மின்னுவதால் மீனென்பது விண்மீனுக்கு வேண்டுமெனிற் சரியாகலாம்; நீர்வாழ்மீனுக்குச் சரியல்ல. அப்படிச் சொல்வது உலகியல் வழிச் சொற்பிறப்புக் (folk etymology) குறிப்பு.
Rebus principle இன் படி ஒருசேரக் கருதும் இரு பொருட்சொற்களிடை ஒலிப்பு ஒற்றுமை வேண்டுமே ஒழிய, சொற்பிறப்பும் ஒன்று போல் ஆகத் தேவையே இல்லை. மள்>மய் எனும் வேரின் வழியாகப் பிறந்த சொல்லான மயிலைக்கு வெண்மை கலந்த கருநிறப் பொருள் (ash colour, grey, mixed colour of white and black.) சொல்வர்.
மயிலைக்கு, மீனென்றும் பொருளுண்டு. பெரும்பாலும் மீன்கள் என்பன மயிலை நிறத்தில், வெள்ளையிற் புள்ளிகளோடு காட்சியளிக்கும். மள் என்னும் வேர்வழியே பிறந்த இன்னொரு சொல்லான மச்சிற்கும் கரும்புள்ளியென்றே பொருள். அடிப்படையில் மச்சமெனும், மீன் நிறையக் கரும்புள்ளிகள் கொண்டதாகவே உள்ளது.
மச்சத்தைச் சங்கதம் என்பது அறியார் செய்யுங் குழப்பம்.) நீர் வாழ் மீனுக்கு நான் பரிந்துரைக்கும் சொற்பிறப்பு
மள்> மயி> மயில்> மயின்>மீன் என்பதே. கூடவே,
மள்> மயி> மயில்> மயிலை
மள்+சு> மட்சு> மச்சு> மச்சம்
மீனைக் குறிக்கும் பொதுச் சொல்லாய் நிக்ண்டுகளில் புழல் என்பதும் சொல்லப்படும். இயற்கையில் புள்ளப்பட்ட தோல், தசை, வாழுறுப்புகள் போன்றவை கன்னிப்போய் பெரும்பாலும் சாம்பல். கருப்பு நிறம் காட்ம் கரும்புள்ளிகள் நிறைந்த மீனை புல்>புள்>புளு<புழு>புழல் என்று சொல்வது வியப்பில்லை. .