கைநிறைய நெல் வைத்திருந்தோம்; திடீரென்று ஏதோ தவறி மண்ணிற் சிதறிவிட்டது. தொலைவில் இருக்கும் மற்றோருக்கு நெல்மணிகள் நம்மிடம் இருந்ததை எப்படி அடையாளம் காட்டுவது? சிதறிய நெல்மணிகளுக்கு அருகில் வந்து, அவற்றைச் சேர்த்து, பெருக்கிக்/பெருவிக் காட்டினாற் தான் நெல் இவ்வளவு இருந்தது என்று யாரும் நம்புவார்கள். To prove is to enlarge the relevant things, to concentrate, to bring them up, or to make it big.
நமக்கு ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விட்டது, நிகழ்வு நடக்கும் போது மற்றோர் இல்லை. அதை எப்படிப் பின்னால் மற்றோருக்கு உணர்த்திக் காட்டுவது? குறிப்பிட்ட நிகழ்வு நடந்ததற்கான சான்றுகளைச் சேர்த்துப் பெருவிக் காட்டினாற் தான் அந்த நிகழ்வு நடந்ததென்று மற்றோர் நம்புவார்கள். To prove is to enlarge the relevant things, to concentrate, to bring them up, or to make it big.
இதே போலக் கணிதத்தில் சில விவரங்களைச் சொல்லி, பின் கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்திச் சிலவற்றை நிறுவச் சொன்னால், அதை எப்படிச் செய்கிறோம்? கொடுத்த விவரங்களில் இருந்து கணிதக் கோட்பாடுகளுக்கிணங்க, பல்வேறு சமன்பாடுகளைத் திரட்டி, ஒன்றிலிருந்து இன்னொன்று எழும் என்று ஏரணங் காட்டிப் பெருகிக் சொல்லும் போது தான் ஏதொன்றையும் நம்மால் நிறுவமுடிகிறது. To prove is to enlarge the relevant things, to concentrate, to bring them up or to make it big.
வாழ்க்கையில் நிறுவுதல் (to establish) என்பது பெருகுதல்/பெருவுதலோடு (to prove) தொடர்புற்றது. சேர்க்கச் சேர்க்க அது பெருவும்/செறியும், பெருவும் பொழுது, செறியும் பொழுது தான் நம் நம்பிக்கை கூடுகிறது. உண்மை எதுவென்று புரியத் தொடங்குகிறது. மெலிந்து ஓரியாய்க் கிடந்தால் யார் நம்புவார்கள். slender proof என்று சொல்லிப் போய்விடுவார்கள். பெருவுதலுக்கும் slender -க்குமான முரணைப் பார்த்தீர்களா?
இந்தக் காலத் தமிழில் நிறுவுதல் என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டே to establish, to prove என்று பலவினைகளுக்கும் பொருத்தி ஒப்பேற்றிவிடுகிறோம். என்னைக் கேட்டால் நடைமுறையில் நிறுவுதல், பெருவுதல்/பருவுதல் என்ற இரு சொற்களையும் இதற்கு இணையாய் வைத்துக் கொள்வது அதிகப் பயனைத் தரும். ஏனென்றால் to prove என்பதோடு proof, provability, probability போன்றவை தொடர்புடையவை. எவ்வளவு முயன்றாலும் நிறுவம், நிறுவுமை போன்றவற்றின் பொருட்பாடுகளை proof, provability போன்றவற்றிற்கு நீட்டுவது கடினம்.
probability என்ற சொல்லிற்கு நிகழ்தகை, நிகழ்தகவு என்ற சொல் புழங்கிப் பார்த்திருக்கிறேன். ”இது நிகழும், நிகழாதுபோகும்; நிகழ்வதற்கு இத்தனை வாய்ப்புக்கள் உள்ளன” என்ற கருத்தை உள்ளடக்கியது ”நிகழ்தகை” என்ற சொல்லாகும். ஆனால் அந்தச் சொல் இன்னும் புழக்கத்தில் வரச் சரவற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சொல்லின் ஊடே ழகரமும், தகரமும் அடுத்தடுத்து வரும்பொழுது புணர்ச்சியின் காரணமாய் அவற்றை ட-கரமாக மாற்றவேண்டும். இருந்தாலும் (நிகடகை என்பது சொல்லுதற்கு எளிதில்லை என்பதாலும்) புணர்ச்சி பழகாது பலரும் நிகழ்தகை என்றே எழுதுகிறார்கள். அதோடு, நிகழ்தகை என்ற சொல் probablity க்கும் to prove க்கும் உள்ள உறவை காட்டாது இருக்கிறது.
If inifinite attempts are made, any probability is almost provable. Probability is potential provability. Provability and probability are related through just a change of v to b. என்னைக் கேட்டால் அடிப்படைப் பொருள் வழுவாமல் தமிழில் இணைச்சொற்களை உருவாக்க முடியும். அவை, .
பெருவுதல்/பருவுதல் = to prove
பெருவு/பருவு = proof
பெருவுமை/பருவுமை = provability
பெருதகை/பருதகை = probability, probable, probabilistic
பெருதகையாக/பருதகையாக = probably
அன்புடன்,
இராம.கி.
Monday, June 21, 2010
Tuesday, June 08, 2010
தமிழி உயிர்மெய்களின் அடவு
தமிழியில் உள்ள இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை மாற்றி அவற்றை கிரந்தக் குறியீட்டோடு நிறுவுவதற்குத் தமிழெழுத்துச் சிதைப்பாளர் இப்போது பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார். அதுவும் செம்மொழி மாநாடு இன்னும் 15 நாட்களில் வரப்போகிறதா? வயிற்றில் நெருப்புக் கட்டியதுபோல் சிலருக்கு இருப்புக் கொள்ளவில்லை ”இருக்கும் நாட்களுள் ஏதேனுங் குழப்பஞ்செய்து தமிழக அரசாணையைப் பெற்றுவிட மாட்டோமா?” என்று குட்டிக்கரணம் போடுகிறார். இன்னுஞ்சிலர் “கொம்புகளின் குதர்க்கம்” என உளறுகிறார். மொத்தத்தில் ”அவர்சொன்னார், இவர்சொன்னார்” என மேலோடக் கூறி, அரசியலாரோடு கூடிக் குலவி, உண்மைத் திராவிட ஆர்வலரையும் ”பெரியார் பெயர் சொல்லி” ஏமாற்றி, எல்லோருக்கும் எல்லாமுமாய் கவடம் பேசிக் கருமமே கண்ணாய்ச் சிதைப்புவேலை செய்கிறார். திராவிடச் சிந்தனையாளர் தெரிந்தோ, தெரியாமலோ, எழுத்துச் ”சீர்திருத்தம்” பேசுவதும் இச்சிதைப்பு வேலைக்கே கொண்டுபோய்ச் சேர்க்கும். எல்லா எழுத்தும் ”கணியில் இரண்டு பொத்தான் அடிப்பு” என வந்தபிறகு இனிமேல் எவ்வெழுத்துச் சீர்திருத்திற்கும் பொருளில்லை என்பது ஆழமாய்ச் சிந்திப்போருக்குப் புரியும்.
தமிழெழுத்துச் சிதைப்பாளர் தமிழுக்குமட்டும் உலைவைக்காது, கூடவே தமிங்கிலம் எனும் குறைப்பிள்ளையையும் பிறப்பித்தெடுக்க எழுத்துநடை போடுகிறார். தமிங்கில மொழியை எழுத்தில் கொண்டுவர 31 அடிப்படை எழுத்துக்கள் பற்றாது; 51 இருந்தாற்றான் எழுதமுடியும். (இணையத்தில் ஏராளமான தமிழ் இளைஞர் தம் அறியாமையிலும், சோம்பலிலும், ஒயிலாய் ஆடுவதாய் எண்ணிக்கொண்டும் உரோமனெழுத்தில் தமிழெழுத முற்படுவது இன்னொரு சோகம். இவருக்கும் 31 எழுத்துக்கள் பற்றா. இவர் முயற்சிகளும் தமிங்கிலத்தில் தான் கொண்டுசேர்க்கும்.) எனவே கிரந்த எழுத்துக்களை நுழைப்பதிலும் சிதைப்பாளர் மிகுவிருப்புக் கொள்கிறார். ஒருபக்கம் தமிழ் எழுத்துக்களைச் சிதைத்து, இன்னொருபக்கம் தமிங்கிலத்திற்குத் தேவையான எழுத்துக்களை நுழைக்க வழி பார்க்கிறார்.
உண்மையில் தமிழை எழுத இற்றைத் தமிழியிலிருக்கும் எழுத்துக்களே போதும். தேவையானால் ஏற்கனவேயுள்ள 5 கிரந்த எழுத்துக்களைக் கொண்டு பிறமொழி ஒலிகளைக் கொண்டுவரலாம். தமிழெழுத்துப் பாதுகாப்பாளரைப் ”பண்டிதர்” எனக் கேலிசெய்து, தமிழ்ப் புலவரை வேண்டாப்பிறவிகள் எனுமாப் போல ஒதுக்கி, ஒரு பண்பாட்டு ஒழிப்பே நடந்துகொண்டிருக்கிறது. வேடிக்கை பார்ப்போரும், சிதைப்பாளர் செய்வது நம் அடிமடியில் கைவைக்கும் செய்கை, கொஞ்சநஞ்சம் உள்ளதை உருவி நம்மை அம்மணமாக்கி இச்சிதைப்பாளர் ஓடப் பார்க்கிறார்” என்பதை அறியாமல் ”இன்னொருவருக்கு வந்தது போல்” வாளா இருக்கிறார்.
நடுவில் நிற்கும் பலருக்கும் ”தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் எப்படி எழுந்தன? அவற்றின் அடவு (design) எது?” என்ற பின்புலம் தெரியாமல் சிதைப்பாளர் முயற்சிகளுக்கு அரைகுறையாகத் தலையாட்டும் போக்கும் தென்படுகிறது. அறியாதாராய்ப் பொதுமக்கள் உள்ளதே ஏமாற்றின் அடிமானம் ஆகிறது. (பல தமிழசிரியருங்கூட ஏற்கனவே நடந்த திராவிட வழிகாட்டுதலில் மயங்கி எழுத்துச்சிதைப்பைச் சீர்திருத்தமென எண்ணித் தடுமாறுகிறார்.)
இக்கட்டுரையின் குறிக்கோள் 2700 ஆண்டுகளாய் இங்கு மாறாது இருக்கும் தமிழி உயிர்மெய்களின் அடவை விளக்கிச் சொல்வதாகும்.
பழங்கல்வெட்டுக்கள், நடுகற்கள், ஓட்டுச் சில்லுகள் ஆகியவற்றை ஆராய்ந்த தொல்லியலாளர், ”இந்தியத் துணைக்கண்டத்தில் சிந்து சமவெளி காலத்திற்கு அப்புறம் எழுந்த எழுத்துக்களில் ஆகப் பழையவை தமிழ்நாட்டிலும், இலங்கை அநுராதபுரத்திலும் தான் கிடைத்திருக்கின்றன” என்று கொஞ்சங் கொஞ்சமாய் ஏற்றுக் கொள்கிறார். தமிழ் நாட்டில் (கரூருக்கருகில் கொடுமணத்திலும், தேனி மாவட்டத்திலும்) கிடைத்த தமிழிப் பொறிப்புகள் தாம் இதுவரை இந்தியாவிற் கண்ட பொறிப்புக்களில் ஆகப் பழையனவாகும். கி,மு,4/5 ஆம் நூற்றாண்டு என்றே இவற்றின் காலம் சொல்லப்படுகின்றது. இலங்கையில் கிடைத்த பொறிப்பும் தமிழிக்கு இணையாகவே தெரிகிறது.
70, 80 ஆண்டுகளுக்குமுன் இதுபோல் பொறிப்புக்களை ”அசோகன் பெருமி” எனவழைத்தார். இப்பொழுது அசோகன் காலத்திற்கும் முன் கி.மு 4/5 ஆம் நூற்றாண்டுப் பொறிப்புக்களும் கிடைப்பதால் ”அசோகன் பெருமி எனச் சொல்வது பொருளற்றது” என்ற முடிவிற்குப் பெரும்பாலான தொல்லியலார் வந்துவிட்டார். உண்மையாகப் பார்த்தால், இலங்கையிற் கிடைத்தது பாகத மொழியின் பெருமிப் பொறிப்பு என்றும், தமிழகத்திற் கிடைத்தது தமிழிற் கிடைத்த தமிழிப் பொறிப்பு என்பதுமே சரியாகும்..
தமிழர் பலருங்கூடத் ”தமிழி” என்று பெருமிதத்தோடு, முற்கால எழுத்தைச் சொல்ல ஏன் தயங்குகிறாரென்று புரிவதில்லை. அதை ”அசோகன் வழிப்பட்ட பெருமி”, ”தமிழ்ப் பெருமி” என்று “ஊராருக்கு வந்த செய்தியாய்” ஒட்டுதல் இன்றிச் சொல்வது வியப்பாகிறது. இத்தனைக்கும் ”தமிழியில் இருந்து தான் பெருமி கிளைத்திருக்க வேண்டும், பெருமியிலிருந்து தமிழி கிளைத்திருக்க முடியாது” என வாதிக்க நிறையக் காரணங்களுண்டு. [அக்காரணங்களை எடுத்துரைக்க இக்கட்டுரை களனில்லை. எனவே அவற்றைத் தவிர்க்கிறேன்.] தமிழி எழுத்துப்பொறிப்பு பரவலாக (அரசகட்டளைப் பொறிப்பாக மட்டுமன்றி அன்றாடப் பொதுமக்களும், வினைஞரும், வணிகரும் பயன்படுத்தக் கூடிய அளவுக்குப் பரவலாக) இருந்திருக்கிறது அதாவது, தமிழரிடையே படிப்பறிவு பரவலாய் கி.மு.5/4 ஆம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கலாம்.
இனி உயிர்மெய் அடவுகளைப் பார்ப்போம். முதலில் உயிருக்கும் மெய்க்குமே எழுத்துக்கள் அமைந்தன போலும். (உயிரெழுத்து அடவுகள் எல்லாம் தனித் தனியே கிளைக்கவில்லை. அவை அ, இ, உ என்ற சுட்டெழுத்து வடிவுகளில் இருந்தே கிளைத்தன. மெய்யெழுத்து அடவுகளும் க், ட், த், ப், ந், ய்,ர், ல், வ் எனும் 9 மெய் வடிவுகளிலிருந்தே 18 ஆய்க் கிளைத்ததாய்த் தோற்றும். இவ் விளக்கத்தை வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.) உயிர்மெய்களுக்கு அடையாளமாய், அடிப்படை மெய்யெழுத்தை ஒரு சதுரமாகக் கருதி, அதில் 2 தீற்றுக்களை (strokes) வெவ்வேறு திசைகளில் அமைப்பார். [இதன் விளக்கம் படம் 1 ஐக் கொண்டு அறிக. வெறுஞ் சதுரம் கொண்டு 2 வரிசைகளும், ககரங் கொண்டு 2 வரிசைகளும் இங்கு அடையாளங் காட்டப்படுகின்றன.]

இங்கு சதுரம், மெய்யெழுத்தையும், சிலபோது அகரமேறிய உயிர்மெய்யையும் குறிக்கிறது. [மெய்க்குப் பகரமாய் சதுரம் பயன்படுத்துகிறேன்.] அதாவது மெய்யெழுத்திற்கும், அகரமேறிய உயிர் மெய்க்கும் வேறுபாடு தெரியாது குறித்துள்ளார். இதேபோல் ஒரு தீற்று சதுரத்தின் பக்கத்திற் கிளம்பி கிழக்கே நீண்டிருந்தால் அது அகரமேறிய உயிர்மெய்யையோ, ஆகாரம் ஏறிய உயிர்மெய்யையோ குறித்துள்ளது. இருவேறுபட்ட அடையாளங்கள் (அகரம், ஆகாரம்) ஒரே குறியீட்டிற்கு நெடுநாட்கள் இருந்தன. அதாவது க், க, கா என்ற எழுத்துப் பொறிப்புக்களில் (இதுபோல் 18 முப்படை எழுத்துப் பொறிப்புக்களில்) ஏதேனும் 2 பொறிப்புக்கள் ஒன்றுபோலவே காட்சியளித்தன. [அல்லது ஒரே பொறிப்பிற்கு 2 எழுத்தடையாளங்கள் இருந்தன.] 3 எழுத்துகளுக்கும் 3 குழப்பம் இலாப் பொறிப்புக்கள் எழுத்துக்களின் தொடக்கத்திலில்லை.
ஆனாலும், தமிழ்மொழிக்கு மட்டுமே தமிழியைக் கையாண்ட காலத்தில் இச் சிக்கல் பெரிதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ, (தொல்காப்பியக் காலமான) கி.மு.700 களிலிருந்து கி.பி.100 கள் வரை, சமகாலத்தில் இத்தடுமாற்றம் உணரப்படவில்லை. ஏனெனில் தமிழ் மொழியின் மெய்ம்மயக்கங்கள் தமிழ் பேசுவோர்க்குத் தெரிந்தன. எனவே, எழுத்துக் குறைபாடு புலப்படவில்லை.
தமிழ்ப் பயன்பாட்டில் சில விதப்பான வழக்குகள் உண்டு. ’க’ உயிர்மெய் வந்தால், அதன்முன் ’ங்’ மெய்யெழுத்துத் தான் வரமுடியும், ”ஞ், ந்” மெய்கள் வராது. அதேபோல க - விற்கு முன் ’ங’ உயிர்மெய்யாக வரமுடியாது. இது போல் எழுத்தொழுங்குகள் தமிழ்பேசியோருக்கு நன்றாகவே தெரிந்திருந்தன. அடுத்தடுத்து “கக” தமிழில் வராது, முன்வருவது க் என்றும் பின் வருவது க என்றே அமையும். இதுபோல வெவ்வேறு எழுத்தமைதிகள், எவ்வெழுத்து சொல்முதலில் வரும், எது சொல்கடையில் வரும், எது உயிர்மெய் அகரம், எது மெய்யெழுத்து என்று சொல்லமைப்பை வைத்தே, பெரும்பாலும் தமிழரால் சொல்ல முடிந்தது. மொத்தத்தில் தமிழி எழுத்து, தமிழை மட்டுமே எழுதப் பயன்பட்ட காலத்தில் தொடக்க எழுத்துக் குறையை உணரவிடாது மொழி அணி செய்து போக்கியது. The Tamizh language effectively camouflaged the inherent defect in the initial Tamizhi script. There was no realization of the problem at the start.
கி.மு.600 க்கப்புறம், கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழகத்திற்கும் மகதத்திற்கும் இடையே பொருளியல், அரசியல், மெய்யியல் எனப் பல்வேறு துறைகளில் உறவாடல்கள் கூடிப்போயின. வடக்கிருந்து வேதநெறியும், செயினமும், புத்தமும், தெற்கிருந்து உலகாய்தம், சாங்கியம், அற்றுவிகம் (ஆசீவகம்) போன்றவையும் ஒன்றோடொன்று உறவாடத் தொடங்கின. மொழிகளும் ஒன்றிற்குள் ஒன்று ஊடுறுவத் தொடங்கின. அதுகாறும் எழுதத் தயங்கிய வடபுலத்தார், தென்புலத்திலிருந்து ஏற்பட்ட தாக்கத்தால் தமிழி எழுத்தைத் தங்களுக்கேற்பப் பயன்படுத்தத் தொடங்கினர். வடபால் மொழிகளான எழுதாக் கிளவிகள் சிறிதுசிறிதாய் எழுதுங்கிளவிகளாய் மாறத்தொடங்கின. தமிழ் கி.மு.700 இல் இருந்தே எழுதுங்கிளவியாய் இருந்தது. பாகதம் கி.மு.400/300 இல் தான் எழுதுங்கிளவியாயிற்று. பாலி அதற்குப்பின்னரே, எழுத்துநிலைக்கு வந்தது. சங்கதம் கி.பி.150 இல்தான் எழுதுங்கிளவியாயிற்று. இற்றைப் புரிதலின் படி இந்தியத் துணைக்கண்டத்தில் முதலில் எழுதத்தொடங்கிய மொழி தமிழே. இக்கணிப்பில் சிந்துசமவெளி மொழியைக் கணக்கிற் சேர்க்க வில்லை. அது இற்றைக் காலத்தும் படித்து அறியப்படாததாகவே உள்ளது.]
தமிழி எழுத்தைப் பாகத மொழிக்கும், பாகதங் கலந்த தமிழ்மொழிக்கும் பயன்படுத்தத் தொடங்கியபோதே, முன்சொன்ன க், க, கா எழுத்துக்களின் பொறிப்புத்தோற்றக் குறை பெரிதாகக் காட்சியளித்தது. தமிழ் போலல்லாது பாகதச்சொற்களுள் எவ்வெழுத்தும் தொடங்கலாம், எதுவும் முடியலாம், தமிழ் போல் மெய்ம்மயக்கங்கள் பாகதத்தில் கிடையா. ஒரு மெய்யெழுத்தின் பின் அதற்கினமான வல்லின உயிர்மெயே பலபோதுகளில் வருமெனும் ஒழுங்கு அம்மொழியிற் கிடையாது. ம் எனும் மெய்க்குப்பின் ”க” உயிர்மெய் வரலாம். தமிழில் வரமுடியாது. இவைபோலச் சொல்லமைப்பினுள் வரும் எழுத்துக் கூட்டமைப்புக்கள் பாகதத்திற்கும் தமிழுக்கும் வேறுபட்டன. எனவே மெய், அகரமேறிய உயிர்மெய், ஆகாரமேறிய உயிர்மெய் ஆகிய மூன்றிடையே தெளிந்த வேறுபாடு காட்டுவது பொறிப்பில் தேவையாயிற்று. இதற்கு எழுந்த தீர்வுகள் மூன்றாகும்.
ஒன்று பட்டிப்புரோலு தீர்வு. இத்தீர்வில் (எந்தத் தீற்றும் சேராத) வெறுஞ் சதுரமே மெய்யெனக் கொள்ளப்பட்டது. சதுரத்திலிருந்து கிளம்பிக் கிழக்கே ஒரு தீற்றுக் கொண்ட சதுரம் அகரமேறிய உயிர்மெய்யானது. அடுத்து, ஆகாரத்தைக் குறிக்க முதல்தீற்றை ஒடித்துக் கீழ்நோக்கிய கோணமாக்கி நீட்டியபடி [உடனுள்ள படம் -2 இல் கண்டபடி] பட்டிப்புரோலுக் கல்வெட்டில் எழுதியிருக்கிறார். [கிழக்கே நீண்ட 2 தீற்றுக்கள் கொண்ட சதுரத்தை ஆகாரம் ஆக்கியிருக்கலாம். ஏனோ, அப்படிச் செய்யவில்லை.] பட்டிப்புரோலு முயற்சி மட்டும் பழந்தமிழகத்தில் ஒருவேளை பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டு இருந்தால், புள்ளிக் கருத்தீடே நம் மெய்யெழுத்துகளுக்கு ஏற்பட்டிருக்காது.

2 ஆம் தீர்வு வடக்கே ஏற்பட்டது. இதன்படி ஒரு சதுரத்தின் கீழ் இன்னொன்று இருந்தால் மேற்சதுரம் மெய்யாகவும் கீழ்ச்சதுரம் உயிர்மெய்யாகவும் படிக்கப் பட்டது. [காண்க. படம் 2.] இரு ககரங்களைக் குறிக்க 2 சதுரங்கள் ஒன்றின் கீழ் இன்னொன்றாய் உள்ளதெனக் கொள்வோம். இரு சதுரக் கட்டைக்கு மேலே கிழக்கில் ஒரு தீற்றிடாவிட்டால் இதை ”க்க” என்றும், ஒரு தீற்றிட்டால் ’க்கா” என்றும் படிக்கவேண்டும். தமிழிலுள்ளதுபோல் மெய்ம்மயக்கம் பாகதத்தில் கிடையாதென்பதால் மேல்வரும் மெய்யோடு வேறெந்த உயிர்மெய்யும் கீழே சேரலாம். ”க்க” மட்டுமல்லாது “ச்க, ட்க, த்க, ப்க, ம்க.....” என்று பல்வேறு ஒலிக் கூட்டுக்கள் கூடப் பாகதத்தில் பயிலலாம். தமிழில் ஒருசில கூட்டுக்கள் மட்டுமே வரலாம்.
வடக்கேற்பட்ட இந்த 2 ஆம் தீர்வும் சரியான தீர்வுதான். 2000 ஆண்டுகளுக்கும் முன் ஏற்பட்டஇத்தீர்வை ஒழுங்கான முறையிற் புரிந்துகொள்ளாது 1980 களில் ISCII உருவாக்கிய CDAC அறிஞரும், பின் அதிலிருந்து Unicode உருவாக்கிய ஒருங்குறிச் சேர்த்திய (unicode consortium) அறிஞரும் தவறான முறையில் abugida என்கிற ஆகாசக்கோட்டையைக் கட்டிவிட்டார். தொல்லியல், கல்வெட்டியல், எழுத்தியல் பற்றிய பழஞ்செய்திகளைத் தெரியாது எழுப்பிய தேற்றமே இந்த abugida தேற்றமாகும். (இந்த அபுகிடாத் தேற்றை இந்தியத் துணைக்கண்டம் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய எழுத்துக்களுக்கும் நீட்டிவிட்டார்.) எப்படி புவிநடுவம் எனும் தேற்றம் தவறோ ( ஓரளவுக்கு அது ஒழுங்கே கணக்கிடும் எனினும்), அதுபோல அகரமேறிய உயிர்மெய்யே வடபுலத்து மொழிகளுக்கு அடிப்படை என்பதும் தவறானதேற்றமே. எப்படிச் சூரிய நடுவத்தேற்றம் முற்றிலும் சரியோ, அதுபோல் மெய்களே வடபுல மொழிகளுக்கும் அடிப்படை என்பது முற்றிலுஞ்சரி. (அகரமேறிய மெய் அடிப்படை என்று தமிழின் எந்த இலக்கணமும் கூறவில்லை. பாணினியும் அப்படிக்கூறியது போல் தெரிய வில்லை. இது 20 ஆம் நூற்றாண்டுத் திரிவுக் கற்பனை.) இரண்டாம் தீர்வை ஒழுங்காகப் புரிந்துகொள்ளாத ஒருங்குறிச் சேர்த்தியம் மீண்டும் மீண்டும் முட்டுச் சந்திற்றான் போய் நிற்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழை ஒழுங்காய் அறியாது தமிழ்க்கணிமைக்குள் (tamil computing) இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞரும் அபுகிடாக் கூத்தை நம்பித் தமிழைச் சங்கதம் போல் இயக்கிக் கொண்டிருப்பது தான்.
[இங்கே ஓர் இடைவிலகல். வடபுல மொழி எழுத்துக்கள் இப்படி அடுக்குக் கிறுவத் தோற்றத்தைக் (appearance of a stacked orthography) காட்டியதால் அச்சுக் காலத்தில் சிக்கலை ஏற்படுத்தின. சில விதப்பான கூட்டுகளில் ஒன்றின்கீழ் இன்னொன்று என 4.5 மெய்யெழுத்துக் கூட அடியில் ஒரு உயிர்மெய்யோடு வடமொழி ஆவணங்களில் தொங்கும். ஒரு word ஆவணத்தில் முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையே ”இரட்டை வெளிப்பு (double spacing)” விட்டு உருவாக்கவேண்டுமென வையுங்கள். தமிழி போன்ற இழுனை எழுத்தில் (linear script- அதாவது ஓரெழுத்து, அடுத்தெழுத்து என நூல்பிடித்தாற் போல் இழுனையாய்ச் செல்லும் script என்பது, linear script ஆகும்) எந்தச்சிக்கலும் எழாது.
இரு பரிமானத்தில் அங்கங்கே முடிச்சுவிழுந்தாற்போல் எழுத்துக்கள் தொங்கும் (தேவநாகரி போன்ற) அடுக்கெழுத்தில் word ஆவணங்களை செய்வது கூட்டெழுத்துக்களின் காரணத்தால் சிக்கலானது. இதற்காகவே புதிதாய் அரைமெய்களை (half consonants) உருவாக்கினார். காட்டாக “மன்னை எக்ஸ்பிரஸ்” எனத் தென்னக இருவுள்வாய்த் (southern railways) தொடரியின் பெயரைத் தேவகநகரியில் எழுதும்போது 20 ஆண்டுகளுக்குமுன், ன்னை - யைக் குறிக்க, இரு னகரங்கள் ஒன்றின்கீழ் இன்னொன்று தொங்க, இரண்டும் சேர்த்தாற்போல் ஐகாரக்கொம்பை இழுத்துக் காட்டுவார். இதேபடிதான் ”க்ஸ்” என்பது ஒன்றின்கீழ் இன்னொன்றாய்க் காட்டப்படும். இன்றோ ’ன்’ என்பதற்கு ஓர் அரைமெய்யும், ’க்’ இற்கு ஓர் அரைமெய்யும் கொண்டு எல்லாவற்றையும் இழுனை எழுத்தாகவே காட்டி முன்னிருந்த முடிச்சுகளைத் தவிர்ப்பார். இந்தி ஆவணம் தமிழ் ஆவணம் போல் இன்று இழுனையாய் மாறிவிடும். ஆக நகரியின் ஒவ்வொரு மெய்க்கும் ஓர் அரைமெய்யை உருவாகியுள்ளார். இது ஒரு தீர்வெனினும் மூக்கைச் சுற்றிவளைக்கும் தீர்வு என்பதை அறியுங்கள். ஒரு புள்ளி எல்லாவற்றையும் தீர்த்திருக்கும். நான் சொல்வது புரிகிறதா?]
மூன்றாவது தீர்வு தென்புலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தீர்வு. இதன்படி, இன்னொரு குறியீடாக மாத்திரை குறைக்கும் புள்ளி உருவாக்கப் பட்டது. சதுரத்தின்மேல் புள்ளியிட்டால் அரைமாத்திரை குறைக்கப்பட்டு மெய்யானது. புள்ளியிடா வெறுஞ்சதுரம் அகரமேறிய உயிர்மெய்யானது. கிழக்குப் பக்கம் எழும்பிய, ஒரு தீற்றுக் கொண்ட சதுரம், ஆகாரமேறிய உயிர்மெய்யைக் குறித்தது. மூன்றாவது தீர்வு முற்றுமுழுதாகத் தொல்காப்பியத்திற் சொல்லப் பட்ட தீர்வு. இதுதான் தமிழ்த் தீர்வு. [காண்க. படம் 2.]
இந்த 3 தீர்வுகளும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் எழுந்த தீர்வுகளாய் இருக்க வேண்டும். ஒன்று முந்தியது, இன்னொன்று பின்பட்டது என்று சொன்னால் 3 தீர்வுகள் எழுந்திருக்கா. தீர்வு கண்டுபிடிக்கப் பட்ட சிக்கலுக்கு மீண்டுந் தீர்வு காண எந்தப் பகுத்தறியும் மாந்தனும் முற்படமாட்டான் என்பதால், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 3 தீர்வுகள் சமகாலத்தில் எழுந்திருக்கவேண்டும் என்றே முடிவுசெய்ய வேண்டியுள்ளது.
அடிப்படை அடவில் ஒரு சதுரத்தின் 4 பக்கங்களிலும் ஒன்றோ, இரண்டோ தீற்றுகளைக் சேர்க்கமுடியுமெனில் மொத்தம் 8 அடவுகள் அமையும், இதோடு வெறும் சதுரத்தைச் சேர்க்கும்போது 9 அடவுகள் கிடைக்கும். புள்ளி ஒட்டிய சதுரம் மெய்யென்றும், எதுவுமேயில்லாச் சதுரம் அகரமேறிய உயிர்மெய் எனவும், ஒருதீற்றைக் கிழக்கில்கொண்ட சதுரம் ஆகாரத்தைக் குறித்தது என்றும் சொன்னேன். கிழக்கே 2 தீற்றுக்கள்கொண்ட சதுரம் முன்சொன்னது போல் எதற்குமே பயன்படாது போனது. ஆகார உயிர்மெய்க்காக, சதுரத்தின் கிழக்கிலிருந்து வெளிப்பட்ட தீற்று வட்டெழுத்தானபோது அது காலானது. வடபுல எழுத்துக்களில் இன்றுமது அடிப்படையெழுத்தில் இருந்து பிரியாது ஒட்டிக்கொண்டுள்ளது. தமிழி எழுத்து வட்டெழுத்தாகிப் பின் வீச்செழுத்தாகிப் பின் அச்செழுத்துக்காக அறவட்டாகப் பிரிக்கப்பட்டுக் காலானது.
இனி, மற்ற உயிர்மெய்களுக்குப் போவோம்.
ஒரு தீற்று சதுரத்தின் மேலே கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது இகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் மேற்கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது ஈகார உயிர்மெய் ஆனது. சதுரத்தின் மேலிருந்து வடக்குநோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும், வீச்செழுத்தும் எழுந்த வகையாற் திசைமாறிக் கொக்கியாகவும், சுழிக்கொக்கியாகவும் மாறின. ஆனாலும் இன்றுவரை (2700 ஆண்டுகளுக்கு அப்புறமும்) அவை வடக்கு நோக்கிப் புறப்பட்டுப் பின் திரும்பியே உருமாறுகின்றன. (நம் எழுத்துக்களைக் கூர்ந்து கவனியுங்கள்.)
ஒரு தீற்று சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது உகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது ஊகார உயிர்மெய் எனப்பட்டது. சதுரத்தின் கீழிருந்து தெற்குநோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் திசைமாறி இன்று சுற்று (கு - வில் வருவது), விழுது (ஙு - வில் வருவது), இருக்கை (நு - வில் வருவது), கூட்டு (கூ-வில் வருவது), சுழிச்சுற்று (பூ -வில் வருவது), இருக்கைக்கால் (நூ -வில் வருவது), கொண்டை (மூ -வில் வருவது) ஆகிய குறிகளாக மாறியிருக்கின்றன. ஆனாலும் இந்த 7 குறிகளும் கீழிருந்துதான் புறப்படுகின்றன. தெற்கிற்பிறந்த தீற்றுக்கள் எனும் குறிப்பு 2700 ஆண்டுகள் ஆனபிறகும் மங்காதிருக்கிறது. [இன்றைக்கு எழுத்துச் சிதைப்பாளர்கள் உகர, ஊகாரத்திற்குக் காட்டும் குறியீடோ, எழுத்தின் பக்க வாட்டில் கிளம்பி கிழக்கேயோ, அன்றேல் திசைதிரும்பித் தெற்கே வந்தாற் போலோ, அமைகின்றன. பழைய உகரங்களின் அடிப்படைத் தீற்றுக்களை, அடிப்படை அடவை, இம்மாற்றத்தால் இவர்கள் காற்றில் பறக்க விடுகிறார். இற்றைய உகர, ஊகார உயிர்மெய்கள் பார்ப்பதற்குத் தான் ஏழு உகர/ஊகாரக் குறியீடுகளாய்த் தெரியும். அடிப்படையில் அவற்றினுள் பழைய அடவுக் கொள்கை இன்னும் காப்பாற்றப் படுகிறது. இது புரியாதவரே உகர, ஊகாரச் சீர்திருத்தம் போவார்.]
ஒரு தீற்று சதுரத்தின் பக்கம்கிளம்பி மேற்கே நீண்டிருக்குமானால் அவை எகர/ஏகார உயிர்மெய்களாகும். எகரம், ஏகாரத்தை வேறுபடுத்த சதுர மேற்பக்கத்திற் புள்ளிக் குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்குப் பக்கத்திற் தீற்றும் இருந்தால் அது எகரம். மேலே புள்ளியில்லாது, மேற்குப் பக்கம் தீற்று இருந்தால் அது ஏகாரம். மேற்குநோக்கிய ஒற்றைத் தீற்று வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் திசைமாறி இன்று கொம்பாகி விட்டது. அது கொம்பாக மாறியது முற்றிலும் இயற்கை வளர்ச்சியே. மேற்கே தீற்று இருந்ததை இன்றுவரை அது நமக்கு எடுத்துரைக்கிறது.
பொதுவாகத் தீற்றுக்கள் நாலுதிசையிலும் எழுந்தன. வெறுமே கிழக்குப் பக்கம் மட்டும் அவை எழவில்லை. இந்த அடிப்படை உண்மைஅறியாத அரைகுறைச் சீரழிப்பாளர் ”கொம்புகளின் குதர்க்கம்” என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார். ”ஆடத்தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம்” - இது பழமொழி. பழந்தமிழ் உயிர்மெய்களின் அடவை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாதவரே ”கொம்புகளின் குதர்க்கம்” என வீண்குதர்க்கம் பேசுகிறார். குதர்க்கம் கொம்புகளிடம் இல்லை. சிதைப்பாளரிடமே உள்ளது. ஒற்றைக் கொம்புகளுக்கும் வீரமாமுனிவர்க்கும் எத்தொடர்புமில்லை. சிதைப்பாளரிற்சிலர் ஏன் வீரமாமுனிவரைக் குதறுகிறார் என விளங்குவதில்லை. வீரமாமுனிவர் பங்களிப்பைக் கீழே காண்போம்.
இரு தீற்றுக்கள் சதுரத்தின் பக்கத்திலிருந்து கிளம்பி மேற்கே நீண்டிருக்கு மானால் அது ஐகார உயிர்மெய். இன்றுங் கூட ஐகாரக்கொம்பு இரட்டைக் கொம்பாகவே மலையாளத்தில் எழுதப்படும். வீச்செழுத்தில் இருந்து தமிழ் அச்செழுத்து உருவாக்கியவர் இரட்டைக்கொம்பைப் பிரித்து எழுதாமல் அப்படியே சேர்த்து எழுதியபடி வைத்துக் கொண்டார். இதெல்லாம் ஒரு 350 ஆண்டுப் பழக்கம்.
இப்பொழுது சதுரத்தின் 4 பக்கங்களிலும் 2 தீற்றுக்கள் வரை போட்டுப் பார்த்தாயிற்று. [அதிலும் கிழக்கே 2 தீற்றுக்கள் கொண்ட அடவு கடைசிவரைப் பயன்படாமலே போனது. மொத்தம் 8 அடவுகளில் 7 அடவுகளே தமிழிப் பொறிப்புகளுக்குப் பயன்பட்டன. இனி ஒரு தீற்று ஒருதிசையிலும் இன்னொரு தீற்று இன்னொரு திசையிலுமாக ஆகக் கூடிய அடவுகள் 6 ஆகும்.
கிழக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/வடக்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
மேற்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்ருக்கள் உள்ள அடவு
இந்த 6 அடவுகளில் முதல் அடவையே ஒகர/ஓகார உயிர்மெய் குறிக்கப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கிறார். ஒகரம், ஓகாரத்தை வேறு படுத்தச் சதுரத்தின் மேற்பக்கத்திற் புள்ளிக்குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஒகரம். மேலே புள்ளியில்லாது, மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஓகாரம். பின்னால் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் மேற்குப்பக்கத்துத் தீற்று திசைமாறி இன்று கொம்பாகவும், கிழக்குப்பக்கத் தீற்று திசைமாறிக் காலாகவும் உருப்பெற்றுள்ளன. இந்த உருமாற்றங்களிலும் ஓர் ஒழுங்குள்ளது. கொம்பு வந்தாலே அது மேற்கே யிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், வெறுங்கால் வந்தாலே அது கிழக்கேயிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், விளங்கும். மேலே எடுத்துரைத்த ஆறு இருபக்க தீற்றுக்கள் உள்ள அடவுகளில் மீந்திருக்கும் ஐந்தும் பயன்படாமலே போயின. வேறேதேனும் புதுக்குறியீடுகள் எதிர்காலத்தில் ஏற்படுமானால் இவ் அடவுகளை எண்ணிப் பார்க்கலாம்.
ஔகாரத்திற்கு என எக்குறியீடும் தொடக்ககாலத்தில் இல்லை. தொடக்கத் தமிழியில் 11 தீற்றுக் குறிமுறைகளே இருந்திள்ளன. ஔகாரத்திற்கான குறியீடு 8 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறமே எழுந்தது. இன்றதைச் சிறகு என்கிறோம். அந்த இந்தத் தீற்றுக்குறிமுறைகளின் கீழ் வராது . இச்சிறகை மலையாளத்தில் மிகச்சரியாய்ச் சிறிதாய்க் குறிப்பர் தமிழில் இதைப் பெரிது ஆக்கி ளகரத்திற்கும் சிறகிற்கும் வேறுபாடு தெரியாமல் ஆக்குவோம். இதே போல் காலுக்கும் ரகரத்திற்கும் வேறுபாடு காட்டாது எழுதுவோம். முதல் வகைத் தப்பை தமிழக அரசு இன்னும் தன் 2010 அரசாணையில் சுட்டிக்காட்ட வில்லை ஆனாலு, ரகரத்திற்கும், காலுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டி யுள்ளது. .
தமிழி எழுத்துக்களின் அடவு அடிப்படை, 2 தீற்றுக்களும், ஒரு புள்ளியும் தான். புள்ளியும் கூட மெய்யெழுத்தைக் குறிப்பதற்கும், எகர/ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் குறில்/நெடில் வேறுபாடு காட்டவுமே பயன்பட்டுள்ளது. [ஒருவேளை தொடக்ககாலத்தில் இந் குறில் நெடில் வேறுபாடு தமிழில் இல்லையோ, என்னவோ?. இதைப் பற்றிய விளக்கம் நம் எகர/ஏகார, ஒகர/ஓகாரச் சொற்களின் ஒரு பொருள்/வேறொலிப்புச் சிக்கலுக்குள் கொண்டு போகும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.]
முடிவில் ஒன்று சொல்லவேண்டும். கால் (ஆகாரம்), கொக்கி (இகரம்), சுழிக் கொக்கி (ஈகாரம்), சுற்று (கு - வில் வருவது), விழுது (ஙு - வில் வருவது), இருக்கை (நு - வில் வருவது), கூட்டு (கூ-வில் வருவது), சுழிச்சுற்று (பூ -வில் வருவது), இருக்கைக்கால் (நூ -வில் வருவது), கொண்டை (மூ -வில் வருவது), கொம்பு (ஒகரம்), சிறகு என்ற இந்த 12 குறியீடுகளுக்குமான வளர்ச்சி குறைந்தது 350 ஆண்டுகள் தாம். இவற்றிற்கான பெயர்களை நீங்கள் எந்த இலக்கண நூலிலும் காணமுடியாது 1400/1500களில் இவற்றிர்கு வேறுசில பெயர்கள் இருந்தன. தொல்காப்பிய உரை எழுதிய நச்சினார்க்கினியர், கால் என்பதை நாம் சொல்வது போலவே சொல்லியுள்ளார். இப்போது நாம் கொம்பு என்பதை அன்று கோடென்றே அவர் சொல்வார். (கோடும் வளைந்தது. கொம்பும் வளைந்தது.) அவருக்குப் பின்வந்தோர் கொக்கியையும், சுழிக் கொக்கியையும் மேல்விலங்கென்றார். மேலே சொன்ன உகர, ஊகாரக் குறியீடுகளின் மொத்தத்தையும் கீழ்விலங்கு என்பார். இவையெல்லாம் உயிர்மெய்யைக் குறிக்கும் குறியீடுகள்.
தொல்காப்பியர் காலத்தில் இக்குறியீடுகளை உயிர்மெய்க்குறியீடென்றார். அதுவே சரியான கலைச்சொல். அதையும் இந்த ஒருங்குறிச்சேர்த்தியத்தார் வடவரைப் பின்பற்றி உயிர்க்குறியீடுகள் - vowel mathras - என்பார். அதுவும் ஒரு முரண். நம்மூரில் மாத்திரை என்பது ஒலிக்கும் காலத்தைக் குறிக்கும். இவை உயிருக்கான குறியீடுகள் அல்ல. உயிர்மெய்க்கான குறீயிடுகள். வெறும் தீற்றுகளாய் வெவ்வேறு திசைகளில் கிளம்பியவற்றை உயிர்க்குறியீடு என்பது ”மரப்பாச்சி உயிருள்ளது” போல் குறிப்பதாகும். தமிழர்க்கு அது சரி யில்லை. They are vowel-consonant markers and not vowel markers. They do not have independent existence. This is conceptually important. ஓர் அவையில் என் இடம் என்று குறிக்க நான் கைக்குட்டை விட்டுப் போகலாம். ஏனெனில் அது என் உள்ளமை குறிக்கும் கருவி. கருவியையும் ஆளையும் தென்னவர் எப்போதும் குழம்பிக் கொள்ளார். வடபுலத்தில் வேண்டுமெனில் என்வாள் என்னைக் குறிக்கலாம்.
மொத்தத்தில் தொடக்க காலத்து அடவு என்றவகையில், இதில் செய்து பார்த்துத் திருத்திக் கொள்ளும் பாங்கு இருக்கிறது. இன்றுவரை அந்தப் பாங்கு மாறவில்லை. வீரமாமுனிவர் எகர/ ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் வரும் புள்ளியைத் தவிர்த்து மேற்கே வரும் கொம்பை ஒற்றைச் சுழியாகவும் இரட்டைச் சுழியாகவும் மாற்றியமைத்தார். அது கொம்புகளில் இருந்து கிளைத்த ஒரு மாற்றம் என்ற அளவில் அடிப்படை அடவைக் குலைக்க வில்லை. இப்பொழுதும் மேற்கே இருந்து கிளைத்த தீற்றை அவை இன்னமும் நினைவூட்டுகின்றன.
இதுநாள் வரை இருக்கும் தமிழி அடவிற்கு மீறிச் சொல்லப்படுகிற எந்த முயற்சியும் 2700 ஆண்டுகள் (தொடக்க நிலை, வட்டெழுத்து நிலை, வீச்செழுத்து நிலை, அச்செழுத்து நிலை என எல்லாவற்றிலும்) தொடர்ந்து வந்த போக்கைக் குலைக்கும் ஒன்றாகும்.

Saturday, June 05, 2010
சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 2
மருதன் இளநாகனாரின் ஒருசில பாடல்கள் வரலாற்றுச் செய்திகளையும் நமக்குச் சொல்கின்றன. அவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.
1. முதலில் நாம் பார்ப்பவை அகநானூறு 59 ஆம் பாடலின் 3-18 வரிகளாகும்.
- வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தந்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல
புந்தலை மடப்பிடி உணீஇயர், அம் குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
படிஞிமிறு கடியும் களிறே - தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை
இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய்நாட்டு
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே
இதில் முதற் செய்தி தொழுனையாற்றில் (யமுனையாற்றில்) ஆயர்பாடி மங்கையரின் சேலைகளைக் கண்ணன் எடுத்து ஒளித்துவைத்து, பலராமன் அப் பக்கம் வரும்பொழுது மரக்கிளையைக் கீழே அழுத்தி மங்கையரின் நக்கனத் தோற்றம் வெளித்தெரியாதவாறு மறைத்தது பற்றியாகும். அதாவது கி.மு.50 இலேயே கண்ணனின் விளையாட்டுக்களைச் சொல்லும் பாகவதச் செய்திகள் மிகுந்த விவரிப்போடு தென்புலத்து மக்களுக்குத் தெரிந்துள்ளன. கண்ணன் பற்றிய செய்திகள் சிலம்பில் தெரிந்ததில் வியப்பில்லை, சங்க இலக்கியத்திலும் கூடக் கி.மு.50 இல் அவை விரிவாகத் தெரிந்திருக்கின்றன.
இதில் இரண்டாம் செய்தி ”அந்துவன் பாடிய சந்து கது எழு நெடுவரை” என்னும் வரியில் அடங்கியுள்ள முகன்மைச் செய்தியாகும். முருகனைப் பற்றி பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்து (=இசை) அப்படியே பரங்குன்றைப் பற்றி எழுகிறதாம் (கதுத்தல், கதுவுதல் = பற்றுதல்). அது என்ன அந்துவன் பாடிய இசை? - என்ற கேள்வி சட்டென நமக்குள் எழுகிறது. இதையறியப் பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்துள் நாம் போகவேண்டும்.

பரிபாடலுக்குள் செவ்வேள் பற்றியும், வையை பற்றியும் நல் அந்துவனாரின் இசைப் பாடல்கள் உள்ளன. அந்த அந்துவனார் எனும் இசைப் புலவர் மருதன் இளநாகனாருக்கு நன்றாகத் தெரிந்தவர் போலும். பரங்குன்றைப் பாடியவருள் இவர் பலராலும் அறியப்பட்டவர் போலும். பரிபாடலில் மொத்தம் 70 பாடல்கள் இருந்தன என்று ஒரு வெண்பா சொல்லும்.
திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று - மருவிளிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்
அதாவது திருமாலுக்கு 8 உம், செவ்வேளுக்கு 31 உம், காடுகிழாளுக்கு (கொற்றவைக்கு) 1 உம், வையைக்கு 26 உம், மதுரைக்கு 4 உம் பாடப்பட்டதாம். 70 மூலப்பாடல்களில் 33 - ஏ முழுதாகவோ (22), சிதைந்தோ (11) இப்போது கிடைக்கப் பெற்றுள்ளன. வெவ்வேறு நூல்களில் பரிபாட்டெனத் திரட்டப்பட்ட, சிதைந்துபோன 11 பாடல்களைப் பரிபாடல் திரட்டென்பார். கிடைத்தவற்றுள் திருமாலுக்கு 7 பாடல்களும், செவ்வேளுக்கு 8 பாடல்களும், வையைக்கு 10 பாடல்களும், மதுரைக்கு 6 பாடல்களும், இன்னதென்று தெரியாது மேலும் 2 பாடல்களும் கிடைத்ததாய் அண்மைத் தொகுப்பாசிரியர் சொல்கிறார். [மேலே கூறிய வெண்பாவோடு பொருத்திப் பார்த்தால், மதுரை பற்றிய பாடல்களிற் கணக்குக் கூடியுள்ளது, மற்றவற்றில் கணக்குக் குறைந்துள்ளது.] கிடைத்த பாடல்களுள் 11 பாலையாழிலும் (பாலையாழ் என்பது தொல்காப்பியக் காலப் பெயர், இது சங்க காலத்தில் அரும்பாலை என்று சொல்லபட்டது. கருநாடக சங்கீதத்தில் சங்கரா பரணம் என்றாகும். எல்லாத் தமிழ்ப் பண்களுக்கும் அராகம் எனும் வடமொழிப்பெயரைத் தானே இப்போது கொடுத்துள்ளார்?). 5 நேர்திறப் பண்ணிலும் ( அக்காலத்தில் வளர் முல்லை, இக்காலத்தில் சிவப்பிரியா), 4 காந்தாரப் பண்ணிலும் (சங்க காலத்தில் செவ்வழிப் பாலை; அண்மைக்காலத்தில் இரு மத்திமத் தோடி) பாடப்பட்டவையாகும். இன்னும் 2 பாடல்களுக்குப் பண்கள் தெரியவில்லை.
இவற்றில் 19 பாடல்களுக்கு எழுதியோர் பெயர்கள் தெரிகின்றன, அவருள் கடுவன் இளவெயினனார் 3 பாடல்களும், நல்லந்துவனார் 3 பாடல்களும், குன்றம்பூதனார் (இது குறும்பூதனார் என்றும் பிழைபட எழுதப் பட்டுள்ளது) 2 பாடல்களும், நல்லழிசியார் - 2 பாடல்களும், நல்வழுதியார் (நல்லெழுதியார் என்றும் பிழைபட உள்ளது. இவர் ஒரு பாண்டிய மன்னராய் இருந்திருக்கலாம்.) - 2 பாடல்களும், இளம்பெருவழுதி (இவரும் பாண்டிய மன்னர் ஆகலாம்) 1 பாடலும், கரும்பிள்ளைப் பூதனார் - 1 பாடலும், கீரந்தையார் - 1 பாடலும், கேசவனார் - 1 பாடலும், நப்பண்ணனார் - 1 பாடலும், நல்லச்சுதனார் - 1 பாடலும், மையோடக் கோவனார் - 1 பாடலும் எழுதியுள்ளார். [இளம்பெருவழுதி, நல்வழுதியார் என வரும் 2 பாண்டியரும் ஒருவரோ என்ற ஐயமும் எனக்குண்டு.]
இதேபோல 19 பாடல்களுக்குப் பண்ணமைத்தோர் பெயர்கள் தெரிகின்றன. அவருள் மருத்துவன் நல்லச்சுதனார் (சில பாடல்களில் வெறுமே நல்லச்சுதனார் என்றும் குறிக்கப்படுகிறார். ஆய்ந்து பார்த்தால் ஒருவராகவே வாய்ப்புண்டு) - 10 பாடல்களும், நன்னாகனார் (வெறுமே நாகனார் என்ற குறிப்புமுண்டு) - 3 பாடல்களும், பெட்டன் நாகனார் - 2 பாடல்களும், கண்ணாகனார் (கண்ணனாகனார் என்ற பாடமுமுண்டு)- 2 பாடல்களும், பித்தாமத்தர் - 1 பாடலும், கேசவனார் - 1 பாடலும் பண்ணமைத்திருக்கிறார். பொதுவாக எந்தெந்த பாடலாசிரியர், பாணர், சமகாலத்திற் தமக்குள் உறவு கொண்டனர் என்பதை வலைப்பின்னற் தேற்றத்துள் (network theory) வரும் அண்ணக மடக்கை (adjacency matrix) வழி அலசிக் கண்டுபிடிக்க இயலும், அதன்படி (1, 7,14,22) என்ற 4 பாடல்கள் தவிர்த்து மற்ற 18 உம் சம காலத்தவை என்று அலசல் வழி அறிகிறோம். மேற்குறிப்பிட்ட நாலும் இத் தொகுப்பின் போதோ, முந்தியோ பாடப் பட்டிருக்கலாம்; பரிபாடற் தொகுப்பு பெரும்பாலும் சமகாலத்தில் எழுந்திருக்கலாம்.
இனி மருதன் இளநாகனாரின் அகம் 59 ஆம் பாடலுக்கு வருவோம். அந்துவனார் பாடிய செவ்வேள் பாடல் ஒன்றுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது. கிடைக்காது போன பாடல்களில் செவ்வேள் பற்றி அதிகம் பாடல்களை அந்துவனார் பாடினாரோ என்னவோ? இளநாகனாரின் காலம் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலம் என முந்தையப் பகுதியில் குறிப்பிட்டுக் காட்டினேன். அதையொட்டி, இன்னொரு கொடிவழி (பரம்பரை) கடந்திருக்கும் போது (அதாவது கிள்ளிவளவனுக்கு 50 அகவையாகும் போது) மருதன் இளநாகனார் இருந்திருப்பார் என்று கொள்ளலாம். இதன் வழி நல்லந்துவனார் காலமும் குறைந்தது அதே காலமாய் இருந்திருக்க வேண்டும்.
எனவே சிலம்புக் காலத்தில் இருந்து 25 ஆண்டுகள் கழித்து கி.மு.50 இல் பெரும்பாலும் பரிபாடல் தொகுக்கப் பட்டிருக்கலாம். பெரும்பாலும் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி காலத்தில் இது நடந்திருக்கலாம். உரைகாரர் மூலம் அகநானூறும், குறுந்தொகையும் பன்னாடு தந்தான் மாறன் வழுதி காலத்தில் தொகுக்கப் பட்டன என அறிகிறோம். பரிபாடலைத் தொகுப்பித்ததாய் நாம் ஊகிக்கும் மாறன் வழுதியும், அகநானூறு, குறுந்தொகை தொகுத்த மாறன் வழுதியும் ஒரே அரசனாகுமோ என்பது ஆய வேண்டியதாகும்.
2. இனி அகம் 77 இல் 7-12 ஆம் வரிகளைக் காணுவோம்.
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர
செஞ்செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின்,
இந்த வரிகள் அந்தக் காலத்தில் நடந்த குடவோலை முறையை நமக்குத் தெரிவிக்கின்றன. பேரரசுச் சோழர், பல்லவர் காலத்துக் குடவோலை முறை பற்றிய உத்தர மேரூர் கல்வெட்டுக்களைப் பற்றிப் பெருமை கொள்ளும் நாம் அதற்கு முந்தைய, கி.மு.50 அளவான குடவோலை முறையை அகம் 77 தெரிவிக்கிறது என்ற செய்தியை வெகு எளிதில் மறந்து விடுகிறோம். நான் அறிந்தவரை ”தென்புலத்தில் தேர்தல்கள் எப்படி நடந்தன?” என்பதைக் குறிக்கும் முற்காலத்து முதன்மையான சான்று இது மட்டுமே. ஆக கி.மு. 50 இல் நமக்குத் தேர்தல் என்பது தெரிந்திருக்கிறது. இனிப் பாடலுக்கு வருவோம்.
பாடல் பாலைத்திணை சேர்ந்தது. வணிகத்தை நாடி அருஞ்சுரங் கடக்க விரும்பிய தலைமகன் போகும்வழியில் தான் காணப்போகும் கழுகுகளின் செயலை எண்ணிப் பார்க்கிறான், காதலியின் முகத்தையும் எண்ணிப் பார்க்கிறான், மனங்கலங்கித் தான்பிரிந்து செல்ல முற்படுவதைக் கை விடுகிறான். பாடலுள்ளே அருஞ்சுக் கொடுமையின் விவரிப்பு அமைகிறது.
அருஞ்சுரத்தின் கொடிய சூடு தாளாது ”மேற்கொண்டு நகரமுடியாது” என இறந்துபோனவர் உடம்பு சுரத்தின் பாதையிற் கிடக்கிறது. எங்கிருந்தோ செந்தலைக் கழுகு (Red-headed Vulture, Sarcogyps calvus) பறந்து ஓடிவருகிறது. உயிரற்றுக் கிடக்கும் உடம்பின் வயிற்றைக் குத்தி உள்ளிருக்கும் குடரை வெளியே இழுத்துப் போடுகிறது.
[இக் கழுகு பற்றிய செய்திகளை முனைவர் க.ரத்னம் எழுதிய “தமிழ்நாட்டுப் பறவைகள்” பொத்தகத்தில் (மெய்யப்பன் தமிழாய்வகம், 2002) இருந்து தருகிறேன். ”இக் கழுகு கரு நிற உடலைக் கொண்டது. இதன் தலை, கழுத்து, தொடை, கால் ஆகியன செந்நிறங் கொண்டவை. உயரமாகப் பறக்கையில் கருத்த உடலின் பின்னணியில் சிவந்த தலையும் வெண்திட்டுக்கள் கொண்ட தொடையும் இறகுகளிற் காணப்படும் வெண்பட்டையும் கொண்டு அடையாளம் காணலாம். தமிழ்நாடு முழுதும் வறள்காடுகளில் மக்கள் வாழ்விடத்தை அடுத்துக் காணலாம். பிற கழுகுகளைப் போல இது பெருங்கூட்டமாய்த் திரள்வதில்லை. செத்த பிணங்களைத் தின்ன பெருங் கூட்டமாய்க் கூடும். மற்றவகைக் கழுகளிடையே இதனையும் ஒன்றிரண்டாகக் காணலாம். இக்கழுகு மற்ற கழுகுகளை விரட்டிவிட்டு முதலில் தன் வயிறு நிறையத் தின்னும் ஆற்றல் வாய்ந்தது. இதனாலேயே இது கழுகரசன் (King Vulture) என அழைக்கப் படுகிறது. வயிறு நிறையத் தின்றபின் பறக்க எழ இயலாது திண்டாடும். சங்க இலக்கியத்தில் ’செஞ்செவி எருவை’ எனவும் பாலைநிலத்தில் பயணம் செய்வோர் வெங்கொடுமையால் மயங்கி விழுந்த பின், இறப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.]
இறந்துபோன உடம்பின் வயிற்றில் இருந்து செந்தலைக்கழுகு (செஞ்செவி எருவை = செக்கச் சிவந்த கழுகு) குடரை உருவுவது எப்படி இருக்கிறதாம் என்பதற்கு மாங்குடி மருதனார் ஓர் உவமை சொல்கிறார். அதில் தான் மேலே சொன்ன குடவோலைச் செய்தி வருகிறது.

அக்காலத்தில் ஊர் வாரியத்திற்கு நிற்பவரின் பெயரை ஒரு ஓலை நறுக்கில் எழுதி அதைச் சுருளாக்கி ஒரு குடத்தில் இடுவார். முடிவில் குடத்தின் வாயின் மேல் ஒரு துணியை மூடிக்கட்டிச் சுருக்குப்போட்டு, சுருக்குப் போட்ட இடத்தில் களிமண்ணையோ, அல்லது பிசினையோ கொண்டு ஒட்டி, களிமண்/பிசின் மேல் பொறிகொண்டு முத்திரை பொதித்துப் பின் குடத்தைப் பாதுகாத்து ஒரு பொது இடத்திற்குக் (அது வேறு ஊராகக் கூட இருக்கலாம்) கொண்டுவந்து கூடியிருந்தோர் அறியப் பொறியை உடைத்து நீக்கி, சுருக்கைப் பிரித்துத் துணியை விலக்கி, ஒவ்வொரு சுருளாக உள்ளிருந்து எடுத்து நீட்டி ஓலை நறுக்கைப் படித்து ”எத்தனை வாக்குகள் யாருக்குக் கிடைத்தன?” என்று பார்ப்பார்களாம்.
எப்படி வாக்குக் குடத்தில் இருந்து ஒலை நறுக்குச் சுருள்களை ”குண்டு குண்டான அரசு ஆவண மாக்கள் (இடை பெருத்த அரசு அதிகாரிகள்) இழுத்துப் பிரிக்கிறார்களோ அதுபோல, செந்தலைக் கழுகுகள், இறந்த விலங்குகளின் வயிற்றிலிருந்து குடலுருவி நீட்டுகின்றனவாம். செந்தலைக் கழுகுகளுக்கு குண்டான அரசு அதிகாரிகள் உவமை. இறந்த உடம்பின் வயிற்றுக்கு வாக்குக் குடங்கள் உவமை. மாந்தக் குடலுக்கு ஒலை நறுக்குச் சுருள் உவமை. அகம் 77 எண்ணி எண்ணி வியக்கக்கூடிய பாட்டாகும். இதில் அடங்கிய வரலாற்றுச் செய்தி கி.மு.50 இல் குடவோலை முறை தமிழக வழக்கில் இருந்தது என்பதே.

Friday, June 04, 2010
சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 1
சிலம்பின் காலத்தை கி.மு.80க்குச் சற்றுபின் நடந்திருக்கலாம் என்று வரையறுத்த போது, வெற்றிவேற் செழியன் வஞ்சியின் மேல் அதிரடித் தாக்குதல் செய்து, பத்தினித் தெய்வத்தின் படிமத்தை வவ்விய செய்தியைச் சொல்லியிருக்கக் கூடிய, அகம் 149 ஆம் பாடலை ஏற்கனவே பார்த்த நாம் இன்னொரு இலக்கியமான நற்றிணையில் வரும் 216 ஆம் பாடலையும் பார்க்க வேண்டும். அதிலும் சிலம்பிற்குத் தொடர்பான செய்தியொன்று இருக்கிறது. அதையும் பல ஆய்வாளர் தனியே பொருத்தமில்லாது பார்த்திருக்கிறார். நற்றிணை 216 ஆம் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.
துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்;
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கைபோல் உதவி,
நம் உறு துயரம் களையார் ஆயினும்,
இன்னாது அன்றே, அவர் இல் ஊரே;
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் துழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே
இதை எழுதியவர் மதுரை மருதன் இளநாகனார். மேலே வரும் நற்றிணைப் பாடலின் திணை: மருதம் என்பதாகும். மதுரையிலுள்ள பரத்தை ஒருத்தி, தலைமகன் தன்னை நாடி வாராவிடத்து, தலைமகன் பெருமையைத் தலைமகளுக்குச் சுற்றிவளைத்துத் தெரிவிக்கும் பாங்கில் பாணனிடமோ, விறலியிடமோ சொல்லியதாய் இப்பாடல் அமையும்.
[பாடலின் உள்ளே, “நீ நினைப்பது போல் நான் ஒன்றும் காசுக்கு உடன்படும் விலைமகள் அல்லள்; அவரும் விலைமாதரை நாடுங் கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை. இப்போது அவர் என்னோடு சேர்ந்திருக்கவில்லை. அவரைப் பிரிந்து நானும் தவிக்கிறேன். என் துயரைக் களையாது அவரிருந்தாலும், அவர்மேல் கொண்ட என்னன்பு சற்றும் குறையவில்லை. எப்பேற்பட்ட துன்பம் வந்தாலும் வேண்டப்பட்டவரே துன்புற்றுக் கலங்குவர். இப்போது நான் கலங்குகிறேன்” என்ற இறைச்சிப்பொருளை உள்வைத்து வெளியே வேறொரு பொருட்பாட்டை வைத்து அப் பாட்டுப் போகும். அப்படிச் சொல்லும்போது தான் ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி பற்றிய செய்தி வரும். முதலில் பாட்டின் வெளிப்படைப் பொருட்பாட்டைப் பார்ப்போம்.
”புலவிநீட்டம் தீர்க்க முனையும் கூட்டத்தோடு அவர் சேரார் எனினும், காணத் தக்க அவரைக் காணும்படிக்கு வாழ்தல் இனிதேயாகும். கண்பெறும் துன்பத்தை சட்டெனக் கை விலக்குதல் போல் நாமுற்ற துயரத்தை அவர் களையாரெனினும், அவரில்லாத இவ்வூர் இனிமையற்றது. நெருப்பாய்ச் சிவந்த வேங்கைக் கடவுளைக் (முருகனைக்) காக்கும் கோழியின் கூவொலி நிறைந்த காவற்பரணுள்ள களத்தில், அயலார்மனம் கலங்கும்படி தன் ஒரு முலையை அறுத்த அந்தத் (மாநிறக்குட்டை) திருமாவுண்ணியின் அவலத்தை அனைவரும் கேட்டோர் எனினும், வேண்டப்பட்டோர் தவிர்த்து மற்றோர் கலங்கமாட்டார் அன்றோ?” என வெளிப்படைப் பொருள் அமையும்.
இப் பரத்தை மதுரையில் வாழ்ந்த சாத்தார (சாதாரண) இற்பரத்தை. சோழநாட்டுப் பெண்ணொருத்தி மதுரைக் கொலைக்களத்தில் ஒரு முலை அறுத்த செய்தி இவளுக்குத் தெரிய வந்திருக்கிறது. [கண்ணகி ஒரு முலை அறுத்தபோது மதுரை முற்றிலும் அழிந்ததென்றே சிலம்பின் வழி உயர்வு நவிர்ச்சியாய்ப் பலரும் சொல்கிறார். அது முற்றிலும் இல்லை போலும். அரண்மனை ஒட்டிய சில பகுதிகள் மட்டுமே அழிந்திருக்கலாம், மதுரைப் பெருநகரம் மீண்டும் அச் சாம்பலிலிருந்து எழுந்திருக்கிறது, மீண்டும் மீண்டும் அக்கதை பொதுமக்களால் பல்வேறு கோணங்களில் உசாவப் பட்டு இருந்திருக்கலாம் என்பதை இப்பாட்டின் வழி குறிப்பால் உணர்கிறோம். ஏனெனில் பொதுமக்களில் ஒருத்தியிடம் எழுந்த எதிர்வினை இது. “ஊரில் பார்ப்பனரையும், குழவிகளையும் ஒரு சில பெண்டிரையும் விட்டு மற்று உள்ளோரை அவள் எரிக்கச் சொன்னாள்” என்று சில ஆய்வாளர் சொல்லுவது தவறான புரிதலாய் இருக்கலாம். இந்தவொளியில் மீண்டும் சிலம்பை நாம் படிக்கவேண்டும். சிலம்பைத் தவறாகவே நம்மிற் பலரும் உணர்ந்துள்ளோம்.
கண்ணகி மாநிறம் என்ற குறிப்பு இப் பரத்தைக்குத் தெரிந்துள்ளது. அதோடு கண்ணகி அவ்வளவு உயரமின்றி, சற்றே குட்டையாய் தோற்றியிருக்கலாமோ என ஐயுறுகிறோம். கண்ணகி ஒருமுலை அறுத்தபோது ”அவள் கொற்றவையோ? தெய்வ வடிவோ?” என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டு திரு என்ற அடைமொழி வந்தது போலும். “கருத்த குட்டைச்சி” என்று விவரிப்பு கண்ணகியைப் பற்றி ஒரு சாத்தாரப் பெண்ணுக்கு ஏற்படக்கூடியதே. நாட்டுப் புறங்களில் சட்டென எழும் எந்த விவரிப்பும் உயரம், வண்ணம் பற்றியே அமையும். உண்ணி என்ற சொல் தெண்பாண்டிநாட்டில் இன்றும் உண்டு. உள்நி> உண்ணியாகும். உள்ளுதல் = குறைதல், சிறிதாததல், சுருங்குதல். உள்ளத்தி> ஒள்ளத்தி என்ற சொல் ”கொஞ்சம், குறைவு, சிறிது என்ற பொருளில் சிவகங்கை மாவட்டத்தில் வழங்கும். “எனக்கு ஒள்ளத்தியோண்டு மாவுருண்டையில் பிட்டுக் கொடுங்க” “என்ன இவ ஒள்ளத்தியா ஒடுங்கி இருக்கா? இவளுக்கும் ஓங்கியவனுக்கும் சரிப்பட்டு வருமா?” இப்படிப் பல்வேறு வழக்காறுகள் உண்டு.
கோவலனின் கொலைக்களம் மதிலின் காவற்பரணுக்கு அருகில் இருந்தது என்பதைச் சிலம்பின்வழி அறிகிறோம். காவற்பரணுக்கு அருகில் கோழிகள் உலவுவதும், கொக்கொக்கொக் என்று அவை இடைவிடாது கரட்டிக் கூவுவதும் இங்கு விவரிக்கப் படுகிறது. முருகன் சேவற்கொடியோன் தானே? [சூரபன்மனை வென்ற போது சூரன் வேங்கை மரம், கோழி, மயில் என 3 வகையில் உருமாறியதாகத் தொன்மமுண்டு. அதுவரை யானையைத் தன் ஊர்தியாகக் கொண்ட முருகன் சூரசங்காரத்திற்கு அப்புறம் மயிலை ஊர்தியாகவும், தன் காப்பிற்கு அறிகுறியாக கோழியைக் கொடியாகவும், வேங்கை மரத்தைக் காவல் மரமாய்க் கொண்டதாகத் தொன்மக்கதை சொல்லும். நெருப்பைப்போற் சிவந்த பூக்களைக் கொண்ட வேங்கை மரத்தடி முருகன் நிற்குமிடம் என முதியோர் சொல்வார்..
முன்னால் மார்ச்சு 2009 இல் கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் என்ற தொடரை எழுதியபோது, நண்பர் நா. கணேசனின் பல கருத்துக்களுக்கும் அதில் மறுமொழி சொல்லி, 3 கருத்துக்களுக்கு மட்டும் மறுமொழி சொல்லாது நான் விட்டுப்போனதால், அத்தொடர் முடிவுறாது உள்ளது. அதில் ஒரு கருத்து இத் திருமா உண்ணி பற்றியது ”திருமா உண்ணியாய் நற்றிணை 216-ல் கண்ணகி வருகிறாள். உண்ணி < நுண்ணிய (Cf. உண்ணி கிருஷ்ணன்) என்பது மலைநாட்டு வழக்கு. இன்னலெ < நென்னல் என்பது இன்றைய மலையாளம்” என்று நா. கணேசன் சொல்வார்.
பலரும் இத்திருமாவுண்ணியையும், சிலம்புக் கண்ணகியையும் வெவ்வேறாகவே பார்ப்பார். சிலம்பை கி.பி.177க்கு அப்புறமாய்த் தள்ளியவரிடம் ”இப்படி ஒரு பாடல் நற்றிணையில் வருகிறதே” என்று சொன்னால் ”ஒருமுலை குறைத்த திருமாவுண்ணியின் கதை தனிக்கதை, அக் கதையை கண்ணகியின்மேல் ஏற்றிவிட்டார், இருவரும் வெவ்வேறு” என்று சமதானம் சொல்வார். நல்லவேளை நா.க. இத் திருமாவுண்ணியை கண்ணகியென்றே சொல்லிவிட்டார். என்னைப் பொறுத்தவரை திருமாவுண்ணியும், கண்ணகியும் ஒன்றே. ஒருமுலை குறைத்தல் என்பது தமிழர் வரலாற்றில் இருமுறை நடந்திருக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவு. இரண்டும் ஒரே நிகழ்வைத்தான் வெவ்வேறு கோணங்களிற் குறித்திருக்க வேண்டும். அவற்றை எப்படிப் பொருத்துவது என்பதிற்றான் சூழ்க்குமமே அடங்கியுள்ளது.
திருமாவுண்ணி, கண்ணகி என்ற இருவரையையும் ஒருவராக்குவதில் ஒரு சில வரலாற்று நடப்புகளும் நமக்கு உதவி செய்கின்றன. மதுரை மருதன் இளநாகனார் சங்க இலக்கியத்தில் அதிகம் பாடியவர்களில் (பாடல் அடிகள் இல்லை; பாடல் எண்ணிக்கை. 43 பாடல்கள்.) ஒருவராவார். அகநானூற்றில் 23 பாடல்களும் (59, 77, 90, 131, 220, 255, 269, 297, 312, 343, 368. 34, 104, 121, 184, 193, 206, 245, 283, 358, 365, 380, 387) குறுந்தொகையில் 4 பாடல்களும் (77, 160, 279, 367), நற்றினையில் 12 பாடல்களும் (39, 216, 341, 21, 103, 194, 283, 290, 302, 326, 362, 392) அவர் பாடியுள்ளார். கூடவே புறநானூற்றில் 52, 55, 138, 139, 349 ஆம் பாடல்களைப் பாடியுள்ளார்.
52 ஆம் புறப்பாடல் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் பாடியது: பாண்டியன், வழுதி என்ற பட்டங்களும், கூடகாரமும் தெளிவாக இவனை மதுரை ஆண்டவனாகக் காட்டிவிடுகின்றன. (வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்) என்ற பாடலின் வரியால் கூடல்நகரத்தின் மருதந்துறை பேசப் படுகிறது.
55 ஆம் புறப்பாடல் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடியது. கொற்கைப் பாண்டியருக்கு திருச்செந்தூரின் மேல் ஒரு தனிக் கவனம் இருந்திருக்கவேண்டும், இவன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் சமகாலத்தவனாக, பங்காளியாக இருந்திருக்கலாம்.
138, 139 ஆம் புறப்பாடல்கள் 2 உம் நாஞ்சில் வள்ளுவன்மேற் பாடப்பட்டவை. இவன் சேரனுக்கு அடங்கிய குறுநில மன்னன். தென்பாண்டி நாட்டிற்கு நாஞ்சில் நாடு அண்மையானது.
349 ஆம் புறப்பாடல் பெருஞ்சிக்கில் கிழான் மகளைச் சோழனொருவன் பெண்கேட்டதை ஒட்டிப் பாடியது. இவன் புகார்ச்சோழனாய் இருக்கலாம். சிக்கில் புகாருக்கு மிக நெருங்கியது. உறையூர்ச் சோழன் நாகநாட்டிற்குள் போய்ப் பெண்கேட்டு மருட்டியிருக்க முடியாது. இப்புகார்ச்சோழன் பெயர் தெரியவில்லை.
இவ்வரசரின் சமகாலத்தில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உறையூரில் ஆண்டிருக்கிறான். ஏனெனில் ஐயூர் முடவனார் என்ற புலவர் சம காலத்தில் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பாடியுள்ளார். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தான் பெரும்பாலும் உறையூர் அரியணையில் ஆட்சிக்கட்டிலிற் செங்குட்டுவனால் ஏற்றப்பட்டவன் ஆகலாமென, சிலம்பின் காலம் கட்டுரைத் தொடரில் அறிந்தோம். மருதன் இளநாகனாரின் இப்பாடல்கள் எழுந்த காலம் சிலம்பு எழுந்து 25 ஆண்டுகளுக்குள் இருந்திருக்கவேண்டும். (ஒரு தலைமுறைக் காலம் என்பது 25 ஆண்டுகள்.) அப்படியானால் மருதன் இளநாகனார், ஐயூர் முடவனார், கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன், இலவஞ்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நாஞ்சில் வள்ளுவன் (இது பட்டப்பெயர், இயற்பெயரல்ல) ஆகியோரின் காலம் கி.மு.50 ஆகும்.

Monday, May 24, 2010
சிலம்பின் காலம் - 12
கட்டுரையை முடிக்க இன்னும் ஒரு கேள்வி மீதமிருக்கிறது. ”சிலம்புக் கதையின் காலம் கி.மு.75-80 ஆய் இருக்கலாம். சிலம்பு எனும் காப்பியத்தின் காலம் அதற்கும் பின்னால் சில நூற்றாண்டுகள் கழித்து இருக்கக் கூடாதா?” இதை இப் பகுதியிற் பார்ப்போம்.
1.இத்தகைய கூற்றிற்குத் துணையாக ஒருசிலர் சிலம்பில் வரும் வடசொற்களைக் காரணஞ் சொல்வார். [பேரா. வையாபுரிப் பிள்ளை போன்றோரின் கூற்று.]
தமிழில் வடசொற்கள் நுழைவது இன்று நேற்றல்ல; நந்தர், மோரியர் காலத்திலேயே தொடங்கி விட்டது. என்றைக்கு ஆசீவகம், செயினம், புத்தம், உலகாய்தம் போன்ற நம்புநெறிகளும், நம்பாநெறிகளும் வேதநெறியைக் கேள்வி கேட்கத் தொடங்கினவோ, அன்றே அறிவாளிகளின், முனிவர்களின் (இருடிகளின்), மெய்யியலாளர்களின், நகர்ச்சி வடக்கிருந்து தெற்கு நோக்கித் தொடங்கிவிட்டது. இங்கிருக்கும் அரசரின் ஆதரவை பெற வேண்டாமா? இந் நகர்ச்சியில் பாகதமும், சங்கதமும் சிறிது சிறிதாய்த் தமிழில் நுழையத் தானே செய்யும்? [அம்மொழிச் சொற்களைத் தமிழில் தக்க வைத்து, தமிழையே மாற்ற முற்படுவது வேறு கதை. அதை நான் பேசவில்லை. கூடிய மட்டும் நம் நடையிற் தமிழ்ச்சொற்களை ஆள்வதே சிறந்தது என்று சொல்வேன். ”அகிலத்தின் ஒழுங்கின்மை (entropy of the universe) கூடுகிறது” என்பதற்காக எந்தக் கட்டகமும் (system) தன்னுள் ஒழுங்கை (order) உருவாக்காது இருக்குமோ? ஒழுங்கு என்பது ஒழுங்கின்மைக்கு நடுவில் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.]
”வட சொற்கள்” எனுஞ் சொல் சங்கதம், பாகதம் என்ற இரு மொழிச் சொற்களுக்கும் பொதுவானது. ”வட சொற்கள்” எல்லாம் சங்கதமே எனும் பார்வை ஒருபாற் கோடியது. (தமிழாய்வில் நெடுங்காலம் பாகதத்தைக் குறைத்தே மதிப்பிட்டிருக்கிறார்.) வடசொற்கள் தமிழுள் ஊடுறுவியது மெய்யியலார் தொடர்பால் மட்டுமல்ல.அதற்கும் ஆழமான, தமிழகம், மகதம் ஆகிய தேசங்களின் அரசியற் பொருளியல்கள் ஊடாடத் தொடங்கியவுடன், தக்கண, உத்தரப் பாதைகளின் வழி சாத்துக்கள் இடை நகரத் தொடங்கிய வுடன், மொழிகளின் பரிமாற்றம் அதனூடாக நடக்கத் தொடங்கும் தானே?
இத்தகைய இயல்பான பரிமாற்றம் நடக்கும் போது, ஒரு சிலரின் மொழிநடை மாற்று மொழியால் பாதிப்பில்லாது இருக்கும்; வேறு சிலரின் மொழிநடையோ பெரிதும் பாதிக்கப்படும். ஏன் ஒருவரே கூட வெவ்வேறிடங்களில், வெவ்வேறு நடை பயிலமாட்டாரா, என்ன? வடசொற் கிளவியைத் தமிழில் சிலர் பயிலத் தொடங்கியதால் தானே கி.மு. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் ”வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று நெறிப்படுத்த முனைந்தார்? ”தமிழை மேலோட்டமாய்ப் பேசத் தெரிந்த, ஆனால் அதை முழுதும் புரிந்து கொள்ளாத, தமிழர் மரபு என்பதை முறையே அறிந்து கொள்ளாத, படித்த, மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க எழுந்த இலக்கணம் தான் தொல்காப்பியம்” என்று அண்மையில் பேரா. கா.சிவத்தம்பி சொல்ல வில்லையா?(95) [பேரா. சிவத்தம்பியோடு தொல்காப்பியரின் காலக் கணிப்பில் நான் வேறுபடுகிறேனேயொழிய இக்கருத்தில் அல்ல.]
தமிழக வரலாற்றில் தொடர்ச்சியாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எழுத்து நடை என்பது ஓரளவு கட்டுப்பட்ட பழமைப் போக்கிலும், பேச்சு நடை என்பது ஓரளவு நீக்குப் போக்கோடு, கலவை நடையாக இருப்பதும் உண்மைதானே? அண்மைக் காலப் பாரதியையே எடுத்துக் கொள்வோமே? வடசொற்கள் அவன் உரைநடையில் மிகுந்தும், கவிநடையிற் குறைந்தும் இல்லையா? இதே போலக் கவிப் பேரரசன் கம்பன் செய்திருக்க மாட்டானா? தேவார மூவர் செய்திருக்க மாட்டாரா? இளங்கோ செய்திருக்க மாட்டானா? அருணகிரிநாதர் எக்கச் சக்கமாகத் திருப்புகழில் வடமொழி பயின்றார் என்பதால் அவர்க்கு முந்திய 14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியரில் அதே அளவு காணுவதில்லையே? ஏன் 11 ஆம் நூற்றாண்டு இளம்பூரணருக்கும், 14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கு இனியருக்கும் எத்துணை வேறுபாடு கண்டுவிட்டோம்? ஒரே கால கட்டத்தில், வடமொழி விரவிய நடையும், விரவா நடையும் பயிலத்தான் செய்துள்ளன.
எத்துணை விழுக்காடு வடசொற்கள் சமகாலத்திற் தமிழர் பயின்றார் என்பது அகன்ற பட்டை போன்றது. அதை நூலிழை போற் கருதிக் கணித்துவிட முடியாது. கூடவே, மொழிநடை என்பதைக் காலத்தோடு நேர் உறவுற்றதாய்க் (direct relation) கொள்ளக் கூடாது. ஒரு காப்பியத்தை எடுத்துக் கொண்டு அதிலுள்ள வடசொற்களைக் கணக்குப் போட்டு அது எந்தக் காலம் என்று துல்லியமாக 10 ஆண்டுக் கணக்கிற் சொல்லுவது மிகக் கடினம். என்னைக் கேட்டால் இக்கணிப்பில் 100, 200 ஆண்டுத் துல்லியங் கணக்கிடுவது கூடச் சரவலான செயலேயாகும்.
அடுத்த கேள்வியான ”சிலம்பிற்குள் எது வடசொல், எது தமிழ்ச்சொல்?” என்பதிற் கூட ஓர் ஒன்றுபட்ட அளவுகோல் கிடையாது. வடசொல் என்று சிலர் சொல்லுவதை தமிழ்ச்சொல் என இன்னொரு அறிஞர் வேர்ச்சொற்கள் கொண்டு சான்றுகளோடு நிறுவுகிறார். மொத்தத்தில் அயல்மொழிச் சொற்களை வைத்து, ஓர் இலக்கியக் காலத்தைத் தெளிவாகக் கணிப்பது அவ்வளவு எளிய செயலல்ல. அது சவ்வாக இழுத்துக் கொள்ளும். இருந்தாலும் சிலம்பிற் பயிலும் வடசொற்கள் எத்தனை விழுக்காடு என்பது சுவையார ஆய்வு தான்.
2. மணிமேகலையோடு சிலப்பதிகாரத்தை இணையாக வைத்து இரட்டைக் காப்பியம் என்று சொல்லி, அதனாற் காலத்தைக் குறைத்துக் காட்டுவார். [பல தமிழறிஞர் கூற்று.]
என்றைக்குப் பதிகத்தையும், வரந்தரு காதையையும் இளங்கோ இயற்றியதாய் இருக்கவியலாது என ஒதுக்கினோமோ, அன்றைக்கே இக்கூற்றுப் பட்டுப்போகிறது. கோவலன், மாதவியின் மகள் மணிமேகலை என்பதைத் தவிர்த்து இரண்டு கதைகளுக்கும் தொடர்பு கொஞ்சமும் கிடையாது. புத்த நெறியே சிறந்தது என்று நிலைநாட்டப் பிறந்த மணிமேகலையின் கதைக்களன் முற்றிலும் வேறுபட்டது. அதன் காலத்தைத் தனித்துக் கணிக்க வேண்டுமே ஒழிய சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியம் என்றுசொல்லி சிலம்பின் காலத்தை வலிந்து கீழே தள்ளுவது வேண்டாத வேலை. சிலம்பு எனும் காப்பியம் ”பத்தினிக் கோட்டம் கட்டிய நிகழ்வோடு ஒரு சில ஆண்டுகளிலேயே காப்பியமாய் எழுதப் பட்டிருக்க வேண்டும்” என எண்ணுமாப்போல், அகம் 149 ஆம் பாட்டு உறுதி செய்கிறது. அதைக் கீழே பார்ப்போம்.
3. சிலப்பதிகாரத்தைச் செயினக் காப்பியம் என்றுரைத்து, “செயினம் என்பது களப்பிரர் காலத்தில்தான் தமிழகத்தில் பெரிதும் பரவியது” என்று கட்டங்கட்டி, அதனால் சிலம்பு பிற்பட்டது என்று ஒரு சிலர் சொல்வார். [இது இடதுசாரியர் கூற்று]
கட்டுரையின் முன்பகுதிகளிற் சொன்னாற் போல், சிலம்பு செயினக் காப்பியம் என்று சொல்ல முற்படுவதற்கு வரந்தரு காதை மட்டுமே சான்றாகும். வரந்தரு காதையை ஏற்பதில் தயக்கம் வந்தபின், சிலம்பு செயினக் காப்பியம் என்று சொல்வதிலும் தயக்கம் ஏற்படும். கவுந்தி எனும் செயினத் குரத்தி காப்பியத்தின் ஊடே ஒரு கதை மாந்தராய் செயினம் பேசி வருவதாலேயே சிலம்பு செயினக் காப்பியம் ஆகிவிடாது. ”கவுந்தி பேசுவது ஆசீவகம் தான்; அவரை செயினக் குரத்தி என்று சட்டென்று சொல்லிவிட முடியாது, ஊழையும், ஊழ்வினையையும் பலர் குழப்பிக் கொள்கிறார்” என்று பேரா. க.நெடுஞ்செழியன் கூறுவார்(96).
ஆசீவகத்திற்கும், செயினத்திற்கும் இடையுள்ள ஆட்டத்தில் பல்வேறு ஆசீவகச் சான்றுகளை செயினமாய்க் காட்டும் போக்கு 19, 20 ஆம் நூற்றாண்டுத் தமிழறிஞரிடையே, தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே பெரிதும் இருந்தது. ஏதெல்லாம் செயினம் எனப்படுகிறதோ, அவற்றை மீளாய்வு செய்வது இப்பொழுது தேவையாகிறது. சிலம்பும் அதிலோர் ஆய்வுக் களமே.
இன்னொரு செய்தியும் இங்கு சொல்ல வேண்டும். நிக்கந்தர் நெடுங்காலம் வேதநெறிப் பார்ப்பனரைப் போன்றே ஏதொன்றையும் எழுத்தில் வைக்கத் தயங்கினார். “சரசுவதி இயக்கம்” என்ற செயின எழுத்தியக்கம் கி.மு.150 களிற் தொடங்கி கி.பி.100 வரை நடந்தது. அந்த இயக்கத்தையொட்டியே மகாவீரர் போதனைகள் எழுத்தில் ஆவணப்பட்டன. இதன் உச்ச காலம் கி.மு.50 இல் இருந்து கி.பி.50 வரையாகும். இக்காலத்திற் தான் செயின சமய நூல்கள் எழுதி வைக்கப்பட்டன. அதற்குமுன் அவருக்கு வேத நெறியரைப் போல எல்லாமே வாயுரைகள் தான்(97).
சிலம்பைப் போன்றதொரு காப்பியம் கி.மு.50-கி.பி.50இலும், அதற்குப் பின் 100 ஆண்டுகளிலும், செயினச் சமய நோக்கில் எழுந்திருக்க வாய்ப்பேயில்லை. அதோடு இன்று நமக்குக் கிடைத்த சீவக சிந்தாமணி, ஐஞ்சிறு காப்பியங்கள் போன்றவை “ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தார், அவருக்கு இத்தனை மனைவியர், இத்தனை பிள்ளைகள். . . .” என்று சொல்லி, ஊடே மாந்தரை மீறிய மாகைச் (magic) செய்திகளை நுழைத்து, முடிவில் “செயினம் வெல்கிறது” என்ற முடிப்போடு, தொன்மம் (புராணம்), பழங்கதை சொல்லும் போக்கில் தான் இருக்கின்றனவே யொழிய, சிலம்பைப் போற் கூத்துவடிவில் சட்டென்று திரையைத் தூக்கி நாடகப் பாங்கில் வரலாற்று இலக்கியமாய்த் தோற்றங் காட்டவில்லை. சிலம்பின் கூத்து வடிவம் செயினக் கருத்தாளருக்கு முற்றிலும் மாறான புதிய வடிவம்.
4. பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தில் வரும் கடல்பிறக்கோட்டிய குட்டுவனும் சிலம்பில் வரும் செங்குட்டுவனும் வெவ்வேறானவர் என்று சொல்லியும், பதிற்றுப் பத்தின் பதிகம் மிகப் பிற்காலத்தது, பேரரசுச் சோழரின் மெய்கீர்த்திகளை ஒட்டி பதிகம் எழுந்தது என்று சொல்லிச் சிலம்பின் காலத்தைப் பிந்தையது என்பார். [இதுவும் இடதுசாரியர் கூற்றே.]
சிலம்பினுள் வரும் ஒத்திசைவான சான்றுகளைக் குப்புறத் தள்ளி, பதிற்றுப்பத்துப் பதிகத்தின் காலத்தை வைத்து, இப்படித் தீர்ப்பு எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. பதிற்றுப் பத்தின் பதிகங்கள் காலத்தாற் பிற்பட்டவையாகலாம். ஆனால் அவற்றில் வரும் செய்திகள் முற்பட்டவையாக இருக்கக் கூடாதா? கி.பி.100க்கும் பின் எழுந்த குணாட்டியர் “ப்ருகத்கதா”வில் வரும் செய்திகள் பிம்பிசாரனுக்கும் முந்தைய காலத்தை, அவந்தி, வச்சிரம், வத்தவம், மகதம் என்று தனித்திருந்த கணபதங்களின் காலத்தை, அல்லவா பழங்கதை சொல்வது போற் சொல்கின்றன? அவை சம காலத்தைச் சொல்ல வில்லையே? அதேபோல் பதிற்றுப்பத்தின் பதிகங்கள் தம் காலத்திற்கும் முற்பட்ட செய்திகளை ஏன் சொல்லக் கூடாது?
சற்று முன்னாற் சொன்னது போல் அகம் 149 ஆம் பாட்டைப் படித்தால், சிலம்பு எனும் காவியம், ’தன் வரலாறு’ நடந்துமுடிந்த நாலைந்து ஆண்டுகளுக்குள்ளேயே எழுந்திருக்கலாம் என்ற எண்ணம் ஆழமாய் எழுகிறது. அதைக் கீழே பார்ப்போம்.
5. செங்குட்டுவனோ, தமிழக அரசர்களோ வடக்கே எக்காலத்தும் படை எடுத்துப் போகவில்லை; எல்லாமே “கப்சா”; ”முதல்முதல் வடக்கே போனவன் இராசேந்திர சோழனே; எனவே சிலப்பதிகாரம் ஒரு கற்பனை” என்று சொல்லி சிலர் புது “திரைக்கதை-வசனம்” எழுத முற்படுவார் [இது திரு.செல்லன் கோவிந்தனின் வழிமுறை]
இதற்குச் ”சிலம்பின் காலக் கணிப்பு” என்ற நூலில்(98) முனைவர் இரா. மதிவாணன் ஏற்கனவே விடை கூறிவிட்டார். [அதே பொழுது மதிவாணன் சிலம்பின் காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு என்பார்.]
மேலுள்ள ஐந்து கூற்றுகளையும் ஏற்கா நிலையில், ”சிலம்புக் காப்பியம் எழுந்த காலம் எது?” என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. அதை இனிப் பார்ப்போம்.
சேரனை வேள்வி நடத்த மாடலன் வேண்டியபோது, சேரன் ஆட்சிக்கட்டிலேறி 50 ஆண்டுகள் ஆயிற்று. பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பதிகத்தின் படி செங்குட்டுவன் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தான். 25 அகவையில் ஆட்சிப் பொறுப்பேற்ற சேரனுக்கு, பத்தினிக் கோட்டம் எழுந்தபோது 75 அகவை ஆகியிருக்கும். அதன்பின் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறான். அவனுக்குப் பின் அவன் மகன் குட்டுவன் சேரல் ஆட்சிக்கு வந்திருக்கலாம்.
முன்னே சொன்னதுபோல், மதுரையில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு அப்புறம் ஆட்சிக்கட்டில் ஏறிய அவன் தம்பி வெற்றிவேற் செழியனின் தொடக்க காலம் குழப்பமாய் இருந்தது. மக்களின் கோவத்தைத் தணிக்கும் வகையில் 1000 பொற்கொல்லரை ”படையற் பலியாடுகள்” போலக் காவு கொடுக்கும் நெருக்கடி அவனுக்கு நேர்ந்திருக்கிறது. எப்பொழுது இந்தப் பலி நடந்தது என்று சொல்ல முடியாவிடினும், பாண்டிநாட்டில் சட்டம்- ஒழுங்கு அரசின் அடக்குமுறை மூலந்தான் நிலைநாட்டப் படுகிறது என்று உறுதியாய்ச் சொல்லலாம். இதன்முடிவில் நாடெங்கும் ஒரு மயான அமைதி ஏற்பட்டிருக்க வேண்டும். [இந்தச் செய்தி, வடசெலவிற் புறப்பட்டுச் சென்ற சேரனுக்கு 32 மாதங்கள் கழித்துத் தெரிகிறது.]
இக்கால முடிவில், பத்தினிக்குக் கல்லெடுக்கச் சேரன் வடக்கே படை எடுத்தது வெற்றிவேற் செழியனுக்கு ஒற்றர்மூலம் தெரிந்திருக்கலாம். எங்கிருந்தோ வந்த ஒரு சோழநாட்டுப் பெண்ணால் தன்நாட்டுக்குத் தீராப் பழியும் கேவலமும் வந்துசேர்ந்தது, பாண்டியன் வெற்றிவேற் செழியன் மனத்திற் பெருங்கனலை ஏற்படுத்தியிருக்கும். அந்தக் கோவம், நீலன் கனகவிசயரைக் கொண்டுவந்து பாண்டியனிடம் காட்டும்போது சேரனை ஏளனம் செய்வதில் முடிகிறது(99). “ஊர் இரண்டுபட்டுக் கிடக்கக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்ற வகையிற் ”தங்களுடைய பரிதவிப்பில் சேரன் சிக்கெடுக்கிறான்” என்றே பாண்டியர் எண்ணியிருப்பர்.
சேர நாட்டு வஞ்சியில் பத்தினிக்குக் கோட்டம் எடுத்ததைப் பாண்டியரால் கொஞ்சங் கூடத் தாங்கிக் கொண்டிருக்கவே முடியாது. ஏனென்றால் அப் பத்தினிச் சிலை பாண்டியர் நீதிதவறியதை மெய்ப்பிக்கும் அடையாளச் சின்னமாய்த் தோற்றும். [பாண்டியர் நீதி குறைப்பட்டுப் போனதை மக்கள் மறந்து தொலைக்க வேண்டுமென்றே பாண்டிய அரசகுலத்தார் நினைந்திருப்பர்.] அச் சின்னத்தை அழிப்பதில் பாண்டியர் பெரும் முனைப்புக் கொள்வது இயற்கையே. அப்படி ஒன்று நடந்திருக்கிறது. அதை அகம் 149 இல் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பதிவு செய்திருக்கிறார். சற்று விரிவாகப் பார்ப்போம்.
பாலைத் திணை சேர்ந்த அகம் 149 ஆம் பாட்டில்(100) வணிகத்தின் பேரில் செல்லவிருக்கும் பாண்டிநாட்டு தலைமகன் ஒருவன் இருவேறு காட்சிகளைத் தன் கண்முன்னே எண்ணி, தன் செலவைத் தவிர்க்கிறான். ஒரு காட்சி, அவன் போகவிருக்கும் சுரத்தின் கொடிய விவரிப்பாய் அமைகிறது. அக்காட்சியின் பின், “இப்படிப்பட்ட ஆளைக் கொள்ளும் வழியில் நான் சென்று பொருளீட்ட வேண்டுமா?” என்று தலைவன் தன் நெஞ்சை விளிக்கிறான். இன்னொன்று பரங்குன்றச் சுனையின் நீலமலர் போலச் செவ்வரிபடர்ந்த கண்களுடைய காதலியின் முகத்தோற்றம். இந்த 2 காட்சிகளால் அவன் செலவு அழுங்கிப் போகிறது.
[பாட்டை விவரிக்கும் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பாண்டிநாட்டாராக இருக்கப் பெரும் வாய்ப்பு உண்டு. காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டியில் கண்டெடுத்த ஆறாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் “எக்காட்டூர் கோன் பெருந்தச்சன்” என்ற ஒரு வாசகம் வரும்(101). எருக்காட்டூர் என்பது தான் எக்காட்டூராகப் பிழைபடப் பதிவு செய்யப்பட்டதாக ஐராவதம் மகாதேவன் கருதுவார். எருக்கஞ்செடிகள் நிறைந்த காடு எருக்கங்காடு>எருக்காடு. இன்றைக்கும் அப் பகுதியில் எருக்கஞ் செடிகள் மிகுந்து காணப்படும். உள்ளூர்த் தச்சனாய் இருந்தால் பிள்ளையார்பட்டியின் பழைய பெயர் எருக்காட்டூர் ஆகும். அதே பொழுது ஔவை துரைசாமியார் வேறு அடையாளஞ் சொல்வார்(102). எருக்காட்டூர் என்பது பழைய தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், குளிக்கரை இருவுள் (Rail) நிலையத்திற்கு மேற்கில் இருக்கிறது என்று அவர் சொல்வார். எருக்காட்டூரைச் சேர்ந்த “மணற்குன்று” எனும் ஊரை “எருக்காட்டூர்ச் சேரிக்குப் பிடாகையான” எனத் திருக்கடவூர்க் கல்வெட்டுக்கள் (A.R. No.32 and 38 of 1906) குறிப்பதாக அவர் சொல்வார். எது தாயங்கண்ணனாரின் ஊர் என்பது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.]
தாயங்கண்ணனார் பரங்குன்றத்தை விவரிக்கும் போது “மதுரையின் மேற்கே மயிற்கொடி உயர்த்தப்பெற்று இடையறாமல் விழா நடக்கும் முருகனின் பரங்குன்றம்” என்று சொல்வார். மயிற்கொடியை விவரிக்கும் போது ”நெடுநல் யானை அடுபோர்ச் செழியனின் மீன்கொடி அண்மைக்காலத்தில் சேரனைச் சமரிற் (battle and not war) கடந்து, ”படிமம் வவ்விய” வெற்றியால் அசைந்ததை” ஒப்பீடாகச் சொல்வார். இந்த அடுபோர்ச் செழியன் உறுதியாக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனல்லன்; அவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் அல்லன். வேறு யாரோவொரு செழியன். அவன் சேரன் மேற் கனன்று கொண்டிருந்த வெற்றிவேற் செழியனாய் இருக்கப் பெரும் வாய்ப்பு உண்டு. ஆழ்ந்து போவோம்.
அகம் 149 இன் படி, “சேரலனின் சுள்ளியம் பேரியாற்றில் பொன்கொணர்ந்து, கறியேற்றிச் செல்லும் யவனரின் கலங்கள் அடுத்தடுத்துப் போவதால் வெண்நுரை பொங்கிக்கொண்டேயிருக்கிறது. அப்பேற்பட்ட சிறப்புடைய முசிறித் துறைமுகத்தைச் சுற்றிவளைத்து சேரர் படையை நிலைகுலைய வைத்து, ஆற்றுள் நுழைந்து வஞ்சியிலுள்ள படிமத்தை தன் படையால் பாண்டியன் வவ்விக் கொண்டு போகிறான்.” அப்படியென்ன சிறப்பு அப்படிமத்திற்கு? சிலம்புக் காலத்தின் சூழ்க்குமம் அதிற்றான் இருக்கிறது.
[The Periplus of the Erythraean sea என்னும் நூலில், தொண்டியில் இருந்து கடற்கரையை ஒட்டி 480 ஸ்டேடியா கடந்து பின் ஆற்றிற்குள் நுழைந்து 20 ஸ்டேடியா போனால் முசிறித் துறைமுகம் வந்துவிடும் என்ற குறிப்புண்டு. இந்த ஸ்டேடியாவை ஏதென்சின் அட்டிக் ஸ்டேடியாவாகக் கொண்டால் 1 அட்டிக் ஸ்டேடியா = 0.185 கி.மீ என்றாகும். அதன்படி, சேரத் தொண்டியில் இருந்து கடற்கரையை ஒட்டி 480*0.185 = 88.8 கி.மீ சென்று பின் ஆற்றிற்குள் 20*0.185 = 3.7 கி.மீ சென்றால் முசிறி வந்து சேரும். முசிறிப் பட்டணத்தில் இருந்து ஆற்றையொட்டிக் குறைந்தது 8/10 கி.மீ தூரத்தில் வஞ்சி மாநகர் இருந்திருக்கலாம். (நமக்கு உண்மைத் தொலைவு தெரியாது.)]
முசிறியை வளைத்தவன், சேரநாட்டைப் பிடிக்கவில்லை. வெறுமே படிமம் கவர இவ்வளவு தொலைவு கடல்வழியே போயிருக்கிறான். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், ஆங்கிலத்திற் சொல்வது போல் இது திடீரென்று பழிவாங்கும் தாக்குதல், தண்டனை கொடுக்கும் தும்பைப் போர் (punitive expedition). எந்தச் செழியன் படிமத்தைத் தூக்கிவர முற்படுவான்? சேரனை ஏளனமாகப் பேசிய வெற்றிவேற் செழியன் அன்றி அது வேறு யாராய் இருக்க முடியும்? அது கண்ணகியின் படிமம் அன்றி வேறேதாக இருக்க வாய்ப்புண்டு? [உரையாசிரியர் பொற்படிமம் என்று சொல்வார். ஆனால் அகம் 149 ஆம் பாட்டில் பொன் எனும் சொல்லாட்சி எங்கணும் கிடையாது. படிமம் மாழைப் படிமமா, கற் படிமமா என்றுகூட அகம் 149 சொல்லவில்லை. நம்முடைய ஊகமாய் அது கற்படிமம் என்று சொல்லத் தோன்றுகிறது.]
வெற்றிவேற் செழியன் நெடுநாட்கள் கொற்கையில் இருந்தவன். கொற்கையில் இருந்து முத்துக் குளிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும் அந்தக் காலத்தில் இந்தக் காலம் வரை, பருவகாலத்தை ஒட்டி பாண்டிக் கடற்கரையில் இருந்து புறப்பட்டு வஞ்சி வரை (இற்றைக் கொச்சின் வரை) வந்து போவது மீனவர் பழக்கம். இந்த நாவாய், படகுகளுக்கு நடுவில் ஒரு அதிரடிப்படையை அனுப்புவது அப்படியொன்றும் கடினமான செயலல்ல. நிலத்தின் வழியே முழுப் படையை அனுப்பினால் அது பெரும் போரில் முடியும். அதைத் தவிர்த்து, பாண்டியன் அதிரடிப் படைகள் கடல்வழியே கரையொட்டிப் போய் முசிறியில் ”அருஞ்சமம்” நடத்தி முடிவில் வஞ்சினம் தீர்க்கும் வழியாய், ”படிமத்தை” வவ்விப் போவதே எளிதானது, இத்தகைய அதிரடிச் சமரைத் தான் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் அகம் 149-இற் பதிவு செய்கிறார்.
”மீன்கொடிகள் சட்டென்று பறந்து படிமத்தை விரைவாய்க் கவ்விக் கொண்டுவந்துவிட்டன. அதைப்போலப் பரங்குன்றத்து மயிற்கொடிகள் ஆடுகின்றன” என்று ஒப்புமை சொல்லுகிறார்.
தாயங்கண்ணனார் பாடல் வெற்றிவேற் செழியனைக் குறித்தவை என்று எப்படிச் சொல்ல முடிகிறது? - என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது. அவர் இன்னொரு அரசனையும் தம் வாழ்நாளில் பாடியிருக்கிறார். அவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பவனாவான். நினைவிருக்கிறதா? சிலம்பிற் பதிவு செய்தபடி செங்குட்டுவனின் மைத்துனன் ஒரு கிள்ளிவளவன்(103,104,105). ஒன்பது சோழ இளங்கோக்களோடு போரிட்டு அவனை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிவைத்தது செங்குட்டுவன் தான். இவன் உறந்தை யரசன் என்பது மாறோக்கத்து நப்பசலையார் பாட்டால் (39) விளங்குகிறது. (இவனே பின்னால் சேர அரசிற்கு எதிராகப் படையெடுக்கும் காலம் உண்டு. எனினும் மாறோக்கத்து நப்பசலையார், ”இமயத்தில் வில் பொறித்த சேரனை வென்றவனே” என்று சோழனைப் பாராட்டுவார்(106). மாறோக்கம் என்பது கொற்கைக்கு அருகிலுள்ள சிற்றூர். இவர் பாண்டி நாட்டுப் பெண்புலவர்.
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்திலும், அவன் மகன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காலத்திலும் இருந்த மாந்தரஞ்சேரல் இரும்பொறையை (இவன் சிலம்புக் காலத்தில் அகவை குறைந்தவனாய் இருந்திருக்க வேண்டும்.) சிலம்பு தெளிவாகக் குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் இருந்துள்ளான். இந் நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கோ, வெற்றிவேற் செழியனுக்கோ மகனாய் இருந்திருக்கலாம். இத்தனை அரசரின் சமகாலம் முறைப்படி எளிதாய்ப் பொருந்துகிறது. அதை விவரிக்கப் போனால் வேறெங்கோ இழுத்துச் செல்லும்; எனவே சிலம்பிற்கு மீண்டும் வருவோம்.
சிலம்பு எனும் காப்பியம் பல ஆண்டுகள் கழித்து எழுந்திருக்குமானால் படிமம் வவ்விய செய்தியை அதுவே பதிந்திருக்கும். கதையின் பாங்கும் பெரிதும் மாறிப் போயிருக்கும். அதை இளங்கோ பதியாத காரணத்தால், அக் குறிப்பிட்ட நிகழ்வு நடப்பதற்கு முன்னேயே காப்பியம் எழுந்திருக்கவேண்டும் என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லலாம். பெரும்பாலும் குட்டுவன் சேரலின் அவையில் சிலம்புக் காப்பியம் அரங்கேறியிருக்கலாம். குட்டுவனுக்குப் பின் அவன் பங்காளியான மாந்தரஞ்சேரல் இரும்பொறை சேரரின் கூட்டரசை ஆண்டிருக்கிறான். அவன் காலத்திற்றான் ஐங்குறுநூறு தொகுப்பிக்கப் பெற்றது என்ற குறிப்புமுண்டு(107). [அன்றி மாந்தரன் சேரல் இரும்பொறையின் அவையிலோ எழுந்திருக்கலாம்.]
குட்டுவன் சேரல் தன் தந்தை புகழ் விளங்க வேண்டுமென்று ”சிலப்பதிகாரம்” என்ற நூலுக்கு ஆதரவு அளித்திருக்கலாம். பேரரசுச் சோழர் காலத்தில் குலோத்துங்கன் பிறங்கடைகள் ஒட்டக்கூத்தரை வைத்து தம் முன்னோருக்கு உலாப் புகழும், பரணிப் புகழும் பாடவில்லையா? இது போன்ற புகழ்ப் பாடுதல்கள் உடனே நடந்துவிடும்; நாட்பட்டு நடக்கா. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதும், இரும்பு சூடாய் இருக்கும் போதே அடிப்பதும் தான் உலகியல் வழக்கு.
எனவே கண்ணகிப் படிமத்தை வவ்வியது வெற்றிவேற் செழியன் தான் என்று உறுதி செய்ய முடிந்தால் சிலம்பு எழுந்தது கதை நடந்து முடிந்த ஒருசில ஆண்டுகளில் என்றே சொல்லவேண்டியிருக்கிறது.
இன்னொரு கேள்வி எழுகிறது. வவ்விய படிமம் எங்கே போயிற்று? அதனாற்றான் கொடுங்களூர் பகவதி கோயிலில் மூலவள் இல்லாது இன்றும் கருவறை நான்கு பக்கமும் அடைபட்டிருக்கிறதா?(108) அந்தப் பகவதி கோயிலுக்குள் இன்னொரு சூழ்க்குமம் இருக்கிறதோ? என்று அதை அவிழ்ப்போம்?
----------------------------------
[இந்த ஆய்வு பற்றிய சுருக்கத்தை, 2007 நவம்பரில் அமெரிக்க ஒன்றிய நாடுகள், தென்கரோலினா மாநிலத் தலைநகரான சார்ல்சுடனில் ஒரு நாள் மாலை, அங்கிருந்த நூலகம் ஒன்றில் எனக்காகக் கூடியிருந்த சில தமிழன்பர்களிடையே உரையாட்டில் சொல்லியிருந்தேன். அந்த உரையாடலை ஏற்பாடு செய்த நண்பர் சுந்தரவடிவேலுக்கும், உரையாடலில் பங்கு கொண்டோருக்கும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். அங்கு சொன்னதற்கும் மேல் விரித்து, கூடிய மட்டும் சான்றுகளுடன் இங்கு சொல்ல முற்பட்டிருக்கிறேன்.]
எடுகோள்கள்:
95. பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி ”பண்டைய தமிழக வரலாற்றின் மீது ஓர் ஆய்வொளிப் பாய்ச்சல்” பனுவல், தொகுதி 1, இதழ் 1, நவம்பர் 2008, பக்கங்கள் 36-66.
96. பேரா., க.நெடுஞ்செழியன் ”ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்”, மனிதம் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி - 21, 2002
97. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India”, pp 64-75, Munshiram Monoharlal Publishers Pvt. Ltd. 2005.
98. முனைவர் இரா. மதிவாணன், “சிலம்பின் காலக் கணிப்பு” சேகர் பதிப்பகம், சென்னை 78, 2005/
99. ஆங்கு நின்று அகன்றபின் அறக்கோல் வேந்தே
ஓங்குசீர் மதுரை மன்னவற் காண
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீரியல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவில் தலைக்கோல் ஆங்குக்
கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி
இமயச் சிமையத்து இருங் குயிலாலுவத்து
உமையொரு பாகத்து ஒருவனை வணங்கி
அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து
தவப்பெரும் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதியழற் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது என்றனன் போர்வேற் செழியன்
நடுகற் காதை 96-107
100.சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையில்
புல் அரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள் இடைப் போகி நன்றும்
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே! சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அருஞ்சமம் கடந்து, படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.
அகநானூறு 7-16, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
101. Iravatham Mahadevan, “Early Tamil Epigraphy” pp 474-475, Crea-A, Chennai India, and The Department of Sanskrit and Indian Studies, Harvard University, U.S.A., 2003
102. ஔவை துரைசாமிப் பிள்ளை விரிவுரை, “புறநானூறு 201-400 பாட்டுக்கள்” பக்கம் 453, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1972.
103. நீடு வாழியரோ நீள்நில வேந்தென
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநாடு அளிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
நீர்ப்படை காதை 116-123
104. சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக்
கோயில் இருக்கைக் கோமகன் ஏறி
வாயிலாளரின் மாடலற் கூஉய்
இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர்
வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோற் தன்மை தீதின்றோ என
நீர்ப்படை காதை 156-161
105. ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச்செரு வென்று
நடுகற் காதை 116-117
106. ஓங்கிய
வரையளந்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமயஞ் சூட்டிய வேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டுநின்
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே
புறம் 39. 13-18
107. அ. பாண்டுரங்கன், “தொகை இயல்” தமிழரங்கம், புதுச்சேரி 605008, 2008.
108. முனைவர் வி. ஆர். சந்திரன், “கொடுங்கோளூர் கண்ணகி” (தமிழில் ஜெயமோகன்), யுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை, 2005

Saturday, May 22, 2010
சிலம்பின் காலம் - 11
மாடலன் வருகையும், மன்னவர்க்கு உரைத்ததும்:
”கானற்பாணி கனக விசயர்தம் முடித்தலை நெறித்தது”என்ற வாசகமும், ”குடவர் கோவே நின்னாடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்” என்ற வாசகமும் இங்குதான் சொல்லப்படுகின்றன. கூடவே ”கவுந்தியின் உண்ணாநோன்பு, மதுரை நிகழ்வுகள், மாசாத்துவன், மாநாய்கன் துறவு, இருவரின் மனைவியர் இறந்தது, மாதவி, மணிமகலை துறவு, மாடலன் நன்னீர்க் கங்கை ஆடப் போந்தது” என்று அடுத்தடுத்த செய்திகள் சொல்லப்படுகின்றன. பொதுவாக தெற்கிருந்து வந்து கங்கையிற் புனித நீர் ஆடுவதென்பது அன்றிலிருந்து இன்றுவரை. காசியன்றி வேறெங்கும் நடப்பதில்லை. மாடலன் செங்குட்டுவனைப் பார்க்கும் இடத்தில் தான் அருகில் செங்குட்டுவனின் தென்கரைப் பாடி இருந்திருக்கிறது. இதனாலேயே செங்குட்டுவனின் போர்க்களம் பெரும்பாலும் காசிக்கு வடக்கே இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறோம். கங்கைக்குத் தென்கரையில் காசியிற் தங்கிய பாடிக்கு அருகில் ஏதோ ஒரு சிறுகுன்றம் இருந்ததாகச் சிலம்பு சொல்கிறது(87). இதைப் பற்றியும் கள ஆய்வு தேவை.
மாடலனை அரசன் கேட்கும் கேள்விகள் அத்தோடு முடியவில்லை. மைத்துனன் கிள்ளிக்காக ஒன்பது சோழிய இளங்கோக்களோடு செங்குட்டுவன் பொருதியதும் இங்கு நினைவுகூரப் படுகிறது(88).
முடிவில் கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் 1000 பொற்கொல்லரைக் கொன்று உயிர்ப்பலியூட்டிய செய்தி சொல்லப்படுகிறது. இந்தச் செய்தி மதுரை எரியுண்டு 32-36 மாதங்களுக்கு அப்புறம் தான் செங்குட்டுவனுக்குத் தெரிகிறது.
மொத்தத்தில், செங்குட்டுவனின் வடசெலவைக் குறைத்து மதிப்பிடமுடியாது. அது வழிநெடுகப் பல தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டே சென்றிருக்க வேண்டும். இந்த 32-36 மாதங்களில் பாண்டிய நாட்டில் கலகமும் போராட்டங்களும் வெடித்திருக்க வேண்டும். முடிவில் மக்களின் கோவத்தைக் குறைக்க 1000 பொற்கொல்லர் பலியாடுகளாக ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். நீதிவழி தப்பிய அரசனும் அதனால் ஏற்பட்ட பிற விளைவுகளும் கொடிதானவை என்பது சிலம்பைப் படித்த யாருக்கும் விளங்கும்.
சேரனின் பெருங்கணி “எண்ணான்கு (32) மதியம் வஞ்சி நீங்கியது” என்ற அறிவிப்பைத் தருகிறான். அதற்கு மறுமொழி சொல்வதற்கு மாறாய், தன் மைத்துனன் கிள்ளியையே நினைந்து, ”இளங்கோ வேந்தர் இறந்ததிற் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் (உறையூர்ச் சோழன்) கொற்றமொடு செங்கோல் தன்மை தீதின்றோ? – என்ற கேட்பதால், நேரிவாயிற் போரின் பின் உறையூர் ஆட்சியை மைத்துனனுக்கு பிடித்துக் கொடுத்தது கண்ணகி கதைக்குச் சற்று முன் நடந்திருக்கலாம் என்று உணர்கிறோம். காசியில் இருந்தபோது செங்குட்டுவனுக்கு அந்தக் கவலையும் இருந்திருக்கிறது. எனவே அந்த நேரிவாயிற் போர் வடசெலவிற்கு ஓரிரு ஆண்டுகள் முன்னர்தான் நடந்திருக்க வேண்டும். நாக நாட்டுச் சோழன், பாண்டியன் ஆகியோரின் கோவம் இயற்கையாகவே சிலம்புக் காலத்திற் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.
32 மாதங்களில் நடந்த செய்தியைச் சொன்ன மாடலனுக்கு, குறிப்பாகத் தன் மைத்துனன் கிள்ளியைப் பற்றிச் சொன்ன மாடலனுக்கு, தன்னிறைக்குத் தக்க 50 ஆடகப் பெருநிறையைச் சேரன் கொடுக்கிறான். அடுத்து ஆரிய மன்னரை (கனக விசயனோடு களத்தில் இருந்த 100 பேரை) நாடு செல்க என்கிறான். ஆரியப் பேடியொடு, எஞ்சிய மன்னர், சேரனுடைய இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவர், கனக விசயர் ஆகியோரை இருபெரு வேந்தர்க்குக் காட்டுமாறு ஏவுகிறான். இது எதற்கு என்று புரியமாட்டேன் என்கிறது. ஒருவேளை இந்தக் கண்காட்சி சோழ, பாண்டியர் கோவத்தை, மாற்றும் என்று நினைத்தானோ? - தெரியவில்லை.
வடபுலத்தை விட்டுப் புறப்படுமுன் வடதிசை மன்னரின் மண்ணெயில் முருக்கிக் கவடி (= வெள்வரகு, கொள்) வித்தி, கழுதையாற் சேரன் ஏருழுகிறான்(89). இவ்வளவு விவரம் சொல்லும் சேரன் படையெடுப்பையே ”பொய்”யென்று சொல்லி வடநாட்டு வரலாற்றாசிரியரும் (சில தமிழ்நாட்டு வரலாற்றாசிரியரும்) மேலைநாட்டாரும் ஒதுக்குகிறார்களே? அது என்னவிதமான ஆய்வு? - என்ற வியப்பும் நமக்குள் எழுகிறது.
காப்பியத்தின் முடிப்புச் செய்திகள்:
கதை விரைவாக வஞ்சிக்கு மாறுகிறது. ஒரு நாள் மாலை, வேண்மாளோடு வஞ்சி அரண்மனை நிலாமுற்றத்தில் பறையூர் சாக்கையன் கூத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது (கொடுங்கோளூர் - எர்ணாகுளம் இடையே இன்றைக்கும் பறையூர் உள்ளது. சாக்கைக்கூத்தின் இன்னொரு வளர்ச்சி தான் இந்தக் காலத்துக் கதகளியும், மோகினியாட்டமும். இதைப் படித்த பிறகும் செங்குட்டுவன் இருந்தது குடவஞ்சியில்லை, கொங்கு வஞ்சி என்று சொல்லச் சில ஆய்வாளருக்கு எப்படி மனம் வருகிறது?) நீலன் வந்து, ஆரிய அரசரோடு நாகநாட்டுச் சோழனையும் பாண்டியனையும் பார்த்த கதையைச் சொல்லுகிறான். செங்குட்டுவனின் சினம் கூடிப்போகிறது.
கூத்துப் பார்க்கும் போது கூடவிருந்த மாடலன் செங்குட்டுவனின் சினம் தணித்து :”ஆட்சியேற்று 50 ஆண்டுகள் ஆனபின் இன்னும் வேள்வி செய்யவில்லையே?” என்று கேட்கிறான். இந்த ஒரு செய்தியால், நடுகற் காலத்தில் செங்குட்டுவனின் அகவை 70-75 ஆக இருந்திருக்கலாம் என்று நாம் ஊகிக்க இடம் தருகிறது. இந்தச் செய்தியை பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்துப் பதிகம் அவன் ஆட்சிக்காலம் சொல்லுவதன் மூலம் உறுதி செய்கிறது(90).
அதுவரை வேள்வி செய்யாத சேரர்கள், அடுத்தடுத்து ஏதோவொரு காரணத்தால் வேள்வி செய்யும் படி தூண்டப்பட்டிருக்கிறார்கள், அவர்களும் அதற்கு இணங்கியிருக்கிறார்கள். இந்தக் கேள்வியும் ஆய்வு செய்யப்படவேண்டியதே. வேதநெறி அவ்வளவு தூரம் அவர்களை ஆட்படுத்தியதா? கொஞ்சங் கொஞ்சமாக மற்ற நெறிகளின் தாக்கம் தமிழ்நாட்டில் குறைந்தது போலும். பல்லவர் காலம் வரும் போது வேதநெறியோடு பிணைந்து கலவையான சிவநெறியும், விண்ணவ நெறியுமே இங்கு ஆட்சி செய்யத் தொடங்கின. மாடலன் கூற்றில் செங்குட்டுவனின் வெவ்வேறு பங்காளிகளைப் பற்றிய கூற்றும் வருகிறது(91). வேத வேள்வி செய்து முடிந்தபின், வஞ்சிப் புறநகர் ஆற்றங்கரையில் வேளாவிக்கோ மாளிகையில் இருந்த ஆரிய அரசரையும், மற்றோரையும் வில்லவன் கோதைமூலம் சேரன் சிறையிருந்து விடுவிக்கிறான். குடிமக்களின் வரியைக் குறைக்குமாறு அழும்பில் வேளுக்கு ஆணையிடுகிறான்.
அதன் பின்னால் பத்தினிக் கோட்டம் சென்று, கைவினை முற்றிய கண்ணகியின் தெய்வப் படிமத்தைப் பார்க்கிறான். பார்த்து, மனம் களித்து, ”பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி, வேள்வியும் விழாவும் நாள் தொறும் வகுத்து, கடவுள் மங்கலம் செய்கு” என்று ஆணையிடுகிறான். நிகழ்வுகள் எல்லாம் சடசடவென்று நடைபெறுகின்றன. இடையில் மலைப்பாதை வழி எந்தப்பயணமும் சேரன் மேற்கொண்டதாய்ச் சொல்லப்படவில்லை.
நினைவிருக்கிறதா? முன்னால் கண்ணகி பற்றிய செய்தி அறிந்த போது ஆற்றைக் கடந்து செங்கோட்டின் மேல் ஏதோவொரு இடத்தில் தங்கியிருந்தான். அவ்விடம் செல்லச் சேரனுக்குச் சிலநாட்கள் கூடப் பிடித்தன. அது போன்ற பயணம் இங்கு விவரிக்கப்படவில்லை. இந்தக் காதையில் எல்லாமே அடுத்தடுத்த செய்திகளாக, அரண்மனையில் இருந்து அருகே ஊருக்குள் நகர்ந்த வண்ணமே விவரிக்கப்படுகின்றன.
இதைக் கூர்ந்து கவனித்தால், கண்ணகி. கோயில் என்பது குடவஞ்சியில் அமைந்ததுதான், எங்கோவொரு மலையில் அமைந்ததல்ல, என்று புரிந்துபோகும். இதை நிறுவுவதற்கு நடுகற் காதை 226-234 ஆம் வரிகளில் வரும் ஒரு விவரிப்புப் போதும்(92). அதோடு எந்த அரசனும் இதுபோன்று கோயிலெழுப்பும் செயலைத் தன் தலைநகரிற் செய்வானேயொழிய நாட்டு எல்லையிற் செய்ய மாட்டான். [இன்றைக்கு தமிழக எல்லையில் இருக்கும் மங்கலாதேவிக் கோட்டம் பின்னால் எழுந்த எத்தனையோ கண்ணகி கோயில்களில் ஒன்றாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அதோடு அங்கே உடைந்து கிடக்கும் படிமங்களும் கேரளபாணிச் சிற்பங்களை நமக்கு உணர்த்தவில்லை.
அடுத்து வாழ்த்துக் காதையில், தேவந்தி, கண்ணகியின் காவற்பெண்டு, கண்ணகியின் அடித்தோழி, ஐயை ஆகியோர் பத்தினிக்கோட்டம் வந்த செய்தி சொல்லப்படுகிறது; அவர்களில் மூவர் அழுது அரற்றியதும் சொல்லப்படுகிறது. ”தென்னவன் தீதிலன்; நானவன் மகள்” என்னும் கண்ணகியின் வான்குரல் எழுகிறது. இந்தகைய முடிப்பு நாட்டுப்புறத் தொன்மங்களில் அப்படியே உண்டு.
”கண்ணகியைப் பாண்டியன் மகளாக உருவகப்படுத்தும் கதைக்கூறு ”கோவலன் கதை”என்னும் நாட்டுப்புறக் கூத்திலும்(93), ”சந்திராவின் பழிவாங்கல்” என்ற கன்னட நாட்டுப்புறக் கதையிலும்(94) உண்டு. இது ஒருவிதமான கருத்தீடு. இது உண்மையாய் இருக்கத் தேவையில்லை. கதை நாயகியை எதிரியின் மகளாகச் சொல்வதும், குழந்தையை ஆற்றில் விடுவதும், அதை இன்னொருவர் கண்டுபிடித்து வளர்ப்பதும், உலகெங்கும் காலகாலமாய் பயன்படுத்தப்படும் புனைவு உத்திகளாகும். யூத நெறியாளர் மோசே குழந்தையாய் இருந்தபோது நீல நதியாற்றில் இதுபோலக் கூடையில் வைத்து மிதந்து வந்ததும், எகிப்திய அரசனால் பின்னால் இராமசிசோடு சேர்த்து வளர்க்கப்படுவதும் இங்கு நினைவிற்கு வருகின்றன. இதுபோன்ற கதையுத்திகள் யாரோ ஒரு கதையில் நடந்திருக்கலாம். ஆனால் அவை மக்கள் மனத்தை பெரிதும் கவர்ந்திருப்பதால், அதே யுத்திகளை வெவ்வேறு கதைகளில் புனைவாளர் இடைச்செருகிறார்கள். ”கண்ணகி பாண்டியன் மகள்” என்னும் பாமர மக்களின் கருத்தீட்டைப் புறம் தள்ளவேண்டாம் என்று இளங்கோ வாழ்த்துக் காதையிற் சேர்த்திருக்கலாம். இளங்கோவின் குறிப்பில் இருந்தே அதற்குப் புனைவுகள் சேர்த்து, மேலே சொன்ன நாட்டுப்புறக் கூத்துக்கள் எழுந்திருக்கலாம். இந்தக் கூத்துக்கள் மிக மிகப் பிற்காலத்தன. [எவ்வளவு முனைந்து கணித்தாலும், இவை 16 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாற் போகாதவை.] இவற்றை வைத்துக் கொண்டு சில ஆய்வாளர் சிலம்பின் காலத்தைப் பிற்காலத்திற்குத் தள்ளமுயல்வது “பேரன் தாத்தனுக்கு முன்னோன்” என்று சொல்வதைப் போன்றது. இது போன்ற முயற்சிகளைச் சரியான ஆய்வாளர் புறந் தள்ளுவர்.
ஈற்றுவாய்:
இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் தான்.
"சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர் வையாபுரியாரிலிருந்து, இக்கால இடதுசாரிகள் வரை பலருண்டு. பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் கூடச் சிலம்பின் காலத்தைப் பின் தள்ளுவார்கள்.) செங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார்? வடபுலத்து மன்னர்கள் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார்? சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் அப்போது மகதத்தை ஆண்டார்கள்? அந்தக் காலத்தில் பெரும்நகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா? இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல் எடுத்தான் என்றால், கிட்டத்தட்ட அந்த இடம் எங்கிருக்கலாம்? வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர் கன்னர் யார்? நூற்றுவர் கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது? செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்?"
இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயன்றிருக்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.) நாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே?) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் "நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்? அவர் தவிர்க்க முடியாதவரா?" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது தான். [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.]
மொத்தத்தில் சிலம்பை ஆழ்ந்து படித்தால், பெரும்பாலும் சிலம்புக் கதையின் காலம் கனகர் ஆட்சிக்குச் சற்று முன், கி.மு.75-80 யை ஒட்டியிருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது. வெறுமே வரந்தரு காதையையும், மகாவம்சப் பட்டியலையும் வைத்துக் கொண்டு உள்ளிருக்கும் முரண்களைப் பார்க்காது முதலாம் கயவாகுவின் காலமாய் கி.பி.177-யை வைத்துக் கொண்டு அதையே சிலம்பிற்கும் காலமாய்ச் சொல்லுவது சற்றும் பொருத்தமில்லை.
இன்னும் ஒரு கேள்வி மீதமிருக்கிறது. ”சிலம்புக் கதையின் காலம் கி.மு.75-80 ஆய் இருக்கலாம். சிலம்பு என்னும் காப்பியத்தின் காலம் அதற்கும் பின்னால் சில நூற்றாண்டுகள் கழித்து இருக்கக் கூடாதா?” இதை அடுத்த கடைசிப் பகுதியிற் பார்ப்போம்.
எடுகோள்கள்:
87. நீர்ப்படை காதை 196.
88. பதிற்றுப்பத்து 5 ஆம் பத்துப் பதிகம், அகநா.125:18-21
89. வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கிக்
கவடி வித்தியக் கழுதையேர் உழவன்
குடவர் கோமான் வந்தான். . .
நீர்ப்படைக் காதை.225-227
90. பதிற்றுப் பத்து 5 ஆம் பதிகம். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப் பாட்டு. பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு வாரியையும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தான் அக் கோ. கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான். தன் மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்தது என்றவுடன் அவனைக் கொடை கொடுத்தான் என்று பொருள் கொள்ளக் கூடாது. சிறுவன் குட்டுவன் சேரலைப் பரணரிடம் அளித்து உரிய காலம் படிப்பித்துத் தரும்படி “இவன் நின் அடைக்கலம்” என்று கூறியதாகவே பொருள் கொள்ளவேண்டும். செங்குட்டுவன் பத்தினிக்குக் கல் எடுத்தபோது பெரும் முதுமையடைந்திருக்க வேண்டும். இங்கே பரணர் பாடியது குட்டுவன் சேரல் சிறுபிள்ளையாய் இருந்த போது என்பதால், பரணரின் பாடலில் இமயத்திற் கல்லெடுத்த செய்தி வராதது இயற்கைதான். பதிகம் பாடப்பட்டது வடசெலவிற்குப் பின் இருந்திருக்க வேண்டும் என்பதும் இந்தத் தருக்கத்தாற் புலப்படுகிறது.
91. கடற் கடம்பு எறிந்த காவலன் – நெடுஞ்சேரலாதன், நடுகற் காதை 135
விடர்ச்சிலை பொறித்த விறலான் - நெடுஞ்சேரலாதன், நடுகற் காதை 136
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேல்நிலை உலகம் விடுத்தோன் – செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 137-138
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கு எனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவன் - யாரென்று தெரியவில்லை, நடுகற் காதை 139 -140
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோன் - யாரென்று தெரியவில்லை, நடுகற் காதை 141-142
மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி
அகப்பா எறிந்த அருந்திறல் - செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 143-144
உருகெழு மரபின் அயிரை மண்ணி
இருகடல் நீரும் ஆடினோன் – செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 145-146
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் – இளஞ்சேரல் இரும் பொறை, நடுகற் காதை 147-148
92. இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமயச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாள் தொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கு என ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு என்
- நடுகற் காதை 226-234
93. ”கோவலன் கதை” பதிப்பாசிரியர் முனைவர் சூ. நிர்மலாதேவி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003. சிலம்பினின்றும் மாறுபட்ட நிகழ்ச்சிகள் இதில் விவரிக்கப் படுகின்றன. பாண்டியன் தேவியாகிய கொப்புலிங்கி (<கோப்பெருங்கி) பெற்றெடுத்த மகள் கண்ணகி என்றும், காளியே கண்ணகியாக வந்து பிறந்தாள் என்றும், சோதியர் அறிவுறுத்தியபடி குழந்தை ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டு வையையாற்றில் விடப்பட்டது என்றும், மாசாத்துவானும் அவன் மைத்துனன் வண்ணமாலைச் செட்டியும் (மாநாய்கன்) பெட்டியைக் கண்டெடுத்து, வண்ணமாலைச்செட்டி கண்ணகியை எடுத்து வளர்த்தான் என்றும் கதை போகும். மாசாத்துவான் மனைவி வண்ணமாலை என்று சொல்லப்படுவாள். இங்கும் முறை மாப்பிள்ளை/பெண் உறவு கண்ணகிக்கும், கோவலனுக்கும் சொல்லப்படுகிறது. முழுவிவரிப்பையும் அந்தக் கதையுள் கண்டு கொள்க. கோவலன் கதை என்பதைப் 12-13 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த புகழேந்திப் புலவர் இயற்றினார் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். ஆனால் கொச்சி, கொல்லம் போன்ற துறைமுகங்களைப் பற்றிப் பேசும் கோவலன் கதை அவ்வளவு முந்திய காலமாய் இருக்க வாய்ப்பில்லை.
94. ”சந்திராவின் பழிவாங்கல்” என்ற கன்னட நாட்டுப்புறக் கதை The Cilappatikaaram - The tale of an anklet”, Penguin Classics, 2004, என்ற பொத்தகத்தில் பக்கங்கள் 321-326 இல் சொல்லப்படும். இந்தக் கதை முன்னாற் சொன்ன கோவலன் கதையில் இருந்தும் சிறிது வேறுபடும்.
அன்புடன்,
இராம.கி. .
Friday, May 21, 2010
சிலம்பின் காலம் - 10
செங்குட்டுவன் வடசெலவு பொருந்துங் காலம்:
முன்னர் சொன்ன செய்திகளில், சுங்கரின் நிலப்பரப்புச் சுருக்கத்தையும், அதே போல நூற்றுவர் கன்னரின் நிலப்பரப்புச் சுருக்கத்தையும், கூடவே மகதத்தை வெற்றிகொள்ள கன்னர் வேட்கை கொண்டதையும், அவர் செல்வாக்கையும் பார்க்கும் போது, செங்குட்டுவனின் வடசெலவுகள் இலம்போதரக் கன்னன் காலத்தில் (கி.மு.87-69), சுங்கன் தேவபூதி காலத்தில், (கி.மு.86-75 இக்கு நடுவில்), கனகர் ஆட்சி (கி.மு.75-26) தொடங்குமுன், கி.மு.80 அளவில் நடந்திருக்கலாம் என்றே எண்ணவேண்டியிருக்கிறது. அப்படியோர் இடைவேளையே செங்குட்டுவனின் வடசெலவுச் செய்திகளுக்குச் சரியான இடங் கொடுக்கிறது.
இலம்போதரக் கன்னன் காலத்தில் (கி.மு.87-69) நூற்றுவர் கன்னர் வலிமை குன்றியிருந்ததால் தான், தெற்கேயிருந்து சேரன் படையெடுத்து வந்தபோது, அவனுக்கு உதவி செய்து தம்நிலையைச் சீர்படுத்திக் கொள்ள முயன்றிருக்கின்றனர். “கல்லெடுப்பதற்கு நீங்கள் போகவேண்டுமா? உங்கள் சார்பாக நாங்கள் போரிட்டுக் கல்லெடுத்துத் தரமாட்டோமா?” என்று செங்குட்டுவனிடம் கன்னர் சொல்லச் சொன்னதாகச் சஞ்சயன் பேசுவது ஒருவகையிற் பார்த்தால் இருபுலப் பேச்சாகும் (diplomatic speech). அந்த நேரத்தில் சேரருக்கும் சிறியவராய் குறைவலிமை கொண்டிருந்த நிலையில், கன்னர் இப்படிப் பேசாமல் வேறு எப்படிப் பேசுவர்? அதனாற்றான், பல்வேறு பொருள்களும் படையும் சேரனுக்குக் கொடுத்து உதவிக்குப் போயினர் போலும். செங்குட்டுவனுக்கு நூற்றுவர் கன்னர் கொடுத்தவை கால்கோட்காதை 128-140 வரிகளிற் பேசப்படுகின்றன(72).அதோடு தம் உள்ளூர ”சேரன் வடபுலத்திற்கு வரவேண்டும்; போரிட வேண்டும்; சுங்கரும், அவருக்கு அமைச்சராய் இருந்த கனகரும் வலிகுன்ற வேண்டும்” என்ற விழைவு கன்னருக்கு இருந்திருக்கலாம். இல்லையெனில் காட்சிக் காதையில் வரும் இந்த நிகழ்வைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.
படம் 5:செங்குட்டுவனின் வடசெலவுப் பாதை.
செங்குட்டுவன் வடசெலவு படம் 5 இல் இருப்பது போல், பெரும்பாலும் குடவஞ்சியில் தொடங்கி, கடலொட்டி நகர்ந்து, வயநாட்டுச் சாரலில் ஏறி (80 கி.மீ), நீலமலை தாண்டி, (இது வரை சிலம்பு பேசுகிறது(73)). முன்னால் முதலாங் கரிகாலன் படையெடுத்த போது சென்ற பாதையிலேயே, குடகு, அதியர், கங்கர் நாடு வழி (ஐம்பொழில் ஊடாக, வடுகவழி மேற்கு) கருநாடு கடந்து, படித்தானம் (கன்னரின் தலைநகர்) பிடித்து தக்கணப் பாதை வழியாகப் மகேசர், உஞ்சை, பில்சா, சாஞ்சி, கோசாம்பி கடந்து, முடிவில் மகதத்தில் முடிந்திருக்கும்.
அந்தக் காலத்தில் குடகு, அதியர் நாடுவழி ஐம்பொழில், படித்தானம் போக்காமல் வடக்கே செல்லமுடியாது. ஏனென்றால், இன்னொரு மாற்றான கலிங்க வழி, அடர்காடுகளின் காரணமாய், பல நூற்றாண்டுகள் கழித்தே ஏற்பட்டது. அது பிற்காலப் பேரரசுச் சோழர் காலத்தது. கலிங்கம் என்ற நாடு கடற்கரையை ஒட்டிப் பாலூரைத் (இந்தக் கால ஒரியா மாநிலத்துப் பாரதீப்பைத்) தலைநகராய்க் கொண்டு இருந்தது. அதன் மேற்கு எல்லை காடுகளால் நிறைந்தது. அதன் தெற்கு எல்லை (இன்றைய ஆந்திர மாநிலத்தின் நெய்தல் நிலம் தவிர மற்றவை எல்லாமே) அடர்ந்த முல்லையும் குறிஞ்சியும், பாலையுமாய் இருந்ததால், தமிழர்களின் வடநாட்டுத் தொடர்பே பெரும்பாலும் கருநாடகம் வழியாகத்தான் இருந்தது
கருநாடகமும் சாதவா கன்னரின் அரசிற்குள் அடங்கியதே. கருநாடக மக்கள் கொடுங் கருநாடராய்ச் சிலம்பிலும் அதற்குப் பின்வந்த நூல்களிலும் சொல்லப் படுகின்றனர். கொடுமை என்பதற்கு இந்தக் காலப் பொருள் கொள்ளக் கூடாது. அவர் மொழி கொடுந்தமிழாய் இருந்ததையே அந்தச் சொற்றொடர் குறிக்கிறது. பழங் கன்னடம் என்பது பழந்தமிழுக்கு நெருங்கிக் கொடுந்தமிழாய் இருந்தது. கன்னடத்தின் இப் பழநிலையை மறுப்பது தமிழருக்கும் வடபுலத்தாருக்கும் இருந்த தொடர்பையே மறுப்பதாகும்.
இடைப்பட்ட அவந்தியும், கன்னரின் வீச்சும்:
படித்தானத்திற்கு அடுத்த பெரிய ஊர் உஞ்சை. அவந்தியின் தலைநகர். சிலம்பின் படி இதை ஆண்டவர் “பாலகுமாரன் மக்கள்” எனப்படுவர்(74). இவர் யார் என்றறிவது அப்படியொன்றும் கடினமானதல்ல. கி.மு.550 களில் நடந்த உதயணன் கதை இந்தியாவெங்கும் பெரிதும் பேர் பெற்றது. இது நெடுங்காலம் பொதுமக்களிடையே பெருவழக்கில் இருந்தது. [குணாட்டியரின் ’ப்ருஹத் கதா’ பிசாச மொழியில் எழுதப்பட்டது. கங்கன் துர்விநீதன் கி.பி.570-580 இல் இதைச் சங்கதத்தில் எழுதினான். கொங்குவேளிர் இதைப் பெருங்கதை என்று தமிழில் ஆக்கினார்.]
இந்தக் கதையில், வச்சிர நாட்டு உதயணன் பல்வேறு சூழ்ச்சிகள், போர்கள், நிகழ்ச்சிகளின் பின் அவந்தி நாட்டு வாசவதத்தையை மணப்பான். [ஞாவகம் வருகிறதா? முதற் கரிகாலன் காலத்தில் அவந்தி சோழனுக்குத் துணையாய் இருந்தது. மகதம் சண்டையிட்டது. வச்சிரம் சண்டைபோடாமலே அடிபணிந்தது.] அவந்தியின் அரசன் பெருத்தோதன் (பிரத்யோதனன்). அவனுடைய மக்கள் ”பாலகன், பாலகுமாரன், கோபாலகன்.”என்று அழைக்கப்படுவர்(75). பின்னால் பாலகுமாரன் குடியே அவந்தியை ஆளும். ”பாலகுமாரன் மக்கள்” என்ற குறிப்பு இப்படியெழுந்தது தான்.
செங்குட்டுவனின் வடசெலவுக் காலத்தில் அரசாண்ட அரசன் பெயர் தெரியவில்லை. ஒருவேளை கி.மு.80 களில் அது கன்னரின் மிரட்டலுக்கு ஆட்பட்டதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் கி.மு.74-61 இல் அவந்தியின் (மாளுவத்தின்) அரசன் ”கருதவில்ல மகேந்திராதித்யன்”என்று செயின ஆவணங்கள் பதிவு செய்யும்(76).
உஞ்சை தாண்டி, கோசாம்பி வழியே மகதம் நுழைந்த செங்குட்டுவன் கங்கையின் தென்கரையில் காசிக்கு அருகிலேயே ஆற்றைக் கடந்திருக்க வேண்டும். அவன் பாடலிப் பட்டணம் போனதாய் சிலம்பின் எங்கணும் அறியமுடியவில்லை. முன்னால் அவன் தாய் புனித நீர் ஆடியது கூடக் காசியாய் இருக்கலாம் இரண்டாம் முறையும் அதற்கருகிலேயே கங்கையைக் கடந்திருக்கலாம் என்பது ஒரு கருதுகோளே. ஆற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் ஒரு வங்கப் பரப்பையே (படகுப்பரப்பையே) ஏற்பாடு செய்கிறார்கள். கங்கையாற்றின் அகலம் பாடலி அளவிற்கு காசியிற் பெரிதில்லை. ஆற்றின் வடமருங்கில் கன்னர் சேரரை எதிர்கொள்ளுகிறார்கள் [கன்னரின் வீச்சு கங்கையின் வடகரை வரை இருந்திருக்கிறது என்றால் சுங்கர்/கனகரின் வலிமை பெரிதும் அங்கு குன்றியிருக்க வேண்டும்.] அந்த நாடும் கழிந்து, இன்னும் வடக்கே போகிறார்கள்; பகைப்புலம் வந்துவிடுகிறது. எனவே கங்கையைக் கடக்குமிடம் சுங்கர்/கனகர் கையில் இல்லை. இத்தனை செய்திகளும் கால்கோட் காதை 175-181 ஆம் வரிகளில் தெரிய வருகிறது(77).
கனகனும் விசயனுமா? கனக விசயனா?:
முன்னே சொன்னது போல், செங்குட்டுவன் படையெடுப்பின்போது சுங்கன் தேவ பூதிதான் பெரும்பாலும் மகத அரசனாக இருந்திருக்கலாம்(78). இருந்தாலும் சுங்கனின் தலைமை யமைச்சனாகக் கனக விசயன் என்ற குறுநில மன்னன் இருந்திருந்தான் என்பதையும் பார்த்திருந்தோம். இனிக் கனக விசயன் என்பவன் ஒருவனா, இருவரா என்ற ஐயப்பாட்டிற்கு வருவோம்.
தமிழகப் புரிதலில் சிலம்பையொட்டிய வரலாற்று ஆய்வுகள் புதிதாக ஏற்படாததால், 60, 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த புரிதலில் கனகர், விசயர் என்று இரண்டு பேராகவே பலரும் சொல்லிவருகிறார்கள். அரச குலத்தவரைக் குப்பன் சுப்பன் என்று ஒற்றைப்பெயரால் அழைப்பது வரலாற்றில் யாருக்கும் பழக்கமில்லை சேரன் செங்குட்டுவனை சேரன், செங்குட்டுவன் என்று இரண்டாகப் பிரிப்போமோ? பாண்டியன் நெடுஞ்செழியனை பாண்டியன், நெடுஞ்செழியன் என்று இரண்டாய்ப் பிரிப்போமோ? மகதத்தை ஆண்ட சுங்கனுக்கும், அவன் அமைச்சன் கனகனுக்கும் குடிப்பெயர் ஒன்றும், இயற்பெயர் ஒன்றும் தனித்தனியாய் இருக்காதோ?
சிலம்பில் இரண்டு இடங்களில் கனகனும் விசயனும் என்று உம்மை சேர்த்தும்(79) 4 இடங்களில் கனக விசயன் என்று உம்மை சேர்க்காமலும்(80) இந்தப் பெயர் குறிப்பிடப்படும். உம்மை சேர்த்த இரு இடங்களிற் கூட உம்மையை எடுப்பதனால் வாக்கிய அமைப்போ, சீரமைப்போ, தளையோ ஒன்றும் மாறுபடாது. இந்த இரு இடங்களும் ஏன் படியெடுப்பின் பிழைகளாக இருக்கக் கூடாது?
தவிர கனகவிசயரின் கதிர்முடி ஏற்றியது அவ்வளவு பெரிய கல்லா, இரண்டு பேர் தூக்க? பொதுவாய்க் கேரளப் படிமங்களின் உரு சிறிதாக ஒரே கல்லிலான புடைப்புச் சிற்பமாகவே இருக்கும். [இன்றைக்கும் கேரளக் கோயில்களைப் பார்த்தால் இது விளங்கும். அவர்களின் ஊருலவர் (உர்ச்சவர்) திருமேனியும் நம்மூரைப்போல நாலுபேர் தூக்கும்படிப் பெரிதாக இருக்காது. ஒருவர் தன்தலையிலோ, அன்றி இரு உள்ளங்கைகளிலோ வைத்துக் கொள்ளும்படி சிறிதாகவே இருக்கும். பெருந்திருமேனிகளைக் கையாளுவது அவர்கள் பழக்கம் அல்ல.) இற்றைத் தமிழ்நாடு போல பெரிய கருங்கற்களில் பெருத்த படிமங்களைச் செதுக்குவது அங்கு மரபல்ல.
பல்லவர், பேரரசுச் சோழர், பிற்காலப் பாண்டியர் காலத்துக் கோயில்களின் சிற்பங்களைப் பார்த்துப் பார்த்துச் சிலைகள் என்றாற் பெரிதாக இருக்கும் என்றெண்ணும் நிலைக்கு நாம்தான் வந்து விட்டோம். ”கடவுள் எழுதவோர் கல்”.என்னும் போது அது சிறிய புடைப்புச் சிற்பமாகத்தான் இருக்கக் கூடும் என்று நாம் எண்ணினால் என்ன? தவறா? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கும் சிற்பங்கள் சிறியதாக இருந்திருக்கக் கூடாதா? அதோடு, இமயமலையிலிருந்து கருங்கற்கள் எடுத்துவருவதற்கு வாய்ப்புக்கள் குறைவு.
[கருங்கற்கள் இந்தியத் தீவக்குறையிலே தான் சிலை செய்யப் பயன்படுகின்றன. வடக்கே கருங்கற்கள் அல்லாதவையே பயன்படுத்தப் படும்.] கருங்கல் அல்லாத ஒன்றை கிட்டத்தட்ட 15, 20 அயிர எடை (கிலோ எடை) அளவுள்ள கல்லை ஒருவரே தம் தலையிற் தூக்க முடியும். கல் தூக்கி வந்தது ஒருவர் தலையிலா? இருவர் தலையிலா? என்பது கள ஆய்வின் மூலம் செய்து பார்த்து முடிவு செய்ய வேண்டிய கேள்வி.}
ஒருவரா, இருவரா என்ற கேள்விக்குச் சான்றளிப்பது பதிற்றுப் பத்து 5 ஆம் பத்தின் பதிகமே(81). தெள்ளத் தெளிவாக ஆரிய அண்ணல் என்று ஓர் அரசனையே சொல்லும். எந்த அரசன் போரை முன்னின்று நடத்தினானோ, அவனைத்தானே ‘வீட்டி (வீழ்த்தி) ” என்று சொல்லமுடியும். எனக்குப் புரிந்த வரையில் கனகவிசயன் என்பவன் ஒருவன் தான்.
அன்றைக்கு நடைமுறையில் மகத அரசன் கனகனே; சுங்கன் தேவபூதி ஒரு பாவை போலத் தான் பாடலியிலோ, அன்று கோசம்பியிலோ கொலுவீற்றிருந்தான். அவன் போரில் கலந்து கொள்ளாது மற்ற பங்காளிகளையும், சுற்றியுள்ள வட அரசர்களையும் போரில் இறக்கியிருக்கலாம். கனகவிசயன் போரில் தோற்றபின், கல்லைச் சுமந்து சேரனோடு வர, உடன் போரிட்ட வடபுலத்தரசரை போர்க்கள முடிவில் சேரனே விடுவிக்கிறான். அதற்குப் பின்னால் சுங்கனின் ஆட்சியில் விசயனின் மகன்(?) வசுதேவன் அமைச்சனாகி கி.மு.75-இல் சுங்கரிடமிருந்து ஆட்சியைப் பிடித்துக் கொள்கிறான் போலும்(82). இதுபோன்றதொரு இயலுமையே வரலாற்றிற் தெரிந்த உண்மைக்கும், சிலம்பில் வரும் காட்சிகளுக்கும் பொருத்தம் காட்டுகிறது.
கனகரோடு சேர்ந்த வடதிசை மன்னவர்:
கண்ணகிக்குக் கல் எடுப்பதற்காகப் போர் நடப்பதற்கு முன்னால், சேரனின் முதற் படையெடுப்பிற்குப் பின்னால், நடந்த ஒரு விருந்தில் வடபுலத்து அரசர் (அவருள் அவந்தி அரசரும், மற்றவரும், கனக விசயனும் அடக்கம்) தமிழரை இகழ்ந்தது சிலம்பில் பேசப்படுகிறது83.
கனகரோடு சேர்ந்து பொருதிய வடதிசை மன்னவரைக் கால்கோட் காதையின் 182-192 ஆம் வரிகள் உரைக்கும்(84). ஆனால் இந்தப் பட்டியலிலும் எது குடிப்பெயர், எது இயற்பெயர் என்ற தடுமாற்றம் உண்டு. ”சுவடிப் பெயர்ப்புப் பிழைகள் இங்குமுண்டா?” என்ற கேள்வியும் எழுகிறது
”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்” என்று அடுத்தடுத்துப் பெயர்கள் எழும்பொழுது ”உத்தர விசித்திரன், ருத்ர பைரவன்” எனச் சொல்லலாமா? அதே போல “சித்திரன்” என்பவன் யார்? சிங்கன் சுங்கனாய் இருக்கலாமோ? [இது போன்ற சுகர, சிகரக் குழப்பங்கள் சிங்கள அரசர் பெயர்ப்பட்டியலிலும் உண்டு. தமிழில் ஒருவிதமாயும் , பாலியில் இன்னொரு விதமாயும் வரும்] சிங்கனோடு சித்ரனா? தனுத்ரனா? ”சிவேதன்” யார்? அரசர்க்கான மரபில் குலப்பெயரும் தனிப்பெயரும் சேர்ந்தல்லவா வரும்? - என்ற கேள்விகளும் எழுகின்றன. [த்ர’என்ற ஒலிக்கூட்டு வடநாட்டு அரசர் பெயர்களின் பெரிதும் உள்ளதே. இந்தப் பெயர்கள் வடபாற் பெயர்கள் தான்] இவர்களை அடையாளம் காணும் பணி இன்னும் மீந்து நிற்கிறது. தேவபூதியை தனுத்ரபூதி என்றோர் ஆவணம் சொல்லுகிறதாம். இதையும் ஆய வேண்டும். தேவபூதியின் தந்தை பாகபத்ரன் பற்றியும், சுங்கர்/கனகர் காலத்து வடபுல அரசர் குறிப்புக்களையும் ஆயவேண்டும்.
”ஒருபகல் எல்லையில் ஆரியப் படையைச் செங்குட்டுவன் சாய்த்தான். கனக விசயர் 100 கடுந்தேராளரொடு களம் புகுந்தனர். தோற்றபின் துறவி வேடம் பூண்டுத் தப்ப முயன்று பிடிபட்டனர்” என்பவை அடுத்துவரும் செய்திகளாகும். துறவி வேடம் பூண்டு தப்பமுயன்றதில் ஒன்றும் வியப்பில்லை. காசிக்கருகில் சாம்பற் பூசிய துறவிகள் இன்றைக்கும் கணக்கற்றுத் திரிவர். காசிக்கு அருகில் தப்புதற்கு அந்த வேடம் மிகவும் எளிய வழியாகும். இவர்கள் இப்படித் தப்பியதே, போர் ஒருவேளை காசிக்கு அருகில் நடந்திருக்குமோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது. முன்னாற் சொன்னது போல், வடபுலத்தில் காசிதான் முதலில் எழுந்த பெரு நகரம். அதற்கு அப்புறம் தான் மற்ற நகரங்கள் அங்கு தோன்றின.
இந்தப் போருக்குப்பின் செங்குட்டுவன் கங்கைத் தென்கரையில் பாடிகொள்கிறான். வில்லவன் கோதையோடு படைகளை மேலும் வடக்கே அனுப்பி இமையத்தில் இருந்து கல்லெடுத்துவரச் செய்கிறான்(85). ஆனால் அப்படிப் போகும் போது போர் ஏதும் நடந்ததாய்த் தெரியவில்லை. கனக விசயனின் முடிமேல் கல்லேற்றிக் கொண்டு வந்து அதைக் கங்கையில் நீர்ப்படை செய்கிறார்கள்(86).
அதன்பின் தெள்ளுநீர்க் கங்கையின் தென்கரையில் ஆரிய மன்னர் அழகுற அமைத்த பாடியில் இருக்கும் போது மாடலன் வருகிறான். [இன்றைக்கும் தெள்ளுநீர்க் கங்கை காசிக்குத் தென்கரையில் தான் என்பது வியக்கத் தக்க செய்தி. வடகரையில் இருக்கும் சுடுகாட்டுக் கரைகளைத் தவிர்த்து, சாம்பல் பூச்சிதறல் இல்லாமல், உருப்படியாக நீராட வேண்டுமென்றால் படகில் ஏறித் தென்கரைக்குத்தான் வரவேண்டும். அங்கு தான் சோலைகளும் தோட்டங்களும் உண்டு. தென்கரை அழகு அன்றைக்கும் இருந்தது வியக்கத்தக்க ஒற்றுமைத் தொடர்ச்சியாகும். வாரணசி நகருக்கு வடக்கே இன்றும் பறந்தலைகள் தான். முற்காலத்திற் பறந்தலைகளே போர்க்களங்களாய் ஆயின. போர்க்களம் எது என்றறிவது அங்குள்ள நிலவரைவை (geography) ஆய்வு செய்வதிற்றான் தெளிவாகும்.
எடுகோள்கள்:
72. நாடக மகளிர் ஈரைம்பத்து இருவரும்
கூடிசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை
நண்ணிய நூற்றுவர் நகைவேழம்பரும்
கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பத்திற்று இரட்டியும்
கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும்,
ஐயீராயிரங் கொய்யுளைப் புரவியும்
எய்யா வடவளத்து இருபதினாயிரம்
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்
சஞ்சயன் முதலாத் தலைக்கு ஈடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவரும்
சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப
- கால்கோட் காதை 128-140
73. தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும்
வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத
மலைமுதுகு நெளிய நிலைநாடு அதர்பட
உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு
ஆலும் புரவி யணித்தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும்புறத்து இறுத்து ஆங்கு
- கால்கோட் காதை 80-85
74. பால குமாரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக்
கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க தாம் எனச்
- கால்கோட் காதை 159-165
75. பாலகுமாரன் - பெருங்கதைக் குறிப்பு. ”கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை - பகுதி 1. எடுவிப்பு: டாக்டர் உ.வே.சா, உ.வே.சா. நூல்நிலையம், 2000, கீழே வருவன அப்பொத்தகத்தில் வரும் அருஞ்சொல்லகராதிக் குறிப்புகள் பக்கங்கள் நூலில் வரும் இடங்களைக் குறிக்கின்றன.
[பிரச்சோதனன் = ஒரு மகாச் சக்கரவர்த்தி; வாசவதத்தையின் தந்தை. இவன் நாடு அவந்தி; இராசதானி உச்சைனி நகர்; உதயணனை வஞ்சத்தாற் பிடித்துச் சிறாஇயில் வைக்கும்படி செய்தவன்; இவன் தேவியர் பதிறாயிரவருள் வாசவதத்தையைப் பெற்ற நற்றாயாகிய பதுமகாரிகை என்பவள் முதன்மை வாய்ந்தவள். இவனுக்குப் பாலகன், பாலகுமாரன், கோபாலகன் என்பவர் முதலிய குமாரர்கள் பலர் உண்டு.
பாலகன் = பிரச்சோதனன் புதல்வர்களுள் ஒருவன், பக்.92;
பாலகுமாரன் = பிரச்சோதனன் புதல்வன், உஞ்சை நகரில் உதயணன் நளகிரியை அடக்கிய பின்பு தந்தையின் கட்டளைப் படி அவனுக்கு வேண்டியவைகளைக் குறிப்பறிந்து செய்து வந்தவன், பக்.43. பாலகுமரார் = பிரச்சோதனனுடைய பிள்ளைகளின் பொதுப்பெயர், பக்.116]
76. அவந்தி அரசன் பற்றிய செயினக் குறிப்பு. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900)”pp 32-38, Munshiram Manoharlal Publishers Pvt.Ltd. 2005.
77. பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து
கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி
ஆங்கு அவர் எதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇப்
பகைப்புலம் புக்குப் சறை யிருந்த
தகைப்பருந் தானை மறவோன் தன் முன்
- கால்கோட்காதை 175-181
78. தேவபூதியின் ஆட்சிக் காலம். http://en.wikipedia.org/wiki/Devabhuti
79. காவா நாவிற் கனகனும் விசயனும் – கால்கோட்காதை 176
காய்வேற் தடக்கைக் கனகனும் விசயனும் – கால்கோட் காதை 222
80. கலந்த மேன்மையிற் கனக விசயர் – கால்கோட் காதை 186
கனக விசயர் தம் கதிர்முடி ஏற்றி – நீர்ப்படைக் காதை 4
கானற் பாணி கனக விசயர் தம் – நீர்ப்படைக் காதை 50
தெரியாது மலைந்த கனக விசயரை – நீர்ப்படைக்காதை 190
81. ”வடவ ருட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்கு
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கானவில் கானங் கணையிற் போகி,
ஆரிய அண்ணலை வீட்டி பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி”
- பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பதிகம்
82. கண்வ வசுதேவன் ஆட்சியைப் பிடித்தது. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
83. பால குமாரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக்
கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க தாம் எனச்
- கால்கோட் காதை 159-165
வடபுலத்தரசர் ஒரு விருந்தில் தமிழரை இழித்துப் பேசியது. குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை, வட ஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கை தன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின் தவழும் இமயநெற்றியில் விளங்கு வில், புலி, கயல் பொறித்த நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும் என்ற வார்த்தை அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்தவிடத்து, - வாழ்த்துக் காதை உரைப்பாட்டு மடையின் முதற்சில வரிகள்.
84. உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன்
சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தென் தமிழாற்றல் காண்குதும் யாம் எனக்
கலந்த கேண்மையிற் கனக விசயர்
நிலத்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர
இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமாக்
கரிமாப் பெருநிரை கண்டு உளம் சிறந்து
பாய்ந்த பண்பிற் பல்வேல் மன்னர்
காஞ்சித் தானையோடு காவலன் மலைப்ப
- கால்கோட் காதை 182-192
85. வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் தானைப் படைபல ஏவி
பொற்கோட்டு இமையத்துப் பொருவறு பத்தினிக்
கற்கால் கொண்டனன் காவலன் ஆங்கென்.
- கால்கோட் காதை 251-254
86. வடபேர் இமயத்து வான் தரு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்
சினவேல் முன்பிற் சருவெங் கோலத்துக்
கனக விசயர்தம் கதிர்முடி யேற்றிச்
செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைத்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபகல் எல்லை உயிர்த்தொகை யுண்ட
செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து
பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து
- நீர்ப்படை காதை 1- 14
அன்புடன்,
இராம.கி.
Subscribe to:
Posts (Atom)