Tuesday, May 19, 2009

இன்னாது அம்ம இவ்வுலகம்!

ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண்முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூ அணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றல் அப் பண்பிலாளான்?
இன்னாது அம்ம இவ்வுலகம்!
இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே!

- புறம் 164
திணை - பொதுவியல், துறை - பெருங்காஞ்சி
ஆசீவக முன்னவரில் ஒருவரான பக்குடுக்கை நன்கணியார் பாடியது.

”ஒருவீட்டில் சாவுப் பறை ஒலிக்கிறது,
ஒரு வீட்டில் திருமணத்திற்கான மேளம் ஒலிக்கிறது.
ஒருபக்கம், காதலரைச் சேர்ந்த மகளிர் பூமாலை அணிகிறாள்;
இன்னொரு பக்கம் பிரிவால் வருந்தும் மகளிரின் கண்களில் இருந்து நீர் சொரிகிறது.

இப்படி ஒரு சூழலைப் படைக்கும் இறைவன் பண்பில்லாதவன் தான் தானே?

கொடிது இவ்வுலகம்!

இதன் இயல்புணர்ந்தோர், இனியதை மட்டுமே மனத்துள் இருத்துவர்.”
-----------------------------

”கொடிது இவ்வுலகம்” என்பது தேற்றமானாலும், கண் கலங்குவதில் பொருளில்லை; இனியதை மட்டுமே மனத்துள் இருத்துகிறேன். .

ஈழம் ஒரு நாள் மலரும்.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

  1. //ஈழம் ஒரு நாள் மலரும்.//

    Yes definitely

    ReplyDelete
  2. கூத்தர் ( கூத்தாடக் கூடிய கலைஞர்கள்)
    பாணர் (யாழ்கொண்டு பண் இசைக்கக் கூடியவர்கள்
    சிறு யாழை வாசித்தால் சிறுபாணர் என்றும்,
    பேரியாழை வாசித்தால் பெரும் பாணர் என்றும் பெயர் பெறுவர்.)
    பொருநர் ( ஏர்களம்இபாடுநர்,போரக்களம் பாடுநர், பரணி பாடுநர் என மூவகைப்பட்ட பொருநர்கள் இருந்தனர்)
    விறலி (விறல் பட – மெய்பாடு தோன்ற – உணர்வுகளை வெளிப்படுத்தி திறம்பட ஆடும் ஆடல்மகள்))

    ReplyDelete
  3. ஐயா, ஈழம் ஒரு நாள் மலர்ந்தே தீரும்; நம் சொந்தங்களுக்கு விடிவு பிறந்தே தீரும். இருளுக்கு பின் வரும் விடியலை, யாரலும் மாற்ற முடியாது.

    நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடுவோம்.

    ReplyDelete
  4. //”கொடிது இவ்வுலகம்” என்பது தேற்றமானாலும், கண் கலங்குவதில் பொருளில்லை;//

    இப்படி நினைத்தாலும் சில வேளைகளில் முடிவதில்லை...

    //இனியதை மட்டுமே மனத்துள் இருத்துகிறேன்.//

    அதற்கு நீண்ட காலம் ஆகுமென்றே தோன்றுகின்றது.

    //ஈழம் ஒரு நாள் மலரும்.//

    நிச்சயமாய்.. அந்த நம்பிக்கையை கரை சேர்க்க உறுதி கொள்வோம்....

    ReplyDelete
  5. அன்புள்ள இராம. கி. அவர்களே,
    மே மாத ஜூன் மாத தங்களின் பதிவுகளை இன்றுதான் காண முடிந்தது. அருமையான பதிவுகள்.
    விரைவில் தமிழ் ஈழம் மலர இறைவன் அருளை வேண்டுவோம். மனிதம் நிலைக்க இது தேவை. இறைவனின் அருட்பேராற்றல் நிலவுக.
    அன்புடன்
    இராதாகிருஷ்ணன்
    ஜூன் 6, 2009.

    ReplyDelete