ø ±ýÈ Å¢¨ÉìÌû «¼íÌõ. ´ù×¾ø ±ýÈ ¦º¡ø ¯ù×¾ø ±ýÀ¾¢ø þÕóÐ ¸¢Ç÷ó¾Ð. ¯ù׾Ģø þÕóÐ À¢Èó¾ ¦ÀÂ÷¡ø ¾¡ý ¯ÅÁõ. ¦¾¡ø¸¡ôÀ¢Âõ ¾ýÛ¨¼Â ¦À¡ÕǾ¢¸¡Ãõ ¯ÅÁ þÂÄ¢ø

«ýÉ, ²öôÀ, ¯ÈÆ, ´ôÀ,
±ýÉ, Á¡É - ±ýȨŠ±É¡«

´ýÈ, ´Îí¸, ´ð¼, Å¡í¸,
¦ÅýÈ, Å¢ÂôÀ - ±ýȨŠ±É¡«

±ûÇ, Å¢¨ÆÂ, þÈôÀ, ¿¢¸÷ôÀ,
¸ûÇ, ¸ÎôÀ - Å¡í¸¨Å ±É¡«

¸¡öôÀ, Á¾¢ôÀ, ¾¨¸Â, ÁÕÇ,
Á¡üÈ, ÁÚôÀ - Å¡í¸¨Å ±É¡«

ÒøÄ, ¦À¡ÕÅ, ¦À¡üÀ, §À¡Ä,
¦ÅøÄ, Å£Æ - Å¡í¸¨Å ±É¡«

¿¡¼, ¿Ç¢Â, ¿Îí¸, ¿ó¾,
µ¼, Ҩà- Å¡í¸¨Å ±É¡«

¬È¡Ú ¯Å¨ÁÔõ «ýɨŠÀ¢È×õ
ÜÚí ¸¡¨Äô ÀøÌÈ¢ô À¢É§Å

±ýÚ ÓôÀò¾¡Ú ¯ÅÁ ¯ÕÒ¸¨Çî ¦º¡øÄ¢ «¨¾ô §À¡ýÈ À¢È×õ ¯ûǾ¡¸î ÍðÊì ¸¡ðÎÅ¡÷. «ó¾ «ýÉÀ¢ÈÅ¢üÌû "§¿¡ì¸, §¿Ã, «¨É, «üÚ, þý, ²óÐ, ²÷, º£÷, ¦¸Ø, ¦ºòÐ, ²÷ôÀ, ¬÷" ±ýÚ þýÛõ º¢ÄÅü¨È ¯¨Ã¡º¢Ã¢Â÷ þÇõâý÷ ÜÚÅ¡÷. þó¾ 48 ¦º¡ü¸Ç¢ø ´ù¦Å¡ýÚõ µ÷ ´ôÒ¨Á¨Âì ÌÈ¢ôÀ¨Å ¾¡ý. ´ôÒ¨Á¸û ±ýÈ¡§Ä «¨Å ²§¾¡ ´ýÈ¢ý «¨¼Â¡Çí¸û ±ýÚ ¦À¡Õû. («§¾ §¿Ãò¾¢ø ´ôÒ¨Á ±ýÀÐ 100% ºÁÁ¡ÉÐ ±ýÚ ¦À¡ÕÇ¢ø¨Ä.)

º¢Å¦¿È¢Â¡ÇÕìÌî ÝÄõ µ÷ «¨¼Â¡Çõ «¾¡ÅÐ µ÷ Icon. (þý¨ÈìÌ «Ð þóÐòÐÅ측Ã÷¸ÙìÌõ «¨¼Â¡ÇÁ¡ö ¬¸¢Â¢Õ츢ÈÐ.) ÓÕ¸¨Éì ÌõÀ¢ðÎì ¸¡ÅÊ ±ÎôÀÅ÷¸ÙìÌ §Åø µ÷ «¨¼Â¡Çõ. ¸¢È¢ò¾Å÷¸ÙìÌ º¢Ö¨Å µ÷ «¨¼Â¡Çõ. Á¢É¡Ãð «øÄÐ ãýÈ¡õ À¢¨È þÍÄ¡Á¢Â÷¸ÙìÌ «¨¼Â¡Çõ.

þôÀÊ «¨¼Â¡Çí¸û ÀÄ×ñÎ ±ýÈ¡Öõ ´Õ º¢Ä Ü÷óÐ ¸Åɢ측¾, Å¢¾ôÀ¡É «¨¼Â¡Çí¸¨Çî ¦º¡øÄ¢ icon ±ýÀ¾ü¸¡É ±ý ÀâóШè þíÌ ¦º¡øÄ ÓüÀθ¢§Èý.

³õÒÄý¸Ç¡Öõ ¯½ÃÓÊ¡¾, ¬É¡ø ¬È¡ÅÐ ÒÄÉ¡ø ¯½ÃôÀθ¢È, ÀÃõ¦À¡Õ¨Ç «øÄÐ þ¨ÈŨÉ, ¿õ¨Áî ÍüÈ¢ ¯ûÇ Á¡ó¾¨Ãô §À¡Ä§Å ¯ÕŸõ ¦ºöÐ, ¿¡õ ¯ÕÅ «¨¼Â¡Çõ ¸¡ð¼ Өɸ¢§È¡õ. «ó¾ ¯ÕÅ «¨¼Â¡ÇÓõ µ÷ Icon ¾¡ý. «ôÀÊô À¡÷ò¾¡ø ¿¼Åúý ±ýÀРܼ µ÷ «¨¼Â¡Çõ ¾¡ý. (þ¨È ÁÚôÀ¡Ç÷¸Ùõ, ¯ÕÅ ÁÚôÀ¡Ç÷¸Ùõ þý¦É¡Õ ӨȢø þ¨ÈÅ¨É «¨¼Â¡Çõ ¸¡ð¼ Ó¨ÉÅ¡÷¸û; «ó¾ Å¡¾ò¾¢üÌû þô¦À¡ØÐ §À¡¸ §Åñ¼¡õ.) þôÀÊ ´ý¨Èô À¡÷òÐ þý¦É¡ý¨È ÀÊÅ¢ìÌõ ÀÊÁÓõ µ÷ «¨¼Â¡Çõ (Icon) ¾¡ý (ÀÊÁõ - icon - ±ýÈ ¾Á¢ú¡øÖû ÅÆì¸õ §À¡ø øÃò¨¾ ѨÆòÐ, ¼¸Ãò¨¾ò ¾¸ÃÁ¡¸ô ÀÖ츢 ż¦Á¡Æ¢ þ¨¾ô ôþ¢Áõ ±ýÚ ¬ìÌõ. ¿¡õ þÐ ±ýɧš, ²§¾¡ ±ýÚ ÌÆõÀ¢ô §À¡ö ¿¢ü§À¡õ.)

ÀÊÁò¾¢ü§¸ þý¦É¡Õ ÀÊÁõ «¨¼Â¡ÇÁ¡ö ¿¢ü¸Ä¡õ. ¸¡ð¼¡¸, º¢Å, Å¢ñ½Åì §¸¡Â¢ø¸Ç¢ø ãÄÅ÷ þÕ츢ȡ÷. «Å÷ §¸¡Â¢¨Ä Å¢ðÎ ¦ÅÇ¢§Â ÅÃÓÊ¡Ð. ±É§Å, «ÅÕìÌ þý¦É¡Õ «¨¼Â¡ÇÁ¡ö, ºÁÁ¡ö, °ÕÄÅ÷ (¯üºÅ÷) ¦ÅÇ¢§Â ÅÕÅ¡÷. «ÅÕõ ´ÕŨ¸Â¢ø Icon ¾¡ý.

±øÄ¡ô ÀÊÁí¸Ùõ §¸¡Â¢Ä¢ø þ¨ÈÅÉ¢ý ¦Åù§ÅÚ §¾¡üÈí¸¨Ç§Â¡, «Ê¡÷¸Ç¢ý ¯ÕÅí¸¨Ç§Â¡ ¸¡ðΞ¡ø «Åü¨Èò ¾¢Õ§ÁÉ¢ ±ýÚõ ¦º¡øÖÅÐ ¯ñÎ. ¯Ä¡ò ¾¢Õ§ÁÉ¢ ±ýÀÐ °ÕÄÅ÷ ÀÊÁõ. «ôÀÊô À¡÷ò¾¡ø ¾¢Õ§ÁÉ¢ ±ýÈ ¦º¡ø ܼ Icon ±ýÀ¾üÌ þ¨½Â¡ÉÐ ¾¡ý. þýÛõ º¢Ä÷ ¾¢Õ§ÁÉ¢¨Âò ¾¢Õ×Õ ±ýÚõ ¾¢Õ¦Áö ±ýÚõ ¦º¡øÖÅ¡÷¸û. ±øÄ¡õ þ¼õ ¦À¡Õû ²Åø À¡÷òÐô ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñÎõ.

¾¢Õ§ÁÉ¢ ±ýÈ×¼ý «ó¾î ¦º¡ø ¦ÀüÈ þý¦É¡Õ º¡Â¨Äî ¦º¡øÄò §¾¡ýÚ¸¢ÈÐ. Á¨Ä¡Çò¾¢ø ¿õ⾢⸨Çò ¾õÀ¢Ã¡ý (¾õ ¦ÀÕÁ¡ý) ±ýÚ ÁðÎõ «øÄ¡Ð ¾¢Õ§ÁÉ¢ ±ýÚõ ŢǢôÀÐ ¯ñÎ.

¦¾üÌì §¸ÃÇòÐ °÷¸Ç¢ø ¾¢Õ§ÁÉ¢¸û ¦Àâ¾É측Ãáö þÕôÀ¡÷¸û. «ó¾ Ũ¸Â¢ø «Ãò¾õ, ¾¨º, ±ýÒ ¦¸¡ñ¼ þó¾ò ¾¢Õ§ÁÉ¢¸Ùõ Icon - ¸û ¾¡ý. Óü§À¡ìÌî º¢ó¾¨É ÜÊÂ, 20õ áüÈ¡ñÎô À¢ó¨¾Â ¸¡Äò¾¢Öõ, ¦À¡Ð×¼¨Áì ¸ðº¢ìÌû §¾¡Æ÷ ®.Å¢.§¸. ¿õ⾢âôÀ¡ð¨¼ò ¾¢Õ§ÁÉ¢ ±ýÚ «¨Æò¾ Óð¼¡û ¾Éí¸Ùõ þÕó¾É.

¬ñ¨¼ - «Ê¨Á Å¡¨¼ «Ê측Áø, þ¨ÈÅý - Á¾õ ±ýÚ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇ¡Áø, Icon ±ýÀ¨¾ò ¾Á¢Æ¢ø ¦º¡øÄ §ÅñÎõ ±ýÈ¡ø ¾¢Õ§ÁÉ¢§Â¡, ¾¢Õ×էš, ÀÊÁ§Á¡ (ÀÊÁõ ±ýÈ ¦º¡ø¨Ä þÄ츢Âì ¦¸¡û¨¸¸Ç¢ø §ÅÚ Å¢¾ôÀ¡É ¦À¡ÕÇ¢ø ÀÂýÀÎòи¢È¡÷¸û.) ¿ÁìÌô ÀÂýÀ¼¡Áø §À¡¸¢ýÈÉ.

þÉ¢, icon ±ýÈ ¦º¡ø ¦ÅÚ§Á ¯Â÷¾¢¨½¨Â ÁðÎõ ÌÈ¢ôÀ¾¡ö þøÄ¡Áø, ¸½¢ò¾¢¨Ã¢ø þÕìÌõ ÌðÊ ÌðÊ ¯ÕÅí¸¨ÇÔõ ܼ ÌȢ츢ÈÐ ±ýÚ ¿¡õ «È¢§Å¡õ. ¾¢¨½ À¡÷측¾ §Á¨Ä ¦Á¡Æ¢¸û §À¡ø þøÄ¡Áø, ¾Á¢Æ¢ø Icon ±ýÚ ¦º¡øÖžüÌ, ¯Â÷¾¢¨½, «·È¢¨½ ±É þÃñÎ ¾¢¨½ ´ðÊ ¦º¡ü¸¨Çì ¸¡½ §ÅñÊ þÕ츢ÈÐ.

´ù×¾ø ±ýÈ Å¢¨É ´ôÒ¾ø ±ýÈ ¦À¡Õ¨Ç§Â ¦¸¡ÎìÌõ. ´ù×¾ø µ×¾ø ±ýÚõ ¿£Ùõ. µ×¾ø ±ýÀÐ ´ôÀ¢ðÎì ¸¡ð¼ø ±ýÈ ¦À¡Õû ¦¸¡ûÙõ. µÅ¢ì ¸¡ðÎÅÐ µÅõ. µÅõ µÅ¢Âõ ±ýÚõ ¿£Ùõ. µÅ¢Âõ ŨÃÀÅ÷ µÅ¢Â÷. ´Õ ¸¡ðº¢¨Â «ôÀʧ ´ôÀ¢ðÎ ´Õ Ţâó¾ ÀÃôÀ¢ø ¸¡ðÎõ ¸¨ÄìÌ µÅ¢Âì ¸¨Ä ±ýÚ ¦ÀÂ÷. µÅõ ±ýÀ¨¾î º¢È¢Â¾üÌõ, µÅ¢Âõ ±ýÀÐ ¦Àâ¾üÌõÁ¡öî ¦º¡øÄÄ¡õ. ´ù¦Å¡Õ Icon-õ ´Õ µÅõ ¾¡ý. ¸½¢ò¾¢¨Ã¢ø ¸¢¼ìÌõ µÅí¸Ç¢ý (Icons) Á£Ð ÌÈ¢º¢ (cursor) ¨Â ¦¸¡ñÎÅÕõ Ũ¸Â¢ø 㺢(mouse)¨Âò ¦¾¡ðÎ ¿¸÷ò¾¢É¡ø «Ð ²§¾¡ ´Õ §¸¡ôÒ «øÄÐ þ¨Æ¨Â (file)ì ¸½¢ò¾¢¨Ã¢ø ¾¢È츢ÈÐ.

þÉ¢ ¯Â÷¾¢¨½ Icon ¸ÙìÌ Åէšõ. þó¾ icon ¸û ´Õ ¯Â÷¿¢¨Ä «¨¼Â¡Çò¾¢üÌ ±ÎòÐì ¸¡ð¼¡ö þÕ츢ȡ÷¸û. µ ±ýÈ µ¦ÃØòÐ ´Õ¦Á¡Æ¢ìÌ ¯Â÷ó¾ ±ýÈ ¦À¡ÕÙõ ¾Á¢Æ¢ø ¯ñÎ. µÅõ ±ýÈ ¦º¡ø¨Ä µÅ÷ ±ýÚ ¦º¡ýÉ¡ø ¯Â÷¾¢¨½¨Âì ÌÈ¢òÐÅ¢Îõ.

þÉ¢ µÅį̀ÄôÀ¡Ç÷¸û iconoclast ±ýÚ ¬Å¡÷¸û. ̨ÄôÀ¡Ç÷ ±ýÚ ¦º¡øÄò ¾Âí¸¢É¡ø ÁÚôÀ¡Ç÷ ±ýÚ ¦º¡øÄÄ¡õ.

±ý ÀâóШÃ:

µÅõ/µÅ÷ = icon
µÅì ̨ÄôÀ¡Ç÷ = iconoclast

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

10 comments:

ROSAVASANTH said...

மிக்க நன்றி.

Thangamani said...

நன்றிகள் பல.

contivity said...

அன்பு ஐயா இராம.கி அவர்களுக்கு

நான் தங்களின் பல பதிவுகளைப் படித்துள்ளேன். வியந்துள்ளேன். என்னுடைய இரண்டு காசு.. (இப்படி பயன் படுத்தல் சரியா?)

ஓவம் என்பதில் எவ்விதக்குழப்பமும் இல்லை. ஓவர் என்பது Over என்பதுடன் குழப்பிக் கொள்ள வாய்ப்புள்ளதால் எனது தாழ்மையான ஆலோசனை (இது தமிழ் தானே?) கீழே..

உயர்திணையில்

Icon ஓவக்கலைஞர்
Iconoclast ஓவக்குலைஞர்

என்ன கருதுகிறீர்கள்?

ROSAVASANTH said...

ஓவம் அல்லது ஓவர் என்று சொல்வது மற்ற இடங்களில் -உதாரணமாய் கணணியில் உள்ள icons, சூலம், சிலுவை, பிறை, உற்சவர்- பொருந்தி வந்தாலும் சில இடங்களில் திருவுரு போன்ற வார்த்தைகள் பொருத்தமாய் இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது. உதாரணமாய் பெரியார் சேகுவாரா போன்றவர்களுக்கு பயன்படுத்தும்போது. ஆனால் iconoclasts என்பதற்கு 'ஓவக் குலைப்பாளர் ' எல்லா இடத்திலும் பொருந்துவதாக எனக்கு தோன்றுகிறது.

Karunaa said...

ஐயா இராம.கி அவர்களே!உங்கள் காலைக் காட்டுங்கோ அடியேன் தொட்டுக் கும்பிடுவமெண்டு ஒருவுணர்வு மேலிடுகிறது.தமிழுக்குத் தொண்டாற்றுபவருக்கு இப்படி மரியாதை செய்வதில் தப்பில்லை.கேடுகெட்ட அரசியல்வாதிகiளின் காலில் விழும் தமிழ்மக்கள் உங்களைப்போன்ற பண்டிதர்களைக் கண்டும் காணாததுபோல் தமாஷ் பண்ணும்.எதுவெப்படியோ உங்களைக் காத்து தமிழுக்குப் பணிசெய்விக்க நம்மிடம் எந்த அரச வடிவமுமில்லை.நீங்கள் தனிமனிதராய்க் காரியமாற்றினால் அதற்காகக் காலிலையாவது விழுந்த அன்பைக் காட்டுகிறோம்.
பணிவோடு
பரமுவேலன்

இராம.கி said...

பின்னூட்டு இட்ட நண்பர்களுக்கு என் நன்றி.

திரு. Contivity க்கு என் மறுமொழி:

பொதுவாகத் தமிழில் 2 சல்லி என்று தான் சொல்லிப் பழக்கம். அந்தக் காலத்தில் ஒரு உருவாய்க்கு 16 அணா. ஓரணாவுக்கு 4 சல்லி. பின்னால் அது உருது பழக்கத்தில் பைசா என்றும் சொல்லப் பட்டது. சல்லி என்ற சொல் கிட்டத்தட்ட cent என்பதற்குச் சமம். (எப்படி நொறுக்கியது நூறோ அது போலச்) சதைத்தது சதம். நூறுதல் என்பது பொடிப்பொடியாக ஆக்குதல். சதைத்தலும் சதாய்த்தலும் கூட அதே பொருள்தான். அந்தச் சதாய்ப்பின் வேர் சல். சல்லின் இன்னொரு வளர்ச்சி சல்லி. சல் என்பது சில்லாய்த் திரிந்து சிதறல் என்ற வினையும் பிறக்கும். (தமிழ் எண்களின் சொற்பிறப்பு கொஞ்சம் ஆழமானது. இன்னொரு முறைதான் அதை எழுத வேண்டும்.)

காசு என்ற சொல் பொதுமைச் சொல்லாகப் பணத்தைக் குறித்தது. சிறிதளவு விதப்பாகக் coin என்பதைக் குறித்தது. இப்பொழுது பைசா என்பதற்கு இணையாகவும் சொல்லுகிறோம்.

அடுத்து ஓவர் பற்றிய உங்களின் முன்னிகை (comment). நாம் ஒரு மொழியின் சொற்களை இன்னொரு மொழியின் சொற்களோடு பொருத்திப் பொருட்குழப்பம் காட்டத் தொடங்கினால் அப்புறம் முடிவில்லை. இதையே ஒரு கடைப்பிடி நெறியாகக் கொண்டால் அப்புறம் எந்தச் சொல்லையும் இன்றையத் தமிழில் சொல்ல முடியாது போகலாம். நான் திணைக் காரணம் பற்றியே Icon என்பதற்கு ஓவம் / ஓவர் என்ற சொற்களைப் பரிந்துரைத்தேன். திணை பார்க்க வேண்டாம் என்று தமிழ் கூறு நல்லுலகம் முடிவு செய்யுமானால் ஓவம் என்பதையே கூட உயர்திணைக்கும் பயிலலாம்.

இந்தக் கலைஞர் என்ற பின்னொட்டு வேண்டாம் என்பது என் கருத்து. Icon என்பவர் உயர்ந்த நிலையில் ஒரு அடையாளமாக முன்மாதிரியாகச் சொல்லப் படுபவர். அவரைக் கலைஞர் என்று சொன்னால் அது அவரின் தகுதியைக் குறைக்கிறது.

அடுத்து திரு ரோசா வசந்திற்கு:

திருமேனி, திருவுரு, திருமெய் போன்ற சொற்கள் சமய உணர்வைக் கொண்டுவந்து விடக்கூடும் என்பதால் அவற்றைத் தவிர்த்தேன். நான் அந்தச் சொற்களை கோயில் தொடர்பான செய்திகளில் பெரிதும் பயிலுவேன் தான். பெரியார், சேகுவேரா போன்றோர் ஒருவித அடையாளம் காட்டுபவர்கள் தான். அதிலும் இவர்கள் ஒரே பொழுதில் ஓவர்களாகவும், ஓவக் குலைப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

என்னுடைய பரிந்துரைகளை உங்களுக்கு உகப்பு என்றால் புழங்குங்கள்.

முடிவில் திரு. பரமுவேலனுக்கு,

நண்பரே, ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ளுவோம். நம்மால் முடிந்ததைச் செய்வோம். பணிவு என்பது மாந்த நேயத்திற்குள் இருக்கட்டும். அதற்கு மேல் உணர்வு மேலீட்டால் வேறு எதுவும் செய்ய வேண்டாம். நல்ல தமிழில் பேசுவதை, எழுதுவதை நமக்குத் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் அழுத்திச் சொல்லுங்கள். அது ஒன்றே எனக்குப் போதும்.

அன்புடன்,
இராம.கி.

Vinodh Kumar said...

அருமையான ஆய்வுப் பரிந்துரை.
எனக்கு உங்களது வழிமுறையில் பிடித்தது தனிச் சொற்களைத் தேர்ந்தெடுத்திருப்பதே. ஒரு மொழி வளர, இருக்கும் தெரிந்த சொற்களையே சேர்த்துப் புதுசொற்களை உருவாக்குவதற்கு பதிலாக உங்களைப் போன்று ஆய்வு முறையிலோ அல்லது பயன்பாட்டின் (create a new word that fits within the sounds of the language and use it, people will start picking it up for their own usages) மூலமாக புது சொற்களை அமைக்க வேண்டும் என்பது என் கருத்து.

வளரட்டும் உங்கள் தமிழ் பணி.

Vinodh
http://visai.blogspot.com

வசந்தன்(Vasanthan) said...

அன்பு ஐயாவுக்கு வணக்கம்.
நல்ல கட்டுரை.
நான் இவ்வளவு நாளும் 'சல்லி' என்பது சிங்களச் சொல் என்றே நினைத்திருந்தேன். இலங்கையில் கொழும்புப் பக்கத் தமிழர்கள் சிங்களத்திலிருந்து நேரடியாக இச்சொல்லைப் பெற்றுப் புழங்குகிறார்கள்.

மேலும் ஒரு கேள்வி.
'ஒரு சில' என்று பயன்படுத்தும் முறை சரியா? சில என்பதன்முன் நாம் ஒரு என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாதென அறிந்திருந்தேன். (ஆனால் எல்லோருமே பயன்படுத்துகிறோம்.) இலக்கணப் படி இது சரியா?
அல்லது ஆங்கிலத்தில் 'a couple of" என்று பயன்படுத்துவது மாதிரியா?

Vanthiyathevan said...

Á¾¢ôÀ¢üÌȢ þáÁ.¸¢ ³Â¡ «Å÷¸ÙìÌ,

¾í¸û À¾¢×¸¨Ç ¾¢Õ.Íó¾÷áºý ±ÉìÌ «È¢Ó¸ôÀÎò¾¢Â¾¢Ä¢ÕóÐ Å¡º¢ì¸ò ¦¾¡¼í¸¢§Éý. ±ýÛ¨¼Â ÀûǢ측Äò¾¢ø ¾Á¢ú¬º¡ý Á¨Èó¾ ¾¢Õ. «Æ¸ôÀò ¾Á¢Æ§É Á£ñÎõ ¯Â¢÷ò¦¾ØóÐ ¾Á¢ú ¸üÚì ¦¸¡ÎôÀÐ §À¡ÖûÇÐ. ÅÇÃðÎõ ¾í¸û ¾Á¢úò ¦¾¡ñÎ.

ºøÄ¢ì ¸¡Í ±ýÀ¡÷¸§Ç? «Ð «ÎìÌò¦¾¡¼Ã¡? À¢Ã¢ò¾¡Öõ ¦À¡Õû ¾Õ¸¢ýȧ¾. §ÁÖõ «¨Å¸û, þ¨Å¸û ±ýÀÐ ¾Á¢ú þÄ츽 Å¢¾¢ôÀÊ ºÃ¢Â¡É À¢Ã§Â¡¸í¸Ç¡? §¿Ãõ ¸¢ðÎõ §À¡Ð Å¢¨¼ ¾¡Õí¸û.

இராம.கி said...

அன்பிற்குரிய வினோத் குமார்,

தங்கள் கனிவான சொற்களுக்கு நன்றி.

அன்பிற்குரிய வசந்தன்,

ஒரு சில என்ற சொல்லாட்சி இந்தக் காலத்தில் பலரும் பயன்படுத்துவது தான். அதை "a few" என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறார்கள். அது இலக்கணப்படி சரியா என்பதை நான் அறியேன். சொல்லிப் பார்க்கும் போது தவறில்லை என்றே தோன்றுகிறது.

அன்பிற்குரிய வந்தியத்தேவன்,

சல்லிக் காசு என்னும் போது அது அடுக்குத் தொடர் இல்லை. இங்கே காசு என்பது coin என்ற பொருளில் வருகிறது. சல்லிக் காசு என்பது போல் அணாக் காசு, பைசாக் காசு என்று கூடச் சிலர் ஆளுவதைக் கேட்டிருக்கிறேன்.

அவைகள், இவைகள் என்பவற்றை இரட்டைப் பன்மை என்று சொல்லுவார்கள். சங்க காலத்தில் அந்த வழக்கம் இல்லை. பின்னால் நிலக்கிழாரிய குமுகாயம் நம்மூரில் வேரூன்றியபிறகு, இது போன்ற இரட்டைப் பன்மையில் குறிப்பிடும் முறை ஏற்பட்டிருக்கிறது. இதற்கும் மேலே போய், ஆண்டை, அடிமை முறையில் கிளர்ந்த மொழி நம்பூதிரிகளுக்கும் மற்றோருக்கும் இடையே பயிலும் மொழி. கொஞ்சம் மலையாளம் தெரிந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். "அத்தேகம் எந்து பரயுன்னது?" அவர் என்று சொல்லக் கூடாதாம். அந்த மேனி - அத்தேகம் - என்ன சொல்லுகிறது? கிட்டத்தட்ட இதே பணிவோடு தான் ஆதீனங்களும் நம்மூரில் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். "ஆதீனம் என்ன சொல்லுறாக?" இங்கே, எதிரே முன்னிலையில் இருக்கும் ஒரு மாந்தரை முன்னிலையில் சொல்லாமல் படர்க்கையில் சொல்லும் பணிவான முறை பயிலப் படுகிறது.

ஓர்ந்து பார்த்தால், நம் மொழி இன்னும் நிலக்கிழாரியத்தில் இருந்து, ஆண்டை-அடிமை முறையில் இருந்து, புத்துருவம் பெறாமல் இருக்கிறது என்பது புலப்படும். நம்மை அறியாமலேயே நாம் மொழியால் கட்டுண்டு கிடக்கிறோம். நம் சொல்லாட்சிகளும், வாக்குகளும் பத்திகளும் காலத்தால் (கிட்டத்தட்ட பெருஞ்சோழர் காலத்தில்) சிறைப்பட்டுக் கிடக்கின்றன. We are almost conditioned by our language, especially through antiquated forms. The way we treat women is also fossilized through language.

என்றைக்கு இதை உணருவோம்?

அன்புடன்,
இராம.கி.