Sunday, June 26, 2005

ஆன்மா

அண்மையில் கிட்டத்தட்ட ஒரு மாதம், என் மகன் திருமண வேலையில் ஆட்பட்டு இருந்ததால், எந்த இடுகையும் இணையத்தில் இடாது இருந்தேன். இப்பொழுது எல்லாம் நல்லபடியாக முடிந்து திரும்பி வந்தபின், விட்டுப் போன மடல்களைப் பார்த்தால், ஆன்மா பற்றிய விளக்கத்தை நான் பங்குகொள்ளாத இடைக்காலத்தில் தன் நண்பர் புலவர் சி.வெற்றிவேந்தன் கேட்டதாக, திரு. இராஜ.தியாகராஜன் சந்தவசந்தம், தமிழ் உலகம், அரையர் குழும்பு ஆகியவற்றில் இடுகையிட்டு விளக்கம் கேட்டதைப் படிக்க நேர்ந்தேன். கூடவே அவர் தன்னுடைய இன்னொரு நண்பர் புலவர் இறைவிழியனார் விடுத்த செய்தியில், சொல்லாய்வு அறிஞர் ப.அருளியைச் சுட்டிக் காட்டி ஆன்மா என்பது வடமொழிச் சொல் என்றும் அதன் பொருளாய் ஆதம், உயிர், ஆவி ஆகியவற்றைக் காட்டியதையும் உரைத்து, பின்னால் ஆன்மிகம்/ஆன்மீகம் என்பதில் எது சரி என்றும் வினவியிருந்தார்.

அரையர் குழும்பு, சந்தவசந்தம் ஆகியவற்றில் வந்த பின்னூட்டுக்களில் பேரா.பசுபதி "ஆன்மிகம் என்பது சரி, ஆன்மீகம் சரியல்ல" என்று சொல்லி யிருந்தார். அதில் எனக்கும் ஒப்புதலே. ஆனால் "ஆன்மா என்பது வடமொழிச் சொல்" என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. திருமந்திரத்தையும் மற்ற நூல்களையும் எடுத்துக்காட்டி நண்பர் திரு. யாவகக் குமார் "ஆன்மா தமிழே" என்று அரையர் குழும்பில் எடுத்துரைத்தார். "கர்மா கன்மம் ஆவதுபோல, ஆன்மா என்பது ஆத்மாவின் தமிழாக்கம்" என்று சந்தவசந்தத்தில் பேரா. அனந்த் எடுத்துரைத்தார். "ஆத்மா தான் ஆன்மா ஆனது" என்று பேரா. பசுபதியும் கூடத் தன் மடலில் குறித்திருந்தார்.

நான் புரிந்த வரையில் ஆன்மாவும், ஆத்மாவும் சற்று வெவ்வேறான முறையில் எழுந்த, ஆனால் தமிழோடு தொடர்புடைய அடிப்படையான சொற்களே. இதுபற்றி ஒருமுறை மடற்குழுக்களில் முன்பேசிய நினைவு. இருந்தாலும் மீண்டும் ஒருமுறை விளக்கம் எழுதுகிறேன்.

முதலில் ஆத்மாவைப் பார்ப்போம். "ஆ" என மூச்சு விட்டான், "ஆ" என ஓலம் இட்டான் என்ற ஒலிக்குறிப்பு உயிருள்ள நிலையில் சொல்வது. உயிருள்ள ஒருவன் வாய்வழிக் காற்றை வெளியிடுகையில் ஆவென வாயைத் திறக்கிறான். அந்நிலை ஆவித்த, ஆவுகின்ற, ஆவும் நிலை. ஆவுகின்ற நிலையில் எழும் காற்று ஆவி. உயிர்க்காற்றை ஆவி என்பது அப்படியே எழுந்தது. ஆவி என்ற தமிழ்ச்சொல்லைப் பலரும் வடமொழி என எண்ணிக் கொள்கிறார். இதேபோல வாய்வழி விடுகின்ற காற்று வாயி/வாயு என ஆனது. (வாயு, வடமொழியோ என நானும் மருண்ட காலம் ஒன்றுண்டு). நாளடைவில் உடலின் வாய்களிலிருந்து வெளியிடும் எல்லாக் காற்றுகளுமே வாயு என்றாயின. வளி என்பதும் இப்படிக் கிளைத்ததே. வழி, தமிழ் என்றால் வாயுவும் தமிழாய்த்தான் இருக்கமுடியும். ஏனெனில் இரண்டிற்கும் வள் என்ற துளைப்பொருளே உள்நிற்கிறது.

ஆவித்தல், ஆயித்தல் என்ரும், ஆத்தல் என்றும் சுருங்கும். ஆவித்தலில் உள்ள ஆவி ஆதன் என்றும் சொல்லப் படும். ஆதன் = உயிர்க்காற்று. கருத்துமுதல் வாதம் எழுந்த பின், ஆதனுக்கு தனித்தியங்கும் நிலை கற்பித்து, ”ஆதனே மாந்தனை இயக்குகிறது” என்பார். (பொருள்முதல் வாதம், கருத்துமுதல் வாதம் என்று முரண்பாட்டினுள் இப்போது போக வேண்டாம். காட்டுவிலங்கு ஆண்டி நிலையில் கருத்துமுதல் வாதம் எழாது என அமைவோம்.) உயிருள்ள நிலை ”ஆதல், ஆகுதல்” என்றும் சொல்லப் பட்டது. ஆகுதல்>ஆயுதல் என்பது ஆயும் நிலை (உயிருள்ள நிலை) என்றும் கொள்ளப்பட்டது.ஆயுள் எனப் படுவதும் "ஆ" எனும் உயிர்க்காற்றில் பெறப்பட்ட நீட்சிப் பொருளே.

ஆ-தல் = to come into existence.
ஆகுதல் = to become
ஆதலித்தல் = ஆகச் செய்தல்; to make it happen;
ஆதுதல் = to come into existence;
ஆயிடல் = to become, to happen
ஆயுள் = ஆய் + உள்
ஆவது = things to be done

(வடமொழிப் பலுக்கில் ஆத்மா எனப்பட்டு, அச்சொற்பிறப்பு புரியாது, அதுவே இது என அறியப்படும்) ஆன்மா என்ற சொல்லிற்கு தமிழில் தரப்படும் 2 பொருட்பாடுகளுள் விலங்கெனும் பொருள் பருப்பொருள் குறிப்பது. மற்ற ஒரு பொருளான "ஆதன்" கருத்துமுதலானது. பொதுவாக, நாட்படவுள்ள சொற்களுக்கு, கருத்துமுதல் பொருள் முதற்பொருளாய் ஆகமுடியாது. அது வழிப்பொருளாகவே இருக்க முடியும். இச்சொல்லைப் பொருத்தமட்டில், பருப் பொருள், கருத்துமுதற் பொருள் ஆகிய இரண்டுமே மேலை மொழிகளுக்கும் நமக்கும் அப்படியே பொருந்திவரும். (ஆன்மாவிற்கு இணையாக animal/animate என்று ஆங்கிலத்தில் குறிப்பதை ஓர்ந்து பார்க்கலாம்.) ஆங்கிலத்திற்கும், தமிழிற்கும் ஒரு பொருள் பொருந்துமெனில் அதை தன்னேர்ச்சி (accident) எனலாம். ஆனால் 2 பொருட்களுக்கும் ஒரே அடிச்சொல் (தமக்குள் உறவிலை என்று பலராலும் எண்ணப் படும்) 2 மொழிகளில் அமைவது வியப்பாக உள்ளது. (இந்தையிரோப்பிய மொழிகளும் தமிழிய மொழிகளும் எங்கோ தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற என்கருத்து இங்கும் வலுப்பெறுகிறது.) இக்காலத்தமிழில் ஆதனெனும் உயர்பொருள் மட்டுமே பலரும் முன்வைத்துச் சொல்வார். ஆனால் தொடக்கப்பொருள் அப்படி உயர்நிலையில் எழுமா என்பது அய்யப்பாடே! ஆன்மா முதலில் விலங்கைக் குறித்திருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். பின்னரே உயர்பொருளான கருத்துமுதல் பாவனைக்கு, ”ஆவி, உயிர்” என்ற பொருளில் வந்திருக்கலாம். இப்படி நான் சொல்லக் காரணமுண்டு.

"சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு " என்ற நூலில் திரு T.பக்கிரிசாமி என்பவர் (செல்விப் பதிப்பகம், காரைக்குடி) ஓர் அருமையான, ஆழமான கருத்தைச் சொல்லியிருந்தார். "ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப் பொருள் சொற்களே முதலில் இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணர வல்ல சொற்கள், கலைச் சொற்கள், பண்புச் சொற்கள்- போன்றவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) இல்லை." என்பார். இதுபோல் இயற்கையான பருப்பொருள், இடப்பொருள் சொற்களை அவர் ஐம்புலன் சொற்கள் என்பார். அதாவது (நல்லது, உயர்ந்தது, ஞானம் போன்ற) கருத்து முதலான சொற்களை ஆதிகாலத்தில் மனிதன் உருவாக்கி இருக்கமுடியாது என்று அவர் சொல்வார். இன்றைக்கு வழங்கும் கருத்தியற் சொற்களின் (idealogical words) மூலங்கள் பெரும்பாலும் ஐம்புலன் சொற்களாகவே இருந்திருக்கும் என்றும் அவர் சொல்வார். இதற்கு அவர்காட்டுவது: 'மதம்' எனும் சொல். இன்று இச்சொல்லுக்கு religion என்று பொருள் கொள்கிறோம். ஆனால் ஆதிகாலத்தில் 'மதி - சந்திரன்' எனும் பருப்பொருளில் இருந்தே அது வந்திருக்கும் என்று சொல்வரலாற்று வரிசை காட்டி அவர் புலப்படுத்துவார். அவருடைய இந்த ஆய்வுமுறை பெரிதும் கைக்கொள்ள வேண்டிய ஒன்று. (இதை இன்னொரு இடத்தில் விவரமாகப் பார்ப்போம். இதேபோல நல்லது என்ற கருத்துமுதற் சொல்லும் நெல் எனும் பருப்பொருளில் இருந்தே தோன்றி யிருக்கும் என்று பின்னால் அறிந்தேன். என் ஒரு கட்டுரையிலும் அதைக் குறித்திருந்தேன். பருப்பொருள் காணும் அறிவைக் குறிக்கும் கருத்தில் இருந்து, மெய்ப்பொருள் காணும் அறிவைக் குறிக்க எழுந்த ஞானம் என்பதும் இதே வகைத் திரிவைக் காட்டுகிறது.)

இப்படி ஐம்புலன் சொற்களிலிருந்து தோன்றிப் பின் கருத்துமுதற் சொற்கள் எழுந்த வளர்ச்சியோடு, இன்னொரு கருத்தையும் இங்கே சொல்லவேண்டும். எந்த மொழியிலும் கருத்துவளர்ச்சி, பொதுமை (generic) -யிலிருந்து பின்னர் விதுமைக்கு (specific) வாராது. விதுமையிலிருந்தே  பொதுமைக்குச் சொற்கள் வரும். ஓர் இயல் மொழியில் அப்படியே சொற்சிந்தனை வளரமுடியும். இச் சிந்தனையையும் மடற்குழுக்கள் பலவற்றில் வெவ்வேறு மடல்களின் வழி சொல்லி வந்தேன்.

எ.கா: தமிழர் நாகரிகத்தில் முதலில் நெய் எனும் பொருளைக் கண்டது விலங்குகளின் பால் மற்றும் கொழுப்பில் இருந்தே என்று சொல்லாய்வால் உணரமுடியும். பின் அறிவு வளர்ந்து, நுட்பம் துலங்கிய போதே எள் எனும் நிலத்திணையில் இருந்து நெய் எடுக்கத் தெரிந்த மனிதன், அதையும் எள் நெய் (எண்ணெய்) என்றே சொல்லத் தலைப் பட்டான். பின்னாளில் கடலை இலிருந்தும், தேங்காயிலிருந்தும், ஏன் மண்ணில் இருந்தும் கிட்டியவுடன் அவைகளையும் எண்ணெய் எனும் பொதுமைப் பொருள் கொண்டு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய் எனும் விதுமைச் சொற்களால் அழைக்கத் தொடங்கியுள்ளான். நுணுகி அறியாவிடின் எண்ணெய் என்ற பொதுமைப் பொருளின் வேரடி தெரியாமலே போய்விடும்.

ஒரு மொழியில் கருத்து/சொல் வளர்ச்சி என்பது நீள்சுருள் (helical spring) போல் மறுகி மறுகித் தோன்றி விதுமையும் பொதுமையுமாய் எவ்வளித்து (எவ்வுதல், எகிறி வருதல் போன்றவை எழுச்சியைக் குறிக்கும் சொற்கள். evolve என்பது எவ்வி அளிப்பது. எல்லாவற்றையும் வளர்ச்சி என்று பொதுப்படையாய், தட்டையாகச் சொல்லி நம் தமிழ் நடையை மழுங்கடிக்க வேண்டாமே? எவ்வளித்தல் அருமையான சொல்.) பல சொற்கூட்டங்களை உருவாக்கியதை இந்த எடுத்துக்காட்டால் உணரலாம். 'நெய்' எனும் சொல் ஆவின் நெய்யாய், விதுமைப் பெயராய் முதலில் தோன்றியிருக்கலாம். (இன்னும் நெய் எனும் சொல்வரலாறு அறிந்தேனில்லை. ஒருவேளை கொழுப்பில் தோன்றியதோ? ) பின் 'நெய்', பொதுமைக் குறியீடாகி, அடுத்து 'எள்நெய்' விதுமைக் குறியீடாக மாறி, முடிவில் 'எண்ணெய்' பொதுமைக் குறியீடாக மீண்டும் வளர்ந்துள்ளது.

அதுபோல விலங்குகளுக்கான தமிழ்ச் சொற்களை ஒருசேரப் பார்த்தால், "ஊணுக்கு, பின் உழைப்புக்கு" என்ற வளர்ச்சியில் ஆதிமாந்தன் முதலில் அடக்கிய விலங்கு, மாடாய் இருந்திருக்க முடியும். (உலகின் பெரும்பாலான எழுத்துகளின் முதலெழுத்து ஆ என்பதே.) மாடெனும் பெண் விலங்கிற்குப் பெயரிட, அது எழுப்பும் "மா"  ஒலியே காரணம் ஆகியிருக்கலாம். (மாடு எனும் பெண் விதுமைவிலங்கிற்கு இட்ட பெயர் பொதுமைப் பெயராகிப் பின் காளைமாடு என முரண்பட்டு ஒலிப்பதைப் பார்த்தால் எவ்வளிப்பைப் புரிந்து கொள்ளலாம்.) பின் அடுத்ததாய் மனிதன் வேட்டையாடி ஊன் உணவாகக் கொண்ட விலங்கு மான். (இன்றும் தமிழர் நாகரிகத்தில் உயர்சுவை ஊனாக மானே கருதப்படும்.) இதுவும் 'மா' என்றே கத்தும். (மாட்டொலியும் மான் ஒலியும் சற்று வேறானவை.) இதற்குப் பெயரிட 'மா' எனும் ஓரெழுத்தொரு மொழியோடு 'ன்' மெய்யீறு சேர்ந்து 'மான்' ஆகியுள்ளது. அடுத்தடுத்து எல்லா விலங்குகளுக்கும் மாவெனச் சொன்னால் குழப்பம் ஏற்பட்டிருக்கும். முடிவில் மாட்டையும், மானையும் பிரித்துணரும்படி, "ம்" ஒலியை விலக்கி "ஆ" எனவும் "ஆன்" எனவும் மாட்டிற்குப் பெயரிட்டு, "deer" என்ற விலங்குக்கு "மான்" எனக் கொண்டு, மற்ற விலங்குகளுக்கு "மா" பொதுமையாக ஆகியுள்ளது.

(தொல்காப்பியர் பொருளிலக்கணம் மரபியலில் சொல்வது: "பெற்றமும் எருமையும் மரையும் ஆவே") 'கலிமா, வயமா, கடுமா, துதிமா' எனப் பல விலங்குகளுக்கு சங்க இலக்கியம் பேர் சொல்கிறது. அந்த வகையில் "ஆன்மா" ஒரு விரிந்த சொல்லாக, விதுமைக் குறிப்பாக, மாட்டை மறுபடியும் தமிழில் குறித்ததுபோலும். தமிழிலுள்ள விதுமைப் பெயரான "ஆன்மா"வோடு ஒப்புமைகொண்ட இன்னொரு சொல்லே "animal" எனும் பொதுமைப் பெயராக ஆங்கிலத்தில் வருகிறதோ என்றுதோன்றும். ஏனெனில் முறையான வேர்ச் சொல் வரலாற்றை ஆங்கில, மேலை மொழிகளில் யாருங் காட்டவில்லை.

ஆன்மா (மாடு) தன் உயிர் இழந்தபோது அதுவே ஊனாகும். அவ்வுயிரையும் ஆன்மா எனத் தமிழில் சொல்வோம். அதேபோல உயிருள்ள விலங்கு animated ஆக, உயிர் உள்ளதாக 'soul,spirit' எனும் பொருளில் ஆங்கிலத்தில் சொல்வார்.  ஆன்மா/ஆதன் எனும் இரு வேறு சொற்களை ஒன்றாக்கி வடமொழியில் 'ஆத்மா' எனப் படுகிறது. அதாவது ஆத்துகின்ற மா ஆத்துமா. உயிருள்ள விலங்கு; பின்னால் பொருள்நீட்சி பெற்று உயிரையே குறிக்க தொடங்கிற்று. இக்கருத்துவளர்ச்சியில் இன்னும் மேலேபோய் ஆன்மாவைப் பசு என மொழி பெயர்த்துச் சிவனைப் பசுபதி என்பர் சிவநெறி வழிப்பட்ட வடநூலார்.

John Ayto எழுதிய Word origins பொத்தகத்தில் animal, deer என்ற சொற்களுக்குக் கொடுத்துள்ள விளக்கம் கீழே:

animal :
an animal is a being which breathes (compare DEER). Its immediate source was Latin adjective animalis ' having a soul,' a derivative of the noun anima 'breath,soul' (which although gave English the verb and adjective animate). Anima is a member of a set of related words in which the notions of 'breadth,wind' and 'sprit,life' are intimately connected: for instance, Greek anemos 'wind' (possible source of English anemone), Latin animus 'sprit, mind, courage,anger' (aource of English animosity and animus), sanskrit aniti 'breathe,' Old English othian 'breathe' Swedish anda 'breath, sprit,' and Gothic usanan ' breathe out.' The 'breath' sense is presumably primary, the 'sprit, life' sense a metephorical extension of it.

deer:
In Old English, deor meant 'animal' in general, as opposed to 'human being' (as its modern Germanic relatives, German tier, Dutch dier, and Swedish djur, still do). Apparently connected forms in some other Indo-European languages, such as Lithuanian dusti 'gasp' and Church Slavonic dychati 'breathe,' suggest that it comes via a prehistoric Germanic *deuzom from Indo-European*dheusom, which meant 'creatures that breathes' (English animal, and Sanskrit pranin- 'living creature' have similar semantic origins). Traces of specialization in meaning to 'deer' occur as early as the 9th century (although the main Old English word for 'deer' was heorot, source of modern English hart, and during the middle English period it became firnly established, driving out 'animal' by the 15th century.

மேலுள்ள விளக்கம் படித்தால் சில ஒற்றுமைகளும், குறைபாடுகளும் விளங்கும். குறிப்பாக, If the etymology of animal is 'one which breathes out', why was it called animal? why not by some other name, breath, soul, spirit or something? In the Indo-European etymology, a conceptual meaning is emphasized rather than an identifiable material meaning for such a basic word such as "animal". In our way of explanation, the meaning of 'sprit, soul' etc are not primary meanings but secondary and derived ones.

The Tamil thought process might have been like this.

Man could have slaughtered cow/bull for food and could have subsequently domesticated it for other purposes. When he had to refer to it in communication/conversation, the most striking aspect for him to use for reference would be the sound raised by the cow/bull. Hence he has named the cow/bull as 'maa'. When he started to slaughter another preferred animal, viz., the deer, he named that through an easiest extension 'maan'. Subsequently, when he came across other animals and he had to name them (unless one has to refer repeatedly, one doesn't have to name new things), he started using the same two terms 'maa and maan'. When confusion came, he droped the initial 'm' and referred the cow/bull through 'aa' or 'aan' and referred the deer as 'maan' and the generic animal as 'maa'. Gradually 'aa/aan' might also have got another specific name 'aanmaa'. As conceptual thinking developed, he used the same term 'aanmaa' (meaning animal) for the spirit also, since 'spirit' is a derived concept. (deer எனுஞ் சொல்லுக்கு ஒலியிணையான தமிழ்ச் சொல் அறிந்தேனில்லை.)

இதே மா/மான் எனுஞ் சொல்லே திரிந்து மான் > மாந்து > மாந்தை>மந்தை ஆகியுள்ளது.

மாந்தன் என்பது மான் > மன் > மனிதன் என்று நாளாவட்டத்தில் மாந்தர்களையும் குறிக்கத் தொடங்கி இருக்கிறது. இருதிணை உயிர்களுக்கும் முதலில் 'மாக்கள்' என்றே குறித்து முடிவில் உயர்திணைக்கு மட்டும் 'மக்கள்' என்று குறித்திருக்கிறார்கள். இன்னும் ஆழ்ந்து ஓர்ந்தோமானால், பால் விகுதிகளான ஆன், அன், மன், மான் ஆகிய எல்லாவற்றிற்கும் மா என்ற சொல்லே முதலாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆங்கிலத்திலும் man எனுஞ் சொல் இப்படித்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் மேலே நான் காட்டிய ஆங்கில வேர்ச்சொல் அகர முதலியில் வேரடிச் சொல்லாக "thinking" என்று கருத்துமுதல் பொருளே 'man' எனுஞ் சொல்லுக்கு முதலில் வைக்கப் படுகிறது. ஓர்ந்து பார்த்தால் முன்னுவது/உன்னுவது (சிந்திப்பது) என்பது ஒரு derived concept. அது எப்படி முதலில் வந்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை இல்லை.

இதே போல மாடு - என்னும் பதம் cow/bull என்பதோடு meat என்பதற்கும் குறியீடாகப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் meat எனுஞ் சொல் தனித்து வரும்போது மாட்டிறைச்சியையே குறிக்கும். இந்தச் சொல் பொதுமைப் பொருளாக எல்லா இறைச்சியையும் குறிக்கும். அதே போல ஊண் சாப்பிடுதல், மாட்டுத் தொழுவம் என்னும் பொருளில் வரும் இன்னொரு ஆங்கிலச் சொல் manger என்பதையும் பார்க்க வேண்டும். தமிழில் 'மாங்கு, மாங்கென்று சாப்பிடுகிறான், படிக்கிறான்' என்று மாட்டோ டு தொடர்பு படுத்திதான் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். மாடு என்னுஞ் சொல்லின் பொருள் நீட்டமாகச் "செல்வம்" என்னும் பொருள் முல்லை நில வாழ்க்கைக்குப் பழக்கப் படுத்தப் பட்ட பின்னே தான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்தப் பொருள்கள் இந்தோ இரோப்பிய மொழிகளில் இல்லை. இதற்குப் பதிலாக many எனுஞ் சொல் 'பலது' என்னும்பொருளில் வந்துள்ளது. இங்கும் மன்/மான் என்னும் ஒலி பின் புலத்தில் வருவது ஏதோ ஒரு தொடர்பைக் காட்டுகிறது. தமிழில் 'மா' என்னும் சொல் "பெரியது, பலது' என்னும் பொருளிலும் வருவதை நோக்கலாம்.

இனி அடுத்த வழிச்சொல் மகன் என்பது. இதன் தொடர்பு கொஞ்சம் ஆழமானது. இதைப் புரிந்து கொள்ள, தமிழில் இருவழிப் போக்கில் பெரிதும் ஆளப் பட்டுவரும் ஒரு சொற்பிறப்பு முறை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.. இதை எடுத்துக் காட்டினால் தான் புரியும்.

எ.கா. பகுதி - பாதி, மிகுதி - மீதி, சுவடி - சோடி, பெயர் - பேர், வகுள் - வாள், அகம் - ஆம், புழுதி - பூதி, அமிழ் - ஆழ், பொழுது - போது, முகர் - மோர், உகுதல் - ஊத்தல், துவறுதல் - தூறுதல், புகுதல் - போதல், புகற்றுதல் - போற்றுதல், முகடு - மோடு, சுவடுதல் - சூடுதல், மிகல் - மேல், அகல் - ஆல், தகழி - தாழி, வெயர்வை - வேர்வை

இவையும், இவை போன்ற நூற்றுக் கணக்கான சொற்களிலும் நடக்கும் மாற்றம் எளிதானது. 'பகுதி' எனுஞ் சொல்லில் உள்ள முதல் இரு எழுத்துக்களும் குற்றெழுத்தாக இருந்து, அவற்றில் இரண்டாம் எழுத்தை விட்டுவிட்டு, முதல் எழுத்தை நெட்டெழுத்தாக ஆக்கிப் 'பாதி' என ஆக்கித் சொல்லாளும் பழக்கம் பலரிடமும் உள்ளது. இந்த மாற்ற முறை தலை கீழாகவும் நடக்கலாம். முதலெழுத்து நெட்டெழுத்தாக இருந்து, அதை மாற்றி இரண்டு குற்றெழுத்துக்களைக் கொண்டும் வரலாம்.

அப்படி வருஞ் சொல் தான் மான் - மகன்.

மகன் எனுஞ் சொல்லுக்கு இணையாக scottish, irish மொழிகளிலும், மற்ற செருமானிய மொழிகளிலும் MacMohan, MacGuinness போன்ற பெயர்களின் பகுதியாக (mac ஆக) மகன் எனும் பொருளில் வருகிறது. ஏன், male எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான masculus என்பதிலும் முன்பகுதியில் இதே 'மக' என்னும் சொல் தான் வருகிறது. (மக - மச போலி இந்தோ இரோப்பிய ஆதி மொழிக்கும் இலத்தினுக்கும் ஏற்படுவது உண்டு.)

மனிதன் ஊனுக்காகக் கொன்ற/பழக்கிய இன்னொரு விலங்கு ஆடு: இதுவும் 'மா' என்றே கத்தும். இதற்கான பெயர் 'ஆன்' எனும் சொல்லில் இருந்து சிறிதே திரிந்த சொல்லாக அமைகிறது. இது முல்லை நில வாழ்க்கையில் ஏற்பட்டிருக்குமோ என்று தோன்றுகிறது. இந்தச் சொல்லுக்கு இணையாக gaat (anglo-saxon), geit (dutch), geiss (german), headus (latin), goat (english) என இந்தோ இரோப்பிய மொழிகளில் வரும். தமிழிலேயும் ஆடு திரிந்து கடா ஆகும்.

இதே போல 'ஆன்' என்னுஞ் சொல்லோடு தொடர்பு கொண்டது 'ஊன்' எனுஞ் சொல். அதற்கும் பெரிய வளர்ச்சி உண்டு. அதை இன்னொரு முறை பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, June 22, 2005

மனசில் தேரோடுமா?

(உரைவீச்சு)

(அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர்வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு முதல் மரியாதை என்பது வரலாற்றில் உள்ளது தான். ஆனால் சில தலைமுறைகளுக்கு முன்னால் எல்லா மக்களும் அங்கு தேர்வடம் பிடித்தார்கள். இன்றைக்குத் தேர்வடம் பிடிப்பதில் ஒரு வறட்டுக் குரவம் (கௌரவம்).

நம் குமுகப் பிறழ்ச்சி பலநேரம் கொதிப்படைய வைக்கிறது. எத்தனையோ பெருமை கொண்ட சிவகங்கைச் சீமையின் மிஞ்சிப் போன அவலங்களுள் இதுவும் ஒன்று.)

மனம் வெதும்பலுடன்,
இராம.கி.

"என்னங்கடா,
'இன்னார் மகன்'னு
படங் காட்டுறீயளா?"

"அஞ்சு மணிக்கு நாலுவீதி
சுத்திவரும்னு சொல்லிப்புட்டு,
ரெண்டு மணிக்கு அவுக்கவுக்காய்
ஏறிவந்து வடம் புடிப்பா?

கூடி வந்த எங்க சனம்,
கோயில் தள்ளி நிறுத்திவச்சி,
விறுவிறுன்னு நாலு வீதி
சுத்திவர இழுத்துவிட்டு,

தேருநிலை கொள்ளுமுனே,
உப்புக்கொரு சப்பாணியா,
ஓட்டிவந்த இருபத்தாறை
ஒண்ணுகூடித் தொடச்சொல்லி...."

"ஏண்டா டேய்,
320 பேரு வடம்பிடிக்கிற இடத்துலே,
இருபத்தாறுக்கு மேல்
எங்காளுன்னாக் கொள்ளாதோ?

நாலுவடத்தில் ஒண்ணைக் கொடுத்தாக்
கோணப்பயகளா, உங்களுக்குக்
கொறஞ்சிபோயி விளஞ்சிருமோ?"

தொட்டவடம் படம்புடிச்சு
பட்டம்விடப் போறீயளோ?"

"இதுக்கு
ரெண்டாயிரம் காவல்,
ஒரு ஆணையன்,
ரெண்டு மூணு வட்டாட்சி,
ஒரு மாவட்டாட்சி,
ஏகப்பட்ட ஊடகம்!"

"போங்கடா, போக்கத்த பயகளா?
போயிஅந்த உயர்மன்றில்
ஓங்கி அறிக்கை வையுங்க!
அரசினோட அதிகாரம்
அமைதிகாத்த கதைவிடுங்க!"

"அப்புறம்

தமிழினத்துத் தலைவரென,
புரட்சிக்குத் தலைவியென,
தமிழ்க்குடியைத் தாங்கியென,
புரட்சியெழும் புயலெனவே

நாலைஞ்சு பேரிங்கே
நாடெல்லாம் அலையுறாங்க

அவுகளையெல்லாம்
இனிமே சிவகங்கைச் சீமையை
எட்டிப் பார்க்காதீகன்னு சொல்லுங்க.

வாக்குக்கேட்டு ஒரு பய வந்தா,
அப்புறம் செருப்புப் பிஞ்சுரும், ஆமா!"

"டேய், என்னங்கடா பேசிட்டு நிக்கிறீங்க!

தேரோடுற பாதையிலே,
தெளியாத காலத்துலே,
கல்லும், முள்ளும் கிடந்ததனால்,
பள்ளு, பறை நம்மஆட்கள்
கையெல்லாம் வேண்டுமெனத்
கூப்பிட்டாய்ங்க! தேரிழுத்தோம்!
இப்பத்தான்,
எல்லாம் பொருளாதாரம் தலைகீழாச்சே!
அவனவன் சோலி அவனுக்கு;
எங்கே பார்த்தாலும் வரட்டுக் குரவம்டா!
அதோட,
நாலுவீதியுந்தான் தார்போட்டு
இழைச்சுட்டாய்ங்களே, அப்புறம் என்ன?
அவய்ங்க மட்டுமே தொட்டாக் கூடத்
தேர் என்ன, வண்டி கணக்கா ஓடாது?
முக்கா மணியென்னடா?
முக்குறதுள்ளே முடிச்சிருவாய்ங்க?"

"அய்யா, சாமிகளா, போறவழியிலே
சொர்ணமூத்தீசரையும் பெரியநாயகியையும்
நாங்க சாரிச்சதாச் சொல்லுங்க!
நாங்க வடந்தொட்டா,
அருள்மிகுந்த அவுகளுக்கு ஆகாதாம்,
கோச்சுகுவாகளாம்,
மழ வாராமப் பண்ணிருவாகளாம்."
இப்படியே போனா,
அவுகளும் எங்களுக்கு வேணாம்,
நாங்களும் அவுகளை விலக்கி வச்சுர்றோம்"

"டேய், சாமிகுத்தம்டா,
விலக்கு, கிலக்குன்னு பேசாதே!"

"அடச்சே போங்கடா!
தேரோடுதா(ன்), தேர்?
முதல்லே
அவனவன் மனசுலே
தேரோடுமான்னு பாருங்கடா?"


Áɺ¢ø §¾§Ã¡ÎÁ¡?
(¯¨ÃÅ£îÍ)

(«Ã¢ÂìÌÊ¢ø þÕóÐ ¬È¡ÅÂø ÅƢ¡¸ò §¾Å§¸¡ð¨¼ §À¡Ìõ ÅƢ¢ø ¸ñ¼§¾Å¢ þÕ츢ÈÐ. º¢Å¸í¨¸ ÁýÉ÷ ÅÆ¢ì §¸¡Â¢ø; ¿¡Ö ¿¡ð¼¡ÕìÌ Ó¾ø Á⡨¾ ±ýÀÐ ÅÃÄ¡üÈ¢ø ¯ûÇÐ ¾¡ý. ¬É¡ø º¢Ä ¾¨ÄӨȸÙìÌ ÓýÉ¡ø ±øÄ¡ Áì¸Ùõ §¾÷żõ À¢Êò¾¡÷¸û. þý¨ÈìÌò §¾÷żõ À¢ÊôÀ¾¢ø ´Õ ÅÃðÎì ÌÃÅõ (¦¸ªÃÅõ).

¿õ ÌÓ¸ô À¢Èú Àħ¿Ãõ ¦¸¡¾¢ôÀ¨¼Â ¨Å츢ÈÐ. ±ò¾¨É§Â¡ ¦ÀÕ¨Á ¦¸¡ñ¼ º¢Å¸í¨¸î º£¨Á¢ý Á¢ïº¢ô §À¡É «ÅÄí¸Ùû þÐ×õ ´ýÚ.)

ÁÉõ ¦ÅÐõÀÖ¼ý,
þáÁ.¸¢.

"±ýÉí¸¼¡,
'þýÉ¡÷ Á¸ý'Û
À¼í ¸¡ðÎÈ£ÂÇ¡?"

"«ïÍ Á½¢ìÌ ¿¡ÖÅ£¾¢
Íò¾¢ÅÕõÛ ¦º¡øÄ¢ôÒðÎ,
¦ÃñÎ Á½¢ìÌ «×ì¸×측ö
²È¢ÅóРżõ ÒÊôÀ¡?

ÜÊ Åó¾ ±í¸ ºÉõ,
§¸¡Â¢ø ¾ûÇ¢ ¿¢Úò¾¢Å,
Å¢ÚÅ¢ÚýÛ 4 Å£¾¢
Íò¾¢Åà þØòÐÅ¢ðÎ,

§¾Õ¿¢¨Ä ¦¸¡ûÙÓ§É,
¯ôÒ즸¡Õ ºôÀ¡½¢Â¡,
µðÊÅó¾ þÕÀò¾¡¨È
´ñÏÜÊò ¦¾¡¼î¦º¡øÄ¢...."

"²ñ¼¡ §¼ö,
320 §ÀÕ Å¼õÀ¢Êì¸¢È þ¼òЧÄ,
þÕÀò¾¡ÚìÌ §Áø
±í¸¡ÙýÉ¡ì ¦¸¡ûÇ¡§¾¡?

¿¡Öżò¾¢ø ´ñ¨½ì ¦¸¡Îò¾¡ì
§¸¡½ôÀ¸ǡ, ¯í¸ÙìÌì
¦¸¡Èﺢ§À¡Â¢ Å¢ÇﺢէÁ¡?"

¦¾¡ð¼Å¼õ À¼õÒÊîÍ
Àð¼õÅ¢¼ô §À¡È£Â§Ç¡?"

"þÐìÌ
¦Ãñ¼¡Â¢Ãõ ¸¡Åø,
´Õ ¬¨½Âý,
¦ÃñÎ ãÏ Åð¼¡ðº¢,
´Õ Á¡Åð¼¡ðº¢,
²¸ôÀð¼ °¼¸õ!"

"§À¡í¸¼¡, §À¡ì¸ò¾ À¸ǡ?
§À¡Â¢«ó¾ ¯Â÷ÁýÈ¢ø
µí¸¢ «È¢ì¨¸ ¨ÅöÔí¸!
«Ãº¢§É¡¼ «¾¢¸¡Ãõ
«¨Á¾¢¸¡ò¾ ¸¨¾Å¢Îí¸!"

"«ôÒÈõ

¾Á¢Æ¢ÉòÐò ¾¨ÄŦÃÉ,
ÒÃðº¢ìÌò ¾¨ÄÅ¢¦ÂÉ,
¾Á¢úìÌʨÂò ¾¡í¸¢¦ÂÉ,
ÒÃ𺢦ÂØõ Ò¦ÄɧÅ

¿¡¨ÄïÍ §ÀÃ¢í§¸
¿¡¦¼øÄ¡õ «¨ÄÔÈ¡í¸

«×¸¨Ç¦ÂøÄ¡õ
þÉ¢§Á º¢Å¸í¨¸î º£¨Á¨Â
±ðÊô À¡÷측¾£¸ýÛ ¦º¡øÖí¸.

Å¡ìÌ째ðÎ ´Õ À Åó¾¡,
«ôÒÈõ ¦ºÕôÒô À¢ïÍÕõ, ¬Á¡!"

"§¼ö, ±ýÉí¸¼¡ §Àº¢ðÎ ¿¢ì¸¢È£í¸!

§¾§Ã¡ÎÈ À¡¨¾Â¢§Ä,
¦¾Ç¢Â¡¾ ¸¡ÄòЧÄ,
¸øÖõ, ÓûÙõ ¸¢¼ó¾¾É¡ø,
ÀûÙ, À¨È ¿õÁ ¬ð¸û
¨¸¦ÂøÄ¡õ §ÅñΦÁÉò
ÜôÀ¢ð¼¡öí¸! §¾Ã¢Øò§¾¡õ!
þôÀò¾¡ý,
±øÄ¡õ ¦À¡ÕÇ¡¾¡Ãõ ¾¨Ä¸£Æ¡î§º!
«ÅÉÅý §º¡Ä¢ «ÅÛìÌ;
±í§¸ À¡÷ò¾¡Öõ ÅÃðÎì ÌÃÅõ¼¡!
«§¾¡¼,
¿¡ÖÅ£¾¢Ôó¾¡ý ¾¡÷§À¡ðÎ
þ¨ÆîÍð¼¡öí¸§Ç, «ôÒÈõ ±ýÉ?
«Åöí¸ ÁðΧÁ ¦¾¡ð¼¡ì ܼò
§¾÷ ±ýÉ, ÅñÊ ¸½ì¸¡ µ¼¡Ð?
Ó측 Á½¢¦Âýɼ¡?
ÓìÌÈÐû§Ç ÓÊÕÅ¡öí¸?"

"«ö¡, º¡Á¢¸Ç¡, §À¡ÈÅƢ¢§Ä
¦º¡÷½ãò¾£º¨ÃÔõ ¦À⿡¸¢¨ÂÔõ
¿¡í¸ º¡Ã¢îº¾¡î ¦º¡øÖí¸!
¿¡í¸ ż󦾡ð¼¡,
«ÕûÁ¢Ìó¾ «×¸ÙìÌ ¬¸¡¾¡õ,
§¸¡îÍÌÅ¡¸Ç¡õ,
ÁÆ Å¡Ã¡Áô Àñ½¢ÕÅ¡¸Ç¡õ."
þôÀʧ §À¡É¡,
«×¸Ùõ ±í¸ÙìÌ §Å½¡õ,
¿¡í¸Ùõ «×¸¨Ç Å¢Ä츢 ÅîÍ÷§È¡õ"

"§¼ö, º¡Á¢Ìò¾õ¼¡,
Å¢ÄìÌ, ¸¢ÄìÌýÛ §Àº¡§¾!"

"«¼î§º §À¡í¸¼¡!
§¾§Ã¡Î¾¡(ý), §¾÷?
Ó¾ø§Ä
«ÅÉÅý ÁÉͧÄ
§¾§Ã¡ÎÁ¡ýÛ À¡Õí¸¼¡?"