இது மரு.புருனோவின் ”பயணங்கள்” http://www.payanangal.in/2010/04/blog-post.html என்ற வலைப்பதிவில் அங்காடித்தெருப் பணியாளர்களின் நிலையும், இளம் வழக்குரைஞர்கள் (Junior Advocates), துணை நெறியாளர்கள் (Asst. Directors) பற்றி மருத்துவர் அளித்த இடுகையில் நான் முன்னால் [06/04/2010] அளித்த முன்னிகையின் படியாகும். affidavit என்ற சொல்லைப் பற்றிய இது, இணையத்தில் வேறொன்றைத் தேடிக் கொண்டிருந்தபோது மீண்டும் கைக்குக் கிட்டியது. இதை என் வலைப்பதிவில் இட்டு ஆவணப்படுத்த வேண்டும் என்று ஒரு விழைவால் இங்கு பதிவு செய்கிறேன். உங்கள் வாசிப்பிற்கு.
[இப்படிப் பல்வேறு இடங்களில் வெவ்வேறு ஆங்கிலச் சொற்களுக்கு இணையாய்த் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறேன். ஆனால் அவற்றைப் பின்னால் ஓரிடத்திற் சேகரித்து ஆவணப்படுத்தாது விட்டிருக்கிறேன். தொலைந்தவை மிகப்பல. வருத்தந்தான். மீந்தவற்றுள் ஆங்கிலச்சொல்லை அப்படியே அடித்துப் பக்கத்தில் இராம.கி. என்று தமிழில் அடித்துத் தேடினால் கூகுளில் ஏராளங் கிடைக்கும் போற் தெரிகிறது. நான் தொலைத்தது எனக்கே இப்படித்தான் கிடைக்கிறது.]
----------------------------------------
அபிடவிட் என்ற சொல்லைக் கொடுத்து அதன் பின் (ஆணை உறுதி ஆவணம்; ஆணை உறுதி வாக்குமூலம்; உறுதிமொழி ஆவணம்; பிரமாணப் பத்திரம், சத்தியவோலை, உறுதிமொழிப் பத்திரம்) என்ற சொற்களைக் கொடுத்திருந்தீர்கள். இவற்றையெல்லாம் ஏதோ சில அகரமுதலிகளில் இருந்து நீங்கள் திரட்டியிருக்கலாம்.
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் ’சட்டத்தமிழ் அகராதி’யில் Affidavit என்பதற்கு [(S.3(3). General Clauses Act). Statement in writing and on oath, sworn before one who has authority to administer oath] என்று சொல்லி ஆணையுறுதி ஆவணம், உறுதிமொழிப் பத்திரம், ஆணையுறுதி என்ற சொற்களைக் கொடுத்து ‘ஆணையுறுதி ஏற்கும் அதிகாரம் பெற்றவர் முன், மெய்யுறுதியாகவும் எழுத்துமூலமாகவும் அளிக்கப்படும் வாக்குமூலம்’ என்று விளக்கமளித்துள்ளார்கள்.
இதேபோல Online Etymological Library இல் “1590s, from M.L. affidavit, lit. "he has stated on oath," third person sing. perf. of affidare "to trust," from L. ad- "to" + fidare "to trust," from fidus "faithful," from fides "faith" (see faith). So called from being the first word of sworn statements.” என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
எனக்கு மேலே கொடுத்துள்ள எந்தச் சொற்கள் மேலும் அவ்வளவு பிடிப்பு வரமாட்டேன் என்கிறது. ஏதோ குறையிருப்பது போல் உணருகிறேன். ஏனென்றால், அவை சுற்றிவளைத்து வழக்கவையில் நடைபெறும் செய்முறைகளை வைத்தே விளக்கம் கொடுப்பது போல் அமைகின்றன. இதற்கு மாறாக நம்முடைய காலகாலமான வழக்கத்தில் இருந்தே ஒரு சொல் காணமுடியும் என்று எண்ணுகிறேன்.
இப்பொழுது யாருக்கோ ஒரு மடல் எழுதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். இதில் முடிவில் எப்படிக் கையெழுத்துப் போடுகிவீர்கள்? “இப்படிக்கு, ............. புருனோ” என்று தானே போடுவீர்கள்? நம்முடைய முப்பாட்டன், எள்ளுப்பாட்டனும் இப்படித்தான் கையெழுத்துப் போட்டிருப்பார்கள். ஏன் பேரரசுச் சோழர் காலத்திலேயே இந்தப் பழக்கம் இருந்ததை “இப்படிக்கு இவை கோயிற் கணக்குச் சீயபுரமுடையான் பெரிய பெருமாள் எழுத்து.” “இப்படி அறிவேன் மருதூர் சங்கரநாராயண பட்டனேன்” என்று (தெ.கல்.தொ.12.கல்.218, 179) என்று குறிப்பிட்டு ”கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி” என்னும் பொத்தகத்தில் (சி.கோவிந்தராசன், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், 1987) வரும்.
”இப்படி, அப்படி, எப்படி” என்னும் போது அதில் வரும் படி என்ற சொல் நடந்து ”பட்டதைச்” சொல்லும் பொருட்பாடு காட்டும். படுதல் = நடவுதல்.
“இன்னபடிக்கு இது நடந்தது”.
”இந்தப்படிக்குச் செய்”
”அப்படியா அவர் சொன்னார்?”
”எப்படி இதுபோல அவன் கேட்கப் போயிற்று?”
எல்லாமே நடந்ததை, நடக்கிறதை, நடக்கப் போவதைக் கேட்பவை தான். படிதல் என்பது படுதல் என்பதைத் தொடர்ந்து எழுந்த வினை. படுதல்>பட்டுதல் என்பதில் இருந்து பட்டகை = fact என்ற சொல் எழுந்தது போல், படிதல் என்பதில் இருந்து படியுரை = affidavit என்ற குறுஞ்சொல்லை உருவாக்க முடியும். வேண்டுமானால் ஆவணம் என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்ளலாம். [என்னைக் கேட்டால் அப்படியொரு சேர்ப்புத் தேவையில்லை.]. நடந்ததை நடந்தபடி உரைப்பது ”படியுரை”. affidavit என்பதும் அது தான். சொல்லும் சுருக்கமாய் அமையும்.பொருளும் விளங்கும். நம்முடைய மரபும் தொடரும்.
நயமன்றத்தில் வழக்குரைஞர் தன் கட்சிக்காரரின் படியுரையைச் சமர்ப்பிப்பதில் எந்தப் பொருட்பாடும் குறையாது. படியுரை என்பது பொதுவான உண்மையல்ல. வழக்காளரின் பார்வையில் “இப்படி நடந்தது” என்று உரைக்கும் ஓர் ஆவணம். அவ்வளவுதான். இரு வழக்காளரின் பார்வைகளும் மாறுபடலாம் அல்லவா? வெவ்வேறு படியுரைகளைக் கேட்டு, படித்து, குறுக்கே கேள்வி கேட்டு, உசாவி, முடிவில் பிழை (குற்றம்) யாரிடம் என்று அங்கே கண்டுபிடிக்கிறார்கள். இதில் உறுதி, ஆணை என்பவையெல்லாம் ஊடுவரும் செயல்கள். பிழை(குற்றம்) நடந்தபோது இருந்தவையல்ல.
affidavit என்பது ”பிழை(குற்றம்) நடந்தபோது வழக்காளர் தன் பார்வையில் எப்படி உணர்ந்தார்?” என்று சொல்வது.
அன்புடன்,
இராம.கி.

2 comments:
அட்டகாசம்! ஒற்றைச் சொல்லுக்கு எப்படியெல்லாம், எவ்வளவெல்லாம் சிந்திக்கிறீர்கள்!
ஐயா! கலைச்சொற்களுக்காகத் தாங்கள் பெரிதும் உழைக்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள்! கலைச்சொல் என்றாலே அது பற்றிய இறுதி முடிவு எடுக்கக்கூடிய தகுதியுடையவராகத் தாங்கள்தாம் திகழ்கிறீர்கள். எனவே, தங்களுடைய அருந்தமிழ்க் கலைச்சொற்களையெல்லாம், இங்கு வழங்குவதோடு மட்டுமின்றி, இன்று தமிழ்ச் சமூகத்தால் பெரிதும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிற 'கூகுள் மொழியாக்கம்', 'விக்சனரி' ஆகியவற்றிலும் தாங்கள் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
Post a Comment