entrepreneur என்பதற்கு "தொழில் முனைவோர்" என்றே பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் சில ஊடகங்களில் "தொழில்முனைவர்" என்ற வழக்கைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது சரியா? முதுமுனைவர் போல தொழில் முனைவர் என்பது doctorate பட்டத்துடன் குழப்பத்தைத் தருமா? - என்று ”சொல்” எனும் முகநூல் பக்கத்தில் திரு. நீச்சல்காரன் கேட்டிருந்தார் entrepreneur என்பதற்கு "தொழில் முனைவோர்" என்றே பலரும் பயன்படுத்தி வருகிறார் என்பது உண்மை தான்.
ஆனாலும், அது அரைகுறைச் சொல்லாக்கம் என்றே நான் சொல்வேன். தொழிலில் (மட்டுமன்றி) மற்ற புது வேறு முயற்சிகளிலும் ஆங்கிலத்தில் entrepreneur பயனாகும். அதேபோல் தொய்ந்து போன வேலைகளிலும் முனைப்புக் காட்டி முன் வரலாம். முனைப்பென்பது புதுத் தொழில்களுக்கும் மட்டும் பயனாவதல்ல. ஆங்கிலத்தில் entrepreneur க்கு வரையறை சொல்லும் போது, entrepreneur (n.) 1828, "manager or promoter of a theatrical production," reborrowing of French entrepreneur "one who undertakes or manages," agent noun from Old French entreprendre "undertake" (see enterprise). The word first crossed the Channel late 15c. (Middle English entreprenour) but did not stay. Meaning "business manager" is from 1852 என்பார்.
தமிழில் இதற்கான ஈட்டை நாம் கண்டு பிடிக்கலாம். பண்ணு-தல் என்பது செய்-தலுக்கான மாற்றுச் சொல். பண்டம் செய்தல், பணி செய்தல், போன்ற பல்வேறு ஆக்கங்களுக்கும் பொருந்தி வரும் வினைச்சொல். entre என்பதற்கு ”எழுந்து வரும்” என்றே பொருள் கொள்ளலாம். எழுதை என்பது எழுந்து வருவதைக் குறிக்கும் பெயர்ச் சொல். ”எழுதைப் பண்ணகர் (அல்லது பண்ணார்)” என்பது entrepreneur க்கான என் பரிந்துரை. உகப்பதும் விடுப்பதும் உங்கள் தேர்வு.
No comments:
Post a Comment