Monday, April 08, 2024

ambulance

 ஆங்கிலச் சொற்பிறப்பியலில், amble (v.): என்பதை early 14c., from Old French ambler, of a horse or other quadruped, "go at a steady, easy pace" (12c.), from Latin ambulare "to walk, to go about, take a walk," perhaps a compound of ambi- "around" (from PIE root *ambhi- "around") and -ulare, from PIE root *el- "to go" (source also of Greek ale "wandering," alaomai "wander about;" Latvian aluot "go around or astray"). Until 1590s used only of horses or persons on horseback. Related: Ambled; ambling. என்றும், 

ambulance (n.) என்பதை, 1798, "mobile or field hospital," from French ambulance, formerly (hôpital) ambulant (17c.), literally "walking (hospital)," from Latin ambulantem (nominative ambulans), present participle of ambulare "to walk, go about" (see amble) என்றும் லிளக்கிச் சொல்வர்.

இங்கே அலைதலும், அலம்புதலுமே சொல்லுக்குள் இருக்கும் அடிப்படைக் கருத்தாகும். பிரஞ்சில் சொல்லப்படும் (hôpital) ambulant என்ற கூட்டுச் சொல்லில் இக்காலத்தில் (hôpital) என்னும் முதற்சொல் தொக்கியே நிற்கிறது. சங்கதச் சொல்லான ஜல சமுத்ரத்தில், ஜல என்று இன்று யாருஞ் சொல்வதில்லை. சமுத்ரம் என்றே சுருங்கச் சொல்கிறோம். ”நிறைந்துகிடப்பது” என்றுமட்டுமே அதற்குப் பொருள். எந்தவொரு மொழியிலும், நாட்பட்ட பயன்பாட்டில் சில சொற்கள் இப்படி அடங்கியிருப்பது இயற்கை. 

மின்சாரம் என்பதில் இன்று சாரத்தை யாருஞ் சொல்வதில்லை. தொழில் நுட்பத்தில் தொழிலைத் தொகுத்து நுட்பியலாக்கிவிட்டோம். இதேபடி, ”பண்டுவ அலம்பூர்தி” என்று சொல்லத்தொடங்கிப் பின்னாளில் ”அலம்பூர்தி” என்றுமட்டுமே சொல்லலாம். பண்டுவம் உள்ளிருப்பது புரிந்துபோகும். (வட தமிழகத்தாருக்கு மருத்துவத்திற்கும் பண்டுவத்திற்கும் வேறுபாடு தெரியாது. தென்தமிழகத்தாருக்கு பண்டுவம் மிக இயல்பான சொல். பண்டுவத்திற்கும் மருத்துவத்திற்கும் சிறிய வேறுபாடுண்டு. எங்கெல்லாம் ”சிகிச்சை” என்ற வடசொல் வருகிறதோ, அங்கெல்லாம், “பண்டுவம்” என்று சொல்லலாம். இதில் மருந்தும் மட்டும் முகன்மையல்ல. அறுப்பு, காயம், மருந்து கட்டுதல், உடல் நிலை கவனித்துக்கொள்ளுதல் என எல்லாம் சேர்ந்தது. ஆங்கிலத்தில் MBBS Medicino bachelor and Bachelor of surgery என்று இரட்டைப் பட்டம் பெறுகிறார்கள். தமிழில் அவர்கள் இளம் மருத்துவராகவும் இளம் பண்டுவராகவும் ஆவதாகவே சொல்லவேண்டும். இதை விளக்கப்போனால் நீளும். 

அலம்பூர்திக்கு முன்னொட்டாய் மருத்துவம் சொல்வது சரிவராது. 

என் பரிந்துரை: (பண்டுவ) அலம்பூர்தி. 

இன்னொரு பரிந்துரையும் உண்டு. ambulance = ஆதுலி (ஆதுலர் = மருத்துவர், மருத்துவச்சி போன்று உடல்நலம் பேண உதவுவோர். இது பெருஞ்சோழர் காலத்துக் கல்வெட்டுச் சொல். இங்கு ஆதுலி என்பதால் நகரும் ஆதுல வண்டியைக் குறிக்கிறோம்.) 

அன்புடன்,

இராம.கி.    


No comments: