இந்த அபிஷேகம் என்ற சொல்லின் மூலம் என்ன என்று இங்கு பார்ப்போம்.
தமிழில் ஆழ்தல், கீழ் வருதல், இறங்குதல் என்ற பொருட்பாட்டுச் சொற்கள் பலவும் உண்டு. பொதுவாக, நீரோடு பொருத்திய கூட்டுச் சொற்கள் தமிழில் மிகப் பல.
நீருக்குள் நாம் இறங்கலாம். அது தன்வினை.
இன்னொருவர் நம்மை நீருக்குள் இறக்கலாம். அது பிறவினை.
தவிர, இன்னொரு வகையான பிறவினையும் இருக்கிறது. அதில் நாம் அப்படியே குந்தி இருக்க, நம் மேல் இன்னொருவர் நீரை இறைக்கிறார். அப்படிச் செய்யும்போது கூட, நம்மை நீருக்குள் இறக்குவதாய், ஒரு பொருள் வரத்தான் செய்கிறது. ஏனெனில், அவர் நீரை இறைக்கும் போது, நம்மை நீருக்குள் இறக்குகிறார்; நாம் இறங்குகிறோம். இப்படி ஒரு தொடர்ச்சியான பொருள் வரத் தேவையானது நீருக்கும் நமக்கும் இடையே ஓர் உறழும் இயக்கம் அல்லது உறழிய இயக்கம் தான் (relative motion) (உறழ்தல் = to relate; உறழ்>உறழ்வு>உறவு = relative). இப்பொழுது சொற்களைப் பார்ப்போம்.
ஆழ்தல்>ஆடல் = இறங்குதல் (ழ்+த = ட); நீர் ஆடல் = நீருள் இறங்குதல்; நீராட்டு = நீரை இறக்கும் செயல்; ஆழ்>ஆழம்
இல்>இர்>இரங்கு = கீழ்வருதல்; இரங்குதல்>இறங்குதல் = கீழ் வருதல்; இர்>இரிதல் = இறங்குதல், வடிதல்
இல்>இலி>இலிதல் = இறங்குதல்;

இல்தல்>இழ்தல்>இழிதல் = இறங்குதல்;
இலி>இழி>இழிகுதல் = இறக்குதல்;
இழிகு>இழிகம் = இறக்கும் செயல்.
இழிகுவது என்றவுடன் சட்டென்று யாரும் இழிவுப் பொருளை எண்ண வேண்டாம். இழிகுவதைத் தான் liquid = one which goes down flowing என்ற மேலையர் சொல்கிறார். [நான் பலமுறை சொல்லி வந்திருக்கிறேனே? தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு எங்கோ இருக்கிறது. அதன் ஊற்றுக்கண் தான் புரிபடவில்லை.]
இனி, அம் எனும் சொல் நீரைக் குறிக்கும்; அதே சொல் அம்பு என நீண்டும், நீரைக் குறிக்கும்; அம்+இழ்தல் = அமிழ்தல்; அம்மிற்குள் இறங்குதல்; அமிழ்தலின் பிறவினை, அமிழ்த்தல் = நீருள் இறக்குதல்.
அம்பு +ஆடல் = அம்பாடல்; அம்பு>அம்பா; அம்பா + ஆடல் = அம்பாவாடல்; எம்பாவைப் பாடல்கள் ஒருவகையில் பார்த்தால், பாவை நோன்பு; இன்னொரு வகையில் பார்த்தால் அது அம்பாவாடல் எனும் நீராட்டு. எது முதன்மையான பொருள் என்று இன்னமும் எனக்கு விளங்கவில்லை.

பாவை நோன்பை ஏன் நீராடும் குளத்தருகே செய்யவேண்டும் என்பதும் கூட எனக்குப் புரிபடவில்லை. தைநீராடல் என்று பரிபாடலும், மார்கழி நீராடல் என்று பாவைப் பாட்டுக்களும் நீராட்டையே பேசும் போது, வேறு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி தோன்றிக் கொண்டே இருக்கிறது.
முல்> முல்ங்குதல்> முங்குதல் = இறங்குதல்; நீருக்குள் முங்கி எழுதல்
முல்ங்குதல்> முல்ஞ்சுதல்> மல்ஞ்சுதல்> மஞ்சுதல்> மஞ்ஞுதல்> மண்ணுதல் = நீர் இறங்குதல்
முல்> முழு> முழுகுதல்> முழுக்குதல் = நீருக்குள் இறக்குதல்
மண்ணுதல்> மண்ணம்> மணம் = நீருள் இறங்கும் செயல்; அகநானூற்றின் படி, அக்கால தமிழர் மணம் என்பது கூடியிருப்போர் வாழ்த்துக் கூற நடக்கும் மங்கல நீராட்டே ஒழிய வேறு எதுவும் அல்ல. இக்காலத்தில் நாம் காணும் தாலி கட்டுப் பழக்கம் தமிழருக்குள் எப்பொழுது ஏற்பட்டதென்று தெரியவில்லை. இன்றைக்கும் எங்கள் பக்கம், திருமணத்தில் மாலை நேரத்தில் மஞ்சள் நீராடும் சடங்கு மணமக்களுக்கு உரிய சடங்கே. அதேபோல மணி விழாக்களிலும் மஞ்சள் நீராடுவதே, கும்பஞ் சொரிவதே, பெருஞ்சடங்காகத் தமிழ்நாடு எங்கணும் கொள்ளப்படுகிறது. மஞ்சனம்>மஞ்ஞனம்>மண்ணனம் = நீர் இறக்கும் செயல்
இதுவரை ஏற்பட்ட இந்தப் புரிதலோடு, அபிஷேகம் என்ற வடசொல்லைப் பார்த்தால் அதன் தமிழ் மூலம் நமக்கு எளிதில் கிடைத்து விடும்.
அம்>அம்பு>அப்பு = நீர்
அம், அம்பு, அப்பு என்ற சொற்களை நீர் என்ற பொருளுக்குத் தொடர்பாய் ஆவணப் படுத்தித் தமிழில் பல சான்றுகள் இருக்கின்றன. ப.அருளியாரின் யா என்ற பொத்தகத்தைப் பார்த்தால் இது புலப்படும். (இந்தப் பொத்தகம் பற்றி முன்னே சொல்லியுள்ளேன்.) இச்சொற்களெலாம் தமிழ்ச் சொற்களே.
அப்பு + இழிக்குதல் = அப்பிழிக்குதல் = நீராட்டுதல்
அப்பு + இழிகம் = அப்பிழிகம் = நீராட்டு
அப்பிழிகம் என்பது வடமொழிப் பலுக்கில் ழகரம் ஷகரமாகி, அப்பிஷிகம்> அப்பிஷேகம்> அபிஷேகம் = நீரை இறக்கும் செயல் என்று ஆகும். (பெருமானர் வழக்கில் இழைந்து கொள்வதை ஈஷிக் கொள்வதாகச் சொல்வார்; ழகரம் பெரும்பாலும் ஷகரமாகவே ஒருசிலரால் மாறிப் பலுக்கப் பட்டுள்ளது.)

தமிழ் முறைப்படி சொற்புணர்ச்சியைப் பிரிக்காமல், மோனியர் வில்லியம்சின் வடமொழி அகரமுதலி, அபி+ஷிக் என்று பிரித்து, அபி என்பதை to, towards, into, over, upon என்ற வேற்றுமை உருபுகளாய்ப் பொருள் கொண்டும், ஷிக் என்பதற்கு இழிகுதல் என்றே பொருள் சொல்லியும் ஆவணப் படுத்தும்.
மேலே உள்ள சொல் தொகுதிகளை மனதிற் கொண்டு பார்த்தால், அபி+ஷிக் என்று பிரிப்பது சரியான மூலம் காணாமல், பொருந்தாதைப் பொருத்திச் சொல்லும் உத்தி என்பது புலப்படும்.
வடமொழிப் பலுக்கில் இழிகு என்பது, இஷிகு என்றாகி முன்னாலுள்ள இகரமும், பின்னாலுள்ள குற்றியலுகரமும் கெட்டு ஷிக் என்று தானே வந்து சேரும்?
எந்த இயல் மொழியிலும் பொதுமைப் பொருளில் இருந்து விதப்புப் பொருளுக்குக் கருத்து வருவது, (மாந்தப் பட்டறிவிற்கு எதிர்மறையாய் இருப்பதால்,) மிக அரிது. பெரும்பாலும் விதப்புச் சொற்களில் இருந்தே பொதுமைச் சொற்கள் இயல் மொழிகளில் ஏற்படுகின்றன.

அப்பு இழிதல் என்பது விதப்பிக் காட்டும் செயல். அப்பு என்பதை கருத்தில் கொள்ளாமல், வெறுமே அபி +இழி எனப் பிரித்து, அபி யை வேற்றுமை உருபு ஆக்கி, இழிக்கு நீருக்குள் இறக்குவது என்று பொருள் கொள்வது வலிந்து காட்டும் முயற்சி. காட்டாக, வாயால் இழித்துக் காட்டினான் எனும்போது வாயிதழ் இறக்கிக்காட்டப் படுகிறதே ஒழிய, அங்கே நீருக்கு வேலை இல்லை. இழித்தலுக்கு நீரோடு சேர்ந்த விதப்புப் பொருள் கிடையாது.
சிவநெறி, விண்ணெறிச் சொற்களில் இது போன்ற பலவற்றையும் ஓர்ந்து பார்த்தால், உள்ளே ஆழ்ந்த தமிழ்மூலம் காட்டுவது வியப்பில்லை. ஏனெனில், இந்நெறிகள் தெற்கே தமிழகத்தில் எழுந்தவை. வேத நெறியைச் சிவ, விண்ணெறிகளோடு பிணைத்து ஒரு வகைக் கலவை நெறியை உருவாக்கியது நெடுங்காலம் கழித்தே நடந்திருக்க வேண்டும். இதை உணர்வதில், அப்பிழிகம் என்பது இன்னுமோர் எடுத்துக் காட்டு.
அப்பு இழிகத்தின் தொடர்ச்சியாய், திரு நாவல்கா = திருவானைக்கா பற்றியும் சொல்ல வேண்டும். நாவல் மரம் நிறைந்த கா நாவல் கா. திருவரங்கத் தீவின் ஒரு புறத்தில் நாவல் மரம் நிறைந்த பகுதியில் இருந்த ஈசருக்கு நாவல்கா ஈசர் என்ற பெயர்; இன்று அவர் ஜம்புகேசுவரர் என்று சொல்லப்பட்டு, மூலம் அறியவொண்ணா வகையில் இருக்கிறார். (திருவானைக்காவில், தல மரம் நாவல் மரம் தான்.)
நாவல் என்னும் சொல் யா என்னும் வேரில் பிறந்தது. யா எனும் வேருக்குக் கருமைப் பொருள் அடிப்படையானது. யா எனும் வேரில் பிறந்த சொற்கள் மிகப் பல. யாவ மரம்> நாவ மரம்> நாவல் மரம் என்று ஆகும். அதே போல யாவ மரம் என்பது இன்னொரு வகையில் யாம மரம்>யாம்ப மரம் ஆகிப் பின் வடமொழிப் பலுக்கில், ஸகரம் சேர்த்து ஸ்யாம்ப மரம்>ஜ்யாம்ப மரம்>ஜம்பு மரம் என்றாகும். நாவலந்தீவு என்ற சொல்லே "ஜம்புத் தீவே பரத கண்டே" என்று வடமொழி மந்திரத்தில் மொழி பெயர்க்கப் படும். "நாவலம் தண்பொழில்" என்பது இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 2300 ஆண்டுகள், தமிழன் பயன்படுத்திய சொல். ஜம்புத் தீவு நம்மால் எழுந்த பழக்கம்; பரத கண்டம் வடவரால் எழுந்த பழக்கம். வடமொழி மந்திரங்களையும், சொலவடைகளையும் கூர்ந்து படித்தால் நிறையச் செய்திகள் புரியும். அவற்றைச் சரியானபடி விளங்கிக் கொள்ளத் தான் ஆட்கள் அருகி இருக்கிறார்.
திரு நாவல்காவும், திருவரங்கமும் சேர்ந்திருக்கும் இடம் காவிரியில் ஒரு தீவு.
[முன்பே ஒருமுறை ஈல்தல் என்ற வினையை ஓட்டி எழுந்த பெயரை நினைவு கொண்டால், ”அரங்கு” எப்படி எழுந்ததென்று புரியும். ஈல்தல் = பிரிதல். இதே சொல்லை ஈல்ங்குதல் என்றும் சொல்லலாம். (நில் என்று தமிழில் சொல்வதை நில்க்கு என்று மலையாளத்தில் சொல்வதில்லையா? அதுபோல ஈல், ஈல்ங்கு என்பவை வெவ்வேறு வட்டாரப் புழக்கம், அவ்வளவு தான்.) இவ் வினையடிகளின் வழி, பெருநிலத்தில் இருந்து ஆறோ, கடல்நீரோட்டமோ, தனித்துப் பிரித்த சிறு நிலம், ஈழம் (= ஈல்ந்த இடம்) என்றும், இலங்கை (=ஈல்ங்கிய இடம்) என்றும் பெயர் கொள்ளும். ஈழம், இலங்கை என்ற சொற்களுக்கு island என்ற பொதுமைப் பொருளையே கொள்ளலாம்.
மாவிலங்கை என்ற இன்னொரு தீவு தென் பெண்ணையாற்றின் நடுவில் உண்டு. இதே போல ஈல்தலுக்கு இணையாக அருதல்>அரிதல் என்ற சொல்லும் உண்டு. அரு>அறு என்பதும் அதேபொருளில் எழுந்ததே. ஆற்றால் அறுத்து எழுந்த இடம் அரங்கு>அரங்கம். அதன்பொருள் தீவு மற்றும் மேடு என்பதே. அதனால்தான் நாட்டியமாடும் மேடைக்கும் அரங்கு என்கிறோம். திருவரங்கம் ஒரு தீவு.]
காவிரியில் வெள்ளம் நிறைந்துள்ள நாட்களில், நாவல்கா சிவன் கோயில் கருவரைத் தரையில் இருந்து நீர் ஊறிச் சுரந்து கொண்டே இருக்கும். அக் கருவறையின் நடுவில் நீர் வெளிவருவது ஒரு இலிங்கம் நீர்வடிவில் இருப்பது போலவே காட்சியளிக்கும். இந்நிகழ்வால், அங்கு இறைவனை நீர் எனும் பூதமாகவே உருவகித்ததில் வியப்பே இல்லை. இறைவனின் வெளிப்பாட்டை எத்தனையோ வகையில் உணருகிறோம் அல்லவா? அவன் அப்பு வடிவில் அங்கு எழுகிறான்.
அந்த அப்பு/அம்புவையும், நாவல் என்னும் அம்பு/ஜம்புவையும் கலந்து புரிந்து கொண்டு, பின் நாவல்கா> நாவக்கா என்பதை வாநக்கா என்பதாய் metathesis -ல் மாறி ஒலித்து திருவாநக்கா> திருவானைக்கா> திரு + ஆனைக்கா என்றாகி தொன்மங்கள் பெருகிவிட்டன.

"ஆனை ஒன்று வந்ததாம், இறைவனுக்கு நீர் கொண்டு வந்து பூத் தூவி வழிபட்டதாம்; இலிங்கத்தை வெளிக் கொணர்ந்ததாம், சோழன் பார்த்தானாம், கோயில் எழுப்பினானாம் ...... இப்படிப் போகின்றது அந்தத் தொன்மக் கதை. நான் தொன்மக் கதைகளை ஒதுக்குகிறவன் இல்லை; ஏனென்றால் அவை நம்பிக்கையின் பால் எழுகின்றன. அதே பொழுது தொன்மக் கதைகளுக்கும் உள்ளே என்ன உட்கருத்து இருக்கிறது என்று பார்க்க விழைபவன்.
இங்கே நான் புரிந்து கொண்டது:
--------------------------
ஆற்றின் நடுவே ஓர் அரங்கம்; அரங்க ஓரத்தில் நாவல்மரம் நிறைந்த ஒரு கா. காவின் நடுவில் நீர் சுரந்து கொண்டேயுள்ளது. அதன் விளைவாய் அது சுயம்பு இலிங்கமாய்க் காட்சியளித்திருக்கிறது. நீர் சுரப்பது, அப்பு இழிவது போலவே தோற்றியிருக்கிறது. முடிவில் யாரோ ஒரு சோழ அரசன் ஒரு கோயிலை இங்கு எழுப்பியுள்ளான். நாவ(ல்)கா ஈசர்> ஜம்புக ஈசர் என்று ஆகிப் பின் ஜம்புகேசுவர் என்று வடமொழிப் புணர்ச்சியில் சொல்லப் படுகிறார்.
அன்புடன்,
இராம.கி.

7 comments:
கன்னடத்தில் கூட இறங்கவேண்டும் என்பதை இலி (இழி?) பேக்கு என்கிறார்கள்.
கன்னடத்தில் இளி என்ற உச்சரிப்பில் இந்தச் சொல் வழங்கப்படுகிறது. இழி என்ற பதத்தை நக்கீரரும் பயன்படுத்தியிருக்கிறார். பல தமிழ்ப் புலவர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
நல்ல கட்டுரைய ஐயா. மிகவும் படித்து மகிழ்ந்தேன்.
தென்னாற்காட்டின் சில கிராமப்புறங்களில் 'இழி' என்ற சொல்லையே இறங்கு என்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இதைப் பற்றி முன்பு எப்போதோ ஒரு பதிவில் எழுதியிருந்தேன்.
இன்று வலைப்பூக்களில் தமிழ்ப் பூக்களே அதிகமாக இருக்கிறது. உங்கள் அபிஷேக விளக்கம் மிகவும் நன்று. வடமொழிக்காரர்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ளலாம்.
அன்பிற்குரிய பெருவிஜயன், இராகவன், சுதர்சன்
உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
வட்டாரப் புழக்கங்களை இப்படி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டால் தான், நமக்கு நம் வளம் தெரியும்.
அன்பிற்குரிய சம்மட்டி,
தங்கள் கனிவான சொற்களுக்கு நன்றி.
அன்புடன்,
இராம.கி.
அய்யா,
இதைவிட அபத்தமாக யாரும் எழுதிவிட முடியாது. மொழியியல் அறிவு இருக்க வேண்டுமென்றால், அதுவும் மற்ற மொழிகளில் உள்ள வார்த்தைகள் பற்றி ஆய்வு செய்யவேண்டும் என்றால், அந்த மொழிகளைப் பற்றிய குறைந்தபட்ச அறிவு வேண்டும்.
தமிழில் இருந்துதான் சீன மொழி தோன்றியது, தமிழில் இருந்துதான் கிரேக்க மொழி தோன்றியது என்று சொல்வார் என் தமிழாசிரியர். அந்த linguistic mumbo-jumboவிற்கும் இதற்கும் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
ஜம்புத்வீபம் என்ற வார்த்தை, அல்லது குறைந்தபட்சம் ஜம்பு என்ற வார்த்தை தமிழில் முதன்முறையாக எப்போது புழக்கத்தில் வந்தது? பாலி மொழியில் எப்போதிலிருந்து புழக்கத்தில் இருக்கிறது? சமஸ்கிருந்த நூல்களில், மந்திரங்களில் எப்போது - எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் நீங்கள் விளக்கியிருந்தால், இந்த ஜம்பு-பரத வித்தியாசத்தை உங்களது பதிவைப் படிப்பவர்களும், ஏன் நீங்களும் கூட புரிந்து கொண்டிருப்பீர்கள்.
ஆனா, என்ன செய்ய... இப்படிப்பட்ட கோஷங்களிலேயே நமது தமிழுணர்வும், தமிழாராய்சியும் மற்றவர்கள் எள்ளி நகையாடும் தரத்தில் இருக்கின்றன.
நீங்கள் ஒரு தமிழறிஞராம்....உங்களது இந்தக் கண்டுபிடிப்புகளைக் கண்டு புல்லரிக்க ஒரு பெரும் கூட்டம்... தமிழுக்கு வந்த சோதனைதான் வேறேன்ன!
கடுமையான சொற்களாகத் தெரிந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் (இதை நீங்கள் பிரசுரிக்காவிட்டாலும் பரவாயில்லை,உங்களது பார்வைக்காக மட்டுமே இதை எழுதுகிறேன்).
பெயரிடாது வந்த பெருமகனாரே!
தங்கள் பக்கத்து நாயங்களை; ஒழிந்திருந்து சொல்வதன் மர்மம் என்ன?? அதனால் தங்கள் மேல் நம்பிக்கை வர மறுக்கிறது.
ஐயா நேரடியாகத் தன் கருத்தை வைக்கிறார். மாற்றுக்கருத்திருந்தால் முகத்தை மறைக்காமல் சொல்லுங்கள்.
முதல் அந்தப் பண்பை வளர்ப்போம்.
பிரஞ்சு மொழியில் ஒரு சொல் cueillier இதை உச்சரிப்பது "கொய்"...அவர்கள் கூட மலர் கொய்தலுக்கு இந்தச் சொல்லையே பாவிக்கிறார்கள். தமிழில் இருந்து பிரஞ்சுக்கு வந்திருக்கலாம் என அவர்களும் நினைக்கிறார்கள்.
அதனால் எல்லோர் கருத்தையும் அறிவோம்.
Post a Comment