ஓரடிக் கலங்கல் ஒட்டிய கிணற்றில்;
வாரிய வழங்கலோ(1) நின்றுபல் வாரம்;
புரைநீர்(2) தூர்ந்ததோ போந்த மாதமே;
கண்ணிமை ஆழ்வரி; கருத்தெலாம் தேடல்;
விண்ணிலே எங்கும் வெள்ளையாய்ப் பஞ்சுகள்;
வாய்நகை யோடு வறட்சியை அறிதரும்,
ஆயிழைப் பெண்ணாள் தொலைக்காட் சிக்குள்;
வெம்மையின் ஏற்றம் செம்மியே தெறிக்க,
அண்மையில் தேர்தல் அழகுசெய் தெருக்கள்;
எள்ளும் கொள்ளும் ஏசி வெடித்தே,
துள்ளுறும் முகத்துடன் துரக்கும்(3) மும்முரம்;
"நாளைத் தாங்கலை(4) எங்கு பிடிப்பது?"
"ஆயிரம் லிட்டர், நூற்று யிருபதா?(5)"
"என்ன இழவோ? கொடுத்துத் தொலையேன்;
இந்த வாரம் இன்னும் போகணும்;"
அலுவம்(6) நுழைந்து ஆழ்பணிக் கிடையில்,
புழுங்கிய பொதின அட்டை(7)யைப் பார்க்கின்,
உப்புச் செறிவை(8)க் குறைத்தே நீரை
ஒப்பவே மாற்றிடும் நுட்பியல் வல்லுநர்;
யாரோ இசுரயேல் நுட்பப் பொதினமாம்;
வாரண நீரின்(9) ஆரளச் செறிவை(10)
ஊடுகை எதிரில் (11) உழைந்து பிரித்து
நாடிக் கசக்கி, நன்னீர் ஆக்குமாம்;
திணைக்களம்(12) முழுக்கப் பரிசலில்(13) அடக்கி
முனைக்கவும் நிறுத்தவும் முடியுமாம்; இப்படி
ஆயிரம் லிட்டர் திணைக்களம் ஒன்றை
வேயவே(14) எழுபத் தாயிரம் போதுமாம்;
விளைத்த நீரின் விலையோ மலிவுதான்;
ஆயிரம் லிட்டர், நாற்பதே உரூபா;
மூப்பத் திரண்டு கோடிலிட் டரினால்(15),
நாவறழ் நகரின் தேவையைப் பூர்த்திட
இருபத் தோரே பில்லியன் உரூபா! (16)
செருகிய இமையாய், செருமிய கமறலில்,
கனவுகள் விரிந்தன; கணக்கும் பரந்தது;
இத்துணை சுளுவாய் இந்நகர்த் தேவையை
முத்திட ஒல்லுமேல், மூதிய தெதனால்?
ஊழல் வழக்கு, உருசியக் கும்பணி,
தெலுங்கு கங்கை; தேடும் வீராணம்;
ஆண்டாண்டு தோறும் அடிக்கும் கூத்துகள்;
அடைமழை வந்தால் இதையெலாம் மறந்து,
எத்தனை நாள்தான் எம்மைஏ மாற்றுவர்?
இன்னுமோர் முறைக்கு எத்தனை கதைகள்
எடுத்து ரைப்பார்கள் இந்நிலக் கட்சியர்?
மறதி என்பதே தமிழனின் சொத்தோ?;
மன்னிப் பென்பதே தமிழனின் பண்போ?
எப்படிப் பார்த்தும் இக்கதை மட்டும்
தப்பிலும் தவறிலும் தப்பா நிற்குதே!
தாக வறட்சியில் ஏகமாய் மக்கள்
ஆறலைப் பது(17)போல் ஆகி,
நீரலைப் படுவதே(18) எங்களின் விதியாம்.
அன்புடன்,
இராம.கி.
1. வாரிய வழங்கல் = water supply by metro water board
2. புரை நீர் = borewell water
3. துரப்பு = traffic
4. தாங்கல் = tanker
5. நூற்று இருபது உருபாய்கள்
6. அலுவம் = அலுவலகம்
7. பொதின அட்டை = business card
8. செறிவு = concentration
9. வாரண நீர் = marine water, கடல் நீர்
10. ஆரளச் செறிவு = ஆர்ந்த உப்புச் செறிவு
11. எதிர் ஊடுகை = எதிர்த்துச் செல்லும் ஊடுகை = reverse osmosis; ஊடகம் என்ற சொல்லை medium என்பதற்குச் சொல்லாமல் மிடையம் என்றே பயன்படுத்துவது நல்லது; இல்லையேல் ஊடுதல் = osmosis என்ற நல்ல சொல்லைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.
12. திணைக்களம் = plant
13. பரிசல் = barge; முழுத் திணைக்களத்தையும் ஒரு பரிசலில் நிறுவி கடற்கரை அருகே எங்கு வேண்டுமானாலும் நிறுத்த முடியுமாம்.
14. வேய்தல் = to build; ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் நீரை விளைவிக்க, ரூ.70000 தான் முதலீடு தேவைப்படுமாம். வெறும் நாலே மாதங்களில் திணைக்களம் அணியமாய் (ready) இருக்குமாம்; கேட்பதற்கு வியப்பாய் இருக்கிறது.
15. முப்பத்திரண்டு கோடி லிட்டர் = சென்னையின் ஒரு நாள் நீர்த் தேவை.
16. மேலே உள்ள நீர்த்தேவையைக் கொண்டுதர ஆகும் எதிர் ஊடுகை திணைக்களத்தில் முதலீடு வெறும் 21 பில்லியன் உருபாய்கள்; அதாவது 2100 கோடி உரூபாய்கள்.
17. ஆறலைப்பு = வழிப்பறிக் கொள்ளை
18. நீரலைப்பு = நீரால் நடக்கும் கொள்ளை.
In TSCII:
µÃÊì ¸Äí¸ø ´ðÊ ¸¢½üÈ¢ø;
šâ ÅÆí¸§Ä¡(1) ¿¢ýÚÀø Å¡Ãõ;
Ҩÿ£÷(2) à÷󾧾¡ §À¡ó¾ Á¡¾§Á;
¸ñ½¢¨Á ¬úÅâ; ¸Õò¦¾Ä¡õ §¾¼ø;
Å¢ñ½¢§Ä ±íÌõ ¦Åû¨Ç¡öô Àï͸û;
Å¡ö¿¨¸ §Â¡Î ÅÈ𺢨 «È¢¾Õõ,
¬Â¢¨Æô ¦Àñ½¡û ¦¾¡¨Ä측𠺢ìÌû;
¦Åõ¨Á¢ý ²üÈõ ¦ºõÁ¢§Â ¦¾È¢ì¸,
«ñ¨Á¢ø §¾÷¾ø «Æ̦ºö ¦¾Õì¸û;
±ûÙõ ¦¸¡ûÙõ ²º¢ ¦ÅÊò§¾,
ÐûÙÚõ Ó¸òмý ÐÃìÌõ(3) ÓõÓÃõ;
"¿¡¨Çò ¾¡í¸¨Ä(4) ±íÌ À¢ÊôÀÐ?"
"¬Â¢Ãõ Ä¢ð¼÷, áüÚ Â¢ÕÀ¾¡?(5)"
"±ýÉ þƧš? ¦¸¡ÎòÐò ¦¾¡¨Ä§Âý;
þó¾ Å¡Ãõ þýÛõ §À¡¸Ïõ;"
«ÖÅõ(6) ѨÆóÐ ¬úÀ½¢ì ¸¢¨¼Â¢ø,
ÒØí¸¢Â ¦À¡¾¢É «ð¨¼(7)¨Âô À¡÷츢ý,
¯ôÒî ¦ºÈ¢¨Å(8)ì ̨Èò§¾ ¿£¨Ã
´ôÀ§Å Á¡üÈ¢Îõ ÑðÀ¢Âø ÅøÖ¿÷;
¡§Ã¡ þÍçÂø ÑðÀô ¦À¡¾¢ÉÁ¡õ;
šý ¿£Ã¢ý(9) ¬ÃÇî ¦ºÈ¢¨Å(10)
°Î¨¸ ±¾¢Ã¢ø (11) ¯¨ÆóÐ À¢Ã¢òÐ
¿¡Êì ¸ºì¸¢, ¿ýÉ£÷ ¬ìÌÁ¡õ;
¾¢¨½ì¸Çõ(12) ÓØì¸ô ÀâºÄ¢ø(13) «¼ì¸¢
Ó¨Éì¸×õ ¿¢Úò¾×õ ÓÊÔÁ¡õ; þôÀÊ
¬Â¢Ãõ Ä¢ð¼÷ ¾¢¨½ì¸Çõ ´ý¨È
§Å§Å(14) ±ØÀò ¾¡Â¢Ãõ §À¡ÐÁ¡õ;
Å¢¨Çò¾ ¿£Ã¢ý Å¢¨Ä§Â¡ ÁÄ¢×¾¡ý;
¬Â¢Ãõ Ä¢ð¼÷, ¿¡üÀ§¾ ¯åÀ¡;
ãôÀò ¾¢ÃñÎ §¸¡ÊÄ¢ð ¼Ã¢É¡ø(15),
¿¡ÅÈú ¿¸Ã¢ý §¾¨Å¨Âô â÷ò¾¢¼
þÕÀò §¾¡§Ã À¢øÄ¢Âý ¯åÀ¡! (16)
¦ºÕ¸¢Â þ¨Á¡ö, ¦ºÕÁ¢Â ¸ÁÈÄ¢ø,
¸É׸û Ţâó¾É; ¸½ìÌõ ÀÃó¾Ð;
þòШ½ ÍÙÅ¡ö þó¿¸÷ò §¾¨Å¨Â
Óò¾¢¼ ´øÖ§Áø, 㾢 ¦¾¾É¡ø?
°Æø ÅÆìÌ, ¯Õº¢Âì ÌõÀ½¢,
¦¾ÖíÌ ¸í¨¸; §¾Îõ ţá½õ;
¬ñ¼¡ñÎ §¾¡Úõ «ÊìÌõ Üòиû;
«¨¼Á¨Æ Åó¾¡ø þ¨¾¦ÂÄ¡õ ÁÈóÐ,
±ò¾¨É ¿¡û¾¡ý ±õ¨Á² Á¡üÚÅ÷?
þýÛ§Á¡÷ Ó¨ÈìÌ ±ò¾¨É ¸¨¾¸û
±ÎòÐ ¨ÃôÀ¡÷¸û þó¿¢Äì ¸ðº¢Â÷?
ÁȾ¢ ±ýÀ§¾ ¾Á¢ÆÉ¢ý ¦º¡ò§¾¡?;
ÁýÉ¢ô ¦ÀýÀ§¾ ¾Á¢ÆÉ¢ý Àñ§À¡?
±ôÀÊô À¡÷òÐõ þ츨¾ ÁðÎõ
¾ôÀ¢Öõ ¾ÅÈ¢Öõ ¾ôÀ¡ ¿¢ü̧¾!
¾¡¸ ÅÈðº¢Â¢ø ²¸Á¡ö Áì¸û
¬È¨Äô ÀÐ(17)§À¡ø ¬¸¢,
¿£Ã¨Äô ÀÎŧ¾(18) ±í¸Ç¢ý Å¢¾¢Â¡õ.
«ýÒ¼ý,
þáÁ.¸¢.
1. šâ ÅÆí¸ø = water supply by metro water board
2. Ҩà ¿£÷ = borewell water
3. ÐÃôÒ = traffic
4. ¾¡í¸ø = tanker
5. áüÚ þÕÀÐ ¯ÕÀ¡ö¸û
6. «ÖÅõ = «ÖÅĸõ
7. ¦À¡¾¢É «ð¨¼ = business card
8. ¦ºÈ¢× = concentration
9. šý ¿£÷ = marine water, ¸¼ø ¿£÷
10. ¬ÃÇî ¦ºÈ¢× = ¬÷ó¾ ¯ôÒî ¦ºÈ¢×
11. ±¾¢÷ °Î¨¸ = ±¾¢÷òÐî ¦ºøÖõ °Î¨¸ = reverse osmosis; °¼¸õ ±ýÈ ¦º¡ø¨Ä medium ±ýÀ¾üÌî ¦º¡øÄ¡Áø Á¢¨¼Âõ ±ý§È ÀÂýÀÎòÐÅÐ ¿øÄÐ; þø¨Ä§Âø °Î¾ø = osmosis ±ýÈ ¿øÄ ¦º¡ø¨Äò ¾Å¢÷ì¸ §ÅñÊ¢ÕìÌõ.
12. ¾¢¨½ì¸Çõ = plant
13. Àâºø = barge; ÓØò ¾¢¨½ì¸Çò¨¾Ôõ ´Õ ÀâºÄ¢ø ¿¢ÚÅ¢ ¸¼ü¸¨Ã «Õ§¸ ±íÌ §ÅñÎÁ¡É¡Öõ ¿¢Úò¾ ÓÊÔÁ¡õ.
14. §Åö¾ø = to build; ´Õ ¿¡¨ÇìÌ ¬Â¢Ãõ Ä¢ð¼÷ ¿£¨Ã Å¢¨ÇÅ¢ì¸, å.70000 ¾¡ý ӾģΠ§¾¨ÅôÀÎÁ¡õ. ¦ÅÚõ ¿¡§Ä Á¡¾í¸Ç¢ø ¾¢¨½ì¸Çõ «½¢ÂÁ¡ö (ready) þÕìÌÁ¡õ; §¸ðÀ¾üÌ Å¢ÂôÀ¡ö þÕ츢ÈÐ.
15. ÓôÀò¾¢ÃñÎ §¸¡Ê Ä¢ð¼÷ = ¦ºý¨É¢ý ´Õ ¿¡û ¿£÷ò §¾¨Å.
16. §Á§Ä ¯ûÇ ¿£÷ò§¾¨Å¨Âì ¦¸¡ñξà ¬Ìõ ±¾¢÷ °Î¨¸ ¾¢¨½ì¸Çò¾¢ø ӾģΠ¦ÅÚõ 21 À¢øÄ¢Âý ¯ÕÀ¡ö¸û; «¾¡ÅÐ 2100 §¸¡Ê ¯åÀ¡ö¸û.
17. ¬È¨ÄôÒ = ÅÆ¢ôÀÈ¢ì ¦¸¡û¨Ç
18. ¿£Ã¨ÄôÒ = ¿£Ã¡ø ¿¼ìÌõ ¦¸¡û¨Ç.