Wednesday, June 22, 2005

மனசில் தேரோடுமா?

(உரைவீச்சு)

(அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர்வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு முதல் மரியாதை என்பது வரலாற்றில் உள்ளது தான். ஆனால் சில தலைமுறைகளுக்கு முன்னால் எல்லா மக்களும் அங்கு தேர்வடம் பிடித்தார்கள். இன்றைக்குத் தேர்வடம் பிடிப்பதில் ஒரு வறட்டுக் குரவம் (கௌரவம்).

நம் குமுகப் பிறழ்ச்சி பலநேரம் கொதிப்படைய வைக்கிறது. எத்தனையோ பெருமை கொண்ட சிவகங்கைச் சீமையின் மிஞ்சிப் போன அவலங்களுள் இதுவும் ஒன்று.)

மனம் வெதும்பலுடன்,
இராம.கி.

"என்னங்கடா,
'இன்னார் மகன்'னு
படங் காட்டுறீயளா?"

"அஞ்சு மணிக்கு நாலுவீதி
சுத்திவரும்னு சொல்லிப்புட்டு,
ரெண்டு மணிக்கு அவுக்கவுக்காய்
ஏறிவந்து வடம் புடிப்பா?

கூடி வந்த எங்க சனம்,
கோயில் தள்ளி நிறுத்திவச்சி,
விறுவிறுன்னு நாலு வீதி
சுத்திவர இழுத்துவிட்டு,

தேருநிலை கொள்ளுமுனே,
உப்புக்கொரு சப்பாணியா,
ஓட்டிவந்த இருபத்தாறை
ஒண்ணுகூடித் தொடச்சொல்லி...."

"ஏண்டா டேய்,
320 பேரு வடம்பிடிக்கிற இடத்துலே,
இருபத்தாறுக்கு மேல்
எங்காளுன்னாக் கொள்ளாதோ?

நாலுவடத்தில் ஒண்ணைக் கொடுத்தாக்
கோணப்பயகளா, உங்களுக்குக்
கொறஞ்சிபோயி விளஞ்சிருமோ?"

தொட்டவடம் படம்புடிச்சு
பட்டம்விடப் போறீயளோ?"

"இதுக்கு
ரெண்டாயிரம் காவல்,
ஒரு ஆணையன்,
ரெண்டு மூணு வட்டாட்சி,
ஒரு மாவட்டாட்சி,
ஏகப்பட்ட ஊடகம்!"

"போங்கடா, போக்கத்த பயகளா?
போயிஅந்த உயர்மன்றில்
ஓங்கி அறிக்கை வையுங்க!
அரசினோட அதிகாரம்
அமைதிகாத்த கதைவிடுங்க!"

"அப்புறம்

தமிழினத்துத் தலைவரென,
புரட்சிக்குத் தலைவியென,
தமிழ்க்குடியைத் தாங்கியென,
புரட்சியெழும் புயலெனவே

நாலைஞ்சு பேரிங்கே
நாடெல்லாம் அலையுறாங்க

அவுகளையெல்லாம்
இனிமே சிவகங்கைச் சீமையை
எட்டிப் பார்க்காதீகன்னு சொல்லுங்க.

வாக்குக்கேட்டு ஒரு பய வந்தா,
அப்புறம் செருப்புப் பிஞ்சுரும், ஆமா!"

"டேய், என்னங்கடா பேசிட்டு நிக்கிறீங்க!

தேரோடுற பாதையிலே,
தெளியாத காலத்துலே,
கல்லும், முள்ளும் கிடந்ததனால்,
பள்ளு, பறை நம்மஆட்கள்
கையெல்லாம் வேண்டுமெனத்
கூப்பிட்டாய்ங்க! தேரிழுத்தோம்!
இப்பத்தான்,
எல்லாம் பொருளாதாரம் தலைகீழாச்சே!
அவனவன் சோலி அவனுக்கு;
எங்கே பார்த்தாலும் வரட்டுக் குரவம்டா!
அதோட,
நாலுவீதியுந்தான் தார்போட்டு
இழைச்சுட்டாய்ங்களே, அப்புறம் என்ன?
அவய்ங்க மட்டுமே தொட்டாக் கூடத்
தேர் என்ன, வண்டி கணக்கா ஓடாது?
முக்கா மணியென்னடா?
முக்குறதுள்ளே முடிச்சிருவாய்ங்க?"

"அய்யா, சாமிகளா, போறவழியிலே
சொர்ணமூத்தீசரையும் பெரியநாயகியையும்
நாங்க சாரிச்சதாச் சொல்லுங்க!
நாங்க வடந்தொட்டா,
அருள்மிகுந்த அவுகளுக்கு ஆகாதாம்,
கோச்சுகுவாகளாம்,
மழ வாராமப் பண்ணிருவாகளாம்."
இப்படியே போனா,
அவுகளும் எங்களுக்கு வேணாம்,
நாங்களும் அவுகளை விலக்கி வச்சுர்றோம்"

"டேய், சாமிகுத்தம்டா,
விலக்கு, கிலக்குன்னு பேசாதே!"

"அடச்சே போங்கடா!
தேரோடுதா(ன்), தேர்?
முதல்லே
அவனவன் மனசுலே
தேரோடுமான்னு பாருங்கடா?"


Áɺ¢ø §¾§Ã¡ÎÁ¡?
(¯¨ÃÅ£îÍ)

(«Ã¢ÂìÌÊ¢ø þÕóÐ ¬È¡ÅÂø ÅƢ¡¸ò §¾Å§¸¡ð¨¼ §À¡Ìõ ÅƢ¢ø ¸ñ¼§¾Å¢ þÕ츢ÈÐ. º¢Å¸í¨¸ ÁýÉ÷ ÅÆ¢ì §¸¡Â¢ø; ¿¡Ö ¿¡ð¼¡ÕìÌ Ó¾ø Á⡨¾ ±ýÀÐ ÅÃÄ¡üÈ¢ø ¯ûÇÐ ¾¡ý. ¬É¡ø º¢Ä ¾¨ÄӨȸÙìÌ ÓýÉ¡ø ±øÄ¡ Áì¸Ùõ §¾÷żõ À¢Êò¾¡÷¸û. þý¨ÈìÌò §¾÷żõ À¢ÊôÀ¾¢ø ´Õ ÅÃðÎì ÌÃÅõ (¦¸ªÃÅõ).

¿õ ÌÓ¸ô À¢Èú Àħ¿Ãõ ¦¸¡¾¢ôÀ¨¼Â ¨Å츢ÈÐ. ±ò¾¨É§Â¡ ¦ÀÕ¨Á ¦¸¡ñ¼ º¢Å¸í¨¸î º£¨Á¢ý Á¢ïº¢ô §À¡É «ÅÄí¸Ùû þÐ×õ ´ýÚ.)

ÁÉõ ¦ÅÐõÀÖ¼ý,
þáÁ.¸¢.

"±ýÉí¸¼¡,
'þýÉ¡÷ Á¸ý'Û
À¼í ¸¡ðÎÈ£ÂÇ¡?"

"«ïÍ Á½¢ìÌ ¿¡ÖÅ£¾¢
Íò¾¢ÅÕõÛ ¦º¡øÄ¢ôÒðÎ,
¦ÃñÎ Á½¢ìÌ «×ì¸×측ö
²È¢ÅóРżõ ÒÊôÀ¡?

ÜÊ Åó¾ ±í¸ ºÉõ,
§¸¡Â¢ø ¾ûÇ¢ ¿¢Úò¾¢Å,
Å¢ÚÅ¢ÚýÛ 4 Å£¾¢
Íò¾¢Åà þØòÐÅ¢ðÎ,

§¾Õ¿¢¨Ä ¦¸¡ûÙÓ§É,
¯ôÒ즸¡Õ ºôÀ¡½¢Â¡,
µðÊÅó¾ þÕÀò¾¡¨È
´ñÏÜÊò ¦¾¡¼î¦º¡øÄ¢...."

"²ñ¼¡ §¼ö,
320 §ÀÕ Å¼õÀ¢Êì¸¢È þ¼òЧÄ,
þÕÀò¾¡ÚìÌ §Áø
±í¸¡ÙýÉ¡ì ¦¸¡ûÇ¡§¾¡?

¿¡Öżò¾¢ø ´ñ¨½ì ¦¸¡Îò¾¡ì
§¸¡½ôÀ¸ǡ, ¯í¸ÙìÌì
¦¸¡Èﺢ§À¡Â¢ Å¢ÇﺢէÁ¡?"

¦¾¡ð¼Å¼õ À¼õÒÊîÍ
Àð¼õÅ¢¼ô §À¡È£Â§Ç¡?"

"þÐìÌ
¦Ãñ¼¡Â¢Ãõ ¸¡Åø,
´Õ ¬¨½Âý,
¦ÃñÎ ãÏ Åð¼¡ðº¢,
´Õ Á¡Åð¼¡ðº¢,
²¸ôÀð¼ °¼¸õ!"

"§À¡í¸¼¡, §À¡ì¸ò¾ À¸ǡ?
§À¡Â¢«ó¾ ¯Â÷ÁýÈ¢ø
µí¸¢ «È¢ì¨¸ ¨ÅöÔí¸!
«Ãº¢§É¡¼ «¾¢¸¡Ãõ
«¨Á¾¢¸¡ò¾ ¸¨¾Å¢Îí¸!"

"«ôÒÈõ

¾Á¢Æ¢ÉòÐò ¾¨ÄŦÃÉ,
ÒÃðº¢ìÌò ¾¨ÄÅ¢¦ÂÉ,
¾Á¢úìÌʨÂò ¾¡í¸¢¦ÂÉ,
ÒÃ𺢦ÂØõ Ò¦ÄɧÅ

¿¡¨ÄïÍ §ÀÃ¢í§¸
¿¡¦¼øÄ¡õ «¨ÄÔÈ¡í¸

«×¸¨Ç¦ÂøÄ¡õ
þÉ¢§Á º¢Å¸í¨¸î º£¨Á¨Â
±ðÊô À¡÷측¾£¸ýÛ ¦º¡øÖí¸.

Å¡ìÌ째ðÎ ´Õ À Åó¾¡,
«ôÒÈõ ¦ºÕôÒô À¢ïÍÕõ, ¬Á¡!"

"§¼ö, ±ýÉí¸¼¡ §Àº¢ðÎ ¿¢ì¸¢È£í¸!

§¾§Ã¡ÎÈ À¡¨¾Â¢§Ä,
¦¾Ç¢Â¡¾ ¸¡ÄòЧÄ,
¸øÖõ, ÓûÙõ ¸¢¼ó¾¾É¡ø,
ÀûÙ, À¨È ¿õÁ ¬ð¸û
¨¸¦ÂøÄ¡õ §ÅñΦÁÉò
ÜôÀ¢ð¼¡öí¸! §¾Ã¢Øò§¾¡õ!
þôÀò¾¡ý,
±øÄ¡õ ¦À¡ÕÇ¡¾¡Ãõ ¾¨Ä¸£Æ¡î§º!
«ÅÉÅý §º¡Ä¢ «ÅÛìÌ;
±í§¸ À¡÷ò¾¡Öõ ÅÃðÎì ÌÃÅõ¼¡!
«§¾¡¼,
¿¡ÖÅ£¾¢Ôó¾¡ý ¾¡÷§À¡ðÎ
þ¨ÆîÍð¼¡öí¸§Ç, «ôÒÈõ ±ýÉ?
«Åöí¸ ÁðΧÁ ¦¾¡ð¼¡ì ܼò
§¾÷ ±ýÉ, ÅñÊ ¸½ì¸¡ µ¼¡Ð?
Ó측 Á½¢¦Âýɼ¡?
ÓìÌÈÐû§Ç ÓÊÕÅ¡öí¸?"

"«ö¡, º¡Á¢¸Ç¡, §À¡ÈÅƢ¢§Ä
¦º¡÷½ãò¾£º¨ÃÔõ ¦À⿡¸¢¨ÂÔõ
¿¡í¸ º¡Ã¢îº¾¡î ¦º¡øÖí¸!
¿¡í¸ ż󦾡ð¼¡,
«ÕûÁ¢Ìó¾ «×¸ÙìÌ ¬¸¡¾¡õ,
§¸¡îÍÌÅ¡¸Ç¡õ,
ÁÆ Å¡Ã¡Áô Àñ½¢ÕÅ¡¸Ç¡õ."
þôÀʧ §À¡É¡,
«×¸Ùõ ±í¸ÙìÌ §Å½¡õ,
¿¡í¸Ùõ «×¸¨Ç Å¢Ä츢 ÅîÍ÷§È¡õ"

"§¼ö, º¡Á¢Ìò¾õ¼¡,
Å¢ÄìÌ, ¸¢ÄìÌýÛ §Àº¡§¾!"

"«¼î§º §À¡í¸¼¡!
§¾§Ã¡Î¾¡(ý), §¾÷?
Ó¾ø§Ä
«ÅÉÅý ÁÉͧÄ
§¾§Ã¡ÎÁ¡ýÛ À¡Õí¸¼¡?"

9 comments:

NambikkaiRAMA said...

ஐயா! தாங்கள் சொன்னதுபோல் மனசில் தேரோடும் நாளே மகத்தான நாள். அதற்கு சாத்தியமே இல்லாதவாறு இந்த அரசியல்வாதிகள் செய்த்டுவார்கள் போலிருக்குதே?

Thangamani said...

உரை வீச்சு நன்றாக இருந்தது..
நன்றி.

ஏன் அரசியல்வாதிகளோடு மட்டும் நிறுத்திவிட்டீர்கள்? அவர்கள் என்ன செய்யமுடியும்? ஜகத்குருக்கள், ஸ்ரீலஸ்ரீகள், ஸ்ரீஸ்ரீகள், இதெல்லாம் சாதி பார்க்கையில் பாவம் பாமரர் என்ன செய்வர்?

குரவம் என்பது கெளரவம் என்பதன் தமிழா அல்லது தனிச் சொல்லா என்பதைச் சொல்லுவீர்களா?

இராம.கி said...

அன்பிற்குரிய பொதிவுராமருக்கு

(positive என்பதை பொதிவு, பொதிவாக என்றுதான் தமிழில் எழுதிவருகிறேன். தவிர அதைத் தங்கள் பெயரோடு சிறு எழுத்தில் எழுதினீர்கள்; எனவே அது பெயருள் சேர்த்தியில்லை போலும், எனவே தமிழாக்கம் செய்யலாம் என்று எண்ணிவிட்டேன். நீங்கள் மறுத்தால் மாறிக் கொள்ளுகிறேன். எதற்குள்ளும் நொசிவு, நொகை (negative) பார்க்காமல் பொதிவைத் தேடி முன்வைப்பது ஒரு நல்ல குணம் தானே?)

அரசியல் வாதிகள் ஒருபக்கம் மட்டுமே! மொத்தக் குமுகாயமும் இதற்குப் பொறுப்பு என்று நான் எண்ணுகிறேன். நம் மனங்கள் மாறாதவரை, அதில் இருக்கும் கல்லும் முள்ளும் அகன்று அதில் தேரோட வைக்காதவரை சாலையில் எல்லோரும் வடம்பிடித்துத் தேரோட வைக்க முடியாது. உங்கள் கருத்திற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய தங்கமணி,

ஜகத்குருக்கள், ஸ்ரீலஸ்ரீகள், ஸ்ரீஸ்ரீகள், ஆகியோர் சாதி பார்ப்பது ஊரெல்லாம் தெரிந்தது தான். அவர்கள் முன்னேற்றப் பாதையில் நம்மை எடுத்துச் செல்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் குமுகத்தை இயக்கவைக்கும் சூழ்த்திறதாரிகள் அல்லர். ஆளுவோர் அவர்களைத் தங்களுக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுவார்கள், இல்லையென்றால் தூக்கி எறிவார்கள்.

நான் அரசியலார் பற்றிச் சொன்னது ஓர் எதிர்பார்ப்பின் காரணத்தால்.

முன்னேற்றம் பற்றிக் கூக்குரலிட்டு கூத்தடிக்கும் இவர்களில் ஒருசிலர் இந்த நிகழ்வு பற்றி அறிக்கை கூட வெளியிடவில்லை, அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்பது எனக்குச் சுட்டிக் காட்ட வேண்டியதாகிறது; குமுகத்தில் இருந்து எவ்வளவு தொலைவு இவர்கள் விலகிப் போய்விட்டார்கள் என்று நான் உணர்த்த முற்படுகிறேன். இவர்களுக்கெல்லாம் வாக்குப் போட்டுக் கொண்டு இருப்பது வேதனையைத் தருகிறது என்று சொல்ல விழைகிறேன்.

கண்டதேவியில் தேரோடுவதோ, தேரோடாமல் இருப்பதோ, தமிழ்நாட்டின் பிறழ்ச்சனை இல்லை தான். ஆனால் அதனுள் பொதிந்து கிடக்கும் சாதிப் பிரிவினை நாம் நிலக்கிழாரியத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்று நெஞ்சில் உறைக்கச் சொல்லுகிறது. நிலக்கிழாரியம் மாறாமல் இருப்பது தமிழ்நாட்டின் பிறழ்ச்சனை அல்லவா?

இனிக் குரவம் பற்றி நீங்கள் கேட்டது.

குரவம் தமிழ் தான் அய்யா. பல தமிழ்ச்சொற்களை வடமொழிப் பலுக்கலில் நம்மில் ஒருசாரார் புழங்கியதால், அவை உருமாறிக் கிடக்கின்றன. குல் என்னும் வேர் கூடல், சேர்தல் கருத்தில் வரும். இயல்பான வளர்ச்சியில், கூடற் கருத்தில் இருந்து திரட்சிக் கருத்தும், திரட்சியில் இருந்து பருமைக் கருத்தும், பருமையில் இருந்து பெருமைக் கருத்தும் பிறக்கும். இந்தச் சொல்வளர்ச்சிகளை அறியப் பாவாணர் பொத்தகங்கள் படியுங்கள். (குறிப்பாக வேர்ச்சொற் கட்டுரைகள்)

குரு = பெருமையுள்ளவன், மேலானவன்.
குருசில்/குரிசில் = பெருமையுள்ள தலைவன்
குரவர் = மேலானவர்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்போர் சிவநெறியின் சமயக் குரவர்.
குரவம் = மேலான தன்மை, பெருமை

நான் அடுத்தடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம். சங்கப் பாடல்களையும் துணைக்கு அழைக்கலாம். வேர்மூலம் பார்த்தால் குரவம் முற்றிலும் தமிழே. உகர, ஒகரத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள் பலவும் இப்படி உருமாறி ஔகார ஒலிபெற்று வடமொழித் தோற்றம் காட்டுகின்றன. தமிழில் வரும் போலி ஔகாரச் சொற்களை எல்லாம் ஒரு பட்டியல் போட்டு விளக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின் ஒருகால் செய்வேன்.

அன்புடன்,
இராம.கி.

Thangamani said...

விளக்கத்துக்கு நன்றிகள் அய்யா.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

குரவர் என்றால் தலைவர், பெரியவர் என்ற பொருளைப் பள்ளிநாட்களில் படித்தது நினைவிருந்தது. ஆனால் அது தான் குரவம்-கௌரவம் என்று மயங்கிக் கிடக்கிறது என்பது இதுநாள் வரை உணரவில்லை. நீங்கள் விளக்கிய பிறகு 'அட' என்றொரு ஆச்சரியம் பிறக்கிறது. பிற 'ஔ'கார மயக்கங்கள் பற்றிய உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

இராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by a blog administrator.
இராதாகிருஷ்ணன் said...

உரை வீச்சின் அச்சுப் பிரதியைப் பேருந்தில் பயணிக்கும்போது படித்தேன்; கண்டதேவியின் பெயரைத் தவிர அதன் வரலாறு தெரியாது. இருப்பினும் ஒரு தேரை இழுப்பதற்காக நம்மக்கள் ஆடும் ஆட்டம் முட்டாள்தனமாகத் தெரிகிறது.

'குரவம்' என்ற சொல்லிற்கு கழகத் தமிழகராதி பின்வரும் பொருள்களைத் தருகிறது: ஒரு மரம், கோட்டம், நறுமணம், பேரீந்து, குரா, குதிரையின் மேலுதடு, குறிஞ்சா. கெளரவம் என்பதைக் குறிப்பிடும் பொருள் இதனுள் வரவேயில்லை! ஒருவேளை அது மறைந்தே போய்விட்டதா, இல்லை தாங்கள் அதைக் வெளிக்கொணர்கிறீர்களா என்பதையும் விளக்குங்கள்.

இராதாகிருஷ்ணன்.

Anonymous said...

"....தமிழினத்துத் தலைவரென,
புரட்சிக்குத் தலைவியென,
தமிழ்க்குடியைத் தாங்கியென,
புரட்சியெழும் புயலெனவே....."

þÅ÷¸Ç¡ø ±øÄ¡õ þÉ¢
¾Á¢Æ¸ò¾¢üÌ ±ó¾ô ÀÂÛõ
þáР±ýÀ¨¾î ¦º¡øŧ¾
¸ñ¼§¾Å¢ §¾Õõ, ±í¸û ÍüÚô ÀðÊò
§¾÷¸Ç¢ý ¸¨¾¸Ùõ.

20 ÅÕ¼í¸Ç¡¸ µ¼¡Áø þÕó¾ ±í¸û ¸¢Ã¡Áò§¾÷
¸¼ó¾ ¨Å¸¡º¢Â¢ø µÊÂÐ. ¸ñ¼§¾Å¢ ÀÚ¢ø¨Ä.
26 §À÷ «ÛÁ¾¢ì¸ô Àð¼É÷. ¬É¡ø ±í¸û °Ã¢ø
§ÅÚÅ¢¾Á¡É ´ôÀó¾õ :-)

¾.¾, Ò.¾, ¾.Ì, Ò.Ò §À¡ýÈÅ÷¸Ç¡ø ¸¡Å¢Ã¢Â¢ý ¯Ã¢¨Á¨Â ¿¢¨Ä
¿¡ð¼ ÓʧŠÓÊ¡Ð. ¸¡Å¢Ã¢ ¬Ú
¦ÁøÄ À𼡠§À¡¼ôÀðΠŢÎõ ±ý§È §¾¡ýÚ¸¢ÈÐ.

«¨¾ ´ðÊ Ţ¨Ç ¿¢Äí¸û ²ü¸É§Å
Å£ðÎ Á¨É¸Ç¡¸ ¬¸¢Å¢ð¼É.

¾ü§À¡Ð ¾Á¢Æ¸ò¾¢ø ¸ÊóÐ ¦¸¡ûÇì ܼ
¬û þø¨Ä ±ýÀ§¾ ¯ñ¨Á. «¾¡ÅÐ
¸ÊóÐ ¦¸¡ûÇì ܼ ¾.¾, Ò.¾, ¾.Ì, Ò.Ò
§À¡ýÈ¡÷¸û ¾Ì¾¢ÂüÈÅ÷¸û. ¾Ãõ º¢í
¾Á¢ú¿¡ðÎìÌû ÅóÐ "¾Á¢ú¿¡ðÎìÌò
¾ñ½£÷ ¦¸¡Îì¸ ÓÊ¡Ð" ±ýÚ §Á¨¼§À¡ðÎô
§Àº¢Å¢ðÎî ¦ºø¸¢È¡÷. ¿õÁÅ÷¸û ¦ÁðÊ ´Ä¢Â¢ø
¸¡Äò¨¾ µðÊì ¦¸¡ñÊÕ츢ýÈÉ÷.

¾Á¢ú¿¡ðÎ «Ãº¢Âø ÌÃÅ÷¸ÙìÌõ, ¾Á¢ú ¾Á¢Æ¸ò¾¢ý ÌÃÅòÐìÌõ
±ó¾ò ¦¾¡¼÷Òõ þÕôÀ¾¡¸ò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.


¿øÄ Å£îÍ.
¿øÄ Á£ðÒ (ÌÃÅõ).

«ýÒ¼ý
¿¡¸.þÇí§¸¡Åý